01/10/2017

நான் 35 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். என் பெயர் வெளியில் தெரியாத அளவுக்கு என் பணிகளை நடத்தி இருக்கிறேன் - தமிழக முன்னாள் ஆளுஞர் வித்யாசாகர் ராவ்...


மும்பைக்கு நான்தான் கவர்னர் என்று உங்களில் யாராவது இதற்கு முன்னால் அறிந்து இருந்தீர்களா..

ஆனால் என்னை எப்போது தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்தார்களோ, அன்றிலிருந்து நான் வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டேன்.

குறிப்பாக தமிழ்நாட்டவர் என்னை மோசமாக பார்க்கிறார்கள். ஆளுநர்  என்று கூட பார்க்காமல் என்னை,  அவன் இவன் அடேய் புடேய் என்று தான் எழுதுகிறார்கள் .

இத்தனைக்கும் ஆளுநரை 'மேதகு' ஆளுநர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சட்டமே சொல்கிறது.

ஆனால் அந்த சட்டங்கள் எதுவும் தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை.

இடைப்பாடி, பன்னீர் ஆகியோரின் கைகளை ஒன்றாக சேர்த்து குலுக்கினாலும் குலுக்கினேன், தமிழர்கள் என்னைப் போட்டு குலுக்கி எடுத்து விட்டார்கள்.

தெலுங்கு பட வில்லன், பெண்களை கற்பழிக்கும் வில்லன்  என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

என் பெயரை டேக் செய்து பதிவுகள் இணையங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

நானும் ட்ரெண்டு ஆகி இருக்கிறேனே, என்னவென்று போய் பார்த்தால், அத்தனையும் தமிழ்நாட்டில்  இருந்து என்னைத் திட்டிப் போடப்படும் விஷயங்கள்.

இருக்கும் இடம் தெரியாமல் இருந்த என்னை இணையத்தளங்களில் போட்டு கிழி கிழி என கிழிக்கிறார்கள்.

எனக்கு மிக்க மனவருத்தமாக இருக்கிறது. என்று சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த வித்யாசாகர் ராவ் மத்திய அரசிடம் இதையெல்லாம் சொல்லி, கண்ணீர் விட்டதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரை நியமித்து இருக்கிறது மத்திய அரசு.

அவருக்கு,  வடிவேலு பணியில் நீயும் வாடா நீயும் வாடா நீயும் வாடேய்  என்று வரவேற்பு கொடுப்பதுடன் விடை பெற்று செல்லும் வித்யாசாகர் ராவிடம் கடைசியாக ஒரு கேள்வி பதில் சொல்லி விட்டுதான் போக வேண்டும்..

இந்த கவர்னர் பீடி, கவர்னர் பீடி ன்னு சொல்றாங்களே அந்த பீடி தான் கவர்னர்கள் எல்லாம் குடிக்கிறதா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.