சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் திமுக கூட்டணியில் போட்டியிடும் திருமவளவனையும், ஸ்டாலினையும் பற்றி இருந்தது அவை என்ன என்ற பார்க்கலாம்..
நம் சிதம்பரத்தில் அ.தி.மு.க கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வி.சி.க வேட்பாளரை பற்றி உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். அவருக்கு அடையாளம் கொடுத்தது யார் தெரியுமா?
நான்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சுற்று பகுதி சுவர்களில் வீச்சரிவாளுடன் ரத்தம் சொட்டும் வரை படங்களை அதிகம் பார்க்க முடியும்.
இந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். இதற்காக திருமாவளவனுடன் கூட்டு சேர்ந்து அரசியல் நாகரிகத்தை உண்டாக்க அவருக்காக பொதுக்கூட்டம் நடத்தி அதில் அவரை பேச வைத்தேன்.
அவரது கட்சித் தொண்டர்களுக்கும் அரசியல் பயில பல இடங்களில் பயிலரங்கம் நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன்.
ஆனால், அவர் அதையெல்லாம் கேட்கவில்லை. அவருடைய இளைஞர்களுக்கு வேறு மாதிரியாகப் பயிற்சி (பெண்களை திருமணம் செய்தல் ) கொடுத்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது.
விசிக கொடியைப் பார்த்தாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு மாறியது.ஈழத்தமிழர் பிரச்னையில் இருவரும் இணைந்து போராடினோம். ஆனால், அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை .
அவருடைய போக்கு, மக்களுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலேயே இருந்தது. அவர் நடத்துவது கட்சியே இல்லை. அந்தக் கட்சி நாட்டுக்கு தேவையில்லை அவரும் தேவையில்லை .
மக்கள் நலனுக்காக கட்சி நடத்துகிறவர்கள் மத்தியில் அவரோ வேறு காரணங்களுக்காக கட்சி நடத்துகிறார். அவருடைய நடவடிக்கை எல்லை மீறியது. அதனால்தான், 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக அறிக்கை மூலம் என் ஆதங்கத்தை தெரிவித்தேன் அதனால் சிலர் என்னை சமுதாய வெறியன் என்றார்கள் இன்று பல இடங்களில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது இப்போது தெரிகிறதா?
அப்போதைய முதல்வர் அவருடைய தந்தை கருணாநிதி அவரிடம் கூறி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க செய்ததே நான்தான். ஆனால், என்னைப் பற்றி ஏதோதோ தரம் கெட்ட வார்த்தைகளில் பேசுகிறார்.
ராமதாஸ் திருமாவளவன் குறித்து பேசிய பேச்சுக்கள் வி. சி. க கட்சியை சேர்ந்த வன்னியரசு, ஷா நவாஸ் போன்றவர்கள் விவாதங்களில் பாமகவை சாதி கட்சி என்றும் பொது கூட்டங்களில் சிலர் ஒருமையில் பேசியதன் வெளிப்பாடாக சரியான பதிலடியாக பார்க்கப்படுகிறது.
மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் பாமக குறித்து பேசினால் பதிலடி இன்னும் பலமாக இருக்கும் என்று பாமக நிர்வாகிகள் கருதுகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.