26/12/2017

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...


1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்...

குருமூர்த்திக்கு ஆண்மை இல்லை, அதனால் தான் ஆண்மையை பற்றி பேசுகிறார்- அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...


பேட்டியின் போது எடப்பாடியிடம் இருந்து வந்த துண்டு சீட்டை படித்து விட்டு பாதியிலே பேட்டி முடித்துக் கொண்டு ஓடினார் ஜெயக்குமார்...

பாஜக எடுபுடி பழனிச்சாமியே துணிவு இருக்கா..?


துரோகிகளுக்கு பாடம் புகட்டுங்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட வாக்களியுங்கள் என்று டிடிவி பிரச்சாரம் செய்ததை மக்கள் ஏற்று வாக்களித்து விட்டனர்...



காலதாமதமின்றி ஸ்லீப்பர் செல்களை ஆக்டிவேட் செய்து ஆட்சியை கலைச்சு விடுங்க பாஸ்...

விசித்திர சிலைகள்...


அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டம்...


தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 6 பேரை நீக்க முடிவு...

தங்கதமிழ் செல்வன் மற்றும் வெற்றிவேல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்...

ஆபத்தை அறியாமல் ஒரு பயணம்...


251 பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்த தொழிலதிபர்...


குஜராத்தில், தந்தையை இழந்த 251 பெண்களுக்கு தொழிலதிபர் ஒருவர் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி. கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்தில் இருக்கும் ஏழைப் பெண்களை பார்த்து அவர்களுக்கு திருமணம் நடத்திவைத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் தனது அந்த நற்செயலை அவர் தொடர்ந்துள்ளார். 6வது ஆண்டான இந்த வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இதில் இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய மதங்களை சேர்ந்த பெண்களும் அடங்குவார்கள். 251 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் தொழிலதிபர் மகேஷ் சவானி வழங்கியுள்ளார். தந்தை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்...

Biological weapons பதிவு - 6...


எய்ட்ஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதே...

ஜனவரி ஒன்றாம் தேதி கோவில்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடக் கூடாது. இது வேத சாஸ்திரத்திற்கு எதிரானது...


எனவே சிறப்பு விளக்குகள், பூக்கள் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறக் கூடாது.

தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும்- ஆந்திர அரசு உத்தரவு...

இந்த 7 மொழிகளைக் கத்துக்கிட்டா உலகத்துல எங்கேயும் பொழைச்சுக்கலாம் - 400 மொழிகள் பேசும் சிறுவன்...


புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளவற்கே நமக்கு கண்ணைக் கட்டுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மஹமூத் அக்ரம், 400 மொழிகளைக் கற்றிருக்கிறார். மொழிகளின் மீதான ஆர்வத்தால் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டு, இன்னும் இன்னும் என புதிய மொழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே அக்ரம் ரொம்ப சுறுசுறுப்பு. பல நாடுகளில் உளவியல், மொழி ஆராய்ச்சி சார்ந்து வொர்க் பண்ணிட்டிருந்த எனக்கு 16 மொழிகள் தெரியும். வருஷத்துக்கு ஒருமுறை சென்னைக்கு வருவேன். பையன் ஒன்றாம் வகுப்பு படிச்சுட்டிருந்த சமயம், நான் லீவில் வீட்டுக்கு வந்திருந்தேன். கம்யூட்டர்ல டைப் பண்ணிட்டிருந்தப்போ, 'எனக்கும் இங்கிலீஸ் டைப்பிங் சொல்லிக்கொடுங்க'னு கேட்டான். அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தேன். அடுத்த ஆறு மணி நேரத்திலேயே டைப் ரைட்டிங் ஹையர் கிரேட் லெவலுக்கு ஸ்பீடா டைப் பண்ணினான். அதைப் பார்த்து பிரமிச்சுட்டேன். அக்ரமின் திறமையைத் தெரிஞ்சுக்கிட்டது அந்த நிமிஷம்தான் என்கிறார் அக்ரமின் தந்தை மொழிப்பிரியன்.

அடுத்த நாள் அரபிக் மொழியில் டைப் பண்ண கத்துக்கொடுத்தேன். நாலு நாளிலேயே நல்லா டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான். நான் மறுபடியும் ஃபாரீனுக்குப் போயிட்டேன். 'அடுத்தடுத்த லாங்குவேஜ் கத்துக்கொடுக்காம ஃபாரீனுக்குப் போயிட்டீங்களே'னு போனில் பேசும்போதெல்லாம் கேட்பான். அதனால், இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளைக் கத்துக்க மெட்டீரியலை மெயிலில் அனுப்பினேன். அதையும் முடிச்சுட்டதா சொன்னான். சில கேள்விகளைக் கேட்டு டெஸ்ட் பண்ணினேன். சரியா பதில் சொல்லிட்டு, 'இன்னும் வேற மொழிகள் கத்துக்கணும்'னு சொன்னான். வீட்டுல இன்டர்நெட் கனெக்‌ஷன் கொடுத்து, ஸ்கைப் வழியே சொல்லிக்கொடுத்தேன். எட்டு வயசிலேயே, அவனாக ஆன்லைன்ல சர்ச் பண்ணி படிக்க ஆரம்பிச்சு, ஒரே வருஷத்தில் 200 மொழிகளைக் கத்துகிட்டான் என நம் கண்களை விரியச் செய்கிறார் மொழிப்பிரியன்.

பையனின் மொழித் திறமையை உலகுக்கு தெரியப்படுத்த 2014-ம் வருஷம் பஞ்சாப்பில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு அழைச்சுட்டுப் போனேன். அங்கே ஒரு நிறுவனத்தின் பெயரை நிகழ்ச்சியினர் 50 மொழிகளில் எழுதச் சொல்ல, அக்ரம் சரியா எழுதினான். 'வேர்ல்டு யங்கஸ்ட் மல்டி லாங்குவேஜ் சயின்டிஸ்ட்' என்கிற அவார்டு கொடுத்தாங்க. தொடர்ந்து நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் விருதுகளையும் பட்டங்களையும் வாங்கினான். 2015-ல் ஐந்தாம் வகுப்பு முடிச்சதுமே, 'எனக்கு ஸ்கூல் போக விருப்பமில்லை. தொடர்ந்து நிறைய மொழிகளைக் கத்துக்கிட்டு, லிங்விஸ்டிக்ஸ் புரொஃபஸர் ஆகணும்'னு சொன்னான். இஸ்ரேல் நாட்டில் இருக்கும் ஒரு லாங்குவேஜ் ஸ்கூல்ல கரஸ்ல படிக்க விண்ணப்பிச்சோம். அவங்களின் ஹிப்ரூ (Hebrew) மொழியை அக்ரம் ஓரளவுக்குத் தெரிஞ்சுவெச்சிருந்ததால், அங்கே படிக்க சீட் கிடைச்சுது. பிறகு, மத்திய அரசின் 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்' மூலமாக இந்திய சி.பி.எஸ்.சி சிலபஸில் இப்போ ஏழாவது படிக்கிறான் என்கிற மொழிப்பிரியன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கே நிரந்தரமாகக் குடியேறியிருக்கிறார். இப்போது, மொழிப்பிரியனும் மஹமூத் அக்ரமும், ஆன்லைன் வாயிலாக மொழிப் பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர். பள்ளிகளுக்குச் சென்று மொழிப் பயிற்சி குறித்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

புதிதாக ஒரு மொழியைக் கற்க எளிய வழிமுறை என்ன?

ஒரு வயசுக் குழந்தை, தன் பெற்றோர் பேசுறதை கூர்ந்து கவனிச்சு அப்படியே திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும். படிப்படியாக தன்னைச் சுற்றி இருக்கிறவங்க பேசறதைக் கவனிச்சு அந்த வார்த்தைகளை மனசுல பதிச்சுக்கும். பிறகு, மத்தவங்க கேள்விக்குப் பதில் சொல்ற அளவுக்கு முன்னேறிடும். மெச்சூரிட்டி வந்ததும் கிராமர்படி பேசும். புதிய மொழியைக் கற்கவும் இதுவே அடிப்படை. எந்த மொழியாக இருந்தாலும் தொடர்ந்து எழுத்து மற்றும் பேச்சு வழியே பயன்படுத்திட்டே இருந்தால் தான் மறக்காது.

தொடர்ந்து பல மொழிகளைக் கற்கும் அக்ரமின் அதீத ஆர்வம், எப்போதாவது உங்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கா?

பையனின் 8 வயசு வரைக்கும் அந்தப் பயம் எங்களுக்கு இருந்துச்சு. அப்புறம்தான் அவனின் ஐ.க்யூ லெவல் 160 எனத் தெரிஞ்சு, இது பயப்படும் விஷயமில்லேனு பெருமைப்பட்டோம். ஐ.க்யூ லெவலைத் தக்கவெச்சுக்க ஆரோக்கியமான சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுறது, கணிதப் பயிற்சிகளைக் கொடுக்கிறோம். ஞாபகத்திறன், கிரியேட்டிவிட்டி, புரிந்துகொள்ளுதல், யோசித்தல் போன்ற திறன்கள் அக்ரமிடம் அதிகமாக இருக்கு. அதுக்காக, எந்த நேரமும் படிப்பு, பிராக்டீஸ்னே இருக்கறதில்லை. சில மணி நேரத்திலேயே நல்லா புஞ்சுப் படிச்சுடுவான் என்கிறார் மொழிப்பிரியன்.

சின்ன வயசுல அப்பா கம்ப்யூட்டர்ல டைப் பண்றதைப் பார்த்ததும், ஃபாண்ட் மாற்றி பல மொழிகளை டைப் பண்ண முடியும்னு தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து ஆன்லைனில் பல மொழிப் பேசும் மக்களின் வீடியோக்களைப் பார்த்தேன். அந்த மொழிகளைக் கத்துகிட்டா, அவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கலாமேனு கத்துக்க ஆரம்பிச்சேன் எனப் புன்னகையுடன் பன்மொழி ஆர்வம் குறித்துப் பேசுகிறார் மஹமூத் அக்ரம்.

ஸ்கூல் போறதை ஏன் நிறுத்திட்டீங்க?

ரெகுலரா ஸ்கூல் போய்கிட்டே, நிறைய மொழிகளைக் கத்துக்க நேரம் கிடைக்கறதில்லை. அதனால், ஸ்கூல் போறதை நிறுத்திட்டேன். ஆனால், கரஸ்ல படிச்சுட்டுதான் இருக்கேன். சில சமயம் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸை மிஸ் பண்ற ஃபீலிங் வரும். பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் மற்றும் தம்பி, தங்கையோடு தினமும் விளையாடுவேன்.

பல நூறு மொழிகளைக் கத்துக்கும் போது மறதி பிரச்னை வரலையா?

கத்துகிட்ட 400 மொழிகளிலும் டைப் பண்ணுவேன்; படிச்சு எழுதுவேன். இதில், 46 மொழிகளை முழுக்க பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். கற்கும் மொழிகளை டச் விட்டுடாமல் பிராக்டீஸ் பண்றதால், படிச்சது நினைவில் நிற்கும். தினமும் காலையில் 5 - 8 மணி வரை லாங்குவேஜ் கற்க ஒதுக்குவேன். அப்புறம், கரஸ்ல படிப்புக்கான ஆன்லைன் வகுப்பு. அப்போ என் சந்தேகங்களை டீச்சர்ஸ்கிட்டே கேட்டுப் புரிஞ்சுப்பேன்.

உங்க எதிர்கால லட்சியம் என்ன?

என் குழந்தைப் பருவத்திலேயே திருவள்ளுவர் காலத்து தமிழ் - பிராமி எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்த பிறகுதான் தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழை அப்பா சொல்லிக்கொடுத்தார். அதனால், சங்க இலக்கியங்கள்மீது எனக்கு ஆர்வம் இருக்கு. நம் சங்க இலக்கிய மொழியை வேற மொழிக்கு டிரான்ஸ்லேட் பண்ற முயற்சியில் கவனம் செலுத்துறேன். இதனால், நம் தமிழ் மொழியின் சிறப்பை பிற மொழிக்காரங்களுக்குப் புரியவைக்க முடியும். எதிர்காலத்துல லிங்விஸ்டிக்ஸ் புரொஃபஸர் ஆகணும். நம் தாய்மொழியைத் தவிர்த்து, ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, ஸ்பானீஸ், பிரெஞ்சு, சைனீஸ் என ஏழு மொழிகளைக் கத்துக்கிட்டா உலகின் எந்த மூலைக்கும் போய் பிழைச்சுக்கலாம் என்கிறார் இந்த 400 மொழி வித்தகர்.

அசத்துங்க அக்ரம்...

தமிழ் அறிவும்.. உணர்வும்...


தமிழ் அறிவு என்பதற்கும் தமிழ் உணர்வு என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் என்பது நிச்சயமல்ல.

தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கின்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு என்பதாகும்..

என் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழிக்கு இடம் தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் என் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவை தமிழ் உணர்வின் சில அடையாளங்கள்..

தமிழ் அறிவு இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள்.

தமிழ் உணர்வு இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள்.

தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றும் உள்ளவர்கள் தான் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து (வசதி) களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு நன்மையும் செய்வது கிடையாது. இவர்களின் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்...

பாஜக மோடியின் திருட்டு அரசியல்...


தமிழகத்தில் பாடகர்களும் வந்தேறிகளே...


ஏன் தமிழ் திரைப்பட உலகத்தில் அதிகம் தமிழ் பாடகர்கள் வருவதில்லை?

தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்?

விரல் விட்டு எண்ண கூடிய சிலரே.

பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு.

ஏன் இந்த நிலை?

1937 - 1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது.

அதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான்.

அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய அளவில் நடைபெற்றன.

நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள்.

டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக தெரியவில்லை.

பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா, ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான்.

நடுவில் ஏ. எம். ராஜா, பீ. பி. ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல முடியாது. பீ. பி. ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.

பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை சேர்ந்தவர். தமிழர்.

ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல முடியாது.

இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். டி. எம். எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே அறிமுகமாகிய எஸ். பி. பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே. ஜே. இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.

இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான் இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது.

ஒரே படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் நடிகர்களே பாடுகிறார்கள்.

ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? நல்ல தமிழ் பாடகர்கள் இல்லையா? அல்லது ஆந்திரர், கேளரர், கர்நாடகர் நிறைந்த தமிழ் திரைப்பட உலகம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?

பாஜக கலாட்டா...


சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...?


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள்.

இது சரியா..? தவறா..?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..?

என்பதைத் தெரிந்துக் கொள்வோம்:-

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...

திமுக வின் செயல் இழந்த இவரெல்லாம் ஒரு செயல் தலைவராம்...


அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...


இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால், அதுதான் உண்மை.

சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று  சாஸ்திரங்கள் ஏற்றன.

ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.

இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.

மூன்று,  குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.

இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பதால் தான்  காலம் தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில்தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும்.

குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது  என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.

எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக  பயன்படுத்த முடிவு செய்தார்.

அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்..

இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது.  அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது.

என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.

அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.

இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம் கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.

சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது.

அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு  கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும்  மது விற்கக் கூடாது.

அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர்  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.

மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு  உரியவர்கள்.

அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை  செய்ய வேண்டும்.

திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி  பெறாமல் காய்ச்சக் கூடாது...

அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின.

விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து  பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.

அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும்,  குடிக்கு உரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டத்தின்படி, மது  வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள்  வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28  ஆயிரமாக அதிகரித்தது.

1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த  அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது.

அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம் தான்.

இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக  ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.

மையப்படுத்தப்பட்ட மது உற்பத்திசாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள  பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது,  அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப்  பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.

இதனை அடுத்து  பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின்  ஏகபோகத்தை அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது.

இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா  - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.

இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில்  உருவாக்கப்பட்டனர்.

1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான  வருவாயே இந்தியாவில் இருந்தது.இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.

குடி மூலமாக வருவாயை பெருக்குவதும்,  மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான்,  டாஸ்மாக்கின் நோக்கம்.

இதுவே தான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்...

பாஜக தமிழிசை கலாட்டா...


கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது.. நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா?


அர்ச்சனை என்றால் என்ன?

இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும்.

அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்..

கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்..

அவரிடம் எதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம்..

ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன?

எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்...

மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


அம்மன் ஆலயத்தில் எத்தனை முறை வலம் வரலாம்?


பொதுவாக ஆலயத்தை வலம் வருவது நமது உடமையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கே அதனால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வலம் வரலாமென்று சொல்லி விடலாம்.

ஆயினும் எதற்கும் ஒரு இலக்கணம் வரன்முறை உண்டு அதன் அடிப்படையில் நமது பெரியவர்களும் சாஸ்திரங்களும் அம்மன் ஆலையத்தில் ஐந்துமுறை வலம் வரலாமென்று சொல்கிறார்கள்...

பாஜக மோடி vs டிடிவி தினகரன் கலாட்டா...


எந்த பறவைக்கு எந்த வடிவ முட்டை.?


முட்டைகள் என்ன வடிவில் இருக்கும் ?

இதென்ன கேள்வி முட்டை முட்டை வடிவில் தான். ஆனால் பல பறவைகளின் முட்டைகள் ஓரளவு கோள வடிவிலும் இருப்பது உண்டு. பல முட்டைகள் கூர்மையாக வளர்ந்து இருப்பதையும் பார்க்கிறோம்.
எந்த மாதிரி பறவைகள் எந்த மாதிரி முட்டையிடும் அதை ஏதாவது வகை படுத்த முடியுமா வரையறுக்க முடியுமா?

இது பலநாளாக ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்த கேள்வி.

இதற்க்கு முன் அவர்களுக்கு கிடைத்த விடை கால்சியம் குறைவான பறவைகளுக்கு முட்டை உருண்டை வடிவில் இருக்கும் என்பது. ஆனால் அந்த பதில் போதிய அளவில் திருப்தி இல்லை .


இப்போது ஆய்வாளர்கள் அதற்கான சரியான வரையறை கண்டு கொண்டதாக சொல்கிறார்கள். கிட்ட தட்ட 50000 முட்டைகளை சோதித்து 1400 இனங்களை சரிபார்த்து இந்த உண்மையை அவர்கள் கண்டு கொண்டதாக சொல்கிறார்கள். தற்போது அவர்கள் கொடுத்துள்ள வரையறை....

அதிக உயரம் பறக்கும் பறவை களின் முட்டைகள் கூராக இருக்கும் குறைவான உயரம் பறக்கும் பறவைகள் முட்டை குறைந்த கூர்மை கொண்டிருக்கும் சுத்தமாக பறக்காத பறவைகள் முட்டை கிட்ட தட்ட கோள வடிவில் இருக்கும்...

தமிழன் என்றால் சும்மாவா...


அமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா.?


அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம்.

எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள்.

சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும்.

எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல்கிறார்கள்.

இதில் எது சரி எது தவறு என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம்.

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல..

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்..

அமாவசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன.

அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும்.

இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு.

அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல.

எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல.

ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும்...