18/01/2021
தொப்பை குறைய எளிய பயிற்சி...
இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.
இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.
அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
செய்முறை...
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.
அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது.
பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்...
தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடங்க வேண்டிய முதல் போர்...
சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்.
தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிற்க்கு துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது…
அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?
இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்..
யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா?
இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இந்த நொடிப் பொழுதே நாம் தொடுக்கும் போர்?
சிந்தி தமிழா.?
தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்…
தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்….
நம்புங்கள் முட்டாள் தமிழர்களே...
தெலுங்கு சின்னமேள சாதியை.. தெலுங்கு இசைவேளாலர் என்று திராவிட ஆட்சி அதிகாரத்தில் மாற்றி ஆணைப்பிறப்பித்த கருணாநிதி சாதி பற்று இல்லாதவர்..
நம்புங்கள் முட்டாள் தமிழர்களே..
தெலுங்கு உகாதி பண்டிகைக்கு திராவிட ஆட்சி அதிகாரத்தில் அரசு விடுமுறை ஆணைப்பிறப்பித்த கருணாநிதி தெலுங்கு மொழி பற்று இல்லாதவர்...
ஆரியமும் திராவிடமும் ஒன்றே... இருவரும் தமிழினப் பகைவர்களே...
வடுக ஆரியம் தமிழின வரலாற்றை திரித்து புரட்டு கதைகளை அவிழ்த்து நாசமாக்கியது...
பின்னால் வந்த திராவிடம் தன்னோட முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்துக்கொண்டு இருக்கிறது...
ஐயப்பன் மலையாளி, ஐயப்பன் யாருக்கு பிறந்தான் என்று வியாக்கினம் பேசுதுங்க,
சரி ஐயப்பன் மலையாளியாக இருந்தால் அவனுடைய ஆபரணங்களை வழிப்பாட்டிர்க்காக, தென்காசி எதற்கு கொண்டு வருகிறார்கள்?
இன்று வரை அச்சன் கோயில் இருந்து ஐயப்பனுடைய ஆபரணங்களை தென்காசி கொண்டு வருகின்றனர்...
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பகுத்து ஆராயாமல், சில பகுத்தச்சா பன்னாடைகள் முற்றிலும் புறக்கணித்து எள்ளி நகையாடுகின்றனர்...
கருணைக்கிழங்கை கொண்டு பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைப்பது எப்படி?
கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும்.
கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது...
தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு....
இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர்..
உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை.... குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது.
இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு.....
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..
தளராது இனமான விடுதலைக்கு தோள்கொடுப்போம்..
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்று மொழிக்காரர்களாக இருந்தமையாலா) நிலை நிறுத்திக்கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகு வைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசை திருப்பியும் வந்ததே இன்றைய தமிழனின் நிலைக்கு காரணம்...
விஜயனுக்கு முந்தைய அரசன் சேந்தன் மாறன்...
சேந்தன் மாறன் காசு...
ஈழத்தை விஜயனுக்கு முன்னரே ஆண்ட சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பற்றிய தென்காசி ராஜசுப்பிரமணியன் அவர்களின் கட்டுரை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னதழில் சூலை வெளியீட்டில் வந்துள்ளது.
இக்கருத்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழர்கள் ஆட்சி விஜயன் ஈழத்துக்கு வருவதற்கு முன்பே ஈழம் தமிழர் நிலமாக இருந்தது என்பதற்கு மேலும் நல்லதொரு சான்றாய் அமையும்.
இந்த வேந்தன் தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட ஒரு காசும் சிங்கள வரலாற்று ஆர்வலர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அக்காசில் எழுதியுள்ளது ராணா சிநதி நாமா (Rana Cinathi Nama) என்ற பாகத எழுத்துக்கள் என அவர் தவறாக படித்துள்ளார்.
ஆனால் திரு. ராஜசுப்பிரமணியன் இதை சேந்தன் மாறன் என படிக்கிறார்.
இந்த காசின் காலம் எனது கணிப்பில் கி.மு. ஏழாம் ஆறாம் நூற்றாண்டாகும்.
காசின் பின்புறம் கிளர் கெண்டை மீன் பொறிக்கப்பட்டுள்ளதாலும் காசில் உள்ள எழுத்துக்களில் தமிழுக்கு மட்டுமே உரிய எழுத்துக்களும் பாகதங்களில் இல்லாத எழுத்துக்களுமான றகரமும் னகரமும் உள்ளதாலும் மாறன் என்ற பெயர் சங்ககாலத்தில் பாண்டிய வேந்தருக்கே இருந்ததாலும் இதில் எழுதப்பட்டிருப்பது சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பெயரே என உறுதியாக கூற முடியும் என்கிறார்.
மகாவம்சத்தில் சேந்தனின் போர்:- மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது.
இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.
“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ”
[ மகாவம்சம் 15:127-131 ]
மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்...
மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை.
அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம்.
மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.
வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து
மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து
மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்
இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்
[ மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61 ]
பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்...
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான்.
அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் 'சேந்தன்' என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில் 'ஜயந்தவர்மன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும்.
வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும்.
தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று.
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன்
[ வேள்விக்குடிச்செப்பேடு வரி 30 ]
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி
[ சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11 ]
ஆகவே மகாவம்சத்தில் ஜயந்தன் என பாலியில் குறிக்கப்பட்ட அதே அரசனே காசில் காணப்படும் சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் என்பது ஆய்வின் முடிவு.
இதன் மூலம் விஜயனுக்கு முன்னரே இந்த பாண்டியன் ஈழம் ஆண்டதால் ஈழம் தமிழரின் பூர்விக பூமி என்பது மேலும் தெளிவாகிறது...
உரோம விருட்சம்...
உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.
அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.
அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.
இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.
இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும்.
இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.
மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...
கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை...
பெரும்பாலனவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும்.
பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். மேலும் செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டு கொள்வார்கள்.
இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரபஞ்ச சக்திகளையும், நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதனால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்கள் சொல்வது அதிக பலன் தரும். இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும்.
இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது.
நாயுருவி, சீதெவிசெங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டொலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.
நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை நாமும் அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக் கொள்ளுங்கள்..
சில சமுதாயங்களில் மணமகன் பெண்ணுக்கு எப்போதும் உன்னைக் காப்பேன் என்று ரசை அணிவிக்கும் சடங்குகள் உண்டு..
அறிவியல் பார்வை...
தூதுவளை செடியை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக சளித்தொல்லைகளுக்கு தூதுவளை செடியை பயன்படுத்துகிறோம். ஆனால் அதே தூதுவளை செடிக்கு காப்பு கட்டி அதாவது பட்டுநூல் கற்றாளை நூலில் மஞ்சள் கிழங்கை கட்டி அந்தக் கயிற்றால் செடியில் சுற்றிக்கட்டி 40 நாட்கள் சாடச மந்திரத்தை 108 முறை உச்சரித்து செடிக்கு தேங்காய் உடைத்து, தூப, தீபம் காட்டி அதன் பின் செடியை வேருடன் பிடுங்கி உலர்த்தி பொடி செய்து பல்வேறு அனுபானங்களில் பயன்படுத்த 40 வகையான நோய்களைக் குணமாக்கும். அதாவது அந்தக் காப்புக்கயிற்றின் மூலம் செடி மந்திரங்களை சேமிப்பதனால் 40 வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.
அதுபோல நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்கு படுத்துகின்றன அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.
இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்து கொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள். நம்முடைய எண்ணங்கள் மற்றும் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது.
நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்...
வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை...
தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம்.
இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.
எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்...
நோய்களை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்...
மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.
ஒட்டவே ஒட்டாது...
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு சத்து அதிகரிக்கும்...
உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.
விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள்...
மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.
பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலரும் சற்று சிந்தித்து உணவு தயாரிக்கும் முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதர்க்காகவே இந்த பதிவு.
உங்களை திரும்பவும் மண்சட்டியில் சமைக்க சொல்லவில்லை ஆனால் மண்சட்டியில் தயார் செய்யும் உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பது மட்டும் முற்றிலும் உண்மை...
தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...
அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......
திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.
இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....
தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...
தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்? வந்தேறி திராவிடர்களே...
ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.
தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.
அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.
காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.
கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..
இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும், சிறுபான்மையரோ..
அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..
இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.
தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..
இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை என்று ஓலமிடுவதின் காரணம்....
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்...
மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.
கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்...