25/09/2017

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்...


1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).

8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை).

31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

32.முகம் அழகுபெற திராட்சை பழம்.

33.அஜீரணத்தை போக்கும் புதினா.

34.பிளட் சுகரை விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.

35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

36.மஞ்சள் காமாலை விரட்டும் கீழாநெல்லி.

37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் வாழைத்தண்டு.

38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்...

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்...


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்..

விளக்கம்:

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார்.

ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது.

அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது.

அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும், ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்..

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது?

பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும் (ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.

அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"

ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.

இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி..

இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை, பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை.

ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.

அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை...

தமிழர் முகமூடியில் உள்ள தெலுங்கு திருகுவாதிகள் பட்டியல்...


பிரிட்ஜில் எவ்வளவு காலம் உணவுகளை வைக்கலாம்?


செய்யக் கூடாத விஷயங்கள்...

1. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

2. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.

3. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.

4. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

5. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.

6. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

7. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!

ஃபிரிட்ஜ்... உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க...

சூரியனும் உணவும்...



பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது NASA.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு NASA வே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.

Sun Gazing அல்லது Sun Eating என்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.

காலணி ஏதும் அணியாமல் நேராக நின்றுகொண்டு சூரியனை பார்க்க வேண்டும்.

சூரிய உதயத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோதான் இதனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு வசதியான ஏதேனும் ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ.

முதல் நாள் பயிற்சியில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்.

இப்படி பத்து பத்து வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு தொடர மூன்று மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்.

இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்.

இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படாது.

இந்த பயிற்சியை செய்யத் தொடங்கிய நாள்முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத சக்திகளை பெற்றுத் தரும்.

இனி நீங்கள் எதையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை...

நிலநடுக்கம் எச்சரிக்கை...


மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பி.கே.ரிசர்ச் அசோசியேஷன் ஃபார் இ.எஸ்.பி. என்ற நிறுவனம் பிரதமருக்கு எச்சரிக்கை...

ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? - பாமக நிறுவனர் Dr ராமதாஸ் அறிக்கை...


வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என மத்திய அரசு கூறிவரும் போதிலும், கள நிலைமை அதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. சில தனியார் பணம் வழங்கும் வங்கிகள் செய்யும் தவறுகளால் ஏழை அப்பாவி மக்களுக்கு செல்ல வேண்டிய அரசு மானியங்கள், அவர்களுக்கே தெரியாமல் தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு எண், நிரந்தர கணக்கு எண், செல்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இது தனியுரிமையை மீறிய செயல் என்பது ஒருபுறமிருக்க, இந்நடைமுறையில் சில தனியார் நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகளால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக செல்பேசி சேவை வழங்கும் ஏர்டெல் நிறுவனம், பணம் வழங்கும் வங்கி சேவையையும் (Payment Bank) நடத்தி வருகிறது. செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்காக வாடிக்கையாளர்கள் செல்லும் போது, அதற்கான நடைமுறையுடன் சேர்த்து, பணம் வழங்கும் வங்கி சேவைக் கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகளையும் ஏர்டெல் நிறுவனம் செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பெயரில் ஏர்டெல்  பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு விடுகிறது. ஆதாரும் அதனுடன் இணைக்கப்படுகிறது.

ஆதார் தொடங்கப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு அடையாளம் வழங்குவது தான் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அரசின் நலத்திட்டங்களும், மானியங்களும் பயனாளிகளுக்கு செல்வதையும், அதற்காக பயனாளிகளை அடையாளம் காட்டுவதற்கான கருவியாகவும் தான் ஆதார் பயன்படுகிறது.  ஆதார் மூலம் அரசின் பயன்களை நேரடியாக வழங்கும் நடைமுறையில் வினோதமான நடைமுறை ஒன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நிலையில், அவரது ஆதார் கடைசியாக எந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறதோ, அந்தக் கணக்கில் தான் அரசின் மானியங்கள் வரவு வைக்கப்படுகின்றன.

ஏர்டெல் செல்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும் போது, அந்நிறுவனத்தின் பணியாளர்கள்  வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல், அவர்களின் செல்பேசி எண்ணில்  ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கையும் தொடங்கி, ஆதாருடன் இணைத்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு  எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியம் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் பணத்தை ஏர்டெல் சேவைக்கான கட்டணம் செலுத்தவோ அல்லது வேறு தேவைகளுக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தவோ மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதை பணமாக எடுத்து செலவழிக்க முடியாது. இது கூட பணம் வழங்கும் வங்கிச் சேவை பற்றி அறிந்தவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.


பாமரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தெரியாமல் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அரசின் மானியம் அந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த தகவல் கூட அவர்களுக்கு தெரியாது. இன்றைய நிலையில் இந்தியாவில் 27.65 கோடி பேர் ஏர்டெல் இணைப்புகளை  பெற்றுள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 2.75 கோடி பேர் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு, ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.1000 மானியம் வரவு வைக்கப்பட்டிருப்பதாகக் கொண்டால் ரூ.2750 கோடி பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு திரும்பக் கிடைக்குமா? என்பது ஒருபுறமிருக்க, ரூ.100க்கும், ரூ.200க்கும் கூட வழியற்ற கோடிக்கணக்கான மக்களின் மானியத்தை ஒரு தனியார் நிறுவனம் முறைகேடான வழியில் பறித்து வைத்திருப்பதும், அதை அரசு அனுமதிப்பதும் மன்னிக்கவே முடியாத குற்றம் ஆகும்.

இப்போதைய நிலையில் சமையல் எரிவாயு மானியம் மட்டுமே இந்த வகையில் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு உதவிகளும்  இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டால், பாமரர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அவர்கள் துயரப்பட வேண்டியிருக்கும். செல்பேசி வாடிக்கையாளர்கள் பெயரில் அவர்களுக்கு தெரியாமலேயே ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்படுவது தொடர்பாக லட்சக்கணக்கில் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் ஆதார் இணைப்பு என்ற பெயரில் இவ்வாறு மடைமாற்றப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. அதற்கு ஏற்றவாறு விதிகள் திருத்தப்பட வேண்டும். நேரடி பயன்மாற்றத் திட்டப் பயனாளிகளுக்கு பல்வேறு ஆதாரங்களில் இருந்து வழங்கப்படும் மானியங்கள் அவர்களின் முதன்மை வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட வேண்டும். அத்துடன் தனியார் பணம் வழங்கும் வங்கிக் கணக்குகளில் மானிய உதவிகளை வரவு வைக்க தடை விதிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால் இது மிகப்பெரிய மக்கள் பிரச்சினையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்...

தமிழக மாவட்டங்களின் வரலாறு...


எந்தெந்த மாவட்டங்களிலிருந்து பிரித்து என்னென்ன மாவட்டங்களை எப்போது உருவாக்கினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கான தகவல் இது.

கோயம்புத்தூரிலிருந்து ஈரோடும் (1976),

சேலத்திலிருந்து, தர்மபுரி (1965)
 நாமக்கல் (1997) மாவட்டங்களும்,

தஞ்சை, திருச்சி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை (1974), கரூர் (1996), நாகப்பட்டினம் (1991), திருவாரூர் (1997), பெரம்பலூர் (1996), மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன.

இராமநாதபுரத்திலிருந்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களும் (1984),

மதுரையிலிருந்து திண்டுக்கல் (1985), தேனி (1997) மாவட்டங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

திருநெல்வேலியிலிருந்து (1986) தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வடஆற்காடு மாவட்டம் வேலூர், திருவண்ணாமலை (1989) எனவும்,

தென் ஆற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் (1993) எனவும்,

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர் (1996) எனவும் பிரிக்கப்பட்டன...

பாஜக மோடியால் இந்தியா பெரும் பொருளாதாரம் சிக்கலில் வீழ்ச்சி...


தாய்லாந்தில் தமிழ்...


கீழ்க்காணும் படம் தாய்லாந்தில்
கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.

தாய்லாந்து (தாய்) மொழியில் தமிழ்
சொற்களின் வேர்கள்..

தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள்
தாய்லாந்து மொழிக்குத்
தருவிக்கப்பட்டன.

தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு..

1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய...

ஓபிஎஸ் போன்ற அரசியல்வாதிகளை உருவாக்கி விடாதீர்கள்- ஆசிரியர்களுக்கு சீமான் வேண்டுகோள்...


திராவிடம் என்பது தெலுங்கு, கன்னட, மலையாளின் நலன் பேணும் ஒரு கருத்தியல்...


இந்தக் கருத்தியலால் தமிழர்கள் இழந்தது ஏராளம், ஏராளம்.

எனவே திராவிடத்தை ஒழிப்போம் என்பது தமிழ்நாட்டில், தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்பதே...

பாஜக மோடியின் சாதனை...


தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லவே இல்லை..


சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என
பல தலைமுறையாக
முகம்மதியர்கள்,
ஆர்காடு நவாப்புகள்,
ஆங்கிலேயர்கள்,
தெலுங்கர்,
கன்னடர்,
மராத்தியார்,
கேரளர்,
என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர்.

இதை தொடர விடலாமா?

80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா.

இப்படியே போனால் நாம் நம் வரலாற்றை நூல்களை இழந்தது போல,

லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல..

இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்...

இந்து தமிழர் மதம் தான் என்றால்.. ஏன் தமிழர் கட்டிய கோவில்களில் இன்று தமிழில் வழிபாடு இல்லை?


தமிழர் ஏன் அர்ச்சகராக இல்லை?

உலகை ஆண்ட தமிழன் ஏன் சூத்திரன் ஆனான்?

உலகின் ஒரு காலத்தில் ஆட்சி மொழியான நம் தமிழை ஏன் நீச பாசை என்றான்?

கோவில் எங்கும் தமிழ் கல்வெட்டு உள்ளது  அந்த தமிழை ஏன் நீச பாசை என்கிறது?

தமிழ் இலக்கியங்களில் இந்து நம் மதம் என்றே இல்லையே ஏன்?

தமிழர்கள் இந்துக்கள் என்றால், 1,40,000 தமிழர்கள் ஈழத்தில் இறந்த போது ஏன் இந்து நாடு இந்தியா உதவியது?

800 தமிழ் மீனவன் கொல்லப்பட்டதற்கு ஏன் பௌத்த சிங்களவனை இந்து நாடான இந்தியா தண்டிக்கவில்லை?

ஆரிய இந்து மதமும்.. தமிழர் மதமும்
முரணானவை...

பாஜக கணக்கு சரியாக வருகிறதா...


சிங்கள நடனமும் தமிழன் போட்ட பிச்சைதான்..


யாழ் பல்கலையில் கண்டிய நடனமும் ஆடுவோம் என்று சிங்களவர் அடாவடி..

உண்மை என்னவென்றால்...

கண்டி தமிழர் மண் என்பதுடன் கண்டிய நடனமும் தமிழருடைய சொத்து என்பதுதான்.

சிங்களவர்களின் தேசிய நடனமான கண்டிய நடனத்தின் வேர்கள், அதன் சொற்கள், நாட்டியத்தின் விதிகள் அனைத்தும் இன்றும்  தமிழ் மொழியில் தான் இருக்கின்றன.

கண்டிய நடனத்தின் முக்கியமான பாகத்துக்குப் பெயர் ‘வண்ணம’ (தமிழில் வண்ணம்).

கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம்.

சிங்கள மொழி தமிழிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அந்த சொற்கள் எல்லாம் கடைசி எழுத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்கள உச்சரிப்புக்கேற்றதாக உருமாற்றப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக..

தமிழில் அம்பலம், சிங்களத்தில் அம்பலம;
தமிழில் எதிரி, சிங்களத்தில் எதிரிய;
தமிழில் கடிவாளம், சிங்களத்தில் கடிவாளம;
தமிழில் காப்பு, சிங்களத்தில் காப்புவ;

இப்படி ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் இரவல் வாங்கப்பட்டு சிங்களமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சிங்கள நடனத்தில் பதினெட்டு விதமான வண்ணங்கள் அதாவது நாட்டிய பாரம்பரியம் உண்டு.

சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட சாதிபிரிவினர்  இந்த நடனமாடுவதையும், பறை (சிங்களத்தில் 'பெற') அடிப்பதையும் அரசவையிலும் ஆலயங்களிலும், கிராமங்களிலும் செய்து வந்தனர்.

ஆனால் கண்டிய நடனத்துக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை திட்டமிட்டு மறைத்தவர்கள் அவர்களல்ல.

சுதந்திரத்துக்குப் பின்னால் சிங்களவர்களின் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க புறப்பட்ட, நகர்ப்புற, படித்த, உயர்சாதி சிங்களவர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தான் திட்டமிட்டு, தமிழ் வேர்களை மறைத்து, கண்டி நடனத்தை சிங்களவர்களுடையது மட்டுமாக்கி, அதற்கு மகாவம்சத்துப் புராணக் கதையையும் இயற்றிவிட்டனர்.

கண்டி நாட்டியக்காரார்கள் வண்ணம், சிறுமருவு, அடவு, காத்திரம், மாத்திரை எனும் தமிழ் நாட்டிய மரபுகளை எந்த விதமான சிங்களமயப் படுத்தலுமில்லாமல் தமிழ்ச் சொற்களையே இன்றும் சிங்களத்திலும் பாவிப்பதைக் காணலாம்.

அடவு:

இந்தச் சொல் தமிழர்களின் பாரம்பரிய சதிராட்டத்தைப் (இன்றைய பாரத நாட்டியம்) போன்றே கண்டிய நடனத்திலும் பாதங்களின் அசைவுகளைக் குறித்தாலும், அது பாத அசைவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
தஞ்சாவூர் பாரம்பரியத்தில் 65 அடவுகள் உண்டு.

அவை பல்வேறு விதமான நாட்டிய அசைவுகளைக் குறிக்கின்றன.
சிங்களவர்களின் தேசிய நடனமாகிய கண்டிய நடனத்திலும் ஒவ்வொரு வண்ணம்(ம) நாட்டியத்தின் முடிவிலும் ஆடப்படுவது அடவு ஆகும்.

காஸ்திரம் அல்லது காத்திரம்:

இதுவும் ஒரு பலமான அல்லது கடுமையான நாட்டிய அசைவுகளைக் குறிக்கிறது.

கண்டிய நடனத்தில் காத்திரத்தை தொடர்ந்து ஆடப்படும் அடிப்படை நாட்டிய அசைவுகளும், அதற்கேற்ப மேளத்தின் அடியும் மாத்திரை என்றே அழைக்கப்படுகிறது.

இரண்டாவது, மூன்றாவது மாத்திரைகளின் பின்னர் காத்திரம் சிக்கலான நாட்டிய அசைவாக மாறுகிறது.

நாலாவது மாத்திரையின் பின்பு காத்திரம் நீண்ட நேரத்துக்கு ஆடப்படும்.

நாலாவது மாத்திரையில் நாட்டியமாடுபவர் சுதந்திரமாக, அவரது விருப்பப்படி துள்ளவும், சுழன்றாடவும் முடியும்.

ஆனால் மேளம் அடிப்பவர் அவரது அசைவுகளைக் கவனமாக அவதானித்து,  அவரது நாட்டிய அசைவுகளுக்கேற்ப மேளத்தை ஒலிக்க வேண்டும்.

சிங்கள நடனத்தில் வண்ணம் என்றழைக்கப்படும் நடனத்தின் உச்சகட்டம் இது.

சிறுமருவு:

தமிழ்ச் சொல்லாகிய சிறுமருவு என்ற சொல்லை  மென்மையாக, மெதுவாக ஆடப்படும் நாட்டிய அசைவுகளுக்கு சிங்களவர்கள் இன்றும்  பாவிக்கிறார்கள் (பயன்படுத்துகிறார்கள்).

காத்திரத்தின் போது பலமான நாட்டிய அசைவுகளையும், சுழன்றும், துள்ளியும் ஆடிக் களைத்துப் போன நாட்டியக்காரரும், மேளகாரரும் சிறுமருவின் போது இளைப்பாறிக் கொள்ளுவர்.

நையடி (Naiadi) அல்லது நையாண்டி:

நையாண்டி பாரம்பரியம்  இன்றும் தமிழ்நாட்டில் உண்டு.

இலங்கையிலும் சிங்களவர்களால் கதிர்காம முருகனை வேண்டி பம்பை, நையாண்டி மேளம் என்பவை ஆடப்பட்டன.

ஆனால் இன்று விஸ்ணு கோயில்களிலும் ஆடப்படுகிறது. பம்பை, நையாண்டி என்று தமிழ் பெயர்களால் அழைத்துக் கொண்டே அது வட இந்தியாவிலிருந்து மகிந்த தேரோ அறிமுகப்படுத்தினார் என்று கூறும் சிங்களவர்களுமுண்டு.

பந்தெறு (சிங்களம்)/ பந்தெறி (தமிழ்):

பந்தெறு நடனம் கண்ணகி அல்லது பத்தினி தெய்வத்த்தின் (சிங்களத்தில் பத்தினித்தெய்யோ) அருளை வேண்டி ஆடப்படுகிறது.

இது போலத்தான் உடுக்கு(தமிழ்), உடெக்கி (சிங்களம்) ஆனது.

தம்பட்டம் (தமிழ்), தம்மெட்டம் (சிங்களம்) ஆனது.

முயலடி வண்ணம் முசலடி வண்ணமானது.

கண்டியின் மல்வத்தை விகாரையின் புத்தபிக்குகளுக்கு தமிழகத்துக் கவிஞர்கள் 18ம் நூற்றாண்டில் நாட்டியத்தின் ஒவ்வொரு வண்ணத்துக்கும் எழுதிக்கொடுத்த நாலடி கவிதைகள்தான் இன்றும் பாடப்படுகின்றன. இதனை கவி என்றே அழைக்கின்றனர்.

வீரசோழியம் என்ற தமிழ் பவுத்த இலக்கண நூலைக் கொண்டே சிங்கள இலக்கணமும் வகுக்கப்பட்டது.

வந்தேறிக்கேது வரலாறு ?

சிங்கள இனத்திற்கென்று தற்சார்பாக எதுவுமே கிடையாது. அத்தனையும் தமிழர் போட்ட பிச்சை...

தமிழர் பிரச்சனைக்கு வர மாட்டோம்.. தமிழர்களுக்குள் பிரச்சனை வர செய்வோம் - இந்துத்வா...


இந்துத்வாவிற்கு
'தமிழ் நீச பாசை'
'தமிழர் சூத்திரர்'
ஆரியர் பிழைப்பு நடத்த மட்டும்
தமிழர் மதம் இந்துவா?

காவிரி பிரச்சனையில் தமிழருக்கான ஆற்று நீர் உரிமையை மறுத்ததோடு தமிழரை கன்னடன் நிர்வானப்படுத்தி அடித்தான்.
தமிழர் வாகனங்களை தீக்கரையாக்கினான்.
தொழில் நிறுவனங்களை சூரையாடினான்.

இந்த தமிழர் பிரச்சனைக்கு எந்த இந்து அமைப்புகளும் வரவில்லை. இந்த பிரச்சனையை காவிரி ஆனையம் அமைத்து தீர்த்திருக்க வேண்டிய மத்திய பாசக (bjp) அரசு செய்யவில்லை, தமிழக பாசக கட்சி வலியுருத்தவுமில்லை.

தமிழருக்குள் பிழவு ஏற்படுத்த மதத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.

இலங்கையில் தமிழர்கள் இந்துக்கள் என்றால்,
சிங்கள பௌத்தன்/வடுக பௌத்தன் தமிழின படுகொலை செய்ததற்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய பாசக அரசு மறுத்ததேன்?

தமிழர்கள் இந்துக்கள் என்றால் இலங்கை தனி தமிழ் ஈழ கோரிக்கையை இந்து மதவாத பாசக மறுத்திருக்குமா?

தமிழர்கள் இந்து என்றால் காட்டுக்குள் 20தமிழர்களை ஆந்திர அரசு சுட்டுக் கொன்றதை ஏன் கண்டிக்கவில்லை?

(காங்கிரசு எதிர் கட்சி தானே அப்போது கூட கண்டிக்கவில்லையே)

800தமிழக மீனவன் இந்துக்கள் என்றால்  வடுக பௌத்தனும் சிங்கள பௌத்தனும் கடலில் சுட்டு கொன்றதற்கு இந்திய அளவில் போராடவில்லையே ஏன்?

பாசக அறிவுரையாளர், இந்துத்வா சார்பாளர் சுப்பிரமணிய சாமி தமிழர்களை பொறுக்கி என்றானே, தமிழர்கள் இந்துக்கள் என்றால் ஏன் அவன் அப்படி சொன்னான்?

தமிழக பாசக மற்றும் இந்து அமைப்புகள் ஏன் கண்டிக்கவில்லை?

இந்துத்வா செயற்பாட்டாளர் தாக்ரே பல நூறு தமிழர்களை கொன்றானே, அடித்து மும்பையை விட்டு விரட்டினானே,
தமிழர்கள் இந்துக்கள் என்றால் ஏன் கொன்றான், ஏன் விரட்டினான்?

'தமிழர் பிரச்சனை எதற்கும் இந்துத்வா வராது,

மதத்தை வைத்து தமிழர்களுக்குள் பிரச்சனை செய்ய இந்துத்வா வரும்'

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இசுலாம் அரேபிய மதம் தான்..
கிறுத்தவம் யூத மதம் தான்..

அதே போல் இந்து மதமும் ஆரிய மதம் தான்..  தமிழர் மதம் அல்ல...

கிறுத்தவம், உலகாண்ட தமிழரை சூத்திரன் என்று சொல்லவில்லை.
இசுலாம், உலகின் ஒரு காலத்தின் ஆட்சி மொழியான தமிழை அருவருப்பான மொழி என்று கூறவில்லை.

ஆனால் இந்து மதம் தான் தமிழை நீச பாசை (அருவருப்பான மொழி) என்றது ஏன்?

பழந்தமிழர் கட்டிய கோவில்கள் எதுவும் இந்து மதத்திற்காக கட்டியவை அல்ல..

ஆசீவக(சமணம்) மதத்திற்கும், சைவ சமயத்திற்க்கும், வைனவ சமயத்திற்க்கும் நாட்டார் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, தெய்வ வழிபாடு இவைகளுக்கு கட்டப்பட்டவை!!

தமிழர்களின் கோவில்கள் ஆரியரிடமும் வடுகர்களிடமும் சென்றதும்
தமிழரின் ஆசீவகம் என்ற மதமும், சைவம் என்ற மதமும், வைனவம் என்ற மதமும் பின் நாட்களில் இந்து என்று மாற்றப்பட்டது.

சைவமும், வைணவமும் தமிழை போற்றி புகழுகிறது..

இந்து மதமோ தமிழை இழிவுபடுத்துகிறது எப்படி?

இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான வழிபாடுகள் உள்ளது அவர்கள் தங்களை ஒருபோதும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை.

தேசிய இன உரிமையை மறுத்த இந்தியம்
வழிபாடு உரிமையையும் மெய்யியல் கோட்பாடுகளையும் மறுத்தது.

தமிழர்கள் ஆரியரின் இந்து மதத்தால் பல இன்னல்களை சந்தித்தனர் மேலாடை அனிய கூட தடை என்ற நிலை ஆரிய மத்தாலும் வடுகர்கள் தெலுங்கர்கள்  ஆட்சியில் வந்தது.

இந்த கொடுமைகளை பொருத்துக் கொள்ள முடியாமல் ஐயா முத்துக்குட்டி சுவாமியால் ஐயா வழி என்ற மதமே உறுவானது.

தன் மதத்தை காப்பாற்ற இவரை உயிருடன் சமாதி கெட்டியவர்கள் பிராமணர்கள் ஆவார்கள்.

மேலாடை அணிய கூடாது என அடிமைபடுத்தப்பட்ட தமிழர் சமூகங்களை இடுப்பில் இருந்த துண்டை எடுத்து தலைப்பாகையாக போட வைத்தது, இந்த ஐயா வழி மதம்.

இன்றும் நாடார் சமூக மக்களில் ஒரு பிரிவினர் ஐயா வழி மதத்தை பின்பற்றி தலைப்பாகையும் நெற்றியில் சந்தனத்தால் நாமமும் இடும் வழக்கம் உள்ளது.

ஆரிய இந்து மதத்தை எதிர்த்து உருவானது தான் வள்ளலாரில் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' ஆரியர் பிராமனரின் சாதி தீண்டாமையை இந்த மதம் முற்றிலும் எதிர்த்தது.

வருணாசிரம கொள்கையை கடுமையாக எதிர்த்தது இந்த மதம். இதனால் பெரும் கொடுமைகளை சந்தித்தார் வள்ளலார்.

தன் அருட்பாக்களால் இன்றும் வருணாசிரமத்தை எதிர்த்தும் சாதியை மறுத்தும் வருகிறார் வள்ளலார்.

திருமூலர், திருவள்ளுவர் தொடங்கி, சித்தர் பாடல்கள், வள்ளலார், ஐயா வழி வரை.. ஆரிய மதத்தை, இந்து வருணாசிரம கொள்கையை, சாதியை, தமிழர் சமூகம் தொன்றுதொட்டு கடுமையாக எதிர்த்தே வந்துள்ளது..

இப்படி வந்தேரிய ஆரிய பிராமணீய மதத்தையும் அவர்களின் கொள்கைகளையும் இந்தியாவில் வாழும் பல இன குழுக்கள் எதிர்த்துள்ளனர், எதிராக பல மதங்களும் உருவானது. பின்நாட்களில் மண்ணின் மைந்தர்கள் இசுலாம் மதத்திற்க்கு மாறவும் கிறுத்தவ மதத்திற்க்கு மாறவும் ஆரியரின் சாதி வருணாசிரம கொள்கையே காரணம் ஆகும்.

தமிழர்களுக்குள் ஒவ்வொரு குலத்திற்கும்,
ஒவ்வொரு தினையில் (நிலப்பகுதி) வாழும் மக்களுக்கும் வெவ்வேறு தெய்வ வழிபாடுகள் உண்டு.
நாட்டார் வழிபாடுகளும் இருந்தன.
இந்திரன் கண்ணன் முருகன் கொற்றவை என தினை தெய்வங்களும், சிவன் என ஒரு நாட்டிற்கான தெய்வமும் உண்டு.
இதே போல் இந்தியா எங்கும் பல குழுக்களாக வாழ்ந்த மக்களும் தங்கள் தெய்வ வழிபாட்டை கொண்டிருந்தனர்.

தமிழர் மரபில் விழைந்தவை தான் இந்த வழிபாடு முறையும். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் தெய்வத்துள் மதிக்கப்படுவர்' என்ற ஐயன் வள்ளுவரின் குறளே இதற்கு சான்று.

அப்படி தான் தமிழ் சித்தரும், குமரிகண்டத்தின் மன்னருமான சிவன், செய்த மனித குலத்திற்கான கொடையை குடையை ஆட்சியை எண்ணி இந்தியா முழுவதும் சிவ வழுபாடு செய்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சமூகங்களின் பண்டைய வழிபாடு முறையை வைத்து அடையாளம் காணலாம் உண்மையான வரலாற்றை வெளிக்கொணரலாம். வட இந்தியா வரை சிவன் போற்றப்படுகிறான்.

'தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி' என்ற வாக்குக்கினங்க ஒரு வாழ்வை வாழ்ந்திருக்க கூடும்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் எப்படி பல நாடுகளை கொண்டிருந்த இந்த தீபகர்பத்திற்கு இந்தியா என்ற ஒற்றை பெயர் வந்ததோ அதே போல தான்,
பல சமயங்களை வழிபாடுகளை மதங்களை கொண்டிருத்த மக்களின் மதத்திற்க்கும் இந்து என்ற ஒற்றை அடையாளம் திணிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவானதும் இதையே வழிமொழிந்து பிறப்பு சாதி மற்றும் இறப்பு சான்றிதழ்களிலும் இதனையே திணித்து எல்லோரும் இந்து என்ற ஒரு உளவியலை உருவாக்கிவிட்டனர்.

சீக்கிய மதத்தை தழுவிய பின்பும் இந்து மத சட்டம் திணிக்கப்படுவதும்,
குடகு நாட்டு குடவா பிரிவு மக்கள் தாங்கள் இந்துக்கள் இல்லை எங்கள் தெய்வ வழிபாட்டிற்க்கும் இந்து மதத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்கின்றது. இந்து என்ற மதம் திணிக்கப்பட்டதற்கு இவை சான்றுகள்.

இப்படி வழிபாடு முறைகளை அழிப்பது  மெய்யியலை மடைமாற்றுவது என்பது ஒரு வகையில் ஓர் பண்டைய இனம் பல்லாயிர கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த அனுபவ அறிவை பாரம்பரியம் என்ற பெயரில் மெய்யியலை தன் சமூகத்திற்கு தந்து செல்வதை அழிப்பது ஆகும்.

இறை நம்பிக்கை தேவை இல்லை சிலையை வணங்க தேவை இல்லை செம்மையாக  வாழ்ந்த முன்னோரின் பெருமையை தெரிந்துகொள்ள வேண்டாமா?

இன்று தன்மானத்தோடு உயர்ந்திருக்கும் பல தமிழ் சமூகங்களுக்கு முத்துக்குட்டி, சுடலைமாடன், கருப்பன், கள்ளழகர் போன்ற முன்னோரின் தியாகங்கள் தான் காரணம், அந்த வரலாறு நம் இனத்தை மீண்டும் அதே இடத்தில் விழவிடாமல் தவிர்க்கும் படிப்பினைகள்.

தமிழரை இந்துக்கள் என்று நம்ப வைத்து, அந்நிய படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நடந்தது. இசுலாம் மதமாற்றத்தால் மலேசியா மற்றும் சிங்கையிலும்,  பௌத்த இந்து மதமாற்றத்தால் இலங்கையிலும்   வாழ்ந்த தமிழர் இன அடையாளம் இழந்து இன மாற்றத்திற்கு அட்பட்டனர். தமிழர் மெய்யியலை இழந்ததால் தமிழரின் அறிவியல் களவாடப்பட்டது. தமிழர் வரலாறு  ஆரிய வரலாறு ஆனது. தமிழர் சிந்து வழி நாகரிகம் ஆரியர் நாகரிகம் என இட்டுக்கட்டுவதை போல் நாளை குமரிக்கண்டம் ஆரியர் வாழ்ந்த நிலம் என்றும் சொல்லுவர்.

கடவுள் நம்பிக்கையால் மதம் மாறுவது தனிமனித விருப்பம். இங்கு கிறுத்தவ மதத்தை தழுவிய தமிழன் பொங்கல் கொண்டாடுகிறான். கேரளத்தில் இசுலாம் மதம் தழுவிய மலையாளி ஓணம் கொண்டாடுகிறான் தன் மதத்திற்குள் இருந்து கொண்டு.

ஆரியர்களின் பல நூறு ஆண்டுகால அகண்ட பாரதம் என்ற கனவு 'எல்லோரும் இந்து' என்ற கோட்பாட்டால் நிறைவேறி வருகிறது. பண்பாட்டு படையெடுப்பு நிகழ்த்து வருகிறது .

இதனால் தேசிய இனங்களுக்குள் சிறுபான்மை மதத்தை எதிரியாக்கி உள் முரனை உண்டுபண்ணி  தேசிய இனத்தை வலிமையிழக்க செய்து பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி ஆள்கின்றனர்.  இந்து மத வருணாசிரம கொள்கை சிறுபான்மை ஆரியர் சுரண்டி திழைக்கவும், பெரும்பான்மை மண்ணின் மக்களை அடக்கி ஆளவும் மிகவும் உதவுகிறது.

நிறுவனப்படுத்தப்பட்ட இந்த மதத்தை விட்டொழிக்காமல் ஒற்றுமை வராது. நம்பிக்கை என்ற பட்சத்தில் இருக்கும் வரை மதம் கொடியது அல்ல.

தமிழர் மெய்யியல் மறுமலர்ச்சி பெற்றால் தான் இந்து மாயை ஒழிந்து தமிழர்கள் ஓங்க முடியும்..

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் தெரிந்து கொள்வோம்...


01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி - (Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு - (Ring Well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி - (Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி - ( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall) ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47. வாய்ககால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்...

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்...


நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை...

அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது... என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன.

குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும்.

இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில் தான்.

இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர்.

அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.


இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது!

அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று புகைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்...

இந்த பொய்காரனை எப்போது தகுதி நீக்கம் செய்ய போறீங்க உத்தமர் சபாநாயகரே...


திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி இருக்கிறது...


நாம் தமிழர் கட்சியில்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10000 உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டதிலிருந்தே திமுகவும் சப்த நாடியும் அடங்கி விட்டது.

வீரமணி கிளம்பி வந்து விட்டார் அறிவாலயத்துக்கு. அவரும் ஸ்டாலினும் கூடிக்கூடி விவாதித்தார்கள்.

திமுகவுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தியாக வேண்டும். இல்லையேல் கட்சி நிலைக்காது என்பதை தெரிந்து கொண்டார்கள்.

நேற்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. புதிய உறுப்பினர்களே சேரவில்லை.

திமுகவில் ஏற்கனவே இருப்பவர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்தார்களே ஒழிய புதிய வரவு என்பதே இல்லை.  எல்லா மாவட்டங்களிலும் இதே நிலை தான்.

இத்தனைக்கும் கடந்த மாதங்களில் தான் திமுகவில் 50 ,000  பேர் இணைந்தார்கள் . ஒரு லட்சம் பேர் இணைந்தார்கள்  என்று மாவட்ட வாரியாக  கும்பல் கும்பலாக ஆட்களை சேர்த்தார்கள். இப்போது அதுவும் பொய்க் கணக்கு என்று தெரிய வருகிறது.

திமுகவில் அதே பழைய தலைகள், இப்போது அவர்களின் வாரிசுகள் என்று குறுநில மன்னர்கள் போக்கு தீவிரமாக இருக்க,  இந்தக் கட்சியில் நமக்கு எந்த வாய்ப்பும் எதிர்காலத்தில் இருக்காது என்று திமுகவினரே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதர மக்கள்,  திமுக கொள்ளைக்கார கொலைகார, ஊழல் மிக்க, குடும்ப அரசியல் நடத்தும், தெலுங்கு கும்பல் கட்சி என்பதை திட்டவட்டமாக அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் அவர்களும் திமுகவில் இணைய மறுக்கிறார்கள்.

இது ஸ்டாலினுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திருட்டு திராவிட கும்பல் சதியாலோசனை செய்து வருகிறது...

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலாட்டா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-23...


வியாதிகளைக் குணப்படுத்தும் ஓல்கா வோரால்...

1979 ஆம் ஆண்டு உயிர் இயற்பியல் (Biophysics) துறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற பெவர்லி ரூபிக் (Beverly Rubik) என்ற ஆராய்ச்சியாளர் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு மாறியது ஒரு சுவாரசியமான கதை. விளையாட்டுகளிலும், நடனத்திலும் கூட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு சமயம் மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டார். அப்போது டாக்டர் ஓல்கா வோரால் (Dr. Olga Worrall) என்ற சிகிச்சையாளர் தன் கைகளால் தொட்டே நோய்களையும், வலிகளையும் போக்க முடிந்தவர் என்று கேள்விப்பட்டு உடனே அவரை அணுகினார்.

நவீன கல்வியிலும், சிந்தனைகளிலும் வளர்ந்திருந்த ரூபிக்கிற்கு இது போன்ற சிகிச்சை முறைகளில் பெரியதொரு நம்பிக்கை இருந்திருக்க வய்ப்பில்லை என்றாலும் பலர் சொல்லக் கேட்டிருப்பதை சரிபார்க்க இதுவே வாய்ப்பு என்று அவர் கருதினார். டாக்டர் ஓல்கா வோரால் அவருடைய முழங்கால் மூட்டில் கை வைத்த சில நிமிடங்களில் மூட்டு வலி மிகவும் குறைந்து போனது. இது விஞ்ஞானியான ரூபிக் அவர்களுக்கு மிக ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் அறிந்திருந்த மருத்துவ முறைகளில் இது போன்ற அதிசயத்தை அவர் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் இது குறித்து விரிவாக ஆராய முற்பட்டார். தன் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா அன்று அவர் டாக்டர் ஓல்கா வோராலைக் கேட்க அவரும் ஒத்துக் கொண்டார்.

முன்பே பாக்டீரியாக்களை வைத்துப் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருந்த பெவர்லி ரூபிக் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளைத் தனக்கு நன்கு தெரிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்தே செய்து பார்க்கத் தீர்மானித்தார். பல நவீன உபகரணங்களை வைத்து நீரில் நீந்தும் பாக்டீரியாக்களைப் பல புகைப்படங்கள் ரூபிக் எடுத்து வைத்திருந்தார். அவற்றைத் தொடர்ச்சியாக கவனிக்கையில் அவை நீந்துவது கரடுமுரடில்லாத அமைதியான வளைவுகளாய் தெரிந்தன. சில வேதிப்பொருள்களை அவற்றுடன் சேர்த்தபோது அவை செயலிழந்து ஸ்தம்பித்துப் போவதை அவர் கவனித்தார்.

அப்படி அந்த பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்கிற வேதிப் பொருள்களைப் பெருமளவு அந்த நீரில் சேர்த்து அந்தக் கலவை உள்ள மைக்ராஸ்கோப் ஸ்லைடின் மீது டாக்டர் ஓல்கா வோராலின் கைகளைக் குவித்து வைக்கச் சொன்னார். பன்னிரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அந்த மைக்ராஸ்கோப் ஸ்லைடை சோதித்துப் பார்த்த போது அந்த பாக்டீரியாக்களில் ஐந்திலிருந்து பத்து சதவீதம் பாக்டீரியாக்கள் தங்கள் செயல்திறனை மீண்டும் பெற்றிருந்தன.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பாக்டீரியாக்களை வைத்து ஆராய்ச்சி செய்திருந்த ரூபிக்கிற்கு இது போல் முன்பு பாக்டீரியாக்கள் மீண்டும் செயல்திறனை அப்படி மீட்க முடிந்த சம்பவங்களைக் காண முடிந்ததில்லை. ஒருவேளை மனிதக் கைகளின் இளஞ்சூட்டில் அந்த பாக்டீரியாக்கள் அந்த வேதிப்பொருள்களின் செயல்பாட்டையும் மீறி செயல் திறன் திரும்பப் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழத் தன் கைகளையும், வேறுசிலர் கைகளையும் மைக்ராஸ்கோப் ஸ்லைடில் குவித்து ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர் ஓல்கா வோராலின் கைகள் குவித்ததால் ஏற்பட்ட விளைவுகள் மற்றவர்கள் கைகளைக் குவித்த போது ஏற்படவில்லை.


அந்தப் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல, அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல (antibiotic) நுண்பொருள்களை அந்த பாக்டீரியாக்களுடன் சேர்த்து மீண்டும் அந்த ஆராய்ச்சிகளை ரூபிக் தொடர்ந்தார். மிக அதிகமான அளவு அந்த நுண்பொருள்களைச் சேர்த்த போது டாக்டர் வோராலின் தொடுதலால் எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவு நுண்பொருள்களைச் சேர்த்த போது, அந்த பரிசோதனைக் குழாய்களை வோரால் சிறிது நேரம் தொட்ட போது அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெறவும் வளர்ச்சியடையவும் தொடங்கின. டாக்டர் வோராலின் கைகளுக்கும் அந்த சோதனைக் குழாயிலிருந்த பாக்டீரியாக்களுக்கும் இடையே ஏதோ நிகழ்கிறது என்பது மட்டும் ரூபிக் அவர்களுக்குத் தெரிந்தது. ஃபாரடே கூண்டு போன்ற நவீன கருவிகள் கூட கண்டு பிடிக்க முடியாத உயிர்மின்காந்த நுண்ணலைகள் (bioelectromagnetic subtle waves) உருவாகி இந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன என்ற கணிப்புக்கு வந்தார்.

(சிலர் நட்டால் செடிகளும், மரங்களும் நன்றாக செழித்து வளரும் என்று ஒருசிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஓரிருவர் நடும் தாவரங்கள் எல்லாம் மிகச் செழிப்பாக வளர்வதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி பெரிதாக அப்போது நினைக்கத் தோன்றியதுமில்லை. ஆனால் ரூபிக் அவர்களின் பரிசோதனைகள் பற்றிப் படிக்கையில் அவையெல்லாம் கூட சிந்திக்க வேண்டியவையாகவே தோன்றுகிறது. அந்த நபர்கள் ஆழ்மன சக்தியாளர்களாக இல்லாதிருந்தாலும் அந்தத் தாவரங்கள் வளர உதவுகின்ற ஏதாவது சக்தியை அந்த விதைகளுக்கோ, நாற்றுகளுக்கோ தர வல்லவர்களாக இருந்திருக்கலாம்)

பெவர்லி ரூபிக் அறிவியல் ரீதியாக ஆழ்மன சக்திகளுக்கு விடை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் டாக்டர் ஓல்கா வோராலோ தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியாகக் கூறினார். 1972ஆம் ஆண்டு இறந்த அவர் கணவர் அலெக்சாண்டர் அம்புரோஸ் வோராலும் அவர் போலவே சக்தி படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்கா வோராலும் 1985ஆம் ஆண்டு இறக்கும் வரை மனிதர்களை மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட விலங்குகளையும், தாவரங்களையும் கூடத் தன் சக்தியால் குணப்படுத்தி வந்தார்.

1982ல் Science of Mind என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குணப்படுத்தும் ஆழ்மன சக்தியை விவரிக்கும்படி பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார். ஒரு பொறியியல் வல்லுனரான என் கணவர் அதை நுண்ணிய மின்னலை என்றார். இந்தியர்கள் ப்ராணன் என்று சொல்கிறார்கள். உயிர்சக்தி என்று சிலரும், ஆழ்மன சக்தி என்று சிலரும் கூறுகிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். அந்த சக்தியில் மின்னலைகள் இருப்பதாக என் கணவர் கடைசி வரை கூறி வந்தார். நாங்கள் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வதாகப் பல நோயாளிகள் சொன்னதைப் பார்க்கையில் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இறைவன் இந்த உலகத்தை குறைபாடில்லாமல் படைத்திருக்கிறார். மனிதன் சரியான விதத்தில் வாழாமல் பிறழும் போது நோய் உட்பட பல தீமைகளை வரவழைத்துக் கொள்கிறான். மனிதன் மீண்டும் தன் உயர்நிலையைத் திரும்பப் பெற இந்த இயல்பான சக்தியை உபயோகித்து மீளலாம். இதை நான் இறைசக்தி என்றே நினைக்கிறேன். ஒருவரைக் குணப்படுத்த நான் முயலும் போது இறைவனின் இந்த சக்தி என் மூலமாகச் சென்று பலனளிக்கிறது என்று கூறத் தோன்றுகிறது..

மேலும் பயணிப்போம்......

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


தமிழகத்தில் அடிமைப் பெண்கள் ஏற்றுமதி - சொல்லப்படாத வரலாறு...


திராவிடர் ஆட்சிக் காலம், தமிழக பெண்களுக்கு இருண்ட காலமாக அமைந்தது. அதுவரை பெண்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மறுக்கப்பட்டன.

அக் காலப் பெண்கள் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.

ஆண்கள் வரதட்சிணை வாங்கும் வழக்கம் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

வரதட்சிணை -திராவிடர் வழக்கமே..

சோழர்காலம் வரை, மணமகளுக்கு மணமகன் பரிசம் போட்டுத் திருமணம் செய்யும் முறையே இருந்தது.இது குறித்து வராற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.

பெண் வீட்டார் மணமகனைத் தேடிச் செல்லுதல் பழந்தமிழர் பண்பாட்டுக்கு முரணாகும். மணமகன் வீட்டார் பெண்ணை நாடி மணமகள் வீட்டுக்கு வரவேண்டும். மணமகன் பெண்ணுக்குப் ’பரியம்’ (ஸ்பரிசம்) அல்லது தொடுவிலை போட வேண்டும். பெண் வீட்டார் மணமகனுக்கு வரதட்சிணை வழங்குதல் தமிழரின் மரபு அன்று.

ஆனால், பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளிலும் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. விக்கிரமசோழன் காலத்தில் மங்கை நல்லூரில் வாழ்ந்திருந்த அகளங்கராயன் என்பான் ஒருவன் தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவிட்டு விட்டதற்காக, அவளுக்குச் சிறு நிலங்களை ஈடாகக் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

எந்தக் காரணத்தாலோ, சில பிராமண குலங்களில் பெண்ணுக்குப் பரியம் கொடுக்கும் பழக்கம் நுழைந்து விட்டதெனத் தெரிகிறது. அதைக் கண்டித்து ஒரு கிராமத்துப் பிராமணருள் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாடர் ஆகியவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி, கன்னியாதானமாகவே தம் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றும், மணமகளின் தந்தைக்குப் பரியப் பணம் கொடுக்கும் மாப்பிள்ளையும், பரியம் பெற்றுக் கொள்ளும் மணமகளின் தந்தையும் குலத்தினின்றும் தள்ளி வைக்கப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. (தமிழர் வரலாறும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை).

ஆக, வரதட்சிணை முறை தமிழர் முறை அன்று என்பதும், அம்முறையை அறிமுகப்படுத்தினோரே, திராவிடர்களாகிய தென்னிந்திய பிராமணர்தான் என்பதும் தெளிவாகிறது. இந்த திராவிடர்களாகிய தென்னக பிராமணர்கள் தமக்கான ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆணாதிக்கக் கூத்துகளில் சிலவற்றைக் காண்போம்.

பொதுவாக பெற்றோர்கள் தங்களின் மகள்களைப் பாரமாகவே கருதினர். அவர்களுக்கு விரைவில் மணமுடிக்க விரும்பினர்.

பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

மனுதர்ம அடிப்படையில் நடந்துகொள்ள பெண்கள் வலியுறுத்தப்பட்டனர்.

பொதுமகளிர் எனப்பட்ட விபசாரிகள் முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.

உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்தது.

அரசர்கள் இறந்தால் அவர்களுடைய மனைவியர், காமக்கிழத்தியர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயில் விழுந்து மாண்டனர்.

உடன்கட்டை ஏறாத பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். ஆபரணங்களைக் களைந்து வெள்ளை நிற ஆடை அணிந்தனர்.

உணவுப்பழக்கமும் மாற்றப்பட்டது.பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/ சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107, 108).

மேற்கண்ட பெண்ணடிமைத்தன வழக்கங்கள் குறித்து திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ஆனால், அவர்கள் பேச்சின் சாரமாக, தமிழர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து இருக்கும். இதற்காக, கண்ணகியின் வீரத்தைக் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ’திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோர் ஆணாதிக்கவாதிகள்’ என்ற அடாத பழியைப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், விஜயநகர, நாயக்கர் காலத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய சான்றுகளை அவர்கள் முன் வைப்பதே இல்லை.

திராவிடர் ஆட்சியில் தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத களங்கமான போக்கும் உருவாக்கப்பட்டது. அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி செய்யும் வணிகம்தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76).

பெண்களை அடிமைகளாக்கும் விதிகளை உருவாக்கியது மனுநீதி. பெண்களைப் பண்டங்களாக்கி ஏற்றுமதியும் செய்த மனிதகுல விரோத ஆட்சிதான் திராவிடராகிய தென்னிந்திய பிராமணர்ஆட்சி என்பதை உணர வேண்டும். பெண்கள் வணிகம் என்பது ஒரு குறியீடுதான். பெண்கள் ஏற்றுமதியே செய்யப்பட்டார்கள் என்றால், சமூகத்தில் பெண்கள் நிலை எந்தளவு மோசமாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்தால் வேதனையே மிஞ்சும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சமூகநிலையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஆட்சி முறை திராவிட அரசர்கள் காலத்தில் உருவானது.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா...

அதிமுக அமைச்சர் கருப்பணன் கலாட்டா...


ரஜினி, கமல் ஆகியோர் தங்களது பட டிக்கெட்டுகளை ரூ.120க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தங்கர்பச்சான்...


ஒரு நிமிடம் தமிழில் பேச இயலாத போது, இந்தி படித்து என்ன பயன்? - தங்கர் பச்சான் கேள்வி...

சிறு விசயத்துக்காக நாட்டை விட்டு ஓடிருவேன்னு சொன்னவர் கமல், அவரை நம்பி எப்படி முதல்வர் பதவியை மக்கள் கொடுப்பார்கள்? யார் வேண்டுமானாலும் ஆசை படலாம் அரசியலுக்கும் வரலாம் - சரத்குமார்...


அதிசயம் ஆனால் உண்மை : ஆதாரபூர்வமான நிகழ்வுகள்...


தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும்.

அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும்.

அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்...

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடை வெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வா ல்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்ன டியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத் திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம்.

இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது.

ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமத மாகி விட்டது.

ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது.

இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது.

ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…

இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்.

இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி.

காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரைமட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான்.

அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன.

அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர் ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா.

அந்த மன்னர் முடி சூட்டிய அதே நாளில் தான் அந்த ஓ ட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார்.

இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844.

ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்.

சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான்.

அக்காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோப மடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது.

சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை.

எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண் டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான்.

பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது.

இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன.

இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலை தூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர்.

இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர்.

இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன.

இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர்.

இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர்.

இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை.

இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர்.
நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃ போர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது.

அவர் முதல் உலகப் போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார்.

அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப் பட்டார்.

வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார்.

இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை..

நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா?

இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது.

இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது.

ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

கட்டிடத்தின் வடிவமைப்பை உற்று பாருங்கள், வியந்து போவீரகள்...


உலகின் முதல் மருத்துவ முறையான சிந்தாமணி (சித்த மருத்துவத்தின் முன்னாடி) மருத்துவத்தை முதன்முதலில் உலகிற்கு வழங்கியவர் நம் முப்பாட்டன் இராவணன் என்பதை தி இந்து (25-9-2016) நாளிதழில் ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார்...


நாம் தமிழர் கட்சியின் குமரி மாவட்ட மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  மரு. புட்பராசு அவர்கள்....

கன்னட ஈ.வே. ராமசாமி மண் மீட்பில் உதவினாரா?


மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம்.. மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம். - விடுதலை 21.1.47..

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுபவன் எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,
குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் - ஈ.வெ.ரா.- விடுதலை 11.01.1947..

ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.

இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில் தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர, குமரி முதல் வேங்கடம் வரை என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன் - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 723, 724..

தினத்தந்தி (11.10.55) :

நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?

ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர். (மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.

தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது அண்டை மாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் மொழிவாரி தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் கொண்டனர்.

அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.

ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.

மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.

தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டு விட்டு, ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும், தனி தமிழ்நாடு கேட்டதாகவும்
மலையாளிகளைக் கண்டித்ததாகவும் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை...

மே 17 இயக்கம் திருமுருகன் காந்தியும்.. ஐ.நா மன்றமும்...


தமிழ் என்ற வார்த்தைக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. மற்ற மொழிக்கு அச்சிறப்பு இல்லை...


வல்லினத்தில் ஒரு எழுத்து - த
மெல்லினத்தில் ஒரு எழுத்து - மி
இடையினத்தில் ஒரு எழுத்து - ழ்

வல்லினம், மெல்லினம், இடையினம் முறையே கலந்து தமிழ் அமைந்ததுள்ளது...

10 நாளில் கட்சியை கை பற்றுவோம் - திருச்சி கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு...


சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த கன்னட ஈ.வே. ராமசாமி...


2.1.1953இல் மேயர் செங்கல்வராயன் வீட்டில் சென்னையை மீட்பதற்கான கூட்டம் நடைபெற்றபோது ஈ.வே.ரா அதில் தமிழரைக் குழப்பும் விதத்தில் பேசினார்.

இராயப் பேட்டை இலட்சுமிபுரத்தில் 5.1.1953இல் நடந்த கூட்டத்திலும் தமிழர்களைகக் குழப்பும் வகையில் பேசினார்.

இரண்டு நாட்களுக்கு முன் மேயர் வீட்டில் நடந்த சர்வ கட்சிக் கூட்டம் என்பதிலும் நான் பேசிய போது இதையே சொல்லியிருக்கிறேன்.

அதாவது, இந்தப் பிரிவினையில் ஏற்படுகிற தொல்லைகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தாலும், மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு உடையவர்களாலும் ஏற்படுகிற தொல்லைகளே தவிர,. வேறு ஆந்திர மக்கள் தொல்லை அல்ல.

இன்று காலையிலுங் கூட டாக்டர் A.கிருஷ்ணசாமி அவர்களிடம் எனக்குச் சென்னை நகரம் முக்கியமல்ல, அன்னியன் ஆதிக்கமற்ற, அன்னியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை என்று சொன்னேன்..

சென்னை நகரம் தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது, செய்து வருகிறது, அல்லது செய்ய முன் வரும் என்பதற்காக அல்ல என்றும் சொன்னேன்..

ஒரு சமயம் சென்னை போய் விடுமானாலும் நான் ஒன்றும் அதிகமாகக் கவலைப்பட மாட்டேன் என்றும்..

சென்னை ஒழிந்து போனால் பாக்கி உள்ள தமிழ்நாட்டை என் இஷ்டம் போல ஆக்கி நாளைக்கே பூரண விடுதலை பெற்ற பிரதேசமாக ஆக்க விளம்பரம் செய்து விட முடியும் என்று சொன்னேன்..

இவை ஒருபக்கம் இருந்தாலும் நாம் பிரயத்தனப்படா விட்டால் சென்னை நகரம் ஆந்திரர்களுக்குப் போய் விடுமோ என்கிற கவலை சிறிதும் வேண்டியதில்லை..

ஏனெனில் அநேகமாகத் தமிழ்நாட்டு பிராமணர்கள் சென்னையில் வாழ்கிறார்கள்..

அவர்கள் ஒரு நாளும் சென்னை ஆந்திராவுடன் சேரவோ, தனி மாகாணமாக ஆக்கவோ சம்மதிக்க மாட்டார்கள்..

அவர்கள் இதில் வெற்றி பெற்றே தீருவார்கள்..

ஆதலால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று இன்று காலையில் சொன்னேன்..

விடுதலை 7.1.1953, விடுதலை 8.1.1953...

இந்த இடம் தமிழகத்தில் தான் உள்ளது, 25 ஆண்டுகளாக கொட்டிகிடக்கும் ரசாயன கழிவால் நாசமான ஊர் , மழையில் சென்று படம் பிடித்த இளைஞர்...


எப்பொழுது தான் அகற்றப்படும் இந்த கழிவுகள் ?

ஓரு ஊரே மனிதன் வாழ தகுதியற்றதாக ஆன பின்னணியை அந்த இடத்திற்கு சென்று ஆவணங்களுடன் விளக்கும் இளைஞர்...

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே...


உலகில் முதல் மொழி தமிழ் என்று ஏற்காவிட்டாலும்..
உலகின் முதல் மாந்தன் தமிழன் என்று ஏற்காவிட்டாலும்..

60,000 ஆண்டுகளுக்கு முன் உலகம் அழிவைச் சந்தித்தபோது தப்பிப் பிழைத்த ஒரு மாந்தர் குடும்பம் மீண்டும் இனப்பெருக்கம் செய்து உலகம் முழுவதும் பரவியது என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர். ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறியுள்ளார்.

அந்த குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பம் தான். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

ஆம். மேலும் இதுபற்றி அறிவோம்.

மனித வரலாறு காலம் பின் செல்லச் செல்ல மங்கி தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.

ஆனால் எழுதும் வழக்கம் வரும் முன்னே நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் செவிவழிப் பழங்கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக, தொன்மங்களாக, நாடகமாக, இலக்கியமாக இன்றும் பல்வேறு மாய மந்திரங்களுடன் விரவப்பட்டு இன்றும் உள்ளன.

உலகில் தொன்மையான இனங்களின் புராணங்களில் ஒரு நிகழ்வு மட்டும் தவறாமல் இடம்பெருகிறது.

அது உலகம் நீரில் மூழ்குவதும் அதிலிருந்து குறிப்பிட்ட மக்கள் பிழைப்பதும் ஆகும்.

இது பைபிளில் நோவா கதையாக உள்ளது.

குரானில் நூ கதையாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தில் குமரிக்கண்டம் மூழ்கியபோது மக்களை காப்பாற்றிய நெடியோன் கதையாக உள்ளது.

இது தவிர பைபிள் கூறும் முதல் மனிதன் ஆதாம். இவன் தமிழனே.

தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…- ஆதியாகமம் (2-8)
கிறித்தவ மதம் தோன்றியது மத்திய ஆசியா.

அதற்கு கிழக்கே பழமையான குடியாக தமிழர்கள்தான் இருக்கிறோம்.

ஆதாம் என்ற பெயர் ஆதிமனிதன் என்று பொருள்படும் வகையில் உள்ளது.

ஆதி என்றால் தொடக்கம்.

ஆதாம் வாழ்ந்த இடம் இலங்கைத் தீவில் இன்றும் உள்ளது.

அதனை 'ஆதாம் சிகரம்' (Adams peak) என்று அழைக்கின்றனர்.

தமிழர்கள் இதனை 'சிவனொளிபாத மலை' என்று அழைக்கின்றனர்.

மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) 'ஆதம் மலையில் நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.
(இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறதாம்.

இது உறுதியாகத் தெரியவில்லை.
இதை பிற்காலத்தில் யாராவது வைத்திருக்கலாம்).

‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று.

ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆதன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் 'ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
கந்த புராணத்தில் "ஈன்ற ஔவையும் அத்தனும்" என்று வருகிறது.

"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

ஏவாள் என்றால் தாய் என்று பொருளாம்.

ஈவே (Eve) என்பது பைபிளை மொழி பெயர்க்கும் போது ஏவாள் என்று ஆக்கப்பட்டது.

பைபிள் எபிரேய மொழியில் (ஹீப்ரு) இருந்து தான் மற்ற மொழிகளுக்கு சென்றது.

ஈவே என்பதும் மொழிபெயர்ப்பு திரிபு.

முதல் பைபிள் ஏவாளை ஆயா என்று கூறிப்பிடுகிறது.
ஆயா, ஆய் என்பன தாயையோ அல்லது தாயின் தாயையோ குறிக்கும் தமிழ்ச்சொல்.

குரான் ஹவ்வா என்று குறிப்பிடுகிறது.

இது ஔவை என்பதன் திரிபு.

மூழ்கிய குமரிக்கண்டத்தின் எஞ்சிய ஒரு பகுதி குமரி மாவட்டம்.

இம்மாவட்டத்தில் ஔவைச் கோயில்கள் இருக்கின்றன.

தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
குமரி மாவட்டத்து தமிழ் இசுலாமியர்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை சூடிக்கொள்கின்றனர்.

(‘பாவா’என்றால் தந்தை என்று பொருள்).

ஆதமின் புதல்வர்கள் ஆபில் மற்றும் காபில் இவர்களின் கல்லறைகள் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் உள்ளன.

அதுதான் ஆபில்காபில் தர்கா.
 
இதுபற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவேயில்லை என்பது பெரிய வேதனை.

ஆபில் காபில் தர்காவில் அடக்கமாகி உள்ள உடலை தோண்டி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

ஆதாம் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த சுவடுகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை அறிக.

பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவருடைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

' பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலகக் கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது,
கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப்பட்டு, மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது இதன் பொருள்.

நோவா கதையில் அவர்தான் உலகிலேயே கப்பல் கட்டிய முதல் மனிதர்.

அதேபோல உலகிலேயே முதன்முதலாகக் கப்பல் கட்டிய இனம் தமிழினம்.

நோவா என்ற பெயர் நாவாய் என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்துப்போகிறது.

நாவாய் என்றால் நா+வாய்.
அதாவது நாக்கின் முன்புறம்.
கப்பலின் அமைப்பை இது கூறுகிறது.

இதுதான் ஆங்கிலத்தில் Navy ஆனது.

ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கப்பலைக் குறிக்க இச்சொல் சிறுசிறு மாற்றத்துடன் வழங்கப்படுகிறது.

உலகின் பழைய துறைமுகங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரையே கொண்டுள்ளன.

உலகின் அனைத்து மொழிகளிலும் கப்பல் தொடர்பான சொற்கள் தமிழ் வடிவத்திலேயே உள்ளன.

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.”
-ஆதியாகமம் 1.

நோவா கோபர் மரத்தில் கப்பல் செய்ததாக கூறப்பட்டுள்ளது. கோபர் என்ற சொல் மத்திய ஆசிய மொழிகளில் குறிப்பிட்ட பொருளைத் தரவில்லை.

தமிழில் காப்பெரு மரமாக இருக்கலாம்.

காப்பெரு என்றால் பெரிய காட்டுமரம் என்ற பொருள்.

நோவாவின் புதல்வர்கள் ‘ஷெம்’, ‘ஹாம்’
நோவா ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டாராம்.

ஆனால் ஹாம் அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான்.

அதனால் கோபம் கொண்ட நோவா,
காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய ஷெம் சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.

இதில் நோவாவின் ஒரு மகன் கறுப்பாகவும் மற்றொருவர் வெண்மையாகவும் இருந்ததாக அறிகிறோம்.

திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும் போது அவை ‘காமனும் சாமனும்’ (ஹாம், ஷெம்) போல இருந்ததாகக் கூறுகிறார்.

மனு எனும் அரசன் ஒரு பேசும் மீனை கண்டறிந்து வளர்ந்தானாம். அது பெரிதாக வளர்ந்துகொண்டே போனதால் கடலில் கொண்டு விட்டானாம்.

பிரளயம் வந்ததும் மனுவின் கப்பலை இழுத்துக் கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.

மகாபாரதத்தில் வைவசுத மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.

பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப்படுகிறது.

அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.

சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்கள் நெடியோன் என்ற பாண்டிய மன்னன் குமரிக்கண்டம் மூழ்கியதும் கப்பலில் தப்பித்து வடக்கே பண்டைய தமிழகத்திற்கு வந்து தமிழ்மன்னர்களுடன் போரிட்டு தன் ஆட்சியைப் பரப்பி, மக்களைக் குடிவைத்து, பிறகு கப்பலில் சென்று தற்போதைய இந்தோனேசியாவின் சாலியூரைத் தாக்கி கைப்பற்றி விதைநெல் கொண்டுவந்தது வேளாண்மையை பெருக்கினான் என்று கூறுகின்றன.

மச்சபுராணத்திலும், பாகவத புராணத்திலும் இதே போன்ற மீன் கதை உள்ளது.

குரானிலும் நூ கதை நோவா கதையையே ஒத்துள்ளது.

(மலைமேல் நோவா விட்டுச் சென்ற கப்பல் துருக்கியில் அராரத் மலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினர். ஆனால் அது கப்பல் இல்லை எரிமலைப் படிவம் என்று பிறகு தெரியவந்தது)

உலகத்தின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.

‘கில்கமெஷ்’ என்ற புராதனப் பாபிலோனியக் காவியத்தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது.

கண்டம் மூழ்கிய கதைகளும் உலக தொன்மங்களில் காணக்கிடைக்கின்றன.

கிரேக்கரான ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

நோவா கப்பலில் இருந்து இறங்கிய மக்கள் செங்கலை அறுத்து கட்டிடம் செய்ததாகக் கூறுகிறது பைபிள்.

உலகில் முதன்முதலாகச் செங்கல் கட்டிடம் காணப்படுவதும் தமிழர் நாகரீக தளமான சிந்து சமவெளியில் தான்.

ஆக உலகில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம். அதிலேயே மாந்த இனம் வாழ்ந்து வந்தது. அங்கே பேசப்பட்ட மொழி தமிழ்.

அக்கண்டம் மூழ்கிய பிறகு சொற்ப எண்ணிக்கையில் தப்பித்த மக்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறி உள்ளனர்.

வரலாறு அறிந்த முதல் மனிதன் ஆதன். அவன் பேசியமொழி தமிழ்.

மூழ்கிய கண்டம் குமரிக்கண்டம்.
அதிலிருந்து மக்களைக் காப்பாற்றியவன் நெடியோன்.

நன்றி:

1) முத்துக்குளிக்க வாரீகளா? (தொடர்) _ கவிக்கோ அப்துர் ரகுமான் ..
2) ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி! (தொடர்) _ யாழறிவன்..
3) மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்..