26/12/2017

எந்த பறவைக்கு எந்த வடிவ முட்டை.?


முட்டைகள் என்ன வடிவில் இருக்கும் ?

இதென்ன கேள்வி முட்டை முட்டை வடிவில் தான். ஆனால் பல பறவைகளின் முட்டைகள் ஓரளவு கோள வடிவிலும் இருப்பது உண்டு. பல முட்டைகள் கூர்மையாக வளர்ந்து இருப்பதையும் பார்க்கிறோம்.
எந்த மாதிரி பறவைகள் எந்த மாதிரி முட்டையிடும் அதை ஏதாவது வகை படுத்த முடியுமா வரையறுக்க முடியுமா?

இது பலநாளாக ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்த கேள்வி.

இதற்க்கு முன் அவர்களுக்கு கிடைத்த விடை கால்சியம் குறைவான பறவைகளுக்கு முட்டை உருண்டை வடிவில் இருக்கும் என்பது. ஆனால் அந்த பதில் போதிய அளவில் திருப்தி இல்லை .


இப்போது ஆய்வாளர்கள் அதற்கான சரியான வரையறை கண்டு கொண்டதாக சொல்கிறார்கள். கிட்ட தட்ட 50000 முட்டைகளை சோதித்து 1400 இனங்களை சரிபார்த்து இந்த உண்மையை அவர்கள் கண்டு கொண்டதாக சொல்கிறார்கள். தற்போது அவர்கள் கொடுத்துள்ள வரையறை....

அதிக உயரம் பறக்கும் பறவை களின் முட்டைகள் கூராக இருக்கும் குறைவான உயரம் பறக்கும் பறவைகள் முட்டை குறைந்த கூர்மை கொண்டிருக்கும் சுத்தமாக பறக்காத பறவைகள் முட்டை கிட்ட தட்ட கோள வடிவில் இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.