விமானம் ஸ்ட்ரா.. மற்றும் வெகுவம் கிளீனர் இவைகள் Bernoulli தத்துவத்தில் வேலை செய்வதாக சொன்னேன்..
அது எப்படி என்று புரியாதவர்களுக்காக சற்று விளக்கமாக சொல்கிறேன்..
விமானமும் வேக்குவம் க்ளீனரும்...
Aerodynamics principle... அதாவது விமானம் பறக்கும் தத்துவத்தை இன்று பார்க்கலாம்.
அன்று நான் விமானத்தை பார்த்த அதே ஆச்சரியத்தோடு தான் இன்று என் மகன் மாட்டு வண்டியை பார்க்கிறான்.
என்று எங்கோ படித்த நியாபகம்.... கால மாற்றத்தால் மாறுதல் அடைந்த வாழ்க்கை முறையை விளக்குவதற்காக அதை யாரோ சொல்லி இருக்க கூடும்...
ஆனால் உண்மையிலேயே இப்போது விமானம் பறப்பதை கண்டு நீங்கள் ஆச்சார்ய படவில்லையா? அப்படி என்றால் ஒன்று உங்களுக்கு அதன் தத்துவம் தெரிந்து விட்டிருக்க வேண்டும்
அல்லது உங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் curiosity குறைந்து போயி விட்டிருக்க வேண்டும்.
விமானம் எப்படி பறக்கிறது என்பதை தான் நான் இப்போது விளக்க போகிறேன்.
அதுக்கு முன் ஒரு சின்ன காட்சியை கொஞ்சம் கவனியுங்கள்...
நீங்கள் விமானம் ஏறி ஊருக்கு போக இருக்கிறீர்கள் அதற்க்கு முன் கொஞ்சம் வளர்ந்து விட்ட தாடியை shave செய்ய விரும்புகிறீர்கள் பார்பர் ஷாப் போய்...
ஷேவ் செய்து கொள்கிறீர்கள். (விமான பணிப்பெண்ணை நினைத்து கொண்டீர்களா தெரியாது) அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வருகிறீர்கள் வழியில் கார்ப்பரேஷன் காரர் கையில் மருந்தடிக்கும் கருவி கொண்டு மருந்து அடித்து கொண்டிருக்கிறான்...
வரும் வழியில் குழந்தைகள் சோப்பு தண்ணீரை பைப்பை வைத்து உறிஞ்சி எடுத்து முட்டை விட்டு கொண்டு விளையாடுகிறார்கள்.....
அப்புறம் நீங்களும் உங்கள் காதலியும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து ஒரு கூல்ட்ரிங்ஸ் இல் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கிறீர்கள்...
அப்புறம் வீட்டிற்கு அம்மாவிடம் விடை பெறுகிறீர்கள் அப்போது அம்மா வேக்குவம் கிளீனரை வைத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்...
அவரிடம் விடை பெற்று கொண்டு வந்து உங்கள் flight ஐ பிடிக்கிறீர்கள்....
இதென்ன... flight எப்படி பறக்கிறதுனு விளக்குகிறேன்னு என்னென்னமோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசரேன்னு நினைக்காதீங்க. மேல நான் சொன்ன காட்சிக்கும் விமானம் வானில் பறப்பதில் உள்ள அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு... தொடர்ந்து படியுங்கள்.
விமானம் போவதை யாரவது அண்ணாந்து ஆச்சர்யமாய் பார்த்தால் நாம் அவனை பட்டிக்காட்டான் என்போம்....
ஆனால் அவ்ளோ எடை உள்ள ஒரு பொருள் வானில் அவ்வளவு உயரம் பறப்பது எப்படி என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஆச்சர்யம் தான்...
வில்பர்.. ஆர்வில்... இவர்களை உங்களுக்கு தெரியுமா என கேட்டால் தெரியாது என்பீர்கள் ஆனால் ரைட் சகோதரரகள் என்றால் ரைட்டாக கண்டு பிடித்து விடுவீர்கள்.....
என்னடா தம்பி எப்ப பாத்தாலும் மர பலகையை போட்டு அப்படி என்னதான் பண்றீங்க..
என கேட்டவர்களிடம் நாங்கள் பறவை போல வானத்தில் பறக்கும் வண்டியை செய்கிறோம் என்றார்கள்...
ஓ அப்படியா பா நல்லது நல்லா பண்ணுங்க பா என சொன்னவர்கள் கொஞ்சம் தள்ளி போய்..
பாத்தியா டா காமடிய..... வானதுல பறக்க போறாங்களாம்.. என சிரித்து விட்டு நகர்ந்தார்கள்.
அந்த ரைட் சகோதரர்கள்.. தனது லட்சிய கண்டு பிடிப்பில் கண்டிப்பாக வெற்றியை அடைந்தே தீருவோம் என மஹா உறுதியாகவும் வெறியாகவும் இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால் விமானத்தை கண்டு பிடிப்பதற்காக இருவரும் திருமணமே செய்து கொள்ள வில்லை...
இதில் ஆர்வில் அருவா மீசை கொடுவா
பார்வை. வில்பர் வழுக்கை தலை மென்மை பார்வை அகன்ற காதுகள்.
விமானம் கண்டு பிடிக்கும் முன் இருவருமே அச்சக வேலையும் அதை தொடர்ந்து மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை... (அது ஆள் இன் ஆள் அழகுராஜா கடை என்பது அப்போது உலகத்துக்கு தெரியாது)..
ஆனால் வானில் முதலில் பறந்த மனிதர்கள் என்ற பெருமை அவர்களுக்கு தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...
அவர்களுக்கு விமானம் கண்டு பிடிக்க இன்ஸ்பரஷனே... ஒருவர் க்ளைடர் என்ற இயந்திரம் இல்லாத கருவியில் பறந்து காட்டிதை பத்திரிக்கைகளில் படித்தது தான்.
1903 இல் தனது மகத்தான சாதனை யை செய்தபோது அவர் வானில்பறந்த மொத்த நேரம் வெறும் 12 வினாடிகள்...
தூரம் 120 அடி... வேகம் கிட்டத்தட்ட ஒரு சைக்கிள் அளவு.. 30 கி.மி வேகம்...
ஒரு விஷயம் சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள்...
விமானம் பறக்கும் தத்துவம் நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் தெரிந்து வைத்து கொண்டு தான் இருக்கிறோம்....
அதாவது அழுத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில இருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி தான் எது ஒன்றும் நகரும்.. ஆனால் இந்த தத்துவத்தை பயன்படுத்தி விமானத்தையே பறக்க வைக்கலாம் என்பது தான் அந்த இரண்டு ரைட்களும் கண்டு கொண்ட டபுள் ரைட் சங்கதி..
பார்பர் கடையில் பார்பர் நம் முகத்தில் தண்னீர் அடிக்கிறாரே அந்த தண்ணீர் எப்படி வெளியே வருகிறது என்றால் இந்த அழுத்த மாறுபாடுத் தான்.. கார்ப்பரேஷன் மருந்து அடிக்கும் கருவி... அல்லது நாம் கூல் ட்ரிங்க்ஸ் பயன்படுத்தும் போது.... இப்படி பல இடங்களைக் இந்த தத்துவத்தை பயன் படுத்துகிறோம்.
அந்த தத்துவத்தின் பெயர்.. bernouli's princepell.. (நான் சொன்ன காட்சிகளின் தொடர்பு புரிந்ததா...).
ஸ்ட்ரா போட்டு உரிஞ்சிறது ஓகே
அது எப்படி விமானத்தில் வேலை செய்கிறது?
அதற்கு நீங்கள் உற்று பார்க்க வேண்டியது விமானத்தின் இறக்கைகளை தான் அப்படி பார்த்தால்.. அதன் கீழ் பகுதி தட்டையாகவும் (கண்ணாடி ஸ்கேல் இன் அடிப்பகுதியை போல...) அதன் மேல் பகுதி சற்று குவிந்து கூம்பு போலவும் .. (அதே கண்ணாடி ஸ்கேல் இன் மேல் பகுதி போல..) இருக்கும் இப்படி பட்ட ஒரு அமைப்பில் காற்று வேகமாக கடந்து சென்றால் அதன் ரெக்கை யின் அடி பாகத்தில் அதிக காற்று அழுத்தமும் மேல் பாகத்தில் குறைந்த காற்று அழுத்தமும் உண்டாகும் அதன் விளைவாக விமானம் மேல் நோக்கி தூக்க படும்....
தலைமை காரணம் இது தான் என்றாலும் விமானம் பறக்க 4 வகை விசைகள் தேவை அது...
மேல் நோக்கிய உந்து விசை (மேலே சொன்னது).
கீழ் நோக்கிய இழுவிசை (இதை க்ராவிட்டி பார்த்து கொள்கிறது.
முன் நோக்கிய தள்ளு விசை (இதை உண்டாக்க தான் இன்ஜின்.).
மற்றும் பின் நோக்கிய இழுவிசை (அதற்கு தான் பின்னால் குட்டி வால்..).
தரையில் இருக்கும் போது மேல் நோக்கிய உந்து விசையை ஏற்படுத்த இருக்கைகளில் காற்று பலமாக மோதுவது அவசியம்... இதற்காக தான் விமானம் ஓடு பாதையில்.. அவ்வளவு வேகமாக ஓடுகிறது.... சரி விமானத்தை நிறுத்தி வைத்து செயற்கையாக அதன் ரக்கைகளில் காற்றை பலமாக பீய்ச்சினால் என்னாகும்...?
சந்தேகம் இல்லாமல் விமானம் ஜிவ்வென மேலே எழும்பும்...
ஆனால் அவ்வளவு பலமாக காற்று புயலில் வீசுவது இல்லை மேலும் இறக்கைகள் அப்படி இப்படி சற்று சுழற்றி கொள்ளும் வசதி கூடியவை என்பதால் அப்படி நடப்பது இல்லை.
ஒரு கொசுறு செய்தி
விமானம் பறக்கும் போது ஏன் சக்கரத்தை இழுத்து கொள்ள வேண்டும் அப்படியே இருக்கலாம் தானே....?
காற்றில் பறக்கும் போது உராய்வினால் வேகம் குறையாமல் இருக்க தான் (பறவைகளை கவனியுங்கள் பறக்கும் போது கால்களை பின் நோக்கி வளைத்து கொள்ளும் காரணமும் இது தான்)...
நம்ம வீட்டில் உள்ள வேக்குவம் கிளீனரும் வானில் பறக்கும் விமானமும் ஒரே தத்துவத்தில் தான் வேலை செய்கிறது என்பது ஆச்சர்யம் தானே?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.