25/07/2017

தமிழர் கட்சி பாமக நிறுவனர் டாக்டர் இராமதாசு ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் தமிழ் இனத்தின் தலைவன் என்று தமிழக மண்ணில் பிரகடனம் செய்த முதல் தமிழன்..

தேசம் முழுவதும் கண்டு வியந்த 7 நாள் சாலை மறியலை நடத்தி வெற்றிகண்ட தமிழன்..

பிரபாகரனை ஆதரித்து பேசுவதால் 70 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் சிறை செல்ல தயார் என்று முழங்கிய மாமனிதன்..

தமிழர்கள் மீது கை வைத்தால் 1000 லாரிகளில் பெங்களூரை நோக்கி படை எடுத்து வருவோம் என்ற ஒற்றை வார்த்தையில், கன்னட வெறியர்ளை மிரள வைத்து, பெங்களூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்த வல்லமை மிகுந்த போராளி..

தமிழினத்தின் நிகழ்கால வழிகாட்டிகளில் ஒருவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை...

பாஜக வும் மோசடிகளும்...


இது தான் திருட்டு திராவிட சிகாமணிகளின் பகுத்தறிவு...


ஆழ்மனத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்...


அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி..

அண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்..

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.

இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்துவர வேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?

இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.

இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.

இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் எனக்கூறலாம்.

இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.

இன்று இதை ஐரோப்பா. அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (workshops) நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.

இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்...

செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி -2...


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு..

உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள்.

எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

சரி... ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்துக் கொண்டேன்.

ஆம்!!! தற்போது உலகத்தில் அதிகமாக பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், மண்டாரின் (Mandarin) பிரன்ச்சு (French) ரசிய மொழி, செர்மன், சுபாநிசு (spanish) ஆகிய மொழிகளிலும் இந்த மொழிகளுக்கு எல்லாம் மூலமான இலத்தின் (Latin) மற்றும் கிரேக்க மொழிகளிலும் கூட அகரம் ('A') என்னும் எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது.

உலகின் மற்றப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கே அகரம் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது, இந்திய நாட்டு மொழிகளுக்கு மட்டும் அது வேறு படவா போகின்றது. இந்திய நாட்டு மொழிகள் அனைத்திற்கும் அகரமே முதல் எழுத்தாக திகழ்கின்றது.

எனவே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது சரி தான். இப்பொழுது அந்த அகரத்தை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதினைப் பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் தமிழில் அகரத்தை முதன்மையாக வைத்தே அழைக்கப் பெறுகின்றன.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அத்தை, அம்மாயி, அம்மான் முதலிய பல உறவுகள் அகரத்தால் தொடங்கப்பெறும் வார்தைகளினாலையே அழைக்கப் பெறுகின்றன.

மேலும், ஒரு மனிதன் இந்த உலகினில் வாழும் பொழுது அவன் கடைப்பிடிக்க கூடிய தன்மைகள் மற்றும் அவனைச் சூழ்ந்து இருக்கும் முக்கியமான பொருட்கள் ஆகியவனவும் அகரத்தை முதன்மையாகக் கொண்டே அழைக்கப்பட்டன.

அண்டம், அன்பு, அடக்கம், அமைதி, அன்னம், அறிவு, அழகு, அரசு போன்ற வார்த்தைகளைக் கண்டாலே நாம் அதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள வேறு எந்த மொழியாவது தன்னுடைய முதல் எழுத்தை இவ்வளவு சிறப்பித்து இருக்குமா என்பது சந்தேகமே!!!

உலகில் மனிதன் தோன்றுவதற்கு அம்மா அப்பா எவ்வாறு முக்கியமோ, அதேப் போல் அகரமும் தமிழுக்கு முக்கியம்.

எனவே தான் குழந்தைகளுக்கு 'அ' என்றால் 'அம்மா' என்றே நமது தமிழ் மொழி கற்பிக்கின்றது.

இவ்வாறு வாழ்க்கைக்கு இன்றியமையாத விசயங்களை ஒரு மொழியின் முதல் எழுத்தின் மூலமே பெயரிட்டு வழங்குவதும் ஒரு வகை அறிவியலே ஆகும்.

தொடர்ந்து பயணிப்போம்....

அய்யாக்கண்ணு புகார்: டெல்லி போராட்டத்தை வாபஸ் பெற சொல்லி கொலை மிரட்டல் தொலைபேசி அழைப்புகள்...


தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்...

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு: அறந்தாங்கி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...


நெடுவாசல், கதிராமங்கலத்துக் ஆதரவாக அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

கதிராமங்கலம் ஓஎன்ஜிசி, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மாணவர்கள் எதிர்ப்பு.

மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது...

திருமுருகன் காந்தி, வளர்மதி, இப்போ இணையத்தில் கீழே உள்ள பதிவு போட்டதிற்காக குபேரன்...


இது ரொம்ப மோசமான நிலைக்கு தமிழகம் போவதற்கான குறியீடு.

போராடவே கூடாது என்கிறபோது சர்வாதிகாரம் ஏற்கனவே இங்கே வந்து விட்டது என்பதற்கு வேறென்ன சாட்சி வேணும்?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை என்னும் ஏவல்துறை கொலைவெறித் தாக்குதல் - கைது...



நெடுவாசல் - கதிராமங்கலம் விவசாயிகளுக்காக மாணவர்கள்  போராடுவது குற்றமா?

சோறுபோடும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 35 பேரை இடைநீக்கம் செய்ததை வாபஸ் வாங்கு என இன்று வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொலை வெறித்தாக்குதலை நடத்தி கைது செய்துள்ளனர்.

இடைநீக்கம் செய்த மாணவர்களை கல்லூரியில் சேர்க்கவும் -  கைது செய்தவர்களை விடுவிக்கவும், விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடவும், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் ஒன்று திரளவேண்டிய முக்கியமான தருணம் இது....

இந்து மதத்தின் அடிப்படை தமிழர் வானியலே - 1...


திரிசூலம் - பிரம்மன், விஷ்ணு, சிவன்:
தமிழர்களின் அறிவியல் - உலக மதங்களின் மூலம்.

தொல் தமிழர்கள் கடவுளை   உருவாக்காதவர்கள். தேவைப்படாததால் சிலைகளை அந்த நம்பிக்கையை வளர்க்காதவர்கள். அவர்கள் கடலோடி மீன்பிடி தொழில் செய்தவர்கள் ஆதலால் வானியல் இயல்பிலேயே ஊறிய விசயமாக இருந்தது. அவர்களின் வானியல் அறிவு பிற்காலத்தில் பிற மதங்களால் உள்வாங்கப்பட்டு, உருமாற்றப்பட்டு, தமிழனின் தலையிலேயே மதங்களாகத் திணிக்கப்பட்டிருக்கிறது.

அந்நிய ஆரிய (அ) பிராமண மதத்தால் தான் தமிழரின் வானியல் அறிவு, பெருமளவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்றாலும், பிற மதங்களும் விதி விலக்கல்ல. ஒவ்வொன்றாய் காண்போம்.

தொடக்க கால தமிழர் சமயம்  6 பிரிவுகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பவையே அந்த ஆறு பிரிவுகள். இவற்றில் நன்கு அறிமுகமான பிரிவுகள் சைவமும் வைணவமும். இந்த ஆறு பிரிவுகளும் ஒன்றோடு மற்றொன்று கலக்கப்பட்டு ஒரே  மதத்திற்குள்ளாக இருக்குமாறு மாற்றப்பட்டுவிட்டது.

1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

2. வைணவம் - விண்ணு (அ) விஷ்ணு என்ற திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்.

3. சாக்தம் - சக்தி அ பார்வதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

5. கௌமாரம் - குமாரனான முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

இவை ஆறு சமயப்பிரிவுகளும் ஒரே மதமாக்கப்பட்டு விட்டாலும் அடிப்படையில் இவை எதுவும் மத, கடவுள் நம்பிக்கை சார்ந்த விசயங்களைப் பற்றி பேசாதவை.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

காரணம் இவை அனைத்தும் வானியல் கோட்பாடுகளே. விஞ்ஞான விசயங்களே.


விஞ்ஞானம் என்பதே விண் ஞானம் தானே.

உண்மைகளை எங்கே தேடிக் கண்டு பிடிக்க ?

மதஇயல் (அ) இறையியலில் தொன்மக்கதைகள் களைதல் (De-mytholization) என்ற ஒரு பிரிவு உண்டு.

அனைத்து மதங்களிலுமே இருக்கக்கூடிய புனைவுக்கதைகள், அதீத அற்புதங்கள், இயற்கையை மீறிய செயல்பாடுகள், நடைமுறை வாழ்க்கையில் காணமுடியாத ஐதீகங்கள், விசுவாசங்கள், அறிவியல் பூர்வமற்ற, அறிவுக்கொப்பாத கற்பனை செய்திகள், இவை போன்றவைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பதைவிட இவற்றுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய மூல உண்மைச்செய்திகளை வெளிக்கொணர்ந்தாலே உண்மை வெளிப்பட்டு விடும். கற்பனைக் கதை அடிபட்டுப்போகும்.

அப்படி அடிப்படையாக இருக்க கூடிய உண்மைச் செய்திகளை  கொண்டே இக்கட்டுரை....

தொல் தமிழர்களின் அறிவு மிகப்பெரும் ஆச்சரியம.. தொடர்ந்து தேடுவோம்...

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது.. வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்...


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.

ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து...

ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.

இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர்.

ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.

எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை...

அயோக்கியர்களின் கையில் அதிகாரம் இருந்தால் எப்படி பொய் வழக்குகள் புனைவார்கள் என்பதற்கு தோழர் வளர்மதி உதாரணம்...


கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு...


இன்று காலை நரேஷ் (30) என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...

கரு வளர்ச்சியின் சூட்சுமம்...


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)..

ஒரு பெண்ணின் கருப்பையின் உள்ளே கரு வளரும் நிலைகளில் என்னென்ன நிகழுகிறது என்று திருமூலர் கூறியுள்ள சில கருத்துக்களைக் காணலாம்.

ஒரு கரு உருவான உடனேயே அதில் உயிர் வந்துவிடுவதில்லை. பிராண சக்தியும், மறுபிறவி எடுக்கும் ஒரு ஆன்மாவும் அந்த கருப் பிண்டத்தின் உள்ளே நுழையும் போதுதான், அது செல்களின் குவியல் என்ற நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள ஒரு கருவாக உருவம் பெறுகிறது.

அதுவரையில் நம் உடலிலுள்ள பல
தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற முட்டையும் ஒரு தசை போன்றே கருதப்படும்.

பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

பூவின் மணத்தைப் பொருந்திய
வாயுவும் தாவி உலகில் தரிப்பத்தவாறு போல் மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே..

-திருமந்திரம் பாடல் எண்-265.

தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட காலம் வரும்போது ஒரு மெல்லிய ஒலியோடு அந்த கருவின் உள்ளே புகும் என்பது இப்பாடலின்
பொருளாகும்.

அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்து செல்களிலும் என வைத்துக் கொள்ளலாம்) பரவி நிற்கும்.

இதற்கு உவமையாக திருமூலர்
பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார்.

ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்.

எவ்வளவு அற்புதமான ஒரு உவமை.

இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும்.

மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம்.

இதை அடுத்த பாடலில் திருமூலர்
விளக்குகின்றார்.

போகின்ற எட்டும் புகுகின்ற
பத்தெட்டும் மூழ்கின்ற முத்தனும்
ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.

-திருமந்திரம் பாடல் எண்-266.

இந்த நான்கு வரிகளில் பல அற்புதமான சூட்சும உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு வரியாக சற்றே விளக்கமாகக் காணலாம்.

முதல் இரண்டு வரிகளில்,

மூச்சுக்காற்று உள்ளே நுழையும் முன்னர் அந்தக் கருவினுள்ளே என்னென்ன உள்ளன
என்பதைப் பட்டியலிடுகிறார்.

கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய உடலினுள்,

-போகின்ற எட்டு (8)
-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)
ஆகியவை உள்ளன.

இவை எவையெவை என்பதைக்
காணலாம்.

போகின்ற எட்டு

1. சுவை
2. ஒளி
3. ஊறு
4. ஓசை
5. வாசம்
6. மனம்
7. புத்தி
8. அகங்காரம்

ஆகிய அருவமாக உள்ள
எட்டையே போகின்ற எட்டு என்கிறார் திருமூலர்.

புகுகின்ற பத்தெட்டு (18)

10 வாயுக்கள் 8 விகாரங்கள்

ஆகியவற்றையே புகுகின்ற
பத்தெட்டு என்கிறார்.

பத்து வாயுக்கள்

1. பிராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்

எட்டு விகாரங்கள்

1. காமம்
2. குரோதம்
3. உலோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. துன்பம்

ஒன்பது வாயில்கள்

1. வலது கண்
2. இடது கண்
3. வலது நாசி
4. இடது நாசி
5. வலது காது
6. இடது காது
7. வாய்
8. குதம்
9. பிறப்புறுப்பு

என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம் ஒன்பது.

இதையே இப்பாடலில் "ஒன்பது வாய்தலும்' என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது வரியில் வருகின்ற "மூழ்கின்ற முத்தனும்' என்னும் சொற்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

கருப்பையினுள்ளே கரு பனிநீர் எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ எப்ன்ண்க் என்ற
திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும்
இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற' என்ற வார்த்தையை திருமூலர் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

"முத்தன்' என்ற சொல்லுக்கும் ஆழமான அர்த்தம் உள்ளது.

கடவுளுக்கும்கூட "முத்தன்' என்றொரு பெயருண்டு.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் முறையே பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மூன்று கடவுள்களும்
செய்வதாகக் குறிப்பிட்டாலும். மூவரும் ஒருவர் என்பதே உயர்நிலைத் தத்துவம்.

மூன்று குணங்களை. செயல்களை உடைய கடவுள் "முத்தன்'.

கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன்,
தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த
ஆவி)' என கடவுள் மூன்று நிலைகளில் இருந்தாலும், ஒரே கடவுளே என்ற கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.

கடவுளுக்குச் சரி; மூன்று நிலைகளில் ஒன்றாக இருப்பதால் முத்தன் எனலாம்.

கருவிலிருக்கும் குழந்தைக்கு "முத்தன்' என்ற
சொல்லை திருமூலர் ஏன் பயன்படுத்துகிறார்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று உடல்கள் உள்ளன. நாம் கண்ணால் காணக்கூடிய பருவுடலை ஸ்தூல சரீரம் என்பார்கள்.

இது தவிர சூட்சும சரீரம், காரண சரீரம் என மேலும் இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும்
உண்டு. இவை சக்தி நிலை உடல்கள் (Energy Bodies).

சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்றும் இணைந்தே மனிதன் உருவாகிறான்.

கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும். மூன்று உடல்களால் உருவாவதால் கருவையும் திருமூலர் "முத்தன்' என்கிறார்.

இனி பாடலின் அடுத்த இரண்டு வரி களுக்கு வருவோம்.

முதல் இரண்டு வரிகளில் கருவில் என்னென்ன உள்ளன என்பதைப் பட்டியலிட்ட திருமூலர், அடுத்த இரு வரிகளில்,

"இவை அனைத்துமே ஒரு கருவில் இருந்தாலும், குண்டலினி சக்தி, பிராண சக்தி ஆகிய இரு சக்திகளை இறைவன் சரியான நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால் மட்டுமே, அந்தக் கரு வளர்ந்து ஒரு குழந்தையாக மாறும். அது நடைபெறாவிடில் கரு பாழாகிப் போகும்' என்கிறார்.

"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்' என்ற மூன்றாவது வரியை சற்றே அலசிப் பார்க்கலாம்.

குண்டலினி சக்தியையே "நாகம்' என குறிப்பிடுகிறார் திருமூலர்.

நமது உடலில் மூலாதாரச் சக்கரத்திற்கு அருகில் உறங்கிக் கிடக்கும் அற்புதமான சக்தியே குண்டலினி சக்தியாகும்.

சமஸ்கிருத மொழியில் "குண்டலா' என்றால் குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு கிடப்பது என்று பொருள்.

பாம்புகள் ஓய்வாக இருக்கும் போது சுருண்டே இருக்கும். எனவேதான் வடமொழி யில் பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும் உண்டு. தூக்கத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பைப் போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய
நிலையில் மூலாதாரத்தின் அருகே சுருண்டு கிடக்கிறது.

இந்திய மரபுப்படி சக்தி என்பதைப் பெண்பாலாகவும் தேவியாகவும்
உருவகப்படுத்துவர். எனவேதான் சுருண்டு கிடக்கும் சக்திக்கு குண்டலினி, குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.

எதையும் நேரடியாகக் கூறாமல் சங்கேத வார்த்தைகளால் கூறுவது சித்தர் மரபு. எனவே தான் திருமூலர் குண்டலினியைக் குறிக்க "நாகம்' என்ற சங்கேத மொழியைப்
பயன்படுத்தியுள்ளார்.

அடுத்து வரும் "எட்டுடன் நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம் கொண்டால் "12 குதிரைகள்'
என்றே அர்த்தம் வரும். ஆனால் திருமூலர் இங்கே மூச்சுக்காற்றையே புரவி என்ற
சங்கேத மொழியில் கூறுகிறார்.

சாதாரண மனிதர்களுக்கு மூச்சுக்காற்று கண்டத்திற்குக் கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும்.

யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு விரற்கடை பரந்து நிற்கும்.

இதையே எட்டுடன் நாலு புரவியும்
என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.

கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற சொல் கடவுளைக் குறிக்கும் (சிவனை) சங்கேதச் சொல்லாகும்.

"பாகன்' என்பதற்கு செலுத்துபவன்,
கட்டுப்படுத்துபவன் என பல அர்த்தங்கள் உண்டு.

குண்டலினி சக்தியையும் மூச்சுக்காற்றையும் கருவின் உள்ளே செலுத்து பவனாகையால் கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார்.

இவை இரண்டையும் பாகனாகிய கடவுள் அந்தக் கருவின் உள்ளே செலுத்தாமல் போனால் அந்தக் கரு வளர்ச்சியடையாது.
வீணாகப் போய்விடும்.

ஐயன் வகுத்த திருக்குறளை சிறு அடிகளில் பெரும் உண்மைகளை விளக்கும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கொண்டாடுகிறோம்.

"கடுகைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று புகழ்வார்கள்.

திருவள்ளுவரின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல திருமூலரின் திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல் சான்றாக உள்ளதல்லவா?

நான்கு வரிகளில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்...

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன.

இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர்.

அத்தகைய சித்திக ளை த் திருமந்திரம் விளக்குகிறது.

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”

1. அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா: சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருட்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா: கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா: இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் “எல்லாம்வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

7. ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம் : ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலிசெய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்...