24/06/2017

குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாருக்கு திராவிடர் கழகம் ஆதரவு - கி.வீரமணி அறிவிப்பு...


திமுகவின் சொம்பு என்கிற ஒரு தகுதியை வைத்தெல்லாம் உங்கள ஓட்டு போட அனுமதிக்கமாட்டாங்க வீரமணி, எம்எல்ஏ, எம்பியாக இருப்பவர்களுக்குத் தான் குடியரசு தலைவர் தேர்தலில் ஓட்டு போட அனுமதி உண்டு  வீரமணி...

அரசியல் தத்துவம்...



நம்பவை
நடி
பாசம் ததும்ப பேசு
மாலை கட்டு
கழுத்தை காட்ட செய்
வெட்டு
வெட்டியது வெளிவராத படி
மூடு
மூடியது திறந்து கொண்டால்
திறந்தவன் மீதே
பழியை திருப்பு
தீர்ப்பு வழங்கு
நீ தான் அரசியல் சாணக்கியன்..

இது தான் உலக அரசியலின்
அஸ்திவாரத் தத்துவம்...

மீண்டெழும் பாண்டியர் வரலாறு...


இப் புத்தகம் தமிழ் நாட்டில் மட்டும் தான் தடை செய்யப்பட்டு இருக்கிறது.. மற்ற மாநிலத்தில் இப்புத்தகத்துக்கு தடை இல்லை..

காரணம் தமிழன் விழிப்புணர்வு பெறக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் மட்டும் தான் தடைச் செய்யப்பட்டுள்ளது...

செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு” எனும் நூலைத் தமிழக அரசு தடை செய்துள்ளது (G.O. Ms. No. 525, Public (S.C), 30th May 2013).

அது மட்டுமல்ல அந்த நூல் ஆசிரியர் செந்தில் மள்ளர் மீது தேசத் துரோகச் சட்டம் (124 ஏ) உட்படப் பல பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து அவரைத் தேடியும் வருகிறது.

அவரது மாமனார் பெருமாள் சாமி என்பவரும் இன்று இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமூக ஒற்றுமையைக் குலைத்து, சாதிகளுக்கிடையே மோதலைத் தோற்றுவிக்கும் உள்ளடக்கம் கொண்டிருப்பதால் இந்ந்நூல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நூலின் கருத்துக்களிலும் அவை சொல்லப்படும் விதங்களிலும் என்க்கு உடன்பாடு இல்லை. ஆயினும் இந்தத் தடையை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.

ஏன் எனக்கு உடன்பாடில்லை என்பது குறித்து இறுதியாக எழுதுவேன்.

‘பள்ளர்’ எனப் பட்டியல் சாதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவோர் உண்மையில் ‘மள்ளர்கள்’, ‘தேவேந்திரகுல வேளாளர்கள்’ என அழைக்கப்பட வேண்டியவர்கள். ‘பள்’ எனும் வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்ததே “பாண்டியர்” எனும் அரச குல மரபுப் பெயர். ஆக பள்ளத்தில் வேளாண்மை செய்து வாழ்ந்திருந்த வேளாண் மக்களே நாங்கள். எங்களிலிருந்து கிளைத்ததே வெள்ளாளர் முதலான அனைத்துத் “தமிழ்ச் சாதி”யினரும்.. என்கிற கருத்தை முன்மொழிந்து செல்லும் நூல் இது..

இந்தக் கருத்துக்கள் சரியா தவறா என்பதல்ல இங்கு பிரச்சினை. அதைத் தீர்மானிக்க வேண்டியது புலமையாளர்கள் (academic community). புலமையாளர்களின் தீர்ப்பு தவறானால் அது குறித்து முடிவு செய்ய இன்று ஏராளமான வழிமுறைகள் உண்டு.

ஆனால் இடையில் அரசு தலையிட்டு இம்மாதிரியான முடிவை எடுக்க வேண்டிய அவசியமென்ன?

இப் புத்தகம் வெளியிடப்பட்டு சுமார் மூன்றாண்டு ஆகிவிட்டது.

சுமார் 5000 பிரதிகளை இந்நூலாசிரியர் விற்றுள்ளார் என ஒரு தகவல் எங்களுக்கும் வந்துள்ளது.

‘விசுவரூபம்’ திரைப்படத்திற்கு வந்தது போல பெரிய பிரச்சினைகள் ஏதும் இங்கு “பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து” வரவுமில்லை.

‘பாதிக்கப்பட்டவர்களாக’ இங்கு யாரும் பிரச்சினை செய்யவில்லை.

தவிரவும் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊடக அதிகாரமிக்க கமலஹாசன் போன்ற ஒரு அதிகாரமிக்க உயர் சாதி நபர் தொடர்ந்து ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அம்மக்களின் அன்றாட வாழ்வேயே கேள்விக்குறியாகும் பிரச்சினையும் அல்ல இது.

உண்மையில் இது இதுகாறும் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினர் மேலெழுந்து தம் அடையாளத்தை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்று.

பின் ஏன் இந்தத் தடை?

இம்மாதிரியான எத்தனையோ புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன.

‘ஏசு நாதர் அல்ல, அது ஏசு நாடார்” என ஒரு அபத்தப் புத்தகம் வந்துள்ளது.

ராஜராஜ சோழன் வேறு யருமில்லை, இப்பிறவியில் அது நான் தான் எனக் கும்பகோணத் தொழிலதிபரும், பார்ப்பன சங்கத் தலைவராக இருந்தவருமான ஒரு ‘ராமன்’  “அருளுடைச் சோழ மண்டலம்” என ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இவற்றை எல்லாம் தடை செய்யாமல் இந்தப் புத்தகத்தை மட்டும் தடை செய்ததன் நோக்கம் என்ன?

எல்லா சாதிக்காரர்கள் பெயர்களிலும் போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கப்பட்டிருந்த போது பள்ளர்களின் போற்றற்குரிய திரு உருவாக உருப்பெற்றிருந்த “வீரன் சுந்தரலிங்கத்தின்” பெயரில் ஒரு போக்குவரத்துக் கழகம் தோன்றிய போது ஏன் இந்த எதிர்ப்பு?

தேவர், அதுதான் முத்துராமலிஙகத் தேவரின் பெயரால் குரு பூஜை நடத்தலாம். ஆனால் பள்ளர் குலத் திரு உரு இம்மானுவேல் சேகரனின் பெயரால் “குரு பூஜை” நடத்தக் கூடாது எனவும், மீறி நடத்த முயற்சித்ததற்காகப் பிரச்சினைகள் எழுந்ததும், இறுதியில் அவ்வாறு முயன்ற சாதியினரில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப் பட்டதும்..

இரண்டாண்டுகளுக்கு முன் ஜெயா ஆட்சியில் நடந்ததில்லையா?

1990க்குப் பின் இங்கே அடையாள அரசியல் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. ஆதிக்க சாதியினர் எல்லோருக்கும் இங்கே பொது வெளிகளில் தலைவர்கள், திரு உருக்கள் இருந்தனர் ஒடுக்கப்பட்ட சாதிகளின் திரு உருக்கள் பொது வெளிகளில் இடம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது..

அதேபோல பழமையில் தாங்கள் கோலோச்சிய காலம் ஒன்றிருந்தது என ஒரு வரலாற்றையும் அவர்கள் கட்டமைக்க வேண்டிய ஒரு அவசியமும்  எல்லோருக்கும் இருந்தது, குறிப்பாக  வரலாறு மறுக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களுக்கு இது தேவையாக இருந்தது.

இம்மக்களில் பொருளாதார ரீதியாகவும், ஆதிக்க ரீதியாகவும் மேம்பட்டிருந்த குருசாமி சித்தர் போன்றோர் தம் பொருளியல் செல்வாக்கின் அடிப்படையில் “மள்ளர் வரலாறுகளை” எழுதத் தொடங்கினர்.

எத்தனை குறைபாடுகள், பிரச்சினைகள் இருந்த போதும் இதை ஓரு வகையில் ஜனநாயகத்தின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆதிக்க சாதிகளிடமிருந்து இத்தகு முயற்சிகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கின.

இந்தப் பின்னணியிலிருந்துதான் சென்ற வருடம் செந்தில் மள்ளரின் நூல் ஜெயலலிதா அரசால் தடை செய்யப் பட்டுள்ளது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...

இவர்களை விட பல மடங்கு மேல் தளபதி விஜய்...


ஜல்லிகட்டை எதிர்ப்பேன் - விஷாலு..

விடுதலைபுலிகள் தீவிரவாத இயக்கம் - குஷ்பு..

தமிழர்கள் தரம் தாழ்ந்துவிட்டது - ரஜினி..

இவர்களை விட பல மடங்கு மேல் தளபதி விஜய்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று...


எண்ணும் எழுத்தும் - 21600 மூச்சுக்காற்று...

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது.

இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம்.

இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள்.

இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம் (அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.

இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.

பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.

5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு...

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.

2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு...

1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்.

2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு.

3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் ).

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு...

1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000.

2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்).

3. 60 கடிகைகள் = 1 நாள்.

4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்.

ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது..

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்.

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்.

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்.

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்.

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார்.

8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.

2 என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.

இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்...

திராவிடலு பகுதி - 9...


அன்றைய மதராச மாகாணத்தில் 1916ல் முதல் திராவிடக்கட்சியான 'நீதிக்கட்சி' பிறந்ததும் அதோடு சேர்ந்து தமிழ்,தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் பிறந்தன.

தமிழ் - திராவிடம்
தெலுங்கு- ஆந்திர பிரகாசிகா
ஆங்கிலம்- ஜஸ்டிஸ்

இதில் தெலுங்கில் திராவிடப் பெயர் பயன்படுத்தப்படவில்லை என்பதை கூர்ந்து நோக்குக.

அதாவது தமிழரை திராவிடர் என்று ஏமாற்றிவிட்டு, ஆந்திரருக்கு முன் அவர்கள் இனத்திற்கான கட்சியாகவே ஜஸ்டிஸ் கட்சி காட்டிக் கொண்டது புலனாகும்.

இக்கட்சியை இனி 'ஐஸ்டிஸ்' கட்சி என்றே அழைப்போம்.

இந்த கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்திய அழகைப் பார்ப்போம்.

இக்கட்சி ஆண்ட 1916 முதல் 1936 வரையான காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர்களைப் பார்ப்போம்.

திரு.ஏ.சுப்புராயலு ரெட்டி
(7-12-20 முதல் 11-77-21)
பனகல் அரசர்
(19-12-23 முதல் 3-12-26)
திரு.பி.முனுசாமி நாயுடு
(27-10-30முதல் 4-11-32)
பொப்பிலி அரசர்
(5-11-32 முதல் 1-4-37)
சர்.கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
(1-4-37 முதல் 14-7-37)

இவர்களில் எவரும் தமிழர்  இல்லை. எப்படி இருப்பர் ?

திராவிடம் என்பதே தமிழ்ப்பிராமணரை (அதாவது தமிழரை) பின்னுக்குத் தள்ளப் பிறந்ததாயிற்றே..

நன்கு கவனிக்க இவர்கள் அனைவரும் ஆதிக்கவர்த்தினர் ஆவர்.

அதற்காக அக்கட்சியில் தமிழர் குறைவென்று நினைக்க வேண்டாம்.

தமிழ் வாக்காளர் குறைவென்றும் நினைக்கவேண்டாம்.

சரி.நிறையபேர் தாழ்த்தப்பட்டோர்க்கு உரிமை பெற்றுத்தருவதே திராவிடம் என்று முழங்குகின்றனர்.

கிடையவே கிடையாது.

வந்தேறிய பிராமணரிடம் குவிந்து இருக்கும் அதிகாரத்தை மண்ணின் மைந்தருக்கு (அதாவது அவர்கள் பார்வையில் திராவிடருக்கு) பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாத தமிழர் வாக்குகளைப் பெற்ற பிறகு, அவ்வாக்குறுதியை ஒருநாளும்  நிறைவேற்றியதில்லை.

அக்கட்சியில் திரு.ரெட்டைமலை சீனிவாசன், திரு.எம்.சி.ராசா, திரு.வி.ஐ.முனுசாமி, திரு.என்.சிவராஜ் ஆகியப் பட்டதாரி தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் முன்னனியிலிருந்தனர்.

இவர்களில் எவரும் ஒருமுறைகூட அமைச்சராகவிட்டதில்லை.

திராவிடம் என்பது பிராமணரின் அதிகாரத்தை மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் பிடுங்கிக்கொள்ள உருவாக்கப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் மட்டும்.

அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி இனி எந்தக்காலமானாலும் சரிஆந்திர - கேரள - கன்னட மக்கள்  தம் இனத்தைக் கூறுபோடும் திராவிடத்தைத் துளியும் ஏற்றுக்கொள்வதில்லை.

தமிழகத்தில் கட்சிப் பெயர்களில் திராவிடம், தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க ஆதிதிராவிடர் எனும் சொற்றொடர் எல்லாம் திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டத் தெலுங்கு மக்கள் ஆதிதெலுங்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

தமிழகம் தவிர மற்ற எந்த இடத்திலும் திராவிடம் என்கிற பெயரோ, இயக்கமோ, கட்சியோ, நாளிதழோ எதுவும் இன்றுவரை வழக்கில் இல்லை.

திராவிடம் என்பது தமிழரை ஏமாற்றி தமிழகத்தை வேற்றினத்தவரின் கல்வி, வேலை மற்றும் தொழில் வேட்டைக்களமாக மாற்றித்தருவதே ஆகும்.

1936 ல் நடந்ததைப்பற்றி இப்போதென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம் இன்றும் தமிழர் தமது அத்தனையையும் வேற்றினத்தவருக்கு 'மொய்' எழுதிவருகின்றனர்.

மற்ற இனத்தவரிடம் பரப்புரை செய்யாமலேயே இயல்பாக இருந்த இனவுணர்வு அவர்களைக் கொடிய திராவிடத்திலிருந்து காத்தது, ஆனால் அன்றையத் தமிழுணர்வாளர் கரடியாய்க் கத்தியும்கூடத் தமிழருக்கு அதெல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகிப்' போனது.

அந்தத்தவறை இன்று நாமும் செய்யக்கூடாது.

திராவிடத்தின் பிறவி குணத்தைத் தெரிந்து கொண்டோம்.

மேலும் அலசலாம் தான்.

ஆனால் இது ஒரு குறிப்பிட்டக் கட்சியை விமர்சிப்பதாகிவிடும்.

1930க்குப் பிறகு திராவிடத்தின் அசுரப்பாய்ச்சல் பற்றியும், திராவிடம்  புதுவடிவம் எடுத்ததாகவும் தவறுகள் களையப்பட்டதாகவும் திராவிடவாதிகள் கூறலாம்.

அதையும் அலசத்தானே போகிறோம்...

- தொடரும்...

தமிழக விபச்சார ஊடகத்தை புறக்கணிப்போம்...


மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும்
அந்நிய நாடுகளின் அழிவு திட்டங்களை அரசு திணிப்பதை நியாயப்படுத்தியும்
பரப்புரை செய்யும் அந்நிய நாடுகளின் கைக்கூலி கார்பரேட் செய்தி ஊடகங்களை புறக்கணிப்போம்...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


நாமெல்லாம்  இந்தியர்கள், நாமெல்லாம்  ஹிந்துக்கள், என்ற  வாதமெல்லாம்  முடிந்து  தன்னை  மறந்து  "ஆமா  நான்  பூணூல்  போட்ட பிராமணன்  தான் இப்ப  என்ன  அதுக்கு "  என்று  பொங்கிய  பாஜக  நாராயணன்...

பாஜகவை  வளர்க்க  துடிக்கும்  அனைத்து பூனைகளும்  பூணுல்கள் தான்  என்று  சொல்வதை  நம்பாத    அப்பாவி  பக்த்ஸ்களுக்கு   செருப்படி  கொடுத்த  நாராயணன்..

 இதே  போன்ற  ஒரு   நிலைமை    இந்த  திராவிடர்களுக்கும்  வரும்   "ஆமா   நாங்கள்  தமிழர்கள்  அல்ல  திராவிடர்கள்  தான் " என்று  அவர்களின்  உண்மை  அடையாளத்தை   சொல்லும்  காலமும் இந்த  மண்ணில்  உருவாகும்.. உருவாக்குவோம்..

ஆரியமும்  திராவிடமும் ஒழியட்டும்  தமிழம்  மலரட்டும்...

குஜராத் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த இருவாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் மித்ரிவிதியில் இருக்கும் அணுவுலை ஆந்திராவுக்கு மாற்றபடுகிறது...


ஏன் குஜராத்திகள் இப்பிடி வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார்கள்.. ஒரு வேளை மோடிதான் பணம் வாங்கிகொண்டு இதை வேறு மாநிலத்துக்கு மாற்றிவிட உதவி செய்தாரா.. வளர்ச்சிக்கு விரோதிகளாக இருக்கிறார்களே ..

அர்னாப் கோஸ்வாமி போன்றோர்கள் குஜராத்தில் கிருஷ்துவ மிசினரிகளிடம் இருந்து காசு வாங்கி கொண்டு இது போன்று வளர்ச்சிக்கு விரோதமானவர்களை sting operation மூலம் வெளிக்கொண்டு வரும்படி கேட்டுகொள்கிறோம்...

மராட்டிய கன்னட ரஜினியை தான் சொல்லுறானுங்க...


பதவிக்காக வட நாட்டானின் காலை நக்கி தமிழ்நாட்டை கூட்டிக்கொடுக்கும் மானங்கெட்ட அடிமைகள்...


அதிமுக ஓபிஎஸ் எனும் உத்தமரின் தர்ம யுத்தம் தொடரும்...


இந்த யோக்கியனைத்தான் சில படிச்ச முட்டாள்களும் எல்லா டிவி நியூசிற்கு கீழும் OPS, OPS என்று என்று பொலம்பிகிட்டு இருக்கானுங்க...

அதிமுக வும் தமிழின துரோகமும்...


ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு - டிடிவி தினகரன் அறிவிப்பு...


கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழமையான பொருட்களை வெளியே எடுத்து செல்லாமல் கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


பொறுத்தது போதும், பொங்கி எழுங்கள் - கதிராமங்கலம் ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு...