பிராண சிசிச்சை என்பது தொன்மை கலையின் ஒரு அறிவியல் முறை. இது நமதுபண்டைய கால முறை. இந்த கலை சீனா அறிஞர் யுவாங்க்சுவாங் காலத்தில் சீனத்தில் பரவியது.
பிற்காலத்தில் இக்கலை சிறிது மாற்றம் செய்யப்பட்டு உலகமெங்கும் பரப்பப்பட்டது.
தற்சமயம் இக்கலை உலகம் முழுவதும் சிறப்பாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முறையின் மூலமாக நமது உடலில் மற்றும் மனதில் தோன்றும் பலவிதமான நோய்களை, வியாதிகளை, எந்த விதமான பக்கவிளைவுமின்றி குணப்படுத்தலாம்.
மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்...
உடலில் உள்ள சத்துக்கள் குறைவினால் வரக்கூடியது. வெளியிலிருந்து கிருமிகளால் தொற்றக்கூடியது .
மேற்க்கண்டவைகளில் எவற்றால் மனிதன் பாதிக்கப்பட்டாலும் நமதுபிராண சிகிச்சையின் மூலம் அவற்றைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்..
பிராண சிகிச்சை என்பது மருந்தில்லா துணை மருத்துவம், நீர், நிலம், ஆகாயம், மண், காற்று ஆகிய இந்த ஐம்பூதங்களிலிருந்து உயிர் சக்தியை பெற்று சிகிட்சை அளிப்பது ஆகும்.
நோயாளியின் உடலில் எங்கெல்லாம் உயிர் சக்தி குறைந்து நோய் உண்டாகிறதென்று அறிந்து அங்கெல்லாம் உயிர் சக்தியை செலுத்தி நோயை குணபடுத்தலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.