28/03/2019

முகர்சிங் இசைக் கருவி...


முகர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளில் ஓர் உன்னத இடத்தைப்  பிடித்திருந்தது "முகர்சிங்" வாத்தியம். அந்தக் காலத்தில் சில வித்துவான்கள்  தங்கள் கச்சேரிகளில் மிருதங்கத்தைப் பக்கவாத்தியமாக வைத்துக் கொள்வது போன்றே, முகர்சிங், கடம், கஞ்சிரா , கொன்னக்கோல், கெத்து  போன்ற மற்ற உப பக்கவாத்தியங்களையும் வைத்துக் கொண்டு கச்சேரி செய்வது  வழக்கமாகும்.

இதுபோன்று பக்கவாத்தியம், உப பக்கவாத்தியம் என்று எல்லா வித்துவான்களையும்  இணைத்துக் கொண்டு கச்சேரி செய்வதைப் புல்பெஞ்ச் கச்சேரி" என்று பெயர்.

சமீபகாலம் வரை சீர்காழி கோவிந்தராஜன் அவரது பாட்டுக் கச்சேரியிலும்,  குன்னக்குடி வைத்தியநாதன் அவரது வயலின் கச்சேரியிலும் முகர்சிங்கை ஒரு  பக்கவாத்தியமாக வைத்துக் கொண்டு கச்சேரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  ஆனால் இன்று பாட்டுக் கச்சேரியிலும், வாத்தியக் கச்சேரியிலும் ஏன் தாளவாத்தியக்  கச்சேரிகளிலும் கூட இந்த முகர்சிங் இசைக்கருவி அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்பதே  உண்மை நிலையாகும்.

ஒரு சிறிய கம்பியினாலான மோர்சிங் என்ற இசைக்கருவி ஓர் அருமையான கனவாத்தியமாகும். இதனை "மூர்ச்சங்க்" என்றும் கிராமங்களில் அழைப்பதுண்டு.  இந்த இசைக்கருவியை வாயினால் பற்றிக்கொண்டு வாசிக்கப்படுவதால்  இதனை ஹிந்தி மொழி இலக்கியங்களில் (சதுர்புஜதாஸ், சிர்தாஸ் ஆகியோரின் கவிதைகளில்) "முகர்சங்க்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அகோபிலர் எழுதிய "சங்கீத பாரிஜாதம்" என்ற வடமொழி நூலிலும் இது "முகசங்க்" என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இதனை முகத்தின் அருகில், வாயில் வைத்து வாசிப்பதாலும், இது சங்கு போன்ற அமைப்பில், சங்கு வடிவத்தில் உள்ளதாலும் இதனை "முகச்சங்கு" என்றும், முகச்சங்கம், நுகர்சங்கு , முகர்சிங், மோர்சிங் என்றும் அழைக்கின்றனர். இதனை ஆதிகாலத்தில் மூங்கிலால் செய்துள்ளனர். மலைவாழ் மக்கள் மற்றும் கிராமியச் சிறுவர்கள் இதனை மூங்கிலால் செய்த விளையாட்டாக வாயில் வைத்து இசைத்து மகிழ்ந்துள்ளனர். சுமார் ஏழு அல்லது எட்டு சென்டிமீட்டர் நீளம் கொண்டது இச்சிறு இசைக்கருவி. இது இரும்பு எஃகினால் செய்யப்படுகின்றது.

மேலும் சிவபெருமானின் திரிசூலம் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் உடல் குதிரைலாடம் போன்ற வடிவம் உடையது. இதன் நடுவில் இரு புறங்களையும் விட சற்று நீளமான ஒரு நாக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர் மோர்சிங்கை இடது கையின் உள்ளங்கையினால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கிடுக்கிப் போன்ற பாகத்தைப் பற்களில் கடித்துக் கொள்கின்றனர். அப்பொழுது கம்பியினாலான நாக்குப் பகுதியை வலது கையின் ஆள்காட்டி விரலினால் தட்டி மீட்டப்படும். வாசிப்பவரின் வாய் ஒலியை உண்டாக்குகின்றது. அதை வெவ்வேறு விதமாக வாயில் வைத்துக் கொள்வதாலும், வாய் மூலம் விடும் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துவதாலும், நுண்மையான அழகிய ஒலிகள் இதில் உண்டாக்கப்படுகின்றன.

முகர்சிங் என்ற இந்த இசைகருவி இடைக்காலத்தில் தோன்றி வளர்ந்து வருகின்றது. மேலும் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், சில வெளிநாடுகளிலும் கூட இது வாசிக்கப்பட்டு வருகின்றது. இதில் அழகிய பல தாளச் சொற்கட்டுக்களை வாசிக்கின்றனர். தாளக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்களையும் இதில் இலாகவமாக வாசிக்க முடியும். மேலும் சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் இது கச்சேரிகளில் சுருதியை நிலைப்படுத்தும் செயலையும்கூட செய்கின்றது. பல்வேறு வகையான சுருதிகளுக்கு ஏற்ப 5 முதல் 10 வகையான சுருதிகளில் கூட பல முகர்சிங் இசைக்கருவிகளை வாசிப்பவர் வைத்திருப்பார். சில நேரங்களில் சுருதி அளவுகளில் சிறிது மாற்றம் செய்வதற்காக அதில் மெழுகினை வைத்து சுருதியை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்வர்.  நாக்கினால் தட்டியும், உதட்டின் மூலம் காற்றினை ஊதியும் வாசிக்கும்பொழுது சில நுண்மையான இசை ஒலிகளை உண்டாக்கி முகர்சிங் கலைஞர்கள் கைதட்டினையும், பாராட்டுதலையும் பெறுவதுண்டு. இதில் வெளிப்படும் இரும்பு எஃகின் வெங்கல நாதமும், சுருதி நாதமும் கேட்பதற்கு மிகவும் இரம்யமாக இருக்கும்.

கச்சேரியில் சுருதியின் நாதத்தையும், மிருதங்கத்தின் சுருதி நாதத்தையும் இது பாடகருக்குக் கூடுதலாகக் கொடுக்கும். மிருதங்கத்தில் வாசிக்க பெறும் ஜதிகளை இதில் வாசிக்கும் போதும், மிருதங்கத்தோடு இணைந்து இதில் சொற்கட்டுகளை வாசிக்கும்போதும் கச்சேரி வெகு ஜோராகக் களைகட்டும்...

திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவோம் தமிழினமே...


7ல் ஒன்று கூட ஜெயிக்க கூடாது.. பாமக வை வீழ்த்த திமுக போடும் செம பிளான்...


https://youtu.be/2T5we-whfKw

Subscribe The Channel For More News...

எண்ண அலைகளின் சக்தியும் ஆழ்மன ஈடுபாடும்...


உலகில் நாம் காணும் அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன..

இந்த உண்மையை அணு
விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி
இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.

எதை சாதிக்க விரும்புகிறோமோ
அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காண தீர்வு வழி முறைகள் ஆழ்மனம் பெற்றுத் தரும்..

ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அதுவெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை.

அந்த விருப்பமானது நிறைவேற்ற
முயற்சி தேவை. சரிமுயற்சி செய்கிறோம். எப்போது சாத்தியப்படும்.

விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்திய மாகிறது.

மின்அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.

அணைத்து பொருள்களும் அலை
வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

நமது எண்ணங்களும் அலை வடிவில்
நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.

வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும்.

ஆழ்மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக
இருக்கிறது.

ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

மனிதனின் எண்ண அலைகள்
தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை. ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன்
தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம்.

உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.

ஆழ் மனசக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம்.

அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட..

தனி மனிதனானாலும் சமூகமானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைப் பெறத் தொடங்குகின்றன.

மனதில் அன்பு இருந்தால், அன்பு
மிக்க சமுதாயம் உருவாகும்.
எண்ணுதல் முடிதல் வேண்டும்..
நல்ல சிந்தனை வளம் பெற வேண்டும்..
வெற்றி பெற்றிட வேண்டும்..
உலகிற்கு வேதத்தை உணர்த்திட வேண்டும்.

உடல்நலம் காத்திட வேண்டும்.
சிறந்த மருத்துவம் தேர்ந்திட வேண்டும்.
அன்பும் கருணையும் வேண்டும்.
அதற்கு அறிவை அறிந்திடல் வேண்டும்.
கலைகளை கற்றிட வேண்டும்.
நல்ல நட்பினை பெற்றிட வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் பூரண
உடல்நலம், மனவளம் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், இயற்கையை பற்றியும் தெளிந்த அறிவை பெற வேண்டும்.

பேறாற்றலான இறைநிலைப் பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும் எல்லா மனிதரும் உணர வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை
உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கி உதவி செய்து வாழ வேண்டும்.

தனிமனித அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக அமைதி பெற வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய இறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். (வள்ளலார்).

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ..

எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம்
முறையாக இயங்குகிறதோ..

அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை...

அதிமுக வுற்கு டஃப் டைம்.. சரியும் வாக்குகள்.. சிக்கலை ஏற்படுத்தும் டிடிவி தினகரன்...


https://youtu.be/-ZYVFX2AbqU

Subscribe The Channel For More News...

இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க? தூத்துக்குடியில் பாஜக தமிழிசையிடம் வாக்குவாதம் செய்த மக்கள்..


இந்த நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய வந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தமிழிசை அங்கு பிரச்சாரம் செய்ய வரக்கூடாது. இப்போது மட்டும் அவர் ஏன் இங்கு வருகிறார் என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது எதுவும் செய்யாதவர் இப்போது மட்டும் ஏன் ஓட்டு கேட்டு வருகிறார் என்று மக்கள் அவரிடம் சண்டையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு வந்து சமாதானம் செய்து, தமிழிசையை பிரச்சாரம் செய்ய வைத்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, தமிழிசை பேசிய செய்தியாளர் சந்திப்பு ஒன்று இணையத்தில் வைரலானது.

1000 பேர் சாக வேண்டியது, நல்ல வேளையாக 13 பேர் மட்டுமே இறந்து இருக்கிறார்கள் என்று தமிழிசை அதில் குறிப்பிட்டு இருந்தார். இது மீண்டும் வைரலாகி பெரிய சர்ச்சையானது...

தேங்காய்களுடன் லாரி கடத்தல் திருட்டு திமுக பொள்ளாச்சி மாணவரணி தம்பி கைது...


தமிழர்களை ஏமாற்றி அழிக்கும் இந்தியமும்.. திராவிடமும்...


ஒரு மாநிலத்தில் 30 %விழுக்காடு  காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே சொல்லப்ட்டிருந்தும் , தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது...

அதில் மேலும் கொடுமை.. மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும், கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது..

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது..

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு..

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது...

மொழி இழந்தோம்..
மானம் இழந்தோம்..
அரசியல் அறிவை இழந்தோம்..
நிலம் இழந்தோம்..
காடு மலை இழந்தோம்..
இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு..

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ, அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும்..

அனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி..

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அறையல்வாதிகளுக்கு வேண்டும்..

ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும்..

அனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு..

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம்.. குறைந்த பட்சம், மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ?

சிந்தியுங்கள்...

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..

இவை எல்லாம் மறந்து மானங்கெட்டு பாடுவோம் இந்தியனாய் ஜன கன மன என்று..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்

கெத்து காட்டும் டிடிவி தினகரன்.. எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்...


https://youtu.be/f5UNerFuRIA

Subscribe The Channel For More News...

தேர்தல் சமயத்தில் கூட அரசியல்வாதிகள் மாறி மாறி சேற்றை வாரி வீசிகொள்கின்றனரே தவிர இதைப் பற்றி பேசுவதில்லை...


தொண்டர்களும் நன்றாக முட்டு கொடுக்கின்றனர்....

முட்டளாக்கபடுவது மக்களே...

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு...


நம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடல் முழுவதும் அக்குப்பிர்ஷர் புள்ளிகள் உள்ளன. வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.

அதனால் வலி குறைகிறது. உடலிலுள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்துத் தளர்த்துவதால் நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளைக் காணலாம்.

தலைவலி: நமக்குப் பிடிக்காத ஒரு வேலையைப் பிறர் நம்மைச் செய்யச் சொல்லும்போது தலை வலிக்கிறது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தால் தலைவலி குறைவதுபோல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்கிறோம்.

அடிக்கடி மாத்திரைகள் உட்கொள்வதால் அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படிப் போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்புப் புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலைக் குறிக்கும். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டைக் குறிக்கும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இரண்டு புள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். தளர்த்தும் போது மூச்சை வெளியே விட வேண்டும். 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்து விட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால் மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு.

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்துத் தளர்த்தும் போது அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். 10 விரல்களிலும் இவ்வாறு நாள்தோறும் இரண்டு முறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாகக் குறைகிறது.

மலச்சிக்கல், செரிமானமின்மை, அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் நெருக்கமாகச் சேர்க்கும் போது புறங்கையில் ஒரு கோடு தெரியும் அந்தக் கோடு முடியும் இடத்தில் ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் Fp.H.4  என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்துத் தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்துத் தளர்த்த வேண்டும்.

தசையின் மேல் இல்லாமல் எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம். மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு ஆன்டாசிட் மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலைத் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. L14 என்ற புள்ளியை இரண்டு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாகத் தீர்க்கலாம்.

கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்திலுள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையைக் குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தைக் குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இரண்டு புள்ளிகளிலும், மற்றொரு கையின் இரண்டு விரல்களால், 14 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் கட்டை விரலைக் கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில் 14 முறையும் சுழற்ற வேண்டும் இரண்டு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாகக் குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் நாள்தோறும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது சிறிதாக மாத்திரையின் அளவைக் குறைத்து கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.

நம் கையில் சிறுவிரலின் நகத்திற்குக் கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது காற்று சக்தி அதிகரித்து இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறைகிறது. தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும், மூக்கிலிருந்து தலைக்குச் செல்லும் நேர்க்கோடும் சந்திக்கும் இடத்தில்  இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறை அழுத்தம் கொடுக்கும் போது படபடப்பு, மன அழுத்தம் இவை குறைவதால் இரத்த அழுத்தம் சீராகிறது. H9, GV20 இப்புள்ளிகளில், 14 முறை காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீரடைகிறது.

இதைத் தவிர காலில் பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறை அழுத்தம் கொடுக்கும் போது இரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறை மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால் இரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது...

பாஜக ஒரு போதும் நீட் விலக்கு அளிக்க மாட்டோம் என கூறும் கேடி ராகவன்...


மற்ற கட்சிகள் பேசுவதை விட, இறுதியில் ஆழி செந்தில்நாதன் அவர்கள் பேசுவதை முழுவதும் கேட்கவும். பாஜகவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்...

https://youtu.be/-m3txifb984

Subscribe The Channel For More News...

பிரபஞ்ச சக்தி...


சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால் தான் தாங்கள் கண்டு அறிந்த உண்மை சாராம்சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தெளிவாக கூறி வைத்தனர்.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை கோட்பாடு கொண்டவர்கள் தான் சித்தர்கள்.

ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறிந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழுதியுள்ளனர்.

அதிலும் மனிதனை ஆறறிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை பகுத்தறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற பல வழி முறைகளை குறிப்பிட்டுள்ளனர்.

ஆரோக்கியம் என்பது மருந்து மாத்திரை களைக் கொண்டது மட்டு மல்ல.

மனம் தெளிவடைந்து, புத்தி நன்கு கூர்மையடைந்து, ஆழ்ந்த சிந்தனைகளோடு, அமைதியாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்கின்றனர்.

அமைதியும் ஆனந்தமும் கொண்ட வாழ்க்கை முறை ஆரோக்கியமாக அமையும்.

இந்த ஆரோக்கிய வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை சித்தர்கள் தெளிவாக வகுத்துரைத்துள்ளனர்.

அதில் தியான முறை, சரசு வாசமுறை, வாழ்க்கை நெறிமுறை போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சரசுவாசத்தின் மூலம் தான் உடலில் ஒடுங்கியிருக்கும் சூட்சமங்களை கண்டறிய முடியும்.

இந்த சரசுவாசப் பயிற்சி பற்றி வர்ம மருத்துவத்தில் அகத்தியர் தெள்ளத் தெளிவாக குறி ப்பிட்டுள்ளார்.

இது போல் அனைத்து சித்தர்களும் அவரவர் நிலையில் விளக்கமாக கூறியுள்ளனர்.

இருப்பினும் அகத்தியர் தன்னுடைய வர்ம பரிகார முறையில் குறிப்பிடும் முறைகள் மனித உடம் பில் உள்ள நாடி நரம்புகள் உயிர் மூச்சு ஒடுங்கும் இடங்கள், நரம்பு நிதானம், மனநிலை, மனிதனை ஆட்கொள்ளும் சக்தி இவைகளைப் பற்றி மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சரசுவாசத்தினால், உயிர்நிலை ஒடுங்கும் இடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி தெளிவு படுத்தினர்.

இவற்றில் மனிதன் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகள், இல்லற வாழ்க்கை முறை, ஞானிகள் வாழ்க்கை முறை , தாய் சேய் நலம் முதலான வாழ்க்கை முறைகளையும், அவற்றை எவ்வாறு நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அகத்தியர் ஞானவெட்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சரநிலை சுவாசம் தெரிந்த வர்களால்தான் நரம்பியல், எலும்பியல் துறைகளையும், அபூர்வ சிகிச்சை முறைகளையும் துல்லியமாக கண்டறிந்து செயல்படுத்தும் வர்ம மருத்துவர்களாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

சரநிலை சுவாசம், நரம்பு நிதானம் இவைகளை அறிந்த பின் தான் வர்ம விளக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதாவது சரப்பயிற்சி,
சரநிலை சுவாசம், உச்சந்தலை சுவா சம் சித்தர்களால் கையாளப்பட்டு வந்த மாபெரும் சக்தி வாய்ந்த உன்னதமான நிலையாகும். இந்த நிலையை அறிந்தவர்கள் மிகவும் சிறப்பாக வர்ம மருத்துவத்தை கையாளுவார்கள் என்பது சித்தர் களின் கூற்று.

இதைத்தான் சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்
- என்றார்கள்.

வர்ம மருத்துவர்கள் பொதுவாக பிரபஞ்ச சக்தியை உணர்ந்து தான் வர்ம மருத்துவத்தைக் கையாண்டு வந்துள்ளார்கள்.

பிரபஞ்சத்திற்கும், மனித உடலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.

மேலும் அகத்திய பெருமான், பிர பஞ்சத்தை அறிந்தவர்களே மனித உடலை அறிய முடியும்.

மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து அவற்றை சீராக்க முடியும் என்கிறார்.

பிரபஞ்ச சக்தி தான், மருத்துவ உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகும்.

இதனால் சித்தர்கள் பிரபஞ்ச சக்தி கொண்டு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்...

மின்சாரமே இல்லாம எப்படி கட்டணம் ஏத்துவீங்க திருட்டு திமுக ஸ்டாலின் அவர்களே...


எகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு கருவிகள்.. தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிப்பு...


திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் கிராமம், பழங்காலத்தில் இரும்பு கருவிகள் உற்பத்தி மையமாக இருந்துள்ளதை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

இங்கிருந்து, எகிப்து பிரமிடுகளுக்கு இரும்புக் கருவிகள் கொண்டு சென்றதற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.

கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை சார்பில், திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மேற்பரப்பு ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழங்கால வரலாற்று சான்றுகள், பொருட்கள் கிடைத்து உள்ளன. இக்கிராமத்தின் ஒரு பகுதி, 'கருமண் பள்ளம்' என, அழைக்கப்படுகிறது.

நாணயங்கள் - இங்கு இரும்பு தாதுக்கள் அதிகளவு இருந்ததும், வெட்டி எடுக்கப்பட்டதும், தெரியவந்துள்ளது.

கொல்லன் தோட்டம் என்ற பகுதியில், இரும்பு கழிவு அதிக அளவில் உள்ளது.

இரும்பைக் கொண்டு, போர் மற்றும் வேளாண் கருவிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இங்கு கிடைத்துள்ள மண்பாண்ட சிதறல்கள், சிவப்பு வண்ண மண்கல பண்பாடு இருந்துள்ளதை காட்டுகிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலை புதுப்பித்த போது, மருந்து சாத்துவதற்காக, மூலவர் சிலை அகற்றப்பட்டது. சிலையின் அடியில், பழங்கால பொற்காசுகள், நான்கு நவரத்தின கற்கள், இரு செப்பு நாணயங்கள், 16 பிரிட்டிஷ் நாணயங்கள், நவரத்தின கற்கள், யந்திர செப்பு தகடு ஆகியவை இருந்தன.

இவை, 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகவும், விஜய நகர பேரரசு ஆண்ட காலத்திய நாணயங்கள், 'வீரராய பொற்காசு' என, அழைக்கப்பட்டதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அபூர்வமானது - இதுகுறித்து, ஆய்வாளர் ரவி கூறியதாவது..

இடுவாய் நகரம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கியதும், மிகச்சிறந்த வணிக மையமாக திகழ்ந்ததும், ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. கொங்கு பெருவழியில், கிளை வழி ஒன்று உள்ளதும், போக்குவரத்து அதிகம் இருந்ததால், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க, கிணறு அமைக்கப்பட்டிருந்தது.

இது, ராணி மங்கம்மா ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. குப்தர்களின் தாக்கமும் இதில் உள்ளது.

அதேபோல், 3000 ஆண்டு களுக்கு முந்தைய, சாம்பல் மேடு பகுதியும், 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படுவது, அபூர்வமான ஒன்று.

பழங்காலத்தில், ஆயிரக்கணக்கான மாடுகளின் சாணங்களை ஒரே இடத்தில் குவித்து, அவற்றை தீ மூட்டி, மாடுகளை அதன் மேல் நடக்கவிட்டு உள்ளனர்.

கால்நடைகளை, நோய்கள் தாக்காமல் இருக்க, இது மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, குண்டம் திருவிழா, அதன் அடிப்படையிலேயே நடக்கிறது.

இரும்பு, எக்கு கருவிகள் தயாரிப்பில், சிறந்த தொழில் நுட்பம் இங்கிருந்துள்ளது.

எகிப்து பிரமிடுகளுக்கு, இங்கிருந்து இரும்பு கொண்டு சென்றதாக, வரலாற்று தகவல் உள்ளது.

இங்கு கிடைத்துள்ள இரும்பு கசடு, இரும்பு கால பண்பாட்டை நினைவுபடுத்துகின்றது.

பொதுமக்களின் வழங்காற்று பாடலில், ஒளி நகரம் என்ற பெயர் வழக்கில் இருந்தது அறியப்படுகிறது.

உலைப்பட்டறைகளில் இருந்து வரும் ஒளி வீச்சைக்கொண்டும், இரும்பு உருக்கும் தொழில், இரவு பகலாக நடந்ததால், சம்மட்டியில் ஒலி, இடி முழக்கத்தை போல் இருந்ததால், 'இடிவாய்' என்ற பெயர் மருவி, இடுவாய் என, காரணப்பெயர் உருவாகியுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்...

உடன்படிக்கை பேழையின் பிரதிபலிப்பாக அன்னை மரியாள்...


தமிழகத்தில் 15 தாய்மார்கள் மரணம்...


அஸ்வின் செய்தது சரியா தவறா என விவாதங்கள் நடத்தும் சோ கால்டு விமர்சகர்கள். இளைஞர்கள்.

தமிழ் நாட்டில் அதுவும் கோவையில் நடந்தேரியிருக்கும் இந்த கொடுமையை பத்தி இனியேனும் பேச வேண்டும்...

உடல் எடையை குறைக்க.. தொப்பையை குறைக்க வீடியோ பாருங்க...


https://youtu.be/3bK0HEJ5gyA

Subscribe The Channel For More Tips...

ஸ்டாலின் எப்படி துணை முதல்வர் ஆனார்.. திருமாவளவன் நாட்டிற்கே தேவையில்லை வெளுத்து வாங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்...


சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் திமுக கூட்டணியில் போட்டியிடும் திருமவளவனையும், ஸ்டாலினையும் பற்றி இருந்தது அவை என்ன என்ற பார்க்கலாம்..

நம் சிதம்பரத்தில் அ.தி.மு.க கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வி.சி.க வேட்பாளரை பற்றி உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். அவருக்கு அடையாளம் கொடுத்தது யார் தெரியுமா?

நான்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சுற்று பகுதி சுவர்களில் வீச்சரிவாளுடன் ரத்தம் சொட்டும் வரை படங்களை அதிகம் பார்க்க முடியும்.

இந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். இதற்காக திருமாவளவனுடன் கூட்டு சேர்ந்து அரசியல் நாகரிகத்தை உண்டாக்க அவருக்காக பொதுக்கூட்டம் நடத்தி அதில் அவரை பேச வைத்தேன்.

அவரது கட்சித் தொண்டர்களுக்கும் அரசியல் பயில பல இடங்களில் பயிலரங்கம் நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன்.

ஆனால்,  அவர் அதையெல்லாம் கேட்கவில்லை. அவருடைய இளைஞர்களுக்கு வேறு மாதிரியாகப் பயிற்சி (பெண்களை திருமணம் செய்தல் ) கொடுத்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது.

விசிக கொடியைப் பார்த்தாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு மாறியது.ஈழத்தமிழர் பிரச்னையில் இருவரும் இணைந்து போராடினோம். ஆனால், அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை .

அவருடைய போக்கு, மக்களுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலேயே இருந்தது. அவர் நடத்துவது கட்சியே இல்லை. அந்தக் கட்சி நாட்டுக்கு தேவையில்லை அவரும் தேவையில்லை .

மக்கள் நலனுக்காக கட்சி நடத்துகிறவர்கள் மத்தியில் அவரோ வேறு காரணங்களுக்காக கட்சி நடத்துகிறார். அவருடைய நடவடிக்கை எல்லை மீறியது. அதனால்தான், 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக அறிக்கை மூலம் என் ஆதங்கத்தை தெரிவித்தேன் அதனால் சிலர் என்னை சமுதாய வெறியன் என்றார்கள் இன்று பல இடங்களில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது இப்போது தெரிகிறதா?

அப்போதைய முதல்வர் அவருடைய தந்தை கருணாநிதி அவரிடம் கூறி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க செய்ததே நான்தான். ஆனால், என்னைப் பற்றி ஏதோதோ தரம் கெட்ட வார்த்தைகளில் பேசுகிறார்.

ராமதாஸ் திருமாவளவன் குறித்து பேசிய பேச்சுக்கள் வி. சி. க கட்சியை சேர்ந்த வன்னியரசு, ஷா நவாஸ் போன்றவர்கள் விவாதங்களில் பாமகவை சாதி கட்சி என்றும் பொது கூட்டங்களில் சிலர் ஒருமையில் பேசியதன் வெளிப்பாடாக சரியான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் பாமக குறித்து பேசினால் பதிலடி இன்னும் பலமாக இருக்கும் என்று பாமக நிர்வாகிகள் கருதுகின்றனர்...

உளவியல் - நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா.?


https://youtu.be/dkXV4aYftj4

Subscribe The Channel For More News...

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...


வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.

இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...

பேழையின் பிரதிபலிப்பாக கர்ணன்...


தொடர்புகளின்றி எதுவும் இங்கே இயங்காது...


சுப்பிரமணிய சுவாமி ஒரேயொரு பேட்டி பாஜக குளோஸ்...


கேள்வி : நீங்களும் சவ்கிதர் தானே.?

சு_சாமி : நான் சவுகிதார் இல்ல, பிராமணன். நான் சவுகிதார் ஆகமுடியாது.

நான் சொல்றதை சவுகிதார் கேட்கணும்.

கேள்வி : 7பேர் விடுதலை, நீட் தேர்வு குறித்து..?

சு_சாமி : அவாளை எல்லாம் விடுதலை செய்ய முடியாது. நீட் தேர்வையும் தடை செய்யமுடியாது.

அதெல்லாம் தமிழிசை மாதிரியான மாநிலத்தில் உள்ளவா சொல்லலாம். முடிவெடுப்பது டெல்லியில் உள்ள நாங்கள்தான். 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை.

கேள்வி : இதெல்லாம் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்களே.?

சு_சாமி : அந்த தேர்தல் அறிக்கையை தூக்கி குப்பையில் போடுங்கோ.

இன்னும் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. என்று திறந்த மனதாய் பேட்டி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

தேர்தல் முடிவதற்குள் இவரை இன்னும் இரண்டு பேட்டி எடுத்தால் போதும். தமிழக பாஜக குளோஸ்.

பத்திரிக்கையாளர்களே செய்வீர்களா?

ரத்தசோகை போக்கும் பேரீச்சம்பழம்...


பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும்.

ரத்தசோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது.

பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம்...

அமானுஷ்யம் - தற்கொலை செய்து கொண்டவரின் ஆன்மாவிற்கு என்ன நடக்கும்.?


https://youtu.be/3bDMOGA6jSM

Subscribe The Channel For More News...

முகத்தில் படந்திருக்கும் கரும்புள்ளிகள் போக...


ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

ஜாதிக்காய் அரைத்துப் போடலாம்.

முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்...

அதிமுக டெபாசிட் காலி.. டிடிவி க்கும் ஆப்பு.. மாஸ் காட்டும் சுயேச்சை வேட்பாளர்...


https://youtu.be/2VX6A273QwE

Subscribe The Channel For More News...

சட்டவிரோத வடமாநில அடியாள் கும்பலை வைத்து தமிழர்களை தாக்கும் சுங்கச் சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்...


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் இன்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள  தொழுப்பேடு சுங்கச் சாவடியில் வடமாநில கும்பல் அவரது காரை மறித்துள்ளனர். அந்த வாகனத்திற்கு இந்தியா முழுதும் செல்வதற்கான உரிமம் பெற்ற அட்டையைக் காண்பித்தும் அந்த கும்பல் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டுள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் இப்படியான வடமாநில அடியாட்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சட்ட விரோத அடியாட்களுக்கு மக்களின் வாகனங்களை மறிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. எந்த விதியின் அடிப்படையில் இந்த அடியாட்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

 இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து சுங்கச் சாவடிகளும் இழுத்து மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பல்வேறு சுங்கச் சாவடிகள் காலக்கெடு முடிந்த பின்னரும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுங்கக் கட்டணத்தின் பெயரால் மிகப் பெரும் பகல் கொள்ளை இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கொள்ளைகளுக்கு மத்தியில், தமிழ் தெரியாத வடமாநில கும்பலை நிறுத்தி வைத்து தமிழர்களை மிரட்டும் வெட்கக் கேடான செயல் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும்.

சுங்கச் சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து எழுப்ப வேண்டும்.

- மே பதினேழு இயக்கம்...

பாஜக 5 தொகுதிகளிலும் தோற்க வேண்டும் நினைவில் கொள் தமிழா...


மதுரை மீனாட்சி அம்மன் கோவில்...


மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காண முடியும்...