19/09/2018

விளாம்பழம் (wood apple)...


பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

அரசியல் வணிகன் கைப்பிடியில்...


இரட்டைமலை சீனிவாசன்...


பிறப்பு : 07.07.1859
இறப்பு : 18.09.1945
இடம் : சென்னை மாகாணம்
பணி : வழக்கறிஞர் - பத்திரிகையாளர்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்...

இந்திய அளவிலான தலித் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே இங்கே இருந்தனர். இவ்வாறு செயல்பட்ட தலைவர்களுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).

இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருந்த சிற்சில தடைகள் 1835-ம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, இங்கு சுயமாய்ப் பத்திரிகைகள் நடத்தும் முயற்சிகள் எழுந்தன.

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள்.

பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை முன்னோடி இதழ்களாகும்.

இந்த நிலையில்தான் தாங்கள் எப்பெயரால் ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார்.

முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது.

கிராமங்களில் நடைபெற்ற சமூகப் பிரச்சினைகள்கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இவ்விதழ் பங்காற்றியது.

அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் தலையீடு செய்து வந்தார்.

எடுத்துக்காட்டாக, ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு ஒடுக்கப்பட்ட குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள்.

இதில், இரட்டை மலை சீனிவாசனின் பங்கு முக்கியமானது. 1894-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

இது தொடர் பாகத் தனிநூலாக எழுதக்கூடிய அளவுக்கு இந்தப் போராட்டங்கள் விரிந்திருந்தன. 1923-க்குப் பின்னர், சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மேலவை உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை.

சட்டப்பேரவையில் அவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் தொடர்பாக அவர் சிறு வெளியீடுகளை வெளியிட்டு வந்தார். அவ்வாறு அவரால் வெளியிடப்பட்டு, இன்றைக்குக் கிடைக்கும் பிரசுரங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை.

முரண்களை ஒதுக்கும் வரலாறு..

வரலாற்றை எழுதும்போது சம்பந்தப்பட்ட காலத்தின் வெவ்வேறு குரல்கள், முரண்கள் போன்றவற்றை மௌனமாக ஆக்கிவிட்டு ஒற்றை வரலாற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளே பெரும்பாலும் நடக்கின்றன. உடனடி அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு எழுதப்படுவதால் வரும் தீமைகள் இவை. தலித் அரசியல் வரலாற்றியலிலும் இது போன்ற தருணங்கள் உண்டு.

ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு, வரலாறு பற்றி வெவ்வேறு கருத்து நிலை கொண்ட குழுவினர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இரட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தேடும்போது இந்த அம்சம் பளிச்சிடுகிறது.

மாறுபட்ட அணுகுமுறை..

இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார்.

அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடி வந்த போதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை.

பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்த போதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை.

ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்த போது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார்.

திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.

பூனா ஒப்பந்தமும் காந்தியுடனான உறவும்..

தாழ்த்தப்பட்டோர் தரப்பிலிருந்து இந்திய தேசியவாத அரசியல் சந்தித்த முக்கிய அழுத்தம் என்றால், இரட்டை வாக்குரிமையும் அதைத் தொடர்ந்த பூனா ஒப்பந்தமும்தான். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பாக அம்பேத்கரோடு சேர்ந்து சீனிவாசனும் பங்கேற்றார். இது பற்றிய சிறு பிரசுரம் ஒன்றையும் நாடு திரும்பியதும் வெளியிட்டார்.

பிறகு, 1932 செப்டம்பர் 24-ல் காந்தியின் உண்ணா விரதத்தால் இரட்டை வாக்குரிமை கோரிக்கை கைவிடப் பட்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தில் சீனிவாசனும் கையெழுத்திட்டார். காந்தியோடு இணக்கம் கொண்டிருந்த சுவாமி சகஜானந்தர் போன்றோர்கூட இந்தக் கோரிக்கை தொடர்பாக அம்பேத்கரை ஆதரித்த உணர்வு பூர்வமான தருணம் அது. அந்தத் தருணத்தில் மற்றொரு தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. ராஜா, காந்தி சார்பாக நின்றபோது சீனிவாசன் அம்பேத்கர் ஆதரவாக இருந்தார். பின்னாளில் காந்தியோடும் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக சீனிவாசன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே 1906 முதலே காந்தியோடு தொடர்பு கொண்டிருந்த அவர், 1930-களில் ஹரிஜன சேவா சங்கத்தை காந்தி தொடங்கிச் செயல்பட்டு வந்த போது, அவரோடு தலித் மேம்பாடு சார்ந்த உரையாடலை மேற்கொண்டிருந்தார். தன்னுடைய அரசியல் கருத்து நிலை பிறழாமலேயே அரசியல் இணக்கத்தை சீனிவாசன் பேணிய பண்பை இந்த உரையாடலில் அறிய முடிகிறது. காந்தியிடமும் இதற்கான இடம் இருந்தது. காந்தியோடு சீனிவாசன் கொண்டிருந்த இந்தத் தொடர்பு, இன்னும் அதிகம் ஆராயப்படாத ஒன்றாக இருக்கிறது.

இதே போல, ஒடுக்கப்பட்டோருக்காக 1930-களின் இறுதியில் சீனிவாசன் உருவாக்க விரும்பிய அமைப்புபற்றிய தகவல்கள் மங்கலாகவே கிடைக்கின்றன. இவ்வாறு பல்வேறு அரசியல் நிலைப்பாட்டினரோடு ஒடுக்கப்பட்டோரின் மேம்பாடு சார்ந்து உரையாடக் கூடிய வெளி அவருக்கு இருந்தது.

இவ்வளவு இருந்தும், மொத்தமாக மதிப்பிட இரட்டைமலை சீனிவாசன் பற்றிய முழு வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை.

1938-ல் அவரே எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ என்ற சிறு வரலாற்றுக் குறிப்பு நூல், சிறு பிரசுரங்கள் தவிர, வேறெதுவும் கிடைக்கவில்லை. அவர் நடத்திய பத்திரிகையின் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை.

அவரது இருபதாண்டு கால தென்னாப்பிரிக்க வாழ்க்கை பற்றிய பதிவுகள் கிடைக்கவில்லை.

இப்படியாக, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுமை கொள்ளாமலே இருக்கிறது.

இவ்வாறான ஆதாரங்களைத் திரட்டிப் பார்த்தால் தான் அவர் மேற்கொண்ட பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளுக்கு இடையேயான இணக்கத்தையும் தொடர்ச்சியையும் முரண்களையும் கண்டறிய முடியும். அவ்வாறு அறியும் போது தான் ஒடுக்கப்பட்டோர் அரசியலின் இடைவெளிகளை நிரப்ப முடியும்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் நீங்களும் விவசாயி தான்...


இன்று உலகமே விவசாயத்தை நோக்கி தன் பார்வையை திருப்பி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் எனப் பலவற்றில் பணிபுரிந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் கூட... சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித் தகவல் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கான கட்டுரை இது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழு அம்சங்களைத் தெரிந்து கொண்டாலே போதும்... வெற்றிகரமான விவசாயியாக மாறி விடலாம்.

பட்டம்:

'பருவத்தே பயிர் செய்' என்று சொல்வார்கள். ஒவ்வொரு பயிருக்கும் விதைப்பதற்கான பருவம் அல்லது காலகட்டம் உண்டு. அதுதான் 'பட்டம்'. குறிப்பாக பட்டம் என்பது தமிழ் மாதத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்படும். பாரம்பர்ய விவசாயம் மற்றும் நாட்டு ரக விதைகளுக்கு பட்டம் முக்கியமானது. ஒவ்வொரு பட்டத்திலும் அதற்கான பயிரை மாற்றி மாற்றி சாகுபடி செய்து வரும்போது நிலத்தின் வளம் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். பொதுவாக ஆடிப்பட்டம் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

பருவம்:

பட்டத்துக்கும் பருவத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. பருவமழை, குளிர்காலம், கோடைகாலம் போன்ற பருவங்களை அடிப்படையாக வைத்துதான் பட்டங்கள் கணக்கிடப்படுகின்றன. அதனால், பருவங்களையும் அதற்கேற்ற பயிர்களையும் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பருவ மழைக்காலங்களை அறிந்திருக்க வேன்டும். நமக்கு தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று மூலம்தான் மழை கிடைக்கிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்று வீசும். தென்மேற்குப் பருவக்காற்று, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும். இந்த மழைக்காலங்கள்தான் நமது விவசாயத்துக்கான முக்கிய காலங்கள்.

விதைநுட்பம்:

சாகுபடிக்கு முன்னர் விதைத்தேர்வு அதிமுக்கியமானது. பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தேர்வு செய்வது நல்லது. வீரிய ரக விதைகளை விதைப்பது தவறில்லை என்றாலும் நமது நாட்டின் அனைத்து சீதோஷ்ண நிலைகளையும் தாங்கி வளர்பவை நாட்டு விதைகளே. எந்த விதையாக இருந்தாலும் நம்பகமானவர்களிடமிருந்து தரமான விதைகளை வாங்க வேண்டும்.

இடுபொருட்கள் :

இன்றைய காலகட்டத்தில் இயற்கை விளைபொருட்களுக்குத் தேவை அதிகரித்து வருவதால், இயற்கை இடுபொருட்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம். அதிலும், நம் நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இடுபொருட்களைத் தயாரிப்பதுதான் தற்சார்பு விவசாயம். நாட்டு மாட்டு எரு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள், அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் எனப் பல இடுபொருட்கள் உள்ளன. இவற்றைத் தயாரிக்கும் விதத்தையும் பயன்படுத்தும் விதத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு மாடுகள்:

இயற்கை விவசாயத்துக்கு அவசியமானவை நாட்டு மாடுகள். நாட்டு மாடுகளின் சாணம்தான் சிறந்த உரம். தவிர,  நாட்டு மாட்டுப் பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாட்டு மாட்டுப் பாலை குடித்து வந்தால் பல நோய்கள் தவிர்க்கப்படும். நாட்டு மாட்டின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்களைத் தயாரிக்கலாம். காங்கேயம், உம்பளாச்சேரி, சிந்தி, தார்ப்பார்க்கர், சாஹிவால் எனப்பல நாட்டினங்கள் உண்டு.

சீசன் - சந்தை விலை:

எந்த சீசனில் எந்த பொருளுக்குத் தேவை அதிகம் என்பதை அறிந்து அதற்கேற்ப பயிரிட வேண்டும். அப்போதுதான் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அதனால், விலை நிலவரம், விளைபொருட்களின் தேவை ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

மதிப்புக்கூட்டல்:

விளைபொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல், அவற்றை மதிப்புக் கூட்டும்போது நல்ல லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, விளைபொருட்களை தூசு தும்பு இல்லாமல் சுத்தப்படுத்தி சந்தைக்கு எடுத்துச்சென்றாலே கூடுதல் விலை கிடைக்கும். அவ்வற்றை பதப்படுத்தி மதிப்புக் கூட்டி பழச்சாறு, ஜாம் போன்ற பொருட்களைத் தயாரிக்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதேபோல பாலாக விற்பனை செய்யாமல் வெண்ணெய், நெய், பனீர் எனத் தயாரித்து விற்பனை செய்யும்போது கூடுதல் லாபம் பார்க்கலாம். அதனால் மதிப்புக்கூட்டலையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

விவசாயமும் ஒரு அறிவியல்தான். அதனால் அது குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு களம் இறங்கும்போது கண்டிப்பாக வெற்றி பெற முடியும்...

காவலர்கள் தமிழ்நாடு முழுவதும் பாஜக எச்ச. ராஜா வை தேடுறாங்கலாம்... யார் காதுல பூ சுத்த ?


போலீஸ் வேடத்தில் வியாபாரியிடம் ரூ 2.5 லட்சம் கொள்ளை.. கேரள எல்லையில் தொடரும் வழிப்பறி...


போலீஸ் வேடத்தில் கேரளா எல்லையான வாளையார் பகுதியில் இரவில் வாகனசோதனையிலு ஈடுபட்ட சிலர் ரு 2.5 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போலீஸார் வேடத்தில்   இரவில் போலீஸ் வாகனத்துடன் வாகன சேதனையில் ஈடுபட்ட சிலர் ரூ  2.5 லட்சம் மற்றும் 4 கைப்பேசிகள் எடிஎம் கார்ட் போன்ற பொருள்களை நேற்று காலை கொள்ளையடித்து சென்றனர்.

கால்நடை வியாபாரிகளான பாலக்காடு பத்திரிபாலம் பகுதியை சேர்ந்த பசீர்(47) மன்சூர் (33) சுக்கூர் ( 23) ஆகியோர் ஆந்திராவிலிருந்து வியாபாரம் முடித்து கேரளாவை நோக்கி காரில் வந்துகொண்டு இருந்தனர்.

நேற்று காலை 4 மணியளவில்  வாகனம் போன்ற தோற்றத்தில் காவல்துறை அதிகாரிகள் போல் வேடமிட்ட 5 பேர்  காரை தடுத்து, சோதனை செய்ய வேண்டும் என்று மூவரையும் கடத்தி சென்று,கையில் அசலான விலங்கை மாட்டி, முகத்தை மூடி   மிளகாய்தூவி வாளையார் காட்டில் தள்ளிவிட்டுவிட்டு வாகனம் மற்றும் கையிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

வாளையாரில் தள்ளிவிடப்பட்ட வியாபாரிகள் கேரளா _வாளையார் காவல்நிலையத்தில் தொடர்பு கொண்டனர். வாளையார் காவலர்கள் மற்றும் சாவடி காவலர்கள் மதியம் வரை தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பின்னர் கார் மட்டும் வாளையாரு அருகில் கண்டுபிடிகண்டுபிடிக்கபட்டது. சாவடி போலீஸார் புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தால் குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்று கூறப்படுகிறது...

கார்பரேட்களுக்கு இந்தியா விற்பனை...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


மெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர்.

(விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா?).

பல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.

1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர்.

அவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.

தொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.

மேலும் பயணிப்போம்...

பாஜக ஜால்ரா அதிமுக மாஃபா...


இயக்கவியலை உணர்த்தும் படங்கள்...


முதல் படம் இங்கு எல்லாம் காடுகள் என்றும் காடுகள் அழிக்கப்பட்டு சமவெளி உருவாக்கப்பட்டு நாகரிகம் என்ற அடிமை வாழ்கை உருவான விதம் பற்றி கூறும் படம்  (மண்ணின் மைந்தர்கள் அடிமை ஆக்கப்பட்ட கதை)...

இரண்டாவது படம் சமவெளி உருவான பின் ஜமின், பண்ணையார், பண்ணை அடிமையின் கதை (இதில் ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் பாருங்கள் புரியும்)...

அதிமுக விஜய பாஸ்கர் கலாட்டா...


உட‌ல் நலனு‌க்கு ஏ‌ற்றது நில‌க்கடலை இருதய‌ம் பல‌‌வீனமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் முளைக‌ட்டிய ப‌ச்சை‌ப் பரு‌ப்பை சா‌ப்‌பி‌டுவது ந‌ல்லது...


முழு ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம்.

உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம்.

ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம்.

உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது...

திருட்டு திமுக ஓழிக...


மனச்சங்கிலி...


நாம் அனைவரும் கோவிலில் யானையை பார்த்திருப்போம். அதன் காலில் ஒரு சங்கலி கட்டபட்டிருக்கும். பாகன் கையில் ஒரு கம்பை வைத்து குத்தி அடக்கி வைத்திருப்பான்.

யானை மனிதனை விட பல மடங்கு பலம் வாய்ந்தது. ஆனால் சிறிய பாகனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறது.

அவன் சொன்னால் ஆசீர்வாதம் கொடுக்கிறது, காசு வாங்குகிறது.

உண்மையில் யானையை கட்டுபடுத்துவது அதன் ஆழ் மனதில் பதிந்த எண்ணம்.

யானை சிறுவயதில் இருக்கும் போதே பாகன் சங்கிலியால் கட்டி வைத்து கட்டுபடுத்துகிறான்.

யானை சங்கிலியை உடைக்க முயன்று முடியாமல் முயற்சியை  கைவிட்டிற்கும்.

இப்போது அது வளர்ந்து பெரிய யானையாக இருக்கும். ஆனால் அது சங்கிலியை உடைக்க இப்போது முயற்சி செய்யாது.

நீங்கள் உற்று நோக்கினால் அவ்வப்பொழுது தன் கால்களை அசைக்கும் யானை சங்கிலி கட்டிருக்கும் காலை அசைப்பது இல்லை.

சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் யானையின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது. அதனால் தான் கட்டுப்பட்டு நிற்கிறது.

யானைய போல நம்மில் பலபேர் நிறைய மன சங்கிலிகளை கட்டி கொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு எனக்கு கணக்கு வராது, அது ரொம்ப கஷ்டம், அது என்னால் செய்ய முடியாது முதலியன.

இந்த சங்கிலிகளை நாம் உடைத்து எரிய வேண்டும்.

தியானம் பழகினால் இந்த சங்கிலிகளை உடைத்து எரிந்து விடலாம்.

நாம் தியானம் செய்யும் போது எண்ணங்களின் வேகம் குறைந்து மனம் பீட்டா நிலையில் இருந்து அல்ஃபா நிலைக்கு வருகிறது.

நமது ஆழ்மனம் திறக்கபடுகிறது.

இந்த அல்ஃபா நிலைதான் முன்னோர்கள் கூறும் துரிய நிலை ஆகும்.

தியானம் ஆழ் மனதை திறக்கும் அற்புத சாவி...

மருத்துவ மாப்பியா வின் ஏமாற்று கல்வி முறை...


தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்...


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது...

பாஜக மோடியும் கருப்பு பணமும்...


குதிரை சிலையின் மறைபொருள்...


நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.

குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..

அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை,  இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...

பாசிச பாஜக ஓழிக...


வைகோவை போல ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்- சத்தியராஜ்...


அந்த மானங்கெட்ட புரோக்கரை போல நாங்க ஏன்டா வாழனும்...

பாஜக எம்.பியின் காலை கழுவி தண்ணீரை குடித்த தொண்டர்.. குவியும் கண்டனங்கள்...


ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. அவர் தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த கட்சி தொண்டர் ஒருவர் நிஷிகாந்த் துபேயின் காலை தண்ணீரால் கழுவி, துடைத்தார். பிறகு அந்த நீரை தீர்த்தமாக குடித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிஷிகாந்த், ஜார்கண்டில் விருந்தினர்களை கவுரவிப்பதற்காக அவர்கள் கால்களை கழுவது சாதாரணமாக நடப்பது.

மகாபாரதத்தில் கிருஷ்ணரே சுதாமாவின் காலை கழுவி விட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தாம் செய்த தவறை மறைப்பதற்காக இதுபோன்று நியாயப்படுத்தி எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியுள்ளார்...

நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு பாஜக எச்ச.ராஜா மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது...


கன்னட ஈ.வே.ரா எனும் பெரியாரை மட்டும் படித்தால் போதாது...


பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..

தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.

இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?

இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?

பிராமணியத்தை கழுவேற்றப்பட வேண்டிய ஒன்று...


இந்தியத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு காரணகர்த்தா...

ஆரியக்கூட்டம் மதச்சாயம் இல்லையென்றால் என்றோ அடித்து விரட்டப்பட்டிருக்கும்...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...


72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...

பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....

பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.

ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.

ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.

பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.

இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.

எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை  திருமணம் செய்துக் கொண்டார்...

அரியலூர் மாவட்டத்தை ராம்கோ நிறுவனத்திற்கு விற்றுக் கொண்டிருக்கும் அரசு...


மனம்...


இந்த உலகத்தில் உடல் தோற்று விக்கப்படுகிறது..

பிறகு நீங்கள் உங்கள் மனதைத் தோற்று வித்துக் கொள்கின்றீர்கள்..

ஆனால்..

உங்கள் உயிர்த்தன்மை  என்பது தோற்று ஆவிக்கப் படாதது..

அது எங்கும் நிறைந்தது
எதிலும் நிறைந்தது

எப்பொழுதும்
நிறைந்துள்ளது

அதற்கு தோற்றம் என்று
எதுவும் இல்லை

ஆகவே

அதற்கு மாத்திரம் இறப்பு
என்பது இல்லை

இறப்பு என்பது உடலுக்கும்
மனதுக்கும்தான்

உயிர்த்தன்மைக்கு இறப்பு
என்பது இல்லை

ஆனால்

ஆன்மாவுக்கு அழிவு உண்டு

ஆன்மா என்றால்

மனதோடு

அதாவது ஆசைகளோடு
கலந்த உயிர்த் தன்மை

இந்த கலப்பட உயிர்த் தன்மை

பூமியில் ஆசைகள் எங்கே இருக்கிறதோ

அங்கே பிறந்து

தனது ஆசைகளை
நிறைவேற்றிக் கொள்ளும்

அப்பொழுதுதான்

கலப்பட உயிர்த்தன்மை

அதாவது ஆசைகள் நிறைந்த ஆன்மா

சுத்த உயிர்த்தன்மையாகி சுத்த
ஆன்மாவாகி பிறவியை அறுக்கும்

அது மீண்டும் பிறக்க வேண்டிய
தேவை இல்லாமல்

இந்த பிரபஞ்ச உயிர்த் தன்மையோடு கலந்து விடும்

நீங்கள் இந்த உலகத்தில் அடைந்த வெளிச் செல்வங்களான..

பணம், பதவி, புகழ்,  அடையாளம்
எல்லாவற்றையும் இறப்பு எடுத்து விடும்..

ஆனால்..

உட்செல்வங்களான அன்பு,
கருணை, அமைதி, தியான உணர்வு,

இவை அனைத்தும் உங்களோடு கூட வரும்..

இந்த நிலையில் தான் நீங்கள் இறப்பைக் கடந்து விடுகிறீர்கள்...

பண்டைய சீனாவின் மஞ்சள் பேரரசர் "ஹுவாங் டி"...

எழுத்து மற்றும் மருந்தை அறிமுகப்படுத்துதல் போன்ற பல சம்பவங்களைக் கொண்ட புகழ்பெற்ற ஹீரோ ஆவார்.

பண்டைய சீன நூல்கள் அவர் தொலைதூர நட்சத்திரமான லியோ தொகுதி நட்சத்திர அமைப்பிலிருந்து வந்தவர் என தெரிவிக்கின்றது..

மஞ்சள் பேரரசர் (ஹுவாங் டி)
கி.மு.3000ல்  வசித்து வந்தவர், மேலும் அவரது ஆட்சி பாரம்பரியமாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. மரங்கள், வில் மற்றும் அம்பு, வண்டிகள் மற்றும் படகுகள், சீன மருத்துவம் மற்றும் எழுத்து ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல் உட்பட பல கண்டுபிடிப்புகள் அவரது அறிவாற்றலுக்கு காரணமாக அமைந்தன.

ஞானம் மற்றும் புரிந்துணர்வின் ஒரு சுருக்கமான, ஹுவாங் டி, எஸொட்டரிக் கலைகளின் புரவலர் ஆவார், மேலும் அவர் ஒரு அண்ட பேரரசர் என்று கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி ஒரு பொற்காலமாக இருந்தது, அவர் மேம்பட்ட வானியல் அறிவைக் கொண்டிருந்தார், மேலும் ஒரு டிராகனின் உதவியை பெற்றுக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

சில நேரங்களில், இந்த டிராகன் உலோக அளவீடுகளைக் கொண்டதாக விவரிக்கப்படுகிறது மற்றும் மஞ்சள் சக்கரவர்த்தி, குவானாவுன் எனப்படும் ஒரு நட்சத்திரத்தில் ஒரு ஒளியை சுட்டிக்காட்டி அதை அழைப்பாராம். இந்த ஒளி நட்சத்திரம் லியோ விண்மீன் கூட்டத்தில், 79 ஒளி ஆண்டுகள் நிறைந்த ஆல்ஃபா லியோனிஸ் என்று நட்சத்திரத்தை அடையாளம் காட்டுகிறது.

மஞ்சள் சக்கரவர்த்திக்குச் சொந்தமான இன்னுமொரு புதிரான பொருள் அவருடைய மந்திர தேரர், சாங்குவானு என்று அழைக்கப்பட்டது. அவர் தனது சாம்ராஜ்யத்தின் அனைத்து மூலைகளிலும் விரைவாக பயணிக்கப் பயன்படுத்தினார்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, மஞ்சள் பேரரசர் மெட்டல் 'டிராகன்' என்று பறக்கும் தட்டில் அவரது சொந்த நட்சத்திர அமைப்புக்கு திரும்பி சென்றார் என கூறப்படுகிறது.

சீன நாகரிகத்தினை துவக்கி இருப்பது வேற்றுகிரகவாசியான ஹுவாங் டி என்ற மஞ்சள் பேரரசராகதான் இருந்திருக்க வேண்டும், வரலாற்றில் பண்டைய சீன மக்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிராத அயல்கிரக மேம்பட்ட தொழில்நுட்பங்களை  வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார், மேலும் மேம்பட்ட,விண்வெளி-நாகரீகங்களின் தொழில்நுட்பங்களையும் சொந்தமாகக் கொண்டு செயல்பட்டார்.

ஜுவானுவான் நட்சத்திரத்திலிருந்து உலோக டிராகன் என்னும் பறக்கும்தட்டிலிருந்து சீன வனத்தில் இருந்து புராண மனிதர்களிடத்தில் பிரதிநிதித்துவத்திற்கான புத்திசாலித்தனமான வேற்றுகிரக பொறுப்பாளியாக ஹுவாங் டி இருந்திருக்க வேண்டும்..

ஹுவாங் டி வந்த Xuanyuan  நட்சத்திரம் பண்டைய சீன மக்களால் உயர்வாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. மனிதகுலத்தின் பல நாகரிக வீரர்களின் தோற்றம், கில்கமேஷசில் இருந்து குவெட்ஸால்கோவால்ட் வரைக்கும், வைரோகாச்சாவில் இருந்து ஒசைரிஸ் வரைக்கும் இந்த நட்சத்திர தொகுதியின் பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது...

Pismis Nebula (NGC 6357)...


பூமியில் இருந்து 8,000 ஒளி ஆண்டுகள் தான்டி இருக்கும் சக்தி வாய்ந்த ஒளி..

Hubble Space Telescope மூலம் எடுக்க பட்ட அழகிய படம்...