பேராவூரணி அடுத்த அணவயல் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தினர் தரிசுநிலத்தை பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கால சந்ததியினர் பனை மரங்களின் பலனை அறிய முடியாத நிலை உள்ளது. அரிய பறவை இனங்களுக்கு வாழ்வாதாரமாகவும் பனை மரங்கள் உள்ளன.
தூக்கணாங்குருவி உள்ளிட்ட உயரமான இடங்களில் வசிக்கும் சில பறவை இனங்கள் பனை மரத்தில் கூடு கட்டி வசிப்பவை. பனை மரங்கள் அழியும்போது, இந்தப் பறவை இனங்களும் அழிவுக்கு தள்ளப்படும். ஒரு பறவை அழிந்தால் 10 மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.
எனவே, பனை மரம் வளர்ப்பில் வருங்கால சந்ததிகளுக்கு உள்ள பொறுப்பை உணர்த்தும் வகையில் பள்ளிக்கு வரும்போது கிடைக்கும் பனை மர விதைகளை மாணவ, மாணவிகள் கொண்டு வர கேட்டிருந்தோம். இதன்படி சில மாதங்களாக பனை மர விதைகளைச் சேகரித்தோம். எங்கள் உள்ள ஏரி மற்றும் குளம் பகுதியில் பனை விதைகளை விதைக்கப்பட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.