13/04/2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைய வெயில் அளவு...


இன்று சுட்டெரித்த வெயில் காரணமாக கும்பாணத்தில் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்...

விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி...


2 வாரத்திற்குள் விவசாயிகளுக்கு புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு...

காசா கிராண்டே அனிருதன் அப்ரூவராகிறார்? நத்தம், ஓபிஎஸ் மகன்களும் சிக்குகின்றனர்?


நிலமோசடி புகாரில் சிக்கிய காசா கிராண்டே நிறுவன எம்டி அனிருதனிடம் ஓபிஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதில் மும்முரம் காட்டப்படுகிறதாம்.

நிலமோசடி புகாரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள காசா கிராண்டே எம்.டி. அனிருதனிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதில் போலீசார் முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் முன்னணி கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே எம்.டி. அனிருதன் அண்மையில் நில மோசடி புகாரில் சிக்கினார். அப்போதே நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர் ஆகியோரும் சிக்குவார்கள் என கூறப்பட்டது.

ஓபிஎஸ், நத்தம் மகன்கள் காசா கிராண்டே நிறுவனத்தில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் மகன்கள்தான் பெருமளவு முதலீடு செய்துள்ளனராம். அதேபோல் அதானி குழுமத்தின் சோலார் நிறுவனத்துக்காக அனிருதனும் நத்தம் விஸ்வநாதன் மகன் அமரும் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகள் உதவியுடன் கையகப்படுத்தியிருந்தனர்.

அனிருதன் கைது - இந்த நிலையில்தான் நிலமோசடி புகாரில் அனிருதன் சிக்கினார். உடனே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

வாக்குமூலம் - தற்போது அனிருதனிடம் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதில் போலீசார் மும்முரமாக இருக்கின்றனராம்.

அப்ரூவராகிறார் அனிருதன் - அதுவும் தினகரன் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள்தான் அனிருதனிடம் வாக்குமூலத்தை வாங்கிவிட வேண்டும் என்பதில் துடிக்கின்றனராம்.

இப்படி ஒரு வாக்குமூலம் வாங்கிவிட்டால் தங்களை புனிதர்கள் போல காட்டிக் கொள்ளும் ஓபிஎஸ் அணிக்கு செக் வைத்ததாகி விடும் என்பதுதான் தினகரன் அண்ட்கோவின் திட்டமாம்.

அனிதருனும் வழக்குகளில் சிக்காமல் இருக்க அப்ரூவராகி விடுவார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்...

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அவர்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக தனி ஆளாக திருப்பூரில் உண்ணாவிரதம்...


அரசு அதிகாரிகள் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்க மறுக்கிறார்கள். அரசு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்...

வெறும் காற்றில் இயங்கும் காரை கண்டு பிடித்து அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை...


கழிப்பறை கட்டுமாறு காலில் விழுந்து கோரிக்கை வைத்த நகராட்சி ஆணையர்...


சூரியனும் உணவும்...


பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது நாசா.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு NASA வே ஆட்டம் கண்டது.

எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.

Sun Gazing அல்லது Sun Eating என்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.

காலணி ஏதும் அணியாமல் நேராக நின்று கொண்டு சூரியனை பார்க்க வேண்டும்.

சூரிய உதயத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோ தான் இதனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு வசதியான ஏதேனும் ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ.

முதல் நாள் பயிற்சியில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்.

இப்படி பத்து பத்து வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு தொடர மூன்று மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்.

இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்.

இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படாது.

இந்த பயிற்சியை செய்யத் தொடங்கிய நாள்முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத சக்திகளை பெற்றுத் தரும்.

இனி நீங்கள் எதையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.

If your mind accepts, Your body adapts...

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவுக்கு பூட்டு போட்ட கவுதமன் உள்ளிட்ட 6 பேருக்கு 12 நாட்களுக்கு சிறை...


சென்னை கத்திப்பாராவில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கௌதமனுக்கு வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல்...

பாஜக மோடியின் டிஜிட்டல் தூய்மை இந்தியா...



இந்த நடன சாமியார் அடித்த ஒரு நாள் கூத்தின் காரணமாக யமுனை நதிக்கரை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது...

இதை சரி செய்ய குறைந்தபட்சம் 10 வருடங்கள் பிடிக்கும் என்று  நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது...

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகப் போவதாக வந்த தகவல் குறித்து டி.டி.வி தினகரன் விளக்கம்...


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும், வேட்பாளராக களமிறங்குவேன் என அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வி என்பவரின் மகன் வெங்கட் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று டி.டி.வி. தினகரன் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக அம்மா அணி சார்பாக மீண்டும் நானே போட்டியிடுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் தினகரன் குறிப்பிட்டார்...

31வது நாளை எட்டிய தமிழக விவசாயிகள் போராட்டம்.. குட்டிகரண மடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள்...


காட்பாடி அருகே பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து...


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோரந்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்...

திமுக வும் பிராமண ர்ப்பும்...


தி ஹிந்து நாளிதழின் தொழிற் சங்கத்திற்கு திமுக கனிமொழி தலைவர்...


தமிழக வரலாற்றில் முதல் முறையாக இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம் , ஒரு சில நிமிடங்களில் ஸ்தம்பித்து போன சென்னை...


தமிழக வரலாற்றில் முதல் முறையாக பாலத்திற்கு பூட்டுப்போட்டு இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே இன்று திணறியுள்ளது.

கவுதன் தலைமையில் திடீர் என மாணவர்கள் கத்திரப்பாரா பாலத்தை சங்கிலியால் பூட்டுப்போட்டு இருவழி சாலையை அடைத்தனர்.

இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்து போனது.

அடையாறு, கிண்டி, விமான நிலையம், வட பழினி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் முக்கிய வழியான கத்திரப்பாரா இளைஞர்களின் இந்த நூதன திடீர் போராட்டத்தால் ஸ்தம்பித்தது...

நாம் உண்ணும் உணவு சரியானது தானா என்று கண்டு பிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும் போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டு போகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்க வேண்டும்.

விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாத போதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே.

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டு பண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணை கொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டு பண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப் படுவதோடு அவற்றின் கழிவுப் பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை..

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக் கொள்வோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.....


குமரிக்கண்டத்து இசை...

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே.

உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசையடிப் படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா?


தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி (துப்பாக்கி) யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.

கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?

அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.

உரோம ஆட்சியாளர்கள் இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.

உரோம ஆட்சியாளர்களையும் சிலுவையையும் யார் பாராட்டுவார்கள்?

உரோம ஆட்சியாளர்கள் பாராட்டுவார்கள்.

உரோமப் பேரரசனாகிய கான்சுடன்டைன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தான்.  அதன் பின்னர் சிலுவை சிறப்பிக்கப்பட்டது.

யாரால்? உரோமப் பேரரசனைச் சேர்ந்த கிறித்தவர்களால்.

கொல்லப்பட்டதன் அடையாளம்.. கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவத்தைக் குறிக்க சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படவில்லை.  அதற்குப் பின்னரே கான்சுடன்டைனைச் சேர்ந்த கிறித்தவர்கள் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தார்கள்.

சிலுவை : இயேசு கிறித்து கொலை செய்யப்பட்டார் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும்.  சிலுவையில் இயேசு கிறித்து மட்டும் கொலை செய்யப்படவில்லை.

உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றப் பயன்பட்ட கருவிகளில் சிலுவையும் ஒன்று.  அதனால் உரோமர்களால் ஏராளமானவர்கள் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
           
உயிர்த்தெழுந்ததன் அடையாளம்
சிலுவை : இயேசு கிறித்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் அடையாளம் ஆகாது.  எவ்வாறு எனில் இயேசு கிறித்து சிலுவையில் உயிர்த்து எழவில்லை.  இயேசு கிறித்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் அடையாளம் வெறுமையான கல்லறையாகும்.

ஆகவே, இயேசு கிறித்து இறந்து உயிர் பெற்றார் என்பதை சிலுவை அடையாளம் குறிக்க இயலாது.

இயேசு கிறித்து..
1.   இறந்தார்
2.  உயிர்த்தெழுந்தார்
3. பாவத்தை நீக்கி மக்களை மீட்டுக் கொண்டார்

ஆகிய இந்த மூன்று கருத்துகளையும் குறிக்கும் அடையாளமே கிறித்துவின் நற்செய்தியை விளக்கும் அடையாளம் ஆகும்.

சிலுவை அடையாளத்தால் இந்த மூன்று கருத்துகளையும் குறிக்க இயலாது.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய நூலில் எடுத்து பதியப்பட்டுள்ளது)...

உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்...


வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது.

அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக் கொள்கிறார்கள்.

அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலை வனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய் கொண்டிருக்கிறார்கள்?

ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள்.

இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள்.

இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு.

இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும்.

நான் ஊருக்கு போனேன், அந்த ஊரு ரொம்ப தூரம் போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டு விடுகின்றது.

தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.

தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்.

அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்படுவது போல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுக் கொலைக்கு ஆளாகிறான்.

தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிட முடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன.

இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டு மொத்த இந்திய வரலாறாக அவிழ்த்து விட துடிக்கிறார்கள். ஆரியர் தன்மானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள்.

எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன.

ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது.

சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டு வந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பான்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 13...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் இதுவரை பார்த்த அனைத்து தீர்க்க தரிசனங்களும் எப்பொழுது நடக்கும் என்ற கேள்வி நமக்குள் எழலாம். அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் துவங்கி நடக்க ஆரம்பித்து விடும்.

ஆனால் தீர்க்க தரிசனங்கள் நடந்து முடியும் கால அளவு மட்டும் நீண்டு இருக்கும், இதற்கு பல காரண காரியங்கள் உண்டு.

பல்வேறு நாடுகளில் உள்ள கிருஸ்துவ அமைப்புகள் இயேசுவின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகளை ஓர் டிசம்பர் மாதத்தில் வெளியிடுவார்கள். அவர்களின் அறிவிப்பு நிகழும் சமயத்தில் ஒரு கிருஸ்துவ சபையின் முக்கிய இரகசியம் ஒன்றை ஒரு கிருஸ்துவ பாதரியார் வெளியிடுவார். அது கிருஸ்துவர்கள் மற்றுமின்றி உலக மக்களுக்கே ஆச்சர்யத்தை கொடுக்ககூடும்.

இன்றைய 13-ம் தீர்க்க தரிசனம் மிக முக்கியமான நிகழ்வைப்பற்றி இங்கு எடுத்துக் கூறுகிறது. அதாவது மக்களை அச்சுறுத்தும் வகையில் பசுபிக் பெருங்கடலில் ஒரு மகாபுயல் உருவாகும் என்றும், அது சுனாமி பேரலையாக மாறி இந்திய தேசம் மற்றுமின்றி உலக நாடுகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று 13-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.

பசுபிக் பெருங்கடலின் ஆழமான மையப்பகுதியில் உருவாகும் ஒரு பேரதிர்வு சுனாமி அலைகள் உருவாக காரணமாக அமையும் என்றும், ஏற்கனவே அக்கடலில் உருவாகி கொண்டிருக்கும் புயலோடு இனைந்து மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் விளக்கம் தருகிறது.


மேலும் இந்த சுனாமி பேரலைகள் மக்களை பெருமளவு மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்றும், இதனை தடுக்கக் கூடிய செயல் முறைகள் ஏதும் இல்லையென்றும் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் எடுத்துக் கூறுகின்றன.

இந்த பசுபிக் சுனாமியானது ஒரு திருவிழா நடைபெறும் சமயத்தில் உருவாகும் என்றும், இது மிக, மிக அருகில் உள்ள முக்கிய நிகழ்வு என்றும் எடுத்துக்கூறுகிறது.

13-ம் தீர்க்க தரிசனம் மக்கள் மனதில் ஆழமாக பதியும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்று தீர்க்க தரிசனம் மேலும் நமக்கு விளக்கம் தருகின்றது.

மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயலாக இந்த பசுபிக் சுனாமி இருக்கும் என்றும், இந்த சுனாமியால் இந்திய தேசத்துக்கு அருகே உள்ள கடல் சார்ந்த ஒரு நாடு சிறு பகுதியாக அழிய உள்ளது என்றும்,

இந்த சுனாமி முடிந்தவுடன் அங்கு கடல் அலைகளால் புரட்டி போட்ட சுவடுகளில் நிறைய மர்மங்கள் வெளி உலகத்திற்கு தெரியவரும் என்றும் 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு பல உண்மைகளை நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

மாற்றங்களே மக்களை நல்வழிப்படுத்தும் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, இந்த பசுபிக் சுனாமிக்கு பின் மக்கள் மனதளவில் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவார்கள் என்று 13-ம் தீர்க்க தரிசனம் எடுத்து கூறுகிறது.

கலியுகக் கடவுளான ஸ்ரீ முருகப் பெருமானின் சந்நதியில் ஒரு மிகப்பெரிய சம்பவம் அதிசயமாக நடைபெறும் என்றும், இது பசுபிக் சுனாமிக்கு பின் நிகழுக்கூடிய ஒரு நிகழ்வு என்று 13-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.

மேலும் தமிழகத்தின் கடல் மாவட்டமான கன்னியாகுமரியில் ஒரு மிகப்பெரிய வியப்பான சம்பவம் இந்த பசுபிக் சுனாமி நிகழும் சமயத்தில் நிகழ உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


தீர்க்க தரிசனங்கள் என்பவை மக்கள் சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன் அறிவிப்புகளே அன்றி இவைகளை கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாட்டை ஆளும் மன்னனுக்கு இக்காலம் போதாத காலம் என்றும், இந்த மன்னன் எந்நாட்டைச் சார்ந்தவன் என்று அப்பொழுதுதான் தெரியவரும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் ஒரு குறிப்பை எடுத்து கூறுகிறது.

மேலும் உலக மக்களிடையே  நம்பிக்கையை ஏற்படுத்தும் மிக சக்தி வாய்ந்த தீர்க்க தரிசனமாக இந்த 13-ம் தீர்க்க தரிசனம் அமைய உள்ளதாக 13-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

மலைவாழ் மக்களில் சிலர் சில வினோத ஒளிகளை வானில் கண்டு உலக மக்களுக்கு சொல்வார்கள் என்றும், அதுவே 13-ம் தீர்க்கvதரிசனம் நடை பெறுவதற்கான முன் அறிவிப்பு மற்றும் முன் நிகழ்வு என்று நாம் இங்கு அறிய வேண்டும் என 13-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி கன்னட பலிஜா ஈ.வே.ராமசாமி நாயக்கர்...


நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழி நிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.

(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004).

ராமசாமியின் குறி..

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக் கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே.

இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார்.

ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப் பாருங்கள்..

(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)...

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்...

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கி வருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.

எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள்.

இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும்.

அரிசிக்கு மூன்று பங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும்.

கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும்.

அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லி வைத்தார்கள்.

முழு அரிசி சோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழ வைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது.

குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும்.

ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும்.

புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும்.

குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும்.

மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.

சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது.

கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும்.

குன்றிமணிச்சம்பா சோறு உண்டு வந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.

மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற் காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டு விட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும்.

பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசி சோறு உண்டு நலமுடன் வாழ்வோம்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 13...


டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர். ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிற்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய 17ஆம் வயதில் தாய் டேன், 12 மணி என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள்.

ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.


ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

தனக்கு கிடைத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்த அபூர்வ சக்திகள் இறைவனால் அளிக்கப்பட்டது என்று நம்பிய ஹோம் தன் சேவைகளுக்கு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் அவர் பெரிய செல்வந்தர்கள் தாங்களாகத் தந்த பரிசுகளையும், பண உதவிகளையும் மறுக்கவில்லை. அரசர்களும், பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் அவரை ஆதரித்தனர்.

1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார்.

லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள் ஆகியவற்றை கண்டதாகவும்/ கேட்டதாகவும் கூறினார்கள்.

ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.


இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள்.

ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன.

ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.


1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ·ப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார்.

பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எ·ப். எல். பர் என்ற நிருபரை அனுப்பியது.

அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றோம்...

1868 டிசம்பரில் லார்ட் அடாரே, லார்ட் லிண்ட்சே, கேப்டன் வின்னே என்ற மூன்று பிரபலங்கள் முன்னிலையில் லார்ட் அடாரேயின் மாளிகையில் மூன்றாவது மாடியில் ஒரு அரை ஜன்னல் வழியாக அந்தரத்தில் வெளியே சென்று மறு அறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த செய்தி பல பேரை பிரமிக்க வைத்தது என்றால் பலரை கடுமையாக விமரிசிக்க வைத்தது. அந்த மூன்று நபர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்கள், ஹோமிற்கு கள்ள சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களை ஹிப்னாடிசம் செய்து ஹோம் இதை நம்ப வைத்திருக்கலாம் என்று சிலர் விமரிசித்தார்கள்.

அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான் என்றார்.

மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார்.

இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்....

சுவசுதிக் கிணறு....


எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட சுவசுதிக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது..

இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றை மற்பிடுகு பெருன்கிணறு என்றும் கூறுகின்றனர்...

பாஜக மோடியும் திருட்டு வேலையும்...


நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய கல்லூரி...

கர்நாடக மாநிலம், கோலாரில் 1970-ல் தொடங்கிய காஸ்மிக் கதிர்களின் ஆய்வு சில பிரச்னைகளால் கைவிடப்பட்டது. அதன்பின்னர், முதன்முதலாக 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முயற்சி நடந்தது. 2010-ம் ஆண்டு அந்த இடம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட இடம்தான், தேனி மாவட்டம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முடிவானது. 2011-ம் ஆண்டு ஆய்வு மையம் அமைப்பதற்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த மையம் அமையப்போவதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குப் பல போரட்டங்களும் நடத்தப்பட்டன. அனைத்து எதிர்ப்புகளையும் மீறி 2015-ம் ஆண்டில் ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்தன.

2015-ம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் வனவிலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய கேடாக அமையும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த அமர்வு 'நிபுணர் குழுவை அமைத்து நியூட்ரினோ ஆய்வு மையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டது.

தமிழக அரசும் நிபுணர் குழுவினை அமைத்தது. இந்நிலையில் நிபுணர் குழு தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் தனது ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தது.


அதில், 'நியூட்ரினோ திட்டத்துக்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெறவில்லை. சுற்றுச்சூழல் ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை மேற்கோள் காட்டிய தேசிய பசுமைத்தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்களவையில் இந்திய அணுசக்தி கழகம் நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை. நிச்சயமாக இந்த ஆய்வகம் தேனியில்தான் அமையும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாததால்தான் காலதாமதம் ஆகிறது' என்று அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு ஆதரவாகக் கல்லூரியில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்கப்படுவதாகத் தகவலும் அதனுடன் புகைப்படமும் வெளியானது.

இதுகுறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பெண்கள் கல்லூரியில், வெள்ளைத்தாளில் மாணவிகளிடம் எதையும் சொல்லாமல் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்து நியூட்ரினோ திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறது, கல்லூரி நிர்வாகம்.


அந்தக் கடிதத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்திற்கு முக்கியமான திட்டம். அதைத் தமிழகத்திற்கு கொண்டு வருவதை சில அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் சேர்ந்து தடுக்கிறார்கள். இந்த எதிர்ப்பைப் பார்த்து நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம், இத்திட்டத்தை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்றியமைக்கத் துடிக்கிறார்கள். அப்படி வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டால் அது தமிழகத்துக்கு பெரிய இழப்பாக இருக்கும். அடிப்படை அறிவியல் பற்றி தெரியாதவர்கள் நியூட்ரினோ மையத்திற்கு எதிரான  சுந்தரராஜன் பொய்ப்பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இந்தச் செயல் தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களிடம், கல்லூரி நிர்வாகம் இந்தக் கடிதத்தை யாருக்கு அனுப்புகிறது என்ற தகவல் கிடைக்கவில்லை. இதன் மூலம் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க நியூட்ரினோ ஆய்வு மையத்துறை துடிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால், இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் உரிமை மீனாட்சி கல்லூரிக்கு யார் கொடுத்தது எனத் தெரியவில்லை. எங்களுக்குக் கிடைத்த கடிதம் இது ஒன்றுதான். இன்னும் எத்தனைக் கல்லூரிகளில் இதுபோன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.

மேலும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக் கேரள வனவிலங்குத் துறையிடம் அனுமதி வாங்க ஆய்வு மையத்துறை முயற்சி செய்கிறது. அப்படி வாங்கினால் மட்டும் போதாது, ஆய்வு மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றியுள்ள மக்களிடம் கருத்து கேட்டு, மக்களுடன் கலந்துரையாட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கையும் பெற வேண்டும். இப்படி ஒரு ஆய்வு மையம் அமைக்க பல செயல்களும், வழிமுறைகளும் உள்ளன என்றார்.


இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் இல்லை. மத்திய அரசு எப்படியாவது நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க துடிப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. கோலாரில் ஆரம்பித்த திட்டம், இன்று வரை விடை கிடைக்காமல் கோளாராகவே இருக்கிறது...

செயதி - விகடன்

பெப்சி கோக்கை புறக்கணிப்போம் என உறுதி மொழி எடுத்த இளைய சமுதாயம் நமக்காக அடிவாங்கிய சகோதிரி ஈஸ்வரிக்காக மது குடிப்பதையும் புறக்கணிக்கலாமே...


வந்தேறி கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் மூடர் கூட்டங்களே சிந்தியுங்கள்...


சித்தர் ஆவது எப்படி - 13...


மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை...

ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன் இறைவன், அடிமுடி காண முடியாத இறைவன், உலகளந்த உத்தமன் என்றெல்லாம் வர்ணிக்காத, போற்றி புகழாத மத நூல்களே இல்லை..

ஆனால் அப்படியான தோற்றத்திற்கு புலப்படாத, புலப்பட முடியாத இறைவனை, ஒரு தோற்றத்திற்கு கொண்டு வந்து, தொழுவதும் பிரார்த்தனை செய்வதும், ஒரு முறையற்ற செயல் என்பதும் அதுவே ஒரு மிகப் பெரிய ஒழுங்கற்ற செயல் என்பதும் இன்றைய கால கட்டத்தில் மனிதன் உணரவே முடிவதில்லை..

எல்லா மதங்களும், கடவுளை மறுக்கும் புத்த மதம் உள்பட ஏதோ ஒரு தோற்றத்தை மையப் படுத்திதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.. அப்படி இயங்காத ஒரு கோட்பாட்டை உடைய ஒரு மதத்தை உலகில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

இந்த சூழ்நிலையில் அறியாதவர்களுக்கு முதலில் இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் கடவுளை பற்றிய மிக பெரிய ஒழுங்கின்மையை மையப் படுத்தி உருவநிலைகளில் ஆரம்ப நிலையிலே வேர் ஊன்றியவர்கள் மிக பெரிய பிரமாண்டமான கோவில்களையும் சர்ச்களையும் மசூதிகளையும் கட்டி அதை நிர்வாகிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டனர்..

அதனால் பிழைத்து கொண்டு இருப்பவர்கள், தங்கள் பிழைப்பு எங்கே கெட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் ஒழுங்கின்மையை, எந்த வகையிலாவது நியாயப் படுத்தவே முயற்சி செய்வார்கள்..

இந்த சூழ்நிலையில் இறைவனின் உண்மை நிலையாகிய தோன்றா நிலை பற்றிய கருத்து முற்றிலுமாக மறந்து விட்ட ஒன்று மட்டும் அல்ல, முற்றிலுமாக மறுக்கப் பட்ட ஒன்றாய் போய் விட்டது..

இன்றைய கால கட்டத்தில் தோன்றா நிலையின் முக்கியம், சற்று பண்பட்டவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவோ, அறிந்ததை ஏற்றுக் கொள்ளவோ, குறைந்த பட்சம் அப்படி அறிந்ததற்கு எதிராக பேசாமல் இருக்க, முடியாத சூழ் நிலையே இன்று எங்கும் உள்ளது..

அப்படியே வாசியோகத்திலும்
தோன்றா நிலையை உணர வைக்க முற்பட்ட சித்தர்களின் முயற்சிகளை எல்லாம் நாசப் படுத்தி, அங்கும், ஆறு அல்லது ஐந்து சக்கரங்கள் என்ற தோன்றும் ஒரு மாயை ஒன்றை உருவாக்கி, தோன்றா நிலையை உணர்விலே தோற்று விக்காமலே செய்து விட்டனர்... சித்தர்களை ஒரு வகையில் பித்தர்களாக்கி விட்டனர்..

அந்த தோன்றா நிலையிலே உணரப் படும் இறை ஆற்றலுக்கு இணையான ஒன்று இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை.. ஆற்றல் இன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதை உணர்ந்த பின் அதுவும் அந்த தோன்றா நிலையில் மட்டுமே கிடைக்கும் என்பது ஒரு நிலையான சத்தியம்..

தோன்றா நிலையில் மட்டுமே எல்லை கடந்த நிலையில் இருக்கும் அந்த இறைவனை அதே எல்லை கடந்த நிலையில் நாம் இருக்கும் போது உணர முடிந்து, அவனிடமிருந்து பேராற்றலை நாம் பெற முடியும்..

அவன் என்றால் தோற்றத்திற்கு வராத பிரபஞ்ச பேரண்டமே.. வேறு எந்த வகையிலும் அந்த ஆற்றலை பெற வேண்டிய அளவிற்கு பெற முடியாது.. அந்த தோன்றா நிலை ஒரு புரியாத நிலை தான்..

அது சதா உருவங்களிலே பழகி விட்ட மனதிற்கு மட்டுமே என்றும் புரியாத நிலை.. ஆனால் உணர்வாகிய புத்திக்கு அது உணர்வின் வழியாக புரியக் கூடிய ஒன்று..

ஆகவே புத்தி சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்ளும் போது மனம் அந்த தோன்றா நிலையை, புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்கிறது..

மனம், புரியாததை புரியாததாகவே ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை கடந்து செல்ல அனுமதிக்கின்றது.. அப்படி புத்தியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளாத மனம் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளாமல், மனிதனை மனம் தாண்டிய புத்தி நிலைக்கு அனுமதிக்காது..

ஆகவே தான் தோன்றா நிலையில் பிரபஞ்ச ஆற்றலை உணர்வாக அதாவது கனலாக பெற வேண்டிய அவசியம் ஆகிறது.. அந்த அனுபவத்திற்கு பிறகே மனம், ஒருவனை தன்னை கடந்து, புத்தி என்ற பூத நிலைக்கு செல்ல அனுமதிக்கும்.. மனம் தன் தோற்றப் பிடிப்பினை தளர்த்தி, புத்திக்கு வழி விடும்.. தோன்றா நிலையில் மட்டுமே புத்தியும் அறிவும் திறம் பட இயங்கத் தொடங்கும்...

ஆகவே நினைப்பு என்ற தோற்ற நிலையிலிருந்து, உணர்வு என்ற தோன்றாநிலைக்கு வரவேண்டியது மிக பெரிய இரகசியமாக கொள்ள வேண்டும்...

சித்தர்கள் உருவ வழிபாடுகளை கடந்து சென்றவர்கள்.. கடந்தவர்கள் என்றால் உருவ வழிபாட்டில் இருந்து அனுபவப் பட்டு பின் மேற் கொண்டு மேல் அனுபவ பெற தோன்றா நிலைக்கு செல்ல உருவ வழிபாட்டை விட்டவர்கள்..

வள்ளலார் போன்றவர்களே நம் சித்தர்கள்.. உருவ வழிபாட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு போதும் தோன்றா நிலைக்கு செல்ல முடியாது என்பது மற்றொரு இரகசியம்...

தோன்றா நிலை சூரிய கலை என்றால் தோன்றும் நிலையாகிய உருவ வழிபாடு சந்திர கலை..

ஒரு கலை இல்லையென்றால் மற்றொரு கலையும் இல்லாமல் போய் விடும் என்பதை மறக்கக் கூடாது...

தோன்றும் நிலையில் சிக்குண்டு இருப்பது மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை.....

ரூ. 4.97 கோடி வரிஏய்ப்பு செய்ததாக சரத்குமார், ராதிகா ஒப்புதல் வருமான வரித்துறை தகவல...


போலிஸ் வேலையில் சேர இலவச பயிற்சி - சென்னை கலெக்டர் அறிவிப்பு...


போலிஸ் வேலையில் சேர்வதற்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது என சென்னை கலெக்டர் அன்புச் செல்வன் அறிவித்துள்ளார்.

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் மாணவ மாணவிகளின் நலன் கருதி நடத்தப்படம் இந்த பயிற்சி வகுப்பில்  சேர விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்வி சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் அனுகலாம் கலெக்டர் அன்புச் செல்வன் அறிவித்துள்ளார்...

பாஜக மோடியை வரலாறு இப்படி தான் காரி துப்பும்...


நமசிவய எனும் மந்திரத்தை ஏன் உச்சரிக்க வேண்டும்? அதன் பயன் என்ன?


ந ம சி வ ய என்னும் இந்த ஐந்து எழுத்துக்களையும் நமது உடலின் ஐந்து பகுதிகளாக, நிலையங்களாக சித்தர்கள் கூறுகின்றனர்..

அவை இடநாடி, பிங்கலநாடி, ஆகிய பாதத்திலே நம என தொடங்கி, தோள்களில் சி யும் வாயில் வ வும் தலையில் ய வும் மண்டலம் கொள்கின்றன, இதுவே சித்தர்கள் உணர்த்தும் மிகப்பெரிய ரகசியம்..

நமசிவய எனும் பொழுது மூலக்கனலானது கீழிருந்து மேல் எழுகிறது, சிவாய நம என்னும் பொழுது மேலிருந்து கீழ் இறங்குகிறது இதனை பல சித்தர்கள் பாடல்களில் ஏற்றி இறக்குதல் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்...

புடுச்சி எல்லாவனையும் உள்ள போடுங்க...




இலுமினாட்டி ராக்கிஃபெல்லர் (Rockerfeller)...


இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன். இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.

1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான். 1872ல ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான். அந்த காலத்திலேயே அமெரிக்கால மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமா வச்சிருந்தான்.

அமெரிக்காவோட ஆயில் தேவையில 85% இவன நம்பி தான் இருந்துற்று 1880 லயே. முதல்முதல்ல 1890 ல ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான்.

சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் வச்சிருந்தான் அப்பபவே.

இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை பிடிச்சான்.

முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்குனது இவன் தான். அது தான் Rockefeller institute for medical research.

இப்போ இதன் பெயர் Rockefeller university.  1911 ல இவன் குடும்பத்தோட கணக்குல காட்டக்குடிய சொத்து மதிப்பு 58000000 US dollars.

இவன் தான் இப்போ அரேபிய நாடுகள்ள உள்ள எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன். கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்.

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc...

பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன்... வேலை பார்த்த இடமெல்லாம் வில்லங்கம் தான்...


மதுக்கடைக்கு எதிராக போரடிய பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு வில்லங்கவாதி என்று தெரிய வந்துள்ளது.

திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார்.

தென்காசியில் பணியாற்றிய போது ஐயப்ப பக்தர்கள் மீது லத்திசார்ஜ் நடத்தி சர்ச்சையில் சிக்கியவர் இவர்.

திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை சரமாரியாக அடித்து அத்தனை பேரின் கோபத்தையும் வாங்கிக் கொட்டியுள்ளார் பாண்டியராஜன்.

சமூக வலைதளங்களில் பாண்டியராஜனுக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பலரும் பாண்டியராஜனின் அநாகரீக செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

ஆனால் இந்த பாண்டியராஜன் அடிப்படையிலேயே பிரச்சினையானவர் என்று தெரிய வந்துள்ளது.

பக்தர்களை அடித்து வெளுத்தவர்
பாண்டியராஜன் டி.எஸ்.பி.யாக தென்காசி யில் பணியாற்றிய போது முல்லை பெரியாறு அணை பிரச்சினை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்களை கேரள மாநில பகுதியை சார்ந்த வர்கல் தாக்குதல் நடத்தியதை கண்டித்தது பிரானூர் பார்டரில் சாலை மறியல் செய்தனர். அப்போது ஐயப்ப பக்தர்களை தடியடி செய்து விரட்டினார்.

சப் இன்ஸ்பெக்டரை சாத்தியவர் - அதே போல செங்கோட்டையில் பணியாற்றிய திலீபன் என்ற உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் இவருக்கும் கைகலப்பு நடைபெற்றது. இதற்காக துறைரீதியாக அவர் மீது விசாரணை நடைபெற்றுள்ளது.

திருப்பூரில் அடிதடி - இப்போது திருப்பூர் சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது ஒரு பெண்ணை காவல்துறை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் அடித்துள்ளார்.

டிஸ்மிஸ் செய்யுங்கள் - அவரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண்ணை தாக்கியவர் காவல் துறையில் பணியாற்ற தகுதியற்றவர் என்ற அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 12...


ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அமெரிக்க உளவுத்துறை (CIA)யின் தலைவராக இருந்த ஸ்டான்ஸ் பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஒரு அபூர்வப் பெண்மணியை அணுகினார்.

அந்தப் பெண்மணி தன் அபூர்வசக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர்.

இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது அதை ஒத்துக் கொண்டார்.

ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.


உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லா விட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டன.

மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRIயின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.

SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வசக்தி மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர்.


அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.

ஆனால் இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகிற்குப் பிரசுரமாகாதது என்றாலும் ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக்கருவியினை வர்ணித்தார்.

அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டு பிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார்.

ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன் வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது. அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஒரு அந்துப் பூச்சி.

SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச்சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.

சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றிய ஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக நிகழ்ச்சியாளர் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள் அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.

இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?

மேலும் பயணிப்போம்....

பாஜக அன்றும்.. இன்றும்...


பாஜக அன்று : எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கக்கூடாது. இது காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்வோம்...

பாஜக இன்று : பெட்ரோல்,  டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்யட்டும். வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு பதில் தினம் தினம் விலையை நிர்ணயம் செய்து கொள்ளட்டும்...

காவல்துறை உங்கள் நண்பன்.. சொன்னா நம்பனும்...


மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாக எதிர்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்திருந்தன...


மே முதல் வாரத்தில் குளறுபடிகளை நிரூபிக்கலாம் என எதிர்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால்...

பாஜக வும் தமிழிசையும்...