10/10/2018

ஆதனம் - (அட்டாங்க யோகம்)...


ஆதனம்...

பங்கய மாதி பர்ந்தபல் ஆதனம்
அங்குள வாம் இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாகுமே. - 558

பத்மாசனமாகிய பல வகைப்பட்ட விரிவான ஆசனங்கள் (சொல்லி இருப்பதில்) எட்டு ஆசனங்கள் முக்கியமானதாயிருக்கின்றன.  அதற்குள் மயக்கத்தைத் தராத சுவத்திகாசனம் என்பதில் இருந்து தங்க ஆசனத்தில் முதன்மையானவனாகும்.

நாடிதாரணை யோகத்துக்கு அவசியமானபடியாலும், நாடிகளில் அதிசூட்சும நாடிகளின் கூட்டம் தேகத்தில் அதிகமிருப்பதாலும் அந்த நாடிகளுக்கு அசைவை உண்டாக்கிக் கொள்ளாமலிருக்கத் தேகத்தை ஸ்திரமான தன்மையில் வைக்கும் தந்திரம் ஆசனமாகும்.  இதில் முக்கியமானவை பத்மாசனமும், சித்தாசனமும், சுகாசனமுமாகும்.  இவ்வாசனங்களில் வீற்றிருக்கும்போது சிரம், கழுத்து, இடுப்பு முதலியவைகளை வளைக்காமல் இருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.