17/06/2017

இலுமினாட்டி யும் தமிழர் நிலம் தொடர்பும்...


குமரிகண்டம் என்ற வார்த்தை தற்போது பிரபலமாகி விட்டதால் அங்கிருந்தே தொடங்குவோம்..

குமரிகண்டம் என்பது ஒரு பொய். ஏனெனில் அது ஆயிரம் தீவுகள் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு தான் கண்டம் அல்ல...

ஆனால் தற்போதுள்ள..

காவிரி - வைகை - தாமிரபரனி

போன்ற ஆற்றை ஒட்டிய நாகரீகத்தை போலவே இதே வரிசையில்..

குமரியாறு - பஃறுளி

ஆறு போன்ற ஆறுகளும் அந்த ஆற்றில் நாகரிகமும் உருவாகி செழித்து இருந்தது. ஆதியில் அங்கிருந்து தான் கடல் வணிகம் மேற்கொள்ளப்பட்டது.
நாகரிகம் என்பது ஏதோ பரிமாண வளர்ச்சி என்று நினைப்பது தவறு.

நாகரிகம் என்பது அடிமைகளை வைத்து தான் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டது என்பது உலகவரலாறு.

எஃகா எகிப்து மாயன் நாகரிகங்கள்..

அந்த அடிமைகள் யார் எனில் காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளை பிடித்து வந்து அடிமைகள் ஆக்குவது...


இது தான் உலகம் முழுக்க நடந்தது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கிறது.

ஆனால்  தமிழ்நாட்டில் மட்டும் இது இயற்கையாகவே நடந்தது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

நாகரிகத்தை உருவாக்கியவன் வெளியில் இருந்து வந்தவன்.. நம் பழங்குடி மக்கள் அதுவரை அறிந்திராத இதுபோன்ற கொடுமைகளை  நிகழ்த்தி தினைசார் பழங்குடிகளாக இருந்த மக்களை நெல்நாகரீக அடிமைகளாக பிடித்து வந்தனர்.

நெல்நாகரீகத்திற்கு தேவையான குளங்களையும் ஏரிகளையும் வெட்ட பழங்குடிகளை பயண்படுத்தினர்.

அந்த வெட்டி என்ற குளம் வெட்டும் வேலையை  தான். இன்றுவரை மக்கள் வெட்டிவேலை என வீணான என்ற அர்த்ததில் உபயோகப்படுத்துகிறார்கள்.

அந்த நாகரிகத்தை உருவாக்கியவர்களுக்கு தேவை வயல்நிலங்கள் தான். அதனால் தான் மருதநில நெய்தல்நில முல்லைநில பழங்குடிகளை பயண்படுத்தினார்கள்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும்..  மருதநிலம்..

மருதநிலம் என்பது இப்போது தான் வயலும் வயல்சார்ந்த நிலமும்..


ஆனால்  தொல்காப்பியத்தில் ஒரு இடத்தில் மருதநிலகாடுகளை பற்றி ஒரு அருமையான வர்ணனை வருகிறது.

ஒரு குரங்கு மருதநில காட்டில் வரிசையா பல மரங்களின் மீது பயணிப்பதாக..

இதன் மூலம் மருதநிலம் என்பது நெல்நாகரீகம் சார்ந்ததாக இல்லை என்பது தெளிவாக புரியும்...

இங்கே நெல்நாகரீகத்தை  உருவாக்கிய அதே பெண்வழி அரசகுடும்பம் பல நாடுகளிலும் அதே நேரத்தில் நாகரிகத்தை உருவாக்கியது.

அடுத்து நாகரிகம் உருவாக்கப்பட்ட இடங்கள் எல்லாம் தமிழ் மொழி   சென்றிருக்கிறதே அது எப்படி ?

அந்த இலக்கணத் தமிழை உருவாக்கியது யார் ?

என அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

குலதெய்வ வழிபாட்டை புரிந்துக் கொள்ளுங்கள்...


இந்த குறிப்பிட்ட அதிர்வெண்களுடன் அதிரும் பொருளை மட்டும் தான்... மனித கண்களால் காண முடியும்...

இதைவிட அதிகமாக அதிரும் பொருளையோ குறைவாக அதிரும் பொருளையோ காண முடியாது...

எனவே  என் கண்களுக்கு தெரியாத எந்த பொருளுமே இல்லை என சொல்லுவது தான்... நவீன ஈ.வே.ரா சிந்தனை...

குலதெய்வ வழிபாட்டை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் மற்றும் தன் முன்னோர்களின்  அரச அடிமைதனத்தை மொத்த தமிழர்களின் அடையாளமாக்க துடிப்பவன் கூறுவதை எல்லாலாம் நான் காதில் வாங்கி கொள்ளுவது இல்லை...

தேவை...


காட்சிக்கும் பார்வைக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

மனித கண்களால் காண கூடியவை அனைத்துமே காட்சியாகும்.

ஆனால் எது தேவை என்பதை பொறுத்துத்தான் பார்வை முடிவாகும்.

பார்வை நம் மனதின் தேவையால் கிடைப்பது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்ந்து அறிந்தோர்க்கு, தேவையானவை தெரியும்.
தேவையானவை மட்டுமே தெரியும்...

கோன் கருங்காப்பு...


கி.மு க்கு முன்னர் கபாடபுரம் தலைநகராக இருந்த போது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான கோன் கருங்காப்பு மூலம் அரசாண்டனர் அதாவது கோன் என்றால் அரசன், கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும்...

'Superstar என்றும் பாராமல் தலித்தாக நடித்தார்' விசிக - வன்னியரசு...


தலித் என்பது அவ்வளவு இழிவானது என்றால் அதை ஏன் தமிழர்களிடம் திணிக்கிறீர்கள்...

இன்று தாழ்த்தப்படிருக்கும் சமூகங்களாக இருக்கும் பறையர்களும் பள்ளர்களும்  அயலார் ஆட்சியில் ஒடுக்கப்பட்டதே தமிழர் இனத்தின் உயர்ந்த குலத்தையும் சிறந்த தொழில்களையும் செய்து தமிழினத்திற்கு தொண்டாற்றியதால் தான்..

தலித் என்ற பெயரில் அடிமை உளவியலில் தமிழர்களை தள்ளி உயரவிடாமல் செய்வதே தலித் அரசியல் தானே..

அறிவிலும் திறனிலும் திறமையிலும் சிறந்த தமிழர்களை தன்முனைப்பால் வளர்ந்து விடாமலும். வஞ்சிக்கப்படும் தமிழர் தேசிய இனம் ஒன்று சேர்ந்து விடாமலும் தலித்தியம் பார்த்துக் கொள்ளும்..

இந்தியம் திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் இவைகள் தமிழ்தேசிய இன வடுதலைக்கு எதிரானது பிராமணீய படிநிலைகளுக்கு துனை நிற்பது...

வைகோ நாயூடுவின் சுயமரியாதையும் பகுத்தறிவும்...


தமிழகத்தில் முதன் முதலில்.. திராவிடமும் எனும் பேரில் தலைவர்களின் காலில் விழும் அடிமைத் தனத்தை அறிமுகப்படுத்தியதே வைகோ நாயூடு தான்...

திமுக பகுத்தறிவின் மலரும் நினைவுகள்...


அன்பழகன் தாலியை எடுத்து கொடுக்க,
தாத்தா கட்டுமரம் பார்க்க, பேரன் ஒஸ்கார் நடிகர் அருள்நிதி தாலியை கட்ட...


இவர்களை எல்லாம் நம்பி வீட்டில் தனது மனைவியின் தாலியை அருத்து விட்டோமே என்று கழக குஞ்சிகள் திண்டாடும் அலங்கோலம் தமிழகத்தில் மட்டுமே நிகழ்கிறது..

திராவிடம் என்று போனவர்கள் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு இழிவான வாழ்க்கை...

நமது வழிபாட்டு முறைகளின் அறிவியல்...


பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம்.

கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும் இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்?

ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார்.

அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.
                         
அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே.

TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி...

வெண்டைக்காய்...


இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்...

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.

நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்...

பாஜக வின் பசு பயங்கரவாத படை தாக்குதல்...


தந்தை படுகாயம், மகன் பலி.. பசுவை கடத்தினார்கள் அதனால் அடித்தே கொன்றோம் - பசு தீவிரவாதிகள்...

பாஜக மோடி கலாட்டா...


நம்ப முடியாத உண்மைகள்...


இலுமினாட்டி சாமியார்கள்?


உலகத்தை பலவருடங்களாக ஆண்டு வரும் 13 குடும்பங்களின் இயக்கமான இலுமினாட்டிகள். 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் லட்சியமான புதிய உலக கட்டமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள் , இதன் காரணமாக உலகில் உள்ள பல்வேறு போராட்ட இயக்கங்கள் தடை செய்யப் பட்டு, இன்று பல அழிக்கவும் பட்டுவிட்டன.. அதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்..

இவர்கள் மக்களை முன்பு போல வெளிப்படையாக அடிமைப்படுத்தாமல், அடிமையாக இருப்பதையே உணராமல் மக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள். அதற்காக அவர்கள் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர்.

அவற்றில் சில...

1) பணம் மற்றும் பொருளாதார தேடல்.
2) போதைக்கு அடிமை.
3) செய்திகளின் மூலம் மக்களின் சிந்தையை மடைமாற்றுவது.
4) பொழுதுப்போக்கு ஊடகத்திற்கு மக்களை அடிமையாக்குதல்.
5) போலி ஆன்மீகம்.

இதில் ஒன்றோடு ஒன்றிற்கு தொடர்பிருந்தாலும் , இந்தியா குறிப்பாக தமிழக மக்களை கவருவதில் ஆன்மீகம் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது.

மனிதருக்கு அப்பாற்பற்ற இயற்கை இயக்கங்களை வியந்து ஒரு தனி மனிதன் புரிந்து கொண்டு, அதை மக்களிடம் பரப்பினால் அது ஆன்மீகம், நான் தான் அந்த இயற்கையையே இயக்குபவன் என்று மக்களிடத்தில் சொன்னால் அதுதான் போலி ஆன்மீகம்.

இந்த போலி ஆன்மீகவாதிகளில் முக்கியமான ஒருவரான ஜக்கி வாசுதேவ் என்பவர், இலுமினாட்டிகளால் இயக்கப்படுபவர். கடவுளின் பெயரில் இவர்கள் மக்களை சுரண்டுவதை இந்த அரசாங்கம் அனுமதிப்பது என்பதே விந்தைதான்.

வாருங்கள் முலிகை பெட்ரோல் தருகிறேன் என்பவர்களை எல்லாம் கைது செய்யும் அரசாங்கம், வாருங்கள் கடவுளை காட்டுகிறேன் என்பவர்களை கைது செய்வதில்லை.

இந்த ஜக்கி வாசுதேவ், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வணபகுதிகளை, வளைத்து வைத்துள்ளார்.

மக்கள் கார்ப்ரேட் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே அனைத்திற்கும் ஆசைப்படு என்ற ஆன்மீக கோட்பாட்டை கொண்டுள்ளார் இவர்.

ஆசைதான் அணைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமியில், அதற்கு நேரெதிரான கோட்பாடுகளை திட்டமிட்டே இவரும் இவர்களின் சகாக்களும் பரப்புறை செய்து வருகின்றனர்.

இவர்கள் எல்லாம் யார்? இவர்களை எதற்காக நாம் நம்ப வேண்டும்? என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மையை எடுத்துறைக்கும்.

உண்மையில் இந்த ஒற்றைக் கண் ஜக்கி ஒரு இலுமினாட்டி...

தங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் வீடு தேடி சென்று இன்று ஆதரவு கேட்ட பாஜக தலைவர்கள்...


மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கைய நாயிடு ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி இல்லம் சென்று ஜனாதிபதி தேர்தலில் தங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியுள்ளனர்...

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்....

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது.

ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள்.

உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.

எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள்.

இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.

இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும்.

அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற் காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி...

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்...

நம்ப முடியாத உண்மைகள்...


விரைவில் இவர்களால் பல உண்மைகள் வெளிவரும் எனக் கருதுகிறோம்...

கான்ஸ்பைரஸியின் நம்பகத்தன்மை தெரிய வரும். மர்மம் விலகும்.

Support  Wearechange.org...

திருட்டு புகைபடத்திலேயே சாதனைகளாக காட்டி அரசியல் செய்யும் பாஜக மோடி... எழும் கடும் விமர்சனம்...


இந்த புகைப்படம் ஸ்பெயின்- மொரக்கோ நாட்டு எல்லையில் மின்னொளி செய்யப்பட்டு இருப்பதை சொல்லும் புகைப்படம்..

ஆனால் இந்திய உள்துறை அமைச்சகம் தனது ஆண்டு அறிக்கையின் 40 பக்கத்தில் வெளியீட்டு அதற்கு கிழே
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 1943. KM. க்கு மின்மயமான காட்சி என்று வெளியீட்டு உள்ளது..

உத்தகான்ட வெள்ளத்தில் 10000 குஜராத் மக்களை ஓரே மணி நேரத்தில் காப்பாற்றினார் என்று கதை விட்டிங்க..

வெளி நாட்டு பஸ் நிலைய புகைப்படம் போட்டு குஜராத் என்றும் டாமரம் அடித்திங்க..

இப்ப இன்னொரு நாட்டு எல்லை
போட்டு சாதனை என்று  ஏமாதிறிங்க
அடங்க மாட்டிங்களா டா டூபாக்கூர்களா ?

பாஜக மோடியின் வளர்ச்சி.. தமிழின வீழ்ச்சி...










பாஜக மோடியும் மானங்கெட்ட பொழப்பும்...


பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...



உலக செய்தியெல்லாம் போடாதிங்கைய்யா பக்தாள் வயித்தெரிச்சல்ல சாகுவான்...


பாஜக மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியின் சாதனை...


முருகனுக்கு காவடி எடுத்ததால் சீமானை காவி என்று சொன்ன விசிக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வன்னியரசு அவர்களே...


அப்டினா நடராஜர் கோவிலில் தரிசனம் செய்த படத்தில் உள்ள நபர் பாவியா?

விமானமும் வேக்வம் கிளீனரும்...


விமானம் ஸ்ட்ரா.. மற்றும் வெகுவம் கிளீனர் இவைகள் Bernoulli தத்துவத்தில் வேலை செய்வதாக சொன்னேன்..

அது எப்படி என்று புரியாதவர்களுக்காக சற்று விளக்கமாக சொல்கிறேன்..

விமானமும் வேக்குவம் க்ளீனரும்...

Aerodynamics  principle... அதாவது விமானம் பறக்கும் தத்துவத்தை இன்று பார்க்கலாம்.

அன்று நான் விமானத்தை பார்த்த அதே ஆச்சரியத்தோடு தான் இன்று என் மகன் மாட்டு வண்டியை பார்க்கிறான்.

என்று எங்கோ படித்த நியாபகம்.... கால மாற்றத்தால் மாறுதல் அடைந்த வாழ்க்கை முறையை விளக்குவதற்காக அதை யாரோ சொல்லி இருக்க கூடும்...

ஆனால் உண்மையிலேயே இப்போது விமானம் பறப்பதை கண்டு நீங்கள் ஆச்சார்ய படவில்லையா? அப்படி என்றால் ஒன்று உங்களுக்கு அதன் தத்துவம் தெரிந்து விட்டிருக்க வேண்டும்
அல்லது உங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் curiosity குறைந்து போயி விட்டிருக்க வேண்டும்.

விமானம் எப்படி பறக்கிறது என்பதை தான் நான் இப்போது விளக்க போகிறேன்.

அதுக்கு முன் ஒரு சின்ன காட்சியை கொஞ்சம் கவனியுங்கள்...

நீங்கள் விமானம் ஏறி ஊருக்கு போக இருக்கிறீர்கள் அதற்க்கு முன் கொஞ்சம் வளர்ந்து விட்ட தாடியை shave செய்ய விரும்புகிறீர்கள் பார்பர் ஷாப் போய்...

ஷேவ் செய்து கொள்கிறீர்கள். (விமான பணிப்பெண்ணை நினைத்து கொண்டீர்களா தெரியாது) அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வருகிறீர்கள் வழியில் கார்ப்பரேஷன் காரர் கையில் மருந்தடிக்கும் கருவி கொண்டு மருந்து அடித்து கொண்டிருக்கிறான்...

வரும் வழியில் குழந்தைகள் சோப்பு தண்ணீரை பைப்பை வைத்து உறிஞ்சி எடுத்து முட்டை விட்டு கொண்டு விளையாடுகிறார்கள்.....

அப்புறம் நீங்களும் உங்கள் காதலியும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து ஒரு கூல்ட்ரிங்ஸ் இல் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கிறீர்கள்...

அப்புறம் வீட்டிற்கு அம்மாவிடம் விடை பெறுகிறீர்கள் அப்போது அம்மா வேக்குவம் கிளீனரை வைத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்...

அவரிடம் விடை பெற்று கொண்டு வந்து உங்கள் flight ஐ பிடிக்கிறீர்கள்....

இதென்ன... flight எப்படி பறக்கிறதுனு விளக்குகிறேன்னு என்னென்னமோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல்  பேசரேன்னு நினைக்காதீங்க. மேல நான் சொன்ன காட்சிக்கும் விமானம் வானில் பறப்பதில் உள்ள அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு... தொடர்ந்து படியுங்கள்.

விமானம் போவதை யாரவது அண்ணாந்து ஆச்சர்யமாய் பார்த்தால் நாம் அவனை பட்டிக்காட்டான் என்போம்....

ஆனால் அவ்ளோ எடை உள்ள ஒரு பொருள் வானில் அவ்வளவு உயரம் பறப்பது எப்படி என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஆச்சர்யம் தான்...

வில்பர்.. ஆர்வில்... இவர்களை உங்களுக்கு தெரியுமா என கேட்டால் தெரியாது என்பீர்கள் ஆனால் ரைட் சகோதரரகள்  என்றால் ரைட்டாக கண்டு பிடித்து விடுவீர்கள்.....

என்னடா தம்பி எப்ப பாத்தாலும் மர பலகையை போட்டு அப்படி என்னதான் பண்றீங்க..

என கேட்டவர்களிடம் நாங்கள் பறவை போல வானத்தில் பறக்கும் வண்டியை செய்கிறோம் என்றார்கள்...

ஓ அப்படியா பா நல்லது நல்லா பண்ணுங்க பா என சொன்னவர்கள் கொஞ்சம் தள்ளி போய்..

பாத்தியா டா காமடிய..... வானதுல பறக்க போறாங்களாம்.. என சிரித்து விட்டு நகர்ந்தார்கள்.

அந்த ரைட் சகோதரர்கள்.. தனது லட்சிய கண்டு பிடிப்பில் கண்டிப்பாக வெற்றியை அடைந்தே தீருவோம் என மஹா உறுதியாகவும் வெறியாகவும் இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால் விமானத்தை கண்டு பிடிப்பதற்காக  இருவரும் திருமணமே செய்து கொள்ள வில்லை...

இதில் ஆர்வில் அருவா மீசை கொடுவா
பார்வை. வில்பர் வழுக்கை தலை மென்மை பார்வை அகன்ற காதுகள்.
விமானம் கண்டு பிடிக்கும் முன் இருவருமே அச்சக வேலையும் அதை தொடர்ந்து மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை... (அது ஆள் இன் ஆள் அழகுராஜா கடை என்பது அப்போது உலகத்துக்கு தெரியாது)..

ஆனால் வானில் முதலில் பறந்த மனிதர்கள் என்ற பெருமை அவர்களுக்கு தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...

அவர்களுக்கு விமானம் கண்டு பிடிக்க இன்ஸ்பரஷனே... ஒருவர் க்ளைடர் என்ற இயந்திரம் இல்லாத கருவியில் பறந்து காட்டிதை பத்திரிக்கைகளில் படித்தது தான்.

1903 இல் தனது மகத்தான சாதனை யை செய்தபோது அவர் வானில்பறந்த மொத்த நேரம் வெறும் 12 வினாடிகள்...
தூரம் 120 அடி... வேகம் கிட்டத்தட்ட ஒரு சைக்கிள் அளவு.. 30 கி.மி வேகம்...

ஒரு விஷயம் சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள்...

விமானம் பறக்கும் தத்துவம் நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் தெரிந்து வைத்து கொண்டு தான் இருக்கிறோம்....

அதாவது அழுத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில இருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி தான் எது ஒன்றும் நகரும்.. ஆனால் இந்த தத்துவத்தை  பயன்படுத்தி விமானத்தையே பறக்க வைக்கலாம் என்பது தான் அந்த இரண்டு ரைட்களும் கண்டு கொண்ட டபுள் ரைட் சங்கதி..

பார்பர் கடையில் பார்பர் நம் முகத்தில் தண்னீர் அடிக்கிறாரே அந்த தண்ணீர் எப்படி வெளியே வருகிறது என்றால் இந்த அழுத்த மாறுபாடுத் தான்.. கார்ப்பரேஷன் மருந்து அடிக்கும் கருவி... அல்லது நாம் கூல் ட்ரிங்க்ஸ் பயன்படுத்தும் போது.... இப்படி பல இடங்களைக் இந்த தத்துவத்தை பயன் படுத்துகிறோம்.

அந்த தத்துவத்தின் பெயர்.. bernouli's princepell.. (நான் சொன்ன காட்சிகளின் தொடர்பு புரிந்ததா...).

ஸ்ட்ரா போட்டு உரிஞ்சிறது ஓகே
அது எப்படி விமானத்தில் வேலை செய்கிறது?

அதற்கு நீங்கள் உற்று பார்க்க வேண்டியது விமானத்தின் இறக்கைகளை தான் அப்படி பார்த்தால்.. அதன் கீழ் பகுதி தட்டையாகவும் (கண்ணாடி ஸ்கேல் இன் அடிப்பகுதியை போல...) அதன் மேல் பகுதி சற்று குவிந்து கூம்பு போலவும் .. (அதே கண்ணாடி ஸ்கேல் இன் மேல் பகுதி போல..) இருக்கும் இப்படி பட்ட ஒரு அமைப்பில் காற்று வேகமாக கடந்து சென்றால் அதன் ரெக்கை யின் அடி பாகத்தில் அதிக காற்று அழுத்தமும் மேல் பாகத்தில் குறைந்த காற்று அழுத்தமும் உண்டாகும் அதன் விளைவாக விமானம் மேல் நோக்கி தூக்க படும்....

தலைமை காரணம் இது தான் என்றாலும் விமானம் பறக்க 4 வகை விசைகள் தேவை அது...

மேல் நோக்கிய உந்து விசை (மேலே சொன்னது).

கீழ் நோக்கிய இழுவிசை (இதை க்ராவிட்டி பார்த்து கொள்கிறது.

முன் நோக்கிய தள்ளு விசை (இதை உண்டாக்க தான் இன்ஜின்.).

மற்றும் பின் நோக்கிய இழுவிசை (அதற்கு தான் பின்னால் குட்டி வால்..).

தரையில் இருக்கும் போது மேல் நோக்கிய உந்து விசையை ஏற்படுத்த இருக்கைகளில் காற்று பலமாக மோதுவது அவசியம்... இதற்காக தான் விமானம் ஓடு பாதையில்.. அவ்வளவு வேகமாக ஓடுகிறது.... சரி விமானத்தை நிறுத்தி வைத்து செயற்கையாக அதன் ரக்கைகளில் காற்றை பலமாக பீய்ச்சினால் என்னாகும்...?

சந்தேகம் இல்லாமல் விமானம் ஜிவ்வென மேலே எழும்பும்...

ஆனால் அவ்வளவு பலமாக காற்று புயலில் வீசுவது இல்லை மேலும் இறக்கைகள் அப்படி இப்படி சற்று சுழற்றி கொள்ளும் வசதி கூடியவை என்பதால் அப்படி நடப்பது இல்லை.

ஒரு கொசுறு செய்தி
விமானம் பறக்கும் போது ஏன் சக்கரத்தை இழுத்து கொள்ள வேண்டும் அப்படியே இருக்கலாம் தானே....?

காற்றில் பறக்கும் போது உராய்வினால் வேகம் குறையாமல் இருக்க தான் (பறவைகளை கவனியுங்கள் பறக்கும் போது கால்களை பின் நோக்கி வளைத்து கொள்ளும் காரணமும் இது தான்)...

நம்ம வீட்டில் உள்ள வேக்குவம் கிளீனரும் வானில் பறக்கும் விமானமும் ஒரே தத்துவத்தில் தான் வேலை செய்கிறது என்பது  ஆச்சர்யம் தானே?

வேற்று உலக வாசிகளும் இனச் சேர்க்கையும்-2...



நம்ப முடியாத உண்மைகள்...