10/05/2017

கன்னட ஈ.வே. ரா வும் திருட்டு திராவிடமும்...


நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...

நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டு மிராண்டிகளாகவும், மொழிப் பித்தர்களாகவும், இன வெறியர்களாகவும், சாதி வெறியர்களாகவும், ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்கமுடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள். அதற்கு அதிக நேரம் ஆகாது.

இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக் கொண்டு பணிந்து விடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டு மிராண்டிகளாக மாறி, ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித் தனியாக வேணும், எங்கள் மொழி வெறியையும் இனவெறியையும் சாதி வெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம். அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ.. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்கமாட்டீர்கள்...

திமுக வும் கொலையும்...


திமுகவில் ஸ்டாலின், அழகிரி குடும்ப பதவி சன்டையினால் தினகரன் மதுரை அலுவலகத்தை கொளுத்தி மூன்று பத்திரிக்கையாளர்களை உயிருடன் எரித்த தினம் இன்று...

கொலைகளையும் செய்ய அஞ்சாத அஞ்சாநெஞ்சன்கள் நிறைந்ததுதான் திமுக...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


பணமதிப்பிழப்பு திட்டம் அமுலுக்கு வந்து, நேற்றோடு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. பாலும் தேனும் ஓடும் என கணித்த பொருளாதார நிபுணர்களின் கவனத்திற்கு…

நவம்பர் 8ம் தேதி 14.50 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ500/1000 நோட்டுகள் மதிப்பிழந்தது. இதில் பதுக்கப்பட்ட கறுப்பு பணமாக ஏறத்தாழ 3 லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு திரும்ப வராது என மத்திய வங்கியின் எதிர்பார்ப்பு. ஆனால் புழக்கத்தில் இருந்த 98 சதவீதம் ரூ500/1000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளது… கறுப்பு பணம் எங்கே?

கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. தினக்கூலியாக வேலைப் பார்த்தவர்கள் பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். கிராமங்களில் விவசாயமும் இல்லாத போது பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை…

விலைவாசி குறையும் என்றார்கள் ஒன்றும் நடக்கவில்லை..

எல்லையில் தீவிரவாதம் குறையும் என்றார்கள், ஆனால், எல்லை முதல் மத்திய இந்தியா வரை தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது..

சில்லறை வணிகத்தை நம்பியவர்களும் கடும் சீர்குலைக்கு தள்ளப்பட்டனர்.. தேசிய புள்ளியியல் அமைப்பின் முன்னால் தலைவர் சென், கட்டுமானம், ஓட்டல், விவசாயம், சில்லறை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுளது எனக் குறிப்பிடுகிறார். பண மதிப்பிழப்பால் கடும் அவதிக்கு உள்ளான இத்தகைய தொழில்களின் சர்வநாச புள்ளி விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை?

அப்படி எந்த தொழில் செழிப்பாக வளர்ந்துள்ளது எனவும் தெரியவில்லை… மக்கள் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. ஆனால் இதெல்லாம் நடக்கும், நடக்கும் என மோடி மஸ்தான் மந்திரங்கள் மட்டும் இன்னும் குறையவில்லை…

இப்போது அடுத்த பல்லவி தொடங்கியுள்ளது… அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீர் வரி (ஜி.எஸ்.டி) அமுலுக்கு வந்தபின், அண்ணா சாலையில் பாலும் தேனும் ஓடும் என உத்திரவாதமாக தெரிவிக்கிறார்கள்… அதையும் பார்க்கத்தான் போகிறோம்..

வேலை வாய்ப்பின்மை மற்றும் வேலை பறிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.. அமெரிக்க அரசின் கொள்கை, Automation , Competition, மற்றும் பண மதிப்பிழப்பு என எல்லாம் சேர்ந்து மென்பொருள் தொழிலை நெருக்கியுள்ளது.. பல மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்… இதில் Infosys, Cognizant, TCS, Snapdeal, L&T, IBM, Microsoft என முண்ணனி நிறுவனங்களும் அடங்கும்..

UN அறிக்கையின் படி, கறுப்புப் பணம் ஒழியவில்லை… இதற்கு வேறு ஏதாவது வழிமுறைகளில் கணக்கில் வராத சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறது… மேலும் இதன் பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும் என எச்சரித்துள்ளது.

இப்படி எந்த பலனும் கண்ணுக்குத் தெரியாததால், வெற்றிலையில் மை தடவிப் பார்த்தும், சோழி உருட்டிப் பார்த்தும் ஒன்றும் புலப்படவில்லை… 

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வும் மோசடியும்...



இது எப்படி ஒரே மாதிரியான தகுதி தேர்வு..

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு...


புலிக்கொடி சொல்லும் செய்தி...


1977 ஆம் ஆண்டு.அப்போது தலைவர் பிரபாகரன் பல மாதங்களாக மதுரையில் தான் தங்கியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொடி வடிவமைக்கும் பணி அப்போது நடந்தது.

பண்டார வன்னியனின் கொடியான ஒரு கேடயத்தின் குறுக்கான இரண்டு வாட்கள் உள்ளபடி புலிகள் கொடி இருக்க வேண்டும் என்பது ஈழப்போராளிகளின் யோசனை.

துப்பாக்கியும் 33 தோட்டாக்களும் இருக்க வேண்டும் என்பது தலைவரின் விருப்பம்.

அதென்ன 33?

1977+33=2010அதாவது 2010 ஆம் ஆண்டு ஈழப்போராட்டம் உச்சநிலை அடைந்து ஈழம் அமையும் என்பது தலைவரின் கணிப்பு..

மூவேந்தர் சின்னத்தை பொறிக்குமாறு தமிழக ஆதரவாளர்கள் யோசனை கூறினார்கள்.

பாண்டியரே ஆதி தமிழ் மன்னர்கள். பாண்டியர்கள் தாய்மண்ணை மட்டும் ஆண்டவர்கள்.சிங்களவரோடு நட்பாக இருந்தவர்கள்.எனவே மீன் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என சில மதுரைக்காரர்கள் கூறினர்.

சிங்களவர்கள் சேரர்களையோ பாண்டியர்களையோ வெறுப்பதில்லை.
சோழர்கள் என்றால்தான் அலறுவார்கள்.

எனவே தான் 1976ல் தலைவர் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்றே இயக்கம் தொடங்கியிருந்தார்.

இதற்குக் காரணம் சோழர்களைப் பற்றி இராஜரத்தினம் என்ற தமிழகத்து தமிழ்தேசியவாதி 1972வாக்கில் தலைவரிடம் எடுத்துக் கூறியதுதான்.
புலிக்கொடி வரையப்பட்ட காலம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர்மாற்றி ஓராண்டு ஆகியிருந்த காலம்.

சோழர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை பிடித்தவர்கள். எனவே அவர்களின் சின்னம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் போராட்டத்திற்கு சரியாக வராது. அதோடு ஈழத்து காடுகளில் புலியே கிடையாது.தமிழகக் காடுகளில் தான் உண்டு.

அதனால் நாம் புலியை சின்னமாக வைத்தால் தமிழகத்தையும் தனிநாடாக ஆக்க புலிகள் முயற்சி செய்யலாம் என்று இந்தியா சந்தேகிக்கலாம். இந்தியாவை நாம் பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

எனவே பண்டார வன்னியன் கொடியையே வைப்போம்.புலி மட்டும் வேண்டாம் என்றார்கள் ஈழப் போராளிகள்.

கொடியை வரைந்து தர ஒரு ஓவியர் தேவைப்பட்டார்.

அப்போது சிவகாசியில் ஓவியராக இருந்தவர் நடராஜன்.

(பின்னாட்களில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இருந்தார்)

சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

தமிழகத் தமிழர் மாறன் பேபியையும் பிரபாகரனையும் சிவகாசி அழைத்துச் சென்று நடராஜனை சந்தித்து ஈழ விடுதலைப் படைக்கு ஒரு கொடி வரைந்து தர வேண்டும் என்றனர்.

தமிழுணர்வாளரான நடராசன் உற்சாகமாக ஒத்துக்கொண்டு மற்ற வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு உடனடியாக பணியை ஆரம்பித்தார்.
தலைவர் சொல்லச் சொல்ல நடராசன் புலிக்கொடியை வரைந்தார்.

கொடி வரைந்து முடித்ததும் அதை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொஞ்சம் படச்சுருளை (நெகட்டிவ்) நடராசன் வைத்துக் கொண்டார்.

புலிக்கொடியை தம் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார் தலைவர்.
ஈழப்போராளிகள் அதைப் பார்த்தனர்.
அதில் பண்டார வன்னியன்  கொடியின் வடிவமும் இருந்தது.துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.புலி நடுவில் எதிர்பார்த்ததை விடப் பெரியதாக இருந்தது.

ஈழப்போராளிகள் தலைவரை பார்த்தனர்.

தலைவர் புன்னகைத்தார்.

அந்த புன்னகைக்குள் அவர் வெளியே சொல்லாத ஒரு ஆழ்மன விருப்பம் ஒன்று புதைந்து இருந்தது...

மன்னிப்பு கேட்க வைத்த தன்மானமுள்ள கேரள முதல்வர் கண்டு கொள்ளாத தமிழக டெட்பாடி முதல்வர்...


விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ம் தேதி மீண்டும் டெல்லி பயணம் - முதலமைச்சருடான சந்திப்புக்குப் பின் அய்யாக்கண்ணு பேட்டி...


மே 21-ல் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின் நாடாளுமன்றம் அல்லது பிரதமர் அலுவலகம் முற்றுகை குறித்து முடிவு - அய்யாக்கண்ணு..

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் - அய்யாக்கண்ணு...

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை...


நமது பாதங்கள் சக்தி வாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள்.

இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு.

ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆக வேண்டும்.

நமது பாதத்தில் உள்ள 7000 நரம்பு மண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம்.

நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.

வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதான முறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.

இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.

வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்ட நேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்க கூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்த நாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.

இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்த நாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது.

இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்...

கஞ்சா ஒரு பார்வை...


கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்..

சமீபத்தில் அமெரிக்காவில் கஞ்சாவை மருத்துவத்துறையில் உபயோகப்படுத்தலாமா என்று ஒரு சர்ச்சை எழுந்து உள்ளது.

பாரக் ஒபாமா இதுபற்றி  பேசியுள்ளார்.. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சட்டமாக உள்ளது.. சில மாநிலங்களில் மருந்தாக இதனை உபயோகிக்கிறார்கள். சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் $14 பில்லியனுக்கு ஆண்டுக்கு கஞ்சா வர்த்தகம் நடக்கிறது.

கஞ்சா உபயோகத்துக்கு தடை நீக்கி வர்த்தக ரீதியாக மருத்துவத்தில் உபயோகிக்க அனுமதியளிப்பதன் மூலம் அரசுக்கு வரியாக மிகப்பெரும் தொகை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர்களும் தங்கள் இளமைக் காலத்தில் கஞ்சா உபயோகித்தவர்கள் தான்.. ஒபாமா கொக்கையின் என்னும் போதைப் பொருளும் உபயோகித்தவராம்..

அமெரிக்காவில் இது சகஜம்தான் என்கிறீர்களா?

கஞ்சா வியாபாரத்தை முறைப்படுத்தி உரிய வரி விதித்து மருத்துவத்துறைக்கு அமெரிக்கா முழுமைக்கும் உபயோகிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீளும் என்பது ஒரு சாராரின் கருத்து.

இதனைப்பற்றி பல கருத்துக்கள், கண்டனங்கள் செய்திகளாக வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மருத்துவத்துறையில் கஞ்சாவின் பயன் என்னவென்று பார்ப்போம்.

250க்கும் மேற்ப்பட்ட வியாதிகளுக்கு கஞ்சாவை மருந்தாக கொடுக்கலாம்..

அவற்றில் முக்கியமாக...

மூட்டுவலி - வலியைக் குறைக்க.

ஆஸ்துமா - நுறையீரல் விரிவடைய செய்ய.

மன சோர்வு - மூடு ,உற்சாகம் ஏற்பட.

க்ளாக்கோமா,கண் நீர் அழுத்த நோய் -கண்ணின் அழுத்தம் குறைக்க.

வலி - வலி நிவாரணி.

சில அனுமதிக்கப்பட்ட கஞ்சாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கீழே...

1.நாபிலோன் - புற்றுநோய் மருந்துகளால் ஏற்படும் குமட்டல்.

2.மாரினால் - அதே குமட்டல், எயிட்ஸில் உடல் தசை குறைவைத்தடுக்க.

3.சாடிவெக்ஸ் - மல்டிபில் ஸ்கெலொரோஸிஸ் என்ற நரம்பு நோயில், புற்றுநோயில் ஏற்படும் வலி.

இவ்வளவு மருத்துவ குணமிருந்தாலும் கஞ்சா போதை வஸ்துவாக தவறாகப்பயன் படுத்தப்படுகிறது.

அதனாலேயே பல நாடுகளில் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

கஞ்சாவால் ஏற்படும் விளைவுகள்...

உற்சாகம், புத்திசாலியாக நினைத்துக் கொள்ளுதல், தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம், கலகல்ப்பாக இருத்தல் போன்றவை இருந்தாலும்..

கவனமின்மை, சுயநினைவு இழத்தல், மாயத்தோற்றங்கள், நெஞ்சுவலி, ஞாபக மறதி, நடுக்கம், போன்றவை ஏற்படும்.

நீண்ட தூக்கமும் , அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மூச்சு விடசிரமம், இறப்பு ஆகியவை நேரும்...

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வசம் இருந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி பறிப்பு...


உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு...

அதிக நாட்கள் வெளிநாடு சென்ற இந்திய பிரதமர் யார்?


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய ஒன்றியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம்...


இது தானாக நடக்கவில்லை திட்டமிட்டு, மற்ற சமுதாயத்தினர் யாரும் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே நடத்தப்பட்டுள்ளது.

இப்போது மோடியை வைத்து நடக்கும் வியாபாரம் லாபமடைந்தால் கூடிய விரைவில் இந்திய ஒன்றியம் பிராமணர்களின் நாடு என்று அறிவிக்கப்படும் என்று தாராளமாக எதிர் பார்க்கலாம்.

மாநில ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்...

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்...

வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்...

பல்கலைகழக துணை வேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்...

மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்...

கலெக்டர் I.A.S அதிகாரிகள் 3300 பேர்.... அதில் பிராமணர்கள் 2376 பேர்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்...

ராசியசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்...

நன்றி - குசுவந்த்து சிங். சண்டே 23-29 டிசம்பர் 2015 இதழிலிருந்து..

இது தானாக நடக்கவில்லை திட்டமிட்டு, மற்ற சமுதாயத்தினர் யாரும் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே நடத்தப்பட்டுள்ளது.

இப்போது மோடியை வைத்து நடக்கும் வியாபாரம் லாபமடைந்தால் கூடிய விரைவில் இந்திய ஒன்றியம் பிராமணர்களின் நாடு என்று அறிவிக்கப்படும் என்று தாராளமாக எதிர் பார்க்கலாம்...

சென்னை கோடம்பாக்கம் முதல் வடபழனி வரையிலான சாலையில் எண்ணெய் படலத்தால் விபத்து...




பாஜக தமிழிசை கலாட்டா..


நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான்...

கன்னட பலிஜா ஈ.வே.ரா தமிழர் தலைவரா.?


கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது - ஈ.வே.ரா அறிக்கை...

1968ல் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை தன் அடியாட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கி விரட்டிவிட்டு, முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை (தமிழர்கள்) வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிரோடு எரித்துக் கொன்றான் அப்பகுதி மிராசுதாரான கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வந்தேறித் தெலுங்கன்.

உடனே ஈ.வே.ரா கொதித்து எழுந்தார். அறிக்கைவிட்டார்.

யாருக்கு எதிராக?

அன்று கூலித்தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நின்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக.

பின்னே ஒரு வந்தேறி அதிலும் நாயுடு,
இன்னொரு வந்தேறியை அதிலும் நாயுடுவை எதிர்த்து அறிக்கை விடுவானோ?

ஈ.வே.ரா, கீழ்வெண்மணி படுகொலை பற்றி விட்ட அறிக்கை 28.12.1968 அன்று விடுதலையில் வந்துள்ளது.

இடப்பட்டுள்ள இடங்களைக் கவனிக்கவும்.

தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல
அவர்களுக்காகப் பாடுபடுவது போல
ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள்.

உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலி வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டு தான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல்,
நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி..

இன்றைய தினம்,வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி,இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை.தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம் கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அதாவது கீழ்வெண்மணி படுகொலைக்குகம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று கூறுகிறார்.

மேலும், கூலித் தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்கக்கூடாது.கிடைக்கும் சம்பளத்திற்குள் வாழ்ந்து கொள்ள வேண்டும்.

மீறி கலகம் செய்தால் கீழ்வெண்மணி போன்ற படுகொலைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

அப்படியும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தால் அரசாங்கம் அடக்கி ஒடுக்கும்.

(அப்போது வந்தேறி அண்ணாதுரை முதல்வர், நடந்து கொண்டிருந்தது திராவிட வந்தேறிகளின் ஆட்சி).

இதுதான் அவர் கூறுவரும் கருத்து.

ஈ.வே.ரா எந்த இடத்திலும் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு கண்டனமோ
அல்லது வெண்மணி பள்ளர்களுக்கு இரங்கலோ தெரிவித்ததே இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார்.

கீழ்வெண்மணி படுகொலையில் கைது செய்யப்பட்ட நாயுடு நிராபராதி என்று 1965ல் விடுதலை செய்யப்பட்டான்.

இதற்கு வந்தேறித் தெலுங்கனான கருணாநிதி அமைத்த விசாரணைக் கமிஷன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தது முக்கிய காரணம்.
நீதிபதி மகாராஜன் தீர்ப்பில் கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.இதற்கு நன்றிக்கடனாக திருநெல்வேலியில் ஒரு பகுதிக்கு அவர் பெயர்வைக்கப்பட்டது. அது தான் மகாராஜ நகர்.

நாயுடு விடுதலையான போது அவரை வரவேற்ற தி.மு.க வினர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தனர்.

தி.மு.கவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்யவும் இல்லை.

1968ல் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த13 வயது சிறுவன் நந்தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து 12 ஆண்டுகள் கழித்து 1980 டிசம்பரில் கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டி படுகொலை செய்தார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (எம்.எல்) கம்யூனிஸ்ட்களின் அழித்தொழிக்கும் குழு என்று அறியப்பட்ட இவர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை.
கம்யூனிஸ்ட் தலைமை இக்குழுவினருக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஏனென்றால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போதும் வந்தேறிகளாகவே இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்த தமிழர்களுக்கு மேல்மட்டம் எந்த ஆதரவையும் தரவில்லை.

அடுத்த தேர்தலில் கருணாநிதியுடன் அக்கட்சி கூட்டணியும் வைத்துக் கொண்டது.

இன்றைக்கும் கூட இறந்த அப்பாவி மக்களை 'வீரர்கள்' என்று கம்யூனிஸ்ட் கொடியோடு சென்று வணக்கம் வைக்கிறார்களே ஒழிய
கோபால கிருஷ்ணனை கொலை செய்து பழிக்குப்பழி வாங்கிய உண்மையான வீரர்களை கொண்டாடுவதில்லை.

நந்தன் உட்பட வெண்மணிப் பள்ளர்கள் 11பேர் தண்டனை பெற்று சிறை சென்றனர்.சாட்சிகள் இல்லாததால் தண்டனை நிரூபணம் ஆகாமல் சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்த போராட்ட வரலாறையும் கடைசி நேரத்தில் நுழைந்து ஆட்டையை போடும் பெரியாரியக் கூட்டம் கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கை வந்தேறி தெலுங்கரான கோவை ஜி.ராமகிருஷ்ணன் மூலம் எடுத்து நடத்தியது.

என்னமோ அந்த கொலையை தி.க தொண்டர்கள் தான் நடத்தினார்கள் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் கோபால கிருஷ்ணனைக் கொலை செய்தவர்கள் திராவிட அமைப்புகளையும் கம்யூனிஸ்ட் அமைப்புகளையும் நம்பி மோசம் போய் கடைசியில் தங்களது சொந்த இழப்புக்கு பழிவாங்கத் தாமே களத்தில் இறங்கியவர்கள் ஆவர்.

கொலை நடந்த பிறகு ஆளாளுக்கு பங்குக்கு வருகிறார்களே ஒழிய அந்த கொலையைச் செய்ய முடிவெடுத்தவர்களுக்கு எந்த உதவியையும் எந்த அமைப்பும் செய்யவில்லை.

கீழ்வெண்மணி கொலை நிகழ்வு ஒரு நாளில் நடந்த நிகழ்வு கிடையாது.1946 லேயே பிரச்சனை தொடங்கிவிட்டது.
அங்கே விவசாயக் கூலிகளாக இருந்த பள்ளர்களுக்கும் ஆதிக்கசாதியான நாயுடுகளுக்கும் உரசல் இருந்து வந்தது.

பள்ளர்கள் நடத்திவந்த இரவு நேர குடிசைப் பள்ளியை நாயுடுகள் நிறுத்தச் சொன்னார்கள்.பள்ளர்கள் மறுத்தனர்.
ஆதிக்கசாதியினர் எலும்புத்துண்டுகளை வீசி காவல்துறையை அனுப்பினர்.

பள்ளர்கள் காவல்துறையை அடித்து உதைத்து விரட்டினர்.மறுநாளே ரிசர்வ் படை வந்து இறங்கியது.முக்கியமான இரண்டு பேரை அழைத்துச் சென்று சிறையிலடைத்தது.

இப்படி புகைந்து கொண்டே வந்த பிரச்சனை முற்றி இறுதியில் நடந்தேறியது தான் 5 ஆண்கள், 20 பெண்கள், 19 குழந்தைகளைப் பலிகொண்ட அந்த திட்டமிட்ட படுகொலை.

ஜனநாயகமுறையில் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி  ஆயுதம் மூலமாகக் கிடைத்தது.ஆனாலும் இழப்பு என்னமோ தமிழர் பக்கம்தான் அதிகம்...

நம்ப முடியாத உண்மைகள்...


ஆரிய திராவிட திருடர்களும் தமிழ் மொழி அழிப்பும்...


இப்படி தான் எல்லா தமிழ் நாகரிகத்திலும் சமஸ்கிருதத்தை நுழைத்து தழிழை அழிக்கின்றனர்..

ஆரியர்கள் & திராவிடர்கள் சூழ்ச்சி வலையில் தமிழ் வரலாறு...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு...


பீகார், இராஜஸ்தானில் நீட் தேர்வு கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானது..


தமிழன் மருத்துவம் படித்து முன்னேறி விட கூடாது என்பதற்க்காகவே.. பாஜக மோடி கொண்டு வந்த திட்டம் தான் நீட் தேர்வு...

தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக செய்த திருட்டுத் தனத்தை அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி...


தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது திருட்டு புகார் கொடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்.

உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றியதை இதுவரை யாருமே நம்ப முடியவில்லை.

இஸ்லாமியர் ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தாமலேயே இஸ்லாமியர் வாக்குகள் எல்லாமே பாஜகவுக்கு விழுந்தன.

வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து பாஜக செய்த மோசடி தான் இது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் பாஜக இதை மறுத்து வருகிறது.. பாஜக வுக்கு தேர்தல் ஆணையமும் முட்டுக் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவதற்காகவே டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இன்று சிறப்பு சட்டசபையைக் கூட்டியது.

இந்த கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மியின் பரத்வாஜ் விவரித்தார்.

ஒரு இயந்திரத்தில் செலுத்தப்படும் அத்தனை வாக்குகளுமே ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டுமே செல்லும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்ய முடியும். இப்படித்தான் பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு போனது என்றும் பரத்வாஜ் விளக்கினார். இதனால் டெல்லி சட்டசபையில் அமளி துமளியானது.
 
இப்படி தேர்தல் தங்களது திருட்டுத் தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி கட்சி மீது திருட்டு புகாரை கொடுக்க இருக்கிறது.

அதாவது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பொதுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகள்தான் கையாள்வர்கள். இந்த இயந்திரங்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருக்கும். ஆம் ஆத்மி டெமோ காட்டிய வாக்குப் பதிவு இயந்திரம் குடோனில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என கூறி அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் புகார் கொடுக்க இருக்கிறதாம்.

உண்மையை சொன்னதால் உரைக்கிறதாம்...

பாஜக மோடி அரசின் சூழ்ச்சியின் வினை...


நம்ப முடியாத உண்மைகள்...


கஞ்சா பல நோய்களுக்கு தீர்வாகும் மருந்து... இதை கார்பரெட் நிறுவனத்திற்காகவே தடை செய்து வைத்துள்ளது அரசு...

ஜெர்மனியின் சாதனை...


தன்னுடைய மின்சார தேவையில் வெறும் 15 சதவீதம் மட்டுமே அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்துவிட்டு மீதமிருக்கும் அனைத்து தேவையையும் புதிப்பிக்கக்கூடிய ஆற்றலலிருந்து உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளது ஜெர்மனி நாடு.

2011 ஆம் புகுஷிமா விபத்து ஏற்பட்டவுடன் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடிவிடுவோம் என்று தைரியமாக அறிவித்து, உடனடியாக சூரிய சக்தி, காற்றாலை மின்சார உற்பத்தியில் தனி கவனம் செலுத்தியதன் விளைவு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.

தேவையை விட அதிகமாக மின்னுற்பத்தி நடந்து மின் கட்டணங்கள் நெகடிவிற்க்கு (மின்சாரத்தை பயன்படுத்த நிறுவனங்கள் பணம் கொடுக்கும் நிலை) சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனர்ஜிவெய்ண்டே என்ற திட்டத்தை ஜெர்மனி அறிவித்து, 2050 ஆம் ஆண்டுக்குள் அனல் மின் நிலையங்கள் இல்லாத புதுப்பிக்க கூடிய ஆற்றல் மட்டுமே கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அன்றைக்கு தேவைப்படும் அளவைவிட அதிக உற்பத்தி செய்யும் திட்டத்தில் உள்ளது.

நாள் ஒன்றுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் ஜெர்மனியில் இதை சாதிக்க முடிகிறதென்றால் அதிக நேரம் சூரிய ஒளி இருக்கும் நம் நாட்டில் நிச்சயம் இதை செய்ய முடியும்.

அணுசக்தி நிறுவனங்களின் லாபத்தை நோக்கத்தில் அரசுகள் செயல்படாமல், மக்களின் தேவைகளை மனதில் வைத்து செயல்படும் அரசுகள் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்...

புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்ற சிறைக்காவலர் ஆறுமுகசாமி கைது...


பாபு என்ற கைதியிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல்...

திமுக வும் டூபாக்கூர் வேலையும்...


கருணாநிதியின் தாயார் இறந்தது 1963 இல், கே ஆர் நாராயணன் ஜனாதியாக பதவியேற்றது 1997  இல்.. வெட்கம் கெட்டவர்களே , உங்களையெல்லாம் செருப்பால் அடித்தால் என்ன தவறு? 

ஷம்பலா மர்மங்கள்...


விக்டோரியா லேபெஜ் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஷம்பலாவை பற்றி ஆய்வு செய்து தனது ஆய்வு புத்தகத்தில் கூறுகிறார்..

துணிவற்ற நவீன சமுகத்திற்கு இந்த மண்டலத்தினுடைய ஆணை தேவை எனவும் மண்டலா (பிரபஞ்சத்தின் ஒரு வரைபட அமைப்பு ) ஒழுங்கற்ற சுருள் போன்ற பிரபஞ்சத்தின் மையம் என கூறும் அவர். மேலும் இந்த மையத்தினை தேடி தொடர்வது மூலம் ஷம்பலாவினை அடையலாம். மேலும் ஷம்பலா உலகத்தின் அச்சு என கூறும் இந்த ஆய்வாளர் .இங்கே நாம் அறிய முடியாத அளவில் பல ரகசியங்கள் நிறைந்து இருக்கலாம் என கூறுகிறார்.

அருங்காட்சியகம் நூலகம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிந்தைய தொழில் நுட்பம், மேலும் சீனர்களின் அறிவிதிறன்படி பிரபஞ்ச கோள்களுக்கு பயணம் செய்ய புதிய வாகனங்கள், மற்றும் பிற கிரஹங்களில் வசிப்பவர்களை கண்டறிய உதவும் புதிய வசதிமிக்க தொழில் நுட்பங்கள் இருக்குமென்று கூறுகிறார்.

இவைகள் வெறும் ஒரு மதம் சார்ந்த கற்பனை என நாம் புறந்தள்ளி விடலாம். ஆனால் புதிய நிலம் மற்றும் நாடுகளை கண்டறியும் ஒருவர் பற்றி தன் அனுபவங்களை முன் வைக்கிறார்.

ரஷியாவை சேர்ந்த நிக்கோலஸ் ரோறிச் இவர் பன்முகம் கொண்ட ஒரு மனிதர் நடிகர் கவிஞர் மேலும் தியோசொபிகல் சமுகத்தின் முக்கிய அங்கத்தினரும் கூட
1923 முதல் 1928 வரை இவர்கள் 15500 மைல்கள் 35 நாடுகளின் உயர்ந்த மலை பகுதிகளை கடந்தார்கள் கோபி பாலைவனம் முதல் அட்லாய் மலை வரை 1924 ஆன் ஆண்டு இந்திய மலை பயணங்களை ரோறிச் தன் குழுவினருடன் மேற்கொண்டார். ரோறிச் தனது பயணத்தின் போது ஷம்பலாவை பற்றி அறிய நேர்ந்தது.

தனது பயணத்தின் போது ரோறிச் ஷம்பலாவை பற்றிய தனது எண்ணங்களை குறித்து வைத்து கொண்டார் பின்னலில் மிக பிரசித்தி பெற்ற நூலாக விளங்கியது அவருடைய குறிப்புகள் அதன் பெயர் altai-himalaya travelors guide.

ரோறிச் இந்த புத்தகத்தில் ஒரு வினோத சம்பவத்தை விவரிக்கிறார். ரோறிச் தனது பயணத்தை அல்டாய் பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய பின் ஒரு வெள்ளை தூண் ஒன்றினை நிறுவி அத்தனை ஷ்மபலாவிற்கு அர்ப்பணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வெள்ளை தூண் ஷம்பலாவிற்கு அற்பணிக்கபடும் புனித சடங்குகளை செய்ய குறிப்பிட தக்க எண்ணிகையிலான லாமா துறவிகள் கலந்து கொள்கின்றனர் ஒரு மங்கோலிய குழுவின் தலைவர் வர இருக்கும் நாளில் இது குறித்து நல்ல செய்தி அல்லது சூசகமான தகவல் கிடைக்கும் என கூறுகிறார். அவர் கூறிய ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் ஒரு பெரும் கருப்பு பறவை ஸ்தூபிக்கு மேலாக பறந்து அம்பினை போல சூரியனை நோக்கி பாய்ந்து தங்கமென மின்னி எல்லோர் பார்வையும் அதன் மீது இருக்கும் போது சட்டேனே பார்வையில் இருந்து தப்பிய பறவையினை தொலை நோக்கி மூலம் கண்டபோது அட்லாயின் திசையிலுருந்து தென்மேற்கு பக்கமாக பறந்து ஹம்போல்ட் மலையின் பின்புறமாக சென்று மறைந்தது.  அதாவது ஷம்பலா திசையில், இது குறித்த ரோரிசிடம் லாமா ஒருவர் ஷம்பலாவின் கடவுளின் ஆசிர்வாதம் என கூறினார்.

மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் நமது மஹா விஷ்ணுவின் அவதாரமான கல்கி தீமைகளை அழித்து பின் ஷாம்பலில் அரசாள்வர் என கூறப்படுகிறது. ஷம்பலா இன்னும் ஏரளாமான ஆச்சர்யங்களை கொண்டு உள்ளது.

ஷம்பலாவின் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என திபெத்தில் பதினான்கு வருடங்கள் ஆய்வு பணி புரிந்த டேவிட் ஒ நில் எனும் பெண் கூறுகிறார் இமயமலை சாரலில் தான் கண்ட அந்த மனிதன் அமைதி தவழும் முகத்துடனும் வானுக்குள் அப்பாலுள்ள பொருள்களை காண்பனை போல கூறிய விழிகளுடன் காணப்பட்டதாகவும் அவனுடைய நடை பாய்ச்சல் போல அதே சமயம் பூமியில் கால் வைக்காமல் பறந்து செல்லும் ஒருவனை போல பெண்டுலம் அசைவதை போல சீரான இடைவெளியில் நடந்து சென்றதாக கூறுகிறார்.

பல ஆச்சர்யங்களை கொண்ட ஷம்பலவை இன்னும் தேடி கொண்டே இருக்கின்றனர்...

பாஜக மோடியும் பயங்கரவாத சதியும்...


டாஸ்மாக் லாரியில் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்ட வெடி குண்டுகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு உள்ளன. லாரி ஓட்டுநர், பா.ஜ.கவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவருக்காக வெடி குண்டுகளை கொண்டு வந்ததாக கூறி உள்ளார்...

வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட செய்தி எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. கருப்பு முருகானந்தம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே சுவாதியை படுகொலை செய்து இந்து / இஸ்லாம் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு செயல்பட்ட பா.ஜ.க குண்டர் படை தளபதி கருப்பு முருகானந்தம் இன்று தமிழ்நாட்டுக்குள் வெடி குண்டுகளை கொண்டுவர என்ன காரணங்கள்?


தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதோடு.... தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எடப்பாடி மைனாரிட்டி அரசு ஒப்புதலோடு செயல்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில்.... கருப்பு முருகானந்தம் வெடி குண்டுகளோடும் குண்டர் படைகளோடும் தயாராகிறார் என்றால் அதற்கு ஒரே ஓரு காரணம்தான் இருக்க முடியும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் சக்தி பொங்கி எழுந்தால் அங்கு வெடி குண்டுகளை வீசி கலவரங்களை ஏற்படுத்தி தமிழ்நலன் இயக்கங்கள் மீது அப்பழியை சுமத்தி தமிழர்களை தொடர்ந்து போராடாமல் வைத்திருக்க மோடி / எடப்பாடி அரச பயங்கரவாத கூட்டணிகளின் சதி வேலைகளாகத் தான் நாம் இதை அவதானிக்க வேண்டும்...

பிற்சேர்க்கை: பத்திரிகைகளில் மேலோட்டமான செய்தி வந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=299274


அச்சு கலையை ஹிடன்பர்க் என்ற ஜெர்மானியர் பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் கண்டு பிடித்தார் என வரலாறு எழுதும் உலகமே...


கீழடியில் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் எங்கள் பாட்டன் பயன்படுத்திய இந்த பொருள் என்ன?

அறிவியல் கண்டு பிடிப்புகளையும் வரலாற்றையும் உலகம் மறுபடி திருத்தி எழுத வேண்டும்...

எல்லா பாஜக பக்தாளும் வெக்கமே இல்லாம எப்படி டா பொய்ய பரப்புரிங்க.. மானங்கெட்டவங்களா...


சேலைக்குள் வாள்...


சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.

திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர் (முல்லைப்பாட்டு 46-45)..

படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்...