29/09/2020

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: அக்.,7 ல் அறிவிப்பு...

 


சென்னை: அ.திமு.க.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அக்.,7 ல் அறிவிப்பு வெளியிடப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறுகையில்; வரும் 7 ம் தேதி அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.