07/02/2018

திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் - தேவ நேயப் பாவாணர் (1959)...


தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை 'அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்" என்றனர் முன்னோர்.

"மொழி பெயர் தேசத்தாயிராயினும்" என்பது குறுந்தொகை (11).  தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்).

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட சாஸ்த்ரம்" எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, 'நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் "தென் ஆசியச் செய்தி" ஏட்டில் (மார்ச் 16-31, 2016)  வெளி வந்தது)...

செந்தமிழ் ஞாயிறு பாவாணர் பிறந்த நாள் 7.2.1902...


"திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?

"எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு; ஆங்கிலம் -ஆங்கிலேயர், செருமன் -செருமானியர், சீனம் -சீனர், சப்பான் -சப்பானியர். ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம்.

ஆனால், மொழியைப் பொறுத்த வரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியாற் பெயர் பெறுபவரே யன்றி ஒருமொழி தொகுதியாற் பெயர் பெறுபவரல்லர், தமிழ் என்பது ஒரு மொழி. திராவிடம் என்பது ஒரு மொழித்தொகுதி. அது பதின்மூன்று மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப்பகுதிகளாகத் தமிழ்நாட்டிலிருந்து பெலுச்சித்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவது மில்லை.

வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடர்பற்றவை. தென்னியந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெருநிலப் பகுதியாயுள்ளன. ஆதலால் அப்பகுதியைத் திராவிட நாடாக்கலாம் என்னின்; தென்னிந்தியத் திராவிட நாடுகள் இன்னும் ஒன்று சேரவில்லை; இனிமேல் சேரப்போவதாக ஒரு குறியும் இல்லை.

இதுபோது பிற தென்னிந்தியத் திராவிட நாடுகள் சேராவிடினும் எதிர்காலத்தில் அவை சேருமாறு தமிழ்நாட்டில் இன்று அடிகோலுவோர் என்னின்; அதுவும் பொருந்தாது. ஏனெனில், அங்ஙனம் அடிகோலுவதற்கும் ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய ஏனை முப்பெருந் திராவிட நாடுகளில் உள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து வீதமாவது திராவிட நாட்டியக்கத்தில் சேர்ந்து உறுப்பினர்களாகத் தம்பெயரைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

அல்லது அவ்வியக்கப் பரப்புரைக்காவது அங்குள்ள மக்கள் இடந்தரல் வேண்டும். இவ்விரண்டு மில்லை. ஆகையால் திராவிட நாட்டுத் துவக்கத்திற்கும் வழியில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்திலிருந்து இவ்வியக்கத்தைப் பாராட்டி எழுதின், அது வலியுறாது.

இனி பல திராவி இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின், தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின், அது தமிழுக்கும் உலை வைப்பதாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சி யாட்சியிலாவது காங்கிரசு ஆட்சியிலாவது பார்ப்பனத் தமிழனும் எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை. தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின், தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியது தான்.

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால் அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின், எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயின், பெரும்பான்மை பற்றியுமே பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும். இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை. ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது. ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே.

ஒரு நாட்டில் பிறநாட்டு மக்களுமிருப்பின், வெளிநாட்டார் உள் நாட்டாரை எல்லாவகையிலும் பின்பற்ற வேண்டுமேயன்றி, உள் நாட்டார் வெளிநாட்டரைப் பின்பற்ற வேண்டியதில்லை. வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருப்பின், உள் நாட்டார் அவரைப் பின்பற்றலாம். தமிழரல்லாத மற்ற திராவிடர் அத்தகையவரல்லர். மேலும், வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருந்த விடத்தும் உள் நாட்டாரின் இனப்பெயர் மாறிவிடாது. ஆதலால், எவ்வகையிலும் தமிழ் நாட்டிலுள்ள பிற திராவிடர் தம்மைத் தமிழர் என்று கொள்ளுதல் வேண்டுமே யன்றி, தமிழரைத் திராவிடன் என்று அழைத்தல் கூடாது.

தமிழர் ஒரு சிற்றினத்தாராதலானும், பிற திராவிடரோடு சேரினல்லது அவர்க்குப் பாதுகாப்பில்லாமையாலும், திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்வதே அவர்க்கு நலமெனின், இது பேதையர்க்குக் கூறும் ஏமாற்றுரையேயன்றி வேறன்று.

பிற திராவிடர் தமிழரோடு சேர்வதில்லை யென்று முன்னரே கண்டோம். மேலும் இக்காலத்தில் ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பாயிருப்பது உலக அரசுகளிடை வளர்ந்து வரும் அமைதி விருப்ப அறவுணர்ச்சியே யன்றி, அந்நாட்டின் பருமை அல்லது வன்மை யன்று. ஆதலால், தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிட நாடு சேர அல்லது திராவிடரென்று கூறச்சொல்வதெல்லாம், கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகத் கூறியது போன்றதே.

தமிழர் என்னும் பெயர் பார்ப்பனரையும் தழுவுவதலால், இனவுணர்ச்சி யூட்டுவதற்குத் திராவிடர் என்னும் பெயரே ஏற்றதென்னின், வட சொல்லின்றிப் பிற திராவிட மொழிகட்கு நிலையும் உயர்வுமின்மையானும், எழுத்து முதல் அணிவரை இலக்கணமெல்லாம் வடமொழியைப் பின்பற்றி யிருத்தலானும், இலக்கண இலக்கிய ஆசிரியருட் பெரும்பாலார் பிராமணாயிருந்திருத்த லானும், பிற திராவிடர் தம்மை ஆரிய வழியினராகக் கூறிக் கொள்ளுதலானும், தமிழையும் தமிழரையும் புறக்கணித்து வருதலானும், திராவிடர் என்னும் பெயர் தமிழர் என்னும் பெயரினும் தகுதியற்றதாகும்.

தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழி எனக் கொள்ளுதலும், வடசொற் கலப்பின்றித் தமிழைத் தூய்மையாக வழங்குவதலும், இந்திய நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று தெளிதலும், பிறப்பால் சிறப்பில்லை என்பதைக் கடைப் பிடித்தலும், கல்வியையும் அலுவற் பேற்றையும் எல்லார்க்கும் பொதுவாக்குதலும், இன்னோரன்ன பிறவும், தமிழர்க்கிலக்கணமாம். இவ்விலக்கணங்களைக் கொண்டவரெல்லாம் தமிழரென்றே துணிந்து, தமிழுக்கும் தமிழருக்கும் கேடாக அரசியற் கட்சியார் கூறும் வீண்வம்பு வெற்றுரை களையெல்லாம் செவிக்கொள்ளாது விடுத்து தமிழர் கடைத்தேறுவாராக.

 -பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 15.5.1951)...

யார் இந்த பைபாஸ் அருள் ஜோதி..?


பல்லாவரம் காவல்துறை எல்லைக்கு  உட்பட்ட பகுதியில் தலைமை கான்ஸ்டபிளாக  பணிப்புரியும் அருள் ஜோதி, மக்களின்  நண்பன் என்று அழைக்கப்படுகிறர்.

அவர் பணியை எவ்வளவு சிறப்பாய் செய்கிறார்  என்பதை  தேடல் செய்தியாளர்  சொல்லுகிறார்..

தாம்பரம் பைபாஸ் - மதுரவாயல் பைபாஸ்  இடைப்பட்ட   பகுதியில்  இரவில் எந்த  ஒரு   விபத்து மற்றும்  அசம்பாவிதங்கள்  ஏற்படாமல்  தனது பணியை நேரம் பார்க்காமல் செய்வதோடு மட்டும் அல்லாமல் அந்த வழியாக  இரவு  நேரங்களில் செல்லும்  வாகனங்களில்  பழுது ஏற்பட்டாலோ அல்லது  வாகன எரிபொருள் தீர்ந்து விட்டாலோ  வாகன  ஓட்டிகளிடமிருந்து எந்த ஒரு கைமாறு எதிர் பாராமல் தானாக முன்வந்து  உதவி செய்து அறிவுரை சொல்லக்கூடிய ஒரு மாமனிதன்.

சில நாட்களுக்கு முன் அனகாபுத்தூரில்  வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் போது அருள் ஜோதி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டபோதும் கூட   தனது பணியையும் , சேவையையும் இன்னும் சிறப்பாக செய்து வருகிறார்

பல்லாவரம் காவல்துறை எல்லைக்கு  உட்பட்ட பகுதியில்  நேர்மையாக பணிபுரியும் மக்களின்  நண்பன் அருள் ஜோதி , அந்த  பகுதியிலுள்ள  கடை தெருவில் எந்த ஒரு  கடையிலும் கையை நீட்டி லஞ்சம் வாங்காத ஒரு மாமனிதன் தான் இந்த பைபாஸ்  அருள் ஜோதி.. வாழ்த்துக்கள்...

முருகனுக்கு பூணூல் போட்டவன் எல்லாம் நல்லா பார்த்துக் கொள்ளுங்கள்...


பூமியுடன் தொடர்பில் இருங்கள்...



நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வேறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

வேறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.

சரி இப்போது university of  California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வேறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.

ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வேறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்...

புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வேறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது  உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.

எலும்பு, கல்லிரல், மூளை (பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases  க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மற்றும் வேறும் கால்களுடன் நடப்பதன் மூலம்  chronic stress, உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒருமணி நேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்த ஓட்டம்  அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது).

மிகமுக்கியமாக blood viscosity (இரத்த பாகுத்தன்மை) குறைக்கப்படுகிறது. இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.

எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்.

முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்...

தமிழா விழித்துக்கொள்...


முருகன் இந்து அல்ல... தமிழன்...


குமரிக்கண்டம் முதல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுலகம் வரை தமிழினத்தின் அடையாளமாக விளங்குபவன் முப்பாட்டன் முருகன். குமரிக்கண்டம் தொடங்கி பாரத கண்டம் முழுக்க தமிழனுக்கு சொந்தமானது.

அதற்கு ஆதாரம் தமிழில் இயற்றப்பட்ட தொல்க்காப்பியம், சிலப்பதிகாரம்,  அகநானூறு, புறநானூறு உட்பட 46 இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.

தற்போது, அறிஞர் குணா அவர்கள் எழுதிய தமிழரின் தொன்மை என்ற புத்தகத்தில் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியா முழுமைக்கும் உள்ள தமிழர்கள் முப்பாட்டன் முருகனை முன்னிறுத்துவதால் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பிராமணர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது.

அதற்கென்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஓர்  வழிபாட்டி முறை தான் விநாயகர் வழிபாடு.

தாங்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்று நம்ப வைப்பதற்காக விநாயகரும் முருகனும் சகோதரர்கள் என்று திரித்தார்கள்.

இது குறித்து நாங்கள் முன்னிறுத்தும் கேள்விகள் ?

1.முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்றால், இந்தியா முழுவதும் விநாயகரை தூக்கி பிடிக்கும் ஆரிய பிராமணர்கள் ஏன் முருகனை தமிழகம் தாண்டி முன்னிறுத்தவில்லை?

2.தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைத்த தமிழர்கள் அவரது அண்ணன் என்று சொல்லப்படும் விநாயகருக்கு ஏன் அமைக்கவில்லை?

3.முருகன், சிவன், பார்வதி,  விநாயகர் ஆகியோர் ஒன்றாக இருந்தது போன்று 2500 வருடத்திற்கு முன்பு (ஆரியர்களின் வருகைக்களுக்கு முன்பு) தமிழர்கள் கோவில் கட்டியதாய் ஆதாரம் உண்டா?

4.கந்தனுக்கு கந்த புராணம் இருக்கும் போது ஏன் விநாயகருக்கு விநாயக  புராணம் இயற்றவில்லை?

5.ஆதியில் குறிஞ்சி நிலத்தில் தான் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான்.அந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த முதல் தலைவன் தான் முருகன். நிலை இவ்வாறு இருக்கையில் 2500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விநாயகரை முருகனுடன் தொடர்பு படுத்தி பேசுவது நகைப்புக்குரியது.....

6. முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்று சொல்லும் நீங்கள் ஏன் விநாயக சதுர்த்திக்கு கொண்டுக்கப்படு முன்னுரிமையை தைப்பூசத்திற்கு கொடுப்பதில்லை? தைப்பூசத்துக்கு நடைமுறையில் பொது விடுமுறை கூட இல்லையே?

7.தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஏன் முருகனுக்கென்று கோவில்கள் அமைக்கப்படவில்லை?

8.தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றுதான் (இந்துக்கள்) என்றால் ஏன் ஈழத்தில் 85%  முருகனை(உங்கள் பார்வையில் இந்து) வழிபடும் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது இந்தியா ஏன் தடுக்கவில்லை?? மாறாக ஏன் ஆயுதம் கொடுத்து அழித்தொழித்தது? 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை இடிக்கும் போது, தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்தியா ஏன் தடுக்கவில்லை?

9.கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?
காரணம் - கீழடியில் கிடைக்கப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராயும் போது மதம் சார்ந்த எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. நடுகல் வழிபாடு தொடர்பான ஆதாரங்களே தொடர்ந்து கிடைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு - தமிழர்களின் வழிபாடு இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு. அகழ்வாராய்ச்சி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் இந்தியாவே தமிழர்க்கு சொந்தமானது என்பது நிரூபணமாகிவிடும். எனவே தான் கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டது....

9.இந்து என்ற சொல் ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு கால்டுவெல் என்ற வெள்ளைக்காரரால் ஆரியரின் துணையோடு தமிழர்கள் உட்பட பூர்வ குடிகள் மீது திணிக்கப்பட்டதே. ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு உள்ள இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ தமிழகத்தில் இந்து என்ற சொல் இருந்ததற்கான மரபியல் ஆதாரத்தை நிரூபித்துவிட்டால் முருகனை இந்து என்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

உண்மை இந்துவே விடைதேடு.....

விநாயகரை வைத்து உன்னை மூட்டாளாக்கும் ஆரியக் கூட்டத்தை அடையாளம் கண்டுக் கொள்வோம்...

இதன் நீட்சிதான் வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் செய்வதும்.   

நீ... இந்து  நீ..... இந்து  என்று உன்னை நம்பவைத்து.... அடிமையாக்கி..

சாஸ்தர- சம்ரதாயம் என்று சொல்லி உன்னை ஏமாற்றி மேலும் அடிமையாக்கி  ஆண்டு வரும் ஆரிய கூட்டத்தின் முகத்திரையை உணரருங்கள்...

இனி மதுரை ஆதீன மடாதிபதின்னு நான் சொல்லவே மாட்டேன் என்னைய மன்னிச்சுடுங்க உயர் நீதின்றத்தில் மன்னிப்பு கேட்ட நித்தியானந்தா...


மதுரை ஆதீன மடத்திற்குள் இனி நுழைய கூட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க உயர் நீதிமன்றம் நித்தியானந்தாவிற்கு உத்தரவு...

திமுக - அதிமுக இரண்டையும் ஒரே நேரத்தில் கலாய்க்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்...


அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது...


1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.

ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?

சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.

Population density map of sri lanka என்று தேடுங்கள்..

இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும்
தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.

இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண்மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை முறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.

திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதிஅளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.

தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட் தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.

நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்கமாட்டான்.

முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.

திண்ணை வரை கொடுத்துவிட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

பாஜக சு.சாமிக்கு சீமான் பதிலடி...


இன்னைக்கு நாம சாதாரணமா சுடுற தோசைக்கு பின்னாடி கூட ஒரு வரலாறு இருக்கு..


எல்லா கோயில்லையும் ஒவ்வொரு பிரசாதம் சிறப்பு..

காஞ்சி வரதர் கோயில்ல இன்னைக்கும் தோசை தான் பிரசாதம்..

இந்த தோசை சுடுவதற்கு தேவையான அரிசி, உளுந்து, மிளகு, சீரகம்..போன்ற தோசைக்கு தேவையான இன்ன பிற பொருட்களுக்கு 13-14 நூற்றாண்டிலேயே கோயில் Treasury ல இருந்து கொடுத்த நிவந்த கல்வெட்டு இன்னைக்கும் வரதர் கோவிலில் பாக்கலாம்...

காலையில் கூறியது செய்தியாகவே வந்துவிட்டது...


குலதெய்வங்கள் என்றால் என்ன.. அவர்களின் பெருமை என்ன...?


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்து போகின்றது...?

என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள்..

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் கோத்திரம் என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.

எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.

இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை.

ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்
படுகிறோம்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது..

இந்த வழி வழி போக்கில் ஒருவர்
மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..

நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?

குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம்
கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.

மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின்
குலதெய்வத்தின் விபரங்களை எளிதில்
பெற்று விடுகிறார்கள்.

மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.. புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்..

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள்.. திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்..

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்க கூடிய ஒரு ஆற்றலை தரும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால்.. குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.

குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கை போகும் போக்கை…

அடிப்படையில் இந்து மதம் பற்றற்ற
தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்
மூலம் இறை நிலையை அடைவது.

ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....

விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின்
x சேர்ந்தால் ஆண் குழந்தையும்..

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.

ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,
ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம்
சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது.

பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.

பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.

ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

தமிழகத்தில் திராவிடத்தால் வந்தேறிகள் எல்லாம் பணியில்.. மற்ற மாநிலத்தில் தமிழனுக்கு இது தான் நிலை...


பில்லி கிரஹாமின் வெற்றி மொழி...


அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணா்வினை வீட்டிற்குள் கொண்டு வர முடியாது.

உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணா்வீா்கள்.

ஒவவொரு நாளும் கடவுள் நமக்கு அளித்த பாிசே,நமது வயது ஒரு விஷயமே அல்ல.

செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை. சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே. குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.

மரணத்தை விட்டு யாரும் ஒடிவிட முடியாது. இறுதியில் அனைவரையும் அது கைபற்றியே தீரும்.

மன்னிப்பு மற்றும் நோ்மை ஆகியவையே மனிதனின் இரண்டு உயாிய ஆன்மீக தேவைகளாகும்.

கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது ஒன்று பெற்றுக் கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்தகுமே.

உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

பெற்றோ்களிடம் மாியாதை குறைவாக நடந்துகொள்ள அனுமதிக்கப்படும் ஒரு குழந்தை,வேறு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.

தைாியம் ஒரு தொற்று. தைாியமானவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது மற்றவா்களின் முதுகுத்தண்டும் விறைக்கின்றது.

நோ்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது...

தமிழா விழித்துக்கொள்...


இந்தியாவில் 64 சதவீத ஆன்டி பயோடிக் மாத்திரைகள் அங்கீகாரம் பெறாதவை என ஆய்வில் தகவல்...


பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து அனுமதி பெறாமல் இந்தியாவில் ஆன்டிபயோடிக் மாத்திரைகள் விற்கப்படுவதாக ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டன் க்யூன்மேரி பல்கலைக்கழகமும், நியூகாஸ்டல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய சந்தையில் விற்கப்படும் லட்சக்கணக்கான ஆன்டிபயோடிக் மாத்திரைகள் முறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு முதல் 2012 வரை இந்தியாவில் விற்கப்பட்ட ஆன்டிபயோடிக்குகளில் 64 சதவீதம், மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் அனுமதியைப் பெறவில்லை. இந்தியாவில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகப் பல புதிய மருந்துகள் விற்பனையும், விநியோகமும் செய்யப்படுகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வெறும் 4 சதவீத மருந்துகள் மட்டுமே இவ்வாறு அனமதியின்றி விற்கப்படுகின்றன.

ஆன்டிபயோடிக்குகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஏற்கனவே இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போது சட்ட விரோதமாக ஆன்டிபயோடிக்குகள் விற்பனையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த அனுமதி பெறாத ஆன்டிபயோடிக்குகள் 500 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 3,300 பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. இவற்றில், 12 பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்...

ஆஸ்துமாவிற்கு மருத்துவக் குறிப்பு...


ஆஸ்துமா இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.

இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.

ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்: மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்: தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி - கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்...

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்து வந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும்.

இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து.. பாஜக எச். ராஜா சர்மாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா.?


வாசனை வைத்தியம் - மலர் மருத்துவம்...


மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள்.

வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு.

ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு.

இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம்.

இந்த புகையை சுவாசிப்பதன் மூலம்  புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது.

இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.

எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான  நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும்.

இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர்.

அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.

இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம்.

இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது.

இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.

லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும்.

சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம்.

எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது.

ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். 

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.

எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.

மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

மசாஜ்...

வாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ் செய்யலாம்.

சனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.

புருவத்தின் மேலும் கீழும் நெற்றியிலும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ் செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ் செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ் செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ் செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.

கழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை  மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம்.

கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம்.

பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.

உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை  உதறவேண்டும்.

உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.

வாசனை செய்திகள்...

வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன்?

நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது.

நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன.

நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும்.

இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது...

கார்ப்பரேட் பொருட்களை தவிர்ப்போம்...


தமிழன் திராவிடன் அல்ல.. திராவிடன் தமிழன் அல்ல... என்று நாம் கூறியபோது எதிர்த்த தமிழர்களே...


இதோ நேரு ரெட்டியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாளிதழ் செய்தியை படியுங்கள்.. சிந்தியுங்கள்...

இனம் இனத்தோடுதான் சேரும்...

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..

தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடா?

தமிழனை ஆள தெலுங்கு வந்தேறியா ?

வந்தேறிகளை புறக்கணிப்போம்..
தமிழராய் ஒன்றிணைவோம்...

உனக்கான அரசியலை நீ தேர்ந்தெடுப்பதில் என்ன தயக்கம் தமிழா...


உன்னிடம் உனது அரசியல் என்பதை சாக்கடை என அவர்கள் கூறி, அந்த சாக்கடையில் அவர்கள் வாழ்ந்து குடும்பம் நடத்தி, அந்த சாக்கடையிலேயே அவர்கள் பிள்ளைகளையும் இறக்கி விடுகிறார்கள்...

விஷமாய் மாறிவரும் கேன் தண்ணீர். அபாய எச்சரிக்கை...


இன்று ஒரு டீ, காபியின் விலையை விட, ஒரு கேன் தண்ணீரின் விலை என்பது அதிகம். இதில் இருந்தே வரும்காலங்களில் நாம் எவ்வளவு பெரிய பிரச்னையை சந்திக்கப் போகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இதைவிடவும், இவ்வாறு விலை கொடுத்து வாங்கும் குடிநீர் தற்போது மனித உயிர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகி வருகிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? நாள்கணக்கில் அடைத்துவைத்து விற்கப்படும் பாக்கெட், பாட்டில், கேன் தண்ணீர் விஷமாகும் அபாயம், மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்தபதிவு.

உங்கள் கடைக்காரர் விற்கும் கேன் தண்ணீர் தரமானதா ? எப்படி கண்டுபிடிப்பது ?

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது. ஆனால் கேன்களில் அடைத்து விற்கப்படும் 60 சதவிகிதம் தண்ணீர் தரமற்று இருப்பதாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். மார்க்கர் பேனாவை வாங்கியவுடன் அது எழுதுகிறதா என்று பார்க்கும் நாம் அதில் எக்ஸ்பைரி டேட் குறிப்பிடவில்லையே என்று ஒரு நாளும் கவலைபட்டதில்லை.

குறிப்பாக நமக்கு கிடைக்கும் கேன் தண்ணீரானது பெயரளவில் மட்டுமே மினரல் வாட்டர், உண்மையில் கடல் நீரையோ, ஆழ்குழாய் நீரையோ சுத்திகரிப்பு செய்தே கேன்களிள் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக இது போன்ற கேன் வாட்டர்கள் இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், Bureau of Indian Standards அமைப்பால் ISI mark பெற்றிருக்க வேண்டும்.

மிகமுக்கியமாக, சான்றிதழ் பெற சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு குடிநீர் நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை கூடம் அவசியம். அதில் பரிசோதனை செய்த தண்ணீர் மாதிரிகளை இந்திய தர நிர்ணய அமைப்புக்கு அனுப்பி குடிக்கத் தகுந்த தண்ணீர் என்று அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Bureau of Indian Standards அமைப்பு தண்ணீர் நிறுவனங்களில் கச்சா நீரை மாதம் இரு முறை சோதனை செய்யும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாட்டிலில் அல்லது கேன்களில் தொழில் நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றை எல்லாம் செய்வதில்லை, அப்படியே சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் கூட கேன் தண்ணீரை தயாரிக்கும் போது பல நேரங்களில் முறையான வழிகளை பின்பற்றுவதில்லை.

கேன் தண்ணீர் இப்படியா சுத்திகரிப்படுகிறது ?

தண்ணீர் நிறுவனங்கள் குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் சில விதிமுறைகளை பின்பற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கடினத்தன்மையற்றதாக மாற்ற டோஸிங் மெஷின் பயன்படுத்தபடுகிறது. அடுத்து மண் மற்றும் கார்பன் மூலம் வடி கட்ட வேண்டும். பிறகு நீரில் உள்ள தூசி மற்றும் அசுத்தங்களை அகற்ற மைக்கான் காண்டிரேஜ் முறை பின்பற்றப்படும். இதன்பின் ஆர்.ஓ மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புக்கள் நீக்கப்படும். இறுதியாக அல்ட்ரா கதிர்களை பயன்படுத்தி தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். கொடுமை என்னவென்றால் இந்த முறைகளை பல தண்ணீர் நிறுவனங்கள் முறையாக கடைபிடிப்பதில்லை.

உங்கள் தண்ணீர் கேன் எப்படி இருக்கும்?

கடைக்காரர் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கேன்களை மாற்ற வேண்டும். ஆனால் நமக்கு நன்றாகவே தெரியும் ஒவ்வொரு கடையிலும் தண்ணீர் கேன் பல வருடங்களாக அப்படியே இருக்குமென்று. இதனால் பாக்டீரியாக்கள் உருவாகும், இப்படிப்பட்ட கேன்களில் தண்ணீர் இருந்தால் இரண்டு நாட்களில் பாசி பிடித்து விடும். அடுத்த சில தினங்களில் புழு பூச்சிகள் உருவாகும். சோகம் என்னவென்றால் இப்படிப்பட்ட தண்ணீரையே பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இப்படிப்பட்ட தண்ணீர் கேன்களால் ஏற்படும் ஆபத்துகள்...

ஒரு லிட்டர் தண்ணீரில் மனித உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் தாதுக்கள் கிடைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 500 மில்லி கிராம் வரை அந்த தண்ணீரில் உப்பு இருக்க வேண்டும். ஆனால் சுத்திகரிக்கப்படுவதால் முதல் 10 மில்லி கிராம் உப்புதான் கிடைக்கிறது. இதனால் உடம்புக்கு எந்தவித நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடுகிறது. மாறாக நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதைவிடவும் ஆபத்தானது வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள் உருவாகிறது.

கேன் தண்ணீர் நிறுவனங்களின் மோசடிகள்...

முறையான அனுமதி இல்லாமல் சுமார் 450க்கும் மேற்பட்ட போலி தண்ணீர் நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னையின் 10 கேன் தண்ணீர் நிறுவனங்களின், 20லிட்டர் குடிநீர் கேன்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவை அனைத்துமே குடிக்க தகுதியில்லாத நீர் என்ற உண்மை தெரிய வந்தது மட்டுமல்லாமல், அந்த நீரில் கொடிய நச்சுத்தன்மையும், மனித மலத்தில் உற்பத்தியாகும் ஈகோலி, மற்றும் கோலி பார்ம் போன்ற பாக்டீரியாக்களும் இருந்ததாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாது மூலிகை நீர் என்று மக்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீதும் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தெரிந்த மோசடிகள் இவை, நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ நடக்கிறது. உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான தண்ணீரில் இப்படியான மோசடிகளை தடுக்க அரசால் மட்டுமே முடியும்.

கேன் தண்ணீர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை...

ISI மற்றும் தேதி அச்சிடாமல் வெளிவரும் தண்ணீர் கேன்களை வாங்கக் கூடாது.
அடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் கேனின் ஆயுட்காலம் 30 நாட்கள் மட்டுமே.

இனி என்ன செய்ய போகிறோம் ?

நமது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவு ஆறு, குளம், ஏரி எங்கும் நீர்வரப்பு இல்லை. இருக்கும் நீர்நிலைகளும் அழிந்து வருகிறது. இதுபோதாமல், மக்களின் தவறான நடவடிக்கைகளால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. போதிய நீர் இல்லாததால் தரமான குடிநீருக்காக கேன் தண்ணீரையே நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வீடுகளில் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் பெறப்படும் நீரும் தற்போது வறட்சி காரணமாக அதன் தன்மையை இழந்து விஷமாக மாறி வருகிறது. நிலத்தடி நீரில் க்ளோரைடு, நைட்ரேட், அயர்ன், ப்ளோரைடு பேன்றவை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதனால்தான் சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் செம்மண்ணாகவும், குடிப்பதற்கு தகுதியற்ற நீராகவும் இருக்கிறது.

இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு மழை நீர் சேகரிப்புத்தான். மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். அப்போது தான் நீரின் தன்மை மாற்றம் பெறும். அதிலும் ஆறு, குளம், குட்டைகளில் இருந்து கிடைக்கும் நீரில் ப்ளோரைடு இருக்காது என்பதால் அதனை அருந்துவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள். 1000 500 அடி ஆழ்குழாயில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரைக்காட்டிலும், நில நீர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரே சிறந்தது என்பதே உண்மை. மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் கேனாக வாங்கும் நமக்கு, இயற்கையான நீர்நிலைகளில் இருக்கும் நீரில்தான் மினரல்ஸ் இருக்கிறது என்ற உண்மை எப்போது புரியும்?

உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா.. கொள்ளு ரசம்...


கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்...

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும். மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்...

அரக்கோணத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்...


அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? வழக்கம் போல லஞ்சம் வாங்கி விட்டு, கண்டுக்காம இருந்து விடுவார்களா?

மணல் குவாரிகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடை கால தடை - தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு...


வாசியும் – நெற்றிக்கண்ணும்...


நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றானது , எல்லோர்க்கும், மூக்குத் துவாரதிற்குள் ஏறி , கீழிறங்கி நுரையீரலுக்கு வந்து விடும். அப்படி கீழிறங்காமல் . அதனை தடுத்து , மேலேற்ற வேண்டும் – இது ஒரு பயிற்சி..

இதனை உணர்த்தத் தான் நடராஜர் தன் இடக்காலை மேலே தூக்கி நடமாடுகின்றார்..

1. வாசி என்பது – இட கலை – சந்திர கலை ஆகும் – இதனை மேல் ஏற்றுவதற்குத் தான் உலகில் எல்லா யோகியரும் – ஞானியரும் அரும் பாடு படுகின்றனர்..

இந்த வாசிக் குதிரையைத் தான்  அகோரம் என்றும் , இந்த பயிற்சி செய்வோரை அகோரிகள் என்று அழைக்கின்றோம்...

நெற்றிக்கண்ணைத் திறந்து , ஆன்மாவைத் தரிசனம் செய்வதற்கு இந்த வாசி என்னும் காற்று வேண்டும்.

இந்த சந்திரனின் கலைகள் மொத்தம் பதினாறு...

இதனைக் கருத்தில் கொண்டே தான், நம் முன்னோர் , ஒவ்வொரு கோவில் முன்பும் , பதினாறு கால் மண்டபம் அமைத்து உள்ளனர் – அது வழியாக உள்ளே புகுந்து இறைவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லாமலே சொல்லியுள்ளனர்..

– அதாவது பதினாறு கலையுடைய சந்திரனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்து, உள்ளே புகுந்து ஆன்மாவை தரிசிக்க வேண்டும்..

நெற்றிக்கண்ணை திறப்பதற்கன திருமந்திரப் பாடல்...

மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி
காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி
ஆக்கு மனதை அசையாமல் தான்
தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே

ஆனால் , சன்மார்கிகள் , அருட்பா உரை நடையில் வள்ளலார் ” தக்க ஆசான் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார் என்று புறத்திலே இருக்கும் குருவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம்..

2. கர்ப்பக்கிரகமானது , எல்லாக் கோவில்களிலும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே அமைத்து இருப்பார்கள் = அதாவது , ஆன்மாவானது ஆயிரத்தெட்டு இதழ் கமலம் ( மூளையின் நடுவில் ஆழத்தில் ) நடுவே ஒளியாக இருக்கின்றது என்று காட்டியிருக்கின்றார்கள்..

நம் ஊர் திருவிழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நன்கு ஆய்ந்து – ( முதல் நாள் கொடியேற்றம் முதல் – கடைசி நாள் திருக்கலியாணம் வரை – ரத உற்சவம் வரை ) , அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொண்டால் , திருசிற்றம்பலத்திற்குள் நுழைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியும்..

ரகசியங்களை சாதனையில் புகுத்தி, வெற்றி கண்டால், திருசிற்றம்பலத்திற்குள் நுழையவும் முடியும்..

நம் வேத காலத்து ரிஷிகள் , எல்லா ரகசியங்களையும், யோக சாதனைகளையும் இதிகாசங்களாகவும், புராணங்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் சித்தரித்து வைத்து, நம் வாழ்க்கையின் அங்கமாக்கி விட்டார்கள்..

திருசிற்றம்பலத்திற்குள் நுழையும் ரகசியங்களை திருமந்திரம் – திருவாசகம் தெரிவிக்கின்றன. அதனை நன்கு ஆய்ந்து படித்தால் தெரிந்து கொள்ளலாம்...