16/04/2017
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 18...
ஆழ்மன சக்தியின் தன்மை குறித்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளுக்குப் போகும் முன், ஆழ்மன சக்திகள் இருப்பதை அவர்கள் அறிவியல் முறைப்படி உணர ஆரம்பித்தது எப்படி என்றறிந்து கொள்வது அந்த சக்திகள் பற்றி மேலும் தெளிவாய் அறிய உதவும் என்று நம்புகிறேன்.
ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அறிந்திருந்தும், உபயோகித்தும் வந்தனர் என்றாலும் அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான்.
ஆழ்மன சக்தியால் உடல் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற உண்மையை அறிஞர்கள் உணர ஆரம்பித்தது அந்த சமயத்தில் தான்.
அந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னோடி ப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (1734-1815) என்ற ஜெர்மானிய மருத்துவர். ஆரம்பத்தில் சாதாரண மருத்துவ முறையையே பாரிஸ் நகரத்தில் பின்பற்றி வந்த அவர் தன் ஆராய்ச்சிகளின் முடிவில் நோயாளியைக் குணப்படுத்த வேறு ஒரு வழிமுறையைக் கண்டு பிடித்தார்.
1774ல் ஒரு பெண் நோயாளிக்கு இரும்புச் சத்து கலந்த திரவத்தைக் குடிக்கக் கொடுத்து அவள் உடம்பில் பல இடங்களில் காந்தங்களை வைக்க அந்தப் பெண்மணி தன் உடலெல்லாம் ஒரு விசித்திர திரவம் பயணிப்பதாக உணர்ந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் உடல் உபாதை நீங்கி குணமடைந்தாள்.
மனித உடலில் ஒரு காந்த வகை திரவம் ஓடுகிறது என்றும் அது தடைப்படும் போது நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த திரவம் தங்கு தடையில்லாமல் செல்லும் போது நோய்கள் குணமடைகின்றன என்றும் அவர் நம்பினார். பின் உடலின் வெளிப்புறத்தில் காந்தங்கள் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டார். தன்னிடம் உள்ள காந்த சக்தியாலேயே நோயாளியின் உடலில் உள்ள காந்த திரவ ஓட்டத்தில் தடைகளை நீக்குவதாக எண்ணி அதை செயல்படுத்தினார். நோயாளிகள் குணமடைந்தனர்.
பிரான்ஸ் அரசியின் உதவிப் பெண்களில் ஒருவர் பக்கவாதம் வந்து அவர் மெஸ்மரின் சிகிச்சையால் குணமாகி விட அந்தப் பெண்மணி அரண்மனையில் மெஸ்மரின் சிகிச்சைக்கு நடமாடும் உதாரணமாக மாறினார். இது போல் பல மேல்மட்ட பிரபுக்களும் சிகிச்சையால் பலனடைந்தார்கள். மெஸ்மரின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரிடம் வரும் நோயாளிகளின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கவே அவருடைய வீட்டில் சிகிச்சைக்கு இடம் போதவில்லை. ஒரு பெரிய ஓட்டலை ஆஸ்பத்திரியாக மாற்றி அங்கு சிகிச்சை செய்து வந்தார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்தார்.
அங்கும் தினமும் வர ஆரம்பித்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே தனித்தனியாக நோயாளிகளைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக கும்பல் கும்பலாக குணப்படுத்த ஆரம்பித்தார். அவர்களைப் பல வழிகளில் ஹிப்னாடிச உறக்க நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்திய முறையில் இசையையும் பயன்படுத்தினார். தொலைதூரத்தில் இருந்தும் பலர் அவரைத் தேடி வர ஆரம்பிக்க அது பல மருத்துவர்களின் பொறாமையை வளர்த்தது. அவர்கள் மெஸ்மர் பயன்படுத்தும் முறைகள் மருத்துவத் துறைக்குப் பொருந்தாதவை என்று குற்றம் சாட்டினார்கள். மதவாதிகள் அவர் சாத்தானை பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.
பிரான்ஸ் அரசரான பதினாறாம் லூயி 1784ல் மெஸ்மரின் சிகிச்சை முறை குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தார். அதில் அமெரிக்க விஞ்ஞானியான பெஞ்சமின் ப்ராங்க்ளினும் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு மெஸ்மர் நோய்களைக் குணப்படுத்தினாரா இல்லையா என்பதை விட அவர் சொன்னபடி மனித உடலில் அது வரை அறிந்திராத ஒரு வகை காந்த திரவம் ஓடுகிறதா என்பதில் கவனம் செலுத்தியது.
கடைசியில் மெஸ்மர் சொன்னபடி மனித உடலில் அப்படியொரு காந்த திரவம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. எந்த காந்த திரவ ஓட்டத்தை சமன்படுத்தி அவர் நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொன்னாரோ அந்த காந்த திரவமே இல்லை என்று ஆனதால் அவரது சிகிச்சை முறை கேள்விக்குறியாகியது. ஏராளமானோர் சிகிச்சையில் குணமாகியிருந்த போதும் அது விசாரணையாளர்களின் விஞ்ஞான அணுகுமுறைக்கு பதிலாகவில்லை.
1785ல் மெஸ்மர் நாட்டையே விட்டு வெளியேறினார். பின் அவர் வாழ்ந்த முப்பதாண்டுகள் பற்றி பெரிய செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
(முன்பே குறிப்பிட்டது போல இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் ஆழ்மனதைக் குறித்து ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த யோகிகள் மெஸ்மர் வாழ்ந்த காலத்திலேயே இருந்த போதிலும், மேலைநாடுகளில் மனம் ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் டெஸ்கார்ட்டிஸ் என்ற ஞானியின் வரவிற்குப் பின்பு தான் அங்கு மனம், சிந்தனை ஆகியவை ஒரு அந்தஸ்தைப் பெற ஆரம்பித்திருந்தது. எனவே மெஸ்மர் தன் சிகிச்சையில் ஆழ்மனதை உபயோகித்தும் கூட அதன் பங்கை உணராமலிருந்தார். ஆரம்ப காலத்தில் செய்த சிகிச்சைகளால் மனித உடலில் காந்த திரவம் என்ற பெயரை அவர் நம்ப, பெயரை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் விளைவை துரதிர்ஷ்டவசமாகப் புறக்கணித்தனர்.).
மெஸ்மர் தன் சிகிச்சை முறைகளில் ஓய்வு பெற்றும் கூட மெஸ்மரின் சீடர்களில் ஒருவரான மார்கி டி புய்செகுர் என்ற நிலப்பிரபு அவருடைய முறைகளைப் பின்பற்றி சிகிச்சை செய்தும், ஆராய்ச்சி செய்தும் வந்தார். அவர் ஒரு முறை விக்டர் ரேஸ் என்ற தன்னிடம் வேலை பார்க்கும் குடியானவனை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்திய போது சாதாரணமாக எஜமானிடம் பேசத் தயங்கும் விஷயத்தை எல்லாம் அவன் பேசினான்.
ஆனால் விழித்த போது தான் முன்பு பேசியது எதுவும் விக்டர் ரேசுக்கு நினைவிருக்கவில்லை. ஒரு முறை அவன் ஆழ்மன உறக்கத்தில் தன் சகோதரியிடம் இட்ட சண்டையைப் பற்றி சொல்ல மார்கி டி புய்செகுர் சகோதரியிடம் சமாதானமாகப் போகும் படி கட்டளையிட விழித்து எழுந்த விக்டர் ரேஸ் அவர் சொன்னது நினைவில்லாத போதும் அவர் சொன்னபடியே செய்து விட்டு வந்தது ஆழ்மன சக்தியை புய்செகுருக்கு அறிமுகப்படுத்தியது.
அவர் மெஸ்மரின் சிகிச்சை முறையிலிருந்து ஒருபடி முன்னேறி காந்த சிகிச்சை செய்பவர் சக்தியை விட சிகிச்சை பெறுபவரின் நம்பிக்கையான மனநிலை தான் சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அந்த ஆழ்மன உறக்கத்தில் அந்த நம்பிக்கையை சிகிச்சை பெறுபவருக்கு சிகிச்சை தருபவர் ஏற்படுத்த முடிந்தால் அது பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்றும் கூறினார்.
இப்படி சிறிது சிறிதாக மெஸ்மரின் சிகிச்சை முறை காந்த சிகிச்சையுடன், ஆழ்மன சிகிச்சையுமாக சேர்ந்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்து 1834ல் ஜேம்ஸ் பெய்ர்டு என்ற மருத்துவரின் காலத்தில் ஹிப்னாடிசமாக உருவெடுத்தது.
அவர் தன் ஆராய்ச்சிகளில் இந்த சிகிச்சையால் ஆழ்மன உறக்கத்தில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு வித்தியாசமான மாறுபாடே உடலில் நோய்கள் குணமாகக் காரணமாக இருக்கிறது என்று கண்டு பிடித்தார். அவர் ஆராய்ச்சியில் காந்த சிகிச்சை பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆழ்மன உறக்க நிலை முக்கிய இடத்தை பிடித்தது.
அது வரை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்தும் முறைக்கு 'மெஸ்மெரிசம்' என்ற இருந்த பெயர் போய் வித்தியாசப்படுத்திக் காட்ட ஜேம்ஸ் பெய்ர்டு 'ஹிப்னாடிசம்' என்ற பெயரை சூட்டினார்.
தவறான கருத்து ஒன்றால் அங்கீகாரம் மறுக்கப்பட்ட மெஸ்மர் ஆழ்மன ஆராய்ச்சிக்குப் போட்ட பிள்ளையார் சுழி பின் பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி செய்ய இப்படி வழி வகுத்தது.
ஹிப்னாடிசம் மூலம் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி உடல் நோய்களில் பலவற்றை குணப்படுத்தலாம் என்ற கண்டுபிடிப்புக்கு இப்படி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எட்டினார்கள். இது ஒரு பெரிய மைல் கல்லாய் அமைந்தது.
(நாம் முந்தைய அத்தியாயங்களில் கண்ட அபூர்வ மனிதர்கள் எட்கார் கேஸ் முதலானோர் ஆழ்மன உறக்கத்தின் போதே தங்களின் அபூர்வ சக்தியை வெளிப்படுத்தினார்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்)...
மேலும் பயணிப்போம்.....
ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை.. கர்நாடகா அதிர்ச்சி...
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் விஷயம் தான்.
இந்த காவிரி விஷயத்தை வைத்து தான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியாவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கர்நாடகாவுக்கே நாம் தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
நமது தமிழ்நாட்டின் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.
கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.
பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது.
அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது.
ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.
அதனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இது தான்.
தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அது மேகதாது அணைக்கே எதிராக திரும்பி விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார்கள்...
வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதற்கான 10 வழிகளை கூறுகிறேன் - கெஜ்ரிவால்...
மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பிக்கைத் தன்மையற்றவை, அவற்றில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரங்களை கைவிட்டு விட்டு, பழையபடி ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
ஆனால் மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதையடுத்து, வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா? என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் நேரடி சவால் விடுத்தது.
வரும் மே முதல் வாரத்தில் இருந்து மே 10 ஆம் தேதிவரை நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர் என யார் வேண்டுமானாலும் முறைகேடு செய்து காட்டுங்கள் என தேர்தல் ஆணையம் நேரடி சவால் விடுத்து உள்ளது.
இந்த நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது...
நான் ஒரு ஐஐடி என்ஜினியர், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான 10 வழிகளை நான் கூறுகிறேன்.
புனே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினர் தனக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. நான் அளித்த வாக்கு எங்கே போனது என்று அவர் கேட்கும் போது, வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி நாங்கள் ஏன் கேள்வி எழுப்ப கூடாது என்றார்...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 18...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம் பெறும் அனைத்து குறிப்புகளும் அதன் நிகழ்வுகளும் உலக மாறுபாட்டை சுட்டிக்காட்டவே இங்கு வெளிப்படுத்தப் படுகின்றன.
மக்கள் சமுதாயம் பல கடவுள் நிலைகளாலும், மதப் பிரிவினாலும், சாதிப் பிரிவினாலும் பலவாறாக பிரிக்கப்பட்டு நிம்மதி இன்றி இருந்து வருகிறது, இந்நிலையில் பல மதத்தினர் இறைவன் எங்கள் மதத்தை சார்ந்தவர் என்ற புதிய அறிக்கையை மக்களிடையே பரப்பி பல குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்று இன்றைய 18-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
சமூக மாற்றம் என்பது மக்களிடையே சமத்துவம் ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும், சாதிகள் உள்ளவரை இந்த சமூகம் மாற்றத்தை சந்திக்காது என்றும் அத்தகைய மாற்றம் நிகழ வேண்டுமெனில் அது இறைவனின் வருகையால் மட்டுமே சாத்தியமாகும் என்று 18-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் ஒரு குறிப்பைத் தருகிறது.
ஒரு சமூக அமைப்பினர்களுக்குள் பல சாதி மக்கள் ஒற்றுமையுடன் உள்ளார்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஒருவரையே கடவுளாக பாவித்து தங்களை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்து வரும் அச்சமயத்தில், அவர்களுக்குள் கடவுளின் தோற்றம் எங்கள் இனத்தைச் சார்ந்தது என்று பேதம் பிரித்து பார்க்கும் அளவிற்கு பற்பல சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும்,
இதனால் பல புதிய அமைப்புகள் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பார்கள் என்றும் இச்சம்பவம் நிகழும் சமயத்தில் இறை அற்புதம் ஒன்று உலகில் ஒரே சமயத்தில் தோன்றி நடந்து முடியும் என்றும்,
அந்நேரத்தில் மக்களிடையே சமூக மாற்றம், நற்சிந்தனை தோன்றும் என்று 18-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகிறது.
நாடாளும் மன்னர் ஒருவரின் மகுடம் பறிக்கப்படும் சம்பவம் கூடிய விரைவில் நடக்கும் என்றும்,
அந்நாட்டில் மதக் கலவரம் ஒன்று தோன்றி வெடிக்கும் என்றும்,
இதனால் பல மத குருமார்களை கொன்று அழிப்பார்கள் என்றும்,
அங்கு இராணுவ கிளர்ச்சி ஏற்பட்டு மக்கள் வாழ வழிதெரியாமல் அலைவார்கள் என்றும் அங்கு புதியதாக மக்கள் கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டு அந்நாட்டை கைப்பற்றி நல்ல பாதைக்கு கொண்டு வரும் சமயத்தில் அங்கு ஒரு இறை வெளிப்பாடு அதிசயமான முறையில் நடந்து முடியும் என்றும் அதுவே அந்நாடு தன் பொழிவை மீண்டும் பெறுவதற்கான அறிகுறி என்று 18-ம் தீர்க்க தரிசன குறிப்பு ஒன்று மேலும் சில விளக்கங்களை தருகிறது.
இந்திய தேசத்து வான்வெளி விஞ்ஞானிகள் ஒரு புது முயற்சியை மேற்கொள்வார்கள் என்றும்,
அந்த முயற்சியின் முழு வெற்றியானது ஒரு மகத்தான சாதனையாக அப்பொழுது இருக்கும் என்றும்,
இச்சம்பவம் நிகழும் சமயத்தில் இந்திய மருத்துவ துறையில் ஒரு புதிய மருந்தை கண்டறிவார்கள் என்றும்,
அது உலகையே அச்சுறுத்தி வரும் எயிட்ஸ் என்ற நோய்க்குரிய அற்புத கண்டுபிடிப்பாக அமையும் என்றும்,
இது உலக வரலாற்றில் இடம் பெறக்கூடிய இரண்டு முக்கிய சம்பவங்கள் என்று 18-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகின்றது.
கொல்கத்தா நகரில் பல சாதுக்கள் ஊர்வலம் நடத்துவார்கள் என்றும் அப்பொழுது இந்திய தேசத்தில் ஒரு ஆன்மீக புரட்சி வெடிக்கும் என்றும்,
இதனால் உள் நாட்டு மாநிலங்களில் ஒரு சில பாதிப்புகள் நிகழும் என்றும்,
அச்சமயத்தில் திடீரென்று இந்திய மாநிலங்களின் தலைநகரங்களில் பல தெய்வீக அதிசயங்கள் நிகழும் என்றும்,
அச்சமயத்தில் அந்த ஆன்மீக புரட்சி அமைதி கொள்ளும் என்றும்,
மறைந்த விவேகானந்தரின் ஆன்மீக கனவு ஒன்று மெய்பட இந்திய தேசம் ஒரு புதிய பாதைக்கு வழிவகுக்கும் என்றும்,
இதுவே இந்தியா மாபெரும் ஒரு அதிசயத்தை சந்திக்க உள்ளதற்கான முக்கிய குறிப்பு என்று 18-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.
கனடா நாட்டில் வாழும் இந்தியர் ஒருவர் ஆன்மீக துறையில் ஒரு முக்கிய அறிவிப்பை செய்வார் என்றும்,
அதனால் அந்நாடு அவரை வெளிநடப்பு செய்யும் என்றும்,
அவர் வெளியேறிய 3 தினங்களில் அவர் கூறிய சம்பவம் நடக்கும் என்றும்,
அன்றிலிருந்து அந்நாடு இந்திய தேசத்து ஞானிகளைப் பற்றி தனது சீரிய ஆய்வை மேற்க்கொள்ளும் என்றும்,
இதனால் இந்திய யோகக் கலாச்சாரம் ஒன்று அங்கு தோன்றி நன்கு வளர்ச்சி பெறும் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாக 18-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து இந்திய தேசத்திலிந்து ஒருவரை வரவேற்க தயாராகும் என்றும் இது உலக வரலாற்றில் இடம் பெற வேண்டிய முக்கிய குறிப்பு என்று 18-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
மன்னர் ஒருவரின் சமாதி எகிப்திய நாட்டில் கண்டெடுக்கப்படும் என்றும்,
அவர் இந்திய தேசத்தை சார்ந்த ஒரு மன்னராக இருப்பார் என்றும் இதுவே உலகில் ஒரு வியப்பான செய்தியாக மக்கள் வியந்து போற்றுவார்கள் என்றும்,
அச்சமயத்தில் அவரின் சமாதியிலிருந்து சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்படும் என்றும் அதன் மூலம் உலகமே தமிழர்களைப் பற்றியும், தமிழ் அரசர்களை பற்றியும் உண்மைகளை கண்டு வியப்படையும் என்று 18-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
வங்கக் கடலில் உருவானது 'மாருதா' புயல்.. கருணை காட்டுவாரா வருண பகவான்...
வங்கக் கடலில் 'மாருதா' என்ற புயல் உருவாகியுள்ளது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது. இது நேற்று மாலை 5.30 மணிக்கு தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக மாறியுள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இந்தப் புயலுக்கு 'மாருதா' என பெயரிடப்பட்டுள்ளது.
இது அந்தமானில் இருந்து, மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. வருகின்ற 17-ம் தேதி (நாளை) காலை, இந்தப் புயல் கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு பகுதிகளில், இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றனர்...
தமிழனின் உணவு முறை...
இட்டிலி. இடியப்பம். புட்டு. என்று நீராவியில் செய்த உணவுப் பொருள்களை உண்டு நமது முன்னோர் தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர்...
இன்றோ பொரித்த வறுத்த உணவுகள் மட்டுமல்ல. வெளிநாட்டார் உணவு வகைகளையும் உண்ணுவதில் பெருமை கொள்ளுகின்றோம்..
அந்தந்த நாட்டில் தட்ப வெப்ப நிலைகளுக்குத் தேவையான உணவு முறைகளை நமது பெரியவர்கள் கண்டு உண்டும் வந்தார்கள்.
இன்று தனது ஆத்திச்சூடியில் பாரதி ஊண் மிக விரும்பு என்றான். ஒரு இளைஞர் சாப்பிடுவதிலே வரை முறையே இல்லாமல் சாப்பிடுவார். கேட்டால் பாரதியே ஊண் மிக விரும்பு என்று சொல்லியுள்ளாரே என்று எதிர் வினாத் தொடுக்கின்றார்.
அவன் சொன்னது உண்ணுகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக.விரும்பி மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற உணவு தான் உடம்பிலே சேரும் என்பதற்காக. ஆமாம் சிலர் சாப்பிடுவதனைப் பார்த்தால்தெரியும் கடனே என்றுசாப்பிடுவார்கள். சாப்பிட வேண்டுமே என்று எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள்.
நெல்லையில் சாப்பாட்டுக் கடன முடிச்சிட்டுப் போயேன் என்பார்கள். எல சாப்பிட்டியா என்று கேட்டால் என்ன எழவையோ வச்சா அள்ளிப் போட்டுட்டு வந்திட்டேன் என்பார்கள்.சிலர் நேரம் தவறினாலும் மதிய உணவை மாலையில் கூடச் சாப்பிடுவார்கள்.
சிலர் சாப்பிடுவதையே பொழுது போக்காகவும் பெருந்தொழிலாகவும் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் உண்பதைப் பார்த்தால் நமக்கே அச்சம் வந்து விடும்.
எதுவெனினும் சாப்பிடுவார்கள் எப்போதும் சாப்பிடுவார்கள் உடனுக்குடன் கூட அவர்கள் சாப்பிடுவார்கள். எந்த உணவு விடுதியில் எத்தனை மணிக்கு என்ன கிடைக்கும் என்கின்ற பட்டியலைச் சரியாகச் சொல்லுவார்கள். சரியான நேரத்திலே அங்கு சென்று அதனைச் சாப்பிடுவார்கள். போக முடியாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.
ஏதேனும் ஒரு நேர உணவு உண்ண முடியாமல் போனால் அந்தப்பொழுது உணவை விட்டு விட்டு அடுத்த நேர உணவை உண்பதற்கு முன்னர் ஒரு எலுமிச்சையை சாறாக்கி உண்டு விட்டு உண்டால் நோய் வாராது.
சில பெண்கள் வீட்டில் செய்த உணவுப் பொருள் வீணாகி விடக் கூடாது என்று இயலாமல் கூட அந்த உணவுப் பொருளை உண்பார்கள். நமது உணவுப் பழக்கம் எல்லா நோய்களையும் நம்மிடம் கொண்டு வருகின்றது.
காலையில் சக்கரவர்த்தியைப் போலவும் மதியம் மன்னரைப் போலவும் இரவு சேவகனைப் போலவும் உண்ண வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். அதன் படி வாழ்ந்தார்கள். சர்க்கரை நோய் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் இத்தனை இனிப்புக் கடைகள். புரியவில்லை.
அண்ணாச்சி சாகப் போறது உறுதி. தின்னுட்டுச் சாவோமே இது திருநெல்வேலி. வயித்துப் பாட்டுக்குத் தான அண்ணாச்சி ஒழைக்கோம்.
அதே பாரதி உடலினை உறுதி செய் என்றான். ஙப் போல வளை என்றான். எத்தனை பேர் உடற் பயிற்சி செய்கின்றனர். நமது மகிழுந்திற்கு எண்ணெய் நிரப்புகின்றோம். ஒடவேயில்லை எனில் அந்த மகிழுந்தில் மீண்டும் எண்ணெய் நிரப்ப முடியுமா.
ஒடினால் தானே எண்ணெய் செலவழியும். புதிதாக எண்ணெய் நிரப்ப முடியும். காலையில் எல்லா ஊர்களிலும் நடைப் பயிற்சி கொள்பவர்கள் ஒருவரை பார்த்தவுடன் சர்க்கரை அளவை விசாரிக்கும் போது பெருமையாகவே கேட்கின்றார்கள். எனக்கு 300 உங்களுக்கு என்றவுடன் 320 என்று அவர் பெருமையோடு சொல்வதும் ஓன்றும் புரியவில்லை.
அவ்வைப் பெருமாட்டி இத்தனைக்கும் காரணமான வயிற்றிடம் கேள்வி கேட்கின்றாள். வயிறே ஒரு நாள் சாப்பிடாமல் இரேன் என்றால் முடியாது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கின்றாய்.
ஒரு நாள் உணவு நிரம்ப கிடைக்க வாய்ப்பிருக்கும் நேரம் இரண்டு நாளுக்கு நிரப்பிக் கொள்ளேன் என்றால் முடியாது என்கின்றாய்.
உணவு உறுதி செய்யப் படாத ஏழைகளின் நிலை. இல்லாத அன்று பொறுத்துக் கொண்டு. கிடைக்கின்ற அன்று அள்ளி திணித்துக் கொள்ளலாமல்லவா. வயிறு ஒத்துழைக்க மறுக்கின்றதே.
இப்படிப் பட்ட உன்னோடு வாழ முடியாமல் எத்தனை பேர் துன்புறுகின்றார்கள் தெரியுமா.
பசிப்பிணி போக்குவதே அனைவரின் கடமையும் என்று உணர்த்துகின்றார் ஔவையார்.
செய்யுள்...
ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோய் அறியா இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது...
நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.39 உயர்வு, டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.04 உயர்வு...
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 71.16..
பொதுமக்களுக்கு பாதிப்பை தரும் அறிவிப்புகள் மட்டும் இரவோடு இரவாக அறிவிக்கப்படுகின்றதே, இந்திய வரலாற்றில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமான அறிவிப்புகள் இரவோடு இரவாக என்றைக்காவது அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்து வருகின்றது.
ஒத்த ஓட்டுக்கு, தொப்பிகிட்ட 4000, விளக்குகிட்ட 3000, சூரியன் கிட்ட 2000, தாமரகிட்ட 200 வாங்கற வரைக்கும் அந்த மாறி நடக்காது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து...
சித்தர் ஆவது எப்படி - 18...
பிறவி தாண்டிய அனுபவத்திற்கு சுவாச ஒழுங்கு மட்டுமே...
பிறவி தாண்டிய நிலை என்பது என்ன ?
மனிதன் பிறக்கும் சமயத்தில் பிரபஞ்சத்தின் பூரண ஆசியோடு குழந்தையாக இருக்கும் சமயம் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற விதியில் அவன் தெய்வ நிலைக்கு நிகராக இருக்கிறான்..
பின் உலகியல் பல்வேறு தொடர்பால் ஒழுங்கின்மை என்ற நோய் கவ்வி, தெய்வ நிலையிலிருந்து தேய்ந்து தேய்ந்து ஒய்ந்து போய் பின் செயல் இழந்த நிலையான மரணத்தை தழுவுகின்றான்...
மரணம் என்பது எந்த செயலும் அற்ற ஒரு அமைதி நிலை.. அமைதி என்பது ஒரு ஒழுங்கு நிலை..
அந்த ஒழுங்கு நிலையில் ஒழுங்கு தன்மை வாய்ந்த பிரபஞ்ச ஆற்றல் இசைந்து கொள்கிறது..
இப்படி இசைந்து கொள்வதை தான் Law of attraction என்ற தலைப்பில் மேலை நாட்டில் பல கோணங்களில் கருத்துக்கள் எழுந்து உள்ளன..
ஒரு மனிதன் அமைதி என்ற ஒழுங்கு தன்மைக்கு செல்லும் போது அதற்கு ஒத்த ஒன்று அதோடு இணையும் செய்கையை இசைதல் எனப்படுகிறது..
மரணத்திற்கு பின் மட்டுமே இந்த பிரபஞ்ச ஆற்றலின் இசைதல் செயல்பாடு நடக்கிறது...
ஆனால் அந்த இசைதலில் அனுபவ பட தேகமும் மனமும் இல்லையாதலால் அந்த இசைதல் என்ற செயல் பாட்டின் அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவ பட முடியாமேலே போய் விடுகிறது..
ஆகவே மிக முக்கியமான அந்த அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவப் பட தேகத்தில் உயிர் உள்ள போதே அந்த பேரமைதி என்ற எந்த செயலும் அற்ற அந்த தோன்றா நிலையை நாம் அனுபவப் படுகின்ற போது, அந்த பிரபஞ்ச ஆற்றல் நம்மோடு இசைய தொடங்கி அதன் ஆற்றலின் வரவு வர தொடங்குகிறது.... அதனால் அளவற்ற ஆற்றலை பெற தொடங்குகிறோம்....
இந்த இசைதல் என்ற Law of attraction மூலம் பிர பஞ்ச சக்தியை பெற மரணத்தை ஒத்த அந்த தோன்றா நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...
அந்த தோன்றா நிலை என்பது ஒரு அனுபவம்.. அதுவே பிறவி தாண்டிய அனுபவ நிலை..
பிறவி தாண்டிய நிலை என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும்.. பிறவி தாண்டிய அனுபவ நிலை என்பது தோன்றா நிலை அனுபவத்தைக் குறிப்பது...
இதன் மூலம் பிறவி தாண்டிய நிலையான மரணத்திற்கும், பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலை அனுபவத்திற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் நமக்கு தெரிய வேண்டும்...
பல் வேறு ஒழுங்கின்மை காரணத்தால் பிறவி தாண்டிய நிலையான மரணத்தையே தழுவி தழுவி எண்ணிக்கை இல்லா பிறவிகளை அடைகின்றோம்...
ஆனால் பிறவி தாண்டிய அனுபவ நிலையை அடைகின்ற போது அங்கே பிரபஞ்ச ஆற்றல் தொடர்பால் நாம் மரணத்தை வெல்லுகின்றோம்...
இதை நாம் உற்று கவனித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..
வலுவான பஞ்ச பூதங்களோடு நாம் பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலைக்கு செல்லும் போது, பிரபஞ்ச ஆற்றலின் பெரும் வரவால் பஞ்ச பூதங்கள் மேலும் மேலும் வலுவடைந்து, மரணம் என்பது தொலைந்து போய் விடுகிறது..
பஞ்சபூதங்களில் ஒன்றான அறிவும் பலப் படுவதால், மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறிவு, அறிந்து கொள்கிறது..
அமைதியின் மறு பக்கம் ஒழுங்கு.. பிரபஞ்சம் என்பது பேர் ஒழுங்கு.. ஒழுங்கோடு ஒழுங்கு இணைவதையே இசைதல் என்பதாகும்..
பஞ்ச பூதங்களிலே அமைதியற்ற மனம் அமைதியுடன் இருக்கும் போது, மனம் சுத்த மனம் என்ற ஒழுங்கு தன்மை அடையும் போது, சுத்த மனத்தால், இசைவதால் இணைகின்ற பிரபஞ்ச ஆற்றலால், பஞ்ச பூதங்களும் வலு பெற தொடங்குகின்றன...
இந்த ஒழுங்கு என்ற நிலையை வேறு எந்த வழிகளிலும் உபாயங்கள் மூலமாக நாம் கற்று அடைவதைக் காட்டிலும் ஜீவ சக்தியால் இயல்பாக நடக்கின்ற சுவாசத்தில் நாம் அந்த ஒழுங்கு முறையை மிக மிக விரைவாக கற்று அதுவாகவே ஆகி அமைதி நிலைக்கு விரைவாக செல்ல முடிவதால், அதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற முடிவதால், சுவாச ஒழுங்கு என்ற நிலை பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது..
ஆனாலும் ஜென்ம ஜென்மமாக ஒழுங்கின்மையில் வாழ்ந்த மனித குலம் தான் வாழும் காலத்தில் தன் ஜீவ ஆற்றலாக விளங்கும் சுவாசத்தில் ஒழுங்கு தன்மையோடு இருக்க மிகவும் சிரமப் படுகிறது...
எல்லா சவால்களையும் சந்திக்கும் மனம் இந்த சுவாச ஒழுங்கிற்கான சவால்களை சந்திக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இந்த சுவாச ஒழுங்கு என்பது பயிற்சி அல்ல என்பதாலும் அது ஜீவ ஆற்றலின் ஒழுங்கு நிலை எனபதாலும் அதற்கு மனம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது.. அது உதவி செய்வதாக இருந்தால் இடைஞ்சலாகத் தான் இருக்கும்...
ஆகவே மனம் சுத்த மனம் ஆகும் வரை ஒழுங்கற்ற சாதாரண மனம் சுவாச ஒழுங்கிற்கு ஒத்து வராது..
இந்த நிலையில் ஒழுங்கின்மையை அடையாளம் காட்டி மனதை ஆதிக்க செலுத்தி மீண்டும் ஒழுங்கிற்கு வரும் போது, மனதை வெல்லும் புத்தி செயல் பட தொடங்குகிறது..
இந்த சுவாச ஒழுங்கின் எளிமையான நிலைப் பாட்டில் மிக பெரிய ஆன்மா இலாபம் என்னவென்றால் புத்தி பலப் படுவதற்கான ஒரு சீரான வலுவான அளவற்ற சந்தர்ப்பங்கள் கிடைகின்றன..
வேறு எந்த பயிற்சியிலே இது போன்ற மேன்மையான புத்தியை பலப் படுத்துவதற்கான வழி முறைகள் இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லலாம்...
ஆகவே சேரும் நிலை அறிந்து சேர்ந்து சித்தராக முனைவோமாக...
திருட்டு திராவிடம் எனும் நஞ்சு...
1956 இல் மாநிலங்கள் பிரிக்கும் போது தமிழ் நாட்டில் தமிழே ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டது...
அதன் பின் 1968 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு ஆட்சியை வடுக தெலுங்கர் திராவிடம் என்ற பெயருடன் கைப்பற்றிய பின் திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டு ஆட்சி மொழி வட்டார மொழி ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டு தமிழ் அழிக்கப்பட்டது..
பின் தமிழ்நாட்டில் தமிழ் இல்லை..
இப்போது வடுக தெலுங்கர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் உருதை ஆட்சி மொழியாக மாற்றுவார்களாம்...
தமிழ்நாடு என்ன வேசிகள் வீடா?
தமிழர்களே சிந்திப்பீர்...
தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றனவா?
ஆந்திராவில் ஆண்டுக்கு 150 தெலுங்கு படங்கள் வெளிவருகின்றன.
கர்நாடகாவில் 90 கன்னட படங்களும், கேரளாவில் 80 மலையாள படங்களும் மும்பையில் 220 இந்தி படங்களும் தயாராகி வெளிவருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளி வருகின்றன. அதுவும் வெளியில் தெரிய மாட்டேன் என்கிறது.
உலகில் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. நேரடி மொழிப படங்கள், ரீமேக் படங்கள் , டப்பிங் படங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத ஒரு வகை படங்களே வெளிவருகின்றன. அவற்றை நாம் மாற்றார் படங்கள் என்று சொல்லலாம்.
மாற்றார் வகை படங்களே தமிழில் ஏராளமாக வெளி வருகின்றன. ஒரு படம் தமிழ்ப்படம் என்று சொல்ல வேண்டுமானால், குறைந்தபட்சம் அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் ஐந்து சதவீதம் பேர் தமிழர்களாக இருக்க வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் கதாநாயகன், கதாநாயகியாவது தமிழர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியா இருக்கிறது. எம்ஜிஆர், படமும், ரஜினி படமும், கமலஹாசன் படமும் தமிழ்ப்படங்கள் இல்லை. அவை மாற்றார் நடித்த தமிழ்ப் படங்கள் . கதாநாயகன் எம்ஜிஆர். மலையாளி, கதாநாயகி ஜெயலலிதா கன்னடச்சி என்றால் அது எப்படி தமிழ்ப் படம் ஆகும்?
ரஜினி கன்னடன், ஐஸ்வர்யா ராய் மும்பைச்சி என்றால் அது எப்படி தமிழ்ப்படம் ? கமலஹாசன் ஆரிய பிராமணன், பூஜா குமார் பெங்காலி என்றால் அது தமிழ்ப்படமா ? இவை மாற்றார் நடித்த தமிழ்ப்படங்கள். மாற்றார் வகை தமிழ்ப்படங்கள் .
அப்படிப்பார்த்தால், எம்ஜிஆர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை, ரஜினி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. விஷால் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்படங்களில் இவர்கள் நடிக்கவும் முடியாது. அப்படியானால் சிவாஜி கணேசன் நடித்த படங்கள்? கணேசன் தமிழன் தான். ஆனால் கூட நடிக்கும் நாயகி வாணி ஸ்ரீ , கே. ஆர். விஜய, ஜெயலலிதா , சரோஜாதேவி இவர்கள் எல்லாம் தமிழச்சிகள் இல்லையே. இயக்குனர் தமிழராக இருக்க மாட்டாரே... அப்படியானால் அது எப்படி தமிழ்ப்படமாகும் ? சிவாஜியும் அதிக அளவில் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மாற்றார் வகை தமிழ்ப்படங்களில் நடித்துக் கொடுத்து இருக்கிறார் அவ்வளவுதான்.
அப்படியானால் உண்மையான தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றனவா என்றால் அதிகம் இல்லை. வருடத்துக்கு நான்கு வருகிறது. அவையும் வெளியே தெரியாமல் வந்தவழி போய் விடுகிறது. இதில் தான் மாற்றம் வேண்டும்.
தமிழர் நடித்து, தமிழர் இயக்கும், தமிழ்ப்படங்கள் வெளிவர வேண்டும். அப்போது தான் தமிழ் மண்சார்ந்த கதைகள் படங்களாக வெளிவந்து தமிழர் மனத்திரையை விரிவுப்படுத்தி செம்மைப்படுத்தும். அந்த நாளுக்காக காத்திருப்போம்...
திமுக - கம்யூனிசம் எனும் இரண்டு ஏமாற்று கட்சிகளும் ஒன்று கூடுகிறார்கள்...
மேற்குவங்கம் நந்திகிராமில் விவசாயிகளைப் படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை அபகரித்தது அப்போதைய ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட்...
தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு விவசாயிகளைப் போராட்டக்களத்தில் தள்ளி, அவர்களின் நிலங்களை அபகரிக்கத் துடித்தது அப்போதைய ஆளுங்கட்சியான திமுக...
இந்த ரெண்டு களவாணி முள்ள மாரிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்னு கூடப் போறாய்ங்களாம்...
ஏமாற்றுப் பேர் வழிகள்...
60 கோடியில் கட்டப்பட்ட பங்களா.. மரணம் துரத்தும் அபாயம், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் முதலமைச்சர்...
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அரசு சார்பில் முதலமைச்சர்கள் தங்குவதற்காக ரூ.60 கோடியில் மிகப் பெரிய சொகுசு பங்களா கட்டப்பட்டது.
இந்த பங்களா உயிர் பழி வாங்கி வருகிறது.
இதனால் முதல்வராக வருபவர்கள் யாரும் இந்த பங்களாவை தவிர்த்து. பங்களா இருக்கும் திசைக்கு கும்பிடுப் போட்டு, உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் நிலை உருவாகியுள்ளது.
அந்த பங்களா தற்போது விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அந்த பங்களாவில் தங்குவதை விவரம் அறிந்தவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு 60 கோடி செலவில் இந்த பங்களாவை முதல்வர் டோர்ஜி கந்து கட்டினார். இவர்தான் அந்த பங்களாவில் முதலில் குடியேறினார்.
இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்துபோனார்.
இவருக்கு அடுத்தபடியாக, முதல்வராக வந்தவர் ஜார்போம் காம்லின், இவரும் நீண்டகாலம் அங்கு இருக்க முடியவில்லை, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மர்மமான முறையில் இறந்துபோனார்.
மேலும், பொறுப்பு முதல்வராக இருந்த கலிகோ புல் என்பவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு தூக்கு அதே பங்களாவில் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின்னர், அந்த பங்களாவில் பணியாற்றிய அரசு ஊழியரும் அங்கிருந்த ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி, தொடர்ந்து இவ்வாறு நடந்து வந்த மரணங்கள் காரணமாக அங்கு பேய் உலாவுவதாக கருத்து நிலவி வந்தது.
இதனால் முதல்வர்கள் அங்க தங்குவதை தவிர்த்து, உயிருக்கு பயந்து ஓடிவிடுகின்றனர்.
இதனையடுத்து, அந்த பங்களாவை தற்போது விருந்தினர் மாளிகையாக அரசு மாற்றியது. இருந்தும் இந்த பங்களாவில் தங்குவதை விருந்தினரும் தவிர்த்து வருகின்றனர்.
இன்னும் எத்தனைப் பேரை இந்த பங்களா காவு வாங்குமோ என்கிற பயத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்...
இலுமினாட்டி - கோகினூர் வைரம்...
கோகினூர் வைரம் கதை எல்லாரும் கேள்வி பட்டிருப்பீங்க.. இப்ப நம்ம கோகினுர் வைரத்தை பற்றி சிறிது பார்ப்போம்..
இந்த வைரம் விலை மதிப்பற்றது. இந்த வைரத்துக்காகவே இந்தியா மேல் பல படையெடுப்புகள் நடந்திருக்கு.
எல்லாருக்கும் இப்போ அந்த வைரம் எழிசபெத் என்ற எரும மாட்டு கிட்ட இருக்குனு தெரியும். இது வரை தெரிந்த கதை. இனி தெரியாத கதை.
இலுமினாட்டிகளுக்கும் கோகினூர் வைரத்துக்கும் என்ன சம்பந்தம்.? இருக்கு நிறைய சம்மந்தம் இருக்கு.
பிரிட்டிஸ் நாடு நம்மை அடிமை படுத்தவில்லை அது ஒரு கம்பேனி என்று முன்னாடியே சொன்னேன். இதோட உரிமையாளன் ரோத்ஸ்சைல்ட்.
இந்த பக்கிக்கும் எழிசபெத்க்கும் என்ன சம்மந்தம். இருவர் குடும்பமும் சம்மந்தம் பண்ணிக்கிச்சி அது தான் சம்மந்தம்.
இப்போ ரோத்ஸ்சைல்ட் குடும்பமும் அரச குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னு.
இப்போ இந்த கேவளமான அரச குடும்பத்துக்கு ஒரு இரகசிய கதை இருக்கு பிறகு சொல்றேன்.
இப்போ வைரத்துக்கு வருவோம். அந்த வைரம் வெறும் அழகு பொருள் அல்ல. இந்த வைரம் ஓர் துறவிக்கு சொந்தமானது.
அந்த வைரத்தில் ஒரு இரகசியம் இருக்குது. அது ஓர் நினைவு பதிவு. அந்த நினைவை அடைவதற்கு தான் இத்தனை சண்டையும்.
இந்த அரச குடும்பம் இதை வைத்து என்ன செய்யும்னு நினைக்றீங்களா?
இலுமினாட்டிகளோட அரசியே இந்த எலிசபெத் எரும மாடு தான்.
ஆனால் இது வரைக்கும் அவர்களால் அந்த நினைவு பதிவையும் வாசிக்க முடிய வில்லை.
அதை வாசிக்க கூடியவர்கள் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது...
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...
பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 17...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று இடம் பெறும் அனைத்து விஷயங்களும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. முக்கியத்துவம் என்பது மக்கள் கவனத்துடன் இதில் இடம் பெறும் குறிப்புகளை கவனிக்க வேண்டும் என்பதே அதுவாகும்.
வருங்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனங்களே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரில் வெளிப்படுத்தப் படுகின்றன.
அவ்வாறு பார்க்கையில் இந்த 17-ம் தீர்க்க தரிசனம் எதைப் பற்றி இங்கு குறிப்பை தருகிறது என பார்ப்போம்.
அதாவது தூர தேசமான இரஷ்யாவில் ஆன்மீக புரட்சி ஒன்று வெடிக்க உள்ளதாகவும், இந்த புரட்சியானது கம்யூனிஸ்ட் ஆதிக்க நாடுகளிடையே ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் 17-ம் தீர்க்க தரிசனம் குறிப்பிடுகிறது.
இந்த ஆன்மீக புரட்சியானது ரஷ்ய நாட்டில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும்,
இந்த மாற்றத்தினால் இந்திய - இரஷ்ய நாடுகளுக்கிடையே ஒரு பரஸ்பர நட்புறவு ஏற்படும் என்றும்,
இதனால் இந்திய தேசத்தில் பல முன்னேற்றங்களும் அறிவியல் சார்ந்த வளர்ச்சிகளும் ஏற்படும் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகின்றது.
மக்களை ஆட்சி செய்யும் அனைத்து ஜனநாயக நாடுகளும் இந்தியாவின் நட்புறவை வேண்டி இந்திய தேசத்தில் தமது தொழில் முதலீடுகளை செய்ய விரும்புவார்கள் என்றும்,
அச்சமயத்தில் உலகளாவிய அளவில் பெரும் இயற்கை சீற்றங்கள் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் என்றும்,
அதனால் தமது தொழில் முதலீடுகளை செய்ய இந்திய தேசமே சிறந்த தேசம் என்ற முடிவிற்கு பிற தேசங்கள் வரும் என்றும்,
இதனால் இந்தியா 2020-க்குள் பெரும் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடாக மாறும் என்றும் 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.
அந்நிய நாட்டு படையெடுப்பால் ஈராக் நாடு பெரும் பாதிப்பு அடையும் என்றும்,
அச்சமயத்தில் எண்ணெய் வளங்கள் குறையும் என்றும்,
இச்சமயத்தில் இந்தியாவின் பூகோள அமைப்பில் புதிய எண்ணெய் வளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிவார்கள் என்றும்,
இதனால் உலக நாடுகளில் இந்தியா சிறப்பான இடத்தை பொருளாதாரத்தில் அடையும் என்றும் 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு புதிய குறிப்பை தருகின்றது.
காலத்தால் அழியாத பல காவியங்களை இனி உலகமே இந்திய தேசத்திலிருந்து காணப் போகிறது என்றும்,
புதுப்புது கண்டு பிடிப்புகள், புதுப்புது தொழில் நுட்பங்கள், பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், விவசாயத்தில் மாபெரும் பசுமைப் புரட்சி, கடல் சார் துறைகளில் அசுர வளர்ச்சி என இந்திய தேசம் பல முன்னேற்ற துறைகளை உலகம் அறியும்படி சாதனை செய்ய உள்ளதாக 17-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.
விக்டோரியா மகாராணி வாழ்ந்த நகரில் ஒரு அதிசயம் வெளிப்படும் என்றும்,
அது கிருஸ்துவ மதத்தினரிடையே ஆழ்ந்த இறை நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அச்சமயத்தில் ஜெருசல நகரின் முக்கிய வீதி ஒன்றில் மகா சக்தி வாய்ந்த பூமி அதிர்வு ஒன்று ஏற்படும் என்றும், இதனால் மக்கள் பீதியில் ஆழ்வார்கள் என்றும்,
அது நிகழ்ந்த 6 மணி நேரத்திற்குள் அந் நகரில் ஒரு இறை அற்புதம் ஏற்படும் என்றும்,
அன்று உலகத்திற்கு இறைவன் கர்த்தர் வழியில் ஒரு புதிய தீர்க்க தரிசனத்தை கிருஸ்துவ மக்களுக்கு அறிவிப்பார் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு இறைக் குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.
புனித மெக்கா மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நகரம் என்றும்,
அங்கும் மாபெரும் இறை அதிசயம் ஒன்று நடக்க உள்ளது என்றும்,
அது நபிகளின் நினைவு நாளில் நடக்க உள்ளது என்றும்,
இறை மகனார் அங்கு தூய ஆவி வடிவில் காட்சி அளிக்கக்கூடிய மகா அற்புதமான நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது என்றும்,
அச்சமயத்தில் வான்வெளியில் தூய ஆவி ஒன்று சூரியனைப் போன்று பிரகாசித்து தென்மேற்கே நகர்ந்து சென்று, ஒரு புனித மலையில் இறங்கும் என்றும்,
அந்த இடத்தில் புனித நீரூற்று ஒன்று தோன்றி ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த நிகழ்வு இஸ்லாம் மக்கள் சமூகத்திற்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்றும்,
அச்சமயத்தில் உலக இஸ்லாம் மக்களிடையே மகத்தான மாற்றம் நிகழும் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மிக முக்கிய குறிப்பை தருகின்றது.
காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு கடலுக்குள் மறைந்த துவாரகையின் ஒரு பகுதி கடல் மட்டத்திற்கு மேலே வரும் என்றும்,
அக்கால கோபியர் கொஞ்சி மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு மாபெரும் பொக்கிஷம் வெளிவரும் என்றும்,
அதனை ஆய்வு செய்யும் பொழுது உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு கிருஷ்ண பகவானின் அடுத்த அவதாரம் எங்கே உள்ளது? என்ற புதுமையான குறிப்பை கண்டு மக்கள் ஆச்சர்யப்படுவார்கள் என்றும்,
அச்சமயத்தில் உலகளந்த பெருமானின் சந்நதி ஒன்றில் மகா அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும்,
அச்சமயத்தில் குமரிக்கடலில் பெரும் கொந்தளிப்பு ஒன்று உருவாகி அச்சுறுத்தி அதன்பின் ஓயும் என்றும் இறை தீர்க்க தரிசனம் ஒன்று மேலும் ஒரு குறிப்பை தருகிறது.
மன்னர் ஆட்சியால் மக்கள் நிம்மதி இழந்த ஒரு நாடு இயற்கையின் சீற்றத்தால் பெரும் அழிவை சந்திக்க உள்ளது என்றும்,
இதனால் அந்நாட்டு மக்கள் செய்வதறியாது குழம்பி நிற்கும் சமயத்தில் அங்கும் ஒரு தெய்வீக தீர்க்க தரிசனத்தின் படி மாபெரும் அதிசயம் ஒன்று நடைபெறும் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
நீ எந்த சாதிக்காரனாக இருந்தாலும். உன் குல தெய்வம் சிவபெருமான் தான்...
பறையர்...
பறை = இசைக்கருவி.
இசை = நாதம். நாதமையமானவன் சிவபெருமான். பறை நாதத்தை விரும்புபவன் தான் சிவபெருமான். பறை நாதத்தை விரும்பும் ஈசனுக்கு அடியவர் தான் பறையர்.
ஐயர்...
ஐயன் = உயர்ந்தவன்.
எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் ஈசன். எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈசனுக்கு அடியவர் தான் ஐயர்.
வன்னியர்...
வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்டவர் ஈசன். வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் வன்னியர்.
செட்டியார்...
கொழுந்து விட்டு எரியும் சோதியை போன்ற சென்நிற (சிவந்த நிறம்) மேனியை கொண்டவன் சிவபெருமான். சென்நிற மேனி உடைய ஈசனுக்கு அடியவர் தான் சென்நியர். சென்நியர் என்ற பெயரே காலப்போக்கில் செட்டியார் என்றானது.
செம்படவர்...
செழிப்பான வாழ்வை தந்தருள்பவர் தான் ஈசன். செழிப்பான வாழ்வை தந்தருளும் ஈசனுக்கு அடியவர் தான் செம்படவர்.
குயவர்...
அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைப்பவர் தான் ஈசன். அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் குயவர்.
வெள்ளாளர்...
வெற்றியை தன்வசம் வைத்திருப்பவர் தான் ஈசன். வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் ஈசனுக்கு பிள்ளையான அடியவர் தான் வெள்ளாளர்.
முதலியார்...
தோற்றத்திற்கு வித்தானவர் சிவ பெருமான். எல்லாவற்றிற்கும் முதலான சிவபெருமானுக்கு அடியவர் தான் முதலியார்.
கோனார்...
கோமகனார் என போற்றப்படுபவர்.
கோ - கோவில், பசு காப்பவர்.
வேதியர்...
வேதத்தை தந்தருளியவர் ஈசன். வேதத்தை தந்தருளிய சிவ பெருமானுக்கு அடியவர் தான் வேதியர்.
நாயக்கர்...
எச்செயலுக்கும் நாயகமாக திகழ்பவர் சிவபெருமான். அத்தகைய நாயகனுக்கு அடியவர்தான் நாயக்கர்.
நாடார்...
தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவன். தென்னாட்டை தன்நாடாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் நாடார்.
தேவர்...
கள்ளர்...
அடியவர் உள்ளத்தை கவரும் கள்வர் சிவபெருமான். அத்தகைய சிவ பெருமானுக்கு அடியவர் தான் கள்ளர்.
பத்தர்...
பத்திநெறி அறிவிப்பவர் சிவபெருமான். பத்திநெறி அறிவிக்கும் ஈசனுக்கு அன்பர் தான் பத்தர்.
அப்படியாக..... நீ எக்குலத்தவனாக இருந்தாலும், குலத்திற்கேற்பதோர் நலமிக கொடுப்பது நமச்சிவாயவே.
உன் குல தெய்வம் சிவபெருமான் தான் என்பதை மறந்து வாழ்வது மறு பிறவிக்கு வித்தாகும்.
சிவபெருமான் தான் எம் குலதெய்வம். சிவபெருமான் தான் எம் குலம் காக்கும் தெய்வம்.
சிவபெருமான் தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து, சிவபெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கை. அத்தகைய வாழ்வே வழிபாடு..
நற்செயல் உன் வாழ்தலே இனிய வழிபாடு. நமச்சிவாய..
அடுத்த பிறவில் இதே சாதியில் தான் பிறப்போமா?... உத்திரவாதம் உள்ளதா?
சண்டை, சச்சரவுகளை விடுத்து இறைவனை போற்றி அன்புடன் வாழ்வோம்.
சாதி இறைவனுக்கு சேவை செய்ய உருவாக்கப் பட்டதே தவிர... தலை விரித்து ஆட அல்ல..
இறையே அறம்..
சில சாதிகள் விடுபட்டிருக்கும். குறிப்பு தந்தால் சேர்க்கப்படும்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 17...
ஆழ்மனதின் அற்புத சக்திகளை வெளிப்படுத்திய அற்புத மனிதர்களைக் கண்டோம். அத்தகைய மனிதர்களை மட்டுமல்லாமல் அந்த மனோ சக்திகளையும் ஆராயும் முயற்சியில் பலகாலமாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த சக்திகளின் செயல்பாட்டை அறிய முடிந்தாலும் அந்த சக்திகளை விஞ்ஞான முறைப்படி விளக்கவோ, அளக்கவோ வழிகளைத் தேடினார்கள்.
அவர்களின் ஆராய்ச்சிகள் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எத்தனையோ பொய்யும் புரட்டும் இந்த ஆழ்மன சக்திகள் போர்வையில் மலிந்து கிடந்தன.
மேஜிக் நிபுணர்கள் சுலபமாகச் செய்து காட்டியவையை எல்லாம் தங்கள் சக்தியால் செய்வதாக சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் எல்லா கால கட்டங்களிலும் இருந்து வந்தது. இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ஆழ்மன சக்திகளாகக் கருத முடியாத வேறு சில சக்தி வெளிப்பாடுகளும் இருந்து வந்தன. அவை அதிசயிக்க வைக்கும் சக்திகளாக இருந்த போதிலும் ஆராய்ச்சியாளர்களின் ஆழமன சக்தி அடைமொழிக்குப் பொருத்தமானதாக அவை இருக்கவில்லை.
சில சக்திகள் ஐம்புலன்களின் அசாதாரண அறிவாக இருந்தன. அவை விலங்குகளிடம் கூட இருந்தன. சாதாரண மனித அறிவுக்கு அவை அசாதாரணமானதாகத் தோன்றினாலும் அவை அந்தந்த விலங்கினங்களுக்கு சர்வசகஜமாக இருந்தன.
உதாரணமாகச் சிலவற்றை சொல்லலாம். நாய்களின் மோப்ப சக்தி அசாதாரணமானது. ஒவ்வொரு மின்கம்பத்தின் அருகேயும், ஒவ்வொரு புதரின் அருகேயும் சென்று அங்கு நடந்த எத்தனையோ விஷயங்களையும் தன் மோப்ப சக்தியால் அதனால் அறிந்து கொள்ள முடியும். மனித கண்ணிற்குத் தெரியாத சிலவகை எக்ஸ் ரே கதிர்களை எலிகளால் பார்க்க முடியும். நிலநடுக்கம் வருவதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகள் சிலவகை கடற்பறவைகளுக்கும், குதிரைகளுக்கும் தெரியும் என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மனிதனுக்கு அசாதாரணமாகத் தோன்றும் இவை எல்லாம் விலங்கினங்களின் தனித் தன்மைக்கு பெரிய விஷயமல்ல. ஒருசில அபூர்வ மனிதர்களும் இந்த அபூர்வத் தன்மையைப் பெற்று விடுவதுண்டு. அதை மற்ற ஆராய்ச்சிகளுக்கு ஏற்றுக் கொள்ளலாம், ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு அவை பொருந்தாது என்றே ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.
ஒரு சுவையான சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார்.
அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழியிலேயே அந்த நோயாளி எழுதி இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.
முதலில் டாக்டருக்கும் இந்த செய்தி தெரிந்து பரபரப்படைந்தவர்களுக்கும் தோன்றியது பூர்வஜென்மத்தில் அந்த நோயாளி அந்த ஆஸ்கன் மொழி பேசும் இனத்தவராக இத்தாலியில் கிமு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தான். இல்லா விட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு மொழியைத் திடீரென்று ஹிப்னாடிச மயக்கத்தில் அந்த நோயாளி எப்படி எழுதியிருக்க முடியும் என்று சிந்தித்தனர். அது வரை அவர்கள் அறிந்திருந்த பூர்வஜென்ம நினைவுகள் எல்லாம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கி.மு காலத்தைய நினைவு என்றால் அது மிகப்பெரிய மைல்கல் என்று ஆரம்பத்தில் தோன்றியது.
ஆனால் நன்றாக விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. ஒரு நாள் அந்த நோயாளி நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விரித்து வைத்திருந்ததைக் கவனித்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஆஸ்கன் மொழியில் ஈயத்தகட்டில் பதித்திருந்த சாபத்தின் படத்தை ஒரு கணம் பார்த்திருக்கிறார்.
ஒன்றும் புரியாத அதை அவர் அப்போதே மறந்தும் போயிருந்தாலும் ஒரு கணம் பார்த்த அந்தப் படத்தை அவர் அறியாமலேயே முழுவதுமாக அவர் மூளை படமாக உள்ளே பதித்துக் கொண்டிருக்கிறது. அது சில காலம் கழித்து அவருடைய ஹிப்னாடிச மயக்கத்தில் வெளி வந்திருக்கிறது. ஒரு கணமே தற்செயலாகப் பார்த்த ஒரு அறியாத மொழியில் எழுதப்பட்டதை சில காலம் கழித்து அப்படியே எழுத முடிவது ஆச்சரியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைக் கூட ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியாக நினைக்கவில்லை.
ஏனென்றால் இதற்கு ஒரு விளக்கத்தை அறிந்திருந்த அறிவியல் ரீதியாக அவர்களால் அறிய முடிந்தது தான்.
ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி எல்லாம் தற்போதைய அறிவியலுக்கு அகப்படாத மனோசக்தியின் தன்மையை அறிய முற்படும் ஆவலாக இருந்தது. அந்த சுவையான ஆராய்ச்சிகளைப் பார்ப்போமா?
மேலும் பயணிப்போம்.....
அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? சென்னையில் பரபர சந்திப்புகள்...
அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரனை லோக்சபா துணைசபா நாயகர் தம்பிதுரை திடீரென சந்தித்தார்.
ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா விகாரத்தில் வசமாக சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்வது குறித்து அதிமுக (அம்மா) கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா கொடுத்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கினார் விஜயபாஸ்கர். தொடர்ந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் ஒட்டு மொத்த அமைச்சரவைக்கே ஆபத்து எனவும் டெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜயபாஸ்கருக்கு தினகரன் ஆதரவு
இதையடுத்து விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ஆனால் டிடிவி தினகரனோ, விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என வலியுறுத்தி வருகிறார்.
எடப்பாடி போர்க்கொடி?
டிடிவி தினகரனின் பிடிவாதத்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் டிடிவி தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எப்போது வேண்டுமானாலும் போர்க்கொடி தூக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
பரபர சந்திப்புகள் - இதனிடையே மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று திடீரென லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து இன்று சென்னை பெசன்ட் நகரில் டிடிவி தினகரனை தம்பிதுரை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போதும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?
விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்தால் தான் டெல்லியின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும் என நிலவரங்களை இச்சந்திப்பின் போது தம்பிதுரை விளக்கியதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் பரபர விவாதங்கள் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...
இந்திய இராணுவத்தின் உண்மை முகம்...
இந்திய இராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் நடத்தி வரும் மனித உரிமை மீரல்களை அம்பலப்படுத்தி பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம்...
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும்.
காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.
இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது.
சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.
இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
ஐரோம் சர்மிளா ஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்த பொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.
இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன.
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் இந்தியர்களும் இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.
இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம்.
இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின் பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை? என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.
சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்து போவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.
சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பது தான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது.
இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்...
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.
2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.
அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது.
இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்...
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பது தான்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம் என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது.
காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்து விட்டது என்றே இதனைக் கூறலாம்.
இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத் தான் எடுத்துக் காட்டுகின்றன.
தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை...
தற்போதைய பாஜக அரசைப் பற்றி சொல்லவே தேவையில்லை...
Subscribe to:
Posts (Atom)