13/04/2017

காசா கிராண்டே அனிருதன் அப்ரூவராகிறார்? நத்தம், ஓபிஎஸ் மகன்களும் சிக்குகின்றனர்?


நிலமோசடி புகாரில் சிக்கிய காசா கிராண்டே நிறுவன எம்டி அனிருதனிடம் ஓபிஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதில் மும்முரம் காட்டப்படுகிறதாம்.

நிலமோசடி புகாரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள காசா கிராண்டே எம்.டி. அனிருதனிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதில் போலீசார் முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் முன்னணி கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே எம்.டி. அனிருதன் அண்மையில் நில மோசடி புகாரில் சிக்கினார். அப்போதே நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர் ஆகியோரும் சிக்குவார்கள் என கூறப்பட்டது.

ஓபிஎஸ், நத்தம் மகன்கள் காசா கிராண்டே நிறுவனத்தில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் மகன்கள்தான் பெருமளவு முதலீடு செய்துள்ளனராம். அதேபோல் அதானி குழுமத்தின் சோலார் நிறுவனத்துக்காக அனிருதனும் நத்தம் விஸ்வநாதன் மகன் அமரும் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகள் உதவியுடன் கையகப்படுத்தியிருந்தனர்.

அனிருதன் கைது - இந்த நிலையில்தான் நிலமோசடி புகாரில் அனிருதன் சிக்கினார். உடனே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

வாக்குமூலம் - தற்போது அனிருதனிடம் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதில் போலீசார் மும்முரமாக இருக்கின்றனராம்.

அப்ரூவராகிறார் அனிருதன் - அதுவும் தினகரன் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள்தான் அனிருதனிடம் வாக்குமூலத்தை வாங்கிவிட வேண்டும் என்பதில் துடிக்கின்றனராம்.

இப்படி ஒரு வாக்குமூலம் வாங்கிவிட்டால் தங்களை புனிதர்கள் போல காட்டிக் கொள்ளும் ஓபிஎஸ் அணிக்கு செக் வைத்ததாகி விடும் என்பதுதான் தினகரன் அண்ட்கோவின் திட்டமாம்.

அனிதருனும் வழக்குகளில் சிக்காமல் இருக்க அப்ரூவராகி விடுவார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.