இந்தி தெரியாது என்பதையே தமிழில் எழுத முடியாத இவர்களா தமிழ் மொழிக்காக போராடுபவர்கள்..?
09/09/2020
திருட்டு தெலுங்கு திமுக வை நம்பி ஏமாந்தது போதும் விழித்தெழு தமிழா...
இந்தி தெரியாது என்பதையே தமிழில் எழுத முடியாத இவர்களா தமிழ் மொழிக்காக போராடுபவர்கள்..?
பிரம்மத்தை நோக்கி - 1...
இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.
ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.
எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.
பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.
உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.
ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.
எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.
எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.
அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.
பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.
கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.
அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.
ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.
இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்.....
மோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல்...
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.
சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..
மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?
அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது..
நடு விரல் உங்களை குறிக்கிறது..
மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது..
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது..
பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது..
உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..
பெருவிரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..
பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..
இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்..
ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப் பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...
நாம் தமிழர் கட்சியை மீண்டும் உருவாக்கிய இந்த சுபா. முத்துக்குமார் கொலை வழக்கு என்ன ஆச்சு..?
தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துகுமார் வாழ்க்கை குறிப்பு...
தாயார் பார்வதி, தந்தை சுந்தரம் இவர்களின் இரண்டாவது பிள்ளையாக மதுரையில் பிறந்தார். தந்தையின் கட்டிடத்தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு சென்றதால் பழனியிலேயே வளந்தார்.
பள்ளிப்படிப்பு காலம் முதலே ஈழ விடுதலைக்காக பழனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ. அதே போன்று தமிழ் நாடு விடுதலையும் தேவை என்ற புரிதலுக்கு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலைப்படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாகக் கொண்டார். ஆயுதப் பயிற்சிக்காக தமிழிழத்திற்கு சென்றார். அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிங்களப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கேற்றார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பினார்.
தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படையை தலைமையேற்று வழி நடத்தினார். அத்துடன் தமிழிழ விடுதலைக்காக விடுதைலைப்புலிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார்.
சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளி ரோமியோ மற்றும் அவரது தோழர்களையும் பாதுகாப்பாக ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். அது போலவே உலகே வியக்கும் வண்ணம் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் அமைத்து தப்பித்து வந்த 4 பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலிகளையும் பொறுப்பேற்று ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். மணமேல்குடியில் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலையானர்.
விடுதைலை ஆனவுடன் தலைமறைவு ஆனார். சந்தனக்காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டத்தளம் அமைத்தார். வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனார் பிடித்துக் கொண்டு விடுவிக்க தமிழர்களின் சீவாதாரப் பிரச்சினையான காவிரி நீர், பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் தமிழ்மக்களுக்கு தீர்வு போன்ற கோரிக்கைகளில் முத்துக்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
பிறகு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். அய்யா பழ.நெடுமாறனுடன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டு சென்றதாக கொளத்தூர்.மணி அவர்களுடன் கூட்டு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகி கன்னட சிறையில் அடைக்கப்பட்டார்.
அத்துடன் கர்நாடகத்தில் 1992-ல் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தாயரித்ததாக கைது செய்யப்பட்ட கன்னடத் தமிழர்களுடன் சிறைப்படுத்தப்பட்டார். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலை பெற்றார்.
மீண்டும் தமிழ்தேசிய அரசியலில் களம் புகுந்தார். மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை சீமானுடன் மற்றும் தோழர்களுடன் வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்டியியை தொடங்குவதற்க்கான பணியில் ஈடுபட்டார். அதே வேளையில் வடகாடு கரு.காளிமுத்து-சிவந்தியம்மாள் ஆகியோரின் மகளாகிய-மாதரசியை சாதி மறுப்பு மணம் முடித்தார்.
பிறகு ஈழத்திற்கு இரத்தப் பைகளையும் மருந்துப்பொருட்களையும் அனுப்பி வைத்ததாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒன்றரை மாதம் கழித்து பிணையில் விடுதலை பெற்றார்.
சீமான் மற்றும் தோழர்களுடன் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மாநில ஒருங்கிணைப்பாளராக சுற்றி சுழன்று பணியாற்றினார்.
சற்றேக்குறைய - 10 ஆண்டுகள் தமிழக விடுதலைக்காக சிறை வாழ்வு.
5 ஆண்டுகள் தலைமறைவு, ஆயுதப் போரட்ட வாழ்வு.
4 ஆண்டுகள் மக்களுக்காக அரசியல் வாழ்வு...
எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள்...
எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..
எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும்.
செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..
இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….
இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.
பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.
இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும்.
இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.
இலைகளையும், பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை, கால் பகுதிகளை முக்கி வைக்கலாம்..
எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..
தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.
மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது...
ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி...
மலபார் புளி என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.
கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.
கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்து வந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்...
ஆங்கிலம் தமிழில் இருந்து வந்ததா.? ஆதாரம் இதோ....
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி..
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலி
ருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலி
ருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை, பின்
ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.
ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு..
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி.
உலக கலாச்சாரங்களின் தொட்டில்.
உலக நாகரீகங்களின் ஊற்று.
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ்.
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations.
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம்..
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )
600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும்..
உருளை = roll (கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை).
கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் ).
பொத்தல் ல இருந்து பொத்தான் = Button.
உலகில் உள்ள, இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது.
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது.
ஆங்கிலத்தின் தாய் மொழியான.. லத்தீன், கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது.
லத்தீன், கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி..
2015 ஆய்வுகளின் படி...
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ) - சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி.
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி ).
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி..
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி ..
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி, இயற்கையான மொழி ).
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது.
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது.
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் ..
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும்.
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முன்பு மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை.
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம்..
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது..
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை.
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000..
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள்..
கி. முன் 3000
கி.முன் 5000
கி. முன் 7000
நூலான தொல்காப்பியமும் உள்ளது..
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும்..
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான்..
மரத்தை கட்டுவதால் கட்டு மரம்.
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம் " தான்..
ஆங்கிலம் பேசுவது பெருமை என நினைக்கும் தமிழர்களுக்கு உரக்கச் சொல்லுங்கள்...
அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் என்றால் என்ன?
கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது.
இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை.
அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம்.
அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது.
மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள்.
மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது.
மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட்.
இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம்.
வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி நான் கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.
மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்..
இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..
1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.
2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.
3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.
4. இன்னொரு ஆச்சரியமான தகவல் - மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.
5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.
7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள்...
தச்சு பட்டறையை அபகரித்து கொலை மிரட்டல் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கணவன் மனைவி ஆட்சியரிடம் மனு...
சொந்தமான தச்சு பட்டறையை சட்ட முரணாக அபகரிக்க லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை திருடி கொலைமிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சிசிடிவி காட்சியுடன் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தூத்துக்குடி பிரைணன்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரமணி இவரது மனைவி இசக்கியம்மாள், இவர்களுக்குச் சொந்தமான தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தச்சு பட்டறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மரப்பட்டறை வைத்து தச்சு தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் நடத்தி வரும் தச்சுப் பட்டறையில் கடந்த 30 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு இரவு நேரத்தில் இசக்கியம்மாளின் அண்ணன் மற்றும் தம்பி இருவர் உட்பட ரவுடிகள் ஒன்று சேர்ந்து தச்சு பட்டறையின் பூட்டை உடைத்து நுழைந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் இடம் ஆதாரத்தோடு புகார் அளித்தும் அவர்கள் மீது சட்டப்படி எவ்வித நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமில்லாமல் பட்டறைக்குள் எங்களை நுழையக்கூடாது என ஆய்வாளர் கூறிவிட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தொடர்ந்து தனது அண்ணன் மற்றும் தம்பி இருவரும் ரவுடியுடன் சேர்ந்து தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் எங்களை எங்கள் பட்டறைக்கு செல்லக்கூடாது என காவல் ஆய்வாளர் உத்தரவிட்ட பின்பு எனது அண்ணன் மற்றும் தம்பிகள் சர்வசாதாரணமாக எங்கள் பட்டறைக்குள் புகுந்து அவர்கள் ஏற்கனவே திருடியது போக மீதமிருக்கும் இயந்திரங்கள் மற்றும் மர சாமான்களையும் திருடி வருகின்றனர்.
மரச்சாமான்கள் ஆர்டர் கொடுத்தவர்கள் தங்களை நெருக்குவதால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் களவாடப்பட்ட எங்கள் பொருட்களை மீட்டு தர வேண்டும் என்றனர்...
பங்காளி, அங்காளி என்றால் என்ன?
பங்காளிகள் - தந்தைவழி உறவினர்கள் ‘பங்காளி’ களாவும், தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளி.
அது போல நமது தகப்பன் வழி சகோதர்களின் வாரிசுகளான பெரியப்பா மகன், சித்தப்பா மகன், ஒன்றுவிட்ட , இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள் பங்காளிகள் ஆகும்...
அங்காளி - தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
நமது தாய்வழி உறவினர்கள் சகோதிரிகளின் வாரிசுகளான அதாவது சின்னம்மா மகன் பெரியம்மா மகன்களே அங்காளிகள் ஆகும்...
உலக வரலாற்றில் உருளைக்கிழங்கு ஏற்ப்படுத்திய தாக்கம்...
உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் மதிக்கப்படாத உணவு...
பன்றிக்கு தரும் முக்கிய உணவாக இது இருந்தது அதுவும் நோஞ்சான பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவாக இது இருந்துள்ளது..
உருளைக்கிழங்கை சாப்பிடுவது கேவலமான செயலாக இருந்த காலமும் உண்டு..
போர் காலகட்டத்தில் அடிமைகளுக்கு வழங்கப்படும் உணவாகவும் இருந்தது..
அவித்த உருளைக்கிழங்கு ஒரு துண்டு பல கருப்பு இன ஏழைகளுக்கு அன்றாட உணவாகவும் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது..
இதற்கு காரணம் இத்தாலி போன்ற மேலைநாட்டு பணக்காரர்கள் செய்த செயல் தான்..
பொதுவாக உருளைக்கிழங்கு என்பது மற்ற காய்கறிகள் போன்று அல்ல, உருளை கிழங்கு ஒரு வகையான பசியாற்றும் உணவு..
சோறுக்கு பதில் உருளைகிழங்கை மட்டுமே உண்டு வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளனர்..
இந்த உருளைக்கிழங்கு வரலாற்றில் பயங்கர தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஆப்பிரிக்க பகுதியில் அடிக்கடி போர் நடப்பதால் அப்பகுதி மக்கள் பதுங்குகுழி களை அமைத்து அங்கே சிறிது சிறிதாக உருளைக்கிழங்கை தான் சேமித்து வைத்து இருந்துள்ளார்கள்..
காரணம் போர் முடிய மாதக்கணக்கில் கூட ஆகலாம் அதுவரை பதுங்குகுழி க்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்..
அந்த நேரத்தில் உருளைக்கிழங்கு தான் முழு நேர உணவாக உண்டு வந்துள்ளனர்..
மன்னர் காலத்தில் பஞ்சத்தை போக்க உருளை கிழங்கை பயிருடுவதையும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல மன்னர்கள் தங்களது தோட்டதில் உருளைகிழங்கை பயிருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதும் வரலாறு தான்..
Maria Antonia ப்ரான்ஸ் நாட்டின் இரானி என்றழைக்கப்படும் இந்த அரசி கூட உருளை கிழங்கின் பெருமதியை உணர்ந்து உருளைச் செடியின் பூவை மகுடமாக தலையில் வைத்து இருந்தால் என்றும் வரலாறு உள்ளது..
இந்த வரலாற்றை ஏன் கூறினேன் தெரியுமா?
சில பணக்காரர்கள் சமீபத்திய பணக்கார உணவாகவுள்ள (ப்ரெஞ் ஃபிரை) உருளைக்கிழங்கு பொறியல் வாங்கி உதடு படாமல் சாப்பிடும் போது இந்த வரலாற்றை சொல்ல தூண்டியது..
ஃபிங்கர் சிப்ஸ் எனவும் ஃபரெஞ் ஃபிரை எனவும் விற்பனை செய்யும் பெரிய பெரிய சாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ள குளிர்சாதன அரங்கத்தில் உள்ள ப்ரெஞ் ஃபிரை புகைப்படங்கள் நம்மை அழைக்கிறது..
அவைகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?
இவைகள் பணக்காரன் சாப்பிடும் உணவு போன்றே ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது..
பெரு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் ஒரு நாள் உணவாக ஒரு அவித்த உருளை கிழங்கும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும் தான் பெரும்பாலான உணவாக இருந்துள்ளது என்ற தகவலும் உண்டு..
உங்கள் வீட்டில் இனி உருளைக்கிழங்கு கொண்டு வந்து வைத்தால் பல ஆயிரம் ஆண்டுகளுகளாக பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உணவாக இது இருந்துள்ளது என்ற மனதுடன் உண்ணுங்கள்..
ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் இப்படி உணவாக காலம் முழுவதும் உருளை கிழங்கு உண்ட மக்களுக்கு வாய்வு பிரச்சினை இருந்து இருக்க வேண்டுமே அதனால் இந்த உணவின் வீரியம் குறைந்திருக்க வேண்டுமே இதைப்பற்றி வரலாற்றில் எங்குமே குறிப்பு இல்லை...
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது நம்மிடம் எப்படி தொற்றிக் கொண்டது...
சிந்தியுங்கள் புலப்படும்...
தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது - அம்பேத்கர்...
நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்...
திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்பதாகும்.
தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.
தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்தபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.
பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.
திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.
நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.
மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.
நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? - டாக்டர். அம்பேத்கர்.. தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94...
எலும்பு தேய்மானம் தடுக்கும் சூரிய ஒளி...
எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள். மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இதில் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய ரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன.
மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு அமைந்துள்ளன. எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளை கொண்டு எலும்புகளுக்கு விறைப்பு தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.
மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு,ரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது.மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.
எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும். எலும்பு தேய்மானம்மனிதன் முதுமை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து உணர முடியும்.
வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாகி நோயின் தீவிரம் மனிதனை முடக்கும்.எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக் கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து விடுவதால் எலும்புகளில் கால்சிய குறைபாடு காரணமாக தேய்மானம் ஏற்படுகிறது.
எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானால் எலும்பு முறிவு ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானம் ஆகும். காரணங்கள்ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது.
பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் எலும்பு தேய்மான நோய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும்.உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் “D” குறைபாடும் ஏற்படும்.
ஆண்களை பொறுத்தவரை புகைப்பழக்கம், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை எலும்பு தேய்மான நோய்க்கு முக்கிய காரணமாகும். மெனோபாஸ் பருவம்பெண்களுக்கு மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது.
முக்கியமாக பெண்களில் “மெனோபாஸ்” எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து விடுவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் எலும்பு தேய்மானம் ஏற்பட காரணமாகிறது. வைட்டமின் “D” குறைபாடுகிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவுப்பழக்க வழக்கம் இருந்து வருகிறது.
மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் எலும்பு தேய்மானத்துக்கு காரணமாகும். வைட்டமின் ‘டி’ குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலை இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது மற்றும் மரபுக் காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது.
குளிர்பானம் குடித்தல்: குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகமாக உள்ளது. பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்கு செல்லும் கால்சியம் சத்து குறையும். எனவே சிறு வயதில் இருந்தே குளிப்பானங்களை குடிக்கக்கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும்.
பக்க விளைவுகள்...
எலும்பு முறிவு, மூட்டு வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், முதுகு வலி, உடல் சோர்வு, அசதி, முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு... தீர்வு என்ன?
முதியவர்கள் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
தினமும் 15 நிமிடமாவது சூரிய ஒளியில் உடல் படுவது அவசியம். இதன் மூலம் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் ‘டி’ தோல் மூலம் உறிஞ்சப்படும்.
கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். சோயாவையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
மீன்களை தினம்தோறும் சேர்த்து கொள்வது நல்லது.
புகை பிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
கால்சியம் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதை மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சாப்பிடலாம்...
தமிழர் விரோத பாஜக அடிமை அதிமுக எடப்பாடியின் சதி வேலை...
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு...
சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் குற்றச்சாட்டு..
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம்..
இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும்
விருப்பமில்லை..
இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தி தெரியாது..
அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை...
அழுமூஞ்சிப் பேய்...
பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.
ஆள் கொஞ்சம் சபலிஸ்ட்.. தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை. ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார். அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார். பயந்து மறுத்தாள்.
எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.
ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன்வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.
சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன. ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.
வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள். அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம். அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது. அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான். முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுதுகொண்டே ஒன்று இரண்டு.... எண்ணுவதற்காக வெளியே வரலாம்...
இந்துத்துவாவின் இரண்டு தூண்கள் தான் திராவிடம் & தலித்தியம்...
கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?
பதில்: இது கொஞ்சம் பெரிய விடயம். அதை எளிய வடிவில் கதை போல் விசயத்துக்குள் செல்வோம்.
திருட்டு கூட்டாளிகள்...
தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.
ஆரியன் என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி?
தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.
திராவிடன் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான்.
பின்பு திராவிடன் 'உண்மை தான் தமிழரசா, ஆரியன் சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான்.
அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திராவிடன் ஆரியனுக்கு தான் துணை நிற்கிறான்.
தலித்தியன் என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான்..
'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான்.
இறுதியில் அந்த தலித்தியன் போட்டானே ஒரு போடு....
அடேய் தமிழரசா... நீ தமிழரசனே கிடையாதப்பா...... உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.. எல்லாமே ஆரியனுடையது தான் என்கிறான்.
திராவிடனாவது தமிழரசனின் உடமைகளை ஆரியனுடையது என்று கூறினான்.
ஆனால் தலித்தியன் ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான்.
கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆரியனுடன், திராவிடனும், தலித்தியமும் இருட்டறைக்குள் கை குலுக்கிக் கொண்டு செல்கிறார்கள்...
Subscribe to:
Posts (Atom)