13/12/2018

எனக்கு பிடித்த பாடல்...


குடிக்காரன் பெத்த மவளே என்பதை தூக்கி விட்டு...

சூனியக்காரி பெத்த மவளே என்ற வரி போட்டாலும் நன்றாக தான் உள்ளது...

மாவீரன் பங்க் குமார் நினைவு தினம் ( டிசம்பர் 12)...


சைதாப்பேட்டை கொத்தால்சாவடி மார்கெட்டில் சாதாரண அசோக் குமாராக வாழ்கையை ஆரம்பித்தார் பங்க் குமார்- சில வருடங்களில் அந்த மார்கெட் முழுவதும் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது... அதன் பிறகு சைதாபேட்டை, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, புறநகர், என்று படிப்படியாக இவரது கைக்குள் அடங்கியது..

சென்னை மாநகரம் முழுவதும் பங்க் குமாரின் கொடி மட்டுமே உயர்வாக பறந்தது, எந்த கட்சி தேர்தலில் நின்றாலும் பங்க் குமாரின் சப்போர்ட் முக்கியம் என்பது எழுதப்படாத விதியானது! 2006 உள்ளாட்சி (மேயர்) தேர்தலில் திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டனி அமோகமாக ஜெயிப்பதற்காக இவர் செய்த சித்து விளையாட்டுக்கள் மிக பிரசித்தம்..

சிட்டிக்குள் ஆங்காங்கே குறுநில மன்னர்களை போல செயல்பட்டுக் கொண்டிருந்த சின்ன சின்ன ரவுடிகளை எல்லாம் ஒடுக்கி, தனக்கு கீழே கொண்டு வந்து "சென்னையின் பாட்ஷா" போல கோலோச்சினார். இவரது கருப்பு நிற Scorpio கார் சாலையில் வருவதைக் கண்டாலே பெரிய பெரிய VIP-களாக உள்ளவர்களே ஒதுங்கி வழிவிடுவார்கள்..

தனது சாதியின் மீது கொண்ட பற்றால் பிரபலமான வன்னியர் அமைப்பில் இனைந்து சென்னை மாவட்ட தலைவரானார்... பிறகு சில காரணங்களுக்காக அதிலிருந்து விலகினார்.. மேயர் முதல் மந்திரி வரை அனைவரும் பங்க் குமாரை பகைக்க பயந்தனர்.

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் இவரைத் தழுவியே, சில பல மாறுதலான கற்பனை கதையில் படமாக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது..

அவரது அபார வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய சில கயவர்களின் தூண்டுதலால், சொந்த சாதியில் குழிபறிக்கும் சில புல்லுருவிகளின் வழிகாட்டுதலின்படி 2006ம் ஆண்டு இதே நாளில் காவல்துறையால் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார்...

இன்றளவும் சிட்டிக்குள் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம், வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்துகொண்டு இவரைப் போலவே "பங்க்" வைச்சிட்டு, வெள்ளை நிற கைக்குட்டைக்கு நடுவில் மொபைல் போனை கையில் எடுத்துட்டு, நடந்து வந்தா 15 வயசு பையன் கூட தவுலத்தா இருப்பான்!! அது ஒரு தனி போதை...

தலைநகரின் தலைமகன், எங்கள் மண்ணின் மைந்தனுக்கு 12ம் ஆண்டு வீரவணக்கம்...

மாரடைப்பை தவிர்க்க...


தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது ?

மாலை மணி 6:30, வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .

அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?

எதிர்பாராதவிதமாக வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக வலிமையாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு பிராணவாயு சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்...

தமிழகத்தை மறைமுக அழிப்பே இந்த வளர்ச்சி என்னும் கொடிய திட்டங்கள்...


பலிபீடம்...


எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால் தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில் தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால் தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன...

நாட்டின் முதுகெழும்பு விவாசாயின் இன்றைய நிலைமை - பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இசை IQ...


இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.

அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம்.

நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன.

உண்மை சொல்லப் போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…?

நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக் கொண்டு இருந்தோம்.

அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது..

சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள்.

அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்.. அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன...

அஜினோமோட்டோவின் தீமைகளை பதிவிட்டுள்ளோம்... மீண்டும் ஒருமுறை விழிப்புணர்வுக்காக புகைப்படம் இரண்டில்...



மலக்குடல் புற்றுநோயும் அதற்கான சிகிச்சை முறையும்...


மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?

நம் ஆசன வாயிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி தான் மலக்குடல் (Rectum) இது பெருங்குடலின் கடைசிப் பகுதி என்றாலும் குடல் புற்றுநோய் பெரும்பாலும் தாக்குவது மலக்குடலைத்தான். காரணங்கள் பல இருந்தாலும் நாம் முதலில் பார்க்க வேண்டியது உணவு முறைகளைத்தான்.

அதிக காரம் மற்றும் கொழுப்பு சத்து மிகுந்த உணவு, நாற்சத்து இல்லாத உணவு, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் இல்லாத உணவு வகைகள் இப்படி பல உணவுப் பழக்க முறைகளால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 15 சதவிகிதம் சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்று குடும்பத்தில் வம்சாவழியாக வருவதற்கும் வாய்ப்புண்டு.

இதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு சிறு அரும்பு எப்படி பூவாகி, காயாகி, கனியாகிறதோ அதே போன்று புற்றுநோய் கட்டியும் ஒரு கலத்தில் உருவாகி வளர்ந்து கட்டியாகி, புண்ணாகி மற்ற இடங்களுக்கு பரவும். ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் என்றாலும் சிறு சிறு தொந்தரவுகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது இரத்தம் போகுதல், அடிவயிறு வலித்தல், மலம் கழித்தபின் ஒருவித வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மலத்தில் இரத்தம் போவதற்கு மூலம்தான் காரணம் என நினைத்து நிறையபேர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்து மலக்குடலை அடைத்து மற்ற இடங்களுக்கு பரவ நாமே இடம் கொடுத்து விடுகிறோம்.

இதை கண்டுபிடித்து எவ்வாறு குணப்படுத்துவது?

மேலே கூறிய தொந்தரவுகள் இருந்தால் குடல் உள்நோக்கி (Endoscopy) மூலம் கட்டியை கண்டுபிடித்து சதை சோதனையயும் எடுக்கலாம். அவ்வாறு கண்டறியப்பட்ட மலக்குடல் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என நுட்பமாய்ச் சோதி (Ciji scan) மூலம் தெரிந்து அதற்குத்தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கட்டியை முழுவதும் அகற்றிவிடலாம்.

மலக்குடலில் அறுவை சிகிச்சை என்றால் குடலை வெளியே வைப்பார்களா?

எல்லா மலக்குடல் புற்று நோய்க்கும் குடலை வெளியே வைக்க வேண்டியிருக்காது. அதுவும் லேப்ராசு(ஸ்)கோபி சிகிச்சை முறையில் கட்டி இடுப்பு எலும்புக்குள் இருந்தாலும் எளிதாகச் சென்று முழுவதுமாக எடுத்து விடலாம்.

குடலை வெளியே கொண்டு வந்து வைப்பதற்கான வாய்ப்பும் லேப்ராசு(ஸ்)கோபி சிகிச்சை முறையில் மிகவும் குறைவு. கட்டி மற்ற இடங்களுக்கு பரவியிருந்தால் கதிரியக்கம் மற்றும் மருந்து கொண்டு நோய் நீக்கும் முறை (Chemotherapy) எனப்படும் ஊசி மருந்துகள் மூலம் கட்டியின் அளவை குறையச் செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அதற்குத்தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சில அறிவுரைகள்...

நாம் சாப்பிடும் உணவில் நாற்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள், கீரைவகைகள், காய்கறிகள் இவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதோடு உயிர்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்களும் நிறைத்திருக்கின்றன. இவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்புச்சத்து காரம் குறைவான உணவுகளையே எடுத்துக் கொள்வது நல்லது. நாற்பது வயதிற்கு மேல் அனைவரும் குடல் நோய் பரிசோதனை செய்தால் புற்றுநோய் பூரண குணப்படுத்தும் நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். எல்லாம் நம் கையில்தான் உள்ளது...

சருமத்திற்கு வெண்ணெய் பழம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?


அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த பழத்தில் சு(ஸ்)டெரோலின் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. இந்த சு(ஸ்)டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு வெண்ணெய் பழத்தில் அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்...

உடல் எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? கவலையை விடுங்க...


இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது மென்பொருளில் (In software) வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.

பச்சை மிளகாய் சாப்பிடுங்க... உடல் எடை குறையும்...

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

எனவே உடலை குறைக்க இனிமேல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (gym) சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்...

எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது...


தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்.. நடக்கும் அதிசயம் இதோ...

எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அல்லவா?

அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ...

எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.

எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.

இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.

எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.

எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.

இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.

எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது...

அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்...


எப்படி செய்வார்கள் அவர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது. அடித்த வரை கொள்ளை தானே...

சித்தர்கள் என்பவர்கள் யார்?


கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்கிறது தேவார பதிகம்.

மனிதன் யார் ? அவன் எப்படி பட்டவன்?உலகில் அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னவர்கள் இந்த சித்தர்கள்.

சித்தர் என்ற சொல் 'சித்' என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்ததாகும். இவர்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். பழங்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் "நிறைமொழி மாந்தர்கள்", "அறிவர்" போன்றவைகளாகும். சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இவர்களை "சாரணர்" என்று அழைத்ததாக  தஞ்சை தமிழ் பல்கலை கழக வாழ்வியற் களஞ்சியம் என்கிற நூல் கூறுகிறது.

இவர்கள் எல்லா சமயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் பார்க்க முடியாததை பார்க்கின்ற, செய்ய முடியாததை செய்கின்ற, தெரியாததை உணர்த்துகின்ற அதீத சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அண்ட வெளிகளில் ஏற்படும் சலனங்கள், சப்தங்கள் ஆகியவற்றை மந்திரங்களாக பிடித்து தரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

இறைவனை இடைவிடாது தியானித்து தம் சித்தத்தை அடக்கி அக கண்ணால் இறைவனை கண்டு உணர்ந்து, தம் ஆத்ம சக்திகளால் செயற்கரிய செயல்களை செய்பவர்கள்.

உயிரும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் யோக சமாதியை விரும்பி உணர்ந்தவர்கள். மௌனத்தை பிரதானமாக கொண்டு சித்தி அடைந்தவர்கள்.

இவர்கள் ரசவாத கலையை அறிந்தவர்கள். மண்ணை பொன்னாக்குவார்கள். கல்லை கற்கண்டாக மாற்றுவார்கள். தகரத்தை தங்கமாக்குவார்கள்.இவர்கள் எட்டு வகை பேராற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

எட்டுவகை ஆற்றல் (அஷ்டமா ஷித்தி)...

1.அணிமா : யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஓர் அணுவாக சஞ்சரிப்பது.

2.மகிமா : ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது.

3.லகிமா : காற்றை விட உடல் எடையை குறைத்து மிதப்பது.

4.கரிமா : உடல் எடையையும்,வலிமையையும் மலைக்கு சமமாக உயர்த்துக் கொள்வது.

5.பிராப்தி : நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்றுவது.

6.ப்ரகாம்யம் : விரும்பிய அணைத்தையும் எளிதாக பெறுவது.

7.ஈசித்துவம் : எந்த வித சக்தி படைத்தவரையும் அடக்கி ஆழ்வது.

8.வசித்தும் : உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.

இவைகள் அஷ்டமா சித்தியாகும்.
இவைகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் என்றும் அழியாத (காயகல்ப முறை) உடலை பெற்றவர்கள்.

கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றவர்கள். மூச்சடக்கி உடலை இலகுவாக்கி பல நாடுகளையும் கண்டு மீண்டும் தன் பழைய உடலை அடைந்த அதிசய மகான்கள். முக்கால நிகழ்வுகளை அறியும் தன்மை பெற்றவர்கள். நினைத்த வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

நீரிலும், நெருப்பிலும், வானிலும் நடக்கும் ஆற்றலை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசியத்துவம் பெற்றவர்கள். இயற்கைக்கு மாறாக அற்புதங்களை செய்ய கூடியவர்கள். என்பவைகள் அணைத்தும் சித்தர்கள் பற்றிய செய்திகள்.

சித்தர்கள் என்றால் சித்துக்கள் செய்பவர்கள் என்று அர்த்தம். சித்து என்பதன் பொருள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும். இவர்கள் சிவானுபூதி பெற்றவர்கள்.

சிவத்துடன் கலந்ததால் பிறப்பு, இறப்பு அற்று என்றும் எப்போதும் ஒன்று போல் இருப்பவர்கள். கடவுளை காண முடியும் என்று கருதி கண்டு, அவரை அறிந்து, தெளிந்து சித்தி அடைந்தவர்கள். இறைவனே சித்தராக வந்து சித்துக்கள் நடத்தியதை கலம்பக இலக்கியங்கள் கூறுகின்றன.

மண்ணில் அடங்கியும், இறைவனுடன். இரண்டர கலந்தும் அழியாத வரம் பெற்ற இந்த சித்தர்கள் ஞானிகளால் கால ஓட்டத்தில் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுகங்களை தாண்டி வாழும் இவர்களின் உடல் பாதுகாப்பு இரகசியங்கள் ஏராளம்.. ஏராளம்.. பல கற்பகாலம் இவர்கள் வாழ்ந்ததர்க்கு ஆதாரங்கள்.. அதுவும் ஏராளம்....

ஒரு சித்தர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொன்னால் நம்ப முடியுமா நம்மால்?

ஆம் அதுதான் உண்மை.. உடலை விட்டு உயிர் பிரிந்து கூடுவிட்டு கூடு பாய்ந்த மகா யோகிகள் இவர்களில் பலர்.

இப்படி உருவமாக அருவமாக திரிபவர்கள் சித்தர்கள். இவர்களில் பெயர் தெரிந்தவர்கள் சிலர். பெயர் தெரியாதவர்கள் பலர்.

துறவு பூண்டு, காடு மேடுகளையெல்லாம் சுற்றி திரிந்து. உலகியல் விதிகளை புறந்தள்ளி நிற்பவர்கள் சிலர்.

பித்தராகவும், சித்தராகவும் மற்றவர்கள் தன்னை இழிவு படுத்தி பேசவும் ஏசவும் மறைந்தும் தோன்றியும் வாழ்பவர்கள் சிலர். தாம் கண்ட அனுபவங்களை விளக்க நூல்கள் எழுதி மனிதர்கள் அறியும் படி செய்தவர்கள் சிலர். வாய் மூடி மௌனமாக காணப்படுபவர்கள் சிலர். பிறர் தம்மை இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் நாம் நிறைவுடனும், அமைதியுடனும், ஆத்ம திருப்தியுடனும், வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்த சித்தர்கள்...

பாஜக மோடி ஆதரவாளர்கள் தொடர்ந்து ராஜினாமா..?


காதலன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த காதலி.. ஊரை விட்டு ஓடி வந்து விபரீதம்...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார், பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மஞ்சுளா (வயது 20) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பணியாற்றி வந்தார்.

அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன் (21) என்பவரை மஞ்சுளா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலை அறிந்த அஞ்சுளாவின் தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து தனது மனைவி வசந்தா, மகள் மஞ்சுளா ஆகிய இருவரையும் சொந்த ஊரான வால்பாறைக்கு அனுப்பி வைத்தார்.

சொந்த ஊருக்கே போனாலும் காதலுடன் மஞ்சுளா செல்போனில் பேசிவந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மஞ்சுளா பல்லடம் உப்பிலிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.

மறுநாள் காதலனை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களது காதலுக்கு கார்த்திகேயன் வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டதால் அவரை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

தெலுங்கர் வைகோ நாயூடு கலாட்டா...


பிரான்சில் ஏன்..? இவ்ளோ பிரச்சனை...


ஒருவேளை சவூதி-துருக்கி இடையே நடந்த பிரச்சனையில், நாங்கள் சவூதியுடன் ஒப்பந்தம் போட்டுள்ள சிலவற்றை நிறுத்துகிறோம் என கூறியதாலா..?

உலகின் தலைசிறந்த பத்திரிக்கையாளர், அதுவும் அமெரிக்கா குடியுரிமை வாங்கிய சவூதி குடிமகன்..

துருக்கியில் இருக்கிற சவூதி தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்ட நிகழ்வை,

அமெரிக்கா பெரிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை..

ஆனால் பிரான்சு நாங்கள் சில ஒப்பந்தங்களில் விலகி கொள்கிறோம் என கூறியது..

இதுதான் அடித்தளமா..? தற்போதைய பிரான்சுக்கு..?

யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்..

ஏனெனில் சவூதி-துருக்கி பிரச்சனையில் ரஷ்யா முடிவெடுக்கும் முன்பே, பிரான்சு முடிவெடுத்தது..

இன்னும் ரஷ்யா எந்த முடிவும் எடுக்கவில்லை..

பல கேள்விகள்..?

தவறு செய்வது அரசாங்கமாக தான் எப்போதும் இருக்கிறது.

ஆனால் அதற்கான தண்டனை எப்போதும் மக்கள் தான் அனுபவிக்கின்றனர்...

அரசு பேருந்து ஓட்டுனர் போக்குவரத்து விதிமுறைகள் மீறியதால் துணிச்சலுடன் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு...


வடலூரில் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்ததில் இருந்து போக்குவரத்து விதிமுறைகள் மீறாமல் இருக்க பல் வேறு கட்ட நடவடிக்கைகள் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அவர்கள் வெகு சிறப்பாக பணியாற்றி வருவது அப்பகுதி மக்களிடையேயும் உயர் அதிகாரிகளின் மத்தியிலும் நற்பெயர் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வடலூரில் குறிப்பாக சில அரசு பேருந்து ஓட்டுனர்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்தும் கேட்காமல் விதிமுறைகள் மீறி நடந்து வருகின்றனர். ஆகையால்
09-12-2018 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்களின் உத்தரவின் படி அனைத்து பேருந்துகளும் வடலூர் பேருந்து நிலையம் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி வரவேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து அரசு போக்குவரத்து பணிமனை மேளாலர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இன்று வடலூர் நான்குமுனை சாலையில் கடலூர் to சேலம்  செல்லும் பேருந்தினை பார்த்து  இது பேருந்து நிறுத்த தடைசெய்யப்பட்ட பகுதி எனவே பேருந்தினை நிறுத்தாதீர் என்று ஒலிபெருக்கியின்(Mega Phone) மூலம் போக்குவரத்து காவலர் எச்சரித்தும் விதியை மீறி  நிறுத்திய சேலம் அரசு பேருந்து மீது துணிச்சலாக  வழக்கு பதிவு செய்தார்.பாரபட்சம் பார்க்காமல் அரசு பேருந்தாக இருந்தாலும் சரி என்று பாராமல் வழக்குபதிவு செய்தது வரவேற்கத்தக்கது. என்று சமூக ஆர்வாலர்கள் மற்றும் மனிதநேய மிக்க மக்களும் பாராட்டிவருகின்றனர்...

மனிதர்களுக்கு கிடைத்த வரம்...


இந்த பூமியில் தன்னை மெய் மறந்து நடப்பது.. ஆனால் நடப்பது இல்லை மனிதர்கள்...

கரீபிய நாடுகளில் தமிழர்...


கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது.

இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன.

வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன.

இவை தென் அமெரிக்கத் தலைநிலப்பரப்புப் பகுதியில் இருக்கின்றன.

கயானாவின் மேற்கே வெனிசூலாவும், கிழக்கே சூரிநாமும், தெற்கே பிரேசில் நாடும் இருக்கின்றன.

டச்சு கயானா என்று அழைக்கப்படும் சூரிநாம், பிரேசில், கயானா அருகில் இருக்கிறது.

கரீபியன் பகுதியில் பரப்பளவில் மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்திருக்கிறது. ஜமைக்கா, கியூபா நாட்டின் அருகில் இருக்கிறது.

தமிழர் குடியேறிய வரலாறு..

கரீபிய நாடுகளில் தமிழர்களுக்கு முன்பாக தோட்டங்களில் ஆப்ரிக்கர்களே வேலை செய்து வந்தனர்.

1834-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்ரிக்கர்களின் அடிமைவாழ்வு முடிந்து தோட்டங்களை விட்டு வெளியேறியவுடன், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இந்தியாவிலிருந்து பிரஞ்சு குடியேற்றங்களுக்கு நிறையபேர் அனுப்பப்படுவதை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் தாமும், இந்தியாவிலிருந் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர்.

இதன் விளைவாக 1938-ஆம் ஆண்டு இந்தியக் கூலிகள் கயானாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

பிறகு 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் டுபாக்கோவிலும், 1873-ஆம் ஆண்டு சூரிநாம், ஜமைக்கா நாடுகளுக்கும் இந்தியக் கூலிகள் கொண்டு வரப்பட்டனர்.

இவ்வாறு வந்திறங்கிய இந்தியக் கூலிகள் சிலர் இத்தீவுகளிலிருந்து கிரானடா நாட்டிற்கும் சென்றனர்.

கயானாவிலிருந்து இரண்டு பெரிய தோட்ட முதலாளியான ஜான் கிளாட்ஸ்டோன், கிளினெல்பிரபு என்பவரின் துணையோடு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரத் தொடங்கினார்.

இதன் பயனால் 156 ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து கிளம்பி ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில் 1838-ஆம் ஆண்டு கயானாவில் வந்து இறங்கிய கூலிகள் மொத்தம் 156 பேர்.

அதே மாதத்தில் விட்பை என்னும் கப்பலும் 263 கூலிகளைக் கொண்டு வந்து இறக்கியது.

முதற் கப்பல் கொண்டு வந்த கூலிகளைக் தோட்ட முதலாளியான கிளாட்ஸ்டோன் டெமராரா நதிக் கரையில் உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன் என்ற தோட்டங்களுக்கும் எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும் அனுப்பி வைத்தார்.

விட்பை ஏற்றி வந்த கூலிகளை டெமராராவில் உள்ள பெலிவ்யூ என்னும் தோட்டத்திற்கும், எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள ஹைபரி, வாடர்லூ என்னும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைத்தார்.

இவ்வாறு 1838-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தியக் கூலிகளின் கயானா வருகை 1917-ஆம் ஆண்டோடு முடிவடைந்தது.

இந்த என்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த கூலிகள் பலர் மேற்கிந்தியத் தீவுகளான டிரினிடாட், ஜமைக்கா, செயிண்ட் லூசியா, குவாடிலோப், மார்த்தினிக்கிற்கும், கயானாவின் கிழக்கில் உள்ள சூரிநாமிற்கும் அனுப்பப்பட்டனர்.

1838-ஆம் ஆண்டு தொடங்கி 1917-ஆம் ஆண்டு வரை கயானாவிற்கு மட்டும் வந்த இந்தியர்களின் தொகை 2,38,979 ஆகும்.

டிரினிடாட்..

டிரினிடாட்டிற்கு முதன் முதலாக 1845-இல் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள்.

பேட்டல் ரோசாக் எனும் கப்பலில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் போர்ட் ஆப் ஸ்பைன் துறைமுகத்தில் முதலாவது வந்த 225 இந்தியர்கள் இறங்கினார்கள்.

இந்தியர்கள் முதல் முதலாக டிரினிடாட்டிற்கு வந்த தினம் முதல் முறையாக 1978-இல் கொண்டாடப்பட்டது.

ஜமைக்கா..

1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28 இந்திய பெண்கள், 16 சிறுவர்கள் செயிண்ட் கேதரைனிலுள்ள பழைய துறைமுகத்தில் முதன் முதலாக வந்திறங்கினார்கள்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 4,550 இந்தியர்கள் ஜமைக்காவில் வந்து குடியேறினார்கள்.

1845-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே 36,412 இந்தியர்கள் ஜமைக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.

சூரிநாம்..

தென் அமெரிக்கத் தலை நிலப்பரப்பிலிருக்கும் சூரிநாம் மட்டும் டச்சுக்குடியேற்றப் பகுதியாக இருந்தது.

1853-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்துகொண்ட 74,000 கூலிகள் சூரிநாமிற்குக் கொண்டு வரப்பட்டனர்.

இதில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் 46% பேர்கள்.

கிரானடா..

1857-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே சுமார் 2,750 இந்தியக் கூலியாட்கள் இத்தீவிற்கு வந்து குடியேறினார்கள்.

இவர்கள் பிற கரீபியன் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.

ஆனாலும் தேவைக்கேற்ப மிகுதியான கூலியாட்கள் கிடைக்காததால், பல கரும்புத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்த போதிலும், பொதுவாக இத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தோன்றவில்லை.

மார்டினிக்தீவு..

காரைக்கால், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக 10,063 பேர் 1874-ஆம் ஆண்டில் மார்டினிக் சென்றுள்ளனர்.

இங்கிருந்து குவாடலோப் முதலிய தீவுகளுக்கும் சென்றுள்ளனர்.

தமிழரின் இன்றைய நிலை...

சமயம்..

கரீபிய நாடுகளில் மாரியம்மன், காளி, மதுரை வீரன் கோயில்கள் கட்டாயம் இருக்கும்.

ஏனெனில் தொழிலாளர்களாக சென்ற தமிழர்களில் முக்கால்வாசிபேர் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து சென்றவர்கள்.

மற்றும் சிலர் மதம்மாறி கிறிஸ்தவர்களானார்கள்.

ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தெய்வங்களைக் காணலாம்.

இந்துக் கோயில்களைக்கூட "சர்ச்" என்றே அழைக்கின்றனர்.

பெரும்பான்மையான கோயில்கள் சர்ச் பாணியிலேயே இருக்கின்றன. சிலைகளுக்கு பதிலாக படங்களே இருக்கின்றன.

'சேவலை' காவு கொடுக்கும் வழக்கமும்; வேலாடும் வழக்கமும் இருக்கின்றன.

சாதிப்பேய் அங்கேயும் இருக்கிறது.

கோவிலில் சிலரை உள்ளே அனுமதிப்பதில்லை.

கயானாவில் பெர்பீஸ் பகுதியில் இவ்வழக்கம் இருப்பதாக ஈசா. விசுவநாதன் தெரிவிக்கிறார்.

மாரியம்மன் தாலாட்டு, சிலக்குத்து என்னும் நூலிலுள்ள பாடல்களை பாடுகின்றனர்.

ஒரு வரியை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் பின்பற்றும் கிருத்துவ முறை காணப்படுகிறது. பக்தர்களுக்கு சுண்டல், வடை உண்டு.

சாமிமீதேறப் பெற்றவர் 'வெறியாடும்' வழக்கம் இருக்கிறது. அப்போது 'குறி'யும் சொல்லப் படுகிறது.

நோயுற்றோருக்கு மந்திரம் ஜெபித்து, தண்ணீர் தெளித்து வேப்பிலை அடிப்பதோடு, நாட்டு மருத்துவமும் செய்கின்றனர்.

இத்தகைய கோயில்களுக்கு எல்லோரும் வருகின்றனர்.

கொரன்டீனிலுள்ள ரோஸ்ஹால் கோயிலை நடத்துபவர் ஓர் ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங் கோயிலில் குறிசொல்பவர் ஒரு முஸ்லீம், மதராசிகள் (தமிழர்) நடத்தும் இக்கோயில்கள் வெறும் வழிபாட்டுக் கோயில்களாக இல்லாமல் நோய் தீர்க்கும் மருத்துவ நிலையங்களாகவும் உள்ளன.

கிரானடாத் தமிழர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறி விட்டனர்.

சூரிநாமில் இந்துக்கள் வட இந்திய முறைப்படி வழிபாடு செய்கின்றனர்.

ஜமைக்கா, குவாடலுப் போன்ற நாடுகளில் மதம்மாறி விட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முறையே 500 குடும்பங்கள் இருப்பதாக 1987-ஆம் ஆண்டு கணக்கெடுத்துள்ளனர்.

மார்ட்டினிக் தீவில் இன்றும் ஏராளமான தமிழர்கள் தமிழக முறைப்படி வழிபட்டு வருகின்றனர்.

இந்துக் கோயில்கள் மௌலின், கிராடிஸ், மாகௌபா முதலிய ஏழு இடங்களில் இருந்ததாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார்.

16 அடி உயரத்தில் இலிங்கம் மௌலின் கோயிலில் இருந்ததாக தெரிவிக்கிறார்.

மார்ட்டினிக்கில் தமிழக முஸ்லீம்களும் பெருமளவு குடியேறி இருந்தனர்.

நாகூர் மீரான் ஆண்டவருக்கு அங்கு ஒரு நினைவு பள்ளி இருந்ததாக வின்சென்ட் சாய்பு தனிநாயகம் அடிகளிடம் தெரிவித்துள்ளார் சாயுபு கூட வின்சென்ட் ஆகியிருப்பதிலிந்து நிலமையை உணரலாம்.

உணவு-உடை-தகவல் தொடர்பு..

பெரும்பாலான பெண்கள் இன்று நீக்ரோக்கள் உடையையும், கௌனையுமே அணிகின்றனர்.

ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கமே இல்லை. அமெரிக்க உடைகளே வழக்கில் இருக்கின்றன.

உணவும்கூட ஆங்கில, பிரஞ்சு முறைப்படி இருந்தாலும் சமயசடங்கு நேரத்தில் மட்டும் சுண்டல், வடை முதலியவை செய்யப்படுகின்றன.

காய்போட்டு காய்ச்சும் குழம்பை 'கொலம்போ' என்று அழைக்கின்றனர்.

புலவு, பிரியாணிக்கு கரீபியர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், முக்கிய உணவிடங்களில் கூட பிரியாணிக்கு செல்வாக்கிருப்பதாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார்.

இந்தியப் படங்களை வீடியோ நாடாக்கள் மூலம் பார்த்து வருகின்றனர்.

கரீபிய நாடுகளில் தமிழ் இதழ்கள் எங்கும் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரீபிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற விடுமுறை காலங்களில் தமிழகத்தில் தாங்கள் பார்த்து கேட்டு அனுபவித்த நாடகங்களை அங்கு நடத்தியதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அருணாசல கவிராயரின் இராமநாடகம், தேசிங்குராசன் நாடகம், இரண்யன் நாடகம், அல்லாபாஷா நாடகம் போன்றவையும், இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை நடித்ததையும் டி.டபிள்யூ.டி கொமின்ஸ் தம் நூலில் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பாடிய பல நாட்டுப் பாடல்களின் மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள் தங்கள் கிரியோல் மொழிப் பாடல்களில் கேட்கலாம்.

சில பாடல்களின் இறுதி அடிகளில் சின்னமுத்தம்மா, பெரியமுத்தம்மா என முடிவதிலிருந்து அறிகிறோம்.

தமிழ்மொழியின் நிலை..

கரீபிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று யாருக்கும் தமிழ் தெரியாது.

ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், கிரியோல் பேசுபவர்களாக மாறிப்போய் விட்டனர்.

தமிழர்களுடைய பெயர்களை எழுதிய பல்வேறு நாட்டு தோட்ட முதலாளிகள் அவரவர் மொழிக்கேற்ப மாற்றி எழுதி வைத்துள்ளனர்.

அதை மாற்றாமல் பல தமிழர்களும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளனர்...

மரியாய் - மாரியம்மா
வெள்ளினி - வள்ளி

என மாறி இருக்கிறது.

இந்துக்களாக இருப்பவர்கள் கூட தங்கள் பெயரின் பின் ஜான், ஜோசப் முதலிய கிருத்துவப் பெயர்களுடனே இருப்பது வியப்பாக இருக்கிறது.

கயானாவில் தமிழர்கள் 60 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

கங்காராம், ரோஸ்ஹால், ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-கொரன்டீன் பகுதியில் உள்ள ஊர்களிலும், மேற்கு டெமராராவில் உள்ள ஸ்டுவர்ட் வில்லிலும், ட்ரையம்பிலும் நூறுகுடும்பங்கள் இருப்பதாக விசுவநாதன் தெரிவிக்கிறார்.

கல்வி நிலை..

"தம் தாய்மொழியை யார் மறக்கிறார்களோ அவர்கள் தம் பண்பாட்டையும் மறக்கின்றார்கள்" என்று கயனாநாட்டு நோயல் மெனீஸ் கூறுகிறார்.

இன உணர்வையும், மொழியையும் இழந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாட்டு மொழியைதான் படிக்கின்றனர்.

மொழி இழந்ததால் அவர்களிடம் இலக்கியமும் போய்விட்டது.

ஆப்ரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட போதும் தங்கள் வாய்மொழி இலக்கியத்தை விடாமல் இருந்ததை தமிழர்கள் இனியாகிலும் உணரத்தான் வேண்டும்.

அமைப்புக்கள்..

ஜமைக்காவில் மட்டும் 8 இந்திய அமைப்புக்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளின் விபரங்கள் அறிய முடியவில்லை.

தமிழர் சாதனைகள்..

கயானாவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஒருசிலரில் திரு.லெஸ்வி முத்து என்னும் தமிழர் குறிப்பிடத்தக்கவர்.

இவர் ஜார்ஜ் (தலைநகரம்) டவுனில் மருத்துவராக உள்ளார். திரு. சாமி என்பவர் வியாபாரத் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பதோடு, இந்த நாட்டில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராக திகழ்கிறார்.

கல்வித்துறையில் டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி, கயானாப் பல்கலைக் கழகத்தில் உயிர்நூல் துறையில் பணியாற்றுகிறார் இவருடைய தம்பி டாக்டர் ஹெர்னன் ராமசாமி என்பவர் செல்வாக்குள்ள மருத்துவர்களில் ஒருவராக கொரன்டீன் பகுதியில் இருக்கிறார்.

ஜமைக்காவில் 1950 வரை காய்கறிகளின் ஏகபோக உரிமை தமிழர்களிடமே இருந்தன.

ஜமைக்கா பாராளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்/தொழில் புரிவோர் விபரங்கள்..

கயானாவில் வாழும் தமிழரில் 85% விழுக்காட்டினர் தோட்டங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்கின்றனர்.

பொறியியல் வினைஞர்களாகவும், நர்சு, ஆசிரியர்களாக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாழ்கின்றனர்.

நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் சென்று விட்டதாக இங்குள் தமிழர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் குறைந்தது ஒருவராகிலும் அமெரிக்காவிலோ கனடாவிலோ, பிரிட்டனிலோ வாழ்ந்து வருகின்றனர்.

சூரிநாமில் சரபாச்சா, நிக்கெரி மாவட்டங்களில் சிறுவிவசாயிகளாகவும், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலிலும் இவர்களின் பங்கு உள்ளது.

ஜமைக்காவில் விவசாயத்திலும் வியாபாரத்திலும் இருக்கின்றனர். கிரனடாவில் கரும்புத் தோட்டங்களி பணிபுரிகின்றனர்.

கரீபிய நாடுகளில் தமிழர்கள் பண்பாட்டை முதலில் வட இந்தியரிடம் இழந்தனர்.

பின்னர் அந்தந்த நாட்டு மொழி, பண்பாடுகளால் விழுங்கப்பட்டவர்களாக இன்று வாழ்கின்றனர்.

இன்றைய இளம் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்திய அரசாங்கம் உலகில் உள்ள நான்கு நாடுகளில் (கயானா, சுரிநாம், பீஜி, மொரீசியஸ்) இந்திய பண்பாட்டு மையம் (Indian cultural centre) நிறுவி அதன் மூலம் இந்திமொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை பரப்பி வருகிறது.

அதுபோல தமிழக அரசும் தமிழர்கள் அதிகமாக அந்நாடுகளில் வாழ்வதால் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்கிறார் விசுவநாதன்.

ஒட்டுமொத்த தமிழரின் விருப்பமும் இது என தமிழக அரசு உணர வேண்டும்...

ஓசி சோறு திக எனும் திருட்டு கும்மல்...


முன்ஜென்மம் அறியும் எளிய முறை...


ஒருவரை வசதியாக தளர்ந்த ஆடையோடு படுக்க சொல்ல வேண்டும்.

பின் பிண்ணனி இசை ஏதாவது இருந்தால் போட்டுவிட்டு, அவரை இரண்டுமுறை ஆழ்ந்த சுவாசம் எடுக்க சொல்ல வேண்டும்.

பின் அவர் கண்களுக்கு நேர் மேலே செயினில் தொங்கும் மினுங்கும் பொருளை மெதுவாக சுழட்ட வேண்டும்.

அவர் கண்கள் சோர்ந்து போகும் வரை அதையே உற்று பார்க்க சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஒருசில நிமிடங்கள் தொடர்ந்து சுழட்டி கொண்டே, சில கட்டளைகள் கொடுக்க வேண்டும்.

உங்கள் கண்கள் சோர்ந்து விட்டது. உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வருகிறது.

உங்கள் மொத்த உடலும் தளர்வாக இருக்கிறது. நீங்கள் மிகவும் நல்லவர்.

நீங்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளீர்கள். உங்கள் கண்களை இனி திறக்க இயலாது.

உங்கள் கைகால்களை இனி அசைக்க இயலாது. உங்கள் உடல் மரக்கட்டை போல் அசைவற்று கிடக்கிறது.

இதுபோன்ற கட்டளைகளை மறுபடி மறுபடி சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு கூற கூற சிறிது நேரத்தில் அவர் நீங்கள் கூறியபடியே உடலை அசைக்க முடியாமல் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்று விடுவார்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் வயதை குறைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

இருபது வயதில் என்ன நடக்கிறது? பதினைந்து வயதில் என்ன நடக்கிறது? பத்து ஐந்து ஒரு வயது என கேட்டுவிட்டு பிறகு அம்மாவின் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என கேட்டு அறிய வேண்டும்.

அதன்பின் அம்மாவின் வயிற்றுக்க்கு வருவதற்கு முன் எங்கு எப்படி இருக்குறீர்கள் என கேட்க வேண்டும்.

இவ்வாறு படிப்படியாக வருடங்களை குறைத்து கொண்டே போக வேண்டும்.

இதுவே முன்சென்மம் அறியும் முறை.

குறிப்பு : எப்படி வயதை குறைத்துக் கொண்டே சென்றோமோ அதே போல் வயதை அதிகரித்துக் கொண்டே வந்து தான் அவரை எழுப்ப வேண்டும். அதாவது சென்ற வழியிலேயே திரும்பி வர வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பாதியிலேயே எழுப்பிவிட கூடாது.

அதேபோல் எந்த வயதிலாவது அவர் கடுமையான வலியை அனுபவித்திருந்தால் அதே வலியில் தற்போதும் துடிப்பார். உடனே அவர் வயதை குறைத்துவிட வேண்டும்.

இதயம் பலவீனமானவர்களை ஹிப்னாடிசம் செய்ய கூடாது. சில சம்பவங்கள் நடந்த தருணத்திற்கு அவர் செல்லும் போது அவர் இதயம் தாங்காது.

எக்காரணம் கொண்டும் அவரிடம் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

இதில் ஏதேனும் தவறு நேர்ந்தாலும் மீண்டும் அதை சரி செய்து விடலாம் கவலை வேண்டாம்...

சென்னையில் குடிபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக மீனவர் அணி அமைப்பாளர் - கட்டுக்கடங்காத திமுக-வின் வன்முறை வெறியாட்டம்...


http://www.kathirnews.com/2018/12/10/chennai-dmk-attacks-police/

தினமும் 150 லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தல் - ஓபிஎஸ் மகன் மீது நெல்லை கலெக்டரிடம் புகார்...


நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் உறவினர்கள் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான நல்லகண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த சில வருடங்களாக மணல் திருட்டு தடுக்கப்பட்ட நிலையில், தற்போது தாமிரபரணி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை நடந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாலாமடை கட்டளை கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான உச்சிமாகாளி என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், ``பாலாமடை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி மற்றும் சிற்றாறு ஆகியவற்றை நம்பியே இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சீவலப்பேரி அருகில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடந்து வருகிறது.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துக்குப் பெண் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க பிரமுகரான அர்பன் ரவி ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். 4 மணல் அள்ளும் வாகனங்கள் மூலமாகத் தினமும் 150 லாரிகளில் மணல் அள்ளப்பட்டு நாகர்கோவில் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக இந்தக் கும்பல் மணல் அள்ளி வந்த போதிலும், அதைக் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் இந்தப் பகுதியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மணல் அள்ளப்படுவதால் இந்தப் பகுதியில் உள்ள வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் விவசாயத்தைப் பாதியிலேயே நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை நிறுத்துமாறு தெரிவித்ததற்கு என்னை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்கள்...

அதனால் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக மனு அளித்த பின்னர் உச்சிமாகாளி தெரிவித்தார். 

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதால் புகார் செய்வதற்குக்கூட விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், வழக்கறிஞர் உச்சிமாகாளி அளித்துள்ள புகார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது...

அகோரிகள் சில தகவல்கள்...


பேரீச்சம்பழம்...


அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.

100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

இத்தனை சிறப்பான பேரீச்சம் பழத்தினை உண்பதனால், பித்தம், பித்தநீர், பித்தசுரம், வாந்தி, குடபுரட்டல், மனக்கலக்கம், மனக்குழப்பம், உன்மதம், மதமூர்ச்சை, பைத்தியநோய், கபம், இருமல், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல், சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், நீர்க்கோர்வை, கபாஅநீர், காசம், சுவாச காசம், இரத்தகாசம், தாகம், அதிதாகம், நீரிழிவு, மதுமேகமென்னும் சர்க்கரை நோய், இரத்தபித்தம், வாய்நீர் வடிதல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்...

ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியில் இருந்து ராஜினாமா... அடுத்து நேரடி பாஜக டிவி ஆரம்பிப்பார்...


தமிழா விழிப்போடு இரு...


உங்கள் பிள்ளைகளுக்கு வீடு வாங்குவதையோ, பிள்ளைகளுக்கு போதுமான பணம் வங்கியில் இருக்கிறது என தம்பட்டம் அடித்து கொள்ளாதீர்கள்..

இரவோடு இரவாக பணம் செல்லாது என கூறிய அரசாங்கத்தால் அதை இரவோடு இரவாக உங்கள் பணம், வீடு உங்களுக்கு இல்லை என சொல்வதில் ஆச்சர்யம் எதுவுமில்லை...

பாஜக ஆளே... பாஜக வின் சுரண்டலை தாங்க முடியாமல் ஓடிட்டான்...


தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்...


1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு.. தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தி எதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.

28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார் மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது.  அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.

அவர் நடத்தி வந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.

1) இந்தி எதிர்ப்பு
2) தமிழ்நாட்டு உரிமை

இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்...

தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்..

திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்..

பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர் மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்...

மனிதனை இயக்குவது மனமே...


அந்த மனதையே இல்லாமல் செய்வது  நம்மை சுற்றியுள்ள இயற்கை மட்டுமே...

கருவூர்ச்சித்தர் அருள்வாக்கு...


கருவூர்ச்சித்தர் உலகமக்கள் மீது இரக்கம் கொண்டருளிய அருள்வாக்கு...

மகான் கருவூரார் ஞானசூட்சும நூல்...

இப்பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்தது எது?

எதன் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றால் அது அவரவர் செய்திட்ட பாவபுண்ணியங்களால் ஏற்பட்ட ஊழ்வினையாம் இயற்கையின் நியதிப்படியே எல்லா உயிர்களும் இயங்கிட அவற்றின் செயல் விளைவுகளால் தோன்றும் ஊழ்வினையாகிய முன்சென்ம பாவங்களின் தண்டனைகளிலிருந்து எவரொருவரும் கண்டிப்பாக தப்பிக்க எந்த வகையிலும் சாத்தியம் என்பதே உறுதியாக இல்லை.

ஆயினும் சிலர் இதனை அதாவது ஊழ்வினையை வெல்வதற்காக பொல்லா மாயை சூழ் கலியுகத்தின் இயல்பான மயக்கமுடைய சுகவாழ்வை விட்டு இல்லறம் விட்டு விலகி பக்தி, சித்தி மார்க்கம்தனை நாடி பலவிதமாய் பக்தி செய்தும், சித்திதனை அடைய பயிற்சிகள் செய்தும் அவரவரும் வினைக் குற்றங்கள் நீங்கிட பல முயற்சிகள் செய்திட்டாலும், பாவம்.  அவர்களெல்லாம் ஊழ்வினையின் பிடியினின்று தப்பிக்க முடியாது. என்ன செய்தாலும் அவர்தம் முன்ஜென்ம ஊழ்வினை கண்டிப்பாக அவரைப்பற்றி தொடரத்தான் செய்யும்.

ஆயின் முழுமையாக ஊழ்வினையின் பிடியினின்று தப்பிப்பதற்காக நல்ல குருவினை நாடி பண்புள்ள அந்த குருவின் உபதேசப்படி நடந்து அவர் தம்மால் ஊழ்வினை வாரா வண்ணமே காப்பினை பெறும் முயற்சியாக பலவிதமான யோகப்பயிற்சிகள், நடைமுறை பயிற்சிகள் எனவே தமது உடலையும், உயிரையும், பொறிபுலன்களையும் பயிற்சிகளால் கட்டுப்படுத்தி வைத்தாலும் அவரவர் செய்திட்ட ஊழ்வினை கடுகளவேனும் அவர் தம்மை தொடர்ந்து வந்து அவரை வீழ்த்திடத்தான் செய்யும்.

ஆதலினால் எந்த பயிற்சிக்கும், புலனடக்கத்திற்கும், விலகி நிற்றலுக்கும் கட்டுப்படாத ஊழ்வினைதனை முழுமையாக வென்றிடவே அவர்களெல்லாம் அறங்கள் என்றும் தருமங்கள் என்றும் அளவிலாது முன்வினைதனை போக்குமளவிற்கு செய்து தருமமே பிரதானமாக ஜீவதயவே உயிர்நாடியாக கொண்டு இக்கலியுகத்திலும் காப்புடனே தருமங்களை அளவிலாது செய்தும், ஜீவதயவினை உலகஉயிர்களிடத்து அளவிலாது காட்டி ஞானகுருவாய், சற்குருவாய் அமர்ந்து அருளுகின்ற குருராஜர் தம்மை பூரண சரணாகதி அடைந்து அவர்தம் அறதருமப் பணிகளிலே தொண்டுகள் தனையும் தொடர்ந்து தருமங்கள் செய்தும் வந்தால்தான் அவர்களது முன்சென்மவினைகள் அவர் தம்மை தொடராது முழுமையாக அவர் தம்மை
விட்டகலும்.

இவ்வுலக மக்களெல்லாம் அவரவர் வினைகளை வென்று கடைத்தேறிடவே இவ்வுலகினிலே வாழும் கலியுக ஞானமகா தேசிகனாய் ஆறுமுகனின் அவதாரமாய் ஞானிகள் எங்கள் அருட்புதல்வனாய் தோன்றி அளவிலாத தருமங்களுடன் முற்று பெற்றுயர்ந்த ஞானிகள் எங்கள் திருவடி பூசைகளை செய்து உயர் ஞானம் பெற்றும் மக்களையெல்லாம் ஞானவழி செலுத்துகின்ற கலியுகத்தின் உயர் ஞான குருநாதர் ஞானிகள் எங்களின் அன்பு செல்வன் அருள் செல்வன் ஞானயோகி அரங்க மகா தேசிகனே ஆவார்.

தேசிகனே தருமத்தின் துணைகொண்டு தீவினையாம் கர்மவினைகளை போக்கி அழித்து வாசி வென்று ஞானமடைந்திட்ட மகா ஞானியாவார். ஆதலின் அண்ணல் அரங்கர் தமை பயபக்தியுடன் வணங்கி போற்றி துதித்து அவர்தம்மிடம் சீடனாகி உபதேசம் ஏற்று அரங்கர் வழிதனிலே உபதேசப்படி நடந்து சென்று தர்மங்களை அறப்பணிகளை தொண்டுகளை செய்து செய்து அரங்கர் வழி நடக்கின்றவர்களுக்கு மட்டுமே அவரவர் செய்திட்ட முன்வினை பாவங்கள் ஒழிந்து அவர் தம்மின் முழுபாவங்களும் ஒழிந்து முழுமையான ஞானம் எனும் அழியாமை நிலைதனை அடைவர்.

வேறு எந்த வழியிலும் எந்த வகையிலும் எப்படி செய்திட்டாலும் அவரவர் ஊழ்வினை உறுத்தலினால் கண்டிப்பாக வெற்றியடையார். அரங்கன் அருள் இல்லையேல் அரங்கன் உடனிருப்பில்லையேல் ஊழ்வினை வெல்லுதல் அரிதாம் என்று அவரவர் பாவம் வென்று ஞானம் பெற்றிட உத்தம உபாயம் உரைத்து ஞானசூட்சும நூல் கூறுகிறார் மகான் கருவூர் சித்தர்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...