1976இல் செவ்வாயை ரோந்துசுற்ற அனுப்பப்பட்ட நாஸாவின் வைக்கிங் வின்கலன். மனிதமுகம் போல ஒரு வஸ்துவை பூமிக்கு படம்பிடித்து அனுப்பியது. இதைவைத்து, செவ்வாயின் இந்த இடம் (முகம்) வேற்றுகிரகவாசிகள் செவ்வாயிலிருந்து நமக்கு அனுப்பியுள்ள செய்தி என வேற்றுகிரக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ரிச்சர்ட் ஹோக்லாண்ட்
(Richard Hoagland) என்பவர் செவ்வாயில் உள்ள வேற்றுகிரகவாசிகள் நாம் பார்ப்பதற்காக மலைகளை குடைந்து செதுக்கியது என்று பரப்பினார். அமேரிக்காவில் இக்கரையில் இருந்து அக்கரை வரை வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்த உண்மையை கூறினார்.
நாஸா பொய் சொல்கிறது. வேற்றுகிரகவாசிகள் செவ்வாயில் இருப்பதை அது சுயநலத்திற்காக மறைக்கிறது, வேற்றுகிரகவாசிகளிடம் தொடர்பு செய்து ஒப்பந்தம்செய்து இருப்பதை மக்களிடம் மறைக்கிறது. இப்படி சென்றது அவர் வாதங்கள்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள கன்செப்சியான் பள்ளம் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் பாறையில் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ள காட்சிகள் நன்றாக பதிவாகியுள்ளன.
அதில் தெரியும் ஒரு முகம் பண்டைய காலத்தில் வாழ்ந்த அசிரியர்களின் கடவுளான நாபுவின் முகம் போன்று உள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் ஸ்காட் வாரிங் என்பவர் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ் வாழ்ந்துவந்தார்கள் என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி.
மேலும் அசிரியர்கள் அப்போது விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்று தங்களின் கடவுளின் முகத்தை செதுக்கியுள்ளனர் என்பதும் இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எனினும் நாசா விவகாரம் குறித்த உண்மையை மக்கள் அறிந்துகொள்வதை நாசா விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாசாவின் தரப்பில் படத்தில் புலப்படுவதாக உள்ள இடம் டொனியா (cydonia) எனப்பெயரிடப்பட்டு, செவ்வாயில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள். மாரினர் வின்கலன் 1976இல் செவ்வாயில் தரையிறங்குவதற்குள் அனுப்பிய வேறு ஆங்கிள்களில் இதே இடத்தை எடுக்கப்பட்ட படங்கள்.
மார்ஸ் ரெக்கொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் வின்கலன் சமீபத்தில் 2005இல் எடுத்த படங்களில் மனித முகம் வெறும் மலைப்பிரதேசம். சாதாரண பகுத்தலில், ஒரு கோணத்தில், வைக்கிங் புகைப்படங்கள் மனிதமுகம் போல திரித்து காட்டியுள்ளது.
பொட்டலில் உலவுகையில், சட்டென வானத்தை நோக்குகையில் மேகங்கள் ஒரு மனித அல்லது மிருகத்தின் உருவத்தையோ முகத்தைப்போலவோ தெரியுமே, அதுபோல. சற்று விலகிசென்றோ அல்லது சிறிது நேரம் கழித்து நோக்குகையில் மேகத்தின் பேட்டர்ன் மாறிவிடும். ஹோக்லாண்ட் இப்போது வேறு கன்ஸ்பிரஸி தியரிக்கு தாவிவிட்டதாக கேள்வி.
இதைப்போலத்தான் பெர்சிவால் லொவெல் இங்கிருந்தபடியே நம்பிய செவ்வாயின் நீரோட்ட கால்வாய்கள். ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாய் பரப்பை பல பாகங்களாய் புகைப்படமெடுத்ததை ஒட்டி சேர்த்துப்பார்த்தால் கால்வாய்கள் தென்படவில்லை.
பெர்சிவால் லொவெல் கால்வாய்கள், ஹோக்லாண்ட் செவ்வாய் மனிதமுகம் இதையெல்லாம் கடந்து, அறிவியல் ரீதியாய் பரிசோதனைகள் செய்து, செவ்வாயில் நிஜமாகவே உயிர் இருக்கலாமோ என்று விஞ்ஞானிகளை உந்திவிட்ட விஷயம் முதலில் நம் பூமியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
நாசாவில் செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அஸ்வின் வசவதா என்பவர் இது குறித்து கூறியதாவது, வேற்றுகிரகவாசிகள் குறித்த எந்த விவரங்களையும் விஞ்ஞானிகள் சாதாரண மக்களிடம் இருந்து மறைக்கவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் கடவுள்களின் உருவங்கள் தெரிவதாக புதிதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மலைகளில் புத்தரின் சிலை செதுக்கப்பட்டிருந்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
இவர் என்ன தான் புரளிகள் என அறிவியல் விளக்கம் தந்தாலும்
இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்.
அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா...