20/03/2018

வீட்டின் அருகில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை...


ராமநாதபுரம் கோட்டைமேடு, கோழிக்கூட்டு தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜன். இவரது மனைவி சண்முகப்பிரியா (40). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தன் வீட்டுக்கு அடுத்துள்ள காலி இடத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இந்து பொந்துனு பொங்கிட்டு இருக்கிற பாஜக மாட்டுமூலை பக்தர்கள் பார்வைக்கு...


பழைய பத்திரங்களில் சிவமதம்-வைணவமதம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது....

குறிப்பு... இந்த பாத்திரத்தை பதிவிட்டவர் ஒரு பிராமணர்...

இந்து என்பது பிராமணர்களை மட்டுமே குறிக்கும் - உண்மையை சொல்லும் பாஜக...


எங்கயோ கலப்பினத்தில் பிறந்து... இங்கு பிழைக்க வந்த வேசி மகனுங்கள்.. மத வியாபரம் செய்கிறார்கள்.. இவர்களுக்கு விரைவில் தக்க பாடம் புகட்ட வேண்டும்...

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர்.. சசிகலாவின் கணவர்.. ம. நடராசன் காலமானார்...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை..

1965 மொழிப் போர் தலைவர்களில் ஒருவரும் 'புதிய பார்வை' ஆசிரியருமான திரு. ம. நடராசன் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த உலகத்தில் ஒப்புமை காட்ட முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போரின் மாணவத் தலைவர்களில் திரு. நடராசனும் ஒருவர்.

நான் அப்போது திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தேன். எங்கள் பள்ளியின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராக நான் இருந்தேன்.

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடந்த மாணவர் பேரணிகளில் ஒன்றாக, அன்று தஞ்சை நகரில் மாபெரும் மாணவர் பேரணி நடந்தது. அப்பேரணி ஏற்பாட்டாளர்களில் நடராசன் ஒருவர்! நான் அந்த பேரணியில் கலந்து கொண்டேன்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ. ( ஏ.வி.சி. ) கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவர் சாரங்கபாணி, இந்தித் திணிப்பை எதிர்த்து கல்லூரி வாயிலில் தீக்குளித்து இறந்தார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தவும் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யவும் தஞ்சை திலகர் திடலில் மாபெரும் மாணவர் கூட்டம் நடந்தது.

சாரங்கபாணி குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்வதற்கு திருக்காட்டுப்பள்ளி மாணவர்கள் திரட்டிய ஒரு சிறு தொகையை நான் கொண்டு வந்து திரு. நடராசன் அவர்களிடம் கொடுத்தேன். அப்போது அவர் பச்சை மையில் எழுதி கையெழுத்துப் போட்டு அதற்கான ரசீதை என்னிடம் கொடுத்தார்.

திரு. நடராசன் அவர்கள் பல தமிழ்ப் பணிகள் ஆற்றினார். அவருடைய மிகப்பெரும் தமிழினப் பணியாக - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைக் குறிப்பிடலாம்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நடத்தியது. அதில் உயிரிழந்த ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைக் களத்தில் போராடி ஈகியரான விடுதலைப்புலிகள் ஆகியோர்க்கான மிகச்சிறந்த நினைவகம் - தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் பெரு முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் வந்து பார்க்கவும் வணங்கவுமான தமிழர் அடையாளச் சின்னமாய் விளங்குகிறது.

இந்த நினைவகத்தின் அடித்தளமாக திரு. ம. நடராசன் அவர்கள் இருக்கிறார்கள். அவர் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில்தான் நினைவகம் அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி அங்குள்ள ஒவ்வொரு கட்டுமானத்திலும் ம. நடராசன் பங்களிப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கல் நாளில் தஞ்சையில் 3 நாள் தொடர்ந்து தமிழர் பண்பாட்டு விழா நடத்தி வந்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னும் நன்கு இயங்கி வந்த நடராசன் அவர்கள், திடிரென்று நோய்வாய்ப்பட்டு காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஐயா நடராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்...

பாஜக இந்துத்வா மதவாத கும்பலின் ரதயாத்திரையை எதிர்த்து மாபெரும் மறியல் போராட்டத்தை ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது...


இன்று உலக குருவிகள் தினம்...


வெயில் காலங்களில் நாம் அதிகப் படியான பழச்சாறுகளையும், இளநீர் போன்றவற்றையும் அதிகப்படியாக சேர்த்துக் கொள்கிறோம் இருந்தும் பல நேரங்களில் வெயிலின் தாக்கத்தை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...

மனிதர்களாலேயே வெயிலை சமாளிக்க முடியாத சூழ்நிலையில், பாவம் பறவைகள் என்ன செய்யும்?

நாமும் வீட்டில் சிறு குடில் அமைத்து பறவைகளுக்கு உணவளிப்போம் என்ற முயற்சியில் ஈடுபடுவோம்...

ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும்...


http://www.thehindu.com/sci-tech/health/record-417-million-award-in-lawsuit-linking-johnson-johnson-baby-powder-to-cancer/article19544646.ece

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...


சிறு வயதிலிருந்தே நமக்கு நினைவு வைத்துக் கொள்ள சொல்லித் தருகிறார்கள். படிக்கும் பாடமாகட்டும், மற்ற விஷயங்கள் ஆகட்டும் அதிகமாய் நினைவு வைத்துக் கொள்வது எல்லோராலும் பாராட்டப்படுகிறது. துரதிர்ஷடவசமாக அதையும் விட முக்கியமான கலை ஒன்றை யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. அந்தக் கலை மதிப்பெண்கள் வாங்கித் தராதென்றாலும் மன அமைதியை அடைய வைக்கும். அது தான் மறக்கும் கலை.

நம் மனதில் நாம் சேர்த்து வைத்துள்ள நினைவுகளில் எத்தனை நினைவுகள் நம் மனதில் ரணங்களாக இருக்கின்றன. எத்தனை நினைவுகள் வரப்பிரசாதமாக இருப்பதற்கு பதிலாக சாபக்கேடாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை நினைவுபடுத்தப் படும் போதும் எப்படியெல்லாம் நாம் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம். பழைய தமிழ் திரைப்பாடல் போல "நினக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று எத்தனை முறை நமக்குள்ளே கேட்டு நொந்திருக்கிறோம்? அப்படி நிறையவே நம் மனதில் சேர்த்து வைத்துள்ளோம். கடலளவு பலரும் சேர்த்து வைத்திருக்கிறோம். அலைகளாய் ஓயாமல் எழுந்து அவை நம்மை அழுத்துகின்றன. கடந்ததெல்லாம் பழங்கதை ஆகாமல் நம்மை நிகழ் காலத்திலும் வாழ விடாமல் செய்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை அடுத்தவர்கள் நமக்குச் செய்த துரோகங்களாகவும், அவர்கள் நம்மை இழிவு படுத்திய நிகழ்ச்சிகளாகவுமாக இருக்கின்றன. பிரபல ஆங்கில எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்: "நம் எதிரிகளை நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறோம். அவர்களால் நாம் நம் தூக்கத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறோம். அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றித் தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் நிஜமாகவே அவர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது". அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

நமக்கு இழைக்கப்படும் நன்மைகளை நாம் தண்ணீரில் எழுதுகிறோம். தீமைகளையோ கல்லில் செதுக்குகிறோம். நண்பர்களை விட நம் நினைவுகளை எதிரிகளே அதிகமாக ஆக்கிரமிக்கிறார்கள். இதை நாம் உணர்வதாகவே தெரிவதில்லை. ஒரு நாளில் எத்தனையோ இதமான சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கலாம். ஆனால் யாரோ ஒருவர் சொன்ன சுடுசொல் எல்லாவற்றையும் மறக்க வைத்து அன்று முழுவதும் நம் மனதில் தனி ஆவர்த்தனம் செய்கிறது. அந்த நபரைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் பின் எப்போதும் அந்த ந்¢னைவு வந்து மனம் கொதித்து அமைதி இழக்கிறோம்.

ஒன்றை நாம் என்றும் மறந்து விடலாகாது. ஒவ்வொரு மனிதனின் தவறான குணாதிசயங்களும், நடத்தைகளும் அறியாமையால் அல்லது தவறான அறிவால் தான் ஏற்படுகின்றன. வளர்த்த விதம், அமைந்த வாழ்க்கை, சூழ்நிலைகள், சேர்க்கை, விதி என்று பலதும் ஒருவன் எண்ணங்களையும், குண நலன்களையும், நடத்தைகளையும் ந்¢ர்ணயிக்கின்றன. இறைவன் தந்த ஆறாவது அறிவை முறையாகப் பயன்படுத்தினால் இவற்றின் தாக்கங்களையும் மீறி ஓருவன் பண்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் எத்தனை பேர் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்கள்? அதைப் பயன்படுத்தாதவன், அடுத்தவர்களைப் புண்படுத்துபவன், 'இன்னாத சொற்களைக்' கூறுபவன், ஏமாற்றுபவன் அவனது 'கர்மா'வின் பலனைக் கண்டிப்பாக அனுபவிப்பான். ஆகவே அவனுக்காக அனுதாபப் பட வேண்டுமேயொழிய தொடர்ந்து வெறுப்பதும், உள்ளே கொதிப்பதும் அறிவிற்கு உகந்ததல்ல.

கைகேயியின் செயலால் வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் சொல்லும் சமாதானத்தை கம்பன் அழகாகக் கூறுவான்:

"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

விதியின் செயல் என்று உணர்ந்ததால் இராமன் அமைதியடைய முடிந்தது. பதினான்கு வருட வனவாசத்திற்கு கைகேயி காரணமாகி அதன் விளைவுகளில் ஒன்றாய் சீதையை இழந்து பெரும் வேதனை அடைந்த போதும் ஒரு முறையாவது இராமன் "எல்லாம் இந்தக் கைகேயியால் வந்தது" என்று ஒரு முறை கூட மனதளவிலும் நினைத்ததாய் இராமாயணத்தில் செய்தி இல்லை.

சிலர் நம்மிடம் மிக நன்றாகப் பழகியிருப்பார்கள். ஏதோ ஒரு சிறு மனஸ்தாபம் அவர்களுடன் ஏற்பட்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்க நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. எத்தனையோ நல்லது உள்ள இடத்தில் ஓரிரு குறைகள் இருப்பது பெரிய குற்றமல்ல. நம்மிடம் குறைகள் இல்லையா? குறைகளே இல்லாத அந்த தனிப்பெரும் தன்மை இறைவனைத் தவிர யாரிடம் இருக்கிறது? திருவள்ளுவர் கூறுவார்-

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்"

இராமன் செய்தான், திருவள்ளுவர் சொன்னார் என்பதற்காக மறக்கவும் மன்னிக்கவும் கூறவில்லை. நம் நிம்மதிக்காக, மன அமைதிக்காக மன்னித்து மறப்பது உத்தமம். குறுகிய வாழ்க்கையில் நாம் சாதிக்கவும், சந்தோஷப்படவும் வேண்டுமானால் இறந்த காலம் என்ற பிணத்தை நம்முடன் கட்டிக் கொண்டு அலைவது முட்டாள்தனம். இறந்ததைப் புதையுங்கள். கட்டிக் கொண்டு காலம் முழுவதும் புலம்பாதீர்கள்.

கால்குலேட்டர் உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்னர் அதை அழித்து விட்டு பின்பு அடுத்த கணக்கு போட்டால் தான் சரியான விடை கிடைக்கும். அதைச் செய்யாமல் தொடர்ந்து கணக்கு போட்டுக் கொண்டே போனால் தவறான விடை தான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். நிகழ்காலத்தில் கவனமாக வாழுங்கள். அதை விட்டு பழைய கவலைகளில் நிகழ்காலத்தை கோட்டை விட்டால் இந்த நிகழ்காலத்திற்கும் சேர்த்து எதிர்காலத்தில் வருந்த வேண்டி இருக்கும்.

சிலர் மறக்க என்று மதுவையும் போதைப் பழக்கத்தையும் நாடுகிறார்கள். இதை விட முட்டாள்தனம் வேறிருக்க முடியாது. தற்காலிகமாக நிம்மதி கிடைக்கிற மாதிரி தோன்றினாலும், இது நம்மை பரிபூரணமாக அழித்து விடும். கவலையை மறக்க போதையை நாடுபவன் பின்பு போதையை மறக்க படாத பாடு பட நேரிடும்.

ரமண மகரிஷியும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சரியான பூரணமான சிந்தனையால் (விசாரம்), இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள். அரைகுறை ஆராய்ச்சியும் அலசலும் தான் சிலவற்றை மனதிலிருந்து முழுவதுமாகக் களையத் தடையாக இருக்கின்றன. முழுவதுமாய் சிந்தித்து உண்மையை உணர முடிந்தால், அந்த உண்மையே ஒருவனை விடுவிக்கும் என்கிறார்கள். அரவிந்தாஸ்ரமத்து அன்னை இன்னொரு வழி சொல்கிறார். "தேவையற்ற மறக்கப் பட வேண்டிய ஒரு எண்ணம் அடிக்கடி உங்களை தொந்தரவு செய்யுமானால் அதை முழுமையாக கவனமாக உணர்வு பூர்வமாக ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின்பு 'சரி மனமே நீ சொல்வதெல்லாம் சொல்லியாகி விட்டது. உன் வேலை முடிந்தது' என எண்ணி அக்காகிதத்தை கவனத்துடனும், உறுதியுடனும் எடுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போடுங்கள். அந்த எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள்".

தியானமும், பிரார்த்தனையும் பல வேதனைகளை மறக்க மருந்தாக இருக்கின்றன. எல்லா பாரத்தையும் அந்த இறைவனிடம் இறக்கி வையுங்கள். காலமும், கடவுள் அருளும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மறக்கும் பக்குவத்தை அளிக்க உதவும்.

வாழ்வில் நல்ல குறிக்கோள் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தால், அதை அடைய வேண்டும் என்ற உள்ளே ஒரு அக்னி இருந்தால் எல்லாவற்றையும் மறந்து உற்சாகத்தோடு வாழ்க்கையைத் தொடர முடியும்.

குறைகளும் நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிது படுத்துகிறோமோ அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன. வாழ்வது ஒரு முறை. அது குறைகளின் கணக்கெடுப்பாக இருக்க வேண்டாம். கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம். நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்...

இயற்கை அழிவது மனிதனால் தான்...


உறவு முறைகளை அழகாக வகுத்து சொன்னவன் தமிழன்...


மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.

இந்த படம் அதற்கு ஒரு சான்று...

தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் அங்கிள் என்றும் ஆன்டி என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர்...

போலியான கல்வி தகுதியை கூறி ஊரை ஏமாற்றும் பாஜக மோடி கையில் 1லட்ச ரூபாய் Mont Blanc பேனா..


உலக பல்கலை கழகங்களில் படித்த மேதை மன்மோகன் சிங் பாக்கெட்டில் வெறும்  பத்து ரூபாய் ரெனால்ட்ஸ் பேனா..

எப்படி எல்லாம் ஊர ஏமாத்த வேண்டி இருக்கு..

1.Manmohan singh using Reynolds 10 rs pen..

2.Gareeb chaiwala PM using 1.3lakh Mont blanc...

கிரிக்கெட்டை பேசவிட்டு நாட்டில் நடப்பதை அனைத்தும் மறக்கடித்து விட்டான்...


காவிரி நீர், அதிமுக பாராளுமன்றத்தில் நாடகமாடுகின்றது - சமாஜ்வாதி எம்பி ராம்கோபல் பரபரப்பு குற்றச்சாட்டு...


மத்திய அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானத்தை கொண்டுவராமல் தடுக்கவே அதிமுக எம்பிக்கள் அவையை நடத்தவிடாமல் செய்கின்றனர்...

மக்கள் எனும் ஜனநாயக கோமாளிகள்...


உப்பின் மகத்துவம்...


கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது...

அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின.

உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை.

சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது.

உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம்.

உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது.

மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது.

இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம்.

அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, "ஹைபர்டோனிக்' கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம்.

இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன...

பாஜக மோடி vs ஆம் ஆத்மி அரவிந்த் கெஜரிவால் கலாட்டா...


ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்...


இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் மன்னன் எல்லாளன்கூட அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டே இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று வரலாறு கூறுகிறது.

பௌத்தம் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்திலும் கூட அனுராதபுரத்தின் சிறப்பே ஓங்கி இருந்தது. இந்தியாவில் இருந்து புத்த மதத்தின் சின்னமாக கொண்டுவரப்பட்ட அரசமரக் கிளை ஒன்றுகூட அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றில் தான் நடப்பட்டு இன்றும் அதன் கிளைகள் அழியாமல் உள்ளன.

ஆயினும் இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்ற வரலாற்றை முதன் முதலாக மாற்றிய பெருமை சோழர்களுக்கே உரியது.. கி.பி.895 இல் ராசராச சோழனின் மகனாகிய ராசேந்திரச் சோழன் என்பவன் இலங்கைமீது படை எடுத்துவந்து (ஆதாரம் 'சோழர் வரலாறு';by .. நீலகண்ட சாஸ்திரி) அனுராதபுரத்தை கைப்பற்றி தலை நகரக் கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, வெற்றிவாகை சூடினான்.

சைவ சமயத்தில் மிகவும் பற்றுள்ள ராசராச சோழனும் அவனது பரம்பரையும் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒருபோதும் விரும்பவில்லை.. ஆயினும் மனித நேயமுள்ள சோழர்கள் பௌத்தத்தை அழிக்க நினைத்திருந்தால் அனுராத புரத்தில் இருந்த புத்த சின்னங்கள் எல்லாவற்றையும் அழித்திருக்கலாம்.. ஆனால் அப்படிச் செய்யாமல் அரச கட்டிடங்களை மட்டுமே தரைமட்டமாக்கினான்.

ராசேந்திரச் சோழன், இலங்கையின் தலைநகரம் என்னும் பெருமையை அனுராத புரத்தில் இருந்து மாற்றி கிழக்கே நகர்ந்து சென்று பொலநறுவையை இலங்கையின் தலை நகரமாக மாற்றி கோட்டை கொத்தளங்களை கட்டினான் ராசேந்திரச் சோழன்.

நீண்ட காலமாக இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்று இருந்த வரலாற்றை மாற்றிய பெருமை இந்தச் சோழ இளவரசனுக்கு உரியதாகும். அதுமட்டுமன்றி. பொலநறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலையும் கட்டுவித்து வழிபட்டான் இப்பெரு மன்னன்.

இன்றும் அந்தச் சிவன் கோயில் அவன் நினைவாக அங்கே உள்ளது.கோயிலின் பட்டயங்களில் ராசேந்திரச் சோழனின் இலங்கைப் படை எடுப்புபற்றி பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பொல நறுவையை சுற்றி பல குளங்களைக் கட்டுவித்து மக்களை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுத்தி வந்தான் இம்மன்னன்.

ராசேந்திரச் சோழன் இலங்கைமீது படை எடுத்து வரும்போது அவனது படையினரும் யானைப்படை, குதிரைப்படை போன்றவையும் கப்பல்கள் மூலம் கொண்டு வந்து தரை இறக்கப்பட்டு பாளையம் அமைத்து இருந்த இடம், வடபகுதியில் உள்ள வடமராட்சி கிழக்கின் செம்பியன் பற்று ஆகும்.சோழருக்கு இன்னுமொரு பெயர் செம்பியன் என்பது ஆகும்.

எனவே சோழரின் வரலாற்று பிரதேசமாகவே செம்பியன்பற்று என்னும்பெயர் அன்றில் இருந்து வழங்கி வருகிறது.. செம்பியன் பற்றுப் பகுதியில் பின்னாளில் சிறீலங்கா படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்ப மக்கள் நிலத்தை தோண்டிய போது பல இடங்களில் சோழர்களின் காசுகளும் சிவன் சிலைகளும் வேறு சில வரலாற்றுச் சின்னங்களும் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டன.

செம்பியன் பற்றில் மட்டுமன்றி அதை அண்மிய ஊரான நாகர்கோயிலிலும் இவை பல இடங்களில் கண்டு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு சோழர்களின் வரலாற்றுச் சுவடுகள் ஈழத்தில் நிறைய உண்டு. அவையெல்லாம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஆகும்...

மராட்டிய ரஜினி.. வேங்கை மவனின் ராமாபுரத்து பூசை - மலரும் நினைவுகள்...



தமிழன் உருப்படாததற்கு காரண‌ங்கள்...


இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்...

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் செ(ஜெ)ன்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். யே(ஜெ)ர்மனியில் கூட நியோ நாசி(ஜி)க்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்...

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாகத்தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல...

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல் கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்....

இந்தியாவின் நீதிமன்றமும் நீதியும்.. அதிகாரவர்கத்தின் கைகூலிகளே...


சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூர் சிறை நிர்வாகம் மறுப்பு...


சசிகலா கணவர் நடராஜன் நேற்று  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை பார்க்க சசிகலா பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டிருந்தார், அதை சிறை நிர்வாகம் ஏற்க மறுத்தது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை: சிவசேனா அறிவிப்பு...


மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இது தொடர்பாக நோட்டீசும் அளித்தது.

ஆனால், அன்று சபையில் காவிரி வேளாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களின் தலைகளை கணக்கிட முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபையை 19-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இதனால் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்தது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வருகிறது. இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் மக்களவை செயலரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக இன்று  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஆதரவு இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள சிவசேனா, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சிவசேனா கட்சி ஒதுங்கியிருக்கும் என்று தெரிவித்துள்ளது...

தற்போது தமிழினம் ஒடுக்கப்படுகிறது.. விழித்துக்கொள் தமிழா...


மௌனம் ஒரு மகாசக்தி...


ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.

நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை.

நான் இப்படி செய்யப் போகிறேன், நான் அப்படி சாதிக்கப் போகிறேன் என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை.

வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன். வின்ஸ்டன் சர்ச்சில் தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்கு உரியவர்களாவோமாக.

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்...

பாஜக பினாமி அதிமுக வின் ஊழல்கள்...


​36ஆம்நாள்​ ​குமரெட்டியாபுரம் மக்கள்​ ​ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்​...


இன்று ​மனிதநேய கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா அவர்கள் பங்கேற்கிறார்​...

அனைவருக்கும் கல்வியை இலவசமாக கொடுக்க முடியும்...


காடுகளை அழித்தது யார்? மிக முக்கியத்துவமான வரலாற்று ஆய்வுத் தரவுகளை முன்வைக்கிறார் தோழர் முத்து நாகு...


சுற்றுச்சூழல், காட்டுநெருப்பு (தீ), வனம் காக்கப்படவேண்டும் இது தான் இன்று முகநூல், பத்திரிக்கை, தொலைகாட்சி, தேநீர் கடைகள், பொது இடங்களில் பேச்சாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சூழல் மாற்றம் நிகழ்ந்து விட்டதாக உலகளவில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் காப்போம் என பேசுபவர்கள் கவனிக்க மறுப்பதை நாம் பார்த்தாக வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

வனம் என்றால் என்ன ?

பாறை , புல் மொட்டை பாறை சோங்கான அடந்த மரம், புல் பூண்டு முளைக்காத பூமி இவைகளெல்லாம் சேர்ந்ததே வனம். இந்த வனத்தை மூன்று அடுக்கலாக மலைவாழ் மக்கள் பிரிக்கிறார்கள். அ. கருங்காடு ஆ. ஒரக்காடு இ. தரைக்காடு . இதை 1893 காலங்களில் பிரிட்டீஷ் ஆட்சியில் core zone, territorial zone, bufferzone என பிரித்தார்கள்.

கருங்காடு ; இங்குதான் விலங்குகள் தங்களது இனப்பெருக்கத்தை துவக்கும்.இனப்பெருக்க காலத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தும் என்பதால் இந்தக் காட்டுக்குள் மலைவாழ் மக்கள் செல்ல மாட்டார்கள். அதே போல் வனத்துறையினரும் அங்கு செல்ல மாட்டார்கள். அந்த காட்டினை அப்படியே மெயண்டன் செய்வார்கள்.

ஒரக்காடு;  இனப்பெருக்க காலம் முடிந்த பின்பு விலங்குகள் வேட்டையாட உணவு சேகரிக்கும் இடம் ஓரக்காடு.

தரைக்காடு ; இனப்பெருக்கத்திற்கு தகுதியை இழந்த விலங்குகளை மற்ற விலங்குகள் விரட்டி அடிக்கும் அவைகள் தங்கும் இடமே தரைக்காடு.

இந்த தரைக்காடு மலையின் உயரத்தில் கால் பங்கு இருக்க வேண்டும் என்பதை இந்திய வனச்சட்டம் மாரலாக வழியுறுத்துகிறது. ஆனால் அவை நடைபடைமுறைபடுத்த இயலாது. தனிமனிதர்கள், குழுக்கள் வனத்தை அழித்தார்கள் அழிக்கிறார்கள் என்பதே தற்போதுள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் ? வைக்கும் வாதம் இவர்களால் வனத்தை அழிக்க முடியுமா ? அழித்தார்களா?.

வவனங்கள் எப்போது அழியத் துவங்கியது.

ராசராசசோழன் அவனை அடுத்து வந்த ராசேந்திரசோழன் காலத்தில் காடு அழித்து களனியாக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகளை ஔவை. துரைச்சாமிபிள்ளையும், பன்மொழி புலவர் அப்பாத்துரையார் சோழ வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இடங்கள் எல்லாம் காவிரி படுகை ஓரமே. பாண்டியர் வரலாற்றில் காடுகளை அழித்த வரலாறு மிக சொற்பமாகவே இருக்கிறது. பாண்டிய சோழ ஆட்சிக்கு அடுத்து வந்த இசுலாமிய ஆட்சியில் ஏற்றுமதி தொடர்பான வரலாற்று குறிப்புகள் உள்ளதே தவிர காடுகள் அழிப்பு இல்லை. இவர்களை அடுத்து தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் கருநாடக, ஆந்திர பகுதியிலிருந்து வந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கவும், 1680 ல் துவங்கிய கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளவும் மலைகளில் ஓரக்காடுகள் வரை அழித்து பண்ணைகளாக்கினார்கள். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும்பகுதி நிலங்கள் தெழுங்கு பேசும் செட்டியார்,நாயக்கர் மக்களும், கண்டம் பேசும் தேவாங்கு செட்டியார் ஒக்கலிய கவுண்டர் குல மக்களுக்கும் இன்றும் சொந்தமாக இருப்பதை அறியலாம். நாயக்கர் ஆட்சியில் பல்லாயிர்கணக்கான வனங்கள் விளைநிலமாக்கப்பட்டதால் காடுகளின் பரப்பளவு குறுகியது. நாயக்கர் ஆட்சிக்கு முன்பு காடுகளை அழிக்காமல் மிளகு மட்டுமே வேளாண்மை செய்யப்பட்டு ஏற்றுமதியானதை இலக்கியம் வரலாறும் சான்று அளிக்கிறது. நாயக்கர் ஆட்சியில் இவை மாற்றம் செய்யப்பட்டு நேரடியாக உண்ணும் வேளாண்மை துவங்கப்பட்டுள்ளதை வரலாறுகள் மெய்பிக்கிறது.

நாயக்கர் ஆட்சியில் தரைக்காடு ஓரக்காடு அழிக்கப்பட்டது. ஆட்சியை பிடித்த பிரிட்டீஷார் காலத்தில் 1890 காலங்களில் பெருத்த பஞ்சம் பல்லாண்டுகள் நீடித்தது இதனை எதிர்கொள்ள அவர்கள்  நாயக்கர் ஆட்சியை போல கருங்காடுகளை அழித்து டாடா, ஏ.வி தாமஸ் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 40லட்சம் ஹெக்டர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு தேயிலை காப்பி பயிரிட குத்தகைக்கு விட்டுள்ளார்கள். இதே போல் நிறுவனங்கள் அல்லாத நபர்களுக்கு 99 ஆண்டுகளுக்கு வன நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது இன்று வரை தொடர்கிறது. ஆக வனங்கள் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களின் நிலை அறிந்தே வனங்களை அழித்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. இந்த வன அழிவில் எத்தனை ஆயிரம் மரங்கள் அழிக்கப்பட்டது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தனி மனிதனாலும் வனத்தை ஒட்டியுள்ள மனித குழுக்கள் வனத்தில் ஒரு புள்ளியைத்தான் அழிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சுதந்தர ? இந்தியாவில்  திருமதி. இந்திராக்காந்தி ஆட்சியில் விஸ்காஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் செயற்கை பட்டு (ரேயான்) உற்பத்தியை துவக்க ஒப்பந்தம் போட்டார்கள். இவர்கள் வனத்தை அழித்து வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ்  மரங்கள் நடவு செய்து வெட்டிக்கொள்ள 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு இடைபடுகாடுகள் திட்டம் (இண்டர் பேஸ் டிவிசன் புராஜெக்ட்) என்ற பெயரிடப்பட்டது. ஏற்கனவே நாயக்கர், பிரிட்டீஷ் ஆட்சியில் அழித்த காடுகளில் மிச்சம் மீதம் இருந்த காடுகளை இவர்கள் அழித்தார்கள். இவர்கள் இந்த மரங்களை வெட்டி சிறுமுகை ஆற்றங்கரையில் சாயம் காய்ச்சி ஆற்றில் விடப்பட்ட கழிவு நீரே நொய்யல் பாதிப்பானது. ஆனால் திருப்பூர் சாயப்பட்டரையை மட்டும் இந்த சூழல் ஆய்வாளர்கள் பெரிதாக பேசுவார்கள்.

பாதிப்பில் கடும் பாதிப்பு என்றால் விஸ்காஸ் செய்த அழிவுதான். '1972ம் ஆண்டுவாக்கில் ரேயான் செயற்கை பட்டு நூல் தயாரிக்க,தோல் பதனிடும் சாய தொழில்சாலைகளுக்கு தேவைக்காக வனத்திற்குள் வாட்டில்,பைன்,சைப்ரஸ் மரங்களை வளர்த்து வெட்டிட அனுமதி அளித்தது இந்திரா அரசு. தண்ணீர் ஓட்டம் உள்ள ஓடை ஆற்று படுகை புல்வெளிகளில் இந்த மரங்கள் நடவு செய்து வளர்த்து மரம் பெரிதானவுடன் வெட்டினார்கள். இந்த ரேயான் ஆலை இயங்கு வந்த சிறுமுகை பவானி ஆற்றை ஆலை கழிவு பாதித்துள்லது 1996ல் தமிழக அரசு ஆலைகளை மூட அரசு  உத்தரவிட்டது. இதனால் கொடைக்கானல்,நிலகிரி வனத்திற்குள் வைக்கப்பட்ட மரங்கள் வெட்டாமல் வளர்ந்து பெரிய்தானது. இந்த மரங்களில் விதைகள் காற்றில் பரவும் தன்மை கொண்டது. இதனால் வனம் முழுக்க பரவி இருந்த கொஞ்ச நஞ்ச புல்வெளிகளில் முளைத்து புல்வெளிகளை இல்லாமல் செய்து விட்டது. கொடைக்கானலில் பச்சையாக தெரிவது இந்த வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களே. இந்த மரங்கள் முளைத்துள்ல தூர் பகுதியில் புல் முளைக்காமல் இருபதையும் மற்ற மரங்கள் இருக்கும் இடங்களில் புல்வெளிகள் உள்ளதையும் சுற்றுலா செல்பவர்கள் பார்த்திருப்பீர்கள்.

கொடைக்கானல் மலையில்  மத்திய அரசு 1960 ஆண்டு எடுத்த  ஜியாலாக்சிக்கல் சர்வேயில் ' 2068 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 930 சதுர கிலோமீட்டர் புல்வெளி இருந்தது. 2000ம் மற்றும் 2014 ஆண்டுகளில் எடுத்த சர்வேயில் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக புல்வெளியின் அளவு குறைந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் வனக் கொள்கையே காரணம். இந்தப் புல்வெளிகள் நீர்சதுப்பு தன்மையை பல மாதங்கள் நிலைநிறுத்தும் தன்மை கொண்டவை. மழைக்காலம் முடிந்த பின்பும் கோடை காலத்தில் புற்கள் வேர்பகுதியில் தேக்கி பிடித்து வைத்த நீரினை கசிய செய்திடும். இதனால் கோடையிலும் ஓடைகளில் தண்ணீர் வலிந்து ஓடும். புல்வெளிகளை அழித்ததால் நீர் வரத்து ஓடைகளில் மழை காலம் முடிந்து டிசம்பர் மாத துவக்கத்திலே வறண்டு விடுகிறது. தமிழகத்தில் ஓர் ஆண்டு முழுவதிலும் அதிகப்பட்டமாக 23நாள்கள் மட்டுமே மழை பெய்திடும். இதன் அளவு சுமார் 850 மி.மீ மட்டுமே இயற்கை வழங்குகிறது. மற்ற நாள்களில் வனத்தில் உள்ள ஓடைகள் வறண்டு போகாமல் காப்பது இந்த புல்வெளிகள். புல்வெளிகள் குறைந்ததால் வனவிலங்குகள் இரை தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பிற்குள் நுழைகிறது. ரேயான் சாய நிறுவனங்களுக்காக வைத்துள்ள இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினால் தானாக புல்வெளிகள் உருவாகும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வனவிலங்குள் மட்டும் அல்ல மனிதர்களை காத்திட முடியும்.

கொடைக்கானலுக்கு அடுத்து பெரும்பரப்பளவை கொண்டுள்ள நிலகிரி என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ''உலகின் 'முதன்மையான உயிர்சூழல் மண்டலம்' என ஐநா சபை 1979ல் அறிவித்தது. 5520 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த மலையில் 29875 ஏக்கர் புல்வெளி இருந்தது. தற்போது 4700 ஏக்கராக குறைந்து விட்டது. வனத்தின் நீர்பிடிப்பை அதிகரிக்கும் புல்வெளிக்கு அடுத்துபடியாக இதே வேலையை செய்வது மூங்கில் இதுவும் புல் வகையை சேர்ந்தது. மூங்கிலினை அழித்து தேக்கு, பைன், யூக்கலிப்டஸ் மரங்களை வனதுறையினரே நடவு செய்தனர். நாற்பது வருடம் வரை உயிர்வாழும் மூங்கிலினை வெட்டினால் மட்டுமே மீண்டும் தூர் தளைக்கும். இல்லை என்றால் பூத்தவுடன் தானாக செத்துவிடும்.கோடிக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்திடும் மூங்கில் விதையில் சில விதைகள் மட்டுமே இயற்கையாக முளைக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்து வைத்திருக்கும் மலைக்குள் வாழும் பழங்குடி மக்கள் மூங்கிலை வெட்டி வெட்டி மூங்கிலை தளைத்திட செய்தனர். தற்போது வனத்துறை மூங்கில் வெட்ட தடை போட்டதுடன் புதிய வனசட்டத்தின் மூலம் பழங்குடி மக்களை வனத்தை விட்டு வெளியேற்றதால் மூங்கில்கள் பரவாமல் குறைந்து விட்டது. மூங்கில் இலைகளை யானைகளுக்கு விரும்பிய உணவு இவை கிடைக்கததால் வனத்தை விட்டு வெளியேறுகிறது. கேரள, தமிழக, கர்நாடக மாநிலங்களின் பெரும்பாலான ஆறுகள் நிலகிரி மலையிலே உற்பத்தியாகிறது.(காவிரி பிறப்பிடம்) மலைகளில் உள்ள புல்வெளிகளை அழித்தால் மலைகளில் பெய்திடும் அவ்வளவு மழை நீரும் ஒரே நாளில் அணைகளுக்கு வந்தடைகிறது. கோடை காலங்களில் நீர் வரத்து  ஓடைகள் வற்றி விடுவதால் நீர் மீன்சாரம் தடைபடுவது, குடிநீர் தட்டுப்பாடு என அடுத்தடுத்த சிக்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. நீலகிரி,கொடைக்கானல் மலைகளில் உற்பத்தியாகும் ஆறுகளை நம்பி சுமார் 18 அணைகள் உள்ளது. இதன் நீர் ஆதாரங்ளை சிதைக்கும் வேலையை தனியார் முதலாளிகளுக்காக மக்களால் தேர்வு செய்த அரசுகளே செய்துள்ளது என்பது தான் வேதனை. ஆக காடுகளை அழித்தது தனி மனிதனாலும் மனித குழுக்களாலும் இல்லை என்பதை நாம் அறிந்துணர்வோம்.

(குறிப்பு ; 1994 உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தைகை வனநிலங்களை குத்தகை காலம் முடிந்தவுடம் அவைகளை வனங்களாக்கபடவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்  999 ஆண்டுகளுக்கு தேயிலை காப்பி பயிரிட குத்தகைதாரர்கள் குறித்து நீதி மன்றம் வாய் திறக்கவில்லை. தேயிலை, காப்பி பயிட்டுள்ள பசுமை யாக காட்சிதருபவை ''பசுமை பாலை வனங்களே''. அவைகளை வனமாக்கிட அரசு அறிவித்தாலும் அவைகள் வனமாக ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதை நாம் உணர மறுக்கிறோம். ஆக சுற்றுச்சூழல் என்பது ஒரு மரத்தை வெட்டுவதால் சுற்றுச்சூழல் கெடுவதில்லை என்பதை அறியும் போது மட்டுமே சூழல் காக்க நாம் பயணத்தில் முதல் அடி வைக்கிறோம் என பொருள்)...

இந்த மாதிரி இயற்கை திட்டங்களை தமிழ்நாட்டில் மட்டும் தான் பாக்க முடியும்...


தண்ணீர் திருடர்கள்...


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள்.

இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன.

தமிழகத்தின் 17 க்கும் மேற்பட்ட இடங்களில் கோகோ கோலாவும், பெப்சியும் போட்டி போட்டு தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நெல்லை போன்ற வாய்ப்புள்ள இடங்களில் ஆற்றையே அள்ளிக் கொடுத்துள்ளது.

சென்னைக்கருகில் ஓடிக்கொண்டிருந்த பாலாறு, கொசஸ்தலை ஆறு போன்றன இன்று காணாமலே போய் விட்டன.

இந்த ஆய்வில் நாமக்கல், கோவை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போயுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வில் உள்ள வேணந்தூர் கிராமத்தில் 1500 அடி (தோராயமாக அரை கிமீ) தோண்டினால் கூட தண்ணீர் கிடைப்பதில்லையாம். அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்துக்கு லாரி லாரியாக தண்ணீரை எடுத்துக் கொடுத்துதான் இந்த நிலைமை. கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ராட்சத பம்பு செட்களை முதலாளிகள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓடிக்கொண்டிருந்த நொய்யலாற்றை சாயப்பட்டறை கழிவுகளால் நிறைத்து விட்டு, நிலத்தடி நீரையும் காலி செய்யத் துவங்கி விட்டார்கள் அம்மாவட்டங்களின் முதலாளிகள்.

நைட்ரேட் அதிகரித்ததற்கு விவசாய உரங்களின் அதிக பயன்பாடு காரணம் என்கிறார்கள்.

தற்போது பல மாவட்டங்களில் விவசாயமே நடைபெறாவிட்டாலும், பசுமைப்புரட்சி காலகட்டம் துவங்கி பல ஆண்டுகளில் செயற்கை உரங்களை தேவையில்லாத அளவுக்கு விவசாயத்தில் திட்டமிட்டு அரசு இறக்கி விட்டதன் தொடர்ச்சியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போல குடிநீரை ஏரி, குளங்களில் இருந்து அரசு எடுத்து மக்களுக்கு தர வேண்டும். ஆனால் ரியல் எஸ்டேட் போன்றவற்றை வளர்த்து விட்ட உலகமயமாக்கலால் ஏரி குளங்களை எல்லாம் பிளாட் போட்டு விட்டார்கள்.

தண்ணீர் விற்பனைதான் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதில் முக்கிய பாத்திரமாற்றுகிறது. பெரு நகரங்களில் கேன் தண்ணீர் குடிக்குமாறு மக்களை கட்டாயத்திற்குள்ளாக்க வேண்டி அரசு குடிநீர் விநியோகத்தினை விரிவடையும் நகரத்திற்கேற்ப விரிவுபடுத்தவில்லை. இருக்கும் விநியோகத்தையும் அபகரிப்பதற்கு பெக்டெல் என்ற பிரெஞ்சு முதலாளி தயாராக சென்னையில் காத்திருக்கிறான்.

திருப்பூரில் ஏற்கெனவே அது தனியார் கைக்கு போய் விட்டது.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பொருளாதார பின்னடைவில் உள்ள உலக முதலாளியம் அனைத்தையும் விற்பனைப் பொருளாக மாற்றுகிறது. தண்ணீர், காற்று என அனைத்தையும் நயமான சரக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

நாம் குடிக்கும் கின்லே, அக்வாபீனா போன்றன எல்லாம் இதுபோன்ற நிலத்தடி நீரிலிருந்து தயாரிக்கப்படுபவை தான். ஆனால் ரிவர்ஸ் ஆஸமோசிஸ் சுத்தம், ஓசோனைஸ்டு தரம் என படித்த முட்டாள்களை ஏமாற்றுகிறார்கள் முதலாளிகள். சேவைத்துறையை தனியாருக்கு தரும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்ட பிறகு நடக்கும் கல்வி தனியார்மயம், ரேசன் கடை அடைப்பு, மருத்துவமனை காப்பீட்டு திட்டம், அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் எலி பிடிக்க ஆள் போடுவது எனத் தொடரும் நிகழ்வில் தண்ணீர் தனியார்மயமும் உள்ளது.

ஆனால் உயிராதாரமான தண்ணீரை மாசுபடுத்திய பிறகு மனிதர்களால் அதனை சரி செய்ய இப்போது சாத்தியமா ? அதுவரை முதலாளிகளை சும்மா விடுவதா?

அனைத்து நோய்களுமே செயற்கையாக உருவாக்கப்படுகிறது...


ஆழ்மனதின் எண்ணம் வண்ணமாவது திண்ணம்...


பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும்.

ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப் பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம்.

அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை.

அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.

சூரியன் தன் ஈர்ப்புச் சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?

சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம் தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும்.

பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி.

இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்தி தான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம் தான் அறிவுமனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்.

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?

இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம்.

எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள் தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வது தான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது.

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்...

பாஜக மோடி தன் கார்பரேட் நண்பர்களின் நிறுவன கடன் 2,41,911 கோடியை வராக் கடனில் தள்ளுபடி செய்து சாதனை...


பாஜக பினாமி அதிமுக இனைந்து நடத்தும் திருட்டு அரசியல்...


பொங்கலுக்கு பச்சரிசி இறக்குமதி,
தஞ்சைக்கு புழுங்கரிசி இறக்குமதி,
பருப்பு மைசூரில் இருந்து இறக்குமதி,
ரேசன் அரிசி  10கிலோ, 5கிலோவாக குறைப்பு.

ஆனாலும் இதை நம்பனும் இல்லனா நீங்க  ஆன்டி இந்தியன்...

திருட்டு திராடமும் தமிழ் பெண்கள் தாலி அறுப்பும் நாடகமும் - தயாரிப்பு திக கீ.வீரமணி...


வடுகயிஸ்டுகள் (அதாம்பா கம்யூனிஸ்டுகள்) ஆரம்ப காலம் தொட்டே தமிழருக்கு விரோதமாக நடந்து வருகின்றனர்...


இதுக்கு கம்யூனிஸ்டுகள் கட்சிகளில் வடுக ஆதிக்கம் அதிகமிருப்பதே காரணம்.

இதை தணிகை மீட்ட தளபதி விநாயகம் 1953லேயே சுட்டிக்காட்டினார். நாம் விழிப்புடன் இருக்காமல் விட்டதால் இன்று கம்யூனிசம் என்ற பெயரில் வடுகர்கள் ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.

கிருஷ்ணா ஆற்றின் கிளையாறான ஆரணி ஆற்றின் படுகைகள் தமிழகத்தில்  1953லேயே  அதிகமிருந்தன. அது தமிழகத்துக்கு கிடைக்க பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தைப் பிரித்திருதால் அந்த ஆற்றுப்பகுதிகள் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும்.

ஆனால் ஆந்திர கம்யூனிஸ்டுகளும் தமிழகக் கம்யூனிஸ்டுகளும் பிர்க்காவின் அடிப்படைப் படிப் பிரிக்காமல் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும் என அன்றைய இயல்புக்கு மீறி செயல்பட்டதாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.

ஆரணி ஆற்றுப் பாசன்த்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. இப்போது கிராமங்களைப் பிரித்த பிறகு ஆரணியாறு அணை இருக்கக் கூடிய இடம் ஆந்திராவிறகுப் போய் விட்டது.

இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்டுகிறது.

நீர்ப்பாசன வசதிகளைஅப் பிரித்து வைக்கக்கூடாது என்பதை மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக் கொண்டு இருக்கின்றன.

ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களில் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன் தான் இணைத்து இருக்க வேண்டும்.

கிராமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால் தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய் விட்டது.

பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருதால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும்.

சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்க்காக்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும்.

பிர்க்காவை அடிப்படையாக வைத்து பிரிவினை செய்யக்கூடாது என ஆந்திரக் கம்யூனிஸ்டுகளும், கிளர்ச்சி செய்தார்கள். அதை மத்திய காங்கிரசு ஆட்சி ஏற்ருக்கொண்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்ப்பட்டது.

—கே. விநாயகம், சட்டமன்றம் 10-3-53...

பெற்றோர்களின் கவனத்திற்கு...


ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை...


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.

ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடை பிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது..

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம்தான். அவ்வளவு தானா? அதுவும் இல்லை.

இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று.. தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே.. ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்..

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது.. இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது...

கார்பரேட் பொருட்களில் ஏதாவது ஒன்றை நிருபித்து காட்ட சொல்...


ஹிப்னாடிசம் - மனோவசியம்...


நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடுதான் பிறப்பு எடுத்துள்ளோம்.

எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.

கடவுளின் மறுவடிவம் தான் நாம். அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.

நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.

ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்...

பயணத்தில் காத்துக் கொண்டு இருக்கிறேன்...


தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக...


திராவிடக்கொள்கை ஓர் வரலாற்று விளக்கம். அதனுடைய எதிர்மறையே ஆரியக்கொள்கை.

ஆடு மேய்க்க வந்த ஆரிய அநாகரிகர்கள் ஆண்டைகளாகி, தமிழரினத்தை அடிமைப்படுத்திச் சாதிகளையும், வர்ணங்களையும் அதன்மேல் சுமத்திக்கெடுத்து குட்டிச்சுவராக்கியதாலேயே திராவிடர்கள் வீழ்ந்தனர் என்பதும், அடிமைப்பட்டனர் என்பதுமே திராவிடக் கொள்கை.

ஆரியக்கொள்கையின் மறுபக்கமே திராவிடக் கொள்கை..

ஆரியமும் திராவிடமும் சியாமிய ஒட்டுப் பிறவிகள். ஆரியக்கொள்கை திராவிடக்கொள்கை ஆகிய இரண்டுமே இனவெறிக்கொள்கைகள் ஆகும்.

தமிழரில் அறிவரும் அரசியலாளரும் இந்தத் திராவிடக் கொள்கைக்கு ஏதோ ஒரு வகையில் ஆட்பட்டு நம்முடைய உண்மை வரலாற்றை நாம் மேலும் இழக்கவும் கெடுக்கவும் காரணமாயினர்.

கடைச்சங்க காலத்திலிருந்த மாலிக்காபூரின் படையெடுப்புக்கு முன்னால் வரை எந்த வடவரும் தமிழகத்தை வெற்றி கொண்டதும் இல்லை அதன் மீது படையெடுத்ததும் இல்லை. மாறாக தமிழ்ப் பேரரசர்களே வடக்கு நோக்கி படை செலுத்தி வெற்றிக்கொடி நாட்டிய வரலாறுகள் உண்டு.

ஆனால் வடஇந்தியாவில் விந்தியமலைக்கு மிகவும் அப்பால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்து அந்த வடஇந்திய வரலாற்றைச் சென்ற இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழக வரலாற்றின் மீது கண்மூடித் தனமாகத் திணிப்பது பெருந்தவறு.

தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஆரிய-திராவிடக் கொள்கை இங்குதான் தனது முதல் அடியை வாங்குகின்றது.

ஆரியர்களோ, தங்களை ஆரிய வழியினரெனச் சொல்லிக் கொண்ட வடவரோ தமிழகத்தின் மீது படைகொண்டு, படையெடுத்த வரலாறே இல்லை..

ஆனால், சைனம், பௌவுத்தம் ஆகிய ஆரிய மயமான சமயங்களின் வழியாக மட்டுமே ஆரியக் கொள்கையும், பண்பாடும் தமிழகத்தற்குள் புகுந்தன.

வள்ளுவத்திடமிருந்து வடவர்கள் செய்த அறிவுக் களவாடலின் விளைவாக வந்த சைனம், புத்தம் ஆகிய ஆரியச் சமய நெறிகள் வள்ளுவ மெய்யியலைக் கெடுத்துக் குறைபடுத்தி அழித்ததுடன் அதை தன்வயமாக்கிக் கொள்ளவும் செய்தனவென்பது வரலாறு.

ஆரிய மதங்களெனச் சொல்லி வந்த சைனமும், புத்தமும் பார்ப்பனியத்தை அவ்வப்போது எதிர்த்தனர் என்பது உண்மை.

ஆனால் பார்ப்பனியம் வேறு, ஆரியம் வேறு எனும் வேற்றுமை தெரியாத திராவிடக் கொள்கையர் அவ்விரண்டும் ஒன்றே எனக் கருதி மயங்கியது இங்கு பெரும் கேட்டை விளைவித்துள்ளது.

தென்னிந்திய மக்கள் கழகம் என்னும் பெயரில் பார்ப்பனரல்லாதாரின் முதல் அரசியல் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் பெயர் தென்னிந்திய நலவுரிமைக் கழகம் எனத் திரிந்தது. இது 1917 பிப்ரவரி 16 தொடங்கி ஜஸ்டிஸ் என்னும் பெயரில் ஓர் ஆங்கில ஏட்டை நடத்திவந்தமையால் நயன்மைக் கட்சி அல்லது நீதிக்கட்சி என்றழைக்கப்பட்டுவந்தது.

இந் நயன்மைக் கட்சியின் முன்னோடியாக 1912 ஆம் ஆண்டில் டாக்டர்.சி. நடேசன் தொடங்கிய சென்னை திராவிடர் கழகம் இருந்தது.

பின்னர் இத்திராவிடக் கொள்கைக்குக் கடைவிரித்த தமிழர் யாவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உண்மையான திராவிடர்களான தெலுங்கர்கள் முன்னுக்கு வந்தனர்.

நயன்மைக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் இருவர். ஒருவர் பிட்டி தியாகராயச் செட்டியார் (1852 - 1925), மற்றவர் டி.எம் நாயர் எனும் மருத்துவர்.

இவர்களில் தியாகராய செட்டியார் தேவாங்குச் செட்டியார் சாதியைச் சேர்ந்த தெலுங்கரும் பெரு நிலவுடைமையாளரும் பெரிய முதலாளியும் ஆவார்.

வட்டித் தொழில், வைப்பகத் தொழில், கைத்தறித் தொழில் ஆகியவற்றில் முன்னணி வகித்து வந்தவர். தனி ஆந்திரம் கேட்டு பட்டிணி கிடந்து உயிர் நீத்திட்ட பொட்டி சீராமுலு இவருடைய மருமகனாவார்.

தெலுங்கரின் இனமீட்சியில் அயராத ஆர்வம் காட்டியவர் இத் தியாகராய செட்டியார். டாக்டர். டி.எம் நாயரோ ஒரு மலையாளி. சென்னைத் திருவல்லிக்கேணியில் பணிபுரிந்தவர். எல்லாவற்றிலும் ஆங்கில மயமாக்கத்தை போற்றி வந்தவர்.

1948 ல் சென்னை உயர் வழக்கு (நீதி) மன்றத்தின் ஆங்கிலேயரல்லா நடுவராக வந்திருக்க வேண்டியது ஒரு தமிழ்ப் பார்ப்பனரே.

ஆனால் தெலுங்கரான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் அமைச்சரவை பார்ப்பன எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டி தன் இனத்தவரான பி.வி. இராசமன்னார் எனும் தெலுங்கரை அப்பதவியில் அமர்த்தியது.

350 ஆண்டுகளுக்கும் மேலான சென்னை மாநகராட்சியின் தலைவர் (மேயர்) பதவிக்கு வந்த இந்தியரில் ஒரு சிலர் தவிர மற்ற எல்லோருமே தெலுங்கராவர்.
சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும். நயன்மைக் கட்சியின் உறுப்பினராகவும், திராவிட இயக்கத்தின் தோற்றுனருமான டாக்டர்.சி. நடேசன் தமிழர் என்னும் ஒரே காரணத்தினால் அவர் நகரத் தந்தையாக ஆகமுடியவில்லை. அம்மாநகராட்சியில் வந்தேறித் தெலுங்கர் நலன்கள் கோலோச்சியதே அதற்கான காரணமாகும்.

1920 ஆம் ஆண்டுத் தேர்தலில் பல ஆந்திரர்களும் தமிழகத் தெலுங்கர்களும் சென்னை மாகாணச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் 1921, 1922 என ஆண்டுக்கு ஒரு முறையாக ஆந்திரருக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் எனவும் என்.சூரியநாராயணர் எனும் தெலுங்கு பார்ப்பனரால் தனி ஆந்திரம் மாநிலம் வேண்டும் என்றும் பல தீர்மானங்களை சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தனர்.

அப்போதே நீதிக் கட்சி விற்றுவந்த பார்ப்பனரல்லாதாரின் ஒற்றுமை பின்னுக்குப் போய் தெலுங்கரின் தேசிய , இனநலன்களே மேலோங்கின.

1922 ஆம் ஆண்டில் ஆந்திரருக்கென தனிப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டத்தை முன் வைத்த போது, அன்றைய அரசின் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தெலுங்கருமான கூர்மவேங்கட ரெட்டி நாயுடு அதற்கு தெலுங்கு பல்கலைக்கழக வரைவுச் சட்டம் என பெயரை மாற்றி வைக்க வேண்டும் எனக் கூறினர்.

இதற்கு நேர்மாறாக நயன்மைக் கட்சியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.நடேச முதலியார் அத் தனிப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டம்

பார்ப்பனரல்லாக் குமுகத்தின் உறுப்பினருக் கிடையே வேற்றுமை நெடியைக் கிளப்புகிறது என்றும், தெலுங்கர்களைத் தமிழர்களிடமிருந்து பிரிக்கவே முடியாது. நாம் திராவிடர்கள் நாம் பிரியவே மாட்டோம் எனச் சொல்லி ஒப்பாரி வைத்த தமிழனின் இளிச்சவாய்த் தனத்தை என்னவெனச் சொல்வது.

1916 ஆம் ஆண்டில் நீதிக் கட்சி துவங்கியது முதல் 1937 ஆம் ஆண்டில் அது மறைந்தது வரை இந்நீதிக்கட்சியின் தலைவராக தமிழர் ஒருவரும் வர முடியவில்லை.

பழைய சென்னை மாகாணத்தில் தமிழர் இழந்த தமிழ்ப் பகுதிகளில் மட்டுமே நீதிக் கட்சியால் வளர முடிந்தது.

கன்னட, ஆந்திர, மலையாளப் பகுதிகளிலோ பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனும் திராவிட அரசியலை கன்னடத், தெலுங்கு, மலையாளித் தலைவர்கள் வேண்டுமென்றே பரப்பவில்லை. அவர்கள் தமிழரை மட்டுமே ஒன்றுபட விடாமல் தடுத்தனர்.

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.. உண்மையில் தமிழ்ப் பார்ப்பனரையெல்லாம் அரசுப் பதவிகளிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா தெலுங்கர்களும், மலையாளிகளும் அந்த இடங்களில் தாங்கள் போய் அமர்வதற்கான ஒரு நொணடிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

இதனால் தங்களை திராவிடர் என்பதை ஒப்புக்குக் கூட ஏற்றுக் கொள்ளாத தமிழ் இனமும், தமிழ் நாடும் திராவிடரின் வேட்டைக் காடாகியது.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசி வந்த இருமொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி..

ஆந்திரர்களோ, மலையாளிகலோ, கன்னடர்களோ என்றுமே தங்களைத் திராவிடர்கள் என விரும்பி அழைத்துக் கொண்டதுமில்லை தங்களை திராவிடர்களாக கருதியதும் இல்லை.

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்.

தெலுங்கர், மலையாளி,கன்னடர்கள் தேசிய இன உணர்வை முன்னால் வைத்து சாதி உணர்வைப் பின் வைத்து இனவழியில் ஒன்றுபட்டனர்.

தமிழரோ சாதியாலும் கட்சியாலும் சுக்குநூறாகினர்.

இத்திராவிடத்தால் தான் தமிழினம் இன்று சாதிக்கொரு மாநாடு நடத்தி கெட்டழிந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் மட்டுமே உணர்வாலும் செயலாலும் திராவிடர் ஆக்கப்பெற்றனர்.
தமிழ் பேசும் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அவ்வாறு திராவிடராகவில்லை. அவர்கள் திராவிடர் என்னும் சொல்லைக் கூட ஆள்வதில்லை.

உதாரணமாக தென்னிந்திய நல உரிமைக் கழகம் 1917 பிப்ரவரி 16 அன்று ஜஸ்டிஸ் ஏட்டை தொடங்கியது. அது தமிழில் திராவிடன் எனும் ஏட்டை 1917க்கு இடையில் கொண்டு வந்தது.

ஆனால் தெலுங்கிலோ ஆந்திரப் பிரகாசிகா எனும் ஏட்டை வாங்கி அதை திராவிடன் எனும் பெயர் மாற்றாமலேயே ஆந்திரப் பெயர் ஒலிக்க அந்த ஏட்டை ஆந்திரப் பிரகாசிகா எனும் பெயரிலேயே நடத்தி வந்தது.

மலையாளிகளும் கேரள சஞ்சாரி. கேரளோதயம் மலையாளி எனும் பெயர்களில்தாம் ஏடுளை நடத்தினரேயன்றி திராவிடன் என்னும் பெயரை என்றும் சூட்டிக் கொண்டதேயில்லை.

இந் நயன்மை (நீதி) கட்சி தமிழில் கொணர்ந்த ஏட்டிற்கு மட்டுமே திராவிடன் எனப் பெயர் சூட்டியது.

ஏடுகளுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, கன்னட, மலையாள சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டு வந்த போதிலும் தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய நலிந்த சாதியினர் எனப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மட்டும் ஆதி தமிழர் ஆகாமல் ஆதிதிராவிடர் என்றழைக்கப்பட்டனர்.

ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் நலிந்தோர் யாரும் ஆதிதிராவிடர் என்னும் பட்டத்தை ஏற்க முன்வராததை அன்றைய மக்கள் கணக்கெடுப்பு அதிகாரியான ஈட்சு (M.W.M. Yeats) சுட்டிக் காட்டினார்.

ஆயினும் சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் 63,70,074 பேர் தொல்தமிழராக (தாழ்த்தப்பட்டோர்) இருந்தும் அவர்களில் 15,025 பேர் மட்டுமே ஆதிதிராவிடர் எனும் பெயரில் தங்களின் பெயர்களைப் பதிந்து கொள்ள முன்ந்தனர்.

தொல்தமிழரில் பெரும்பாலோர் அவர்களின் மீது திணிக்கப்பட்ட ஆதிதிராவிடர் என்னும் பெயரொட்டியை (இழிவை) ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைவரான இரட்டை மலை சினிவாசனார் ஆதிதிராவிடர் எனும் பெயருக்கு மாற்றாக பழந்தமிழர் என்னும் பெயரையே பயன்படுத்தி வந்த நிலையில், அந்த ஆதி தமிழரை ஆதிதிராவிடர் என்றும் பார்ப்பனரல்லாத பிறரை (பிற்படுத்தப்பட்டோரை) சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும் சாதி இந்துக்கள் என்ற சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்தியும், தமிழர்களைச் சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக் கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.

இதன் விளைவாக தமிழர்கள் தாங்கள் ஓர் தனி இனம் எனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்..

தமிழர்கள் திராவிட மயமாக்கப் பட்டுவிட்டதனால் சாதிகளாய் கட்சிகளாய் பிரிந்து சொந்த இனப்பற்றும், இனநலனும், இனமானமும் இழந்து சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக...

நன்றி - யாழறிவன்.

தமிழா விழித்துக்கொள் இல்லையேல் அடுத்த சோமாலியா நம் தமிழ்நாடு தான்...


நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?


நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும்.

அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.

பின் காலையில் எழுந்து, அந்த  துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.

இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

சொல்லப் போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.

ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?

வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.

எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்...

பாஜக பினாமி அதிமுக அடிமைகளே உங்களுக்கு அழிவு நிச்சயம்...


உண்ணாநோன்பு மருத்துவம்...


உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்திய முறையாகும்.

இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர்.

உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கி வந்தது.

வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல்
நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.

உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு...

இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங் காலத்திலிருந்தே இருந்த வருகிறது. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒருவழி முறையேஉண்ணாநோன்பு. அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. உண்ணாநோன்பு, யோகப் பயிற்சியிலும் ஒர் அம்சமாகும்.

18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்களான பிவெனியானொவ், ஐ ஸ்ராஸ்கி ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைத் தீர்ப்பதில் பட்டினி சிகிச்சையின் பயன்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றார்.

வளர் - சிதை மாற்றக் கோளாறுகள் - குறிப்பாக கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு இரத்தவோட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்துவதில் கட்டப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பயன்கள் குறித்து சோவியத் மருத்துவரான, என். நார்பகோன் தமது ஆய்வுக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார். முன்சிறுகுடல் வளைவு, இரப்பை ஆகியவற்றிலுள்ள புண்களை ஆற்றுவதில் அப்படிப்பட்ட உண்ணாவிரதச் சிகிச்சையின் வெற்றிகள் பற்றி ஏ.பாகுலேவ் என்பவர் ஆய்வுகள் நடத்தி வெற்றிகள் கண்டள்ளார்.

இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோவியத் ரூசிய நாடுகளில் உண்ணாநோன்பு மருத்துவம் பல்வேறு மருத்துவ மையங்களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பின்பற்றப் படுகிறது.

மனப்பிளவு நோய்க்கு உண்ணா நோன்பு..

சிலவகை மனக்கோளாறுகளுக்கு குறிப்பாக ஆரம்ப நிலையிலுள்ள மனப்பிளவு நோய்க்கு உண்ணாவிரத சிகிச்சை முறையைப் பின்பற்றலாம் என்பதை ரசிய மருத்தவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலில் எந்தவித நோயும் இல்லாதிருக்கும் போது கூடத் தாங்கள் நோயுற்றிருப்பதாக அச்ச உணர்வினால் துன்புறும் பல நோயாளிகளுக்கும் பல்வேறு பீதியுணர்வினால் தனிமைப்பீதி கூட்ட நெரிசலால் எற்படும் பீதி, இருட்டு, தொற்றுநோய், கூர்மையான பொருள்களைப் பற்றிய பீதி, ஆகியவற்றினால் அவதிப் படுவோருக்கும் இம்மருத்துவமுறை சிறந்த பலன்களை அளித்துள்ளது.

எங்கள் மருத்துவக்கூடத்தில் மட்டுமே நாங்கள் இதுவரை ஏழாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு இம்முறையைக் கடைப் பிடித்திருக்கிறோம். குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்டு வந்த சில நோய்களைக் குணப்படுத்துவதிலும் இந்த முறை சிறந்த வெற்றிகளைத் தந்துள்ளது. எனினும் சீரான மருத்துவ மேற்பார்வையிலேயே இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வகை மருத்துவம் அளிக்கப் படும் நோயாளிகள் மருத்துவ மையத்தில் தனிக் கூடங்களில் வைக்கப் படுகின்றனர். நோயாளிகள் அவர்களது உறவினர்கள் ஆகியோரது ஒப்புதலின் பேரிலேயே இம்முறை கடைப்பிடிக்கப் படுகின்றது.

முதலில் நோயாளிகள் எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுகின்றனர். உண்ணாநோன்பு மருத்துவம் மேற்கொள்வதால் நோயாளிகள் எவ்வகையான பாதிப்பும் எற்படப் போவதில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இம் மருத்துவமுறை தொடங்கப் படுகிறது.

ஒவ்வொரு நோயாளியும் எத்தனை நாட்கள் உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்பது அவரவரது நோய் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப் படுகிறது. அந்தக் காலகட்டம் இருபது முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கலாம் உண்ணாநோன்பை நோயாளிகள் பின்பற்றும் போது அவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.

மருத்துவ முறை...

உணவு கிடைக்காமல் கட்டாயத்தின் பேரில் பட்டினி கிடக்கும் போது ஒரு மனிதனுக்கு சாவு தொடரலாம். அதற்கு மாறாக பட்டினி நிலை இங்கு ஒரு மனிதனது நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படுகிறது.

ஏனெனில் இம் மருத்துவ முறை தொடங்கும் போது ஒரு மனிதனின் குடல் மண்டலம் அனைத்தும் முதலில் கழுவப்பட்டு உடலிலுள்ள எல்லா நச்சுப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு குடிப்பதற்கு நிறைய நீரும் காலை வேளையில் நீர் மருத்தவமும் பொதுவான மசாஜ் மருத்துவமும் அளிக்கப் படுகிறது. அவர்கள் பெரும்பாலான நேரத்தை வெட்ட வெளியிலேயே கழிக்கின்றனர்.

பொதுவாக முதல் 3-5 நாட்களில் கட்டுப்படுத்தப் பட்ட தானியங்கு அமைப்புகள் தளர்ந்து பசியுணர்வு மறைந்துவிடுகிறது. உணவின் மணமோ அதைப் பார்ப்பதோ அவர்களைப் பாதிப்பதில்லை. எனினும் உணவு குறித்த இனிய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன அதிலும் நோயாளி அத்தகைய நினைவுகளிலிருந்து விடுபடாதிருந்தால் அவை மேன்மேலும் அவனைப் பாதிக்கவே செய்யும். மருத்துவரும் உளவியல் சிகிச்சையாளரும் இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு உதவுகின்றனர்.

ஆறாவது அல்லது ஏழாவது நாளில் தான் மிக்க கடுமையான அனுபவம் ஏற்படும். அப்பொழுதுதான் உடல் தன்னுள்ளேயுள்ள அற்றல் சேமிப்புகளையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றது. இந்த நெருக்கடியான கட்டமும் குறுகிய கால அளவுக்கே நீடிக்கும். அதன் பின்னர் நோயாளிக்கு அவ்வளவு சிரமம் இருக்காது. அவனது மன உணர்வும் பலமும் அதிகரிக்கும். அவனிடமிருந்த முதன்மை நோய் குறையத் தொடங்குகிறது. உடலின் ஆற்றல் சேமிப்பு அனைத்தும் தீரும்வரை இந்நிலை நீடிக்கும். உடல் புனரமைக்கப் படுகிறது.

முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்களில் ஒருவர் இந்த நிலையை அடைகின்றார். இதற்குள்ளாக அந்த நோயாளியின் நாக்கு தூய்மையடைந்து தோலும் ஒருவித இளஞ் சிவப்பு நிறத்தை அடைகிறது. வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கி அவனுக்கு கோரப் பசி உணர்வு மேலிடுகின்றது. இந்தக் கட்டத்தில்தான் அடுத்த மிக முக்கியமான புனரமைப்பு நிகழ்ச்சி தொடங்கப் படுகின்றது.

முதலில் நோயாளிக்கு நீர்த்த பழச்சாறு கொடுக்கப் படுகிறது. பின்னர் படிப்படியாக நீர் சேர்க்காத பழச்சாறும் அதன் பின்னர் கஞ்சி வேகவைத்த காய் கறி சூப் போன்றவை மெல்ல மெல்லக் கொடுக்கப்படுகின்றது.

சாப்பிடத் தொடங்கி முப்பது அல்லது நாற்பதாவது நாளில்தான் அவனுக்கு வழக்கமான முழு உணவு கொடுக்கப் படுகின்றது.

உண்ணாநோன்பு காலத்தில் ஒரு நோயாளி மொத்தத்தில் சராசரி பதினைந்து முதல் இருபது சதவிகித எடையை இழக்கின்றார். ஆனால் மிகவும் பருமனானவர்கள் எடைக் குறைப்பிற்காகவே இந்தச் சிகிச்சை முறையைக் கடைப்படித்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.

முடிவுரை...

இந்த முறையில் ஜந்து உயிரியல் அம்சங்கள் உள்ளன.

முதலாவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் தற்காப்பு அடங்கல் என்ற நிலைக்கு முழு ஓய்வு கிடைக்கின்றது.

இரண்டாவது உடலிலிருந்து நச்சுப்பொருள் நீங்க உடல் தூய்மை செய்யப்படுகின்றது.

மூன்றாவது ஒருவிதக் கூர்மையான உள் அடங்கல் ஏற்படுவதானது பின்னர் ஏற்படும் புனரமைவுக்குத் தூண்டுதலாக ஆகின்றது.

நான்கவதாக திசுக்கள் தீவிரமாகத் தாமே புதுப்பிக்கப் படுகின்றன.

ஜந்தாவதாக உடலின் எல்லா உறுப்பு மண்டலங்களும் குறிப்பாக நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஒரு விதத் தகைவு நிலைக்கு உட்படுத்தப் படுகின்றது. பிற எல்லா உறுப்புகளையும் போன்றே உண்ணாநோன்பு சிகிச்சையின் போது மூளையும் அதிலுள்ள நச்சுப் பொருள்களை இழந்து புத்துயிர் பெறுகின்றது.

மேலும் அதற்கு கணிசமான அளவு ஓய்வும் தரப்படுகின்றது. மூளை ஆற்றலின் பெருமளவைப் பயன்படுத்தக் கூடியது.. செரிமான மண்டலமேயாதலால் உணவின்றி இருக்கும் போது அது நல்ல ஓய்வு பெறுவது இயல்பே.

இதுதான் உளவியல் கோளாறுகள் சீரடைவதன் அடிப்படை இரத்தநாள இறுக்க நோயாளிகள் நல்ல நினைவாற்றலைப் பெறுவதுடனே உணர்ச்சிப் பாதிப்புகளினின்றும் விடுபடுகின்றனர்...