மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தென் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 13 செ.மீ மற்றும் நெல்லையில் 8 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் குமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 3 தினங்களில் ஒடிஸா நோக்கி நகரும். எனவே மீனவர்கள் அக்.7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை வங்கக் கடலுக்குச் செல்லக் கூடாது என்று தெரிவித்தார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.