13/05/2018

உயர்மின் கோபுரத்திக்கு கீழே 40-90 மீட்டர் அகலத்தில் மின்காந்த கதிர் வீச்சு உள்ளது...


அதன் கதிர்விச்சு(EMF) சுமார் 28mG அளவு உள்ளது.

(EMF)-2mGக்கு மீகுதியான மின்காந்த கதிர் வீச்சு மனித உடம்பை பாதிக்கும். புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த மின்காந்த கதிர் வீச்சு(EMF) இருப்பதால், நவின முறைவில் நிலத்தடிநீர் கண்டறிய முடியாது.
ஆதாரம் இதோ...

Statement of Hydrologist Er.K.S.Prakash

ஆக மொத்த விவசாயத்தை அழித்து, நம் நிலங்களை வாழ தகுதியற்ற பகுதியாக மாற்றுகிறது powergrid...

தமிழர்களின் மரபணுவில் அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் போர்குணங்கள் இருக்கு அந்த மரபணுவே செயல்படாமல் இருக்க இது போன்றவற்றை செய்கிறான்...


மீண்டும் மனிதம் மந்தையாக இருக்கும்...

பெண்வேடமிட்டு பஸ்ஸில் சென்ற இளைஞருக்கு, பொதுமக்கள் தர்ம அடி...


பெண் வேடமிட்டு பஸ்ஸில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட வேலூரை சேர்ந்த இளைஞர் எபனேசர் என்பவர் ரூ. 650 க்கு பர்தா வாங்கி அணிந்து கொண்டு வேலூர்- சென்னை பஸ்ஸில் ஏறி பெண்கள் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

காற்றில் பர்தா விலகியதால், அவரின் சுய உருவம் கண்ட பெண்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர்...

உடனே பேருந்து நிறுத்தப்பட்டு தர்ம அடி கொடுத்து போலீஸில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர்.

போலீஸிடம் எனக்கு நீண்ட நாட்களாக பெண் வேடமிட்டு பஸ்ஸில் செல்ல ஆசை என அப்பாவியாக கூறியுள்ளார். உண்மையை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்...

பாஜக வை கலாய்த்த பாமக...


வடமாநிலத்திலிருந்து பணிபுரிய வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்குவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி பேட்டி...


வட இந்தியர்கள் குழந்தை கடத்துவதாக வதந்தியால் வட இந்தியர்களை தாக்குவதால் அவர்களை காக்க வடமாநிலத்திலிருந்து வேலைக்காக வந்திருக்கும் வட இந்தியரை கணக்கெடுக்கும் பணியில் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்ட வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்...

ஆதார் எனும் பேராபத்து...


கேட்பாரற்று கிடக்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம்...


தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பாசனத்திட்டமென்று எல்லோராலும் கொண்டாடப்பட்ட பி.ஏ.பி பாசனம் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அலங்கோலமாகி கிடக்கின்றது.

அமரர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது கட்டிய தொகுப்பு அணைகள் போக இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ள ஆனைமலையாறு அணையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டள்ளது.

அதேபோல் அணைகள் கட்டியபோது கட்டப்பட்ட பிரதான வாய்க்கால் இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் செய்யாமல் பாழடைந்து காணப்படுகின்றது.

திருப்பூர் போன்ற நகரங்களில் கட்டங்கள் கட்டிய ஆயக்கட்டு நிலங்களை நீக்கி விவசாயம் நடக்கின்ற நிலங்களுக்கு கூடுதலாக தண்ணீர் தராமல் கேட்பாரற்று தண்ணீர் வீணடிக்கப்படுகின்றது.

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்திற்காக வல்லுனர்கள் குழுவை நியமனம் செய்துள்ள அரசாங்கம் மேற்கூறியவற்றையும் சரி செய்தால் மட்டுமே பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தை நம்பியுள்ள நான்கு லட்சம் ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுவார்கள்

இவண்
ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம்...

பாஜக பினாமி அதிமுக என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் வேணுமா..?


இது சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளிகளின் கூலி போராட்டம்...


ஆனால் அவர்களது கூலி மட்டும் உயராது. குறைந்த கூலி. குடும்பமே உழைத்தாலும் குடும்ப செலவுகளை சமாளிக்க கூட கூலி கிடைக்காது.
நெல்லை மாவட்ட சங்கரன்கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த கூலிப்போராட்டம் நடக்கிறது...

நானும் தான் ஜல்லிக்கட்டுல போராடுனேன்.. அப்ப ஆரம்பிக்கிறேன்டா ஒரு கட்சி...


மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க....


மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று சுண்ணாம்பு சத்து (Calcium) குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது.

எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே சுண்ணாம்பு சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சுண்ணாம்பு சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது. 

என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம்...

தமிழினத்தை திசை திருப்ப வரும் இலுமினாட்டி உளவாளி கமல்...


மனதில் தோன்றுவது. உணர்வு...


நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா? கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..

ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன? என்று யாராவது கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால் அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.

நன்றாக கவனிக்கவும்...

நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.

ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது. உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்..

அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.

சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.

ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.

அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம்.

அவை ‘இவரு ஜெயிச்சுருவாரோம்ல…என்ன கொடுமை சார் இது?’  என கேலி செய்யலாம்.

ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும். விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.

அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.
சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.
வெற்றி மனோபாவத்துடன் நாம்

செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை...

பாஜக மோடியும் தேர்தல் நடிப்பும்...


மரம் நடு பிறகு தெரியும் அதன் பலன்...


அதை வாழும்போதே நமக்கு உணர்த்தி இருக்கிறார்...

விழுதுகள்விட்டு, பரந்து விரிந்திருந்த ஆலமரம்’ - 27 ஆண்டுக்குப் பிறகு தான் வைத்த மரத்தைப் பார்க்கச் சென்ற இளைஞர் பூரிப்புதான் படித்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது தான் நட்ட ஆலமரத்தை 27 வருடங்கள் போய் பார்த்து களித்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது புஞ்சை கடன்பன்குறிச்சி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை என்றாலும், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே கரூர் வந்து செட்டிலாகிவிட்டார். பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வரும் இவர், மரம் வளர்ப்பது, இயற்கையை காப்பது, இயற்கையைச் சிதைக்கத் துடிக்கும் சக்திகளுக்கு எதிராக போராடுவது என்று பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ரோட்டில் ஆதரவற்றவர்களாகக் கிடக்கும் முதியவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதும் இவரது நலமிக்க பணிகளில் ஒன்று. இத்தகைய சாதிக் அலி, தனது பதினோறு வயதில் அதாவது இவர் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது, தனது கையால் பள்ளி வளாகத்தில் ஆலமரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

அதோடு, அங்கு படித்த வரை கோடை காலங்களிலும் தனியொருவனாக அந்த மரக்கன்றுக்குதண்ணீர் ஊற்றி கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்திருக்கிறார். அதன் பின்னே, கரூர் மாவட்டத்துக்கு அவர் இடம் பெயர்ந்துவிட்டதால், அந்த மரக்கன்றை மறந்து போனார். இந்நிலையில், 27 வருடங்கள் கடந்து சாத்தனூர் செல்ல நேர்ந்திருக்கிறது. அப்போது, அவருக்குத் திடீரென தான் படித்த பள்ளியில் நட்ட ஆலமரக்கன்று பற்றி ஞாபகம் வர, ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கே கண்ட காட்சியைக் கண்டு ஆனந்தமாக துள்ளிக் குதித்தார். ஆமாம், அவர் வைத்த ஆலமரக்கன்று இப்போது பெரிதாகி, கிளைகள் பரப்பி, விழுதுகள் விட்டு, பரந்து விரிந்திருந்தது...

தமிழா விழித்துக்கொள்...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது!...


ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்,

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்,

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்,

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்

உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

இந்த அதிமுக அரசால் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சினை...


இலுமினாட்டிகளின் உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...


உலகை ஆளும் இல்லுமினட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வது போல் காட்டிக் கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.. அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை...

இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது...

திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது.

விளைவாக நாம் அதைப் பற்றி அறிய ஆரம்பித்தோம். பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..

அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள் . அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).

ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..

ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்..

இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும்.

ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்.. எப்படி என்கிறீர்களா ?

ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பையன் , அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது , அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி .. ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டுப்பிடித்து , அவரை விபத்துக்குள்ளாக்கி , மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி , அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்.

இது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம் , ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள். பதியாதீர்கள்..

உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்..

அறிவற்ற எந்த இனமும் வாழாது...

அதிமுக செல்லூர் ராஜுவுக்கு காரைக்குடி ஆச்சி அவர்களால் செருப்பு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது...


தமிழன் திராவிடனும் அல்ல.. இந்தியனும் அல்ல...


சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது...

முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?

நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம். இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்.

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது.

தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்.

வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது.

தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்.

கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது.

ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

இதுதான் திராவிடம் செய்த கோலம்..

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது.

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்.. தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...

கச்சத்தீவு தாரைவார்த்ததில் காமராஜர் பங்கு...


திருட்டு திராவிடம்...


ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..

ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.

கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.

பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?

எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...

தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

அம்மா இட்லி சாப்பிட்டாரா என்ற விடை தெரியாத கேள்விக்கு அடுத்து இன்னொரு விடை தெரியாக் கேள்வியும் இணைகிறது.... அது.. யார் அந்த ஹைக் அஃபிசியல்?


லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891...


ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது.

1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது. இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரிதான் என்று உறுதியளித்தனர்.

கூடுதல் தகவல் - இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டபோது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது...

திண்டுக்கல்லை சுற்றி திரியும் கனிமவள கொள்ளையர்கள்...


கன்னட பலிஜா ஈ.வே.ரா வை பிரிந்த தெலுங்கர் அண்ணா துரை.. திக to திமுக...


பெரியார், தம் 72 ஆவது வயதில், 26 வயதுடைய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். இதனை கடுமையாக எதிர்த்த அண்ணா துரை, இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக கூறி திராவிடக் கழகத்திலிருந்து வெளியறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். பிறகு, சிறிது காலம் கழித்து, கருணாநிதியும் வந்து சேர்ந்து கொண்டார் என்பது வரலாறு.

இங்க தான் நமக்கு சந்தேகம்.

இரண்டாவது திருமணம் என்பது அந்த காலத்தில் ரொம்ப சாதாரணமான விஷயம். நம்முடைய முப்பாட்டனுக்கு ரெண்டு மனைவிகள் இருந்த கதை எல்லாம் நமக்கு தெரியும்.

இந்த விஷயத்துக்காகவா, அண்ணா வெளியேறினார்? நம்பற மாதிரி இல்லையே... அதனால் கொஞ்சம் தேடினேன், வரலாற்றை புரட்டிப் பார்த்தேன். எல்லா வரலாறுகளுக்கும் இரண்டு மூன்று வெர்ஷன்ஸ் இருப்பது இயல்பு. அதே மாதிரி தான் இதுவும்.

இன்னொரு தரப்பு சொல்றதையும் கேட்டு, எது உண்மை, எது பொய், நிஜமா என்னதான் நடந்துச்சுன்னு நம்ம யோசிச்சு முடிவு செஞ்சுக்கனும்.

பெரியார், அந்த காலத்திலேயே செல்வச் சீமான். ஆனால் செல்வந்தர்களுக்கே இருக்கும் கஞ்சத்தனம் அவருக்கு ரொம்ப அதிகம். சுருக்கமா சொல்லனும்னா எச்சைக் கையில் காக்காய் கூட ஓட்ட மாட்டார். இது பெரியார் அபிமானிகளுக்கு அவர் கூட இருந்தவங்களுக்கு நல்லா தெரியும்.

வயசு ஆக ஆக, பெரியாருக்கு ஒரு பயம் வந்துச்சு. அதாவது, வாரிசு இல்லாத சொத்தை நம்ம திராவிட கண்மணிகள் ஆட்டையை போட்டுறுவாங்களோன்னு பயந்தார் பெரியார்.

சரி, நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும், மணியம்மையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தார் பெரியார்.

இது குறித்து ஆலோசிக்க, அவருடைய நண்பர் ராஜ கோபாலாச்சாரியை (ராஜாஜி - பார்ப்பனர்), திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினார்.

வாழ்நாள் முழுக்க பார்ப்பன எதிர்ப்பாளியான பெரியார், தமக்கு ஆலோசனை வழங்க எந்த திராவிட நண்பனிடமும் போகவில்லை, மாறாக பார்ப்பனனிடம் சென்றார்.

பெரியாரின் குழப்பத்தைக் கேட்ட ராஜாஜி என்ன சொன்னார்னா..

மணியம்மையை தத்து எடுத்துக் கொண்டால், அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டால், உங்கள் சொத்துக்கள் கை மாறி விடும். ஆகையால், திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்கள் சொத்தை அபகரிக்க முடியாது என்று சொன்னாராம் ராஜாஜி.

இது பெரியார்க்கு சரியான யோசனையாக தோன்றியது. அதன்படி ஜூலை 9,1948 இல் தி.நகரில் ஒரு பிராமணரின் வீட்டில் நடந்தது பெரியாரின் திருமணம்.

ஒரு திராவிட கண்மணிகளுக்கு கூட அழைப்பு இல்லையாம். இப்படி செஞ்சு, பீரோ சாவியை மணியம்மையிடம் ஒப்படைத்தாராம் பெரியார்.

இந்த டிரஸ்டை தான் இப்ப கி.வீரமணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். (கொள்கைகளை அல்ல).

இதுல கடுப்பு ஆகி தான் அண்ணா திராவிட கழகத்தை விட்டு வெளியறி, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தாராம். அதன் பிறகு ஓடி வந்து ஒட்டிக் கொண்டவர் தான் கருணாநிதியாம்.

இதுல எது நம்பற மாதிரி இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

அண்ணா கைல இருந்து என்னவெல்லாம் ப்ளான் பண்ணி கட்சி அதிகாரத்தை கருணாநிதி பெற்றார் என்பது இதை விட பெரிய கதை. அது இன்னொரு பதிப்புல பார்ப்போம்...

குறிப்பு : இந்த ஈ.வே.ரா  தான் தமிழர்களிடம் முதியோர் திருமணத்தை ஆதரிக்காதீர்கள் என்று சொன்ன திராவிட பகுத்தறிவாதி...

இதுக்கு மேலயாடா காரணம் வேணும்..?


இலுமினாட்டி - மெர்லின் மன்றோ கொலை...


மெர்லின் மன்றோ 1950 களில் பலரின் கணவு கண்ணியாக திகழ்ந்த பேரழகி. ஆலிவுட்டில் மிகப்பெரிய நடிகை...

கொலை : ஆகத்து  , 5 , 1962 (வயது:36).

இறப்புக்கு சொல்லப்படும் கதை : அதிக அளவு போதை பொருள்/ மாத்திரை,  தற்கொலை..

இந்த அழகி அமேரிக்க அதிபர் ஜான்.F. கென்னடி யின் ஆசை நாயகியாக இருந்துள்ளார். நம் மன்னர்களின் அந்தப்புர அழகி போல இவர் அதிபருக்கு இருந்திருக்கிறார். மேலும் ஜான் கென்னடியின்  சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மெர்லினுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கென்னடி என்பது இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

மெர்லினின் வீட்டு சமையல் காரி சொன்ன சாட்சியம் உறுதி இல்லாமல் இருக்கிறது. அவரின் தொலைப்பேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. படுக்கை கலைய வில்லை. மாத்திரையை சாப்பிட பயன்படுத்திய தண்ணீர் குவலை இல்லை. ஒரு தம்ளர் மட்டும் படுக்கை கீழ் எரியப்பட்டுள்ளது. மெர்லினின் நாள் குறிப்பேடு காணவில்லை. மெர்லினின் மருத்துவரை அழைத்ததாகவும் சன்னலை உடைத்து உள்ளே சென்றதாகவும் அதற்குள் மெர்லின் இறந்து விட்டதாகவும் வேலைக்காரி சொல்கிறார். ஆனால் சன்னல் வெளியே இருந்து அல்ல உள்ளே இருந்து உடைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சந்தேகம் இருந்தும் தற்கொலை என வழக்கு மூடப்படுகிறது.

கொலைக்கு காரணங்கள்...

ஜான் கென்னடியோடு இருந்த நெருக்கத்தில் மெர்லின் எதையோ கண்டு பிடித்திருக்கிறார். அதோடு அதை வெளியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஜான் கென்னடியும் மனம் மாறி இலுமினாட்டிகளை பற்றி பொது வெளியில் பேசி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது...

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் உண்மைகள்...


அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தம்ர்...


கி மு 320 ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல் நாடுகள் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அழகிய பெண்கள், அந்நாடுகளின் சொத்துகளை தமது நாட்டுக்கு எடுத்து சென்று சுகமாக வாழுதல் என்னும் கொள் கை யில் குமரி கன்னடம் என்று சொல்லப்பட்ட இன்றைய இந்தியாவில் இருந்து செல்வங்களை அள்ளி வரக் கனவு கண்டார் பிலிப்.  ஆனால், அது நிறைவேறவில்லை. அவருடைய கனவை மகன் சுவீகரித்துக் கொண்டிருந்தான். ஆசைக்கும், கனவுக்கும் ஏது எல்லை என்பது போல மண் ஆசையும் பொன் ஆசையும் பெண் ஆசையும் இவர்களையும் விட்டு வைக்கவில்லை .

அலெக்ஸாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள விரும்பினான். கிழக்கின் எல்லை என்று இந்தியாவின் வரைபடத்தைக் கொண்டு வரைசெய்து இந்தியாவை அதன் புவியியல் நிலைகளை ஆராய்ந்தான். கம்பீரமான இமயமலைத் தொடர் பாய்ந்து ஓடும் பல் நதிகள் அடர்ந்த காடுகள் அந்த நாட்டின் காப்பரணாக இருப்பதைக் கண்டான். இயற்கையே அமைத்திருந்த வானுயர மதில் சுவர்! போல இமையமலை தொடர் , அதைக் கடந்தால் தான் இந்திய மண்ணில் காலடி வைக்க முடியும். எங்கே, எப்படிக் கடப்பது. இதுதான் அளச்சன்டரின் மிக பெரிய கேள்வி . அந்த மலையரணில் இரண்டு குறுகிய பாதைகள் தென்பட்டன. அவை கைபர் மற்றும் போலன் கணவாய்கள். ஆம் அவைதான் இலகுவான வழி . இந்தியா நோக்கி படை எடுத்து வரும் வழியில் உள்ள பலநாடுகள் அலெக்ஸ்சண்டருடன் போரிட்டு மடிந்தன மீதம் உள்ள நாடுகள் பலவும் யுத்தமின்றி அலெக்ஸ்சண்டருக்கு வழி விட்டன.

இமைய மலைத் தொடரைக் கடக்கும் முயற்சியில் அவருடைய படைகள் ஈடுபட்டன. அவரிடம் இருந்த மாசிடோனிய வீரர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரம் மட்டுமே. அலெக்ஸ்சன்டரின் உளவாளிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து திரட்டிய தவல்கள் அலெக்ஸ்சண்டருக்கு பெரும் வியப்பாக இருந்தது. சோழர் படைகள் வலுவாக் இருந்தன . மாமன்னன் புருசோத்தமன் அலெக்ஸ்சாண்டர் படைகளை சந்திக்க தயாராக உள்ளார் என்ற செய்தியும் அலேச்சண்டரை மேலும் சீற்றம் கொள்ளவே செய்தது தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட  பெர்ஸிய நாட்டு மன்னனருடன் இளைஞர்களில் 30 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய படையில் அவர் சேர்த்துக் கொண்டார். தற்போது படை பலமுடையதாகிவிட்டது.

ஆனாலும் சோழர்கள் 2 லட்சம் காலால் படையையும் 20 ஆயிரம் குதிரை படைகளையும் நான்கு குதிரை பூட்டிய தேர்படை 2000 இதற்கெல்லாம் மேலாக வேல் ஏறிய கூடிய யானை படை 3000 இருந்தது. சோழர்கள் தமது யானை படைகளை மிக இரகசியமாக் வைத்து இருந்தார்கள் அதனை அலெக்ஸ்சாண்டர் முழுமையாக் அறிந்து இருக்கவில்லை. சிறிய அளவில் 500 யானைகள் தான் இருக்கும் என்ற கணிப்பே அலேச்சண்டரிடம் இருந்த்தது.

இந்தியாவை நெருங்கி காபூலில் முகாமிட்டிருந்த அலெக்ஸாண்டருடைய படை இந்து குஷ்மலைத் தொடரைக் கடந்தது. தற்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை அவர்கள் முதலில் கைப்பற்றினர். அப்போது அப்பகுதியில் இருந்து சோழர் படை தந்திரோபாய பின் வங்களை செய்து இந்து நதியின் தென் கிழக்காகா ஒரு இடத்தில் தாமது படைகள் குவிந்து இருப்பது போல பவனை செய்து இரவு வேளைகளில் மிக பலம்மான யானை அணிகளை வடக்காக் நகர்த்தி இருந்தார்கள் . அலெக்ஸ்சண்டருக்கு தென் கிழக்கில் மட்டுமே சோழ படை மிக வலுவாக உள்ளது போன்ற ஒரு தோற்றம் கண்பிக்க பட்டது.

அலெக்ஸாண்டரின் படை, ஆற்றல் மிக்கது; முறையான பயற்சியே அவர்களுடைய ஆற்றலுக்குக் காரணம்.
மாசிடோனியர்களை கொண்ட தனது படையை பழைய படை என்றும், பெர்ஸிய இளைஞர்கள் கொண்ட படைப் பிரிவை பின்தோன்றல்கள் என்றும் அலெக்ஸாண்டர் அழைத்தார்.
பின்தோன்றல்களிடம் வலிமை இருந்தும், போர்ப் பயற்சி இல்லை. அவர்களில் பலருக்கு இந்தியாவில் கிடைக்கக் கூடிய பெருஞ்செல்வம் அழகிய பெண்கள் பற்றி ஆசை காட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் படையில் சேர்ந்தவர்கள். பயிற்சி இல்லாமல் அவர்களை பயன்படுத்த முடியாது. எனவே, காபூலில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போர் பயிற்சியளித்தார் அலெக்ஸாண்டர். இதனால் அவருடைய படை முழுமையான போர்வீரர்கள் கொண்ட படையாகி விட்டது.

அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒரு பிரிவைத் தனது நன்பன் ஹெபாஸ்டியன் தலைமையின் கீழ் அனுப்பினார். அந்தப் படை கைபர் கணவாய் வழியாக, சிந்து நதிப் தென் பிராந்தியம் பிரதேசத்தை நோக்கிச் சென்றது. மற்றொரு பிரிவுக்கு அலெக்ஸாண்டரே தலைமை தாங்கினார். அந்தப் படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் வடக்கு பக்கமாக இருந்த மலைச் சாரல் வழியாக உல் நுழைந்தது மலை சாதியினரை எதிர் கொண்டது.மலைச் சாதியினர் பலசாலிகள், முரட்டுத் தன மான தாக்குதல்களை செய்தார்கள் அவர்களுடன் புருசோத்தமரின் மைத்துனர் குலகோட்டன் தலிமையில் அங்குதான் சோழரின் குதிரை படைகளும் நின்றன . மிகவும் பயற்சி பெற்ற மலைச்சாதி இளைஞசர்கள் தாய்மண் காக்க சோழன் படையில் இணைந்து இருந்தார்கள். குளக்கோட்டன் படயின் ஒரு தபதியாக மாகதன் என்னும் தளபதி அலெக்ஸ்சன்டரின் படைகளை ஓரளவு உல் நுழையவிட்டு இடையில் குருகருத்து தாக்கினார். அத்தாக்குதலே முதல் முறையாக அலேச்சண்டரை மிக பெரிய தோல்விக்குள் தள்ளியது .

இன்னும் ஒரு பகுதியில் ஹஸ்தி என்கிற மலைச் சாதித் தலைவன் பெருவீரம் காட்டி அலெக்ஸாண்டரை எதிர்த்தான். அவன் புஷ்ப கலாவதி என்கிற தலைநகரைக் கொண்ட சிறுநில பகுதிக்கு மன்னன். மாசிடோனிய படை தொடர்ந்து இருபது நாட்கள் போர் செய்ய வேண்டியிருந்தது. கடுமையான போருக்குப் பிறகு மசொடோநியர்கள் பெரும் அழிவை சந்தித்து இருந்தார்கள் . இதுவராய் தாம் கண்டிராத தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் புதுமையான உத்திகள் தமிழனின் வீரம் அலெக்ஸ்சண்டருக்கு வியப்பாக் இருந்தது.

இதுவரைக்கும் யானைகள் ஏதும் அவன் கண்ணில் படவில்லை. அலெக்ஸ்சந்தர் மிக பயிற்றுரவித்த நாய்களை பயன் படுத்தினான். அக்காடுகளில் நாய்களே அவர்களுக்கு வழி காட்டும் வீரராக இருந்தன.

இந்தியாவின் வளமான காடுகள் மலைகள் நதிகள் அலேச்சண்டரை கவர்ந்தது. இந்தியாவை வென்று இங்கேயே இர்னுந்து விட வேண்டும் என்று எண்ணினான் . இந்தியாவை வளமான நாடு என்பதையும், அது தமிழரின் வீரத்தின் விளைநிலம் என்பதையும், அலெக்ஸாண்டர் முன்பே கேள்வி பட்டிருந்தான் . ஆனால், அங்குள்ள பல மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. அந்தப் பெரிய நிலப்பரப்பு பல சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியாவுக்கு வந்ததும்தான் தெரிந்து கொண்டார். தன்னுடைய நோக்கம் எளிதில் நிறைவேற நிலைமை சாதகமாக இருப்பது அவருக்குப் புரிந்தது. அதனால் அலெக்ஸ் சந்தர் சில மன்னர்களை இரகசியமாக சந்திக்க தனது ஒற்றர்களை அனுப்பி வைத்தான் . போராடி வெல்வதில் சிரமனகள் நிகழும் நிலை தோன்றியது . தென் கிழக்கு படையுடன் இணையும் நாள் தாமதம் ஆகியது. தான் வரும் வழி எல்லாம் தன்னை எதிர்த்த சிற்றரசர்களைப் புறங்கையால் தள்ளிக் கொண்டு முன்னேறினான் அலெக்ஸாண்டர். பாகிச்தனம் வரை அதே நிலைதான் ஆனால் இப்போது மிக பெரிய சவாலை சோழர் தலைமயில் இருக்கும் இந்திய படைகளை கொடுக்க தொடங்கியது .

அடுத்து, தட்சசீலம் என்ற குறுநில அரசுக்குள் அலெக்ஸாண்டரின் படை நுழையும் திட்டத்தில் இறங்கியது அது சிந்து நதிக்கும், ஜீலம் நதிக்கும் இடையே பரவியிருந்த நிலப்பரப்பு. தட்சசீலத்தை, அம்பி என்கிற மன்னன் ஆண்டு வந்தார். அவன் மன்னன் புருசோத்தமன் மீது காழ்ப்புணர்வு கொண்டு இருந்தான் . அலெக்ஸ்சாண்டர் எப்படியாவது புர்சொத்தனை அடிமைகொள்வான் . அலேச்சனடருக்கு உதவினால் தான் வரும் களத்தில் பெரும் மன்னனாக ஆகிவிடலாம என்று கனவு கண்டான் . அவனது எல்லை தாண்டினால் புருசோத்தமன் படைகள் தயாராக இருந்தன . அங்குதான் 2000 யானைகள் நிலை எடுத்து மிக துல்லியமாக ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக் இருந்தன . அந்த யானை படைகளுக்கு தலைமை ஏற்று கரிகால் சோழன் பேரன் மனுநீதி சோழன் தயாராக இருந்தார்.

அதற்கடுத்ததாக ஜீலம் நதிக்கும், செனாப் நதிக்கும் இடையிலான பகுதியை மன்னர் போரஸ் என்ற புருசோத்தமன் ஆட்சி செய்துவந்தார். சற்று தள்ளி ரவி, பியாஸ் நதிகளின் பக்கம் மாலி என்கிற மாளவர் களின் தேசம் இருந்தது. காமரூபம், வங்கம், மகதம் என்று வட இந்தியாவிலேயே பல ராஜ்யங்கள் சோழ மண்டல கொடியின் குடைக்குல் ஆண்டு வந்தன.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டரை தங்கள் பொது எதிரியாக பாவித்து, வட இந்திய மன்னர்கள் ஒன்று கூடி எதிர்த்திருந்தால், அலெக்ஸாண்டரின் கதை ஒரே நாளில் முடிந்து விட்டிருக்கும். ஆனால், அவர்களோ யார் வந்தால் என்ன? எது நடந்தால் என்ன? என்று அக்கறை யில்லாமல் இருந்துவிட்டனர். வந்த வேலை எளிதாக முடியும் என எண்ணி மகிழ்ந்தார் அலெக்ஸாண்டர்.

அன்று தமிழர் படையே மிகவும் உக்கிரமான போரை தொடுத்தது . தட்சசீல மன்னர் அம்பிக்கும், அரசர் புருசோத்தமர பிடிக்காது அவரது வீரமும், நிர்வாகத் திறமையும் அவர்மீது பொறாமையை ஏற்படுத்தியிருந்தன.
அலெக்ஸாண்டர் பெரும்படையுடன் அம்பி தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி தமது ஆதரவை அறிவித்து இருந்தார். கிரேக்கத்தில் இருந்து இவ்வளவு தூரம் படை நடத்தி வர முடிந்ததென்றால், வந்திருப்பவர் பெரிய வீரனாகத்தான் இருக்க வேண்டும். பல வெற்றிகளைக் குவித்த பின்பே இங்கு வந்திருக்கிறார் என்று புரிந்துக் கொண்டார்.

அப்படிப்பட்டவரை எதிர்த்தால் அழிவு நிச்சயம். நாம் ஏன் இவரைக் கொண்டு, போரஸின் மீது நமக்குள்ள பகையை தீர்த்துக் கொள்ளக் கூடாது? என்று திட்டமிட்டார் அம்பி. தனது எல்லை நாட்டில் காலடி வைத்த அலெக்ஸாண்டரை அவர் இரு கை நீட்டி வரவேற்றார். அவருக்கு மாலை அணிவித்து, மதிப்புமிக்க பரிசுகளைக் காணிக்கையாக்கினார். நான் உங்கள் நண்பன், உங்களை இந்நாட்டின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டார்.

அலெக்ஸாண்டரும் பதிலுக்கு சில பரிசுகளை அம்பிக்கு வழங்கி, அவருடைய நட்பை ஏற்றார்.
அலெக்ஸாண்டர் அம்பியின் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டார். அம்பி தன் அக்கம் பக்கத்தில் உள்ள சிற்றரசர்கள் சிலரையும் கூட்டி வந்து அலெக்ஸாண்டரிடம் சரண் அடையச் செய்தார்.

அலெக்ஸாண்டர் அம்பி இடையேயான நட்பு அன்பால் விளைந்ததல்ல. ஆதாயம் கருதிய கூட்டு அது. அம்பி மூலம் நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கொண்டார் அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டர் மூலம் போரஸ்ஸை அழிக்கலாம். முடிந்தால் போரஸின் நிலப்பகுதியையும் அலெக்ஸாண்டரிடம் இருந்து பரிசாகப் பெற்றுவிடலாம், என்பது அம்பியின் எண்ணம்.
நம்முடைய படையெடுப்பு தட்சசீலத் தோடு நின்றுவிடலாம். இங்கே நாம் வெற்றி கொள்ள வேண்டிய மாநிலங்கள் இன்னும் பல இருக்கின்றன என்று எண்ணினார் அலெக்ஸாண்டர். எல்லாருமே அம்பி மாதிரி சரணடைந்து விட மாட்டார்கள். வீரத்துடன் எதிர்த்து நிற்கக் கூடிய அரசர்களும் இங்கே இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிந்தார்.

காட்டிக் கொடுத்த அம்பி இந்திய வரலாற்றில் ஒரு களங்கம். அந்நியனுக்கு இடமில்லை, என்று வீறு கொண்டு எழுந்த புருசொத்தமர் தமிழரின் மனம் காத்த மறவர் தமிழர் வரலாற்றின் பெருமிதம்.அன்று தமிழன் ஆண்ட நிலப்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் வரை அகண்டு இருந்தது ஆகும். புருசொத்தமர் வீரம் மிக்கவர். அவரிடம் வடக்கே ஐயாயிரம் பேர் கொண்ட குதிரை படையும், போர்பயிற்சி பெற்ற 3000 யானைகளும் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் யானைப் படை இல்லை. அம்பி தன்னுடைய யானைப்படையை அலெக்ஸாண்டருக்குக் கொடுத்து உதவத் தயாராயிருந்தார். அத்துடன் புருசொத்தமர் படைபலம் பற்றிய அத்தனை விவரங்களையும் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்துவிட்டார்.
அலெக்ஸாண்டர் தன்னுடைய தூதனை புருசொத்தமரிடம் சென்று சமாதானத்தை விரும்பினால் தன்னை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்!' என்று தூதன் மூலம் தெரிவித்தார்.
புருசொத்தமர், அந்நியருக்குத் தலை வணங்கும் அவசியம் தனக்கில்லை. தான் போருக்குத் தயார் என்று தெரிவித்து விட்டார்.

அம்பியின் மூலம் படகுகளை ஏற்பாடு செய்து கொண்டு, சிந்து நதியைக் கடந்தார் அலெக்ஸாண்டர். சிந்து நதிக்கரையில் தனது படைகளுடன் முகாமிட்டார்.

போருக்கு முன் வேடிக்கை, விளையாட்டு, விருந்து என்று ஓய்வெடுத்து அவருடைய படை ஏறத்தாழ ஒரு மாதகால ஓய்வை அனுபவித்தனர். அந்த அவகாசத்தில் போரஸ் தன்னுடைய படையைத் திரட்டினார். அவருடைய தோழமை நாடுகளில் இருந்தும் படைகள் வந்து இணைந்தன.

போரஸ் மன்னன் போருக்கு அறை கூவல் விடுவித்த செய்தியை தூதன் மூலம் அறிந்தார் அலெக்ஸாண்டர்.
ஜீலம் நிதியைக் கடந்து தான், எதிரியைத் தாக்க முடியும். மறுகரையில் போரஸின் படை, தாக்கும் முனைப்புடன் நின்று கொண்டிருந்தது.

அலெக்ஸ்சன்டரின் தந்திரங்களை புருசொத்தமர் அறிந்து இருந்தார் . அவர்களது தாக்குதல் முறைகள் பற்றி ஏற்க்கனவே போர்காலங்களில் இருந்து தப்பிவந்த மன்னர் பலரும் புருசொத்தமரிடம் தஞ்சம் அடைந்து இருந்தார்கள் . புருசொத்தமர் மிக தந்திரமாக தனது படை பிரிவு ஒன்றை அம்பியின் நாட்டு எல்லைக்குள் அனுப்பி அங்கிருந்த நா ட்டு விசுவாசிகளை திரட்டி வைத்து இருந்தார் சரியான் நேரத்தில் அவர்கள் அம்பியின் அரண் மனை மீது தகுத்த நடத்தி அம்ம்பியை சிறைபிடிக்க தயாராக இருந்தார்கள்.

அலெக்ஸ்சாண்டர் இரவு ஒருநாள் தனது படைகளை ஆற்றை இரகசியமாக கடந்து சென்று புருசோத்தமன் படைகளுக்கு பின்வலம்மாக நிலை எடுக்க பணித்தான். ஆற்றை கடப்பது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை புருசோத்தமன் எப்போதும் தனது எல்லைகளை மிக அவதானமாக காத்து வந்தார். அங்காங்கே சில் குடியிருப்புகள் இருந்தன அவற்றை கடந்து படைகளை உள் நுழைவது கடினம். ஆற்றை கடக்க இலகுவான் இடமாக் ஆற்றின் நடுவே இரண்டு தீவுகள் உள்ள பகுதி தேர்வானது. முதல் நாள் இரவின் இருட்டில் முதல் தீவை கடப்பது மறுநாள் இரவு இருட்டில் சோழர் எல்லைக்குள் நுழைவது. மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு இடத்தில் நகர்வுக்கான ஆயத்தங்கள் செய்வது போல் பாசாங்கு காட்டப்பட்டது ஆனாலும் சோழர்கள் எந்த சவாலையும் சந்திக்க படைகளை எங்கும் பல தளபதிகள் தலைமையில் தயாராக வைத்து இருந்தார்கள் . எல்லைக்குள் ஊடுருவிய படைகள் சோழரின் ஒற்றர்கள் கண்களில் தப்பவில்லை .
யுத்தம் தொடங்கியது குதிர படைகள் காடுகளை மிக வேகமாக் ஊடறுத்து அம்புகளை சென்றன காடுகளை உடைத்தபடி யானைகள் பிளிறி கொண்டு நலாபுறமும் இருந்து வந்தன லேச்சண்டர் படை செய்வது அறியாது சிதறி ஓட அம்பியின் அரண்மனியும் சோழர் வசம் ஆனது . 3000 யானைகளின் சீற்றத்துள் அலெக்ஸாண்டரின் குதிரைபடைகள் பதிக்கு மேல் அழிந்தன . மாநிதி சோழன் படைதலபது எறிந்த வேல் அலெக்ஸ்சன்டரின் பாதி உயிரை குடித்தது விசம் தடவிய வேல் பட்டது அலெக்ஸ்சாண்டர் வீழ்ந்தான்....

அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது . போர் நிருத்தபடுகின்றது . அலெக்ஸ்சன்டரின் தெற்கு நோக்கிய படைபிரிவின் தலைவன் அலெக்ஸ்சன்டரின் நண்பன் ஹெபாஸ்டியன் கொல்படுகின்றான் அவனது வாளை புருசோத்தமன் அலேச்சண்டரிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்துகின்றான். விஷம் அழமாக அலேச்சண்டரின் உடலில் பாய்ந்து இருந்தது. அவன் மிகவும் துன்பபடுகின்றான்.... நாடு அவனது பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது...

ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தமர்.. அலெக்ஸ்சாண்டர் மீளமுடியாத விளுபுண் உவதையில் வீரசொர்க்கம் அடைகின்றான்...

மகாராஷ்ட்ரா ஏடிஜிபி தற்கொலை...


தமிழின் சிறப்பு - அகரத்தில் ஓர் இராமாயணம்...


ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.

அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.

அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?

அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்.

அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான்.

அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே.
அப்படியிருக்க
அந்தோ.
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.

அங்கேயும்
அபாயம்.
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்.

அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.

அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.

அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்.

அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.

அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.

அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம்,
அசாத்தியமான
அதிசாகசம்.

அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.

அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.

அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.

அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .

அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்...

எம் தமிழினமே விழித்துக்கொள்...


உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?


இல்லையென்றால் படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.

இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... உடல் கட்டுப்பாடை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

முயற்சி செய்து பாருங்கள் உடல் கட்டுப்பாடு கண்டிப்பாக தெரியும்...

பாஜக பினாமி அதிமுக வின் அடிமை அரசியல்...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 12...

சத்திய யுகத்தின் வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 12-ம் பகுதியாகும். இது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.



தீர்க்கதரிசனங்கள் யாவும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இந்த காலத்தின் சூழ்நிலைகளை எவராலும் கணிக்க முடியாத அளவில் நிகழ்வுகள் நடக்கப் போவதாக 12-ம் தீர்க்கதரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு ஒரு செய்தியை குறிப்பிடுகின்றது. அதாவது வரக்கூடிய சுனாமி, மழை, புயல் என இயற்கையின் பேரிடர்களை இனி ஆராய்ச்சியாளர்கள் கூட கணிப்பது தவறாக இருக்கும் என்றும், ஆனால் சத்திய யுக தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


மலை ஏறி உயிர் துறந்த மாணவ மாணவிகளைப் பற்றி ஒரு அரிய செய்தியினை தற்போது ஊடகம் ஒன்று வெளியிடும் என்றும், அது தமிழக மக்களிடையே பல வியப்புகளையும், ஆச்சர்யங்களையும், மனக்குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்றும், உயிர் துறந்த மாணவி ஒருவரின் பேச்சுக்குரல் பதிவே இதற்கான விடையை கொடுக்க உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



திருச்செந்தூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்றும், இங்கு கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் இனி தொடர்ந்து நடக்கும் என்றும், இதனால் மக்களிடையே பெரும் பீதிகள் உருவாகி பெரும் கவலையை ஏற்படுத்தும் சமயத்தில் “ஸ்ரீ முருகபெருமானின்“ அற்புதம் ஒன்று மக்களிடையே வெளிப்படும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


பட்டினத்தார் பிறந்த ஊரிலிருந்து புதுமையான, விந்தையான செய்தி ஒன்று மக்களிடையே பிரபலமடையும் என்றும், இது சித்தரின் சித்து விளையாட்டாக அமைய உள்ளதாகவும், இதனால் இவ்வுலகம் மறுபிரவேசத்திற்கு ஆயத்தமாகி வருகிறது என்று உண்மையாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி, ஏற்காட்டில் உள்ள பட்டிப்பாடிவேலூர் போன்ற ஊர்களில் சில அதிசயங்கள் நடந்து பெரும் ஆச்சர்யங்களை மக்களிடையே ஏற்படுத்த உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

துன்பம் தரக்கூடிய ஏதும் இவ்வுலகில் நிரந்தரம் இல்லை என்பதற்கு ஏற்றாற் போல் மக்களை துன்புறுத்தி வரும் ஒரு அரசு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகப் போவதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சிங்கப்பூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய நாடு என்றும், இங்கு பல மோசமான நிகழ்வுகள் அரங்கேற்றம் ஆகிட உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வை இங்கே எடுத்துக் கூறுகிறது.



பாகிஸ்தான் நாட்டில் இனக்கலவரம் ஒன்று தற்போது தீவிரம் அடையும் என்றும், அங்கு தீவிரவாத செயல்கள் அதிகம் தலைவிரித்து ஆடும் என்றும், அந்நாட்டின் மீது இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் இறங்கிட உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு நிகழ்வின் உண்மைத் தன்மையை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.



மன்னார் வளைகுடா புயல் தற்போது உருவாகி வருகிறது என்றும், இதன் தாக்கம் 270 KM வேகத்திலிருந்து 340 KM வேகத்திற்கு இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம்  இங்கே மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியினை வெளியிடுகிறது.


காலத்தால் அழியாத காவியமான  அன்னை ஆதிசக்தியின் பிரபஞ்ச வெளிப்பாடு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், இதனை அறிய முடியாது, ஆனால் மக்கள் உணரும்படி இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


உலக மக்களின் வாழ்வதார சூழ்நிலைகள் யாவும் இனி படுமோசமாக இருக்கும் என்றும், இக்கால கட்டத்தை “பிரபஞ்சத்தின் ஒரு சூழல்“ என வர்ணிக்கும்படியான நிகழ்வாக அமைய உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பழமொழியை நிருபிக்கும் வகையில் சீனாவின் செயலை உலக நாடுகளில் சில நாடுகள் பாராட்டும் என்றும், பல நாடுகள் அதனை எதிர்க்கும் என்றும், இதனால் இந்தியா, சீனா இடையே பெரும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு 90 % வீதம் இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

உண்மைகள் உறங்குவதில்லை என்கிற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற 8-ம், 9-ம் தீர்க்க தரிசனங்களின் குறிப்புகள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


புத்தனின் மறுபிரவேசம் இந்த இந்திய பூமியில் மீண்டும் நடக்க இருப்பதாகவும், தர்மத்தின் நீதி இவ்வுலகை ஆட்சி செய்யும் காலமாக தற்போது உருவாகி வருகிறது என்றும், புத்தர் ஞானம் அடைந்த இடத்தில் ஒரு மாபெரும் அதிசயம் உடனே நடக்க உள்ளதாகவும், அப்பொழுது சீனா மீது இறைவனின் நீயாயத் தீர்ப்பு உடனே இறங்கிட உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வினை இங்கே பதிவு செய்கிறது.


காவியத்தின் நாயகன், காலத்தின் பிதாமகன், சத்திய யுகத்தின் பிரஜாதிபதி என வர்ணிக்கப்படும் ஒருவனின் ஆன்மா இவ்வுலகையும், பிரபஞ்சத்தினையும் தனது காலப் பயணத்தால் சுற்றிவிட்டு மறுபிரவேசக் கொள்கையின்படி அதன் சரீரத்திற்குள் பிரவேசம் காண உள்ளது. அன்றைய தினத்தில் உலகம் மாபெரும் வியப்பான சம்பவத்தை காணும் என்றும் உலகை வழிநடத்தும் ஒருவன் தமிழகத்தில் உருவாகி விட்டான் என உலக மக்கள் எண்ணப் போகிறார்கள் என 12-ம் தீர்க்கதரிசனம் சத்திய யுகத்தின் நிகழ்வினை முன்கூட்டியே இங்கே பதிவு செய்கிறது.


தர்ம யுத்தம் ஒன்று தமிழகத்தில் உடனே நடக்க உள்ளதாகவும் இனி அது போராட்டங்களாக மக்களிடையே வெடிக்க உள்ளதாகவும், இதுபோன்ற போராட்டங்களை தமிழக மக்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள் என 12-ம் தீர்க்கதரிசனம் தமிழகத்தில் வரப்போகின்ற ஒரு சம்பவத்தை இங்கே முன்கூட்டியே பதிவு செய்கிறது.

தமிழக ஆன்மீக வரலாற்றில் இனி பல அரிய நிகழ்வுகள் நடக்க உள்ளதாக இறைக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பல அதிசயங்களை மக்கள் காணச் செய்ய உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


இந்திய மண்ணில் இனி இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்றும், அவை நடக்கும் காலமாக தற்போதைய காலம் இதுவாக இருக்கும் என்றும், ஆட்சியாளர்களுக்கும் இது போதாத காலம் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது. அதற்கான அத்தனை விஷயங்களும் தற்போது உருவாகி விட்டது என்றும், இதன் எதிரொலியாக காஷ்மீரில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்க உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு நிகழ்வினை இங்கே குறிப்பிடுகின்றது.


பாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமியில் பல அரிய பொக்கிஷங்கள் இனி பூமியிலிருந்து வெளிப்படும் என்றும், இதன் அர்த்தங்கள், கதை வடிவங்கள் ஒவ்வொன்றும் வரக்கூடிய சத்திய யுகத்தை தெரிவிக்கும் ஊடகங்களாக இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே தெரிவிக்கின்றது.



பாமரனும் பண்டிதன் ஆகும் காலமாக இனி வருங்காலம் இருக்கும் என்றும், தமிழகத்தில் கல்வியின் தரம் இனி உயர்வாக இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய செய்தியினை இங்கே பதிவு செய்கிறது.

சத்திய யுகத்தின் நிகழ்வுகள் இனி ஒவ்வொன்றாக நிகழத் துவங்கும் என்றும், அது நடக்கும் சமயத்தில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட 39-ம் தீர்க்கதரிசனம் மெய்படும் காலமாக அப்பொழுது இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை ஆழமாக இங்கே பதிவு செய்கிறது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 9-ம் தீர்க்கதரிசனப் பகுதியும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.


உண்மையின் வெளிச்சம் இந்த உலகத்தின் மீது விடிவெள்ளியாக வரத்துவங்கி விட்டது என்றும், இதுவே நமக்கான நம்பிக்கை துளிர்விடும் காலம் என்று இறைக்குறிப்புகள் தெரிவிப்பதாக 12-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை ஆழமாக இங்கே பதிவு செய்கிறது.

இறைவனின் திருமுகத்தை காண கண்கோடிகள் தேவை. அதில் நமது கண்களும் இடம்பெற கண்ணாக காத்திருப்போம்.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...