அவ்வாறு தோன்றிய உடல் கண், காது, மூக்கு, பல், கை, கால் என அனைத்தையும் தானே வளர்த்தெடுக்கிறது.
அவ்வுடலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால்கூட தன்னைத்தானே சரிசெய்தும் கொள்கிறது. அதாவது ஒரு உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் கலையே “உடலியல்” ஆகும்.
நீர்நிலைகளில் வாழும் விரால் மீனோ வறட்சிக்காலங்களில் மண்ணிற்கு அடியில் சென்று சமாதிநிலை அடைந்துவிடும். நீர், உணவு, சுவாசம் இல்லாமல் சுமார் 3 வருடங்கள் வரை அது தாக்குப்பிடிக்கும்.
மீண்டும் மழைவரும் காலங்களில் அது மண்ணிற்கு வெளியே வந்து துள்ளிக்குதிக்கும். கல்லுக்குள் வாழும் தேரைகூட சமாதிநிலை அடைந்து எத்துனை ஆண்டுகளானாலும் மீண்டுவரும்.
மனிதனைத் தவிர இவ்வுலகில் வாழும் ஏறக்குறைய எல்லா உயிர்களுமே இந்த “உடலியல்” என்னும் “மெய்யியல்” கலையை நன்கு அறிந்து வைத்திருக்கின்றன.
மனிதன் மட்டும்தான் தனது பரிணாமவளர்ச்சியின் ஏதோ ஒரு படிநிலையில் இம்மெய்யிலை தொலைத்திருக்கிறான்.
இயற்கையிடமிருந்து விலகிப்போன அவன் உடலை மீண்டும் இயற்கையோடு பொருத்தும் செயலையே அக்காலத்தில் சித்தர் செய்திருக்கின்றனர்.
உடல் எவ்வாறு தன்னைத்தானே வளர்த்து சீர்செய்து கொள்கிறது என அவர்கள் ஊன்றி ஆராய்ந்திருக்கின்றனர்.
அண்டத்தின் இயக்கமே பிண்டத்தின் இயக்கம் என்னும் பேருண்மையை சித்தர்கள் அறிந்திருந்தால் உருவமில்லா செயல்முறை வழிபாட்டை மட்டுமே மக்களுக்குப் பயிற்றுவித்து வந்தனர்.
கற்சிலையிடம் போய் வாழ்வதற்கு வழிகேட்கும் முட்டாள்தனத்தை நம் முன்னோர்கள் ஒருபோதும் செய்ததே இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.