10/10/2018
லேடிஸ் ஹாஸ்டலில் வைரமுத்து நடத்திய ‘செக்ஸ் லீலைகள்’ அதிரவைக்கும் பகீர் ஆதாரங்கள்...
‘வைரமுத்து மீதான பாலியல் புகார்களுக்கு ருசு என்ன?’ என்று தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் பாடகி சின்மயி. ‘நானே ஆதாரம். இதோ நானே சொல்கிறேன்’ என்று வைரமுத்துவின் பாலியல் மிரட்டல் தன்னை எப்படி வந்து சேர்ந்தது என்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்தை போர்வையாகக் கொண்டு காமக் களியாட்டங்கள் நடத்திவந்தவர்களுக்கு இது பொல்லாத நேரம்போலும். ஆளுநர், நிர்மலா அம்மணி பஞ்சாயத்து ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இவ்வளவு நாளும் நாடும் நாட்டு மக்களும் கவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த காமப்பேரரசு வைரமுத்துவை கழுவில் ஏற்றிக்கொண்டிருக்கிறார் பாடகி சின்மயி.
வைரமுத்துவைப் பற்றிய உண்மைகளைப் போட்டு உடைப்பதால் என் சினிமா கேரியரே முடிவுக்கு வந்தாலும் நான் பின்வாங்கப் போவதில்லை என்கிறார் சின்மயி.
தொடர்ந்து இவர் வைரமுத்து மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் பாடகி சின்மயி. ‘நானே ஆதாரம். இதோ நானே சொல்கிறேன்’ என்று வைரமுத்துவின் பாலியல் மிரட்டல் தன்னை எப்படி வந்து சேர்ந்தது என்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
“2005 அல்லது 2006ஆம் ஆண்டாக இருக்கும். ’வீழ மாட்டோம்’ என்ற ஆல்பம் ஒன்றை இலங்கை தமிழர்களுக்கு மாணிக்க விநாயகம் அவர்களுடன் பாடுவதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். அது புத்தகமா அல்லது பாடல் வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அதன் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். இங்கு பாடல் ரெகார்டிங் முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்து சென்று லைவ்வாகப் பாடியும் கொடுத்தேன். எல்லோரும் கிளம்பிய பிறகும், நானும் என் அம்மாவும் மட்டும் அங்கேயே இருக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.
விழா ஏற்பாட்டாளர் வந்து, ‘நீங்கள் மட்டும் வைரமுத்துவை அவர் Lucerne பகுதியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்க்கச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு, கொஞ்சம் ஒத்துழையுங்கள் என்று சொன்னார். நான் மறுத்துவிட்டு, இந்தியாவுக்கு உடனே செல்ல ஏற்பாடு செய்யச் சொன்னேன். எனது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். அதற்கு, நானும் என் அம்மாவும் எழுந்து நின்று எதிர்காலமும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம் என்று சொல்லி, எந்த விமானம் சீக்கிரமாக இருக்கிறதோ, அதிலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இந்தியா வந்தடைந்தோம்.
இன்னொரு சம்பவமும் இருக்கிறது. ஒரு முறை சூடு வாங்கிய பூனை திருந்தியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை.
கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன்’ என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதனால் நான் கதறி அழுவதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள். அதன் பிறகு, வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து ‘அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய். ஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை’ எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன்.”
இப்படி வைரமுத்து எங்கே, எப்படி தன்னைப் பாலியல் மிரட்டலுக்கு ஆளாக்கினார் என்பதை ட்விட்டரில் தொடர் ட்வீட்டுகளாக வெளியிட்டு அனைவரது கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டார் சின்மயி.
மேலும் அவர் வெளியிட்ட சில ட்வீட்களில் “கடந்த 17 வருடத்தில் நான் வேலை செய்த தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி மொழித் திரையுலகங்களில் ஒருவர்கூட என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை. ஆபாச மெஸேஜ் அனுப்பவும், என்னைத் தொடவும் முயன்றதில்லை. நான் வேலை செய்யும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவேன். இப்போது வைரமுத்துவை (சார்) நேருக்கு நேராகத் தனியாகவே எதிர்க்கத் தயாராகிவிட்டேன்.
வைரமுத்து அலுவலகத்தில் இருக்கும் வேலையாட்களுக்குத் தெரியும். அவருக்கு நெருங்கியவர்களுக்குத் தெரியும். அவர்களும் இவருக்கு உதவியாக இருந்தவர்கள். உங்களது நேரம் முடிந்துவிட்டது என்பதை மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன். இனி நான் பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் சினிமா துறை எனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இதுதான் என் கதை. இதுதான் உண்மை” என்று தான் பாதிக்கப்பட்டது குறித்து சின்மயி தகவல் வெளியிட்டதுதான் தாமதம். உடனே, அவரைப் போலவே பலரும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர். முக்கியமாக இசைத் துறையில் இயங்கிவரும் சக்திஸ்ரீ கோபாலன் போன்றோர் எந்தச் சூழலிலும் துணையிருப்பதாக சின்மயிக்கு ஆதரவளித்தனர்.
நடிகர் சித்தார்த் கொஞ்சம் காட்டமாகவே கேள்வியெழுப்பினார். “புகார் சொன்னபோது என்ன ஆதாரம், யார் பாதிக்கப்பட்டார்கள் என்று கேட்டீர்கள். இப்போது புகார் சொல்பவரே வெளியே வந்ததும், உங்கள் பப்ளிசிட்டிக்காக செய்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். உங்கள் பிரச்சினைதான் என்ன?” என்று கேள்விகளை எழுப்பிவருகிறார்.
வைரமுத்துவின் வீட்டுக்குப் பாராட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் அழைக்கப்படும் பெண்கள் கதவு தாளிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையும், அவர்களைப் பாராட்டுவது போல செய்யப்பட்ட அத்துமீறல்களையும் சின்மயிக்கு ட்விட்டரில் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் பெண்கள் விடுதியில் அவர் அந்தப்பெண்களின் அனுமதியின்றி அவர்கள் அறையில் நுழைந்து தவறான விதத்தில் பேசியது குறித்தும், அங்கே நீண்ட நெடுங்காலமாக வைரமுத்து கொடுத்துவரும் செக்ஸ் டார்ச்சர் குறித்தும் வரிசையாக சின்மயிக்கு தகவல்வந்துகொண்டிருக்கிறதாம். அருப்புக்கோட்டை நிர்மலா போல் சிலரை வைத்துக்கொண்டு தனது ஹாஸ்டலில் வைரமுத்து நடத்திய கன்னிவேட்டை கதைகளும் விரைவில் அம்பலத்துக்கு வரக்கூடும் என்கிறார்கள்.
இவை அனைத்தையும் ட்விட்டரில் வெளியிட்டதுடன், நடனம் மற்றும் இசைத் துறையில் பிரபலமானவர்கள் பலரது பெயரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களின் பட்டியலாக வெளியிட்டிருக்கிறார்.
பி.எம்.சுந்தரம், பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகநாத சர்மா, டி.என்.சேஷகோபாலன், சசிகிரண், ரவிகிரண் ஆகியோரது பெயரை சின்மயி வெளியிட்டிருப்பது தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் இந்தச் சர்ச்சையைப் பெரிதுபடுத்தியிருக்கிறது...
முத்துகள் உருவாவது எப்படி?
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.
முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.
கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.
அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.
ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப் பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.
இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகி விடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்...
தெலுங்கர் கேட்ட ஆந்திரா...
1948 இல் தெலுங்கு கட்சிகள் அனைத்தும் கூடி ஒரு குழுவை நியமித்தது.
அதன் வேலை அமையவுள்ள தெலுங்கு மாநிலத்தில் எந்த பகுதிகளையெல்லாம் சேர்க்கவேண்டும் என்று வரையறுப்பது.
அவ்வாறு அவர்கள் வரையறுத்து மொழிவாரி மாநிலங்கள் அமைப்புக்கான கமிஷனிடம் சமர்ப்பித்த வரைபடம் (இடப்பக்கம்) இங்கே தரப்பட்டுள்ளது.
The Andhra Province (memorandum submitted to the linguistic provinces commission) by Dr.Lanka sundram M.A Ph.D.
(அடைந்தது வண்ணப்படமாக வலப்பக்கம் தரப்பட்டுள்ளது).
இதில் சென்னையும் சேர்க்கப்பட்டிருந்தது.
நல்லவேளை ம.பொ.சி இருந்தார்...
கன்னடர் கேட்ட கர்நாடகா...
1928 இல் கன்னடர் ஒன்றுகூடி ஒரு குழுவை நியமித்தனர்.
அக்குழு கன்னடர் வாழும் பகுதிகளை கணக்கில் கொண்டு வரைபடம் ஒன்றைத் தயாரித்தனர்.
இந்தியாவை விட்டு வெள்ளையர் சென்றபிறகு தமக்கென மொழிவாரி மாநிலம் கேட்டுப் பெற இந்த முன்னெடுப்பைச் செய்தனர்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி, கொள்ளேகால், ஓசூர் ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் கொள்ளேகாலம் அவர்களிடம் போய்விட்டது...
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை...
சுற்றுச்சூழல் விதிகள், மாநில அரசின் நிலைப்பாடு, மாநிலத் தன்னாட்சி, கூட்டாட்சி அமைப்புமுறை, ஜனநாயக நடைமுறை என எதையும் கருத்தில் கொள்ளாமல், அனைத்தையும் மீறி, அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, பாசிசப் போக்கில், தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் இறங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு..
இதனை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்வதுடன், தமிழ்நாடு அரசு, இதில் மோடி அரசின் மோசடியை எதிர்த்து அம்பலப்படுத்துவதோடு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வந்திருக்கும் திட்ட அனுமதிக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்; மக்களின் கருத்தைக் கேட்காமல் திட்டத்திற்கு வழங்கிய ‘காப்புக்காடுகள்’ நிலம் மொத்தத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதை ஒட்டுமொத்த தமிழகமும் இயற்கை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். இதையடுத்து ‘தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிறுவனம்’ (State Environment Impact Assessment Authority - SEIAA), ‘கட்டடம் மற்றும் கட்டுமானங்கள்’ பிரிவின் கீழ் மதிப்பிட முடியாது என்று திட்டத்தின் செயல்பாட்டாளரான ‘டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவன’த்திடம் (Tata Institute of Fundamental Research) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து, நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.
ஆனால் டாடா நிறுவனம், ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ‘கட்டடம் மற்றும் கட்டுமானங்கள்’ பிரிவின் கீழ் ‘சுற்றுச்சூழல் அனுமதி’ கேட்டு விண்ணப்பித்தது.
தமிழ்நாடு அரசு என்னென்ன ஆட்சேபனைகளை எழுப்பி திட்டத்திற்கு அனுமதி மறுத்ததோ, அந்த ஆட்சேபனைகள் எதையும் கணக்கில் கொள்ளாமல், ‘கட்டடம் மற்றும் கட்டுமானங்கள்’ பிரிவின் கீழ் ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தமிழ்நாடு அரசைக் கேட்காமலேயே வழங்கப்பட்டது.
மாநில உரிமைகளுக்கு எதிரான மோடி அரசின் இந்த மோசடியை தமிழ்நாடு அரசு எதிர்த்து அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அதைச் செய்யாமல் அதிமுக பழனிசாமி அரசு மௌனம் காக்கிறது. இந்த நிலையில்தான் ஒன்றிய அரசின் தில்லுமுல்லுகளுக்கு எதிராக ‘பூவுலகின் நண்பர்கள் அமைப்பு’ டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீது 03-10-2018 அன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக ஒன்றிய அரசு 4ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் 4ந் தேதிய விசாரணையின்போது, ஒன்றிய அரசு சார்பில் வந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
டாடா நிறுவனம் தரப்பு வழக்குரைஞர்கள், “நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட பிறகே ஆய்வகப் பணி தொடங்க தீர்மானிக்கப்பட்டது” என முழுப் பொய்யை வாதமாக வைத்தனர்.
ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பு வழக்குரைஞர்களும், “தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிறுவனத்தில் சிறப்பு நிபுணர்கள் கிடையாது. அதனால் அந்த நிறுவனத்திடம் ஒன்றிய அரசு கருத்து கேட்கவில்லை. சில நிபந்தனைகளுடன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என முழுப் பொய்யையே முன்வைத்தனர்.
தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் சர்மா, “இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. அதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இதுவரை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை (இது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை)” எனத் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு எப்படி வனத்துறை நிலத்தை நியூட்ரினோ திட்டத்திற்கு ஒதுக்கியது? ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு, இந்த நியூட்ரினோ திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாதா? அணுவைப் பல துகள்களாக சிதறடிக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பதுகூடத் தெரியாதா?” என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
தொடர்ந்து, “இது தொடர்பாக ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ வெள்ளிக்கிழமையன்று (05-10-2018) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனம் 8ந் தேதிக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.
இதன்மூலம், சுற்றுச்சூழல் விதிகள், மாநில அரசின் நிலைப்பாடு, மாநிலத் தன்னாட்சி, கூட்டாட்சி அமைப்புமுறை, ஜனநாயக நடைமுறை என எதையுமே கருத்தில்கொள்ளாமல், அனைத்தையும் மீறி, அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, பாசிசப் போக்கில், தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் மோடி அரசு இறங்கியிருப்பது தெளிவாகிறது.
இதனை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்வதுடன், தமிழ்நாடு அரசு, இதில் மோடி அரசு செய்திருக்கும் மோசடியை எதிர்த்து அம்பலப்படுத்துவதோடு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வந்திருக்கும் திட்ட அனுமதிக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்; மக்களின் கருத்தைக் கேட்காமல் திட்டத்திற்காக வழங்கிய வனத்துறை நிலம், அதாவது ‘காப்புக்காடுகள்’ நிலம் மொத்தத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...
ஆதனம் - (அட்டாங்க யோகம்)...
ஆதனம்...
பங்கய மாதி பர்ந்தபல் ஆதனம்
அங்குள வாம் இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாகுமே. - 558
பத்மாசனமாகிய பல வகைப்பட்ட விரிவான ஆசனங்கள் (சொல்லி இருப்பதில்) எட்டு ஆசனங்கள் முக்கியமானதாயிருக்கின்றன. அதற்குள் மயக்கத்தைத் தராத சுவத்திகாசனம் என்பதில் இருந்து தங்க ஆசனத்தில் முதன்மையானவனாகும்.
நாடிதாரணை யோகத்துக்கு அவசியமானபடியாலும், நாடிகளில் அதிசூட்சும நாடிகளின் கூட்டம் தேகத்தில் அதிகமிருப்பதாலும் அந்த நாடிகளுக்கு அசைவை உண்டாக்கிக் கொள்ளாமலிருக்கத் தேகத்தை ஸ்திரமான தன்மையில் வைக்கும் தந்திரம் ஆசனமாகும். இதில் முக்கியமானவை பத்மாசனமும், சித்தாசனமும், சுகாசனமுமாகும். இவ்வாசனங்களில் வீற்றிருக்கும்போது சிரம், கழுத்து, இடுப்பு முதலியவைகளை வளைக்காமல் இருக்க வேண்டும்...
மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்...
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம்பூவின் பயன்கள்...
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...
திருமூலர் சொல்லிய - ஹிக்க்ஸ் போசோன்...
இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம் அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்
இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்லவேண்டும
ாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.
இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு
0 .000000212 mm - ஹைட்ரோஜென்
சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்.
மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்
(size of an hair = 50 micron ).
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter).
50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்.
இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்.
0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்.
0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM).
இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்.
0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM).
அகவே இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிபிடுவது சரசெரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM) இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளானது. சரி அதை விட சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா...
அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.
ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?
என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்?
அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்
இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.
இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...
பொதுவாக சிவா பெருமானை நாம் சடாமுடியன் , சடையான் , என்று கூறுவோம் , அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார், இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில் .
பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்து கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவா பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள் . சராசரியாக ஒரு அனுவலவிற்கு.
இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று.....
இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே...
வடமாநில இளைஞரிடம் அபராதம் வசூலித்த கேரள போலீஸ்...
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கும்பாலா பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீஸார் காசிமை வழிமறித்துள்ளனர். சைக்கிளில் வேகமாக ஓட்டி வந்ததற்காக அபராதம் கட்டுங்கள் என்ற காவல்துறையினர் வார்த்தைகள் காசிமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்று கூறி சைக்கிள் டயரை பஞ்சர் செய்துள்ளனர். காவல்துறையினரிடம் போராட முடியாது என முடிவெடுத்த காசிம் அபராதம் செலுத்த ஒத்துக்கொண்டார். 100, 200 கேட்பார்கள் என எண்ணியுள்ளார். ஆனால் கேரள போலீஸார் 2000 ரூபாய் தீட்டியுள்ளனர். சிறிதுநேரம் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காசிம் 2000 ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது எழுதிக் கொடுத்தனர். அதில் இருசக்கர வாகன எண்ணைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
கூலி வேலை செய்யும் காசிமின் ஒரு நாள் வருமானம் 400 ரூபாய். ஐந்து நாள் சம்பளத்தை இழந்த காசிம் தனது வருத்தத்தை முகநூலில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது வைரலாக பரவியதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
விசாரணையில் கும்பாலா பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...
பிராமணருக்கு தேவதாசிகள் இலவசம்: திராவிட அரசர் காலத்தின் பதிவுகள்...
விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் முதன்முறையாக, நால்வருணக் கோட்பாட்டின்படி ஆட்சி செய்தது.
விஜயநகரப் பேரரசின் சமூக அமைப்பைப் பற்றி வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது, ‘சமுதாயத்தில் உயர்குடி மக்களாகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்களாவர். இரண்டாவதாகச் சத்ரியர். மூன்றாவதாக வைசியர்கள், இறுதியாகச் சூத்திரர்கள்’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி / பக் – 98/முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007)
தமிழ் அரசர் ஆண்ட காலத்து வரலாற்றில் பிராமணருக்கான முக்கியத்துவம் குறித்து பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் ’முற்போக்கு’க் கோட்பாட்டாளர்கள், வெகு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.
மரபு வழியாகவே எச்சாதியினரும் பூசை செய்யலாம் என்ற நிலையிலிருந்த பழனிக் கோயிலில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்யக்கூடாது எனத் தடுத்தவர் ’திராவிடர்’ திருமலை நாயக்கர்.
இதற்கான செப்பேட்டுச் சான்று,
`பிராமணர் அல்லாத பண்டாரங்கள் பழனி கோயிலில் பூசை செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாகப் பிராமணர்களை நியமித்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிட்டு இராமப்பய்யன் செப்பேடு வழங்கியுள்ளார். புலிப்பாணி பாத்திர மரபில் வந்த பண்டாரங்களுக்கும் சிவப்பிராமணர்களுக்கும் எந்த எந்த வேலை என்பதை இராமப்பய்யன் வரையறுத்துள்ளார். திருமலை நாயக்கர் செப்பேடு என்பதில் ஐயமில்லை. செப்பேட்டில் திருமலையின் பெயரும் உள்ளது. தற்போது பழனிக் கோயிலில் இச்செப்பேடு உள்ளது.’ (தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2/ ச.கிருக்ஷ்ணமூர்த்தி/மெய்யப்பன் தமிழாய்வகம் 2002/ பக் – 81)
தமிழர்கள் மரபுவழியாகவே, தம் கோயில்களில் தமிழர்களைத்தான் பூசாரிகளாகக் கொண்டிருந்தனர், தமிழில்தான் வழிபாடு செய்துவந்தனர். இந்த முறையை மாற்றியது திராவிடர் ஆட்சிதான். விஜயநகர, நாயக்கர் அரசுகளின் ஆட்சி மொழி, தெலுங்கு, வழிபாட்டு மொழி, சமஸ்கிருதம். தமிழ் புறந்தள்ளப்பட்டது. இதற்கான மிக முக்கியச் சான்றுதான், பழனி கோயிலில் பிராமணர்தான் பூசை செய்ய வேண்டும் என்ற திருமலை நாயக்கரின் ஆணை.
’திராவிட’ அரசர்கள் பிராமணருக்கு இந்தளவு முக்கியத்துவம் அளித்தமைக்கு அடிப்படைக் காரணம், ‘திராவிடர்’ என்பது தென்னிந்திய பிராமணரின் தொகுப்புப் பெயர் என்பதே ஆகும். விஜயநகரப் பேரரசு, நாயக்கர் அரசு ஆகியவற்றின் அரசர்கள் பிறப்பால், முழு சத்ரியர்கள் அல்லர். பிராமணக் கலப்பாளர்கள். இதற்கான பல சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம்.
’திராவிடர் என்போர் தென்னாட்டு பிராமணரே’ என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.
’திராவிடர்’ என்றால்தான் ’பிராமணர் வரமாட்டார்’ என்று கூறுவது, வரலாற்றை அறியாமல் முன் வைக்கும் கருத்து அல்லது அறிந்தே ஏதோ உள் நோக்கில் வெளிப்படுத்தும் கருத்து.
தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசரும் நாயக்கரும் சீரழித்ததில், தமிழரின் மதிப்பீடுகள் பெருமிதங்கள் வாழ்வியல் நெறிகள் அனைத்தும் நிலைகுலைந்தன. தமிழரின் சமூக அமைப்பு முறையே தலைகீழ் மாற்றத்தைக் கண்டது. தமிழ்க் குலங்கள், சாதிகளாக மாறி தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கின. இவ்வாறான ஏற்றத் தாழ்வை சாதிய அடுக்கை பிராமணர்கள்/ திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கினர்.
ஆங்கிலேயர் வருகையின்போது தமிழகம் இருந்த நிலையைப் பார்க்கலாம்.
புக்கானன் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் ஆய்வு செய்த ஊர்களில் எந்தச் சாதியினர் நிலவுடைமையாளராக இருந்தனர் என்பதைப் பட்டியலிடுகிறார். கொங்குப் பகுதித் தரவுகளில் சில கீழே தரப்படுகின்றன.
1. ’கடம்பூர் – விளைநிலங்களை வைதிகப் பிராமணரே பயிரிடுகின்றனர். அவர்களுக்கு வரி குறைவு. ஊரில் உள்ள மற்ற வீடுகளையும் தமதாக்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு வீடு இலவசம். உணவு இலவசம். தேவதாசிகள் இலவசம்.
2. கரூர் – பெரும்பகுதி நிலம் பிராமணருக்கு சொந்தம்.
3. நல்லராயன்பாளையம் – பிராமணரே இங்கு நஞ்சை பூமிக்குச் சொந்தக்காரர்.அது அவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்.
4. கிராமத்துக் கால்வாய் 200 காணி நிலத்திற்குப் பாய்கிறது (265 ஏக்கர்). இங்குள்ள நஞ்சை யாவும் பிராமணருக்கே சொந்தம். மீதி நிலம் யாவும் பொட்டல்.இதுவும் நான்கு பிராமணருக்கே சொந்தம்
5. பெருந்துறை – இவ்வூரில் பிராமணருக்கும் முகமதியருக்கும் இனாம் நிலங்கள் உள்ளன. முகமதியர் சில கடமைகளைச் செய்ய வேண்டும். பிராமணருக்கு அது இல்லை.’
(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும் 1792-1858/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் – 9)
இது ஒரு சிறிய சான்று அவ்வளவே. தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிராமணர் நிலவுடைமையாளராக இருந்தனர். அவர்கள் தமிழ்க் குலங்களை அடிமைகள் போல் நடத்தினர். இந்தக் காலத்தில்தான், திராவிட/ தென்னிந்திய பிராமணர் ஆட்சிக்காலத்தில்தான் தீண்டாமை உருவெடுத்தது.
நிலம், சாதி ஆதிக்கத் தனியாருக்கு முழு உடைமை ஆகிய பிறகு, பிற குலத்தவருக்குப் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றான பிறகு, சாதியக் கொடுமைகள் உருவாகத்தான் செய்யும். இத்தகைய நிலவுடைமை, தமிழர் அரசாண்ட எந்தக் காலத்திலும் நிலவவில்லை.
ஆங்கிலேயர் வந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கு இது.
கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியின் ஜமீன்கள்/ பாளையங்கள் எந்தெந்த சாதியினரிடம் இருந்தன என்பதைப் பட்டியலிடுகிறது.
பாளையங்கள் – 17
ஜமீன்கள் – 6
பட்டக்காரர் – 6
மற்றவர் – 9
மொத்தம் – 38
இவற்றில்,
நாயக்கர் உரிமை – 20
கவுண்டர் காணி -12
மற்றவர் – 6
(மேலது நூல்)
பாளையங்கள், ஜமீன்கள்தான் சுரண்டலின்கொடூர வடிவங்கள். இம்முறையை முதலில் அறிமுகம் செய்தவர் விசுவநாத நாயக்கர் எனக் கடந்த பதிவில் கண்டோம். பிராமணரை மட்டுமே தனது உயர் அதிகாரிகளாக வைத்திருந்து, அதை நியாயப்படுத்தி – அர்த்த சாத்திர நெறிப்படி அரசாண்ட கிருக்ஷ்ணதேவராயரின் அதிகாரி இவர் எனது குறிப்பிடத்தக்கது.
இந்த விசுவநாத நாயக்கர் வகுத்துகொடுத்த பாளையக்காரப் பாதையில், அவருக்குப் பின்னர் வந்த நாயக்க மான்னர்கள் பீடு நடைபோட்டனர்.
தொல் தமிழ்க் குலங்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை, பிராமணர் - வைசியர் – சத்ரியர் - சில தமிழ் வேளாளக் குலத்தவர் -ஆகிய பிரிவினருக்கு வழங்கினர் நாயக்க மன்னர்கள். இதன் விளைவுகளே மேற்கண்ட பாளையப்பட்டுப் பட்டியல்.
இவற்றில் பெரும்பான்மையை நாயக்கர் எடுத்துகொள்ள, தமிழ்க் குலங்களில் ஒன்றான கவுண்டர்களும் பிற தமிழ்க் குலத்தவர் சிலரும் இப்பாளைய முறையில் ஈடுபட்டுச் சொந்த மக்களையே சுரண்டினர். இதுதான், சாதி வடிவத்தின் ஊற்றுக் கண் ஆகும்.
திராவிட / பிராமணருக்கு சேவகம் செய்த, பாதுகாப்பளித்த பல தமிழ்க் குலங்களை அப் பிராமணர், ஆதிக்கச் சாதிகளாக்கினர். அதாவது, அச் சாதிகள் தம்மோடு மோதாமல் அவற்றுக்குள்ளேயே மோதிக் கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டனர். இதற்காகவே, அவர்கள் தமிழ்க் குலத்தினர் சிலரையும் நிலவுடைமைச் சுரண்டல்காரர்களாக வளர்த்துவிட்டனர் எனலாம்.
மேலும் தென்னிந்திய பிராமணரான திராவிட ஆட்சியாளருக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் தமக்கெதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாட்டில் சுரண்டும் எந்தப் பிரிவுக்கும் உள்ள அச்சமே இது. இந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், இவ்வாறு செய்தனர் எனலாம்.
இந்தத் திராவிடக் கொள்ளை நடத்தப்பட்டபோது, தமிழர்களின் பெரும்பகுதி மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில் விளக்க இயலாதவை. அதுவரை, அறிவார்ந்த குலமாக இருந்த பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர், கணியர், அம்பட்டர்,சானார் உள்ளிட்டவை கடுமையாக ஒடுக்கப்பட்டன.
உண்மையில், இந்தக் குலங்கள் அனைத்துமே சாதிகளாக மாற்றப்பட்டது, ’திராவிட’ ஆட்சியில் தான்...
வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாகும்...
வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது..
இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.
நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...
கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர்கள் கைது...
காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரி சிப்காட் அருகே ஏகாட்டூரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட சென்றனர். அப்போது கேளம்பாக்கத்தை அடுத்த படூர்-கழிப்பத்தூர் இடையே நின்று கொண்டிருந்த வெளிமாநில வாலிபர்கள் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த அமலேஷ் (வயது 21), விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த சாய்கிரண் (22), சுகேஷ் (21) என்பதும், அங்கு வெவ்வேறு கல்லூரிகளில் இவர்கள் படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து உள்ளனர். பின்னர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 35 கிராம் அளவு கொண்ட கஞ்சா பொட்டலங்களை ரூ.500-க்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் போட பயன்படும் எந்திரங்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்...
தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?
பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம்தான்.
அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.
தமிழ், தமிழர், தமிழர்நாடு..
மொழியால் தமிழன்.
இனத்தால் திராவிடன்.
தேசியத்தால் இந்தியன்.
என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்.
தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்.
விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது.
ஐ.நா இனப்படுகொலைக்கு துணை போகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை.
விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.
பிற விடுதலையடைந்த நாடுகள்போல தமிழர்நாடானது விடுதலை அடைந்து, தன்னிறைவு பெற்று, வல்லரசாக உயர்வதோடு நின்றுவிடக்கூடாது.
இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய நாடுகளையெல்லாம் துண்டு துண்டாக உடைக்க வேண்டும்.
தமிழர்நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர்நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலகமாற்றத்திற்கு உதவ வேண்டும்.
உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர்நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத்தரவேண்டும்.
நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்.
உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.
ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.
இது தொடரக்கூடாது..
தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கக்கூடாது..
விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தரவேண்டும்.
முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்...
12-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தென் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 13 செ.மீ மற்றும் நெல்லையில் 8 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் குமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 3 தினங்களில் ஒடிஸா நோக்கி நகரும். எனவே மீனவர்கள் அக்.7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை வங்கக் கடலுக்குச் செல்லக் கூடாது என்று தெரிவித்தார்...
திமுக வின் சன் குழுமமும் ஒரு கார்பரேட் நிறுவனம் தான்டா டுபுக்கு...
50000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் சன் டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது அம்பானியும் அதானியும் தான்..
சன் நெட்வொர்க்கும் கார்ப்பரேட் கம்பெனி தானுங்க...
சீமானின் சொத்து மதிப்பு விபரம்...
1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்,
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்,
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்,
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம் ,
5.ஆவடியில் 6ஏக்கர் நிலம் ,
6.பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் ,
7.சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில் ,
9.விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும்டிரஸ்டி பெயரில் சர்ச்,
10.மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம் ,
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு .
13. நெல்லை குமரிமாவட்ட நாடார் முக்கிய சங்கத்தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
15.பழனி அருகே தென்னந்தோப்பு
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை , மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
ஒரு சாதாரண எளிய பிள்ளையின் சொத்து இவ்வளவு தான்.
கடைசியில் அரணையூரில் ஆறு கோடி 6000 சதுர அடியில் சின்னதா ஒரு வீடு..
இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்..
சீமான் அரசியல் வாழ்க்கை..
1982- 1985திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 திமுக
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 - நாம் தமிழர்(பெரியார் வழி)
2014 -நாம் தமிழர் பெரியார் வடுக வந்தேரி (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னனி)
2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
இதை மறுக்க முடியுமா...
தமிழர்களும்... பருவக் காற்றும்...
தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட
்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.
பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.
வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,
''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)
''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.
இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?
கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)
கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.
பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.
''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship
ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!
''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.
''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.
நாவாய் - NavY - Navy
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.
கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.
தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
அமெரிக்காவின் பண்டைய வரைபடம். 1500-களில் பிரசுரிக்கப்பட்டது,
இந்த வரைபடம்: அமெரிக்காவின் ஒரு புதிய மற்றும் மிகச் சரியான விவரம் அல்லது உலகின் நான்காம் பகுதி, வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையையும், மத்திய மற்றும் தென் அமெரிக்காவையும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் மேற்கத்திய தீவுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியது.
இது ஸ்பெயினின் கிங் இரண்டாம் பிலிப் மற்றும் அவருடைய சகோதரி மார்கரிட்டா டி பர்மா, நெதர்லாந்தின் ஆட்சியாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ வரைபடம் ஆகும்.
வரைபடத்தில் இன்றைய சிலி கடற்கரையில் செல்லும் ஒரு கப்பலை ஒரு மெர்மடைட் கவனித்து வருகிறது. மெர்மெயைட் தன் கையில் ஒரு மர்மமான வட்ட வடிவ பொருள் ஒன்றை வைத்திருக்கிறது .
முதலில் இந்த மெர்மெய்ட் என்பது ஒரு பெண் அல்லது ஆணின் தலையும் மற்றும் இடுப்பு ஒரு மீனின் ஒரு வளைவு கொண்ட ஒரு புராதன கடல் உயிரினம், வழக்கமாக அழகாக சித்தரிக்கப்பட்டு நீண்ட நீளமான தங்க முடி கொண்டது. உண்மையில் இந்த உயிரினங்கள் பற்றி பண்டைய அனைத்து நாகரிகங்களின் கல்வெட்டு, சித்திரங்களில் காணப்படுகின்றன.
கீழே உள்ள வரைபடத்தில் நவீன சிகாகோ கடற்கரையில் பயணம் செய்யும் கப்பலை எதிர்கொள்ளும் மெர்மெய்ட் அவைகளின் வலது கையில் ஒரு வட்டு வடிவ உருவத்தை ஒத்த வித்தியாசமான ஒரு பொருளைக் கொண்டுள்ளது. டார்ரா டெல் ஃபியூகோவுக்குப் பயணம் செய்யும் படகின் வலதுபுறத்தில், மேலே உள்ள கப்பலை எதிர்கொண்ட மற்றொரு மெர்மெய்ட், அதன் இடது கையில் ஒரு ஓவல் வடிவ உருவத்தை வைத்திருப்பதைப் பார்க்கிறோம். இந்த பொருள் கண்ணாடியாக இருக்கலாம், மெர்மெய்ட் அவைகளின் முடிவைத் தொடுவதால் பெரும்பாலும் ஒரு கண்ணாடியைப் பார்ப்பதை போலவே உள்ளது.
ஆனால் கப்பலின் இடது புறத்தில் உள்ள மெர்மெய்ட் தன் வலது கையில் வைத்திருக்கும் பொருள் கண்ணாடி போல தெரியவில்லை.
அது வட்ட வடிவத்தில், நாம் இன்று ஆராய்ந்துக் கொண்டிருக்கும் பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் தான் உள்ளது.
மெர்மெய்டைட் வைத்திருந்த பொருள், ஒரு மர்மமாகவே இருந்தாலும், அமெரிக்க கண்டத்தின் ஒரு பழங்கால வரைபடத்தில் இது போன்ற அம்சங்களைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது...
யோகியர் ஜாதகம்...
ஒரு ராசியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் வாழ்வில் பல துயரங்களை அடுக்கடுக்காக சந்திக்க நேரிடும்.
இவர்களின் வாழ்வாதாரம் மற்றவர்களைப் போன்று சாதாரணமாக அல்லாமல், அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும்.
இதுதவிர, வாழ்நாளில் ஒருமுறையாவது மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியிருப்பார்கள் அல்லது வாழ்வின் உச்சத்திலிருந்து அடிமட்டத்திற்கு வந்திருப்பார்கள்.
சிலருக்கு, சகல வசதிகள் இருந்தும் திடீரென நடு வீதிக்கு வரும் நிலைமைகூட ஏற்பட்டுவிடும்.
சிலரோ, பிறந்ததிலிருந்து கடும் துன்பங்களை மட்டுமை சந்திந்திருப்பார்கள்.
ஆனால், இத்தனை துன்பங்களையும், வலிகளையும் எதிர்கொள்ளும் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்.
பெரும்பாலும் யோகிகளுக்கும், ஞானிகளுக்குமே இம்மாதிரியான அமைப்புகள் இருக்கும்.
அதனால், இவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது மற்ற ஜாதகங்களைப் போல மேலோட்டமான ஜோதிட விதிகளைக் கொண்டு அவசர அவசரமாக பலன்கூறினால் அது முற்றிலும் பொய்த்துவிடும்.
தவிர, கூட்டு கிரகங்களின் சேர்க்கையை, அவை நின்ற பாவம், ஏறிய சாரம் மற்றும் பாகைகள் முறையே கிரக யுத்தம், அஸ்தங்கம் மற்றும் நவாம்சபாதையில் அக்கிரகங்களின் இருப்பு ஆகியவற்றை மிகவும் நுட்பமாய் ஆய்வு செய்து பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)