நாம் அனைவரும் கோவிலில் யானையை பார்த்திருப்போம். அதன் காலில் ஒரு சங்கலி கட்டபட்டிருக்கும். பாகன் கையில் ஒரு கம்பை வைத்து குத்தி அடக்கி வைத்திருப்பான்.
யானை மனிதனை விட பல மடங்கு பலம் வாய்ந்தது. ஆனால் சிறிய பாகனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறது.
அவன் சொன்னால் ஆசீர்வாதம் கொடுக்கிறது, காசு வாங்குகிறது.
உண்மையில் யானையை கட்டுபடுத்துவது அதன் ஆழ் மனதில் பதிந்த எண்ணம்.
யானை சிறுவயதில் இருக்கும் போதே பாகன் சங்கிலியால் கட்டி வைத்து கட்டுபடுத்துகிறான்.
யானை சங்கிலியை உடைக்க முயன்று முடியாமல் முயற்சியை கைவிட்டிற்கும்.
இப்போது அது வளர்ந்து பெரிய யானையாக இருக்கும். ஆனால் அது சங்கிலியை உடைக்க இப்போது முயற்சி செய்யாது.
நீங்கள் உற்று நோக்கினால் அவ்வப்பொழுது தன் கால்களை அசைக்கும் யானை சங்கிலி கட்டிருக்கும் காலை அசைப்பது இல்லை.
சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் யானையின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது. அதனால் தான் கட்டுப்பட்டு நிற்கிறது.
யானைய போல நம்மில் பலபேர் நிறைய மன சங்கிலிகளை கட்டி கொண்டிருக்கிறோம்.
உதாரணத்திற்கு எனக்கு கணக்கு வராது, அது ரொம்ப கஷ்டம், அது என்னால் செய்ய முடியாது முதலியன.
இந்த சங்கிலிகளை நாம் உடைத்து எரிய வேண்டும்.
தியானம் பழகினால் இந்த சங்கிலிகளை உடைத்து எரிந்து விடலாம்.
நாம் தியானம் செய்யும் போது எண்ணங்களின் வேகம் குறைந்து மனம் பீட்டா நிலையில் இருந்து அல்ஃபா நிலைக்கு வருகிறது.
நமது ஆழ்மனம் திறக்கபடுகிறது.
இந்த அல்ஃபா நிலைதான் முன்னோர்கள் கூறும் துரிய நிலை ஆகும்.
தியானம் ஆழ் மனதை திறக்கும் அற்புத சாவி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.