இந்த உலகத்தில் உடல் தோற்று விக்கப்படுகிறது..
பிறகு நீங்கள் உங்கள் மனதைத் தோற்று வித்துக் கொள்கின்றீர்கள்..
ஆனால்..
உங்கள் உயிர்த்தன்மை என்பது தோற்று ஆவிக்கப் படாதது..
அது எங்கும் நிறைந்தது
எதிலும் நிறைந்தது
எப்பொழுதும்
நிறைந்துள்ளது
அதற்கு தோற்றம் என்று
எதுவும் இல்லை
ஆகவே
அதற்கு மாத்திரம் இறப்பு
என்பது இல்லை
இறப்பு என்பது உடலுக்கும்
மனதுக்கும்தான்
உயிர்த்தன்மைக்கு இறப்பு
என்பது இல்லை
ஆனால்
ஆன்மாவுக்கு அழிவு உண்டு
ஆன்மா என்றால்
மனதோடு
அதாவது ஆசைகளோடு
கலந்த உயிர்த் தன்மை
இந்த கலப்பட உயிர்த் தன்மை
பூமியில் ஆசைகள் எங்கே இருக்கிறதோ
அங்கே பிறந்து
தனது ஆசைகளை
நிறைவேற்றிக் கொள்ளும்
அப்பொழுதுதான்
கலப்பட உயிர்த்தன்மை
அதாவது ஆசைகள் நிறைந்த ஆன்மா
சுத்த உயிர்த்தன்மையாகி சுத்த
ஆன்மாவாகி பிறவியை அறுக்கும்
அது மீண்டும் பிறக்க வேண்டிய
தேவை இல்லாமல்
இந்த பிரபஞ்ச உயிர்த் தன்மையோடு கலந்து விடும்
நீங்கள் இந்த உலகத்தில் அடைந்த வெளிச் செல்வங்களான..
பணம், பதவி, புகழ், அடையாளம்
எல்லாவற்றையும் இறப்பு எடுத்து விடும்..
ஆனால்..
உட்செல்வங்களான அன்பு,
கருணை, அமைதி, தியான உணர்வு,
இவை அனைத்தும் உங்களோடு கூட வரும்..
இந்த நிலையில் தான் நீங்கள் இறப்பைக் கடந்து விடுகிறீர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.