16/03/2021
திராவிட இயக்கத்தின் சாதனைகள்...
தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...
கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...
சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..
பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத.. தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த.... திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?
பெயர்ப்பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?
இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...
திராவிட வந்தேறிகள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்....
தமிழன் வந்தேறிக்கு தமிழ்நாட்டின் ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்காம் நான்காம் நிலை கட்சி என்று ழுழு ஆட்சி, அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு...
வந்தேறிகளின் திராவிட மாயையில் வீழ்ந்து இளித்தவாயனாக இருக்கின்றான்...
திமுக கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்கள்?
என்று கேள்வி கேட்ட அண்ணாமலை பல்கலை கழக மாணவர் தலைவன் உதயக்குமார்...
அடுத்த நாள் பேனில் தற்கொலை செய்து கொண்டார்...
(கருணாநிதி கொலை செய்தார்)....
அவனது பெற்றோர், இவன் எனது மகன் இல்லை என்று உடலை வாங்கவில்லை....
திரும்ப ஆட்சி கிடைத்தால் அந்த சேவையை தொடர்வார்கள்...
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்...
லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.
நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.
விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.
விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.
கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.
மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்...
திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...
திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.
அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.
அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை,
திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.
திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...
திமுக தெலுங்கர்களை மன்னிக்கவே மாட்டோம்...
தமிழர்கள் நாங்கள் கதறிக் கொண்டிருந்த போது நீங்கள் சொக்கத்தங்கம் சோனியாவிற்கு பாலீஸ் போட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் இன்னும் மறந்து விடவில்லை கருணா அவர்களே..
உங்கள் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மக்கும்.. நீங்கள் பார்ப்பீர்கள்..
கம்யூனிசம் என்றால் என்ன.?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
திமுக தெலுங்கர் ஸ்டாலினும் நமக்கு நாமே நாடகமும்...
கச்சத் தீவை கொடுக்கும் போது மூடிக்கிட்டு இருக்க வேண்டியது. அப்புறமா கச்சத் தீவை மீட்போம் என்று கத்த வேண்டியது.
திருமங்கலம் பார்முலா என்று ஒன்றை கண்டு பிடிச்சு ஓட்டுக்கு பணம் கொடுத்து பழக்க வேண்டியது. அப்புறமா இதை அடுத்தவன் செஞ்சா இது ஜனநாயகமா இல்ல பண நாயகமா என்று கத்த வேண்டியது.
இலவச டிவி கொடுக்க வேண்டியது. அப்புறமா இலவசத்தை கொடுத்து மக்கள பிச்சக்காரங்களா ஆக்கிட்டாங்க என்று கத்த வேண்டியது.
இனப் படுகொலை செய்யும் போது ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று சொல்லிட்டு மந்திரி பதவி கேட்டு அலைய வேண்டியது. அப்புறமா டெசோ, மயிறு, மட்டை என்று கத்த வேண்டியது.
மதுவிலக்கை ரத்து பண்ண வேண்டியது. அப்புறமா பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கத்த வேண்டியது.
நாலு எலக்சனா இது தான் என் கடைசித் தேர்தல் என்று சொல்ல வேண்டியது. அப்புறமா 93 வயதல்ல 103 வயசானாலும் உங்களுக்கு உழைப்பேன் என்று உளர வேண்டியது.
ஜல்லிக் கட்டுக்கு தடை போட வேண்டியது. அப்புறமா ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று கத்த வேண்டியது.
மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா தெரியாமல் கையெழுத்து போட்டுட்டோம் என்று கத்த வேண்டியது.
இந்தி திணிப்பிற்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் என்று கத்த வேண்டியது..
பல்லுக்கும் நாக்கும் சண்ட... ஓடியாங்க.. ஓடியாங்க...
பல்லு நாக்குட்ட சொல்லிச்சாம்..
நான் லேசா அழுத்துனா போதும்.. நீ துண்டாகிடுவ...
நாக்கு பதில் கொடுத்திச்சாம்...
ஒரே ஒரு வார்த்தைய புரட்டி போட்டுட்டா போதும், நீங்க 32 பேரும் வெளில வந்துருவீங்க...
சூட்சும உலகங்கள்...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.
தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)
ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது.
இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?
நாட்டிலேயே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பின் சட்டுபுட்டுன்னு திருத்திய பெருமையும் திமுகவை சாரும்...
ஊழல் செய்யவதில் நாங்கள் கில்லாடி, ஆனால் மக்களுக்கோ நாட்டுக்கோ உருப்படியான திட்டங்கள் வகுக்க ரூ.450/- கோடி வாடகைக்கு எடுத்த IPAC நிறுவனத்தை அமர்த்துவோம் -- திமுக எப்படி சுயமாக சிந்தித்து செயல்படும்.?
பாஜக விரோத வரி கொள்ளைர்களின் பாஜக வை விரட்டியடிப்போம்...
பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 100/சதவீதம் வரி விலக்கு...
அன்றாடம் தினக்கூலி பயன்படுத்தும் பெட்ரோல் டீசல் ( சிலிண்டர் ) வரி குறைப்பு இல்லை கேட்டால் அது எங்கள் கையில் இல்லை என்பார்கள்...
இது ஏழை எளிய மக்களுக்கான அரசு என்பார்கள்...
பணம் படைத்தவன் மட்டுமே இவர்கள் ஆட்சியில் செழிப்போடு வாழலாம்..
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை...?
அவர்களின் குடிசையை கூட பேனர் வைத்து மறைப்பார்கள் இதுதான் பாஜக மோடி யின் டிஜிட்டல் இந்தியா என்பார்கள்... அய்யோக்கிய பயலுங்க...
பயன் தரும் மூலிகைகளும் செடிகளும்...
நங்கை மூலிகை - சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக் கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.
கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்...
ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.
விஷக்கடிக்கு மருந்து..
சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.
நீரிழிவு நோய்க்கு மருந்து..
இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.
கல்லீரல் நோய்களை போக்கும்..
காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது...
பாஜக எச்.ராஜா சர்மாவும் மோசடிகளும் - மலரும் நினைவுகள்...
சீட்டு கம்பெனி நடத்தி சொந்த கட்சி காரங்க பணத்தை எல்லாம் ஆட்டைய போட்ட எச்ச ராஜா சர்மா எல்லாம் தேசப் பத்தனாம்...