திமுக வாழ்க, ஆ.ராசா வாழ்க,, யார்ரா அவன், அந்த நாய வெளில தூக்கி போடு🤣
கொத்தடிமைகளுக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்.😂
Rs..200... கொத்தடிமைகள்🤧🤧🤧
திமுக வாழ்க, ஆ.ராசா வாழ்க,, யார்ரா அவன், அந்த நாய வெளில தூக்கி போடு🤣
கொத்தடிமைகளுக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்.😂
Rs..200... கொத்தடிமைகள்🤧🤧🤧
சென்னை: அ.திமு.க.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அக்.,7 ல் அறிவிப்பு வெளியிடப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறுகையில்; வரும் 7 ம் தேதி அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்...
மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.
பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.
எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.
ஆம் அப்படித்தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.
நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.
அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.
அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.
அதேபோல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்.
டேட்டா தெரபியின் மூலம் அதை மாற்றி அமைத்து வாழ்க்கையை கொண்டாடுவோம்...
இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.
அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம்.
நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன.
உண்மை சொல்லப் போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…?
நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக் கொண்டு இருந்தோம்.
அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.
இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது..
சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள்.
அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள்.
எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்.. அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன...
எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.
பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.
திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.
சரி.... பலி பீடம் என்றால் என்ன?
பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.
இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.
ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.
அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.
அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.
இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.
எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால் தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.
எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.
இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.
பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.
பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.
பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில் தான் ஒதுங்கியிருக்கும்.
எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.
சிலர் எல்லாமே நம் ஒருவரால் தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.
மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.
அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.
பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.
பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.
பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.
(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.
சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.
சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.
அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.
ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.
கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.
இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன...
இதை உலக முதலாளிகள் சாத்தானுக்கு பலி கொடுக்கும் நிகழ்ச்சி என கூறுகிறார்கள்.
பல்வேறு அமெரிக்க அதிபர்களும் இந்த குழுவின் உறுப்பினராக இருந்து இந்த வழிபாட்டில் கலந்துள்ளனர்...
1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு.. தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தி எதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.
28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார் மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது. அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.
அவர் நடத்தி வந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.
1) இந்தி எதிர்ப்பு...
2) தமிழ்நாட்டு உரிமை...
இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்...
தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்..
திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்..
பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர் மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்...
அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.
100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
இத்தனை சிறப்பான பேரீச்சம் பழத்தினை உண்பதனால், பித்தம், பித்தநீர், பித்தசுரம், வாந்தி, குடபுரட்டல், மனக்கலக்கம், மனக்குழப்பம், உன்மதம், மதமூர்ச்சை, பைத்தியநோய், கபம், இருமல், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல், சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், நீர்க்கோர்வை, கபாஅநீர், காசம், சுவாச காசம், இரத்தகாசம், தாகம், அதிதாகம், நீரிழிவு, மதுமேகமென்னும் சர்க்கரை நோய், இரத்தபித்தம், வாய்நீர் வடிதல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்...
திருமூலர் காட்டிய பிராணயாமம் முறை மிகவும் எளிதானது..
இயம, நியமங்கள் கடை பிடிக்கும் முறை..
இயமம்-தீயவற்றை செய்யாதிருத்தல்.
நியமம்-நல்லனவற்றை செய்தல்.
ஆசனம்-உடலை உணர்வோடு இருத்துதல்.
இனி ஆசனத்தில் அமர வேண்டும். இவற்றை திருமூலர் பயன் தரக்கூடிய ஆசனங்கள் என்கிறார்.
அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்திராசனம், சோதிராசனம், சிம்மாசனம், கோமுகம், வீராசனம், சுகாசனம் ஆகிய எட்டு ஆசனங்களாகும். இவை உத்தமானது.
பதினாறு மாத்திரை கால அளவு, இடது பக்க நாசி துவாரத்தின் வழியே காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இது 'பூரகம்'எனப்படும்.
64 மாத்திரை கால அளவு காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். இது கும்பகம் எனப்படும்.
இனி உள்ளிருக்கும் காற்றை மெதுவாக 32 மாத்திரை கால அளவு வலது நாசி வழியாக விட வேண்டும். இது ரேசகம் எனப்படும்.
இது போல் வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து உள்ளே அதே கால அளவில் வைத்திருந்து, இடது நாசி துவாரத்தின் வழியாக வெளிவிட வேண்டும்.
இந்த முறையை காலையும் மாலையும் சுமார் பத்து தடவை செய்ய வேண்டும்.
திருமூலர் திருமந்திரத்தில் கூற வில்லை என்றாலும், பிராணயாமம் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி அமர வேண்டும். இது பதஞ்சலி முனிவரின் யோக முறையில் குறிப்பிட்டுள்ள வழி முறைகளாகும்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிபட வுள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும்,உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே
- திருமந்திரம் 575.
பொருள்: பிராணயாமம் செய்தால் உடல் சிவக்கும். தலை முடி கறுக்கும். உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும். (இறப்பை தவிர்க்கலாம்).
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை யுதைக்குக் குறியதுவாமே..
காற்றை பிடிக்கும் கணக்கறிந்தவர் (பிராணயாமம் செய்பவர்) காலனை எட்டி உதைத்து நெடு நாள் வாழலாம்.
இதற்கு இது தான் உபாயம்...
ஊடகத்தை உதரி தள்ளிவிட்டு உங்கள் அறிவை வைத்து அன்புமணி, சகாயம் போன்ற நல்ல தலைவர்களை தேடுங்கள் - சுய புத்தியை கொண்டு...
சொல் புத்தியை தூக்கியெரியுங்கள்...
சிந்தனை வரும் வரை நாம் அனைவரும் ஏமாளிகளே..
மக்களை ஏமாற்றி பிழைக்கும் மூன்று கூட்டு களவாணிகள்..
Corporate நிறுவனங்களின் விளம்பரங்களை போடவே பொழுது போக்கு ஊடகம்.
Corporate நிறுவனங்களுக்கு தேவையான அராங்கத்தை உருவாக்குவதும் தக்க வைப்பதுமே செய்தி ஊடகத்தின் ஆக சிறந்த வேலை..
தகுதியற்ற தலைவர்களை பெரிய ஆட்களாக்கி விடுதல் - ( கருத்து திணிப்பு முலம்) அறிவில்லாத பண ஆசை பிடித்தவர்களை தலைவர்களாக்கி அவர்களை வைத்து Corporate நிறுவனங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளும்..
இந்தியா எனும் மிக பெரிய சந்தையில் - We are consumers and voters. அவ்வளவு தான்.
Corporate நிறுவனங்களின் விளம்பரத்துக்காகவே அனைத்து கேவலமான நிகழ்ச்சிகளும்.
மக்களை பார்க்க வைத்து Television rating point - TRP உயர்த்தி அதிக பணம் சம்பாதிக்கவே - Breaking news /கவர்ச்சி / காமெடி / கேவலமான நாடகங்கள்..
எதுவும் நன்மைக்காக அல்ல - விளம்பரத்திற்க்கு மட்டும்...
மக்களாகிய நாம்
எதை படிக்கக் கூடாது,
எதை பார்க்கக் கூடாது,
எதை பேசக் கூடாது,
எதை சிந்திக் கூடாது,
எதை அறிந்து கொள்ளக் கூடாது,
எதை தெரிந்து கொள்ளக் கூடாது,
என்பதை எல்லாம் முடிவு செய்யும் ஊடகம்...
அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன..
கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.
அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும், நல்லஉயரமாகவும், கரு, கருவென்று இருந்தார்.
வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,
''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.
என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.
பெட்டகக் காப்பாளர் சொன்னார், பரவாயில்லை, கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும், சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,
அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.
நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
நம்மைப் போல் தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.
எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்...
நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்..
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை, நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை வந்துவிடும்...
வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும்.
அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செளராஷ்டிர மொழியாகும்.
இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர்.
பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர்.
ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர்.
தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.
உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செளராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
இம்மொழிக்கென வெளிவரும் பாஷாபிமானி எனும் மாத இதழில் தலையங்கம் செளராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது.
இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது.
ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...
கூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்...
எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.
அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.
அவர் தீர்க்கதரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்த பின்பு தான் அதை உணர முடிகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்..
நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர்..
அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனை அருகேயுள்ள சுவாமி தோப்பில் உதித்த அய்யா வைகுண்டர் ஆவார்.
கி.பி.1809 வருடம் சாதாரண மானிடப் பிறப்பெடுத்த முடிசூடும் பெருமாள் என்கிற முத்துக்குட்டி.. பின்னர் வைகுண்டர் அவதாரமெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தினார்..
அதோடு மட்டுமல்லாமல் அருள் நூல் மற்றும் அகிலத் திரட்டு ஆகிய நூல்களில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எழுதியுள்ளார்..
அவற்றில் பல நடந்தும் நடந்து கொண்டும் இருக்கின்றன..
இப்போது தமிழகத்தின் மிகப்பெரும் போராட்டமாக நடந்து கொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிரான போராட்டம்.
இது பற்றியும் அய்யா தனது அருள் நூலில் கூறியிருப்பதாக அய்யா வழி நண்பர் ஒருவர் கூறினார்..
அந்நூலின் 24 வது பக்கத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் கூடங்குளம் போராட்டம் பற்றி அய்யா கூறியிருப்பதாகத் சொன்னார்...
அவ்விரு வரிகள்..
அண்ணர்க்களந்த பாலை இடித்தக்கரை காவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா..
கூடங்குளம் அணு உலைக்கெதிரான தொடர் போராட்டங்கள் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இடிந்தகரையில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.
இது போல இலங்கைத் தமிழர் மறு வாழ்வு குறித்தும் அய்யா குறிப்பிட்டுள்ளதாக அகிலத் திரட்டில் வரிகள் உள்ளனவாம்..
அவை..
ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் என்பதாகும்..
இதைப் படிக்கும் போது எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது..
அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும்...
ஒன்று மட்டும் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது.. விரைவில் இவ்வுலகம் தமிழர்கள் கட்டுப்பாட்டில் வரப் போகிறது என்று...
பிரம்மிப்பூட்டும் இரகசியம்...
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விசத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விசம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விசம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்...
ஏ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல. ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது...