பிரிட்டன் அரசாங்கம், இவரிடமிருந்து கடனாகப் பெற்று, தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
ஒருநாள் தனது பொக்கிஷங்கள் நிறைந்த, அறைக்குள் நுழைந்து, கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய காற்றில், திறந்து வைத்த கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.
அது ரகசிய அறை.ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,அதற்குள் செல்ல வேண்டும்.நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார்.பொக்கிஷ அறையின் சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது.
பல நாட்கள் பசி ,பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் ,சுவற்றில் சில வரிகளை எழுதினார் ....
"நான் உலகில் , மிகவும் உயர்ந்த மனிதனாக,பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்"
அவர் மரணித்துப் பல வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.
பணம், பதவி, கெளரவம், அந்தஸ்து, இவற்றைக் கொண்டு, எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு, இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.