04/02/2021
எண்ணமின் அலைகளின் பயணம்...
நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.
எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.
அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.
அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.
அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.
அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.
எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.
அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...
பசி உணர்வு...
பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம்..
இருவருக்கும் பசி என்பது பிரச்சனை தரும் ஒன்று. இந்த பசி உணர்வு எப்படி தோன்றுகிறது. நமது ரத்தத்தில் சாதாரணமாக 80ல் இருந்து 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருக்க வேண்டும்.
இந்த குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் அளவை எடுத்துப்பார்த்தால் எல்லோருக்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும்.
அதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுக்கோஸ் இருந்தால் அதை தேவையில்லை என்று நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 80-90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும். ரத்தத்தில் குளுக்கோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும். காஸ்ட்ரின் என்ற ஒரு ஹர்ர்மோன் தோன்றும்.
இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் பிரச்சனைதான் பசி. குளுக்கோஸ் குறைவான ரத்தம் மூளைக்கு போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்குத்தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப்படுகிறது.
எதைப்பற்றியும் அதற்கு கவலையில்லை. தனக்கு வேண்டிய பங்க கச்சிதமான வந்து சேர்ந்து விட வேண்டும். அதிகமான ரத்தம் மட்டுமல்லாமல் தரமான குளுக்கோஸ் நிறைந்த ரத்தமே வேண்டும். அப்படி கிடைக்காத போது மூளை தெரிவிக்கும் இந்த எதிர்ப்புதான் லேசான மயக்கம், காதை அடைக்கிறது, கண் பஞ்சடைவது போன்றவை..
8 மணி நேரம் சாப்பிடவில்லை. தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றால் டீஹைட்ரஜன் தொடங்கும். அதனால் காதடைப்பு, மயக்கம் இன்னமும் அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களை இந்த குளுக்கோஸ் பிரச்சனை படாதபாடுபடுத்தும். அதனால் தான் அவர்களால் பசியை தாங்க முடிவதில்லை...
உலக புகழ் பெற்ற செக்ஷ்சாலஜிச்ட்...
புகைபடத்தில் இருப்பவர் டாக்டர் ஹர்ஷ் பீல்டின்..
இவர் தான் ஐரோப்பாவின் முதல் செக்ஸ்சால்ஜிஸ்ட்..
காமம் சம்பந்த பிரச்னை செக்ஸ் சம்பந்தமான அணைத்து கவுன்சிலிங்கையும் அறிமுக படுத்தியவர் இவரே....
ஆண் ஓரின சேர்கை பற்றி உளவியல் ரீதியாக விவரித்து 3 நூற்களை எழுதியுள்ளார் அவை இன்றும் மருத்துவ உலகில் பெரிதாக பேசபடுகிறது.....
பாலியல் நோய்க்கான சிகிச்சை பாலியல் விழிப்புணர்வு குறித்து மாநாடு உலகில் உள்ள பாலியல் சம்பந்தமான 35,000 புகைப்படங்கள் அணைத்து மொழியிலும் அச்சடித்து உலகில் உள்ள நூற்கள் என்று நூலகம் ஆராய்ச்சி கழகம்.. உலக மருத்துவர்கள் மாநாடு என்று அன்றைய காலத்தில் பேசபயந்த விஷயத்தை பற்றி தயிரியமாக பேசியவர் மற்றும் தொடங்கியவர் இவர்..
இவரது ஆய்வு கூடம் மற்றும் நூலகத்திற்கு சென்று பார்த்த உலக தலைவர்கள் ஏராளம்..
அதில் நம்ம நேருவும் ஒருவர்..
1927 ம் ஆண்டு நேரு பெர்லின் சென்ற பொழுது ஆய்வு கூடத்தை பார்த்து பரவசப்பட்டு வந்துள்ளார்..
அய்யா நேரு அவர்களுக்கும் டாக்டர் ஹர்ஷ் பீல்ட் அவர்களும் நட்பு ஏற்பட்டு உங்களின் ஆலோசனை எங்கள் இந்தியாவிற்கு தேவை என்று இந்திய சென்ற பின்பு டாக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்..
அதனடிப்படையில் ஹர்ஷ் பீல்ட் இந்தியாவிற்கும் வந்தார் 1931 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி செக்ஸ் சம்பந்தட்ட விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்..
மற்றும் பாலியல் புகைப்படங்களை காட்டி விளக்கவும் செய்துள்ளார்.
இதை கேட்க்க [பார்க்க] இந்தியாவில் இருந்து ஆயிரகணக்கான மருத்துவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்...
அலஹாபாத்தில் நேரு குடும்பத்திற்கு சொந்தமான மாளிகை ஆனந்த பவன் இதில் காந்தி அடிகள் தங்குவதற்கென்று பிரத்யேகமாக அணைத்து வசதிகளும் அடங்கிய அறை உள்ளது..
காந்தியை தவிர இங்கு யாரும் தங்கியது கிடையாது...
முதன் முதலாக வேறொரு அதுவும் வெளிநாட்டினராக தங்கியது டாக்டர் ஹர்ஷ் பீல்ட் தான்...
திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்...
பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ.
பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய் --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.
எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?
1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா... கோ.. விந்தா....
2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?
3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?
4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன், முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?
5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?
6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?
7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?
8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்?
அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?
9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?
10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?
சுருக்கமாக,
பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது..
எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்..
மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....?
அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?
தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்..
நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய்..
உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய்..
எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக...
முருங்கைப் பூ மருத்துவம்...
முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கைப் பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.
முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.
மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.
நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.
உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.
உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.
முருங்கையில் உள்ள பூ, காய், வேர், கீரை, பிசின் என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இயற்கை நமக்களித்த இத்தகைய உன்னதமான முருங்கையை நம் எளிதாக வீட்டிலே வளர்த்து பயனடையலாம்...
குடல் புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்...
சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.
வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்...
அரவமும் வடுகும்...
சங்ககாலத்தில் தமிழகத்தில் இருபத்துநான்கு நாடுகள் இருந்தன. அவற்றில் வட ஆர்க்காடு செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்கள் அடங்கியது அருவாநாடு.
அதற்கும் வடக்கே இருந்தது அருவா வடதலை நாடு என்பது.
இதற்கும் வடக்கே இருந்தவர்கள் தெலுங்கர். அவர்கள் அறிந்த தமிழர்கள் அருவர்கள் அல்லது அரவர்கள்.
ஆகவே தமிழர்களுக்குப் பொதுவாக அந்தப் பெயர் தெலுங்கில் ஏற்பட்டது.
நமக்கும் வடக்கே இருந்ததனால் அவர்கள் வடுகர். அவர்கள் பேசும் மொழியை 'வடுகு' என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணியருக்கு நாம் வடக்கே இருப்பதால் நாம் அவர்களுக்கு வடக்கத்தியார்.
தஞ்சாவூர்க்காரர்களுக்கு மதுரை/திருநெல்வேலிக் காரர்கள் தெங்கணத்தார் - தென்கணத்தார்கள் என்றால் தெற்கில் உள்ளவர்கள்.
மதுரைக் காரர்களுக்குத் தெருநெல்வேலிக்காரர்கள் 'தெற்கத்தியான்'கள்...
குடும்பம் - வேலை - கிராமம் - நகரம்...
குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகளை கிராமம் மற்றும் நகரத்தை வைத்து ஒரு பார்வை..
கிராமம்: வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒரே தொழிலின் வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்வார்கள்… ஆண்கள் தோட்ட / வயல் வேலைக்கு போறதும்.. வீட்டில் உள்ளவர்கள் அந்த விளைபொருட்களை ஒருங்கிணைப்பதிலும்.. வேளாண்மைக்கு தேவையான மாடு வளர்ப்பில் அதிகமாக பெண்களின் பங்கு இருக்கும்.. வயதானவர்களும் அவர்களால் முடிந்த வேலைகளை இந்த தொழிலை ஒட்டியே காலம் கழிப்பர்கள்.. உணவு தயாரிப்பதை பெரிய நேரமெல்லாமல் செலவிடாமல் இருப்பதை வைத்து சமைத்து உண்பார்கள்.. இதுவே மற்ற தொழில்களுக்கும் பொருந்தும்… குழந்தைகள் பெரியவர்கள் செய்யும் தொழிலை பார்ததே வளர்வார்கள் அவர்களின் விளையாட்டுகளும் அங்கு கிடைத்தவற்றை வைத்தே.. அவர்களை அறியாமலே இயற்கையுடன் வாழப்பழகுவார்கள்.. இதில் சொந்த பந்தங்களின் விழாக்களுக்கும் ஊர்/கோவில் விழாக்களிலும் அனைவரும் பங்கெடுப்பார்கள்.. வெளியூர் விழாவிற்கு மட்டுமே அனைவரும் போக மாட்டார்கள்… ஒரு தொழில் மற்றும் அதைச்சார்ந்த தொழிலை மட்டுமே செய்யும் குடும்பங்களில் மட்டுமே மரபறிவை எளிதாக கடத்தமுடியும்.. இதைதான் நம் முன்னோர்கள் அனைத்தையும் வழிவழியாக கடத்தினார்கள்...
இந்த பெண்களின் உழைப்பை தடுக்கவே இந்த தொலைக்காட்சியும் தொடர்களும் கிராமம் வரை ஊடறுத்து இப்போது இதை சிதைத்தேவிட்டது என்று சொல்லலாம்.. ஆண்களுக்கு கிரிக்கெட் என்ற விளையாட்டை வைத்து அவர்களின் உழைப்பையும் தடுத்தார்கள்.. இப்ப தெரிந்திருக்கும் ஏன் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தார்கள் என்று.. சினிமாவால் சாதிக்க முழுமையாக முடியாத்தை தொலைக்காட்சிபெட்டி கட்சிதமாக செய்தது!
நகரம்: ஆண் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்ப முடியும்.. ஆனால் அந்த வேலையில் ஏற்படும் சலிப்பினால் தன் பிள்ளைகளை வேறு வேலைக்கு படிக்க வைப்பது என சிந்திப்பது.. வீட்டில் உள்ள உள்ள பெண்ணிற்கு கிடைக்கும் நேரங்களில் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று இருப்பது.. அதில் வரும் விளம்பரங்களை வைத்து விட்டில் இருக்கும் கலாச்சாரத்தையே மாற்றிவிடுவது.. பிள்ளைகளை பள்ளிக்கு போய் யாருடைய வராலாற்றையோ அல்லது குடும்பத்திற்கு தேவையற்ற கணக்கு/அறிவியல்/மொழியை கற்பதே பிரதான வேலையாக இருக்கும்.. இருக்கும் மீதி நேரங்களில் நடனம் / இசை வாத்தியங்கள் / பாட்டு பாடுதல் என ஊர்பட்ட சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புதல் .. மிச்ச நேரம் கார்டுனும் அலைபேசியுமாக நேரத்தை கழிக்ககின்றன.. நண்பர்களுடன் குழந்தைகள் விளையாடும் நேரம் மிகக்குறைவு.. வீட்டில் பெரியவர்கள் இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு வேலையும் இருப்பதில்லை அதனால் ஆன்மீக வியாபாரம் எளிதாக அவர்கள் மூலமாக திணிக்கப்படுகிறது தொலைக்காட்சி மற்றும் தெருவில் உள்ள கோவில்களின் வழியாக.. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் பயணித்தால் எப்படி ஒற்றுமையாக வாழமுடியும் .. இந்த வாழ்வியலில் யார் தான் செய்யும் வேலையை தன் பிள்ளைக்கு கடத்துகிறார்கள் என்று பாருங்கள் மிகக்குறைவு! இது ஒரு வகை குடும்ப வாழ்வியல் சிதைப்பு.. அனைவரையும் இயற்கையாக உள்ள வாழ்ககையை தடுத்து செயற்கையான வாழ்ககை முறையை திணித்தல்… இது தவிர பத்திரிக்கைகளையும் / ஊடகங்களையும் பார்க்கும் பெரியவர்கள் யாருக்கு அதை கடத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை.. சொந்த பந்தங்களின் விழாக்களுக்கு இந்த நகரத்தில் இருப்பவர்களின் பங்களிப்பை பாருங்கள், காரணங்கள் வேலைப்பளு / பயணிக்கமுடியாத நிலை / பணமில்லாமை.. இவை படிபடியாக குறைந்துகொண்டே வருகிறது, இது ஒரு வகை குழுக்களாக வாழ்ந்தவர்களை பிரித்தெடுப்பது..
இதற்குதான் கல்வி என்ற மாயை உங்களுக்கு வலிந்து கொடுக்கப்பட்டது… உங்களை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்த..
தற்சார்பு_வாழ்வியல்...
மக்கள் விரோத பாஜக மோடி அரசின் திட்டம் மீண்டும் இதை உருவாக்கத் தான்...
1876 1877 1878 1879 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பித்த பஞ்சம் 55 லட்சம் உயிர்களை காவு வாங்கியது...
தமிழ் நாடு, கர்னாடகா, ஆந்திரா, பீகார், மஹாராஸ்ட்ரா உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் வரை இந்த பஞ்சம் பாதிப்பு இருந்தது..
பஞ்சத்தால் மக்கள் இங்கு மடிந்து கொண்டு இருந்த பொழுது வெள்ளைக்கார பிரிடிஷ் அரசு நம் மண்ணில் உற்பத்தியான உணவுப் பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது..
இந்த பிரிடிசு அரசின் கிறிஸ்துவம் தான் இன் நாளில் பால் பவுடர் கொடுத்து பள்ளிகளில் பாடம் சொல்லி கொடுத்த அப்பாவிகள் என்று திருட்டு திராவிடம் சொல்லுது...
தீக்காயமா... மருந்தை தேடி அலையாதீர்கள்...
தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.
சிறிது நேரத்தில் வெள்ளைக் கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்.
தொடர்ந்து செய்து வந்தால், அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்.
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே...
சிறு கீரை மருத்துவம்...
சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுகீரையுடன் இஞ்சி , பூண்டு , பெருங்காயம் , மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.
சிறுகீரை , பார்லி ஆகியவற்றோடு சீரகம் ( சிறிதளவு ) மற்றும் மஞ்சள்தூள் ( 4 சிட்டிகை ) சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக் கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சிறுகீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்...