13/04/2017

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?


அம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார்.

அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?
இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டு கொண்டது.

1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும்.

19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்து வைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் என்பதையும் அறியலாம்.

என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல.

இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். (சொத்து வேண்டுமே).

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார்.

அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார்.

அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவது தான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்...

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.


அடுத்து, புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956. அவர் இறந்தது 06-12-1956. இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்து போய்விட்டது?

இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்கு தான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்க முடியுமா?

அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்க முடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறி விட்டாராம். அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்தது தான் சரி என்று சொல்ல வருகிறார்கள்.

இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும் தான் என்பதைப் பார்த்தோம்.

அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.