13/12/2018

அரசு பேருந்து ஓட்டுனர் போக்குவரத்து விதிமுறைகள் மீறியதால் துணிச்சலுடன் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு...


வடலூரில் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்ததில் இருந்து போக்குவரத்து விதிமுறைகள் மீறாமல் இருக்க பல் வேறு கட்ட நடவடிக்கைகள் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அவர்கள் வெகு சிறப்பாக பணியாற்றி வருவது அப்பகுதி மக்களிடையேயும் உயர் அதிகாரிகளின் மத்தியிலும் நற்பெயர் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வடலூரில் குறிப்பாக சில அரசு பேருந்து ஓட்டுனர்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்தும் கேட்காமல் விதிமுறைகள் மீறி நடந்து வருகின்றனர். ஆகையால்
09-12-2018 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்களின் உத்தரவின் படி அனைத்து பேருந்துகளும் வடலூர் பேருந்து நிலையம் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி வரவேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து அரசு போக்குவரத்து பணிமனை மேளாலர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இன்று வடலூர் நான்குமுனை சாலையில் கடலூர் to சேலம்  செல்லும் பேருந்தினை பார்த்து  இது பேருந்து நிறுத்த தடைசெய்யப்பட்ட பகுதி எனவே பேருந்தினை நிறுத்தாதீர் என்று ஒலிபெருக்கியின்(Mega Phone) மூலம் போக்குவரத்து காவலர் எச்சரித்தும் விதியை மீறி  நிறுத்திய சேலம் அரசு பேருந்து மீது துணிச்சலாக  வழக்கு பதிவு செய்தார்.பாரபட்சம் பார்க்காமல் அரசு பேருந்தாக இருந்தாலும் சரி என்று பாராமல் வழக்குபதிவு செய்தது வரவேற்கத்தக்கது. என்று சமூக ஆர்வாலர்கள் மற்றும் மனிதநேய மிக்க மக்களும் பாராட்டிவருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.