15/02/2018

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசின் சலுகைகள் மானியங்களை ரத்து செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...


இந்த மனு விரைவில் விசாரனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

இந்தியா வும் சுதந்திரமும்...


1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால்...

இந்தியா இன்னும் இங்கிலாந்து க்கு கீழ் தான் செயல் படுகிறது (அ) எலிசபெத் ராணி நம் நாட்டை மறைமுகமாக ஆளுகிறார் என்னும் கருத்தை நான் முன் வைத்தால், உங்களில் சிலர் நம்புவீர்களா..?

இதை நான் சொல்வதற்கு சில ஆதாரங்கள் காரணங்கள் பல இருக்கிறது..

அதை இரத்தின சுருக்கமாக கூறுகிறேன்..

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்  பல நிபந்தனைகள் போடப்பட்டது, அதில் இந்தியா என்றும் British common wealth மையத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்று.

பின்னாளில், British common wealth என்னும் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதற்காக "common wealth nations" என்று பெயரை திருத்தி வைத்தார்கள்.

இந்த common wealth அமைப்பில் 52 நாடுகள் இருக்கின்றன, இதற்கு தலைமை எலிசபெத் அம்மையார்.

இப்போ, எங்கள் பக்கத்தில் ஒரு மூன்று நான்கு எடிட்டர் இருக்கிறோம் , என்ன தான் நங்கள் சுதந்திரமாக எழுதினாலும், மீம்ஸ் போட்டாலும், எங்களுக்கு அட்மின் ஒருவர் தலைமை வகுக்கிறார்..

நாங்கள் அட்மின் க்கு கீழ் தான் செயல் படுகிறோம், என்று கூறலாம்.

அதுபோல என்ன தான் வெவேறு நாடாக இருந்தாலும், சுதந்திரமாக இருந்தாலும்
காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் 52 நாடுகளையும் எலிசபெத் தான்  மறைமுகமாக ஆளுகிறார்.

அதில் சிறிதாய் இருக்கும் சில நாடுகளை மட்டும் நேரடியாக ஆளுகிறார்.

காமன்வெல்த் என்னும் அமைப்பு
நவீன கால பிரிட்டிஷ் காலனி என்றும் கூட கூறலாம்.

1992 ஆம் ஆண்டு எலிசபெத் இந்தியா
வந்தார்..

இவ்வருகை எலிசபெத்க்கு கீழ் தான் இந்தியா உள்ளது என்னும் கருத்தை உறுதிப்படுத்தும் படி அமைந்தது.

உங்களுக்கு தெரியும் நாம் வெளிநாட்டை சுற்றிப்பார்பதற்கோ அல்லது அங்கு வேலை செய்வதற்கோ நமக்கு விசா வேண்டும்.

விசா (அ) நுழைவானை என்பது குறிப்பிட்ட ஒரு அந்நிய நாட்டிற்கு செல்வதற்கோ அல்லது அங்கு தங்குவதை அணுமதிக்கும் ஓர் ஆவணம் ஆகும்.

ஆனால் நம் சொந்த நாட்டில் தங்குவதற்கு, வருவதற்கு விசா தேவையில்லை.

இதே அடிப்படையில் தான் எலிசபெத் அவர்கள் நம் நாட்டிற்கு விசா இல்லாமல் வந்தார்.

(அல்லது இப்படி கூறலாம்,)

இதே அடிப்படையில் தான் எலிசபெத் அவர்கள் , அவர் ஆளும் நாட்டிற்கு விசா இல்லாமல் வந்தார்.

இவ்வளவு ஏன் நமது தேசிய கீதமே
எலிசபெத்தின் புகழ் பாடுவதை தான் எழுதப்பட்டது என்னும் ஒரு கருத்து வேற உலாவுகிறது.

சட்டப்படி எலிசபெத் க்கு கீழ் இந்தியா உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் குறைவாக தான் இருக்கிறது.

ஆனால் , உங்களில் பலர்க்கு தெரியும் இந்தியாவை மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளை corporate company தான் ஆட்டி படைக்கிறது என்று.

அதாவது ஒரு நாட்டின் பல்வேறு அசைவுகளுக்கும் , விளைவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பின்னால் ஒரு corporate company இருக்கும்.  (தனி ஒருவன் படம்)..

அது போல் நம் நாட்டில் உலாவரும் பெரிய கம்பெனிகளுக்கெல்லாம் தலையானது..


Hindustan unilver ltd என்னும் கார்பொரேட் கம்பெனி..

Hindustan unilver கம்பெனி யை பற்றி சொல்ல ஆரம்பித்தால், இப்பதிவு இன்னும் நீளமாக போகும்.

அக்கம்பணியை பற்றி  பார்த்தவுடன் புரிந்து கொள்ள கீழ்  உள்ள படத்தை காணுங்கள்.

ஆக இப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் hindustan unilver இன் தயாரித்த ஒரு பொருளையாவது உபயோக படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

hindustan என்னும் பெயர் கொண்டதால் அது இந்திய கம்பெனி என்று நினைக்கலாம்.

ஆனால் hindustan unilver கம்பெனி uniliver என்னும் பன்னாட்டு கம்பெனி யின் கீழ் செயல் படுகிறது.

ஆனால் uniliver கம்பனியே Crown properties என்னும் கம்பெனி க்கு கீழ் மறைமுகமாக செயல் படுகிறது.

அந்த crown properties க்கு தலைமை யார் என்று பார்த்தால்.... வேற யாரு நம்ம எலிசபெத் அம்மையார் தான்....

இப்பொழுது மேலே  போட்டிருக்கும் பதிவை படியுங்கள்...

இவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தால்.. ஜெயலலிதா மரணத்தின் உண்மைகள் வெளியில் வரும்..


வங்கியில் பணம் பாதுகாப்பாக இல்லாத போது மக்கள் எப்படி பகோடா சாப்பிடுவது.. வங்கி வைப்பு தொகை தொடர்பான மசோதாவை கொண்டு வந்தால் போராட்டம் நடத்துவோம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவிப்பு...


நீங்கள் காதலர்தினம் கொண்டாடுபவரா.?


இந்த நாள் எதுக்கு உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம்...

1. செயின்ட்.வேளன்டெயின் இறந்தது, பிறந்தது பிப்ரவரி14 இல்லை
அப்பரம் என்ன மயித்துக்கு பிப்ரவரி14 காதலர்தினம்..

ஒரு நாட்டின் பாரம்பரிய விழாவை அழிக்கவே இந்த பிப்ரவரி14 தேர்வு செய்யப்பட்டது..

லூப்பர் கேடஸ் இதுதான் ஐநூறு வருஷத்துக்கு முன்பு பேகன் மத மக்களால் கொண்டாடப்பட்ட லவ்வர்ஸ் டே..

இது எப்படி இருக்கும் தெரியுமா ஒவ்வொருத்தனும் அவுங்க லவ் பன்ற பொண்ணுங்கள சாட்டையாலயும் கல்லாலயும் அடிச்சு ரத்த களரியா ஆக்குவானுங்க.. அதுக்கு அப்புறம் அவ கூட செக்ஸில் ஈடுபடுவார்கள் அவ எந்த அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்துறாளோ அந்த அளவுக்கு புனிதமானவள் என்று அர்த்தம்.. எப்படி லவ்வர்ஸ் டே..

500வருடங்கள் முன்பு ரோம் நகரை கெளிடியஸ் மன்னன் ஆட்சி செய்து வந்தார்..

அவரு போரை அதிகமாக விரும்பினாரு ஆனா அந்த நாட்டு காரனுங்க லவ் பன்னனும் பொண்டாட்டி கூட சந்தோஸமா வாழனும்னு ஆசை பட்டானுங்க (எல்லாருக்கும் இருக்குற ஆசை தான்)..

ஆனா அவரு இனி பேகன் மதத்தை சேர்ந்தவர்கள் யாரும் கல்யாணமே பண்ணக்கூடாது னு சட்டம் போட்டாரு..

அந்த நேரம் கிருஸ்தவ மதம் சிறிய அளவில் தான் இருந்தது அதனால அவுங்கள கண்டுக்கல..

ஆனா இந்த பேகன் மதத்தை சேர்ந்தவர்கள் கிருஸ்தவ முறையில் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சானுங்க..

அந்த கல்யாணத்த நடத்தி வச்சதுதான் வேளன்டெயின்..

அவரு வர்றவங்க யார்யவருன்னு பார்க்க மாட்டார் ஜோடியா வந்தா கல்யாணம் பன்ணி அனுப்பிடுவாரு ஏன்னா அப்பதான் அவுங்க மதத்தை பரப்ப முடியும்..

கெளிடியஸ் காண்டாயிட்டாரு என்னடா இது நம்ம கல்யாணம் பண்ணாம போருக்கு வாங்கடான்னா சொன்னா இந்தாளு கல்யாணம் பண்னி ரூமுக்கு அனுப்பி வைக்கிறானே அப்படினு வேளன்டெயின்னை கைது பண்னி ஜெயிலில் அடைச்சாரு..

அங்க அவருக்கு ஒரே ஒரு சின்ன டாஸ்க்கு கொடுத்தாங்க வெளிய போயி செஞ்சு வச்ச கல்யாணத்த செல்லாதுன்னு சொல்லனும் அவ்வளவு தான் ஆனா அவரு முடியாது மன்னா அப்படீன்னு கலாய்ச்சுட்டாரு..

ரைட்டு இவன முடிச்சுற வேண்டியதுதான் அப்படினு போண்டு தள்ளிட்டாரு கெளிடியஸ்..

கிறிஸ்தவ மத போதகர்கள் ஒன்னு சேர்ந்து வேளன்டெயின்க்காக ஒரு நாள நினைவுதினமா கொண்டாடனும்னு முடிவு செஞ்சாங்க அத அவரு செத்த அன்னைக்கு வைக்க வேண்டியதுதான அதுலயும் மதத்தை எப்படி பரப்பளாம்னு யோசிச்சானுங்க..

ஏற்கனவே இவுனுங்க பிப்ரவரி15 லூப்பர் கேடஸ் னு ஒருவிழா கொண்டாடுரானுங்க.. அதுல பொண்ணுங்கள சாணியடி சக்கையடி அடிக்கானுங்க..

நம்ம பிப்ரவரி14 வேளன்டெயின்ஸ் டே அப்படினு ஒன்னு கொண்டாடுவோம் அதுல பிடிச்ச பொண்ணுகிட்ட காதலை சொல்லி பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து நைட் ரூமுக்கு கூட்டிட்டுபோயி கொண்டாடட்டும் அப்படினு முடிவு செஞ்சானுங்க..

இது ரோம்ல நடந்தது. எப்படி உலகம் முழுவதும் பரவுனதுனா வியாபாரம் செய்ய மட்டும் தான்..

நல்லா யோசிங்க லவ்வர்ஸ் டே அன்னைக்கு கேக்  கிப்ட். நகை  ட்ரெஸ் சினிமா காண்டம் எவ்வளவு வியாபாரம் நடக்கும்னு..

ஏன் ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி நம்ம தமிழன் யாரும் லவ் பண்ணுனதே இல்லையா...

அப்பரம் என்ன மயித்துக்கு இந்த பிப்ரவரி14 காதலர் தினம் மானங்கெட்ட ஈத்ர நாய்களா..

உண்மையா காதலிச்சா உங்களுக்கு தினமும் லவ்வர்ஸ் டே தான்டா..

இல்லை நான் லவ்வர்ஸ்டே கொண்டாடியே தீருவேன் அப்படினா பிப்ரவரி15 லூப்பர் கேடஸ் கொண்டாடுங்க முடியுமா ஏன்னா அதுதானே முதலில் கொண்டாடப்பட்ட லவ்வர்ஸ் டே...

காவல்துறையில் புடவை வியாபாரம்...


வேலூர் சரக டிஐஜியாக இருப்பவர், வனிதா ஐபிஎஸ்.  இவர் கடந்த வாரம், ஆரணி காவல் ஆய்வாளரை அழைத்து, பட்டுப் புடவைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். 

அவரும், மாதிரி பட்டுப் புடவைகளை அலுவலகத்துக்கே வந்து அடுக்கியுள்ளார்.  அவற்றில் ஒரு பத்து புடவைகளை எடுத்துக் கொண்டு தேங்ஸ் என்று அனுப்பி விட்டார். 

கடைக்காரருக்கு எப்படி பணம் தருவது என்று ஆய்வாளர் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பொன்னிக்கு இந்தத் தகவல் தெரிகிறது.  அவரும் பட்டுப் புடவைகளை ஆர்டர் செய்கிறார்.  எஸ்பி கேட்கும்போது ஆய்வாளர் என்ன செய்ய முடியும். அவரிடமும் புடவைகளை அடுக்கியிருக்கிறார். 

இவரும் கணிசமான புடவைகளை எடுத்துக் கொண்டு, தேங்ஸ் கூறியுள்ளார். 

இரண்டு பேரும் சேர்ந்து ரெண்டே முக்கால் லட்சத்துக்கு புடவை எடுத்துள்ளார்கள். 

இப்போது, ஆரணி ஆய்வாளர் மாமூல் வாங்குகிறார் என்று நாம் குறை கூற முடியுமா ?

இதில் வேடிக்கை என்னவென்றால், இரு அதிகாரிகளும், கணிசமான நேரம் காவல்துறை சீருடையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான்.  இதில் இவர்களுக்கு பட்டுப் புடவை கட்ட, எப்படி சூழல் ஏற்படும் ? 

பிறகு எதற்கு இந்த அற்பத்தனமான ஆசை ?

இதுக்கு மேல பேசினா ஆணாதிக்கவாதின்னு முத்திரை குத்திடுவாங்க. இந்த அளவுல நிறுத்திக்குவோம்.

படம் : இடது பக்கம், பொன்னி ஜெயலலிதாவிடம் கல்பனா சாவ்லா விருது பெறுகையில்.  வலது புறம் இருப்பவர் டிஐஜி வனிதா...

வெக்கமே இல்லாம காச வாங்கிட்டு நடிக்கிறாளுக... பல்லு இழிச்சிகிட்டு வாங்கி குடிக்கறீங்க...


பொய்களின் மடம் காஞ்சி மடம்...


காஞ்சி காமகோட்டி மடம் ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்...

அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்த தகுதி இல்லாதவர்கள்...

அந்த மடம் உருவானது 1780களில்...

ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது...

காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனை பேரும் முழுப் பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும்..

ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி, பூரி, துவாரகா, பதரி ஆகிய நான்கு மடங்களினுடைய உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்...

இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.

அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்...

நமக்கு தேவையற்ற காணொளிகளை யாரும் பரப்பாது நம் ஊடகமே பரப்புகிறது...


சில வருடங்கள் கழித்து விபச்சாரத்திற்கு கூட விளம்பரம் தருமளவிற்கு ஊடகம் முன்னேறியிருக்கும்..

தற்போதாவது உணருங்கள் ஊடகங்கள் நமக்கானதல்ல என்று...

தமிழா தூத்துக்குடி மக்களைக் காப்போம்...


திராவிடம் என்பது தமிழர் இனப்பகையே? அதனை ஏன் அகற்ற வேண்டும்?


1.1965 ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் விளைந்த காங்கிரஸ் எதிர்ப்பினை வடுக திராவிடம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 1967 ல் காங்கிரஸ் அரசினை தமிழர்களின் ஏகோபித்த ஆதரவினால் வீழ்த்தியது.

ஆனால் அந்தக் காங்கிரஸ் அரசு தான் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தினை அமுல் படுத்தி அதனை ஆட்சி மொழியாக்கக் கருதி தமிழ் ஆட்சி அதிகார மொழிக்கான பேரகராதியை உருவாக்க ரூபாய் 56கோடியை (66 கோடியா என்று நினைவில் இல்லை. இருக்கலாம் ) ஒதுக்கி விட்டு ஆட்சிக் கட்டிலை விட்டு இறங்கியது.

ஆட்சிக்கு வந்த வடுக தெலுங்கர் அண்ணாதுரை திராவிட அரசு அந்தச் செயல் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

அது மட்டும் இல்லாமல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாய்மணக்க முழங்கி விட்டு, திராவிடர்களால் குல்லூகப் பட்டர் என்று அழைக்கப்பட்ட ராச கோபாலாச்சாரியாருடன் சேர்ந்து கொண்டு  HINDI NEVER - ENGLISH EVER  என்று மாநாடு நடத்தி முழங்கினார்.

ஆனால் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதற்கு பதிலாக தாய்மொழிக்கல்வியை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறி அதன்படியே செயல்பட்டார்.

அதாவது தாய்மொழிக் கல்வி என்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 85 விழுக்காடு தமிழர்கள் என்ற நிலையில் அன்று இருந்த தமிழ் அறிஞர்கள் அது தமிழ் வழிக் கல்வியாகவே இருக்கும் என்று நம்பி ஏமாந்தார்கள்.

ஆனால் வடுகத் திராவிடம் இந்த சூழ்ச்சியினால் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி, வணிக மொழியில் தமிழ் கோலோச்சுவதை தடை செய்து விட்டு, இன்னொருபுறம் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அது ஒரு மூட நம்பிக்கையுள்ள மொழி என்ற பிரச்சாரத்தை ஊடகம், சினிமா அச்சு ஊடகங்கள் வழியாக கன்னட ராமசாமியின் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் மக்களையே தமிழுக்கு எதிராக மடை மாற்றினார்கள்.

அது மட்டும் அல்ல இன்று ஆரம்பக் கல்வியில் இருந்தும் தமிழ் விரட்டுப்பட்டு விட்டதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இவ்ர்கள் இவ்வாறு நடந்துக் கொள்ளக் காரணம் இவர்கள் தமிழர்கள் இல்லை என்பதாலும் இவர்களே காலம் காலமாக தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்று கருதுவதாலும் தான்..

தமிழர்களின் தாய் மொழியாம் தமிழை அழித்து ஒழிக்க முற்பட்டுள்ளார்கள்.

எனவே தான் திராவிடம் தமிழ்நாட்டில் இருந்து முற்றாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

அதனை நாம் வாக்குச் சீட்டின் மூலம்  நிறைவேற்ற முடியும்...

ஆம்.. இனி தமிழர் நாட்டை தமிழரை மட்டுமே ஆள வைப்போம்...

செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமாம்...


கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா...


அவுஸ்ரேலியா நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது.

2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தது.

அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஐ.நா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்து, எதிர்வரும் 22ஆம் நாள் கொழும்புக்கு அனுப்பி வைக்க அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது...

சிங்கப்பூரில் உள்ள கடை ஒன்றில்.... அருமை...


தமிழரின் பண்பாட்டில் அனைத்தும் சமமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது...


உன் பண்பாட்டில் இயல்பாக இருந்த ஒன்றே அவர்கள் மிகைப்படுத்தியும், மற்றொன்றை அறுவறுப்பு நிறைந்ததாகவும் மாற்றியுள்ளனர்..

ஆனால் அவர்கள் அதை சமமாகவே வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர்..

நாம் ஒன்றை அறுவறுப்பாக பார்த்ததன் விளைவுதான் இன்று பாலியல் கல்வி வேண்டும் என கூறுகிறோம்..

அதைப்பற்றி அறியாதவன் தான் எத்தனையோ சிறு பிள்ளைகளையும், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றான்..

நினைவுகொள் பெண் என்பவள் உன்னைப் போன்று ஒரு உயிர்.. உன்னை படைத்தவளும் அவள் தான்..

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போராளிகள்...


13.02.2018 தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களின் குழந்தைகளையும் கைது செய்து காலை முதல்  இரவு  11மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து அபார சாதனை படைத்த மாவட்ட காவல்துறை. 

கைது செய்தவர்களுக்கு காவல் துறை சார்பக மக்களுக்கு எந்தவித உணவும் வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சிதலைவர் மக்களை நேரில் சந்திக்க இறுதி வரை வரவில்லை...

பண்டைத்தமிழர் வரலாறு யாருக்கும் எதிரானதல்ல.. ஆனால், தமிழர் வரலாற்றை திட்டமிட்டே இதுவரை உள்ள அரசுகள் மறைத்து வருகின்றன...


தமிழ்நாட்டில் தமிழனின் பெருமையை உணரச்செய்யும் உண்மையான அரசு அமைக்கப்பட வேண்டும்.

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை...

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்...

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற காரணம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக் கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள் செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின் வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

(பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டது. அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இது நிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்..

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


சிட்லபாக்கம் ஏரியில் இருக்கும் பிரச்சனைகளை தடுக்க வழி செய்யாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே எத்தனிக்கும் பொதுப்பணித்துறை...


உள்ளிருக்கும் குப்பை மேடை அகற்ற வழிதெரியவில்லை.

உள்ளே கலக்கும் சாக்கடையை நிறுத்த வக்கில்லை.

ஆனால், ஏரியில் இருக்கும் மீனை பிடித்து பணம் செய்ய பேராசை மட்டும் உண்டு.

அதுவும், மீன் பிடிக்க தடையாய் இருக்கும் ஆகாய தாமரையை இத்தனை வருடம் களையாமல், இப்பொழுது  உடனே களைந்து, ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்ற கரையை உடைத்து , பயங்கர வில்லத்தனமான ஏற்பாடுகள்   செய்து கொடுக்கும் பொதுப்பணித்துறை. 

அகால மரணம் அடைய இருக்கும் சிட்லபாக்கம் ஏரிக்கு, ஒரு நிமிட அஞ்சலி செலுத்த வரும் ஞாயிறு காலை 8:30க்கு வந்துருங்கோ. செயவீர்களா?

தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைக்கும் சரியான தீர்வை தெரிந்து வைத்திருக்கும் ஒரே தலைவர் பாமக அன்புமணி மட்டுமே...


தனக்கு கிடைத்த வாய்ப்பை தனது மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் சரியாக பயன்படுத்திய அந்த மாணவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

குமரிக்கண்டம் நம் வரலாறு...


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்குச் செல்லுவோம்...

குமரிக்கண்டம்...

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்..

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது..

ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்..

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது..

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது..

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது..

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து," பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்து விட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்" அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்..

இந்திய அரசு வெளிக் கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம், இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்...

எவ்வளவு கேவலம் தெரியுமா மீடியாக்களே...


ஈர்ப்பு விதி இரகசியம்...


ஈர்ப்பு என்ற விதி இல்லாமல் இந்த பிரபஞ்சமே இயங்காது...

அதே போல உயிருள்ள, உயிரற்ற, எந்த நிலையாயினும் அங்கே ஈர்ப்பு என்ற தன்மை இருந்து கொண்டே இருக்கின்றது.

ஈர்ப்பு என்பது ஒருவித விசை அந்த ஈர்ப்பு இல்லையேல் இயக்கம் இல்லை, ஜனனம் இல்லை, செயல் இல்லை, அசைவற்ற தன்மை ஆகி போய்விடும்.

படைத்தலுக்கு காரணமான சூட்சமத்தில் இந்த ஈர்ப்பு விசை ஒரு முக்கிய செயலாற்றி வருகிறது.

ஈர்ப்பு என்றால் புவிஈர்ப்பு மட்டுமே நமக்கு தோன்றும், சற்று தீவிரமாக சிந்தித்தால் ஈர்ப்பு பல பரிணாமங்களில் செயலாற்றி வருகிறது.

நகர்வற்ற ஒரு மரம் அதன் மலர், காய், பழம், இலை, இது போன்ற வடிவத்தால், அழகால் நம்மை பிரபஞ்சம் ஈர்க்க வைக்கின்றது.

ஒரு ஆண் ஒரு பெண் மேல் அவளது உடை, அழகு, குணம், போன்றவற்றால் ஈர்க்க படுகிறான்.

இந்த ஈர்ப்பு என்பது இடம், பொருள், இவற்றிற்கு தகுந்தால் போல் நம் உணர்வுகளை ஈர்க்கின்றன.

அவை காமம், காதல், ரசித்தல்,
ருசித்தல், அடைதல், போன்ற பல்வேறு ஈர்ப்பு தன்மையை நமக்கு ஏற்படுத்த செய்கிறது.

இத்தகைய தானாகவே உருவாகும் ஈர்ப்பை ஏன் உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அதை உருவாக்கி பயன்படுத்த முயலகூடாது என்பதே எனது கேள்வி.

அதற்கு சாத்தியமா என்றால் ஆம்.. என்றே என்னுடைய பதில் இருக்கும்...

சாலையில் பேனர்கள்... மீண்டும் விபத்துகள்...


மக்கள் அரசியல் பேசுவதையும், புரட்சியில் இறங்குவதும் ஊடகங்களுக்கு என்றைக்கும் பிடிக்காது...


அவர்கள் உங்களை கேள்வி கேட்காத அடிமையாகவே வைத்திருக்க விரும்புவார்கள்...

அம்மான் பச்சரிசி பற்றி தெரிந்துக் கொள்ளலாமா ?

                               
காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்..

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க...

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க...

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க...

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற...

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அதிகமாக கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

மரு நீங்க...

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட...

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்...

அழியாத கோட்டுருவங்களும்… அழிந்து போன நாஸ்க்கா இனமும்...


நாஸ்க்கா பெரு நிலப்பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி இனத்தவர்கள்..

பெரு தென் அமெரிக்காவின் மேற்கு கரையோர நாடு.

இவர்களை இகா வம்சா வழியினர் எனவும்  சொல்கிறார்கள்.


நாஸ்கா எனும் நதி பெருவில் கொச கொச வென்று மேற்கிலிருந்து கிழக்காக பாயும் நதிக்கூட்டம் என்று சொல்லலாம். 

இந்த நதிகள் மற்ற நதிகளில் இருந்து வித்தியாசமானது தீடீரென்று நிலத்தினுள் சென்றுவிடும் இன்னோர் இடத்தில் நிலத்தில் இருந்து வெளியில் புறப்பட்டு செல்லும் விநோதம் மிக்கது.


கற்பனை செய்து பாருங்கள் நிரந்தரமான நதியல்ல பல இடங்களில் புற்றீசல் போல புறப்பட்டு மறையும்.

இந்த பெரும் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இனமே நாஸ்க்கா என அழைக்கப்படுகிறது.

இவர்களின் காலம் 100 AD லிருந்து 750 AD அதாவது இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன் இருந்த இனம் என சொல்லலாம்.


ஒரு நாகரீகம் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து ஓரளவிற்கு மதிப்பிட்டுவிடலாம்.

இவர்கள் உருவாக்கிய செராமிக் கைவினைப் பொருட்கள் மிக அழகானது மட்டுமல்ல தொழிற்சிறப்பு வாய்ந்ததாகவும், துணி வகைகள் தரமிக்கதாகவும் அகழ்வாராய்சியினர் மதிப்பிடுகின்றனர்.


ப்யூகியோஸ் என்ற நிலத்தடி நீர் ஊற்றுக்களை அமைத்திருந்தனர். 

நம்மூர் கிணறு போல ஆனால் சுழற்படியில் கீழே இறங்கி செல்ல வேண்டும். இது இன்றும் செயல் பாட்டில் இருக்கிறது.


ப்ரோசோபிஸ் பாலிடா  எனும் ஒருவகை மரங்கள் தான் பஞ்சு உற்பத்திக்கும் நிலத்தின் உறுதி தன்மைக்கும் காரணாமாயிருந்தது. 

ஒரு கட்டத்தில் இந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. 


இதனால் தீடீர் வெள்ளப் பெருக்கினால் இந்த இனத்தின் ஒரு பகுதியினர் அழிந்து போயிருக்கலாம்.

மனிதன் இயற்கை வளங்களை சுரண்டுவதும் சீரழிப்பதன் விளைவு என்னவாகும் ? 


ஆம், ஒரு கால கட்டத்தில் அற்புதமான நிலப்பகுதி அற்பமான நிலப்பகுதியாக மாறியது.

அது ஒரு வறண்ட பூமியாக சொற்பமான தண்ணீருடன் ஏறக்குறைய பாலைவனப் பூமியாக போய்விட்டது.

ஆனாலும் எஞ்சிய இந்த இனம் தொடர்ந்து பல இடர்பாடுகளுடன் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.


இவர்களின் தீவிர இயற்கை கடவுள்  வழிபாடும் இந்த இனத்தின் அழிவுக்கு ஒரு காரணமாக சொல்கின்றனர்.

அது என்ன தீவிர வழிபாடு..?

நரபலி தான்.. குவியல் குவியலாக தலை வெட்டப்பட்ட மண்டை ஓடுகள் அகழ்வாராய்சியினருக்கு கிடைத்தன. 

அதிலும் சில மண்டை ஓடுகள் நடு நெற்றியில் துளையிடப்பட்டு கிடந்தன. [ நெற்றிப் பொட்டுக்கு பதில் ஓட்டை என கற்பனை செய்து கொள்ளுங்கள் ] எதற்கு? 


லாவகமாக கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம்..

இவை ஒரு பரிசுப்பொருள் போல பாதுகாக்கப்பட்டிருந்தன. 

பெரும்பாலான மண்டை ஓடுகளின் நடுப்பகுதிகள் இல்லை. 

அவைகள் வண்ணம் தீட்டப்பட்ட அழகிய செறாமிக் கிண்ணங்களாக கிடைத்திருக்கின்றன..

நாஸ்க்கா கோடுகள்…

இவைகளை எப்படி வரைந்தார்கள், ஏன் ? எதற்காக ?  இப்படி பல தேடற் கேள்விகள். 

இவற்றை பற்றி அடுத்த பகுதியில் விரிவான தகவல் மற்றும் படங்களுடன்  பகுதி -2 ல் காண்போம்…

போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான போகநாதர் பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது சந்திரரேகை நூலில் விவரித்திருக்கிறார்.

தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்.

- சந்திர ரேகை...

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்..

கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்..

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும்..

அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்..

கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் எதிர் கூறல்களை கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...