15/09/2020

மதன் Vs சீமான் 😂😂😂


மூச்சுப் பயிற்சி...



மூச்சுப் பயிற்சி என்றாலே அது ஒரு சிக்கலான விஷயம் என்பது போல நினைக்க வேண்டியதாக இருக்கிறது.

காரணம் அது சம்பந்தமாக விதிக்கப்படும் அல்லது சொல்லப்படும் பயிற்சி முறைகளே.

எதற்காக மூச்சுப்பயிற்சி செய்கிறோம்? சுவாசத்தை சிரமமில்லாமல் எளிதாக்குவதற்கு.

எதற்காக சுவாசத்தை எளிதாக்கவேண்டும்? அப்போதுதான் நிறையக் காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் முடியும்.

எதற்காக நிறையக்காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் வேண்டும்?

அப்போதான் உள்ளிழுக்கப்படும் காற்றில் பிராணவாயு கூடுதலாக இருக்கும்.

எதற்காகப் பிராணவாயு கூடுதலாக இருக்கவேண்டும்? அப்போதுதான் இதயத்திலிருந்து சுத்திகரிப்புக்காக நுரையீரலுக்கு வரும் ரத்தம் உடனுக்குடன் பிராணவாயுமூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தடையில்லாமல் மீண்டும் இதயத்துக்கும் அதைத் தொடர்ந்து உடல் முழுவதும் வேகமாக எடுத்துச் செல்லப்படும்.

அப்படி வேகமாக எடுத்துச் செல்லாவிட்டால் என்ன ஆகும்? அதற்காகக் காத்திருக்கும் உடல் கட்டமைப்புகளில் இருக்கும் உட்கூறுகள் தங்களின் இயக்கத்துக்குத் தேவை யான சுத்த ரத்தம் உடன் கிடைக்காத நிலையில் திணறவேண்டி வரும்.

அது சரிப்படுமா? சாதரணமாகவே திணறல் ஏற்பட்டால் கடுமையாக உழைக்கும்போது, விளையாடும்போது, ஒடும்போது, படி ஏறும் போதெல்லாம் அதிகசக்தி தேவைப்படுவதால் அதிக ரத்த ஒட்டம் தேவைப்படுமே அதற்கு என்ன செய்வது?

அதற்குத்தான் பயிற்சியின் மூலம் நிறையக் காற்றை உள்ளிழுக்கவும் அதை நுரையீரலில் வைத்து சுத்திகரித்து உடனுக்குடன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் அனுப்பப் பயிற்சி மேற்கொள்வது.

அந்தப் பயிற்சியின்போது என்ன ஆகிறது?

சாதாரணமாக அதிகப்படியான வேலையோ விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கமோ இல்லாதவர்களுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படாததால் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் பணி நுரையீரலில் அதிகமாக நடக்காததால் அந்தப் பணி நடப்பதற்கான நுண்ணறைகள் குறைவான அளவே இயங்கு நிலையில் இருக்கும். மற்றவை எல்லாம் சுருங்கியோ அல்லது வேறு சிலவற்றால் அடைபட்டோ இருக்கும்.

அந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் வேலை செய்தாலோ மாடிப்படிகள் ஏறினாலோ கொஞ்சதூரம் ஓடமுயன்றாலோ வேகமாக நடந்தால்கூட வியர்த்து விறுவிறுத்து மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும். காரணம் அந்த கூடுதல் வேலைக்குத் தேவையான அளவு கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பணி நுரையீரலில் நடக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.

இப்போது ஏன் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அறிந்து கொண்டோமல்லவா?

அதை எப்படிச் செய்வது?

இந்த இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது. ஆதாவது இந்தத் துறையில் உள்ள யாராவது ஒருவரைக் கேட்டால் அவர் சொல்வதைப் பின்பற்றுவது அப்போதைக்கு எளிதாகத் தெரியும், ஆனால் பின்னால் அதைப் பெரும்பாலோர் செய்யமாட்டோம்.

காரணம் மூச்சுப்பயிற்சிக்கென்றே சொல்லப்பட்டிருக்கும் சில பல முறைகளைச் சொல்வார்.

நிச்சயம் பிராணாயாமத்தைச் சொல்வார். பிராணாயாமம் என்பது ராஜயோகம் கற்றுக்கொள்பவர்கள் அதன் எட்டுப்படிகளில் நான்காவது படியாக பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி வருகிறது. அதை அவர்கள் முழுமையாகப் பயின்றால் தான் அடுத்தடுத்த படிகள் வழியாக சமாதி நிலை என்னும் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்காக மூச்சை எப்படி இழுக்க வேண்டும், எப்படி விடவேண்டும், இரண்டு நாசிகளையும் மாற்றிமாற்றி எப்படிச் செய்யவேண்டும் உள்ளிளுப்பது, உள்ளே அடக்கி நிறுத்துவது, வெளியே விடுவது, வெளியில் நிறுத்துவது இப்படிப்பட்ட நிலைகளை எப்படிக் கையாள்வது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை வினாடிகள் எடுத்துக் கொள்வது, அந்த நேரத்தைப் படிப்படியாக எந்ந அளவு உயர்த்துவது போன்ற பலவிதமான முறைகளில் பயிற்சியைப் பெற வேண்டும்.

இதுவெல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு நடைமுறை சாத்தியமானது அல்ல. நிறையப் பேரைப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மூச்சுப் பயிற்சிக்குப் போவார்கள். போகும் வரை நான் யோகா வகுப்புக்குப் போகிறேன் என்று பெருமையாகச் சொல்வதைத் தவிர அதன்படி நடப்பவர் ஒரு சதவிகிதம்கூடப் பார்க்கமுடியாது.அதனால் என்ன பயன்?

ஆகையால் மூச்சுப் பயிற்சியால் என்ன பயனோ அதனைமட்டும் அடைவதற்காக நாம் சில எளிய முளைகளைக் கையாளலாம்.

ஆதாவது கீழே ஒரு விரிப்பின்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டோ அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டோ ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பயிற்சியைத் துவங்க வேண்டும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் சுவற்றில் ஒரு கடிகாரம் இருப்பது நல்லது. கீழே தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில்கூட நேராக நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.

அதன்பின் ஒரு பத்துத் தடவை முடிந்த வரை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவேண்டும். சுவாசம் சீரானதும் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கத் துவங்கும்போதும் சுவர்க்கடிகாரத்தில் ஒலிக்கும் வினாடிமுள் நகரும் சப்தத்தை எண்ணிக்கொள்ளவேண்டும்.

எத்தனை வினாடிகள் உள்ளிழுப்பதற்கு ஆகிறது என்று எண்ணிக்கொண்டு உள்ளிழுக்க முடியவில்லை என்றால் உடனே வெளிவிடத் துவங்க வேண்டும். வெளிவிடும் நேரம் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக் கொண்டு வெளிவிட முடியவில்லை என்றால் உடனே உள்ளிழுக்கவேண்டும்.

உள்ளிழுப்பதைவிட வெளிவிடுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். உள்ளிழுக்கும் நேரமும் வெளிவிடும் நேரமும் சேர்ந்ததுதான் ஒரு மூச்சுக்கான நேரம்.

ஒரே மாதிரி நேரக் கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூச்சு விட்ட பின்பு மிகவும் எளிதாக இருந்தால் மூச்சின் நேரத்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விநாடிகள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரே நாளில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக எப்போது முடியுமோ அப்போது உயர்த்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறாத அளவு எந்த அளவு வேண்டுமானாலும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே கொள்ளலாம்.

இந்தப் பயிற்சியின் காரணமாக நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும் அதன்மூலம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணிக்காகப் பிராணவாயுவை அளிக்கும் திறனும் அதிகரிக்கின்றது. காரணம் அதுவரை நுரையீரலின் திறக்காத அறைகளெல்லாம் திறக்கிறது. அங்கு இதற்கு முன் நடக்காத வேலைகள் எல்லாம் நடக்கிறது. அவ்வளவே!

இந்தப் பயிற்சிக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்குமளவு இதன் பயன் கூடுதலாக இருக்கும்.

இந்தப் பயிற்சியினால் இதயத்துக்கும் ஓரளவு பயிற்சி கிடைக்கும்...

வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்...



அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த வூடூ மனிதர் டாக்டர் பஸ்ஸார்டு (Dr. Buzzard).

அவர் இயற்பெயர் ஸ்டீபனி ராபின்சன் என்ற போதும் பஸ்ஸார்டு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட ஒருவகைக் கழுகின் பெயரில் அழைக்கப்பட்டார்.

தென் கரோலினாவில் ப்யூஃபோர்ட் நகர  (Beaufort County) எல்லைக்குட்பட்ட செயிண்ட் ஹெலெனா தீவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெயர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.

சூனியம் வைப்பதிலும், சூனியம் எடுப்பதிலும் அவர் புகழ் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களிலும் பரவி இருந்தது.

அவர் பாட்டனாரோ, தகப்பனாரோ ஒரு அடிமையாக ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வந்ததாகவும், அவரிடமிருந்து டாக்டர் பஸ்ஸார்ட் வூடூவைக் கற்றுக் கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

சிலர் அவர் இளைஞனாக இருக்கும் போது அவர் தலையில் ஒரு பறவை வந்து அமர்ந்து விட்டுப் போனதாகவும், அக்கணத்திலிருந்து அவர் வூடூ சக்திகளைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

சூனியம் வைப்பது எடுப்பது தவிர இறந்த உறவினர்களின் ஆவிகளைத் தொடர்பு கொள்ளவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் கூட மக்கள் அவரிடம் அதிக அளவில் வந்தார்கள்.

நேரடியாக வந்தவர்களை விட பலமடங்கு அதிகமாய் அவரைத் தபாலில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.

தபாலிலேயே பணம், செக், மணி ஆர்டர் எல்லாம் அனுப்பினார்கள்.

எதில் எல்லாம் கையெழுத்து போட வேண்டி வருமோ அதை எல்லாம் கிழித்து எறிந்து விட்டு மற்றதை மட்டும் டாக்டர் பஸ்ஸார்ட் எடுத்துக் கொண்டார்.

ஏனென்றால் சூனியம் சட்டப்படி குற்றமாக அக்காலத்தில் கருதப்பட்டது. கையெழுத்து போட்டு ஒரு சாட்சியம் உண்டாக்கி கைதாக அவர் விரும்பவில்லை.

நல்ல உயரமான அவர் எப்போதும் கருப்பு ஆடைகளையும் ஊதா கண்ணாடியையும் அணிந்து கொண்டிருப்பார். ஊதா கண்ணாடி இல்லாமல் அவரைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்.

அவர் கண்களை மற்றவர்கள் நேராகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் அந்த ஊதா நிறக் கண்ணாடியை அணிந்து கொள்வதாக பலரும் நினைத்தார்கள்.

நீதிமன்ற வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வேண்டுபவர்கள் அவரிடம் பெரிய தொகையைத் தந்து விட்டால் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அவர் நீதிமன்றம் செல்வார். அங்கு அமர்ந்து ஏதோ ஒரு வூடூ வேரை மென்று கொண்டே அமர்ந்திருப்பார்.

அந்த நேரத்தில் எதிராளிகள் சரியாக வாதம் புரிய முடியாமல் போகுமென்றும், நீதிபதியும், ஜூரிகளும் அவருடைய வாடிக்கையாளருக்கு எதிராகத் தீர்ப்பு சொல்ல முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள்.

அல்லது குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள்.

அதனால் பல நேரங்களில் அவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தாலே ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பித்தது.

சில நேரங்களில் வழக்கு நடக்கும் போது பெரும்திரளாக பஸ்ஸார்ட் கழுகுகள் நீதிமன்ற வளாகத்தில் வருவதுண்டு.

அப்படி வந்தாலும் அது அவருடைய சக்தியால் தான் என்றும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும் என்றும் மக்கள் நம்பினார்கள். அது உண்மையாகவே இருந்திருக்கிறது.

தொலைவில் இருந்து பணம் அனுப்பி உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின் பகுதி நீதிமன்றங்களுக்கு அவரால் செல்ல முடியாதல்லவா? அவர்களுக்கு அவர் மந்திரித்து மிக மென்மையான ஒரு பொடியை அனுப்பி வைப்பார்.

அந்தப் பொடியை நீதிமன்ற நாற்காலிகளிலும், மேசைகளிலும் ரகசியமாய் தூவி விட்டால் போதும். அந்த வழக்கு அவர்களுக்கு ஜெயம் தான்.

இது குறித்துப் பல புகார்கள் போனாலும் சரியான ஆதாரம் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவரை அழைத்து அவர்கள் விசாரித்தது உண்டு.

அப்படி ஒரு விசாரணையில் அவர் அதிகாரிகளிடம் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் ஆனால் தன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகவும் சொன்னார்.

அவர் தன்னை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து சங்கிலிகள் வைத்துப் பூட்டினால் தன் சக்திகளைப் புரிய வைப்பேன் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.

அதிகாரிகள் அவரைச் சந்தேகப் பார்வையுடன் பார்த்தனர். அப்படிச் செய்தால் இந்த ஆள் செத்து விட்டால் அது தேவையில்லாத பிரச்னை என்று அவர்களுக்குத் தோன்றியது.

ஆனால் அந்த ஆளே அப்படிச் சொல்கிறாரே, செத்துத் தொலைந்தால் அந்த ஊருக்கே பெரிய பிரச்னை தீருமல்லவா, எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும், அதனால் அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள் என்றெல்லாம் எண்ணியவர்களாக அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

சவப்பெட்டி போன்ற பெரிய இரும்புப் பெட்டி ஒரு சிறைக்குள் கொண்டு வரப்பட்டது. அவரை உள்ளே வைத்துப் பூட்டும் முன் அந்த அதிகாரி கடைசியாக ஒருமுறை டாக்டர் பஸ்ஸார்டிடம் கேட்டார். நிச்சயமாகத் தானே சொல்கிறீர்கள். உங்கள் மீது என்ன தான் குற்றச்சாட்டுகள் என்னிடம் இருந்தாலும், விசாரணை இல்லாமல் உங்களை சாகடிக்க நான் விரும்பவில்லை.

டாக்டர் பஸ்ஸார்ட் சொன்னார். கவலைப் படாதீர்கள். இப்போது மணி என்ன?

கடிகாரத்தைப் பார்த்த அதிகாரி பதினொன்று என்றார்.

நல்லது. மதிய சாப்பாட்டை ஒரு மணிக்கு என் குடும்பத்தோடு நான் உண்டு விடலாம் என்ற டாக்டர் பஸ்ஸார்ட் இரும்புப் பெட்டியில் படுத்துக் கொண்டார்.

என்ன தான் சூனியக்காரனாக இருந்தாலும் பலமாகப் பூட்டப்படும் இரும்புப் பெட்டியில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை அந்த அதிகாரிக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பெரிய பிரச்னை ஒன்று ஒழிந்தது என்று எண்ணியவராக அவர் பெட்டியை மூடிப் பூட்டினார். பெரிய இரும்புச் சங்கிலி கொண்டு பெட்டியை பலமுறை சுற்றி அந்த சங்கிலியின் இருமுனைகளையும் சேர்த்து பெரிய பூட்டை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டார்.

அவரும் அவருடன் இருந்த மூன்று போலீஸ்காரர்களும் அந்த இரும்புப் பெட்டி இருந்த சிறையையும் மூடி அதையும் பூட்டி விட்டு சிறைச்சாலைக்கு எதிராக இருந்த ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனார்கள். அப்போதும் அவர்கள் பேச்சு டாக்டர் பஸ்ஸார்ட் பற்றியே இருந்தது.

இரும்புப் பெட்டியில் பூட்டு, அதைச் சுற்றிய சங்கிலியில் பூட்டு, சிறை அறையில் பூட்டு என்று இத்தனை பூட்டுகளை உடைத்து ஒருவன் தப்பிக்க வழியே இல்லை என்று பேசிக் கொண்டனர். நிதானமாகச் சாப்பிட்டு விட்டு வரும் போது அந்த ஆள் உடலெல்லாம் நீலமாகிச் செத்திருப்பார் என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.

அவர்கள் சிறிது நேரம் கழித்துச் சென்று அந்த இரும்புப் பெட்டியைத் திறந்த போது ஒரு கருப்புப் பூனை இரும்புப் பெட்டிக்குள் இருந்து தாவிக் குதித்து ஓடியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்ன ஆனது எப்படி ஆனது என்பதை அவர்களால் கடைசி வரை அறிய முடியவில்லை.

இந்த சிறைச்சாலை நிகழ்வு டெர்ரன்ஸ் செப்கே (Terrance Zepke) என்பவர் எழுதிய Lowcountry Voodoo: Beginner's Guide to Tales, Spells and Boo Hags என்ற நூலிலும் நான்சி ரைன் (Nancy Rhyne) என்பவர் எழுதிய Tales Of The South Carolina Low Country என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் பஸ்ஸார்ட் சூனியம் செய்ய பல வகை வேர்களையும், களிம்புகளையும், விலங்குகளையும், பாம்புகளையும் பயன்படுத்தி வந்தார் என்றாலும் கருப்புப் பூனையின் எலும்பினால் தான் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டார் என்ற கருத்து நிலவுகிறது.

கருப்புப் பூனையின் எலும்பு பற்றி நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். கருப்புப் பூனையில் உடல் எலும்புகளில் வூடூ சக்தி பெற்ற எலும்பு எது, அந்த எலும்பைப் பெறுவது எப்படி என்பதில் மட்டும் பொதுவாக வூடூ புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதற்கும், டாக்டர் பஸ்ஸார்ட் குறிப்பிட்டிருப்பதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. மிருகவதை எதிர்ப்புச் சட்டம் வந்து விட்ட இக்காலமாக இருந்தால் கைதாகி விட்டிருக்கக்கூடிய செயல்கள் இவரைப் போன்ற ஆட்களால், அக்காலத்தில் கருப்புப் பூனையின் எலும்புக்காகச் செய்யப்பட்டன. அது குறித்து பிற்கால பகுத்தறிவாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

இப்படி சக்தி வாய்ந்தவராக இருந்த டாக்டர் பஸ்ஸார்டை வீழ்ததுவேன் என்று ஒரு வூடூ போலீஸ்காரர் வந்தது தான் விதியின் செயல்.

அந்த வூடூ போலீஸ் அதிகாரி பற்றியும், அவர் டாக்டர் பஸ்ஸார்டை எப்படி எதிர்கொண்டார் என்ற மிக சுவாரசியமான நிகழ்வுகளையும் அடுத்த பதிவில் பார்ப்போம்...

மனுநீதி என்பதே நீட் தேர்வு...


திமுகவை சேர்ந்த 38MPகள் எங்கே? போண்டா சாப்பிடவா ஓட்டு போட்டோம்..?


மிளகு மருத்துவம்...





பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

-குதம்பைச் சித்தர்..

உணவில் தினமும் மிளகு இரசம் இடம் பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாத போதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத் தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி] மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்று நோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்து அரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடி முளைக்கும்.

மிளகு ஊறுகாய்: பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

தமிழ் பாடம் கற்க வாரத்திற்கு வெறும் 4 பாடவேளைகள் தானா? மீதம் 2 இந்திக்காக வா..?


திமுக தருமபுரி எம்.பி செந்தில்குமார் காணவில்லை... பாஜக தேடுதல் வேட்டையில்...


நான் படித்த உளவியலில் இருந்து.. எப்போதும் வெற்றிப் பெறுவது எப்படி என்பதறக்கான வழிமுறைகள்...



1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்...

கோடி கோடியாய் கொள்ளையடித்து குவிக்கும்.. அதிமுக எடப்பாடி...


பாஜக குடிகாரி காயத்ரி கேட்டுச்சா... மூடிட்டு இரு...


ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்...



ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி.... இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம்.

சிகிச்சை, உடற்பயிற்சி... இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் "டிரான்ஸ்ஃபேட்"னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.

சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

"ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்... வேற எதுவும் வேணாம்"னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்: கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்...

பூசாரி என்றும் கடவுள் ஆக முடியாது சீமான் ரசிக கொண்டைகளா...


உங்க ஒப்பீடு எல்லாம் துரைமுருகன் கல்யாணசுந்தரம் ராஜீவ் காந்தியோடு நிறுத்திக்கிங்க...

சீமான் என்றும் அண்ணன் பிரபாகரன் ஆக முடியாது...

நம்பும் படியே நடக்கும்...



அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர்.

அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய் வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.

பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய் வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதின் நம்பிக்கைகளின் சக்தி இது போன்ற எத்தனையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.

சிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant), நீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer) மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள் மாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும் மருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை மாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன மருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள் உடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.

யேல் பல்கலைக்கழக பேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய் ஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி வேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும் மாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற மாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.

இந்த ஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் - மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப உருவாக்கத்தின் தன்மையும் இருக்கும்.  இருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி பயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த பின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.

உடலில் மட்டும் தான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம் நம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம் உருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.

மனம் அந்த அளவு சக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா? நம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன? எத்தனை நம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.

ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம்...

ராணிப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடியை சுருட்டி தலைமறைவான திமுக நிர்வாகி...



ராணிப்பேட்டையில் திமுக நிர்வாகி குணசேகரன் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் பல கோடிகளை சுருட்டி விட்டு, திமுக வின் வழக்கமான தலைமறைவு வேலையைக் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

தமிழ் இஸ்லாமியர்கள் vs தமிழ் சங்கீஸ்...


திருட்டு திமுக வின் டூபாக்கூர் வேலைகள்...



எப்படி 10 இலட்ச ஈழத்தமிழருக்கு நிம்மதி கொடுத்தோமோ...

எப்படி கச்சத் தீவை மீட்டோமோ...

எப்படி காவிரி பிரச்சனையை தீர்த்தோமோ..

எப்படி மீனவர் பிரச்சனையை தீர்த்தோமோ...

எப்படி எல்லோர்க்கும் 2 ஏக்கர் நிலம் கொடுத்தோமோ…

எப்படி ஊழலை ஒழித்தோமோ...

எப்படி சாராய ஆலைகளை மூடிணோமோ..

எப்படி விவசாயக் கடன் தள்ளுபடி பண்ணிணோமோ…

எப்படி நகைக் கடன் தள்ளுபடி பண்ணிணோமோ…

அதே மாதிரி 2021ல் திமுக நீட் தேர்வை ரத்து பண்ணுவோம்..?

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடுவோம்...

நம்புங்க மக்களே😄😄😄

தரமான சம்பவம் 👌😎😍


என் வரிப் பணத்தில் வாழ்பவர்கள் தான் நீதிபகள்...


தமிழர் நிலம் கொள்ளை போவதை ரசித்துக் கொண்டிருந்த துரோகி கன்னடர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...



1956 சூலை மாதம் 27-ஆம் தேதி, 12 கோரிக்கைகளை முன்வைத்து, திரு சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார்.

அவரது முதல் கோரிக்கை: ஆந்திரத் தெலுங்கரிடம் இழந்த தமிழர் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

இரண்டாவது கோரிக்கை: சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.

அடுத்து, பல தமிழர் நலம் சார்ந்த கோரிக்கைகளை வைக்கிறார்.

1956 அக்தோபர் மாதம் 13 வரை உண்ணா நோன்பிருந்து சாகிறார்!

அந்த 78-நாளிலே, இவருடைய கோரிக்கையை ஆதரித்து, ‘ஆமாம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும் என்று கேட்டாரா?

சரி, சித்தூர் மாவட்டத்தையும், திருத்தணி மாவட்டத்தையும், திருக்காளத்தி மாவட்டத்தையும் - ஆக மூன்று மாவட்டங்களையும் ஆந்திராக்காரன் பிடுங்கிகிட்டுப் போயிட்டானே, இவர் கேட்கிறது நியாந்தான், திருப்பிக் கொடுங்கள் என்று சொன்னாரா?

அந்த 78-நாளும், உண்ணாநோன்புச் செய்தியை, ‘விடுதலை’ நாளிதழில் போட்டிருக்கிறாரா?

அந்த 78-நாளில் , இவரது (சங்கரலிங்கனார்) கோரிக்கையை ஆதரித்து ‘விடுதலை’யில் எழுதியுள்ளாரா?

அந்த 78-நாளில் அந்தச் செய்தியையாவது, ’இப்படி ஒருத்தர் உண்ணா நோன்பு இருக்கிறார்’ என்று வெளியிட்டுள்ளாரா? – செய்தியே கூடப் போடவில்லையே!

சங்கரலிங்கனார் இறந்ததையொட்டி
கலவரத்தில், பொதுவுடைமைக்கட்சி ஜீவானந்தம், இராமமூர்த்தி அடிபட்ட செய்திதான் வந்துள்ளதே தவிர..

இன்னார் இப்படி உண்ணாநோன்பு இருக்கிறார், அவரது கோரிக்கைகள் நியாயமானவை என்று ஆதரித்து ஒரு அறிக்கைகூட விடுதலையில் வெளியிடவில்லை;

ஆதரித்து வேண்டாம், ‘இப்படி ஒரு முட்டாள் தமிழன் உண்ணாநோன்பு இருக்கிறார்’ என்றாவது ஒரு செய்தியைக் கூட அவர் நாளிதழில் போடவில்லையே!

தமிழ்நாட்டில் தமிழனுடைய பணத்தை வாங்கிக் கொண்டு நாளிதழ் நடத்தின ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்த நியாயமான செய்தியைக் கூட போடவில்லையே!?

இவர் தான் தமிழருடைய தன்மானத்தைக் கட்டிக் காப்பாற்றியவரா?

ஈர்ப்பு விதி - 6...



நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் , பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்..

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட, எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும்..

நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை , அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது..

ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் .

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது , கேட்டது தெரியாது..

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் , அதற்கு சில உதாரணம் " நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன் நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் " " இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் " "எனக்கு காய்ச்சல் வரகூடாது " எனக்கு காய்ச்சல் வர வேண்டும்" "நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன் நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன் " நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது..

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்..

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் , நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் , டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் , நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும் தான்..

ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் , அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்...

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும்..

நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள்..

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்..

உங்களது எண்ணங்கள் தான் விதை..

உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்...

ஓட்டு கேட்டு வாங்கடி ஊழல் அடிமைகளா...


நீதித்துறை எனும் நிதித்துறை...


ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது...



அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440
நிமிடங்களாகும் (60x24=1440)}
ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்..

ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்..

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்..

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு...

நீதிபதி ஹரி பரந்தாமன் 👌


இந்த கோமாளிகள் எப்படி வழக்கறிஞர்கள் ஆனானுங்க..? 🤣


அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு...



மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் - மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. "இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே"! மேய்ப்பவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளின் தீவனத்தை ஆராய்ந்தார். ஏதோ சிறுகனிகளைக் கொட்டையோடு அசைபோடுவதைக் கண்டார்.

ஞானப்பழம் நீயப்பா என்று பாடாமல் அந்தக் கனியைத் தானும் பொறுக்கி உண்டார். சதைப்பற்று இனிப்பாக இருந்தது. சுடாத பழத்தின் கொட்டையைச் சுட்டு வறுத்துத் தின்றார். சுறுசுறுப்பு அடைந்த உணர்வு. இரவில் தூக்கம் போச்சு.

எப்படியோ, எத்தியோபியக் காபிக் கொட்டையை நினைத்தாலே இனிக்கும். இலந்தைப்பழம் மாதிரி ருசித்துச் சாப்பிடுவர். அங்கு கண்டறியப்பட்ட காப்பிப் பழத்திற்கு "காஃப்பா" (Kaffa) என்ற நகர்ப் பெயரே மூலச்சொல் என்பார் ஒரு சாரார். காபிக் கொட்டை, குதிரைக் குளம்பு வடிவம் கொண்டதாம். அதனால் குளம்பைக் குறிக்கும் "காப்" என்ற ஆங்கிலச்சொல் அடிப்படையில் அதனைக் குளம்பி என்பார் மறுபக்கம்.

ஏதானாலும் காபியில் அடங்கிய முக்கியப் பொருளுக்குச் செல்லப்பெயர் காஃபீன் (Caffein). ஆனால் "காஃபின்" (Caffein) என்பது வேறு. சவப்பெட்டியைக் குறிக்கும். "கோஃபினோஸ்" (Kophinos) என்ற இதன் கிரேக்க அடிச்சொல்லுக்குக் "கூடை" என்று அர்த்தம்.

காபி என்றால் அதில் "காஃபீன்" (Caffein) மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. காபியில் கிட்டத்தட்ட 2000 வேதிமங்கள் அடக்கம். அனைத்திற்கும் வெவ்வேறு மருந்துக் குணங்கள் உண்டு. சொல்லப்போனால் காபியில் அடங்கிய பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுமாம். பென்சில்வேனியாவில் ஸ்க்ரான்டன் பல்கலைக் கழக ஆய்வு முடிவு.

உலகின் முதல் காப்பிக்கடை முதலாளி இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் சுல்தான். 1554-ம் ஆண்டு தொடங்கியது இந்தக் காபித் தூள் வியாபாரம். "கேஃப்" என்றால் பிரெஞ்சு மொழியில் காப்பி நிலையம் (Kophinos). "கஃபட்டேரியா" என்பது ஸ்பானிய மொழியில் "காப்பிக்கடை" (Coffee shop).

ஒருவழியாக, போப் கிளெமென்டைன் சம்மதத்துடன் காபி இத்தாலிக்கு அறிமுகம் ஆனது. கிறிஸ்தவர் அருந்தும் பானம் ஆக தேவாலய அங்கீகாரமும் பெற்றது. மத நல்லிணக்கத்தின் சின்னம் காபி என்றால் அது மிகையாகாது. இசுலாமியர், கிறிஸ்தவர் உணவோடு கலந்து காப்பியை இந்தியாவுக்குள் கள்ளச் சரக்காகக் கடத்தியது நம் ஊர் வியாபாரி. அரேபிய வர்த்தகத்தை முடித்துத் திரும்பும் வேளையில் மடியில் தங்கக் கட்டிகள் மாதிரி ஏழே ஏழு காபிக் கொட்டைகளை ஆசாமி ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாராம். தென் இந்தியாவில் சிக்மகளூர் தான் காபி காலடி பட்ட முதல் மண்.

1668 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் காபியைக் காப்பி அடித்தது அமெரிக்கா. நியூயார்க் நகரின் காலைச் சிற்றுண்டியில் காபி ஆவி பறந்தது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கழித்து ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா காபி குளிர்பானம் ஆயிற்று. டாக்டர் ஜான் எஸ். பெம்பர்ட்டன் என்கிற மருந்தியர் நிபுணர் காஃபீன், கொக்கோ இலைகள், சர்க்கரை, காய்கறிச் சாறு போன்றவை கலந்து 1886 ஆம் ஆண்டு கொக்கோ கோலா என்னும் பானம் தயாரித்தார்.

ஆயின், 1911 ஆம் ஆண்டு கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிராக அமெரிக்கா ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அடங்கிய "காஃபீன்" உடலுக்குக் கேடு என்பது அரசுத் தரப்பு வாதம். குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு இருக்கும் போதே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது முதல் ஆச்சரியம். வழக்கில் அரசாங்கம் தோற்றதைத்தான் இந்தியர்கள் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. போகட்டும்.

1970 ஆம் ஆண்டுகளில் காபி உலகப் பிரசித்தம். காஃபீன் குறித்து ஏறத்தாழ 4000 - 5000 ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்து உள்ளதாக ஜேம்ஸ் காஃப்லீன் (James Coughlin) கூறுகிறார். (இவர் பெயரில் வரும் "காஃப்" இருமல் தொடர்பானது?) தென் கலிஃபோர்னியாவில் நச்சியல் ஆய்வாளர். காபி குடித்தால் புற்றுநோய் வாய்ப்பு கால் பாகம் குறையும் என்பது இவர் கண்டுபிடிப்பு.

ஆனால் 1980 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தாமஸ் காலின்ஸ் நடத்திய ஆய்வு காபிப் பிரியர்களைச் சற்று அதிர வைத்தது. குறிப்பாக, கர்ப்பம் தரித்த அன்னையர் காபி குடித்தால் ஊனக்குழந்தை பிறக்குமாம்.

தம் பரிசோதனையில் இவர் சில எலிகளைத் தேர்ந்து எடுத்தார். எல்லாப் பிராணிகளைப் போலவே எலிகளுக்கும் தொண்டைக் குழிக்குள் சிறு குழாயைச் செருகி 200 காபிக்குச் சமமான அளவு பானத்தை ஊட்டினார். அடுத்த மூன்று வருடங்களாக மறுபரிசோதனை நடத்தினார். காபியைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்தார். முடிவில் எலிக் குஞ்சுகளில் பிறவிக் குறைபாடுகள் அவ்வளவாக இல்லையாம்.

ஒரு நாளைக்கு நாலு நேரம் காபி குடித்தால் பித்தப்பையில் கற்கள் படியும் வாய்ப்பு 40 சதவீதம் என்பது ஒரு கணிப்பு. சிறுநீரகக் கற்கள் வராது. கல்லீரல் புற்று வராது. நீரழிவு நோய் உபாதை எழாது. பார்க்கின்சன் நோய் அண்டாது. நினைவாற்றல் கூடும். மன அழுத்தமும் அகலும். இப்படிப் பல!

இதற்கிடையில், காபியின் தீங்குகள் குறித்த விவாதங்களும் நடந்தேறின. ரத்த அழுத்தமும் அதிகரிக்குமாம். அதனால் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் காபியை நிறுத்த வேண்டும் என்றனர் மருத்துவர் சிலர். தொடக்கக் குடிகாரர்களிடம்தான் இந்தப் பிரச்சினை. பரம்பரைக் காபிக் குடியர்களிடம் ரத்த அழுத்தநோய்க் குறிகள் இல்லையாமே!

இருந்தாலும் ஒரு விஷயம் நம்பிக்கை அளிக்கிறது. காபி குடித்தால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறதாம். அதற்காக அடுக்கு மாடியில் இருந்து ஆடி ஆடி வரும் சொகுசுவாசிகளே, இன்சுலின் மாத்திரைக்குப் பதில் காபி குடித்தால் சரிப்பட்டு வராது. காபியினால் இன்சுலின் ஊற்றுப் பெருகும் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியை லிண்டா பேக்கன்.

அது மட்டுமல்ல, காபி ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான். வேளாவேளைக்கு அருந்தவில்லை என்றால் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுவராம்!

காபியினால் மூளைக்குச் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி என்பது எல்லாம் வெறும் மாயை. காபியே இது பொய்யடா வெறும் போதை மருந்துப் பையடா என்கிறார் ஜாக் ஜேம்ஸ். கால்வேயில் அயர்லாந்து தேசியப் பல்கலைக் கழகத்தின் உளவியல் நிபுணர்.

உளவியல் தொந்தரவுகள் உண்டோ, இல்லையோ கிடக்கட்டும். உடலியல் குறை நிச்சயம் என்று எச்சரிக்கிறார் ஹார்வார்டு பொதுச் சுகாதார கல்வியகப் பேராசிரியர் வால்டர் வில்லெட். காரணம் காப்பியினால் எலும்புகள் கால்சியம் என்கிற சுண்ணாம்புச் சத்து இழந்து பஞ்சு போல் ஆகுமாம்.

பில்டர் காபிக்கு என்ன மகிமையோ அறியோம். ஆனால் வடிகட்டாத (பில்டர் செய்யாத) காப்பியினால் கொலஸ்ட்ரால் சத்து அதிகரிக்கும். ஊளைச்சதை போடும். தஞ்சாவூர் பொம்மை மாதிரி கழுத்தும் இன்றி, காலும் இன்றி எத்தனை நாள் நிதானமாக நடக்க முடியும்?

அது சரி. சராசரி ஆரோக்கியவான் ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபீன் உட்கொள்ளலாம் என்றுதானே? ஒரு சிட்டிகை (280 மில்லிகிராம்) போதும். அதுவே 30 மடங்கானால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

அப்படியானால் தினந்தோறும் வடிகட்டாத (எஸ்ப்ரஸ்ஸோ) காபி ஒரே டம்ளர் உத்தமம். பில்டர் காபி என்றால் இரண்டு கோப்பைக்கு மேல் வேண்டாம். இன்ஸ்டன்ட் காப்பி என்றால் மூன்றரை குவளை.

இவ்வளவு சிரமம் ஏன்? "கையில் சுக்குடன் மல்லி இருக்கையில் காப்பி எதற்காக?" என்று "இசையமுது" இசைக்கிறார் பாரதிதாசன். நூற்றில் ஒரு வார்த்தை...

நீட் எழுதினால் போதும் அறுத்து தள்ளி விடலாம் என கம்பு சுற்றிய பாஜக சங்கிகள் மேடைக்கு வரவும்...


இந்த அட்வைஸ் பண்றவங்களை பார்த்தா கெட்ட கெட்ட வார்த்தையா வருது திட்ட...



பல அப்பனுக்கு  பொறந்தவங்க தான் இந்த மாதிரி ஒரு அட்வைஸ் கொடுத்து கிட்டு இருப்பானுங்க....

நான் படித்த உளவியலில் இருந்து.. மாணவர்களுக்காக படிப்பது எப்படி என்பதற்கான சில பயிற்சி முறைகள்...



படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்..

பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவது தான் படிப்பதன் முக்கிய நோக்கம் – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்..

எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும்.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.

வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி கற்றல் (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தான் கற்கும் முறை சரியானது தானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு.

எனவே முறைப்படி கற்கும் கலையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஒரு நிகழ்வில் இருந்து கூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும் போதும் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின் மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்..

மெய், வாய், கண், மூக்கு, செவி – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே நெறிவாழ்க்கை வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்..

பார்த்தல், கேட்டல், செய்தல் – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்..

பார்த்தல் எனப்படும் பார்வை என்பது தான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டு வருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும் போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.

காட்சிப்படுத்துதல் என்பது செய்ய வேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டு வந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும்.

உதாரணமாக – இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்..

நான் பள்ளியை விட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும் போது மணி 5 ஆகிவிடும். அதன் பின்னர் முதலில் தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு ஹோம் வொர்க் கை செய்து முடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்ச நேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டு விட்டு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். சாப்பிடும் போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும் – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்..

ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் போல செய்ய வேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத் தான் காட்சிப்படுத்துதல் என அழைப்பார்கள்..

படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் காட்சிப்படுத்துதல் அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்..

காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டு பிடிக்கும் விதத்தில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்..

வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்..

வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்..

சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

தனியாக இருந்து அறையில் படிக்கும் போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப் பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்த வேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும்.

குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்..

அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம். சிலவேளைகளில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது..

படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது.

இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்..

படிப்பது என்பது நினைவுக் கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்து கொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்..

மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்...

இவரு நீதிபதி..👌


நடிகர் சூர்யா வுக்கு துணை நிற்போம் ♥️


பிஸ்தா பருப்பு நன்மைகள்...



ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா.

பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன.

பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும்.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது...

அன்றே சொன்னார் எச். ராஜா 🤣


இது தான் மனுநீதி...


கொரோனா வும்.. தமிழக அரசின் ஏமாற்று வேலையும்...



ஒவ்வொரு மருத்துவமனையும் தினமும் 5 பேருக்கு கொரோனா என்று முத்திரை குத்தி கொரோனா வாடிற்கு அனுப்ப வேண்டும்...

ஆகையால் இல்லாத கொரோனா வைத்து அப்பாவி பொது மக்களை சோதனை என்ற பெயரில்...

உங்களுக்கு கொரோனா உறுதி.. வண்டியில் ஏறுங்கள் என்று சொல்லி அழைத்து செல்கின்றனர்...

பிறகு பாதி தூரம் சென்ற பிறகு நோயாளிகளிடம்...

உங்களுக்கு கொரோனா இல்லை என்று சான்று கொடுத்து இப்படியே திருப்பி அனுப்ப வேண்டுமா...

அப்போ எங்களுக்கு 5000 ரூபாய் கொடு என்று மிரட்டி விலை பேசுகிறார்கள் ஊழியர்கள்...

பணம் உள்ளவன் கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்கிறான்...

பணம் இல்லாதவன் மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்....

தினமும் இப்படி தான் கொரோனா கணக்கை காண்பித்து...

ஒரு நோயாளிக்கு 4990 ரூபாய் கணக்கு காண்பித்து 25கோடி ரூபாயை அரசு கொள்ளையடிக்கிறது...

பணத்திற்கு விலைபோன நீதிபதிகள் 🤦


போராடினால் எதுவும் சாத்தியமே 😎


Godliness is the state of Blissfulness...



நீ கேட்பவன் இல்லை..

கொடுக்கப் பிறவி எடுத்து பிறந்தவன்..

நம்மிடம் நிறைய கொடுப்பதற்கு இருக்கிறது..

கேட்டுப் பெற வேண்டியது ஒன்றும் இல்லை..

நமக்குள் பேரானந்த நிலை இருக்கிறது  என்பதை தெரியாததனால்..

அதை உணராததால் தான் பிறரிடம் அன்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்..

இறைவனிடம் பிரார்த்தனை என்ற பெயரில்..

கை ஏந்திக் கொண்டும் இருக்கிறோம்..

நம்மில் இருக்கும் அன்பை உணர்ந்தால்..

நம்மை நோக்கி வரும் அன்பின் அலைகளை உணர முடியும்..

இறைவனிடம் கையை ஏந்தி கேட்டால் இறைவனை அவமானப் படுத்துகிறோம் என்பதை...

ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதுவே நிதசர்ணமான உண்மை...

நாம் கேட்காமலே இறைவன் எவ்வளோ கொடுத்து அருளி இருக்கிறான்...

சுவாசிக்க காற்று,

குடிக்க நீர்,

வசதியாகவும், ரசித்து அனுபவிக்கவும் நிலம் என்னும் மடியை ஆழ, அகல விரித்திருக்கிறது..

உயிர் ஜெனிக்க வெப்பம்,

அதை குளிர்விக்க குளிர்ச்சியான காற்று,

மனதுக்கு இதம் அளிக்கும் இயற்கை வளங்கள்??

இப்படி எத்தனை எத்தனையோ...

இன்னும்

நாம் அன்றாடம் இந்த பூமியில் சுவாசித்துக் கொண்டு..

அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது..

எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்று நினைத்துப் பார்த்தால்..

நம் வாழ்வின் வசந்தத்திற்கு எதை கொண்டு ஈடு செய்ய முடியும்....

அதை எல்லாம் அனுபவிப்பதை விட்டு விட்டு,

மேலும் இயற்கை வளங்களை முடிந்தவரை அழித்தும் விட்டு..

நாம் இறைவனிடம் இன்னும் வேண்டும், வேண்டும் என்று பேரம் பேசி கொண்டிருக்கிறோம்..

இவைகள் அனைத்தையும் வாழ்வின் வளமாக மாற்றும் அறிவு மனிதனிடம் இருக்கிறது..

இயற்கையின் வளமே வாழ்வின் வளம்..

அன்பின் வளமே வாழ்வின் வசந்தம்..

அதை உணரச் செய்வோம்,

வாழ்வில் வளமும் நிறைவும் பெற்று வளமாக வாழ்வோம்...

பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்...



நீர்... பதனீர் ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம்.

பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்..

செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.

செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன..

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும்.

பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.

இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன..

வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்..

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்..

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்.

பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை..

பதனீரும், கள்ளும் சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள்.

இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.

பதனீரிலே எல்லாம் இருக்கிறது ஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம்.

தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.

250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி
இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும்.

மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும்.

இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை. கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்...

நீட் தேர்வை இந்தி மொழி பேசும் வட இந்திய மாநிலங்கள் ஏன் எதிர்க்க வில்லை என்பதற்கு அடுத்த சாட்சி...


நான் படித்த உளவியலில் இருந்து உங்களுக்காக சில தகவல்கள்...



1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்..

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எழுச்சி...


இந்தி மொழி வரலாறு...


மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்...



மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்..

மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

இதயத் தசைகள் வலுவாக்குகிறது. இதயம் சுருங்கி விரியும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்...

திமுக - அதிமுக இரண்டுமே பிராடுங்க தான் போடா...


இந்திய மக்களிடம் கொள்ளையடித்து அம்பானிக்கு கொடுத்து கொண்டிருக்கிறது பாஜக மோடி அரசு...