06/01/2019

மூலிகைக் குடிநீர்...


மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர்.

வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர் போன்றவை அடங்கும்.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே..

சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

ஆவாரம்பூ குடிநீர்...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்...

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்...

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்...

ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி..

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்...

முகநூல் இரகசியம்...


நாம் இப்பொழுது செய்வது என்னவென்றால்.. அவன் விரலையே  வைத்து அவன் கண்ணை குத்துகிறோம்...

பாஜக மோடியும் ரபேல் ஊழலும்...


பற்களில் கரை படிந்துள்ளதா.. இனி கவலை எதற்கு....?


என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்...

போங்கடா நீங்கலும்... உங்க அறிவுரையும்...


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 8 போலீசார் பலி...


ஆப்கன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பக்லான் மற்றும் சமங்கன் மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட் வீசியும் நடத்திய தாக்குதலில் போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் பலியானதாக தெரிகிறது. எனினும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் பயங்கரவாதிகள் சிலர் போலீஸ் சோதனை சாவடியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது...

மராட்டிய ரஜினி Fan அஜித்க்கு சப்போர்ட் பன்னி பேசியதால் அவரை ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்...


மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்களை பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும்.தினமும் மாலையில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும்.

20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம். 

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். 

மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் தடிமன், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.

மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.

மல்லிகை கசாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ...

உளவியல் உண்மைகள்...


இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது...


அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை.

ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு...

எனவே,

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று. இது தான் நிலையான தீர்வாக இருக்கும்..

இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான்.

வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை.

அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான்.

அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள்.

இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்..

தாய்மொழியை  வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்..

அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சத் தேவையில்லை...

ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்...

உலக வேட்டி தினம் ஜனவரி 6...


வாவர் மசூதிக்குள் செல்ல 3 முஸ்லிம் பெண்கள் ரெடி, அனுமதி அளிக்குமா கேரள அரசு...


மும்பையை தலைமையிடமாக கொண்ட பெண்கள் உரிமைகள் மீட்பு இயக்கம் சார்பில் 3 இஸ்லாமிய பெண்கள் சபரிமலை செல்லும் வழியிலுள்ள வாவர் மசூதிக்கு செல்ல உள்ளதாக அதன் தலைவர் கிரண் தீசாய் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கேரள மாநில காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் இன்று (04/01/2019) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்...

போலி அரசாங்கம்...


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...


பொங்கல் பரிசு, அத்திக்கடவு அறிவிப்புக்கு வரவேற்பு: பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. ஆளுனர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. ஆனால், அதேநேரத்தில் பொதுமக்கள், குறிப்பாக உழவர்கள், எதிர்பார்த்திருந்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

உழவுத் தொழிலின் வளர்ச்சி தான் தமிழகத்தின் சமத்துவமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; உழவுத் தொழில் வளர்ச்சிக்கு பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வ்ந்த நிலையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை ரூ.1652 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டப் பணிகளுக்கான தொடக்கவிழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.அதேநேரத்தில் இத்திட்டத்தை முழுமையாக பயனளிக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ரூ.ரூ.3523 கோடி செலவில் முந்தைய வடிவத்திலேயே செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை துறைமுகம் & மதுரவாயல் இடையிலான பறக்கும் பாலம் திட்டத்தை முன்னுரிமை அளித்து செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்; அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெறும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மனநிறைவு அளிக்கிறது. இவை அறிவிப்புகளாக இல்லாமல் இவற்றுக்கு அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை பா.ம.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுப்பதற்காக புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற ஆளுனரின் அறிவிப்பும் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் &2023 திட்டம் குறித்தும் ஆளுனர் உரையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்க இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இத்திட்டத்திற்காக தமிழக அரசு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திரூவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொருட்களுடன் சேர்த்து தலா ரூ.1000 வழங்கப்படும் என்றும் ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பிற பகுதி மக்களுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆளுனர் மூலம் தெரிவித்துள்ள அரசு, தாமிர ஆலைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஆளுனர் கூறியுள்ளார். இதன்தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் நிதியைப் பெற வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, ஆளுனர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றத்தை தருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அதேபோல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், உழவர்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1700 கோடி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அத்தொகையை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதுடன், உழவர்களின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி  வைக்க வேண்டும்...

சபரிமலை செல்ல லாட்ஜில் பிரியாணி சாப்பிட்டு திட்டம் தீட்டிய பெண்கள்.. விரதமும் இருக்கவில்லை...


சபரிமலை வரலாற்றிலேயே முதல் முறையாக சன்னிதானத்திற்குள் நுழைந்து சர்ச்சை ஏற்படுத்தியவர்கள் பிந்து, கனகதுர்கா என்ற பெண்கள்.

இவர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு முன்னதாக டிசம்பர் 29ம் தேதி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள சீதாலட்சுமி லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

பிந்து என்ற பெயரில் இவர்கள் இருவரும் அறை எடுத்துள்ளனர். இங்குதான் திட்டம் தீட்டி பின்னர் சபரிமலைக்குள் நுழைந்துள்ளனர் என்பது தெரியந்துள்ளது.

இவர்கள் சபரி மலைக்கு செல்வதற்காக  எந்த ஒரு விரதத்தையும் கடைபிடிக்கவில்லை. லாட்ஜில் பிரியாணி ஆட்டிறைச்சி என அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர்.

2 நாட்கள் தங்கி இருந்த பின்னர் 31ம் தேதி காலி செய்துள்ளனர். இவர்கள் லாட்ஜுக்கு வந்து தங்கியது, பின்னர் திரும்பி சென்றது என அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.  மேலும் இவர்களுடன் சில ஆண்களும் இருந்தது சிசிடிவியில் பதிவாகி உள்ளது...

மூளையும் – பிரபஞ்ச சக்தியும்...


நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய் விடுகின்றது – ஏன் ?

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை. நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை – இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்.

நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது – அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது – அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் – சுறுசுறுப்பும், தெம்பும், உற்சாகமும் கிடைத்து விடுகின்றது.

இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும், தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து – அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து, உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம், ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்.

ஞானிகள் தங்கள் சாதனையில், மனதை – மூளையை அமைதி – ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி.

அதனால் நாமும், அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம், தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.

இது எப்படி இருக்கிறது என்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தியை குறைப்பது போல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

புறத்திலுள்ள சூரியன் – ஆன்ம சூரியன் ஆகும்...

2. கோவில் கருவறை அமைப்பு..

தமிழ் நாட்டில், அனேகமாக எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் – மூலவர் – ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார்.

அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில்..

ஆயிரங்கால் மண்டபம் – மூளை
மூலவர் – ஆன்மா..

மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது.

3. நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய, இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம், ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து, மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் – இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்...

ஆல் இந்தியா ரேடியாவின் 5 மண்டல நிலையம் மூடல்...


நிதிப்பற்றாக்குறை  மற்றும் சிக்கன நடவடிக்கையாக திருவனந்தபுரம், அகமதாபாத்,ஹைதராபாத், சில்லாங் மற்றும் லக்னோவில் உள்ள ஆல் இந்தியா ரோடியோவின் மண்டல நிலையங்களை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது...

தமிழ் தேசியம் என்றால் என்ன?


அதாவதுப்பா...

சாமிக்கு பதிலா (குலதெய்வம்) இயற்கை..
மதத்திற்கு பதிலா இனம்..

இங்கிலீசுக்கு பதிலா தமிழ்..
இந்தியாவுக்கு பதிலா தமிழ்நாடு..

இவ்வளவு தான் தமிழ் தேசியம்...

திமுக தெலுங்கர் ஸ்டாலினும் தமிழின அழிப்பும்...


கடந்த 2009ல் துணை முதல்வராக இருக்கும் போது தான் ஒன்றறை லட்சம் தமிழர்களை ஈழத்தில் ராஜபக்சேக்கு ஆதரவாக காங்கிரசுடன்  சேர்ந்து கொலை செய்தவர்..

அதன்பிறகு அவரது தங்கை கனிமொழியை ராஜபக்சேவிடம் அனுப்பி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தவர்..

தமிழகத்தையும் தமிழனையும் அழிக்க மீத்தேன், கெயில், திட்டத்தை கொண்டு வந்தவர்...

தமிழினத்தின் பண்பாட்டை அழிக்க காங்கிரசுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டை தடை செய்தவர்...

இவருக்கு என்ன தகுதியிருக்கிறது தமிழகதின் முதல்வராக?

திமுக வின் துரோகங்களை மறக்கவும் மாட்டோம்... மண்ணிக்கவும் மாட்டோம்...

திமுக வை இனி தமிழகத்தை ஆளவும் விட மாட்டோம்...

தமிழர்கள் கலாச்சார முறை...


கடந்த வந்த பாதை முழுவதுமே மாயை தான்...


ஒருமுறை பாதையை திரும்பி பார்த்த போது இடியும் மின்னலுமாய் என்னை தாண்டி மிக தொலைவில் செல்கிறது..

எவ்வளவு மாற்றங்கள் ஆனால் ஓர் அளவுகூட மாறவில்லை அதன் அதிர்வுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது அதை உணரும் போது  ஒரு வளையத்தின் மையத்தில்  நிற்பது போல்...

மையத்தில் நிற்க்கும் போது
கரைகிறேன் மெல்ல மெல்ல...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஊர்வன இன ( Reptilians ) வேற்றுகிரகவாசிகளின் முக்கிய ஊடுருவலானது. உலகம் முழுமைக்கும் உள்ள நாடுகளில், தங்களுக்கான அடிமை ஆளுமைகளை படைத்திருக்கின்றனர். மேலும் அவர் அழிந்த டைனோசர் உயிரினங்கள் மற்றும் சாம்பல் இனத்தவர்களின் மூலமாக ஒரு பிரிவினரை உருவாக்கி உள்ளனர் என்றும், இப்போது மனிதர்களுக்கும் இதே போன்று செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.!

இவர்கள் மற்றும் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில விசுவாசிகள், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பரிமாணங்களில் வாழ்கின்றனர். அவர்கள் மனித மனங்களின் துயரங்கள் மற்றும் பயம் போன்ற உணர்வுகளை ஆக்கிரமிப்பால் வழங்கப்படும் எதிர்மறை ஆற்றலை
உண்பதுடன். நமது உலகில் உலகளாவிய மோதலை ஏற்படுத்துவதற்க்கும் முயற்சி செய்கிறார்கள்.

பண்டைய அனைத்து மனித நாகரீகங்களில் குறுக்கிட்டு, ஒரு சக்திவாய்ந்த "உயரடுக்கு"(கடவுள்) வர்க்கத்தை உருவாக்கி, அனைத்து அரசாங்கங்கள், தொழில்கள், வங்கி, மற்றும் அரச குடும்பங்கள் என அனைத்தையும் மறைமுகமாக இயக்கி வருகிறார்கள்.

இந்த ஊர்வன இன ( Reptilians ) வேற்றுகிரகவாசிகளால்  வெளிப்படையாகவே, தங்கள் உண்மையான அடையாளத்தை தேவைக்கேற்ப்ப வடிவத்தை மறைக்க, மாற்றிக்கொள்ள முடியும்.
அவர்கள் பூமிக்குரிய களஞ்சியங்களைக் கண்டறிந்து ஆழமான நிலத்தடி குகையில் வாழ்வதாக கூறப்படுகிறது.

டிராகோ ஊர்வன இன
( Draconians Reptilians ) தலைமை வேற்றுகிரகவாசிகளின் தீய செயற்பட்டியலை இவ்வுலகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு அவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆதிகாலம் முதல் இன்றுவரை தங்கள் தலைமையின் நோக்கத்தை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்...

தமிழக பாஜக வின் டூபாக்கூர் வேலைகள்...


சங்க காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த மன்னர்கள் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள்...


‘வேந்தரும் வேளிரும்’ என்று சங்க இலக்கியத்தில்  மூவேந்தர்களுக்கு இணையாக பல முறை இம் மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

சங்க காலப் போர்கள் பலவற்றில் வேளிர் இடம்பெற்றிருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் சொல்லுகின்றன.

வேளிர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்களா அல்லது வேறெங்கிலும் இருந்து குடியேறியவர்களா என்பது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே நமக்கு கிடைக்கின்றன.

அகத்திய முனிவர் தமிழகம் வந்தபோது துவரையிலிருந்து பதினெண்குடி வேளிரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

இங்கு துவரை என்று குறிப்பிடப்படுவது துவாரகை நகராகும்.

மேலும் “நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் ” என்று துவாரகையை ஆண்ட  கண்ணனின் (திருமால்)  வழிவந்த அரசர்கள் இவர்கள் என்றும் தொல்காப்பியம் உரைக்கிறது.

கண்ணன் யாதவ குலத்தில் தோன்றியவன் எனவே  வேளிரும் யாதவ குலத்தவர் என்பது பல வரலாற்றாசிரியர்களின் கருத்து.

கரிகால் வளவன் வென்ற இருங்கோவேளைப் பற்றி கபிலர் என்ற புலவர்

“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” (புறநானுறு  201)

‘வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை‘ என்பது இதன் பொருள்.

வடநாட்டுப் புராணங்களும் யாதவர்கள் மகாபாரதப் போர் முடிந்ததும் கடல் வழியாக தென்னாட்டில் குடியேறினர் என்று கூறுகின்றன.

ஆக வேளிர் கண்ணபிரான் வழிவந்த யாதவர்கள் என்பது தெளிவு. 

கடையேழு வள்ளல்களான பாரியும் ஆய்வேளும் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது   ஒரு உபரிச்  செய்தி...

பாஜக மோடி கலாட்டா...


உண்மையான தியானம்.. ஷென் கல்வி முறை..


ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்? என வினவினார்.

என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர் என்று சீடன் பதிலுரைத் தான்.

நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன் என்ற ஜிஸோ, ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய்.

உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய்.

உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய் என்றார்.

கண் காது  மூக்குகளை மூடுவதால் ஒருவரது எண்ணம் தூய்மையாகாது. எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான தியானம் என்றார்...