01/10/2017

பாஜக ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்- மூன்றாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொடுத்த உறுதிமொழி...


வருசம் 3 ஆச்சு.... இன்னும் வந்தபாடில்லை...

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு...


எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.

இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்...

மகிசாசுரமர்த்தினி...


முன்னொரு காலத்தில் எருமைநாடு என்ற நாட்டில் ஒரு அரசன் ஆண்டு வந்தான்...

தன்னுடைய  நாட்டைக்  கைப்பற்ற  எண்ணிய ஒரு வணிக கும்பலை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தான்.

எருமை ( தமிழ் ) - மகிசம் ( வடமொழி ).
எருமையூர் ( தமிழ் ) - மகிசூர் ( அ ) மைசூரு.

அந்த வணிகக் கும்பலின் தலைவி சிங்கத்தின் மேல் அமர்ந்தவள். அவளைத்தான் மகிசாசுரமர்த்தினி என்கிறார்கள்.

மைசூரில் தான் உலகப்புகழ் பெற்ற தசரா பண்டிகை கொண்டாடப் படுகிறது.

உலகின் பல அரசர்களை வீழ்த்தியது சிங்கத்தின் மேல் அமர்ந்த ஒரு பெண் என்று தெரிகிறது...

விரல்களும் மருத்துவமும்...


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்...

நான் 35 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். என் பெயர் வெளியில் தெரியாத அளவுக்கு என் பணிகளை நடத்தி இருக்கிறேன் - தமிழக முன்னாள் ஆளுஞர் வித்யாசாகர் ராவ்...


மும்பைக்கு நான்தான் கவர்னர் என்று உங்களில் யாராவது இதற்கு முன்னால் அறிந்து இருந்தீர்களா..

ஆனால் என்னை எப்போது தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்தார்களோ, அன்றிலிருந்து நான் வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டேன்.

குறிப்பாக தமிழ்நாட்டவர் என்னை மோசமாக பார்க்கிறார்கள். ஆளுநர்  என்று கூட பார்க்காமல் என்னை,  அவன் இவன் அடேய் புடேய் என்று தான் எழுதுகிறார்கள் .

இத்தனைக்கும் ஆளுநரை 'மேதகு' ஆளுநர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சட்டமே சொல்கிறது.

ஆனால் அந்த சட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை.

இடைப்பாடி, பன்னீர் ஆகியோரின் கைகளை ஒன்றாக சேர்த்து குலுக்கினாலும் குலுக்கினேன், தமிழர்கள் என்னைப் போட்டு குலுக்கி எடுத்து விட்டார்கள்.

தெலுங்கு பட வில்லன், பெண்களை கற்பழிக்கும் வில்லன்  என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

என் பெயரை டேக் செய்து பதிவுகள் இணையங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

நானும் ட்ரெண்டு ஆகி இருக்கிறேனே, என்னவென்று போய் பார்த்தால், அத்தனையும் தமிழ்நாட்டில்  இருந்து என்னைத் திட்டிப் போடப்படும் விஷயங்கள்.

இருக்கும் இடம் தெரியாமல் இருந்த என்னை இணையத்தளங்களில் போட்டு கிழி கிழி என கிழிக்கிறார்கள்.

எனக்கு மிக்க மனவருத்தமாக இருக்கிறது. என்று சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த வித்யாசாகர் ராவ் மத்திய அரசிடம் இதையெல்லாம் சொல்லி, கண்ணீர் விட்டதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரை நியமித்து இருக்கிறது மத்திய அரசு.

அவருக்கு,  வடிவேலு பணியில் நீயும் வாடா நீயும் வாடா நீயும் வாடேய்  என்று வரவேற்பு கொடுப்பதுடன் விடை பெற்று செல்லும் வித்யாசாகர் ராவிடம் கடைசியாக ஒரு கேள்வி பதில் சொல்லி விட்டுதான் போக வேண்டும்..

இந்த கவர்னர் பீடி, கவர்னர் பீடி ன்னு சொல்றாங்களே அந்த பீடி தான் கவர்னர்கள் எல்லாம் குடிக்கிறதா ?

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை பற்றி மியான்மர் அரசிடம் மியான்மரில் இருக்கும் ஐ.நா.சபை ஏன் முறையிடவில்லை என்று லண்டன் பிபிசி. கேட்டதற்கு, மியான்மர் ஐ நா சொன்ன காரணம் என்ன தெரியுமா ?


ரோஹிங்கியா பற்றி பேசினால் மியான்மர் அரசுக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதால் நாங்கள் சும்மா இருந்து விட்டோம்.

அட பொறுக்கி நாய்களா... இப்படித்தானே ஈழத்திலும் சும்மா இருந்து விட்டீர்கள்... ஈழத்தில் இருந்து ஐ.ந சபையினர் வெளியேறவேண்டும் என்று இலங்கை அரசு சொன்னபோது, அங்கே மிகப்பெரிய இனப்படுகொலைக்கு திட்டமிடப்பட்டுவிட்டது என்று தெரிந்து இனப்படுகொலையைத்  தடுக்க  எந்த முயற்சியும் எடுக்காமல், அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டீர்கள்.

கொலை செய்யும் அரசுகளுக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதால் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா...அரசுகளுக்கு சேவை செய்யும் ஐ.நா சபை எதற்கு... பொறுக்கித் தின்பதற்கா....

உலகம் முழுவதிலும் இருக்கும் ஐ. நா. சபை உறுப்பினர்கள் எல்லாம் இப்படித்தான் செயல்படாதவர்களாக அல்லது அங்கிருக்கும் அரசுகளுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று லண்டன் பிபிசி திட்டி இருக்கிறது...

எந்த வார்த்தை போட்டு திட்டினாலும் அது மாமா வேலை பார்க்கும் தினத்தந்திக்கு மிகவும் பொருந்தும்...


சும்மா பா.ம.க அப்படி, பாமக இப்படி என்று தமிழர் கட்சியான பாமக வை எதிர்கிறாய் என்றால் நீ சந்தேகத்துக்குரியவன், தமிழின விடுதலையை மறைமுகமாக எதிர்ப்பவன் என்பதே உண்மை...


தமிழர்களின் எழுச்சியையும், தமிழின விடுதலையும் விரும்பும் ஒரு கட்சியை எதிர்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

அப்படி ஒருவன் நடுநிலைவாதி என்ற பெயரில் பாமக வை எதிர்ப்பதையே முழுநேர வேலையாக கொண்டுள்ளான் என்றால் ஒன்று அவன் இந்திய தேசிய  கைக்கூலியாக இருக்க வேண்டும்..

அல்லது தமிழினத் துரோகி பெரியாரை வழிகாட்டியாக கொண்டு திராவிட கொள்கை வகுப்பாளர்களின் கைக்கூலியாக  இருக்க வேண்டும்…

இதுதான் அப்பட்டமான உண்மை..

இது இரண்டுமே இல்லை என்றால் அவனுக்கு மூளையில் கோளாறு இருக்க வேண்டும்..

ஐ.நா வில் தமிழர்கள் சார்பாக குரல் கொடுக்க பாமக வின் பசுமை தாயகம் மட்டுமே உள்ளது...

அப்படி இருக்கையில் பாமக வை வீழ்த்த நினைப்பவன் எல்லாம் யாராக இருப்பான் என்று சிந்தி தமிழா...

குறிப்பு : ஐ.நா அங்கிகாரம் பெற்ற ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ளது என்றால்.. அது பாமக வின் பசுமை தாயகம் மட்டும் தான்...

செய்தியைப் பரிமாறும் கருவிதான் மொழியாம்; இதுவே கன்னட ஈ.வெ.ரா. வின் பகுத்தறிவு வழியாம்...


மொழி என்பது மனிதனுக்கு முகமையானதில்லையா?

மொழியின்றி மனிதன் வாழமுடியுமா?

மொழி இயற்கையானதல்லாமல் செயற்கையானதா?

இது எவ்வகையான பகுத்தறிவு?

மொழி என்பது செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் கருவி மட்டுமன்று என்பதை ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளவில்லை..

மொழி ஓர் இனத்தின் முகம்;
ஓர் இனத்தின நாகரிகம்;
ஓர் இனத்தின தொன்மை ;
ஓர் இனத்தின உணர்வு;
ஓர் இனத்தின் உயிர்..

அந்த மொழியைப் புறக்கணிப்பதன் வாயிலாக அந்த இனத்தின முகத்தினைச் சிதைத்து, அடையாளத்தைக் குலைத்து,
நாகரிகத்தை அழித்து, தொன்மையை மறைத்து, ஓர் இனத்தின் அனைத்துக் கூறுகளையும் திரித்துப் புரட்டுவதாகாதா?

’தமிழர் தலைவர்’ என்று சொல்லப்பட்ட ஈ.வெ.ரா.வுக்கு இஃது அழகா?

நிற்க, தமிழை எடுத்துக் கொண்டாலும் இன்று உலக ஞானத்திலும் முற்போக்குத் தன்மையிலும் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது?

தமிழனுக்கு முதலாவது நேரான சரித்திரம் இல்லை (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், தொகுதி 2, பக்கம் 987.)

தமிழில் உலகஞானமும், மற்போக்குத் தன்மையும் இல்லை என்று கூறித் தமிழை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தலாமா?

தமிழனுக்கு வரலாறே இல்லையென்று தமிழினத்தை இழிவுபடுத்தலாமா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..
என்ற வள்ளுவனின் குறளும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்ற கணியன் புங்குன்றனின் புறநானூற்றுப் பாடலும் உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மை கொண்டவை அல்லவா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் தமிழனின் உலகஞானம் வெளிப்படுகிறது.

தெளிவான நேரான சரித்திரம் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது தமிழ்மொழியைக் கொச்சைப்படுத்துகிற ஈ.வெ.ரா. தாம் சார்ந்திருந்த தெலுங்கு கன்னட மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?

தன்னைச் சார்ந்திருந்த - தாம் பேசிய - தெலுங்கு மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?

காரணம் அந்த இரண்டு இனமொழி மக்களும் ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்கவில்லை.

திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தையும் ஏற்காததால் அவரவர் தத்தம் மாநில மொழியையும், இனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தற்காத்துக் கொண்டனர்.

ஆனால், தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்கர்களும் கன்னடர்களும், மலையாளிகளும் திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வையும், பிழைப்புக்காக ஏற்றுக்கொண்டு அரசியலில் பயனடைந்தது ”உள்ளங்கை நெல்லிக்கனி” போன்றதாகும்.

தமிழ்மொழியினைக் கொச்சைப்படுத்திய தோடன்றித் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப்படுத்தி முரட்டு நாத்திகத்தைப் பேசித் தமிழர்களின் நல்ல மரபுகளை ஈ.வெ.ரா. அழித் தொழித்தார்.

ஆகையால் தமிழர்களே..

தமிழர்களுக்கு எதிரான ஈ.வெ.ரா.வையும் பொல்லாத் திராவிடத்தையும் புறந்தள்ளுவோம்..

தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்..

தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம்...

திராவிடம் - 4...


பிராமணர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்..

இப்போது அவர்களின் ஆதிக்கம் பற்றியும் திராவிடத்தின் பிறப்பு பற்றியும் தெரிந்துகொள்வோம்..

பிராமணர்கள் அந்தக்கால மன்னர்களால் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்த்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களாக இருந்தனர்.

இவர்கள் செய்த தொழிலும் அப்படியானது.

ஆன்மீக ரீதியான தொழிலைச் செய்தவர்களாதலால் மக்களும் இவர்களை உயர்ந்த குலத்தவராகவே எண்ணி வந்தனர்.

தொழில்வழிச் சமூக அமைப்பு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

உலகம் முழுவதும் மத வழிபாட்டைச் சேர்ந்த தொழில் செய்வோரும் மதம் வளர்ப்போரும் முதல்நிலையிலும் நிலவுடைமையாளர், படைவீரர்கள் இரண்டாம் நிலையிலும் விவசாயிகள், கைத்தொழில் செய்வோர் மூன்றாம் நிலையிலும் உடலுழைப்பு மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நான்காம் நிலையிலும் இருப்பர்.

உலகின் எந்த மூலையிலும் இந்த வேற்றுமைகள் இருந்தே வந்துள்ளது.

பிராமணர்களின் வீழ்ச்சியானது மொகலாயர்கள் தமிழகம் வரை தமது ஆளுகையை பரப்பிய பிறகு ஆரம்பமானது.

(தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் பல்லவர் ஆட்சியின்போது தொடங்கியது)

மன்னர்களின் ஆதரவு இல்லாது போக மக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு வந்தனர்.

(அதிலும் சில பிராமணர்கள் முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் உண்மை).

அப்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் தமிழரல்லாத நாய்க்கர்
(நாயக்கர் என்பதே தவறு,
நாயகர் என்ற தமிழ்ச்சாதியுடன் திரிக்கவே நாய்க்கரை நாயக்கர் ஆக்கினர்).

அவர்கள் ஏற்கனவே தமிழ்ப்பிராமணரை (பார்ப்பனரை) புறக்கணித்து சமசுக்கிருதத்தை வளர்க்கும் பிறமொழிப் பிராமணரை ஆதரித்தனர்.

இதனால் தமிழ்ப் பார்ப்பனரும் சமசுக்கிருதத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

நாயக்கர் மன்னர்கள் ஆண்ட காலமே சமசுக்கிருதத்தின் வசந்தகாலமாகும்.

அக்காலத்தில் சமசுக்கிருதத்தில் பெருங்காப்பியங்கள் தோன்றியதையும், தமிழ் சிற்றிலக்கியங்கள் மூலம் உயிர்பிழைத்து வந்ததையும் இன்று வரை தமிழ் மீண்டெழவில்லை என்பதையும் நினைவில் கொள்க.

18 ம் நூற்றாண்டுவரை முகலாயராலும் வேற்றின மன்னர்களாலும் தமிழ்ப் பார்ப்பனர் ஆதரிக்கப்படவில்லை.

வேற்றினப் பிராமணர் இதற்கு விதிவிலக்கு.

18ம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கில ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவ பிராமணர்கள் நிலை கவலைக்கிடமானது.

(ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்ற பழமொழி நினைவு வருகிறதா)

ஆங்கில ஆதிக்கம் வலுக்க வலுக்க இந்தியர் அத்தனை பேருமே பாதிக்கப்படையத் தொடங்கினர் 19ம் நூற்றாண்டு வந்ததும் ஒரு திருப்பம்.

1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம் இந்தியரின் கிளர்ச்சியால் கொண்டுவரப்பட்டது.

(நாம் எட்டாம் வகுப்பில் படித்ததுதான் நினைவு வருகிறதுதானே?) .

அதற்கு முன்புவரை அனைத்து அரசாங்க பதவிகளும் ஆங்கிலேயருக்கே உரித்ததாயிருந்தது.

ஆம்; இந்திய விடுதலை எழுச்சி என்பதன் ஆரம்பமே ஆங்கிலேயருடன் போட்டியிட்டு அரசுப்பதவிகளை பெறுவதிலேயே தொடங்கியது.

'சர்.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்' எனும் வெள்ளையரால் தொடங்கப்பட்ட 'இந்தியக் காங்கிரஸ்' என்பது அந்தக்காலத்தில் 'மெக்காலே' பாடத்திட்டம் எனும் கட்டாய ஆங்கிலவழி மூலம் (ஆங்கிலச் சேவகத்திற்கென்றே) உருவாக்கப்பட்ட கல்வியைக் கற்றோருக்கு வேலைவாங்கித்தர பாடுபட்டதேயாகும்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த பிராமணர்கள் குலத்தொழிலாக ஓதுதல், மனனம் செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தவர்களாதலால்  அவர்கள் கல்விகற்று அரசாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தனர் .

பின் 1919 'மாண்டேகு செம்சுபோர்டு' சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முன்பைவிட அதிகமான அளவில் இந்தியருக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.

பின்னர் ஆங்கிலேயரின் பிடி இறுக இறுக உள்நாட்டு வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுக்க இந்திய வணிகத்தில் இருந்த ஆதிக்க வர்க்கத்தினர் பிழைப்பிலும் மண்விழுந்திருந்தது.

அவர்களும் ஆங்கிலக்கல்வி கற்று பதவிகள் பெறும் முன் அத்தனை பதவிகளிலும் பிராமணர்கள் நிறைந்துவிட்டனர்.

பிராமணர்கள் மீண்டும் ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்தனர்.

அதாவது நாம் நினைப்பதுபோல நிதிக்கு, நீதிக்கு, வேளாண்மைக்கு, கல்விக்கு என அனைத்திற்கும் தனித்தனி துறைகள் அமைக்கும் 'செக்கரட்ரியேட்' முறையின் வருங்காலத்தை முன்பே கணித்து பிராமணர்கள் அதில் புகுந்துவிடவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலில் எதிர்கொண்ட சமூகம் என்ற வகையில் தானாக அவர்கள் சென்றடைந்தனர்.

இப்பாது பதவிகளைப் பெறுவதில் ஆங்கில-இந்தியப் போட்டியைவிட பிராமணர்-பிராமணரல்லாதோர் போட்டி கடுமையாக ஏற்பட்டது.

இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் மூளையைக் கசக்கினர்.

அப்போது  பிறந்தது தான் திராவிடம்...

தாமரைக்கு ஓட்டு போட்டது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு...


குஜராத்தில் ஒருவர் ஜவுளி எடுக்க கடைக்கு சென்றுள்ளார் . டிரஸ் எடுத்துட்டு பில் வாங்கும் போது பில்லில் வித்தியாசமான ஒரு ஹிந்தி வாசகம் இருந்துள்ளது.

தாமரை நாங்கள் செய்த பெரும் தவறு.. என்பது தான் அந்த வாசகம்..

இதை கண்ட வாடிக்கையாளர் உடனே ட்விட்டரில் அதை பதிவு செய்ய சங்கிகள் பதறியடித்து ரிப்போர்ட் செய்து பதிவரின் பக்கத்தை 30 நாட்கள் முடக்கி விட்டார்கள்.

சீப்ப ஒழிச்சு வச்சா கல்யாணம் நின்னுடும் நினைக்கிறானுங்க கபோதிகள்...

ஒருத்தரை முடக்கலாம் எல்லாரையும் முடியுமா இப்போ வைரலா ஓடுதாம் அந்த ஒற்றை பில்...

அதிசய கிளிப் பூ...


இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது..

ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை.

அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ..

வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

தன் பங்காளி சிங்களர்களிடம் போர் செய்ய நம்ம டொபாகோ வைகோ நாயூடு தயார் ஆனபோது...


திராவிடம் - 3...


திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டு வந்தது என்பதைப் பார்க்குமுன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது..

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'..

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்'  கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர்..

இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக் கொண்டு சாதியை உருவாக்கி  மனுதர்மத்தை உருவாக்கி கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி
ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர் .

ஆனால் உண்மை அதுவல்ல..

ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே.

இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலி செய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும், இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு மற்றவர்கள் விலகிக் கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.

திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது...

அதிமுக வும் தமிழின அழிப்பும்...


தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்...


யார் இந்த பன்சாரிலால் புரோகித்?

1940 ஆம் ஏப்ரல் 16ஆம் தேதி பிறந்த இவருக்கு வயது 77.

மகாராஷ்டிரா விதர்பா தொகுதியைச் சேர்ந்தவர். முதலில் பாஜகவில் இணைந்த அவர், பின்னர் காங்கிரசில் சேர்ந்து, மீண்டும் பாஜகவிற்கே வந்து சேர்ந்தார்.

காங்கிரசில் இணைவதற்கு முன்பு, ஜனதா கட்சி மற்றும் ஃபார்வர்டு ப்ளாக் ஆகியவற்றின் ஆதரவாளராக இருந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பியாக இருந்தவர். அதில் 2 முறை காங்கிரஸ் சார்பில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். ஒருமுறை பாஜக சார்பில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திரா காங்கிரஸ் உருவான போது, 1978ல் நாக்பூர் கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவானார். 2016 இல் அசாமிலும், 2017 இல் மேகாலயாவிலும் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்...

ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்...


ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூப்பர் பெடி நகரம், விலையுயர்ந்த கற்களுக்கான சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தை ஒட்டியுள்ள இந்த நகரத்துக்கு 80 ஆண்டுகளுக்கு முன் சுரங்கத் தொழிலாளர்கள் வந்து குடியேறினர்.

அவர்கள், இங்கு வீசும் மணற்புயல், கோடை வெயிலிலிருந்து தப்பிப்பதற்கு (அது உச்சபட்சமாக 47 டிகிரி செல்சியசாக இருக்கும்) நிலத்தடியில் வசிப்பதை வசதியாகக் கருதினர்.

இந்த வறண் ட, மரங்களற்ற நகரின் சுண்ணாம்புக் கல் குன்றுகளைக் குடைந்து 'டக்கவுட்' எனப்படும் நிலத்தடி வீடுகள் உருவாக்கப்பட்டன.

குடைவுப் பணி முடிந்ததும் சுவர்களில் ஓர் இயற்கை 'வார்னிஷ்' பூசப்படுகிறது, தரையில் கான்கிரீட் இடப்படுகிறது.

நவீனமான 'டக்கவுட்'டுகள் அனைத்திலும் சுவர் கம்பள அமைப்பு, வழக்கமான வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர், மின்சார இணைப்பு உண்டு. கூப்பர் பெடி நகரில் இந்த நிலத்தடி வீடுகள் மட்டுமின்றி, மூன்று நிலத்தடி தேவாலயங்களும் உண்டு.

நல்ல காற்றோட்ட வசதியுடன் இந்தக் குகை வீடுகளின் வெப்பநிலை எப்போதும் நிலையாக வைத்திருக்கப்படுகிறது.

கொஞ்சம் வெளிச்சக் குறைவு, இலேசான எதிரொலி, பூமியின் உப்பு வாசனை தவிர இந்த வீடுகளில் வாழ்க்கை சாதாரண வீடுகளைப் போல இயல்பாகவே இருக்கிறது.

இந்த நகரத்தின் ஆயிரத்து 900 குடும்பங்களில் 70 சதவீதம் பேர் நிலத்தடி வீடுகளிலேயே வசிக்கின்றனர்.

இந்த வீடுகள் தவிர வேறு எங்கும் தங்களுக்கு வாழப் பிடிக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாக இடம் வாங்கி ஒரு 'டக்கவுட்'டை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 17 லட்ச ரூபாயும், ஏற்கனவே தயாராக உள்ள, மூன்று அறைகள் கொண்ட 'டக்கவுட்'டை வாங்குவதற்கு 30 லட்ச ரூபாயும் ஆகிறது.

ராபர்ட் கோரோ என்பவர் இங்கு 'டெசர்ட் கேவ்' என்ற நான்கு நட்சத்திர நிலத்தடி ஓட்டலை நடத்தி வருகிறார்.

உலகில் இதுதான் ஒரே நிலத்தடி ஆடம்பர ஓட்டல் என்கிறார் அவர்.

தனது ஓட்டலில் வேறு எங்கும் இல்லாத அமைதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம், அவர்கள் தமது அறைக் கதவை மூடிவிட்டால் எந்த வெளிச்சத்தமும் கேட்காது என்று கூறுகிறார் ராபர்ட் கோரோ.

நிலத்தடி கட்டிடங்களின் ஒரே குறைபாடு தூசிதான்.

தரை, மேஜை மற்றும் உணவிலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு படலமாக தூசி படர்ந்து விடும்...

மதம் மாறி திருமணம் செய்த 60 அப்பாவி பெண்களை அடைத்து வைத்து கொடுமை படுத்தும் பாஜக வின் ஆர்.எஸ்.எஸ் ஆசிரமம்...


கேரள மாநிலம் கொச்சியில் 28 வயது பெண் ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடவிட்டில், இந்துப் பெண்ணாகிய தான் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்த காரணத்தினால் அந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி திரிபுநிந்துராவில் உள்ள யோகா மையம் ஒன்றில் 22 நாட்கள் சிறை தான் வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அங்கு தான் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த யோகா மையத்தில் தன்னைப் போன்றே வேற்று மதத்தினரை திருமணம் செய்த மேலும் 60க்கும் மேற்ப்பட்ட பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி மருத்துவர் சுவேதா காணாமல் போனதாக அவரது கணவர் ரிண்டு ஐசக் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் பீச்சியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் தங்களது திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்துள்ளனர்.

ஸ்வேதாவின் கூற்றுப்படி, சுமார் பத்து மாத காலம் ஐசாக்குடன் அவர் வாழ்ந்ததாகவும், அவரை அவரது பெற்றோர் அந்த யோகா மையத்திற்கு ஆலோசனைக்காக செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

அங்கு சென்றதும் தனக்கு பல சித்திரவதைகள் கொடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். யோகா மையத்தில் பெரும்பாலும் தனது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் என்றும் அங்கு பைபிள் மற்றும் குர்ஆனில் உள்ள முரண்பாடுகள் என்று அங்கு அடைக்கப் பட்டவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் அங்குள்ள கழிப்பறைகளுக்கு கதவுகள் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்குள்ளவர்களில் சிலர் பல வருடங்களாக அங்கு அடைக்கப்பட்டவர்கள் என்றும் பலருக்கு பெரும் நோய் இருத்தும் அவர்களுக்கு எந்தவித மருத்துவமும் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது மனுவில், அந்த யோகா மையத்தில் நடைபெறும் கொடுமைகளில் பெண்களை இந்து மதத்திற்கு மாற்றுகிறோம் என்கிற பெயரில் பாலியல் தொந்தரவுகளும் நடைபெறுகிறது என்றும் அந்த யோகா மையத்தில் உள்ள 65 பெண்களும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவர் சுவேதா குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த யோகா மையத்தில் சித்திரவதைக்கென்று தனி ஒரு கூடம் ஒன்றே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை துன்புருத்துபவர்களிடம் இருந்து தப்ப, அவர்கள் கூறுவது அனைத்தையும் ஒப்புக்கொள்வது போல சுவேதா நடித்துள்ளார். ஒரு சமயம் சுவேதாவை அவரது பெற்றோர் முவட்டுபுழாவில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். தன்னை கொடுமை படுத்தியவர்களிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு கோரியதோடு இந்த சட்ட விரோத கிரிமினல் குற்றம் புரிந்தவர்கள் மீது நீதிமன்ற விசாரணை வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட அந்த யோகா மையத்தையும் ஒரு தரப்பினராக சேர்த்து அவர்களின் கருத்தைப் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயம்பேரூர் பஞ்சாய்த், கண்டனாட்டில் மனோஜ் என்கிற குருஜி நடத்தும் யோகா வித்யா கேந்திராவை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஜீஷ் என்ற ஒருவரையும் கடந்த திங்கள் கிழமை காவல்துறை கைது செய்துள்ளது. அங்கு யோகா ஆசிரியர்களாக பணியாற்றி வந்த மனோஜ் உட்பட நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்...

தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்...


கலாநிதி பாலசிவகடாட்சம் இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில் விவசாயத் துறை உயிரியல் (Agricultural Biology) பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர்.

தமிழ் மருத்துவர் அல்லாத இவர் தமிழ் மருத்துவத்தைப் பற்றி எழுதியுள்ளதிலிருந்து இவரின் திறமையைப் பற்றி அறியலாம்.

பல்கலைக் கழகத்தின் புலமையாளர்களிடம் அவற்றைப் பற்றிய நன்மதிப்பு நிறைந்திருந்தது.

தமிழர் மருத்துவத்தில் தனிச் சிறப்புகளைப் பழம் பாடல் விளக்கத்துடன் கூறுவதோடு சித்த மருத்துவத்தின் மேன்மைகளை சுவைபடக் கூறியுள்ளார்.

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் எளிய மருத்துவ முறைகளையும் இந்நூலின் விளக்கியுள்ளார்.

சமுதாயத்திற்கே பயன்தரும் நூல் இது. ஒவ்வொரு தமிழர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அற்புத நூல் இது.

இந்நூலில் நான்கு பகுதிகள் உள்ளன.

(1) தமிழ் மருத்துவத்தின் வரலாறு

(2) உணவே மருந்து

(3) வீட்டு வைத்தியம்

(4) மூலிகை ஆய்வு

ஒவ்வொரு பகுதியும் தமிழரின் அறிவுத்துறை வளர்ச்சி பற்றியும் சிந்தனை வளர்ச்சி பற்றியும் மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

இந்நூல் தமிழ் வாசகர்களின் உடல்களிற்கு மாத்திரமல்லாமல் உள்ளங்களுக்கும் நன்மருந்தாக அமையும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி
அவர்களின் முன்னுரையிலிருந்து...

நூலாசிரியர் : கலாநிதி பால சிவகடாட்சம்
B.Sc. Hons.Srilanka, B.Ed. (Toronto),
Ph.D.(London), D.I.C
வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
விலை : ரூ. 130/-

நம்ப முடியாத உண்மைகள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் 26...


ஆழ்மன சக்தியைப் பெற முடியுமா?

ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.

ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.

இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.

அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே “விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய “இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)” , பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)” போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் “யோக சூத்திரங்கள்” என்ற நூலை எழுதினார்.
ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.

எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை எளிமையாக இனி பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்....

கன்னிமாரா நூலகம்...


கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம்.

எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றம், மாற்றம் ஏற்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது என்பதை அறியலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப் பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்.

கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது இந்த நூலகம்.

1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் என்பதை அறியலாம்.

அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை.

காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் அவர்கள் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணுகின்றோம்.

கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் (இன்று) பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி..

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம், முன்னேற்றம், தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப்படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.

கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது.

1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகை.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றார் திருமூலர்.

இதனை மனதில் கொண்டு வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான 'பிரெய்லி' மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது.

தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.

இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

“இங்கு என்ன கிடைக்கிறது என்று எளிதிலே கேட்பவர்கள் பலர்! இங்கு எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லும் நிலையிலே இருக்கிறது - செயல்படுகிறது - நூலகம்.

ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் வாசகர்களையும் மூன்றே கால் இலட்சம் பயன்படும் நூல்களையும் பயன்படுத்த வேகம் கொண்டு அறிவுக்களஞ்சியமாக ஆராய்ச்சி மையமாய், நடைப்போடுகிறது நூலகம் இன்று, வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் கன்னிமாரா சென்று கருத்தாக்கம் பெறுங்கள்.

இத்தனையும் ஏட்டிலே எழுதிவிட்டால் இனிப்பின் சுவை குறைந்து விடும் அதனால் நேரில் சென்று சுவைத்துப் பாருங்கள்...

தம்பி பாலச்சந்திரன் பிறந்தநாள் இன்று...



SCHEDULE J - மருந்தும், மருத்துவமும் மக்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறது...





உங்களின் நேரத்தை வீணடிப்பதாக நினைத்தால் இதை படிக்க வேண்டும்.




இங்கு குணப்படுத்தவே முடியாது என அரசாங்கம் குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது தான் சிரிக்க வைக்கிறது..

1.AIDS
2.Angina Pectoris
3.Appendicitis
4.Arteriosclerosis
5.Blindness
6.Blood poisoning
7.Bronchial asthma
8.Cancer and benign tumour
9.Cataract
10.Change in colour of hair and growth of new hair
11.Change of foetal sex by drugs
12.Congenital malformations
13.Deafness
14.Diabetes
15.Diseases and Disorders of the uterus
16.Epileptic fits and psychiatric disorders
17.Encephalitis
18.Fairness of the skin
19.Form and structure of the breast
20.Gangrene
21.Genetic disorders
22.Glaucoma
23.Goitre
24.Hernia
25.High/low blood pressure
26.Hydrocele
27.Insanity
28.Increase in brain capacity and .improvement of memory
29.Improvement in height of children/adults
30.Improvement in size and shape of the sexual organ and in duration of sexual performance
31.Improvement in the strength of the natural teeth
32.Improvement in vision
33.Jaundice/Hepatitis/Liver disorders
34.Leukaemia
35.Leucoderma
36.Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure
37.Mental retardation, subnormalities and growth
38.Myocardial infarction
39.Obesity
40.Paralysis
41.Parkinsonism
42.Piles and Fistulae
43.Power to rejuvenate
44.Premature ageing
45.Premature greying of hair
46.Rheumatic heart diseases
47.Sexual impotence, premature ejaculation and spermatorrhoea
48.Spondylitis
49.Stammering
50.Stones in gall-bladder, kidney, bladder
51.Vericose vein...