கணவன்: டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..
மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே..
கணவன்: கார் கவரிங்ல வராதுடா டார்லிங்..
மனைவி: ? 😡😡😡
கணவன்: டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..
மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே..
கணவன்: கார் கவரிங்ல வராதுடா டார்லிங்..
மனைவி: ? 😡😡😡
எதிர்காலத்தை முன்பே அறியும் திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை..
எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர் .
எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர் .
இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம்.
1865 ஆம் ஆண்டு, ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில் தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார்.
இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால், இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர்.
ஆனால் இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார்.
இந்த மாதிரி கனவுகளை Precognitive Dreams என்று ஆங்கிலத்தில் கூறுவர்...
காதல் கவிதை ஒன்றை
படைக்க கேட்டாள்...
காகிதத்தில் எழுதி வைத்தால்
செல்லரித்துப் போகும்...
உன் இதழ் வரிகளில்
ஒரு கவிதை படைக்க வா
என்றேன்...
வெட்கத்தால் ஒரு கரம் கொண்டு
கண்களை மூடி...
மறு கரம் கொண்டு
என்னை இறுக்கி அணைத்து...
என் மார்பில் சாய்ந்தாள்
அங்கே...
என் இதயம் சொல்லும்
கவிதைகளை கேட்டிருப்பாளோ...
ஆந்திராவில் ஆண்டுக்கு 150 தெலுங்கு படங்கள் வெளிவருகின்றன.
கர்நாடகாவில் 90 கன்னட படங்களும், கேரளாவில் 80 மலையாள படங்களும் மும்பையில் 220 இந்தி படங்களும் தயாராகி வெளிவருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு நான்கு தமிழ்ப் படங்கள் வெளி வருகின்றன. அதுவும் வெளியில் தெரிய மாட்டேன் என்கிறது.
உலகில் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. நேரடி மொழிப படங்கள், ரீமேக் படங்கள் , டப்பிங் படங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத ஒரு வகை படங்களே வெளிவருகின்றன. அவற்றை நாம் மாற்றார் படங்கள் என்று சொல்லலாம்.
மாற்றார் வகை படங்களே தமிழில் ஏராளமாக வெளி வருகின்றன. ஒரு படம் தமிழ்ப்படம் என்று சொல்ல வேண்டுமானால், குறைந்தபட்சம் அதில் நடிக்கிற நடிகர் நடிகைகள் ஐந்து சதவீதம் பேர் தமிழர்களாக இருக்க வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் கதாநாயகன், கதாநாயகியாவது தமிழர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியா இருக்கிறது. எம்ஜிஆர், படமும், ரஜினி படமும், கமலஹாசன் படமும் தமிழ்ப்படங்கள் இல்லை. அவை மாற்றார் நடித்த தமிழ்ப் படங்கள் . கதாநாயகன் எம்ஜிஆர். மலையாளி, கதாநாயகி ஜெயலலிதா கன்னடச்சி என்றால் அது எப்படி தமிழ்ப் படம் ஆகும்?
ரஜினி கன்னடன், ஐஸ்வர்யா ராய் மும்பைச்சி என்றால் அது எப்படி தமிழ்ப்படம் ? கமலஹாசன் ஆரிய பிராமணன், பூஜா குமார் பெங்காலி என்றால் அது தமிழ்ப்படமா ? இவை மாற்றார் நடித்த தமிழ்ப்படங்கள். மாற்றார் வகை தமிழ்ப்படங்கள்.
அப்படிப்பார்த்தால், எம்ஜிஆர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை, ரஜினி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. விஷால் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்படங்களில் இவர்கள் நடிக்கவும் முடியாது. அப்படியானால் சிவாஜி கணேசன் நடித்த படங்கள்? கணேசன் தமிழன் தான். ஆனால் கூட நடிக்கும் நாயகி வாணி ஸ்ரீ , கே. ஆர். விஜய, ஜெயலலிதா , சரோஜாதேவி இவர்கள் எல்லாம் தமிழச்சிகள் இல்லையே. இயக்குனர் தமிழராக இருக்க மாட்டாரே... அப்படியானால் அது எப்படி தமிழ்ப்படமாகும் ? சிவாஜியும் அதிக அளவில் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மாற்றார் வகை தமிழ்ப்படங்களில் நடித்துக் கொடுத்து இருக்கிறார் அவ்வளவுதான்.
அப்படியானால் உண்மையான தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றனவா என்றால் அதிகம் இல்லை. வருடத்துக்கு நான்கு வருகிறது. அவையும் வெளியே தெரியாமல் வந்தவழி போய் விடுகிறது. இதில் தான் மாற்றம் வேண்டும்.
தமிழர் நடித்து, தமிழர் இயக்கும், தமிழ்ப்படங்கள் வெளிவர வேண்டும். அப்போது தான் தமிழ் மண்சார்ந்த கதைகள் படங்களாக வெளிவந்து தமிழர் மனத்திரையை விரிவுப்படுத்தி செம்மைப்படுத்தும். அந்த நாளுக்காக காத்திருப்போம்...
தாம்பரம் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “திண்டிவனம் வந்திடுச்சா?” என்று கேட்டார்.
“திண்டிவனமா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”
“சரி”
செங்கல்பட்டு வந்தது.
“சார்.. திண்டிவனம் வந்திடுச்சா?”
“அட.. இன்னும் இல்லைம்மா”
மேல்மருவத்தூரைத் தாண்டியது.
“திண்டிவனம் வந்திடுச்சா?”
“ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. திண்டிவனம் வந்தா நானே சொல்றேன்”
“சரி”
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து கடலூரைத் தாண்டிக் கொண்டிருந்தது.
“கண்டக்டர் சார்... திண்டிவனம் வந்திடுச்சா?” - தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்தில் இருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது. “பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புய்யா.. திரும்ப திண்டிவனத்துலே கொண்டு போய் அந்தம்மா விட்டுட்டு திரும்பி வா” - அநேகமாக சொன்ன நபருக்கு கும்பகோணமாக இருக்க வேண்டும்.
கண்டக்டருக்கு வேறு வழி தெரியவில்லை. பேருந்தைத் திருப்பினார். வந்த வழியே திண்டிவனத்துக்குச் சென்றது.
ஒரு வழியாக சில மணி நேரங்களில் திண்டிவனம் வந்தது. “எம்மா.. இறங்கும்மா” - சலித்தபடியே கண்டக்டர் கூறினார். பேருந்தில் இருந்த அந்த கும்பகோணத்துக்காரருக்கு முகத்தில் வெற்றிப் புன்னகை.
சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் மாத்திரையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.
“என்னம்மா.. திண்டிவனத்துலே இறங்கலையா?” - கண்டக்டர் கேட்டார்.
“நான் ஏன் திண்டிவனத்துலே இறங்கணும்? திண்டிவனம் வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என் பையன் சொல்லி அனுப்பினான். அதான். நான் மாயூரமுல்ல போகணும்?”
இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியது 😁
1956 இல் மாநிலங்கள் பிரிக்கும் போது தமிழ் நாட்டில் தமிழே ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டது...
அதன் பின் 1968 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு ஆட்சியை வடுக தெலுங்கர் திராவிடம் என்ற பெயருடன் கைப்பற்றிய பின் திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டு ஆட்சி மொழி வட்டார மொழி ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டு தமிழ் அழிக்கப்பட்டது..
பின் தமிழ்நாட்டில் தமிழ் இல்லை..
இப்போது வடுக தெலுங்கர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் உருதை ஆட்சி மொழியாக மாற்றுவார்களாம்...
தமிழ்நாடு என்ன வேசிகள் வீடா?
தமிழர்களே சிந்திப்பீர்...
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...
பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...
எனக்கு அடுத்த
ஜென்மம் இருந்தால்...
அவளுக்காக மட்டும்...
அழகு சாதன பொருட்களாக
பிறக்க.. வரம் கிடைக்குமா?
அப்போதாவது
அவள் உதட்டிலும்...
கரு விழியிலும்..
நான் கண்டபடி
புரண்டு விளையாட...
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...
கத்தியால் குத்துபவனை தடுக்க நான் வரவில்லை...
குத்து படுபவன் பொழைச்சிக்கணும்னு சொல்லத்தான் வந்திருக்கேன்...
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது...
கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்...
ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது...
மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது...
ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது..
ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்...
பெண்களுடைய
வாழ்க்கையில
அவர்கள் விருப்பப்பட்டோ,
விருப்பமில்லாமலோ
அடுத்த கட்ட நகர்வு
தொடர்ந்து போயிட்டே
இருக்கும்...
ஆனால்
ஆண்களுக்கு பலவித
டுவிஸ்டு நடந்ததுக்கு
அப்புறமாத்தான்
கிளைமாக்ஸே வருது...
கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
மனைவி : வந்துட்டீங்களா... உங்களைத் தான் தேடிக்கிட்டே இருந்தேன்..
கணவன் : ஏன்?... என்னாச்சு..?
மனைவி : இன்னைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,... நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்...
கணவன் : சரி..
மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது.. அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி..
கணவன் : கலவரப் பீதியில்... நமக்கெதுக்கும்மா இந்த வம்பு? மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே..
மனைவி : மன்னிக்கிறதா? அந்த பேச்சுக்கே இடமில்ல. எங்க அந்த உருட்டு கட்டை..... (என்று தேடிக் கொண்டே செல்ல...)
வாசலிலிருந்து வந்த மகன்...
மகன் : யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா...
அப்பா : ஏண்டா..?
மகன் : நான் தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா..
அப்பா : அடப்பாவி மகனே.. வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே..
அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்.. எங்க போவேன்...?
கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.
கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.
குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.
குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.
பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும். இந்த வெட்டுதல் - வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...
எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.
பயிற்சியும் செய்முறையும்...
மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.
இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.
பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...
கொரனாவால் இறந்த திமுக J அன்பழகனின் மகனுக்கு அதே பொறுப்பை கொடுத்த போது இது வாரிசு அரசியல்னு சொல்லி கலாய்ச்சவன்லாம் இன்னைக்கு...
அதே கொரோனாவால் இறந்த நாதக சாகுல் ஹமீது அவர்களின் மகளுக்கு MLA சீட் கொடுத்ததும் கொண்டாடிட்டு இருக்கானுங்க..
இதெல்லாம் வாரிசு அரசியல்ல வராதா.??
கேள்வி கேட்டா பெண் விடுதலையை கொச்சை படுத்தாதீங்க ஒறவே னு சொல்லுவீங்க அப்டி தானே..
ஏன்டா எறும்பு பவுடர் வாங்கிட்டு வரல...
நீங்க என்னன்ணே வெவரம் தெரியாம இருக்கிங்க..
இன்னைக்கு பவுடர் வாங்கிகொடுத்தா...
நாளைக்கி லிப்ஸ்டிக் கேக்கும்...
அதெல்லாம் நம்ம பட்ஜட்டுக்கு ஒத்து வராதுண்ணே... 😔
கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு,
கொடியன்குளம்,
தாமிரபரணி,
பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...
சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..
பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த… திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?
பெயர்ப் பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?
இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...
எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.
இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்...
பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு
செய்முறை...
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...
ஒரு டிராபிக் போலிஸ், பைக் ஓட்டி வந்தவனை நிறுத்தி கேட்டார்...
என்னப்பா தொப்பி போட்டுட்டு வண்டி ஓட்டிட்டு வர்ற, ஹெல்மெட் எங்க?....
ஹெல்மெட்ட விட தொப்பிதான் சார் சேப்டி, அதான் சார்....
இன்னா ஜோக்கா? என்கிட்டயேவா?
சார்.. நெசமாத்தான் சொல்றேன்...
பத்தாவது மாடியில இருந்து ஹெல்மெட்ட போட்டு பார்த்தேன். துண்டு துண்டா ஒடஞ்சிச்சு....
அப்புறம் தொப்பிய போட்டு பார்த்தேன் உடையவே இல்லை....
அப்ப தொப்பிதானே சேப்டி.....
யார் கிட்ட 😁
யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்...
உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்?
பிராமணியத்தை எதிர்ப்பதாக கோரிக் கொண்டு திராவிடத்தை திணித்து விட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே..
சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர்.. பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது.
விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது. களையும் பண்பாடும் சீர்குலைந்தது.
ஆரிய வைசிய மகாசன சங்கம், நாய்டு மகாசன சங்கம், தெலுங்கு மகாசன சங்கம், கேரளா மகாசன சபை, சௌராஷ்டிர அமைப்புகள், போன்றன முளைத்துவிட்டன..
ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது இந்தியமும் - திராவிடமும்..
தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்திய தேசியம் தான்...
நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு, திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..
இன பற்று கொள்ளதவரை எழ முடியாது. எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..
சினம் கொள்ளமறுத்தால்.. நீயும் ஒரு பிணம்...
சாதி மதங்களை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்...
தமிழர் நாடு தமிழர்களுக்கே...
கணவன் மனைவிக்கிடைலான சண்டையில்....
கணவன் : நான் பேசுறப்போ என்னோட சத்தம் மட்டும் தான் கேட்கனும் வாய மூடிட்டு இருக்கனும் விளங்குதா...
மனைவி : அப்போ நீங்க தனியா பேசிட்டு இருங்க நான் போறன்...
ஒரே அசிங்கமா போச்சு குமாரு 😁
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு.
ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.
அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார்.
அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார்.
மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார்.
மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள்.
அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?