09/09/2020

தச்சு பட்டறையை அபகரித்து கொலை மிரட்டல் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கணவன் மனைவி ஆட்சியரிடம் மனு...


சொந்தமான தச்சு பட்டறையை சட்ட முரணாக அபகரிக்க லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை திருடி கொலைமிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சிசிடிவி காட்சியுடன் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி பிரைணன்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரமணி இவரது மனைவி இசக்கியம்மாள், இவர்களுக்குச் சொந்தமான தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தச்சு பட்டறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மரப்பட்டறை வைத்து தச்சு தொழில் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் நடத்தி வரும் தச்சுப் பட்டறையில் கடந்த 30 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு இரவு நேரத்தில் இசக்கியம்மாளின் அண்ணன் மற்றும் தம்பி இருவர் உட்பட ரவுடிகள் ஒன்று சேர்ந்து தச்சு பட்டறையின் பூட்டை உடைத்து நுழைந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் இடம் ஆதாரத்தோடு புகார் அளித்தும் அவர்கள் மீது சட்டப்படி எவ்வித நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமில்லாமல் பட்டறைக்குள் எங்களை நுழையக்கூடாது என ஆய்வாளர் கூறிவிட்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தொடர்ந்து தனது அண்ணன் மற்றும் தம்பி இருவரும் ரவுடியுடன் சேர்ந்து தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் எங்களை எங்கள் பட்டறைக்கு செல்லக்கூடாது என காவல் ஆய்வாளர் உத்தரவிட்ட பின்பு எனது அண்ணன் மற்றும் தம்பிகள் சர்வசாதாரணமாக எங்கள் பட்டறைக்குள் புகுந்து அவர்கள் ஏற்கனவே திருடியது போக மீதமிருக்கும் இயந்திரங்கள் மற்றும் மர சாமான்களையும் திருடி வருகின்றனர்.

மரச்சாமான்கள் ஆர்டர் கொடுத்தவர்கள் தங்களை நெருக்குவதால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் களவாடப்பட்ட எங்கள் பொருட்களை மீட்டு தர வேண்டும் என்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.