ஒரு ராசியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் வாழ்வில் பல துயரங்களை அடுக்கடுக்காக சந்திக்க நேரிடும்.
இவர்களின் வாழ்வாதாரம் மற்றவர்களைப் போன்று சாதாரணமாக அல்லாமல், அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும்.
இதுதவிர, வாழ்நாளில் ஒருமுறையாவது மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியிருப்பார்கள் அல்லது வாழ்வின் உச்சத்திலிருந்து அடிமட்டத்திற்கு வந்திருப்பார்கள்.
சிலருக்கு, சகல வசதிகள் இருந்தும் திடீரென நடு வீதிக்கு வரும் நிலைமைகூட ஏற்பட்டுவிடும்.
சிலரோ, பிறந்ததிலிருந்து கடும் துன்பங்களை மட்டுமை சந்திந்திருப்பார்கள்.
ஆனால், இத்தனை துன்பங்களையும், வலிகளையும் எதிர்கொள்ளும் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்.
பெரும்பாலும் யோகிகளுக்கும், ஞானிகளுக்குமே இம்மாதிரியான அமைப்புகள் இருக்கும்.
அதனால், இவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது மற்ற ஜாதகங்களைப் போல மேலோட்டமான ஜோதிட விதிகளைக் கொண்டு அவசர அவசரமாக பலன்கூறினால் அது முற்றிலும் பொய்த்துவிடும்.
தவிர, கூட்டு கிரகங்களின் சேர்க்கையை, அவை நின்ற பாவம், ஏறிய சாரம் மற்றும் பாகைகள் முறையே கிரக யுத்தம், அஸ்தங்கம் மற்றும் நவாம்சபாதையில் அக்கிரகங்களின் இருப்பு ஆகியவற்றை மிகவும் நுட்பமாய் ஆய்வு செய்து பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.