22/12/2018

உலகம் வியந்த கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று...


தனது 33 வது வயதில் மரணம் அடைந்தார்!, உலக கணித வரலாற்றில் இவருக்கு நிகராக இன்னும் யாரும் பிறக்கவில்லை என்றால் அது மிகையாகாது.

ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்தார்.

3 வயது வரை இவர் பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.

ஆரம்பத்தில் இவரின் திறமையை கண்டு கொள்ளாத உலகம் அவரது வாழ்கையின் கடைசி காலகட்டத்தில் இராமானுஜத்தின் கணித ஆற்றலை பார்த்து உலகமே வியந்தது!

இவர் எழுதிய பல்வேறு தேற்றங்களுக்கான விடையை இன்னும் இந்த உலகம் இராமானுஜன் எப்படி இந்த விடையை கண்டு பிடித்தார் என்ற வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றது.

இவரது வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. பார்ப்போரை திகைக்க வைக்கும்...

இலக்கியத்தில் வாழும் யாழ்...


தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும்.

நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும்.

தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று. 

யாழின் வகைகள் பல. அவை யாழ் வகைகள்...

பேரியாழ் (21 நரம்புகளை உடையது).
மகரயாழ் (17 நரம்புகளை உடையது).
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது).
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது).

இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்.

வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில்.

அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு.

வழக்கத்தில் இவ்விசைக் கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு. பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்து கொண்டேன்.

இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.

பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம்.

ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது. 

இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.

இராமயணத்தில் இலங்கை அரசனாக இராவணனை சித்தரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இராவணன் சிறந்த யாழ் வித்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் இயற்றிய இசைநூலின் பெயர் இராவணியம் ஆகும், யாழ் மீட்டுபவர்களை யாழ்பாணர் என்றழைப்பர்.

இலங்கைக்கு யாழ்பாணம் என்று பெயர் வந்திருக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும்.

இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார்.

பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.

சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது.

சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவருடைய சுற்றத்தாரின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள சம்பந்தரிடம் வேண்டினார் திருநீலகண்ட யாழ்பாணர். அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார். கமகங்களைச் சரியாக யாழில் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு. இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.

பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனைச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார்.

வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு விடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்.

கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள.

நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.

மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்).

கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை ப. 263).

யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ்க் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது.

யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.

யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவோமே...

பாஜக அமித்ஷா எனும் கொலையாளி


சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?


சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்...

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்...

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்...

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்...

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

எலும்பு பலமடையும்...

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்...

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்...

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது...

இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தம் கிடையாது...


கஜா புயல்: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்...


புதுக்கோட்டை:கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் சிவக்குமார், வாடிக்கையாளர்களின் கடன்களை ரத்து செய்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ரத்து அறிவிப்பு...

ஆலங்குடி அருகே வம்பன் நான்குரோடு பகுதியில் பகவான் டீக்கடை வைத்திருப்பவர் சிவக்குமார். கஜா புயல் எதிரொலியால் தனது கடையில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

அறிவிப்பை கடை முன் அட்டையில் ஒட்டி தொங்கவிட்டுள்ளார். சிவகுமாரின் மனிதாபிமானத்தை மற்ற கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் பாராட்டுகின்றனர்...

7லட்சத்து 81ஆயிரம் கோடி பதுக்கிய பாஜக...


அப்பல்லோ ரெட்டியின் ஏமாற்று வேலைகள்...


75 நாள் அப்போல்லோவுலயே குடி இருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட அப்போல்லோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

வெளியில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ஹோட்டலில் தான் உணவருந்தினார்கள். 

பலர் அம்மா உணவகத்தில் உணவருந்தினார்கள்.

அப்படி இருக்கையில்...

பத்திரிக்கையாளர்களின் உணவுக்காக 48.43 லட்சம் என்பது என்ன  கணக்கு ?

பாஜக மோடி கலாட்டா...


நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை.?


நம் முன்னோர்கள் விபூதியை பட்டையாக நெற்றியில் பூசுவர்.

இந்த விபூதி பெரும்பாலும் பசுவின் சாணம் மற்றும் சில மரங்களை எரித்து அதில் இருந்து தயாரித்தனர்.

பிறக்கும் போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும் போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.

மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத்தான் போகிறது.

நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.

இந்த வாழ்க்கை மாயமானது.

நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான்.

இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.

மேலும் இந்த சாம்பல் பாக்டீரியவை கொல்லும் திறன் கொண்டது.

எனவே காய்ச்சல் அல்லது உடல் நலகுறைவின் பொழுது பயன்படுத்தபடுகிறது.

விஞ்ஞான பூர்வமாக அது சைனஸ் பிரச்சினைகள் மற்றும் மற்ற பாக்டீரியல் நோய்களை தடுக்கிறது.

இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கியப்பாகம்.

அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.

இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும்.

மேலும் இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது...

ஸ்டெர்லைட் ஆலையின் அடுத்த திட்டம்.. மருத்துவ மாப்பியா....


வியாதியையும் உற்பத்தி செய்வோம்...

வியாதிக்கு மருந்து மாத்திரை கொடுப்போம்...

அதாவது காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்பீங்களாடா...

பெரியபுராணத்தில் தமிழிசை...


சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தைப் பாடும் போது 41 பாடல்களால் அவர் பாடும் இசை முறையைக் கூறுகிறார். அங்கு இசை இலக்கணச் செய்திகளைக் கூறியுள்ளார்.

1) ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச) என்பதனை ஆரோசை என்றும், அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதனை அமரோசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2) குழல் துளைகள் மேல் விரல்களை மென்மையாக அசைத்தும், வழுக்கியும், தழுவியும், வண்டு மலர்மேல் அசைதல் போல் அசைத்தும் பல்வேறு உள்ளோசைகளை எழுப்ப வேண்டும்.

3) ஆனாயர் முல்லைப் பண்ணை முறைமை வழுவாது இசைத்தார். இசை பண்ணாகும் நிலையை இதன் மூலம் விளக்குகிறார் ஆனாயர். எல்லாச் சுரத்தானங்களையும் நன்கறிந்து அவை முறையாக ஒலி காட்டுகின்றனவா என்பதனை அறிந்து இசைக்க வேண்டும்.

4) பண்ணமைப்பு முறையில் மந்தரம், மத்திமம், தாரம் ஆகியவையும் வலிவு, சமம், மெலிவு ஆகிய பண்ணமை இடங்களும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு ஆகிய பாடல்வகைகளும், பாணி, தூக்கு, நடை ஆகிய தானத் தொடர்பான விளக்கங்களும் உள்ளன.

5) குழலைப்பற்றி மிகவிரிவாகக் கூறுகிறது இப்பகுதி. துளை இடும் முறை, நுட்பமான இசை எழுப்பும் முறை, திருவைந்தெழுத்தை இசைத்து, இசை நிகழ்வைத் தொடரும் முறை போன்றன கூறப்பட்டுள்ளன...

வங்கிகள் 6 நாட்கள் செயல்படாதா..?


நாம் வாழும் இந்த வாழ்க்கையும் செய்யும் வேலையும் நமக்கானாதா என்று உற்று பாருங்கள்...


இங்கு உனது உழைப்பு உனக்கானது அல்ல என்பதே பதிலாக கிடைக்கும்...

காரணம் எளிமையானது தான்...

உழைத்து உணவை வாங்கி உண்ணுகின்றோம்...

இதுவே உணவை உறபத்தி செய்வதற்காக உழைத்தால் இங்கு நம் உழைப்பு நமக்காக மட்டுமே பயண்படுத்தப்படும்...

இந்த எண்ணங்கள் நம் மனதில் எழாமல் இருந்திடவே "பணம்"எனும்  காகிதத்திற்கு மதிப்பினை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்...

இயன்றவரை வீட்டின் எஞ்சியுள்ள பகுதியில் ஒரு வேலை உணவிற்கு தேவையான பொருட்களையாவது உற்பத்தி செய்து உண்ண கற்றகொள்ளுங்கள்...

இங்கு உள்ள கட்டமைப்பு ஒன்றுதான் மனிதன் தன் தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ள கூடாது என்பதே...

Biological weapons பதிவு 2 - செயல்திட்டம் பற்றி அடுத்த பதிவில்....


பிராண சிகிச்சை என்றால் என்ன ..?


பிராண சிசிச்சை என்பது தொன்மை கலையின் ஒரு அறிவியல் முறை. இது நமதுபண்டைய கால முறை. இந்த கலை சீனா அறிஞர் யுவாங்க்சுவாங் காலத்தில் சீனத்தில் பரவியது.

பிற்காலத்தில் இக்கலை சிறிது மாற்றம் செய்யப்பட்டு உலகமெங்கும் பரப்பப்பட்டது.

தற்சமயம் இக்கலை உலகம் முழுவதும் சிறப்பாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறையின் மூலமாக நமது உடலில் மற்றும் மனதில் தோன்றும் பலவிதமான நோய்களை, வியாதிகளை, எந்த விதமான பக்கவிளைவுமின்றி குணப்படுத்தலாம்.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்...

உடலில் உள்ள சத்துக்கள் குறைவினால் வரக்கூடியது. வெளியிலிருந்து கிருமிகளால் தொற்றக்கூடியது .

மேற்க்கண்டவைகளில் எவற்றால் மனிதன் பாதிக்கப்பட்டாலும் நமதுபிராண சிகிச்சையின் மூலம் அவற்றைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்..

பிராண சிகிச்சை என்பது மருந்தில்லா துணை மருத்துவம், நீர், நிலம், ஆகாயம், மண், காற்று ஆகிய இந்த ஐம்பூதங்களிலிருந்து உயிர் சக்தியை பெற்று சிகிட்சை அளிப்பது ஆகும்.

நோயாளியின் உடலில் எங்கெல்லாம் உயிர் சக்தி குறைந்து நோய் உண்டாகிறதென்று அறிந்து அங்கெல்லாம் உயிர் சக்தியை செலுத்தி நோயை குணபடுத்தலாம்...

மனிதன் வாழ்க்கை வாழ சாப்பிடுவது எல்லாம் சரி.. எதற்காக உயிரை பலிதர வேண்டும் ?


1, தாவராமும் உயிர் தான்.
2, காற்றில் வரும் நுன் உயிரும் உயிர் தான்  அதை பலி தரலாம் அல்லவா?

கேள்வி மட்டுமே...

ஓர் தேடல்..

யார் மனதையும் புண்படுத்த அல்ல...

வேம்பு கற்பம் (காயகற்பம்)...


புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு

மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே

- நந்தீசர் சகலகலை ஞானம் -1000..

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்..

தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும்.

இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும்.

இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்..

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர். இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர்.

இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு) எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை) என நாற்பது நாள் உண்ணவும்.

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் , பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்ப சித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்" உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்.

இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே...

பாஜக வினர் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் பாதியில் ஓடிய மோடி...


பொருமை...


நிலவை பாருங்கள் எவ்வளவு பொருமையாக நகர்கிறது..
மேகங்கள் மறைக்கிறது..

ஆனால் அதன் தன்மையில் மாறவில்லை ஒளி வீசிக் கொண்டே இருக்கிறது..

பாருங்கள் இப்போது எப்படி என்று
நிலவை..

இங்கே அனைவரும் நிலவை போலத் தான்...

மேகங்கள் என்பது உங்கள் மனதில் தோன்றும் கற்பனை...

தசாவதாரம் பையோலஜிக்கல் ஆயுதம் மையப்படுத்தி எடுக்கப்பட்டதே...


குமரிக்கண்ட கடல்பரப்பை கைப்பற்றத் துடிக்கும் இலங்கை...


இலங்கைத் தீவை அரசியல் ரீதியாக ஆண்டுக்கொண்டிருக்கும் சிங்கள தேசம், தமிழர் வரலாற்றுப் பகுதியான குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியை தன் தேசிய உரிமைசார் சொத்தாக ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடனும் சர்வதேச நாடுகளின் துணையுடனும் கைப்பற்றத் துடித்துவருகிறது

சர்வதேச விதிமுறைகளின் படி, கடல்சார்ந்த அரசுகள் தன் நிலத்தில் இருந்து முதல் 12 நாட்டிகல் மைல் தொலைவை கடல் எல்லையென வரையறுக்கலாம். அதற்கும் அப்பால், 200 நாட்டிகள் மைல் தொலைவு என தனிப்பட்ட பொருளாதார எல்லை (EXCLUSIVE ECONOMIC ZONE) என்ற அளவீட்டின் படி உரிமையுண்டு. இப்பொழுது, அத்தேசம் தன் தீவின் நிலப்பரப்பை விட 25 மடங்கு அதிகமான கடற்பகுதியினை தன் கட்டுப்பாட்டில் எடுக்க உரிமை கோருகிறது.

இதன் பெரும்பகுதி இந்தியப் பெருங்கடலின் கடல் கட்டுப்பாட்டையும் உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்குபவை, அதோடு உலகப்பொருளாதாரத்திலும் அரசியல் பிராந்திய முக்கியத்துவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது என்பது இதன் ஆபத்து.

கடற்சார் அரசு, அங்கீகரிக்கப்பட்ட 200 நாட்டிகல் மைல் கடல் தொலைவை விட அதிகமான தொலைவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமானால், உரிமைக் கோரும் தேசத்தின் நிலப்பகுதியினை ஒட்டிய கடலில் 1) குறிப்பிட்ட தடிமன் படிகப்பாறை மற்றும் 2) உருவத்துக்குரிய அமைப்புகளோ, அக்கடற் பகுதிகளில் இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குமரிக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்பு குறித்த முழுமையான அறிவியல் ஆய்வுகள் இல்லையெனினும் குமரிக்கடலுக்கு தெற்கேயும் மாலத்தீவு, மதகாஸ்கர் நோக்கியப் பகுதிகளிலும் சிறுசிறுத் தீவுகளும் நிலப்பகுதிகளும் கடலுள் புதைந்துள்ளன என்பதனை நிறுவும் அறிவியல் முடிவுகள் ஏராளம் இருக்கிறது குமரிக்கண்டம்?: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்! .

இந்தியப் பெருங்கடலினுள் புதைந்திருக்கும் நிலப்பகுதியினை ஆய்வு செய்யாமல் இந்தியத் துணைக்கண்டம் அலட்சியப்படுத்தி வரும் இதேக் காலக்கட்டத்தில், இலங்கைக்கு தெற்கே பல நூறு மைல்களுக்கும் அப்பால் தடிமனானப் படிகப்பாறை மற்றும் உருவத்துகுரிய அமைப்புகள் புதைந்துள்ளன என்பதனை அறிவியல் அடிப்படையிலான தரவுகளினால் மேற்கோள் காட்டி, அப்பகுதியினை தனக்கு சொந்தம் என சிங்களத் தேசம் சர்வதேச சட்டங்கள் வழியும் இந்தியா, மேற்குலக சூழ்ச்சியின் பின்னணியிலும் திட்டம் தீட்டி வரும் வேளையில், தமிழக மக்களோ தமிழக அரசோ மெளனமாக இருப்பது தமிழின நெடு வரலாற்றில் நாம் செய்யப் போகும் துரோகமாகவே கருத முடியும்.

தமிழர் கடலின் பெரும்பகுதி என்பதோடு தமிழர் வரலாற்றின் எச்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் குமரிக்கடலினை சிங்களத் தேச அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, பல நாடுகளின் வேட்டைக்காடாய் தமிழர் கடல் மாறவிருக்கின்றச் சூழலில் தமிழ்நாடு அரசும் மக்களும் ஓங்கி குரல் எழுப்பி எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

கச்சத்தீவு என்னும் சிறுப்பகுதியை இழந்து நாம் படும் பெருந்துயரத்திற்கே முடிவில்லாத பொழுது தமிழர் கடலின் பெரும்பகுதி இல்லாது போகுமாயின் நம் தமிழர்களின் வருங்காலம் என்னவாவது?

தமிழகம் விழித்தெழ வேண்டிய நேரமிது...

- முனைவர் விஜய் அசோகன்...

Biological Weapons War அடுத்த பதிவில் எப்படி என கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்கின்றோம்...


திமுக எப்போதும் சிறுபான்மையினர் நலனுக்காக பாடுபடும் - ஸ்டாலின்...


தமிழர் நாட்டில் யார் டா சிறுபான்மையினர்..?

தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர்... தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, வீரமணி, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்...

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்...

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல் தான் சிறுபான்மையர்...

இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்...

மக்களின் நம்பிக்கையை இழந்த தேர்தல் கமிஷனே.. வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்து...


சாதனை தமிழனின் பட்டியல்கள்...


தமிழன் என்ன கண்டு பிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சாதனைதமிழனின் பட்டியல்கள்...

நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்....

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு.....

கல்லணை : உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரை புரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் : கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் : உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் : எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் : கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்: கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் : 5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்.

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் : சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் , மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் : பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே.. சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் உலகின் தொன்மையான நகரம் : 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்: கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே  போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்...

திராவிடமும் சாதி அரசியலும்...


நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு. (Pearlmillet)...


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேக வைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...

நம்ம வேலையை பாப்போம்...


என்ன ஓர் உணர்வு..
என்னையே மறந்து விட்டேன்..
உன்னை பார்க்கையில்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இந்து புராண முக்கடவுள்களில், சிவபெருமான் மிக முக்கியமாக கருதப்படுகிறார். இந்து திருத்துவத்தில் மூன்றாவது உறுப்பாக செயல்படுகிறார். மற்ற இருவரான படைப்பாளர் பிரம்மாவையும், பாதுகாவலர் விஷ்ணுவை விட-  நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என- பஞ்ச பூத இயற்கை இயல்புகளை கட்டுப்படுத்துபவராக உள்ளார்.

குறிப்பாக இவருக்கு தென் இந்தியாவில் எழுப்பி உள்ள ஐந்து கோயில்கள் ஒவ்வொன்றும், இயற்கையின் ஐந்து பிரதான கூறுகளின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றன.

காஞ்சியில் நிலமாகவும்,
திருவாணைகாவலில் நீராகவும்,
காலாஹஸ்தியில் வாயுவாகவும்,
சிதம்பரத்தில் விண்வெளியாகவும் திருவண்ணாமலையில் தீயாகவும்,
காட்சியளிக்கிறார். இவற்றை பஞ்ச பூத தலங்கள் என்று அழைக்கப்படும், இந்த கோயில்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பஞ்சபூத தலங்கள்.

இந்த பஞ்சபூத கோவில்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் நான்கு கோவில்களும், ஆந்திராவில் ஒரு கோவிலும் உள்ளது. ஐந்து கோயில்களில் இந்த தொகுப்பு தென்னிந்தியாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐந்து கோயில்கள் அனைத்தும் யோக அறிவியல் படி கட்டப்பட்டன, மற்றும் ஒருவருக்கொருவர் ஒரு குறிப்பிட்ட புவியியல் சீரமைப்பு படி வைக்கப்படுகின்றனர். ஆனால் ஐந்து பஞ்ச பூத கோயில்களில் மூன்று, நேரடியாக 79 டிகிரி 41 நிமிடங்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது.

சிதம்பரம் நடராஜர்,
காஞ்சிபுரம் ஏகம்பரேஸ்வரர் ,
சித்தூர் காளத்தீசுவரர், ஆகியோர் சரியாக ஒரு நேர்கோட்டில் அமைந்திருக்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எதுவும் கிடையாது, ஆனால் மிகவும் துல்லியமான நேர்கோட்டில் இந்த தலங்கள் உள்ளன.  இது உண்மையில் ஒரு பொறியியல் அற்புதம் தான்!.

ஐந்து அடிப்படை கூறுகளுடன் தொடர்புடைய ஐந்து பிரதான கோயில்களின் புவியியல் அளவீடுகள்.

திருவண்ணாமலை - அண்ணாமலையார்
(12.231942, 79.067694)

காஞ்சிபுரம் - ஏகம்பரேஸ்வரர் (12.847604, 79.699798)

சித்தூர் - ஸ்ரீகாலாஹஸ்திரர் (12.749802, 79.698410)

திருவையாணைகாவல் - ஜம்புகேஸ்வரர்
(10.853383, 78.705455)

சிதம்பரம் - நடராசர்
(11.399596, 79.693559) ...

தமிழகத்தில் கிருஸ்துவ மதம் எப்படி பரப்பட்டது என்று புரிகிறதா...


துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கி 13 வயது கேரள சிறுவன் சாதனை...


கேரளாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி சாதனை படைத்துள்ளான். துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆதித்யன் ராஜேஷ்.

இவர் தனது 9 வயதிலேயே, தனது பொழுதுபோக்குக்காக மொபைல் ஆப் தொடங்கினான். தற்போது ‘டிரைநெட் சொல்யூசன்ஸ்’ என்ற பெயரில் துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து துபாயில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் ஆங்கில பத்திரிக்கைக்கு ஆதித்யன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் கேரளாவின் திருவிழா நகரில் பிறந்தேன். எனக்கு 5 வயது இருக்கும்போது, எனது குடும்பம் துபாய் வந்துவிட்டது.

எனக்கு முதன் முதலில் டைப்பிங் பழகுவதற்காக, பிபிசி டைப்பிங் வெப்சைட்டைத்தான் எனது தந்தை காட்டினார். எனது பொழுபோக்கிற்காக முதலில் ஒரு ஆப் உருவாக்கினேன்.

தற்போது ‘டிரைநட் சொல்யூசன்ஸ்’ என்ற சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.

என்னுடன் படிக்கும் 2 நண்பர்களே இதில் ஊழியர்களாக உள்ளனர். பல நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்து வருகிறோம்.

துபாயில் தொழில் தொடங்க 18 வயது பூர்த்தியாக வேண்டும். ஆனாலும் நாங்கள் ஒரு நிறுவனம் போலவே இலவசமாக சேவையாற்றி வருகிறோம்.

12 நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான வெப் டிசைன் மற்றும் சேவைகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். இவ்வாறு அவன் கூறினார்...