10/05/2017

தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக செய்த திருட்டுத் தனத்தை அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி...


தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது திருட்டு புகார் கொடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்.

உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றியதை இதுவரை யாருமே நம்ப முடியவில்லை.

இஸ்லாமியர் ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தாமலேயே இஸ்லாமியர் வாக்குகள் எல்லாமே பாஜகவுக்கு விழுந்தன.

வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து பாஜக செய்த மோசடி தான் இது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் பாஜக இதை மறுத்து வருகிறது.. பாஜக வுக்கு தேர்தல் ஆணையமும் முட்டுக் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவதற்காகவே டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இன்று சிறப்பு சட்டசபையைக் கூட்டியது.

இந்த கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மியின் பரத்வாஜ் விவரித்தார்.

ஒரு இயந்திரத்தில் செலுத்தப்படும் அத்தனை வாக்குகளுமே ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டுமே செல்லும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்ய முடியும். இப்படித்தான் பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு போனது என்றும் பரத்வாஜ் விளக்கினார். இதனால் டெல்லி சட்டசபையில் அமளி துமளியானது.
 
இப்படி தேர்தல் தங்களது திருட்டுத் தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி கட்சி மீது திருட்டு புகாரை கொடுக்க இருக்கிறது.

அதாவது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பொதுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகள்தான் கையாள்வர்கள். இந்த இயந்திரங்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருக்கும். ஆம் ஆத்மி டெமோ காட்டிய வாக்குப் பதிவு இயந்திரம் குடோனில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என கூறி அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் புகார் கொடுக்க இருக்கிறதாம்.

உண்மையை சொன்னதால் உரைக்கிறதாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.