01/10/2018
அதிசய கிளிப் பூ...
இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது..
ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை.
அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ..
வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.
தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.
கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...
செய்தியைப் பரிமாறும் கருவிதான் மொழியாம்; இதுவே கன்னட ஈ.வெ.ரா. வின் பகுத்தறிவு வழியாம்...
மொழி என்பது மனிதனுக்கு முகமையானதில்லையா?
மொழியின்றி மனிதன் வாழமுடியுமா?
மொழி இயற்கையானதல்லாமல் செயற்கையானதா?
இது எவ்வகையான பகுத்தறிவு?
மொழி என்பது செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் கருவி மட்டுமன்று என்பதை ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளவில்லை..
மொழி ஓர் இனத்தின் முகம்;
ஓர் இனத்தின நாகரிகம்;
ஓர் இனத்தின தொன்மை ;
ஓர் இனத்தின உணர்வு;
ஓர் இனத்தின் உயிர்..
அந்த மொழியைப் புறக்கணிப்பதன் வாயிலாக அந்த இனத்தின முகத்தினைச் சிதைத்து, அடையாளத்தைக் குலைத்து,
நாகரிகத்தை அழித்து, தொன்மையை மறைத்து, ஓர் இனத்தின் அனைத்துக் கூறுகளையும் திரித்துப் புரட்டுவதாகாதா?
’தமிழர் தலைவர்’ என்று சொல்லப்பட்ட ஈ.வெ.ரா.வுக்கு இஃது அழகா?
நிற்க, தமிழை எடுத்துக் கொண்டாலும் இன்று உலக ஞானத்திலும் முற்போக்குத் தன்மையிலும் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது?
தமிழனுக்கு முதலாவது நேரான சரித்திரம் இல்லை (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், தொகுதி 2, பக்கம் 987.)
தமிழில் உலகஞானமும், மற்போக்குத் தன்மையும் இல்லை என்று கூறித் தமிழை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தலாமா?
தமிழனுக்கு வரலாறே இல்லையென்று தமிழினத்தை இழிவுபடுத்தலாமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..
என்ற வள்ளுவனின் குறளும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்ற கணியன் புங்குன்றனின் புறநானூற்றுப் பாடலும் உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மை கொண்டவை அல்லவா?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் தமிழனின் உலகஞானம் வெளிப்படுகிறது.
தெளிவான நேரான சரித்திரம் இருக்கிறது.
அப்படி இருக்கும்போது தமிழ்மொழியைக் கொச்சைப்படுத்துகிற ஈ.வெ.ரா. தாம் சார்ந்திருந்த தெலுங்கு கன்னட மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?
தன்னைச் சார்ந்திருந்த - தாம் பேசிய - தெலுங்கு மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?
காரணம் அந்த இரண்டு இனமொழி மக்களும் ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்கவில்லை.
திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.
அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.
அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தையும் ஏற்காததால் அவரவர் தத்தம் மாநில மொழியையும், இனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தற்காத்துக் கொண்டனர்.
ஆனால், தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்கர்களும் கன்னடர்களும், மலையாளிகளும் திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வையும், பிழைப்புக்காக ஏற்றுக்கொண்டு அரசியலில் பயனடைந்தது ”உள்ளங்கை நெல்லிக்கனி” போன்றதாகும்.
தமிழ்மொழியினைக் கொச்சைப்படுத்திய தோடன்றித் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப்படுத்தி முரட்டு நாத்திகத்தைப் பேசித் தமிழர்களின் நல்ல மரபுகளை ஈ.வெ.ரா. அழித் தொழித்தார்.
ஆகையால் தமிழர்களே..
தமிழர்களுக்கு எதிரான ஈ.வெ.ரா.வையும் பொல்லாத் திராவிடத்தையும் புறந்தள்ளுவோம்..
தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்..
தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம்...
மகிசாசுரமர்த்தினி...
முன்னொரு காலத்தில் எருமைநாடு என்ற நாட்டில் ஒரு அரசன் ஆண்டு வந்தான்...
தன்னுடைய நாட்டைக் கைப்பற்ற எண்ணிய ஒரு வணிக கும்பலை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தான்.
எருமை ( தமிழ் ) - மகிசம் ( வடமொழி ).
எருமையூர் ( தமிழ் ) - மகிசூர் ( அ ) மைசூரு.
அந்த வணிகக் கும்பலின் தலைவி சிங்கத்தின் மேல் அமர்ந்தவள். அவளைத்தான் மகிசாசுரமர்த்தினி என்கிறார்கள்.
மைசூரில் தான் உலகப்புகழ் பெற்ற தசரா பண்டிகை கொண்டாடப் படுகிறது.
உலகின் பல அரசர்களை வீழ்த்தியது சிங்கத்தின் மேல் அமர்ந்த ஒரு பெண் என்று தெரிகிறது...
விரல்களும் மருத்துவமும்...
1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.
2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.
3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.
5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.
6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.
7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .
9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.
10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.
11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்...
பார்வைக்கும் காட்சிக்குமான வேட்டல் உணர்த்தும் வேறுபாடே இவற்றிற்கு சரியாக ஒப்புடையவை...
உயிர் ஒரு அகக்காரணி, உயிரின் செயல்பாடுகளையே உடல்
நிறைவேற்றுது.
உணர்வு ஒரு அகக்காரணி அதை வெளிப்படுத்தக் கூடிய கருவி மட்டுமே உணர்ச்சி..
ஆனா இங்கே ஊடகங்கள் மூலம் உங்க புறக்காரணியான உணர்ச்சி தூண்டப்பட்டே உங்க சிந்தனை மழுங்கடிக்கப்படுது.
விருப்பம் என்பது தேவையை மட்டுமே விரும்புவது அதற்கு சாத்தியமா, சாத்தியமற்றதா என்ற எல்லைகளில்லை.
ஆனா ஆசை எதைப்பார்த்தாலும் அடையத் தூண்டும் உணர்ச்சியின் வெளிப்பாடே விருப்பம் என்பது உணர்வை சார்ந்தது.
மனம் தீது நினைக்காத தன்மைக் கொண்டது.
மனத்தை முழுமையாக பயன்படுத்தி அறிவை தேவைக்கு பயன்படுத்துவதே
சிறந்தது.
அறிவின் அடிமையாக இருந்தா அழிவே மிஞ்சும்.
எ.கா : கடந்த தலைமுறை முதல் விவசாயிகள் நஞ்சு உரம் தெளித்து விளைச்சல் அதிகமாகும் என்ற பெயரில் பேராசை ஊட்டப்பட்டது.
பொருளாதாரம் என்ற காரணத்தைக் காட்டி மட்டுமே, அறிவு எந்த அழிவுக்கும் வணிக ரீதியாக தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பதிலைத் தரவல்லது
மனதை தான்தோன்றித்தனமா திரியவைக்காம இருக்கவே அறிவை தேவைக்கு பயன்படுத்தனும்..
கடைசியா மனதின் விருப்பங்களை அதாவது உணர்வுகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படும் கருவிகளே உருக்களன்றி இன்று உணர்வுகளை இவை ஆட்டிப்படைக்கிற நிலைக்கு தள்ளப்படுறோம்.
மாரி பொழிவதும் இதன் தத்துவமே..
மரங்கள் வெளியிடும் கரியமிலக் காற்று குளிர்ச்சியாதலின்.. குளிர்க்காற்று மேகம் நோக்கி போகுது..
வெப்பக்காற்று அடிச்சா வெப்பம் ஏற்படுது..
மழை பொழிய குளிர்க்காற்றும், ஒருவிதமான புழுக்கக்காற்றும் மேகத்தை நோக்கிப் போய் சமநிலை அடையனும்,
மரங்களை மற்றும் வளர்த்தா போதாது.. எந்த நிலம் குளிர்க்காற்று வெளியிடுற மரங்களையும் அதுக்கு இணையா
புழுக்கக்காற்று வெளியிடுற பல்லுயிர்கள் இருக்குற நிலமா இருக்கோ
அப்போ தான் சமநிலையா அந்த இடம் அதிக மழையைப் பொழியுற
இடமா இருக்கும்..
எங்கே அதான் பசுமைப்புரட்சிங்குற பேர்ல ஒரே சில வகையான
மரங்களை மட்டும் நட்டு பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாப்புங்குற பேர்ல தடுத்துட்டானுங்க..
அதான் தோப்புகளிருந்தாலும் சில இடங்கள்ல மழை வர்றதில்ல..
இதுவே கரு உரு தத்துவமும் கூட
புறப்பொருளை அடிமையாக்கி அகப்பொருள் சார்ந்து வாழுங்க..
புறப்பொருள் கண்டு அடிமையாகாம..
[செந்தமிழன் அண்ணனோட பலவகையான புத்தகங்கள்
கருத்து வாயிலாவும் நான் புரிஞ்சிக்கிட்டு தொடர்புப்படுத்திய சில ஒற்றுமைகள்]...
வீராணம் ஏரியில் தங்க புதையலா?
அரசாங்கத்தின் அடாவடித்தன அராஜக ஆட்டம் ஆரம்பம்...
அங்கிருப்பது தங்க புதையல்ல வைரபுதையல்..
அதாவது கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி புதையல்!....
விரைவில் Welcome To VLC..
தேசத்திற்கான வளம்..
மக்களுக்கான சக்தி...
கனிமத்தை திருட அருமையான யுக்தி...
நமக்கு சபரிமலை, கள்ளத்தொடர்பு பற்றி பேசவே நேரம் போதவில்லை...
இதை எவன் கவனிப்பது...
பிரணாயாமம்...
ஓரங்குலம் உள்ளே அடக்கினால் உலகப்பற்று நீங்கும்.
இரண்டங்குலம் உள்ளே அடக்கினால் ஆனந்தம் உண்டாகும்.
மூன்றங்குலம் உள்ளே அடக்கினால் கவிபாடும் வல்லமை உண்டாகும்.
நான்கு அங்குலம் உள்ளே அடக்கினால் வாக்கு சித்தி உண்டாகும்.
ஐந்து அங்குலம் உள்ளே அடக்கினால் முக்கால ஞானம் உண்டாகும்.
ஆறு அங்குலம் உள்ளே அடக்கினால் கணம் குறைந்து மேலெழும் சக்தி ஏற்படும்.
ஏழு அங்குலம் உள்ளே அடக்கினால் வாயுவேக சக்தி உண்டாகும்.
எட்டு அங்குலம் உள்ளே அடக்கினால் அஷ்டமா சித்திகளை பெறலாம்.
ஒன்பதன்குலம் உள்ளே அடக்கினால் நவ நிதிகளை பெறலாம்.
பத்தங்குலம் உள்ளே அடக்கினால் பத்து உருவங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
பதினோரு அங்குலம் உள்ளே அடக்கினால் நிழல் இன்றி உலகில் உலாவலாம்.
பனிரெண்டு அங்குலம் உள்ளே அடக்கினால் பிரமரந்திரத்தில் அடங்கும் போது அமுதம் கிடைகிறது...
தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?
இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல்... ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...
2800 ஆண்டுகள் பழமையான கொற்கை பானையோடு மறைக்கப்படுவது ஏன்?
தற்போது வரை (2016 AD) கிடைத்திருக்கும் தமிழி எழுத்தில் மிகப்பழைய எழுத்துப்பொறிப்பு கொற்கையில் கிடைத்த 'ஆதன்' என பெயர் பொறித்த பானையோடு ஆகும்.
கரிமநாட்காட்டி படி இதன் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு (கி.மு. 755 ± 95).
இதை நடன காசிநாதன் போன்றோர் தன் நூல்களில் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ஆனால் இதை அதிகம் வெளிவர விடாமல் செய்வதற்கும் இதை பரவலான ஏற்பை பெறாமல் இருக்க செய்வதற்கும் மத்திய தொல்லியல் துறையினரால் உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் தான் கீழுள்ளவர்கள்.
இவர்கள் வெளியிடும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன்.
1. அமர்நாத் ராம்கிருஷ்ணா -
கீழடி தொல்லியல் ஆய்வாளர்.
பாண்டிமுனி கோயிலை பௌத்த கோயில் என்றது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை மண்ணடுக்கும் அதன் கீழ் ஆற்றுப்படுகையும் வருகின்ற மாதிரி இருக்கும் கீழடியை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தவர்.
இதன் மூலம் அசோகருக்கு பின்னர் வந்த எழுத்துப்பொறிப்புகளை மட்டும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.
2. சுப்பராயலு - கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று சொன்னவர்.
மறைமுகமாக களப்பிரர் கட்டினர் என கதை விட்டவர்.
3. பத்மாவதி அணையப்பன் -
களப்பிரர் காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக தொடர்ந்து கதையளப்பவர்.
காஞ்சிபுர ஐயனார் கோயிலை பௌத்த கோயில்னு புழுகித்தள்ளியவர்.
4. ஐராவத மகாதேவா - அசோகப் பிராமிக்கு பின்னர் தமிழ் எழுத்துக்கள் வந்ததுன்னு தொடர்ந்து கதையளப்பவர்.
ஜைனர்களால் தமிழ் எழுத்துக்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதுன்னு கதைவிட்டதும் அல்லாமல் அதை உலகளவில் பிரபலம் அடையச்செய்தவர்.
நாலவதாக சொல்லப்பட்ட மகாதேவாவின் கருத்து எளிதாக அடிபட்டு விட்டது.
அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைவிட பழமையான எழுத்துக்கள் தமிழக்கதில் ஏற்கனவே கிடைத்திருந்தன.
நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கி.மு. எட்டாம் நூற்றாண்டு பானையோட்டை நோக்கி ஆய்வாளர்கள் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழ் எழுத்துக்களை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு பழமையோடு தடுத்து நிறுத்த உருவாக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்டவர்களே மேலே நான் சொன்னவர்களும் இன்னும் பலரும்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஜைனம் பௌத்தம் போன்றவை வடக்கில் உருவாகி அவர்களே தமிழ்நாட்டுக்கு தமிழ் எழுத்துக்களை கொண்டு வந்தார்கள் என்ற கருத்தை நோக்கியே இதை வளர்த்துச் செல்வார்கள் இவர்கள்.
இவர்களிடம் நடனகாசிநாதன் மேற்கோள் காட்டிய கரிமநாட்காட்டி படி கி.மு. எட்டாம் நூற்றாண்டு அளவில் பழமையான கொற்கை பானையோட்டை பற்றி ஏன் நீங்கள் பேசுவதே இல்லை என கேட்டுப்பாருங்கள்.
இஞ்சி தின்ற குரங்குகள் போல விழிப்பார்கள்.
இல்லை சமாளிப்பு காரணங்கள் எதையாவது சொல்லி கடந்து விடுவார்கள்.
எதனால் அப்படி?
கி.மு. எட்டாம் நூற்றாண்டுனா மகாவீரா, புத்தா போன்றவர்களை விட பழமையான காலமாக தமிழ் வந்து விடும்.
அப்புறம் எப்படி ஜைனம் பௌத்தத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆரிய திராவிட தலித்திய நாரதப்பூச்சாண்டி அரசியலை செய்ய இயலும்?
அதனால் தான் கி.மு. எட்டாம் நூற்றாண்டு கொற்கை பானையோடு பற்றி அமர்நாதன்களும் பத்மாவதிகளும் பேச மாட்டார்கள்...
- தென்காசி சுப்பிரமணியன்
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...
நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.
புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.
மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.
இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.
வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.
ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.
அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...
மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார் பலி... விபத்தா ? கொலையா ?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள வில்லாரோடை கிராமத்தை ஒட்டியுள்ள கோரையாற்றில் நேற்று இரவு சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக விராலிமலை தாசில்தார் பார்த்திபனுக்கு தகவல் சென்றது இதைத்தொடர்ந்து வருவாய் துறை அலுவலர்களை அழைத்துக்கொண்டு வாகனத்தில் விராலிமலையில் இருந்து கீரனூர் சாலையில் இன்று (29ம் தேதி) அதிகாலை இரண்டு மணியளவில் சென்றுகொண்டிருந்தார் அப்போது பூமரம் குளவாய்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே சென்றபோது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே தாசில்தார் பார்த்திபன் உயிரிழந்தார் டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு விராலிமலை போலீசார் அனுப்பி வைத்தனர்...
சித்தர் ஆவது எப்படி - 5...
சிவமான சத்திய சித்தரின் பண்புகள்
இந்த தலைப்பில் வரும் தகவல்கள் மிகவும் சிக்கலானதும், திகைப்பினை தரக்கூடியதுமானது... ஆனாலும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும்....
முதலில் சித்தர்கள் தரிசனத்தை காண விரும்புவர்கள், அவரை எப்படி காண விரும்புகிறார்கள்.. தூல தேகத்திலா அல்லது சூட்சும தேகத்திலா ?..
இன்றைய கால கட்டத்தில் பலர் சித்தர்களை போல இருந்தாலும், அவர்களிடம் எதிர் பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து போனதினால், சித்தர்களை சூட்சும தேகத்திலே காண விரும்புகிறார்கள்.. அப்படி காண்பது ஒன்றே நம்ப தகுந்தாக உள்ளது...
முகநூல் பக்கங்களில் சித்தரை கண்டவர்கள் எல்லாம் அவர்களின் ஒளி தேகத்தை மட்டுமே படம் பிடித்து பதிவு செய்வார்கள்... சித்தரை பற்றி அறியாதவர்கள், வேறு உருவங்களை
படம் பிடித்து அவைகளை ஆவி என்று அநேக படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்..
இப்படி சித்தரா அல்லது ஆவியா என்ற குழப்பத்தில் பலர் இருந்து இருக்கிறார்கள்..
அவர்கள் சித்தரை பற்றி அறை குறையாக அறிந்தவர்களே..
இறைவன் தரிசனத்தை கண்டவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தையே சூட்சும தேக வடிவில் சற்று மங்கலான ஒளி வடிவில் கண்டு இருக்கிறார்கள்...
இப்படியாக கண்டு கண்டு களித்த மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்..
ஆனால் நேரடியாக எந்த உபதேசத்தையும், ஏதாவது பொருட்களையும் பெற்றதாக தெரிய வில்லை.. சிலருக்கு அப்படி நடந்து இருந்தாலும் அது மிகை படுத்திய ஒன்றாகவே முடிவில் இருந்து இருக்கிறது..
சிலருக்கு சித்தர் பழம் கொடுத்தார் என வைத்துக் கொள்ளுங்கள்.. அது எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தானே.. அதில் பரவசம் அடைய என்ன காரணம் ?
ஒரு விசித்திரமான பழமாக, உதாரணத்திற்கு பழத்தின் ஒரு பக்கம் ஆப்பிளாகவும் மறு பக்கம் ஆரஞ்சு ஆகாவும் விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் கொடுத்து இருந்தால், ஏதாவது அர்த்தம் இருக்கிறது...
ஆனால் அது போல் எதுவும் நடந்ததில்லை... இனியும் நடக்குமா என்பதிலும் ஐயமே உள்ளது..
மற்றொன்று, சித்தரின் விசித்திரத்தை கண்டவர்கள் அனைவரும் தனி தனியாகத் தான் கண்டார்களே தவிர கூட்டாக யாரும் காணவில்லை.. ஒருவர் அனுபவித்த அனுபவத்தை வேறு ஒருவர் உடன் இருந்து சாட்சியாக இருந்ததில்லை..
இந்த நிலையில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு...
அவர் இஷ்டப்பட்டு வரும் நேரத்தில் மட்டுமே பக்தன் கவனிக்க முடியுமே தவிர தான் நினைத்த நேரத்தில், ஏங்கும் நேரத்தில், ஒரு நாளும் தரிசனத்தை கண்டு களித்ததாக செய்திகள் எதுவும் இல்லை..
காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலத்தை விட பெரியது என்றார் வள்ளுவர்.. காலத்தில் காட்சி தராத, உதவாத சித்தரால் என்ன பயன் என்று மனித குலம் சிந்திப்பது இல்லை...
ஏதோ நம்பிக்கையிலே மனித குலத்தின் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது; அதை ஏன் கெடுக்க முயற்சிக்க வேண்டும் என கேட்கலாம்..
மனிதனின் தவறான மீள முடியாத சிக்கி கொண்ட நிலையிலிருந்து மீள சில உண்மைகளை வெளிப் படுத்தும் பொழுது, சிக்குண்டதில் ஒடுங்கி போன நிலையில் இருந்து மனித குலம் மீள, சரியான வழி கிடைக்கலாம்...
உண்மைக்கு புறம்பான செய்திகளில் சிக்குண்ட இந்த மனித குலம் இதுவரை இந்த சித்தர்களிடமிருந்து என்ன பெற்றது ?..
ஞானத்தையா அல்லது அசாதாரமான பலத்தையா?...
முடிவில் மரணத்தை தவிர, அதையும் சமாதி என்ற கௌரவமான பட்டத்தை தவிர வேறு என்ன கிடைத்தது ?..
தனிப் பட்ட மனிதனுக்கு கிடைத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர ஒட்டு மொத்த மனித குலத்திற்கு என்ன செய்ய முடிந்தது ?..
காரணம் சித்தர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உள்ள மனிதகுலம் அத்தகைய மன கட்டமைப்பில் உள்ளவர்களையே அதாவது உடல் தோரணைகளில், உலக குடும்ப பந்தங்களில் இருந்து விலகி அன்பு என்பதையே என்னவென்று தெரியாதவர்களையே நம்மில் பெரும் பாலும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்..
அத்தகைய வேசதாரிகளிடம் இருப்பது, சோம்பலும், ஒழுக்கமின்னையும், போதை பொருள்களில் சிக்குண்டவர்களாய் ஆற்றல் அற்று ஆனால் மிக பெரிய ஆற்றல் உடையவர்கள் போன்ற நடிப்பும், நடமாடும் தூல தேக நடை பிணங்களாய், தங்கள் பிழைப்பு ஓட்ட பயமுறுத்தி வாழ்வதுமே நாம் கண்டு கொண்டு வருகிறோம்..
பயமுறுத்தல் என்பது மிக பெரிய ஆயுதமாக கையாண்டு, தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.. இது இன்றைய நிலை...
பின் சித்தர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம் ? பேரண்ட பேராற்றலை பெற்ற காரணத்தினால், ஆற்றல் மிக்கவர்களாய், எதையும் சாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்..
பொருள் உதவிக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை..
யாருக்காகவும் தன் இயல் நடை உடை பாவனைகளை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...
ஆற்றல் மிக்கவர்களாதலால் அன்பு என்ற மகா சக்தி உடையவர்களாதலால் உலக குடும்ப தொடர்புகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும் அவநிலை அவர்களுக்கு இல்லை..
உலகம் எத்தனை வஞ்சனைகள் செய்தாலும், எத்தனை தீங்குகள் செய்தாலும், தாய் உள்ளத்தோடு பொறுத்துக் கொண்டு, வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும், பாராபட்சமின்றி, வேண்டிய நேரத்தில் உதவக் கூடியவர்கள்..
இவர்கள் தன்னை தன் செயல்களை மறைத்துக் கொண்டு உலகிற்கு பலன் தரக்கூடியவர்கள்..
அரசாங்க பணத்தையே அள்ளி அள்ளி கொடுத்து தான் கொடுத்ததாக காட்டிக் கொள்ளும் விளம்பரதாரர்கள் அல்ல..
அன்பே உருவான இவர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மிக மிக எளிமையானவர்கள்...
அதனால் தான் அப்படி இன்றும் வாழும் இவர்களை அடையாளம் காண முடியாமல், விளம்பர புகழ்ச்சி உலகில் சிக்கி கொண்ட மனிதன் தவிக்கிறான்...
உண்மையான சித்தர் பண்புகளை அறிந்து கொண்ட இன்றைய எந்த மனிதனும், சித்தராக விரும்பமாட்டான்..
காரணம் எங்கும் எதிலும் ஆதாயம் தேடும் நிலையிலேயே மனிதன் உள்ளதால் சத்திய சித்தராக விரும்புவதே இல்லை..
ஆனால் சத்திய சித்தர் பண்புகளே அந்த சித்தர்க்கு பிரபஞ்சம் பேரண்டம் தன் பேராற்றலை வழங்கும் என்ற இரகசியத்தை மனிதன் அறிவதில்லை..
அதனால் தான் அன்பின் ஆற்றலே எழுந்த மனிதன் மட்டுமே சித்தராக முடியும் என்ற பெரும் பதிவினை மனதில் கொண்டு, அன்பே சிவம் என்ற சத்திய வார்த்தையில் சிவமாகி நின்ற சத்திய சித்தர் வழிமுறைகளை ஆராய்ந்து சித்தராக முனைவோம்..
தூலதேகத்திலும் சித்தராக இருப்பவரே சூட்சும தேகத்திலும் இருக்கும் வல்லமையை, பேரண்ட பேரறிவின் துணையால் பெற்ற காரணத்தினால், கண்டம் விட்டு கண்டம் நகரும் ஆற்றலும் உடையவராக இருப்பார்...
அவர் ஒருவரே வேண்டிய நேரத்தில் துணையாய் வந்து நிற்பார்..
முதலையிடம் சிக்கிய யானை ஆதி மூலமே என்று அலறிய அக்கணமே வந்து உதவிய இறைவனை போன்று உதவும் வல்லமை உடையவராகவும் இருப்பார்..
வெறும் காட்சிகளை மட்டும் அளித்து காணாமல் போகும் மாயா தோற்றங்கள் கொண்ட சித்தரை போல் இல்லாமல், சத்திய சித்தராய் தேகம் உருவிலும், கண்டம் விட்டு கண்டம் இயங்கக் கூடிய சூட்சும சக்தியிலும் இருப்பவரே உண்மை சித்தர் ஆவார்..
இத்தகைய சித்தர் ஆகும் உளவுகள் உலகிற்கு நன்மை தரும் என்பதை மறக்காமல் இனி வரும் பகுதிகளை உற்று கவனிப்போமாக...
முதலில் கண்ட சித்தர் பிம்பங்கள் அனைத்தும் தனி பட்ட மனிதனின் மாயா மன தோற்றங்கள்.. இவைகளை முதன்முதலில் கண்டு ஏமாந்த மனிதன் இன்று வரை ஏமாந்து கொண்டே இருக்கிறான்..
கண்டேன் கண்டேன் என பரவச புலம்பலை தவிர வேறு ஒரு பலனை பெற இயலாதவனாய் இருக்கிறான்...
இவைகள் எல்லாம் நெருப்பு என்ற பூதத்திலிருந்து பிரிந்து வந்த வெளிச்சம் என்ற கழிவால் ஆனது...
ஆனால் நெருப்பு என்ற பூதத்தை முறையாக பயன் படுத்தி கனல் என்ற உயிர் ஆற்றலை பெறும் போது மட்டுமே சத்திய சித்தர் உருவாகிறார்.. அதற்கு சிவ கலப்பே உகந்த வழி..
சிவ கலப்பு என்பது ஒரு மதத்தை சார்ந்த சொல் அல்ல... அது ஒரு பயிற்சி..
புத்தி அறிவும் இணைந்து செயலாற்றும் உன்னத பயிற்சி.. இனி வரும் பகுதிகளில் அதில் கவனம் செலுத்தி காண்போமாக....
அகத்தியர், போகர், வள்ளலார், திருமூலர் சிவ வாக்கியர் அருணகிரி நாதர் போன்ற மகான்களை நாம் சித்தர்களாக போற்றி வணங்குகிறோம்...
இப்போது நாம் அவர்களை மேலே குறிப்பிட்ட சித்தர் கருத்தோடு பொருத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு, அவர்களை பற்றி தெளிவான கருத்தினை பின்னால் பார்ப்போமாக...
புற்றுநோயின் எதிரி பப்பாளி...
எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி.
இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.
வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.
மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று.
இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன.
இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.
புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது...
அமானுஷ்யம் : 2900 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபரேஷன்...
முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பது தான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை.
கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்து போனார்.
அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டு பிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம்.
ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.
திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆச்சர்யங்கள் விரியும்...
இது தான் திராவிட கலாச்சாரம்...
தலைவன் எவ்வழியே தொண்டர்கள் அவ்வழி என்பது சரிதான் போல...
1) வளர்த்த மகளையே மணந்து கொள்பவன் பெரியார்.
2) அடுத்தவன் மனைவியோடு கள்ள உறவு கொள்பவன் பேரறிஞர்.
3) அடுத்தவன்(செந்தாமரை) மனைவியை ஆட்டையப் போடுறவன் கலைஞர்.
4) சொந்த மகளின் வகுப்புத் தோழியை கற்பமாக்கி மணந்து கொள்பவன் பேராசிரியர்.
இவர்கள்தான் பெருமைக்குரிய திராவிடத் தலைவர்கள். இவர்களுக்காக உழைப்பவர்கள்...
வள்ளுவர் கோட்டம்...
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும்.
இந்நினைவகம், சென்னையில் 1976 ஏப்ரல் 15 ஆம் தேதி அமைக்கப்பட்டது..
இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும்.
இதன் அடிப்பகுதி 25 x 25 அடி அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது.
7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன.
கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை.
நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.
இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.
எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது.
இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன.
இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும்.
இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.
அரங்கம்..
220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது.
இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன.
இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.
அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ்வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம்.
இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்க முடியும்...
கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்...
செம்மொழி ஆய்வரங்கத்தில் ஜுங் நம் கிம் எனும் கொரிய ஆராய்ச்சியாளர், கொரிய மொழியில் பயன்பட்டு வரும் 500 தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து 'கொரிய மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்' என்ற தலைப்பில் கட்டுரையாக சமர்பித்திருக்கிறார்.
கொரிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை கண்டறிந்தது குறித்து கூறியதாவது:-
கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக பணியாற்றி வரும் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோ நகரில் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தேன்.
அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு கொரிய மொழி போல இருப்பதைக் கேட்டு வியந்தேன்.
அவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.
அப்போதுதான் இரு மொழி வார்த்தைகளுகிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தேன்.
அதை தொடர்ந்து தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தேன்.
மேலும், இரு மொழி வார்த்தைகளுக்குமிடையே உள்ள உச்சரிப்பு ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.
அப்போது கொரிய மொழியில் சுமார் 500 தமிழ் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்தேன்.
ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தத்தை உடையவையாக அந்த வார்த்தைகள் இருந்தன.
அப்பாவை 'அபா' என்றும் வணக்கம் என்பதை 'வணக்காம்தா' என்று பாம்பு என்பதை 'பாயெம்' என்றும் சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும் ஏன் என்பதற்கு 'வேன்' என்றும் மனைவி என்பதை 'மனுரா' என்றும் கொரிய மொழியில் அழைக்கின்றனர்.
உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என கூறுகின்றனர்.
இதுபோல, உடலியல் செய்கைகளும் இரு மொழிகளுக்கிடையே ஒற்றுமையாக உள்ளன.
குழந்தைகளின் தலையை ஆட்டியபடி 'தோரி தோரி' என கூறுவதும் கைகளை தட்டிக் கொண்டு விளையாடுவதும் 'சா சா க்குங்' என குழந்தைகளை கொஞ்சுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
கொஞ்சுதல் என்ற வார்த்தை கூட 'கொஞ்சு' என்றே கொரிய மொழியில் உள்ளது.
வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால், மாவிலைத் தோரணத்தால் அலங்காரம் செய்வது தமிழக பண்பாடு.
நோய் கிருமிகளை அண்டாமல் தடுக்கும் சக்தியாக மாவிலை கருதப்படுகிறது.
இதுபோல, கொரியாவில் ஆண் குழந்தை பிறந்தால் சிவப்பு மிளகாய் தோரணமும், பெண் குழந்தை பிறந்தால் விறகு கரி தோரணமும் தொங்கவிடுவது வழக்கம். கெட்ட ஆவிகளை தடுக்கும் சக்தியாக அவை கருதப்படுகின்றன.
கிருஸ்து பிறப்பதற்கு முன்னால், ரோமாபுரி பேரரசு மற்றும் தெற்கு சீனாவுக்கு தமிழர்கள் வந்திருக்க கூடும்.
ஏனெனில், தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற பகுதிகள் அப்போதைய வர்த்தக மையங்களாக விளங்கின.
மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாலமாகவும் அவை விளங்கின.
எனவே, கிழக்கு மார்க்கமாக தெற்கு சீனா, கொரிய தீபகற்பம், ஜப்பானிய தீவுகள் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வந்துள்ளனர்.
கி.பி.முதலாம் நூற்றாண்டு வரையிலும் கொரியாவுக்கு திராவிட இனத்துக்கும் (குறிப்பாக தமிழர்கள்) இடையே தொடர்பு இருந்துள்ளது.
வெப்பமான சூழ்நிலை காரணமாக, வெள்ளை நிற ஆடை அணிவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், குளிர் சூழ்நிலை இருந்த போதிலும் கொரிய மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
இவ்வாறு ஜூங் நம் கிம் தெரிவித்துள்ளார்...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
நாகர்கள் என்பவர்கள் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.
நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் குகிள்கான் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை
ஆரம்பத்தில் இருந்தது பார்த்தோம். இந்த குகிள்கான் யாரென்றும் கூறியிருந்தேன்.
மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது ஊர்வன வேற்றுகிரக மற்றோரு இனத்தின் திரிபாக இருக்கலாம்.
மேலும் இந்திய வேதங்கள் மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது நாகர்கள் என்ற இனம், ஊர்வன வேற்றுகிரக உயிரினங்களின் இரத்த கலப்பினங்களா கூட இருக்கலாம். நாகர்கள் எனப்படும் இந்த இனங்கள் இந்திய பெருங்கடலில் கடல் அடியில் மூழ்கியுள்ள ஒரு கண்டத்தில் வாழ்ந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. அவைதான் நாகலோகம் என்று கூட இந்திய நூல்கள் கூறிப்படுகிறது.
இந்திய வழக்கிலுள்ள "சர்பா" என்ற வார்த்தை வேற்றுகிரக ஊர்வன இனத்தை தான் குறிப்பிடுகின்றன. இந்தியாவின் சைட்டோரியஸ் என்பது பாம்பு போன்ற மூக்கு மற்றும் மூங்கில் போன்ற கால்கள் உடைய ஊர்வன மனிதர்களில் ஒரு பழங்குடிகளே..
காலபயணம்...
ஒரு கணக்கில் முதல் எண் எழுதப்படுகிறது 1 என்று தற்பொழுது எந்த யூகமும் இல்லை.
அடுத்து அந்த எண்ணுக்கு அருகில் கூட்டல் குறி போடப்படுகிறது 1+ என்று
தற்பொழுது யூகம் கிடைக்கிறது,
அடுத்து வரும் எண்ணை பொறுத்து விடை கிடைக்கும் என,
அடுத்து 1+2= என வருகிறது
தற்பொழுது எளிதாக விடையை கணிக்கலாம் 1+2=3 என.
கடந்தகாலம் நினைவுகளாகவும் எதிர்காலம் கற்பனைகளாகவும் மட்டுமே இருக்கும் இதில் காலப்பயணம் என்று எதுவும் இல்லை, சுழற்சியானது சில நிலைகளை கடந்த பிறகு மேற்குறிப்பிட்டது போல் எதிர்காலம் கணிப்புக்குள்ளாகிறது...
Subscribe to:
Posts (Atom)