03/10/2018

கவரிமான் என்னும் வார்த்தையின் உண்மையான விளக்கம்...


கவரிமா அல்லது யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம்.

காட்டுக் கவரிமா மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று.

நன்கு வளர்ந்த கவரிமாக்கள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.

கவரிமாக்கள் அவற்றின் பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன.

மேலும் கவரிமாவின் காய்ந்த சாணமானது திபெத்தில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.

கவரிமாவின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது...

பாஜக - அதிமுக வின் ஹைட்ரோகார்பன் சதிகள்...


வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம்...


பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி (BOOMERANG) வீச கற்றுக்
கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் வெல்ஷ்.

1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.

அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர்.

பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.

வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.

இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,

தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூஜைக்குரிய ஆயுதமாக இருப்பதாக சொல்கிறார்கள்...

பாஜக மோடிக்கு குஜராத்திலே விழும் அடி...


நம்ப விவசாயிகள் டெல்லிகுத்தான்  போனாங்க.... அதுக்கே தேசத்துரோகினு சொன்னாங்க...

இவங்க ஜப்பான்கே போறாங்க....

சபரிமலை தீர்ப்பு விவகாரம் : பந்தள மன்னர் குடும்பத்தினர் அறிவிப்பு.....


இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம்படி தாண்டி ஒரேயொரு  பெண் சென்றாலும்... பந்தள அரண்மணையிலுள்ள திரு ஆபரணப்பெட்டி சபரிமலை சந்நிதானம் வராது.

ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும்.

அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது.
பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள்...

என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கிறோம் என அரசுக்கும் தேவஸ்தானத்திற்க்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்கள்..

மேலும் தீர்ப்பை கட்டாயமாக்கினால்
சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார்களாம்...

எந்த ஒரு மண்ணில் நல்லாட்சிகளும் நீதிகளும் கொல்லப்பட்டு சமாதியாக்கப்படுகிறதோ.. அந்த மன்னில் மக்கள் புரட்சி தானாகவே அரங்கேறும்...


சீட்டு நடத்தி மோசடி: தம்­ப­தி­யரை பிடிக்க தனிப்­படை போலீ­சார் கேரளா விரைந்தனர்...


ஸ்ரீவை­குண்­டத்­தில் சீட்டு நடத்தி பல­லட்­சம் ரூபாயை மோசடி செய்­து­விட்டு தலை­ம­றை­வான தம்­ப­தி­யரை பிடிக்க தனிப்­படை போலீ­சார்   கேரளா விரைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை­குண்­டம் சிவன் கோயில் தெருவை சேர்ந்­த­வர் சிதம்­ப­ரம். இவ­ரது மகன் பாலாஜி (36). பாலாஜி, தனது மனைவி சுலோச்­சனா (32) மற்­றும் தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து ஏலச்­சீட்டு கம்­பெனி நடத்தி வந்­தார். இந்த சீட்­டுக் கம்­பெ­னி­யில் ஸ்ரீவை­குண்­டம், முன்­னீர் காலனி, புதுக்­குடி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளை­யும் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்­பட்­ட­வர்­கள் ரூ.50ஆயி­ரம், ரூ.1லட்­சம், ரூ.2லட்­சம், ரூ.3லட்­சம் என்ற நான்கு பிரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் சீட்­டில் சேர்ந்து பணம் கட்டி வந்­த­னர்.

கடந்த 2 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக சீட்­டுப்­ப­ணம் செலுத்தி வந்­த­நி­லை­யில், இன்­னும் இரண்டு மாதங்­க­ளில் சீட்டு ஏலம் முடி­வ­டை­ய­வும் உள்­ளது. இத­னால் பணம் கட்­டி­ய­வர்­கள் தங்­க­ளுக்கு லட்­சக்­க­ணக்­கில் சீட்­டுப்­ப­ணம் கிடைத்து விடும் என்ற நம்­பிக்­கை­யில் இருந்­த­னர். இந்­நி­லை­யில், கடந்த மாதம் 1ம் தேதி இரவு பாலாஜி தனது மனைவி சுலோச்­சனா, தனது குழந்­தை­கள் மற்­றும் மாம­னார் முரு­கன், மாமி­யார் ராணி உள்­ளிட்ட குடும்­பத்­தி­ன­ரு­டன் வீட்டை காலி செய்­து­விட்டு தலை­ம­றை­வாகி விட்­டார். இத­னை­ய­றிந்த சீட்­டுப்­ப­ணம் கட்­டி­ய­வர்­கள் அனை­வ­ரும் பெரும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளான ஞான­துரை, ஆசீர், திரு­நா­வுக்­க­ரசு ஆகி­யோர் மாவட்ட ஆட்சியர் சந்­தீப் நந்­துாரி, எஸ்.பி., முரளி ரம்பா, ஸ்ரீவை­குண்­டம் டி.எஸ்.பி., சகா­ய­ஜோஸ் மற்­றும் ஸ்ரீவை­குண்­டம் காவல் நிலை­யத்­தில்  புகார் கொடுத்­த­னர்.

இந்த புகா­ரில் எஸ்.பி., உத்­த­ர­வின்­ பே­ரில் ஸ்ரீவை­குண்­டம் போலீஸ் இன்ஸ்­பெக்­டர் வெங்­க­டே­ஷன் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார். சீட்டு நடத்தி பல லட்­சத்தை மோசடி செய்து விட்டு தலை­ம­றை­வான பாலாஜி, அவ­ரது மனைவி சுலோச்­சனா, பாலா­ஜி­யின் பெற்­றோர் மற்­றும் மாம­னார், மாமி­யார் ஆகி­யோரை போலீ­சார் வலை­வீசி தேடி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், பாலாஜி தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் கேர­ளா­வில் பதுங்­கி­யி­ருப்­ப­தாக கிடைத்த ரக­சிய தக­வ­லின் அடிப்­ப­டை­யில் அவரை பிடிக்க சப்-­இன்ஸ்­பெக்­டர் முரு­கப்­பெ­ரு­மாள் தலை­மை­யில் தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது. தனிப்­படை போலீ­சார் தலை­ம­றை­வான தம்­ப­தி­யரை வலை­வீசி தேடி வரு­கின்­ற­னர்...

ஆலிவ் எண்ணெய் உடல்நல நன்மைகள்...


நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்...

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்...

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்...

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்...

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்...

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்...

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (ஓய்ல்வே ஆயில்) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்...

பாஜக வுக்கு மோடியின் குஜராத்திலே செருப்படி...


ஆதரவற்றவர்களின் ஆதரவாளராக வாழ்ந்து வரும் 68 வயது முதியவர்...


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்றவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார் ஒரு முதியவர். வறுமையிலும் சேவையைத் தொடரும் அவரின் தொண்டுள்ளம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஒல்லியான தேகம், கசங்கிய ஆடைகள் என காட்சியளிக்கும் இவர்தான் 515 கணேசன். தனக்குச் சொந்தமான பழைய அம்பாசிடர் காரில் ஆதரவற்றவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று சொந்த செலவில் அடக்கம் செய்வது, கர்பிணிப் பெண்களை மகப்பேறு சிகிச்சைக்கு இலவசமாக அழைத்துச் செல்வது, வறுமையில் வாடும் ஏழை நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கணேசன் செய்து வரும் சமூக சேவைகளின் பட்டியல் வெகு நீளம்.

சரி அதென்ன ‘515’ கணேசன் ? 515 என்பது சமூக சேவைக்காக முதன் முதலில் வாங்கிய தனது அம்பாசிடர் காரின் பதிவெண் என்கிறார் கணேசன். 1968ஆம் ஆண்டில் ஓர் நாள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இறந்த ஒருவரின் சடலத்தை வீட்டில் கொண்டு சேர்க்க முடியாமல் ஏழை குடும்பம் ஒன்று தத்தளித்ததை பார்த்திருக்கிறார் கணேசன்.

இந்தக் காட்சி அவரை வெகுவாக பாதிக்கவே, தனது பழைய இரும்புக் கடையில் இருந்த இரும்புகளை விலைக்குப் போட்டு அம்பாசிடர் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவை செய்ய உதவிய அந்தக் கார் பழுதாகவே, அதனை விற்றுவிட்டு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி தனது சேவையை தொடர்ந்திருக்கிறார் கணேசன். அதன் பிறகு சில சமூக ஆர்வலர்கள் ஒரு காரை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பிரபலமான, தனது சேவைக்காக ஏராளமான விருதுகளை வாங்கியுள்ள கணேசனுக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை என்பதுதான் சோகம். 4 பெண்களுக்கு தந்தையான கணேசனின் ஒரே ஆசை, தனது இறுதி மூச்சு வரை பிறருக்கு சேவை செய்யும் பலத்தை கடவுள் தனக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.

புரட்டி எடுக்கும் வறுமையிலும் சமூக சேவையை சலிப்புறாமல் செய்து வரும் கணேசன் தற்சமயம் தனது கார்களை பராமரிக்க வழியின்றி தவித்து வருவதாகக் கூறுகிறார்.

‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்று ஒரு கூற்று உள்ளது. இங்கே பெரிதாக எதுவுமே இல்லாத ஒருவர் இருப்பதை வைத்து சேவை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


எதையும் கற்றுக் கொள்ளலாம்...


எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.

ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன.

இவைதான் அந்த வாசகங்கள்...

ஒரே ஒரு கருத்தைத் தெரிவு செய்யுங்கள். அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள். அது பற்றியே சிந்தியுங்கள். அதையே கனவு காணுங்கள். அதற்காகவே வாழுங்கள்.

உங்கள் மூளை, தசைகள் நரம்புகள்… ஏன்.. உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் அக்கருத்தே நிரம்பியிருக்கட்டும். மற்ற எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள். இதுவே வெற்றிகான் வழி..

இந்த இணையற்ற மந்திர வரிகளைச் சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.

சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.

சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்றி காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.

இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும்.. செயல் துவங்கும்...

வாழ்க வளமுடன்...

அதிமுக வின் LED பல்பு ஊழல்...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.

மிளகு அந்த அளவிற்கு நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது.

சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி] மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள் + வெங்காயம் + உப்பு இவற்றை கலந்து அரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வியாபாரம்...


சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது.. தேவசம் போர்டு அதிரடி...


சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

அனைத்து வயதுடைய பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் தேவசம் போர்டு ஈடுபட்டுள்ளது.

அதன்படி தேவசம் போர்டு அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

[சபரிமலைக்கு " இந்த" பெண்கள் வரமாட்டார்கள் - தேவசம் போர்டு பரபர தகவல்]

வாகனங்கள் அப்போது அவர் கூறுகையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. தனியார் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்பட வேண்டும்.

சன்னிதானத்தில் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும். இதற்காக பெண்களுக்காக நிலக்கல்லில் இருந்து 25 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக் கூடாது.

பெண்கள் கவனத்தில்...

நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதற்கேற்ப உடல்வாகு உள்ள பெண்கள் மட்டும் வரவேண்டும். பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு செல்லும் பாதை கரடுமுரடாக உள்ளது. இதையும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண் போலீஸ்...

சபரிமலையில் டிஜிட்டல் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்படுவதால் பாதுகாப்புக்கு பெண் போலீஸை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்...

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு...


எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.

இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்...

எஸ்பிஐ வங்கியின் ஏமாற்று வேலைகள்...


ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் ரூ.40,000ல் இருந்து ரூ.20,000 ஆக குறைக்கப்படும் - எஸ்பிஐ அறிவிப்பு...

இவன் நமக்கு பணம் கொடுத்து நாம் பிழைக்கிறோமா..? இல்ல நம் பணத்தை வைத்து அவன் பிழைக்கிறானா...

கார்பரேட்களுக்கு பணத்தை கொடுத்து தள்ளுபடி செய்து விட்டு... சாமானிய மக்களிடம் திருடும் இந்த எஸ்பிஐ வங்கி உங்களுக்கு தேவையா மக்களே....

உடனே எஸ்பிஐ வங்கி கணக்கை மொத்தமாக மூடி செருப்படி கொடுங்கள்...

முட்டாள் தமிழினமே விழித்துக்கொள்...


இஸ்லாம் கிருத்துவம் இந்து மூன்றுமே தமிழனுக்கு அந்நிய மதங்கள் தான்...


இந்துமதம் பறையர்களை மட்டும் ஒதிக்கியது என்று பரப்பி  கிருத்துவம் இஸ்லாத்துக்கு ஆள் பிடிக்கும் கூட்டங்களே ....

இந்து மதம் என்கிற முக மூடி போட்டு எம்மை வீழ்த்தியவன் நோக்கம் வேறு..

அதில் புரிதல் இல்லாத இந்துக்களும் துணை நின்றார்கள் என்பதை மறுக்க முடியாது..

இருந்தாலும்.... தொடர்ந்து பறையர்களை இந்துக்கு எதிரானவனாகவும் இஸ்லாம் கிறுத்துவத்திற்க்கு ஆதராணவன் போலவும் பரப்பும் நோக்கம் என்ன ?

ஒன்னு எல்லா மதமும் இல்லனு சொல்லு, இல்ல எல்லா மதமும் இருக்குனு சொல்லு, இல்ல எல்லா மதத்தில் இருக்கும் நன்மையும் தீமையும் ரெண்டையும் சொல்லு...

இதில் நீ எதையும் பேசவில்லை என்றால் உங்கள் புரட்சியை நிறுத்தி கொள்ளுங்கள்...

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும்.

அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது .

ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்..

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும்.

அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம்.

அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .

கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும்.

பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம்.

அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

இந்தோனேஷிய சுனாமிக்கு பலி எண்ணிக்கை 1,200ஆக உயரும்...


இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,200ஆக உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது...

பசித்துப் புசி என்பது சான்றோர் வாக்கு...


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - (குறள் 942 - அதிகாரம் - 95)

உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.

மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.

பசித்துப் புசி என்பது சான்றோர் வாக்கு..

பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.

மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.

உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.

உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.

“ஒருவேளை உண்பான் யோகி

இருவேளை உண்பான் போகி

முப்போதும் உண்பான் ரோகி

எப்போதும் உண்பான் துரோகி”

இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன...

எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.

இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக...

இயற்கை...


தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் தூய்மைப் பணியின்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி...


தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கப்பல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 கூலித் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

மாலத்தீவிலிருந்து கற்கள் ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்த பார்சி என்ற கப்பலின் உட்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஜான்டேவிட்ராஜா, சக்திவேல் ஆகிய இருவர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விஷ வாயு தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்தனர். அப்போது அவர்களைக் காப்பாற்ற முயன்ற கோபி என்ற நபரையும் விஷ வாயு தாக்கியுள்ளது. மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சக்திவேலும், ஜான்டேவிட்ராஜாவும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆபத்தான நிலையில் கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

அதிமுக ஏமாற்று மன்னன் ஜெயக்குமார் கலாட்டா...


திராவிடம் - 5...


ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலைசெய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.

இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.

ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.

மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும்,
அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?!  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்குத்தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்தவேதத்திலும் கிடையாது. இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்'(Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'.

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால் , மதத்தால், நிறத்தால் , சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி
அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க,ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல் வகை.
'திராவிடம்'  இரண்டாம் வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

இஸ்லாம் மதத்தில் சாதி இல்லையா...


நாங்கள் இஸ்லாமியர்கள், நாங்கள் ஜாதி பார்க்கமாட்டோம், எங்களுக்கு முன்பு எல்லா ஜாதி மக்களும் சமமே, என்றெல்லாம் முகநூலில் முக்குகிறவவர்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

பஞ்சாயத்து தேர்தலில்  சுழற்சி முறையில் SC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால் சகிக்கமுடியாத உள்ளூர் முஸ்லிம் ஜமாத்தை பாருங்கள்...

காதலனை விரட்டிவிட்டு பெண் பலாத்காரம்: ஏற்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது...


ஏற்காட்டில் காதலனை விரட்டி விட்டு பெண்ணைப் பலாத்காரம் செய்த ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை யைச் சேர்ந்தவர் வாசுதேவன், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.  தன்னுடன் பணியாற் றும் தருமபுரியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை  வாசுதேவன் காதலித்து வருகிறார். வாசுதேவன் நேற்று ஏற்காடு காவல் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னைத் தாக்கி விட்டு, காதலியை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

வாசுதேவன் இரண்டு தினங்களுக்கு முன்பு  தனது காதலியுடன் காரில் ஏற்காடு வந்து,  தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். விடுதியில் தங்கியிருந்தபோது, இரவில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண் கோபித்து கொண்டு நள்ளிரவில் விடுதி அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.  அண்ணாபூங்கா அருகே வந்த இளம்பெண்ணிடம்  ஏற்காட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்  விஜயகுமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் இருவரும் பேச்சு கொடுத்துள்ளனர். காதலனுடன் கோபித்து கொண்டுவந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த  வாசு தேவன், ஓட்டுநர்கள் விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸுடன் காதலி இருப்பதை கண்டு தகராறு செய்துள்ளார். விஜயகுமார், ஆரோக்கியதாஸ் இருவரும் வாசுதேவனைத் தாக்கி, அவரிடம் இருந்த மோதிரம், பணத்தைப் பறித்துகொண்டு விரட்டிவிட்டனர்.

விஜயகுமார், ஆரோக்கியதாஸ் இருவரும் ஆட்டோவில் இளம்பெண்ணை அழைத்துச் சென்றனர். பாதி வழியில் ஆரோக்கியதாஸ் இறங்கி கொண்டார். விஜயகுமார் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு,  வேறு ஒரு விடுதியில் தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வாசுதேவன் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து, ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்...

SCHEDULE J - மருந்தும், மருத்துவமும் மக்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறது...








உங்களின் நேரத்தை வீணடிப்பதாக நினைத்தால் இதை படிக்க வேண்டும்.

இங்கு குணப்படுத்தவே முடியாது என அரசாங்கம் குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது தான் சிரிக்க வைக்கிறது..

1.AIDS
2.Angina Pectoris
3.Appendicitis
4.Arteriosclerosis
5.Blindness
6.Blood poisoning
7.Bronchial asthma
8.Cancer and benign tumour
9.Cataract
10.Change in colour of hair and growth of new hair
11.Change of foetal sex by drugs
12.Congenital malformations
13.Deafness
14.Diabetes
15.Diseases and Disorders of the uterus
16.Epileptic fits and psychiatric disorders
17.Encephalitis
18.Fairness of the skin
19.Form and structure of the breast
20.Gangrene
21.Genetic disorders
22.Glaucoma
23.Goitre
24.Hernia
25.High/low blood pressure
26.Hydrocele
27.Insanity
28.Increase in brain capacity and .improvement of memory
29.Improvement in height of children/adults
30.Improvement in size and shape of the sexual organ and in duration of sexual performance
31.Improvement in the strength of the natural teeth
32.Improvement in vision
33.Jaundice/Hepatitis/Liver disorders
34.Leukaemia
35.Leucoderma
36.Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure
37.Mental retardation, subnormalities and growth
38.Myocardial infarction
39.Obesity
40.Paralysis
41.Parkinsonism
42.Piles and Fistulae
43.Power to rejuvenate
44.Premature ageing
45.Premature greying of hair
46.Rheumatic heart diseases
47.Sexual impotence, premature ejaculation and spermatorrhoea
48.Spondylitis
49.Stammering
50.Stones in gall-bladder, kidney, bladder
51.Vericose vein

மழையை உருவாக்கும் பழங்குடிகளின் இசை கருவி...


நாகரிக மனிதனை விட உலகமுழுக்க உள்ள பழங்குடிகள் இயற்கையின் விதியை நன்கு உணர்ந்தவர்கள்...

எண்ணங்களின் வீரியம் உணர்ந்தவர்கள்...

இயற்கையில் விதைத்தால் அது நமக்காக பயிர்களை தரும் என்று உணர்ந்தவர்கள்..

தங்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவைகளை இயற்கையிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்வார்கள் அப்படி அவர்கள் பெற்றும் கொள்ளும் ஒரு விசயம் தான் மழை...

கிராமத்தில் பொங்களில் கும்மியடித்து உருவாக்கும் அதிர்வலைகளை போலவே இது பழங்குடிகள் செய்யும் முறையில் இதுவும் ஒன்று..

இந்த கருவியை பழங்குடிகள் இயற்கயிடம் தங்களின் மழை தேவையை முன்வைத்து இதை இசைப்பார்கள்..

அந்த இசை உருவாக்கும் அதிர்வுகளோடு  இவர்களின் எண்ணங்கள் உருவாக்கும் அதிர்வுகளும் இணைந்து இயற்கையிடம் சேர்த்து முன் வைக்கிறது..

தனித்தனி நபருக்கு ஒரு குறிப்பிட்ட வீரியம் இருக்கும் அதிர்வலைகளில் இங்கு பழங்குடிகள் பலர் சேர்ந்து ஒரே எண்ணங்களோடு அதிர்வுகளை உருவாக்குவார்கள்..

இன்னும் சிலர் நடனத்தின் மூலம் அதிர்வுகளை உருவாக்குவார்கள்...

அதிர்வுகளின் வீரியம் பொறுத்து இயற்கை தரும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நான் இந்து மதம் புராணங்களில் ஆழமாக செல்ல விரும்பவில்லை,
மேலோட்டமாகவே கூறிவிடுகிறேன்.

ராமர்.. ஹிந்து பக்தர்களின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். அவர் இப்போது ட்விட்டரில் இருந்திருந்தால் அவரது ஆதரவாளர்கள் பில்லியனாக இருப்பார்கள்... ஆனால் அவர் ஏன் நீலமாக இருக்கிறார்?

பொதுவாக வேற்றுகிரக கடவுள்கள்
நீல நிறமாக இருப்பதன் காரணம், அவர்களது பிபஞ்சத்தின் அனைத்து பரவலான தன்மையைக் குறிக்கிறது, நீலமானது எல்லையற்ற வானத்தின் வண்ணம், அத்துடன் அவர் வாழும் எல்லையற்ற கடலின் அடையாளமாக உள்ளது. இந்த நீல நிறம். வேற்றுகிரக கடவுள்கள் ஒரு முடிவற்ற சக்திகள் என்பதையும்,

அது பரந்து விரிந்த பரலோகத்தையும் அடையாளப்படுத்துகிறது.

இதனாலேயே விஷ்ணு, கிருஷ்ணர், ராமர் ஆகியவற்றின் அவதாரங்கள் நீல வண்ணத்தில் காட்டப்படுகின்றன..

இராமனின் பிறப்பு சாதாரணது அல்ல ...
சில வேற்றுகிரகவாசிகளின் பிண்டம்(மரபணு) நன்கொடையாக வழங்கப்பட்டு பூமிகிரகத்தில் பிறந்தவர். ராமருக்கு  தசராத ராஜாவும் திடீரென தந்தையாகிவிட்டார் ....

இந்த நிகழ்வு இராமாயணத்தில் இவ்வாறு வருகிறது...

இந்த இராமரின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவர். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தார். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்.

இராமாயணத்தில் வரும் இந்த செய்தியை வைத்துதான் மேலே நான் கூறிய, விண்ணிலிருந்து வந்த
வேற்றுகிரக தேவர்கள் வழங்கிய மரபணு நன்கொடை மூலமாக பிறந்த இராமர் கதை.

ராமர். மற்ற கடவுள் குழந்தை பருவத்தில் இருந்து வேறுபட்டவர், அவர் மிகவும் பொறுமையாக இருப்பார் மற்றும் ஒரு ஐஐடி மாணவனைப் போல் முதிர்ந்தவராக இருந்தார்.... மற்ற தெய்வங்களைப் போலல்லாமல் எந்த மந்திர தந்திரங்களும் நிகழவில்லை,
அவரின் சக்திகள் ஏதோவொரு கட்டுபாட்டின் அளவிலேயே இருந்தது. அவர் மிகவும் திறமையானவர் மற்றும் தத்துவ போதனைகள் கூறவும், அதை  கடைபிடிக்கவும் செய்தார்.
இதனால் அவரது புகழ் அவரை கடவுளாகவே உருவாக்கியது,

சரி இராம புராணம் போதும், இனி எனது கருத்து...

ஒரு பொதுவான நிலைப்பாடு என்னவென்றால், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாவற்றிலிருந்தும் தெய்வங்கள், விண்ணிலிருந்து வரும் வேற்றுகிரக பார்வையாளராக இருக்கின்றனர், பூர்வீக விண்வெளி கடவுளர்களால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட முன்னேறிய தொழில்நுட்பங்கள் ஆரம்பகால மனிதர்களால் தெய்வீக நிலைக்கான ஆதாரங்களாகக் கருதப்பட்டன.

புராண மற்றும் இதிகாச கதைகள் பொதுவாக இலக்கியப் பொருளாக அல்லது சில சமயங்களில் ஒரு விஞ்ஞான கற்பனை என கருதப்படுகின்றன. ஆனால் எந்த மதத்திலும் பண்டைய கதைகள் வெறுமனே ஒரு புராண அல்லது இலக்கியத் துண்டுகளாக இருக்காது என்பதற்கான பெரிய வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து பார்ப்போம் வேற்றுகிரக கடவுளர்களை பற்றி…

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஒரு கடவுள் அவதாரம். மாறுபட்ட கதாபாத்திரங்களில் உள்ள போது ஏன் ஒரு குணாதிசயத்தில் நிற்கவில்லை?

நீலக் கடவுள் கிருஷ்ணன், ராமானுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வித்தியாசமானவர்,

அவர் பொய் சொல்வார்,  மகிழ்ச்சியடைகிறார், சூதாடுவார்,
மாய தந்திரங்களை செய்வார் ஹிப்னாடிசத்தில் பாரிய பயிற்சி பெற்றவர்....

ஹிந்து புராணங்களில் மிகப்பெரிய போரான மகாபாரத போரின் மூலவேர் அவரே..

மகாபாரதத்தைப் பற்றிய எனது புரிதல் மகாபாரதத்தில் எந்த ஒரு சாதாரண பிறப்பும் இல்லை என்பதால், இது இரண்டு வேற்றுலக இனங்களுக்கிடையான யுத்தமே, அனைத்து பாண்டவர்களும் வேற்றுகிரக மனிதர்களின் மகன்கள்.

மகாபாரதத்தில் நீல கடவுளை சந்திக்க பல முறை வேற்றுலகம் சென்றார் அர்ஜூன்.

நீல கடவுள் அவரிடம், சசிகர் வடிவ சக்கர ஆயுதத்தையும். பாஸ்பரஸ் பூசப்பட்ட அம்பு பாசுபாத்ரா மற்றும் அணு ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பங்கள் அர்ஜூனுக்கு போரில் உதவப்படும் என்றார்.

ஏன் கடவுள் பூமியில் ஒரு போரை விரும்பினார்? அவர் சர்வாதிகாரியாக இல்லாமல் இருந்தால் ஏன் ஆயுதங்களை பயன்படுத்தினார்?

மகாபாரதத்தின் இறுதி வரை கிருஷ்ணர் கடவுளாகக் கருதப்பட்டார், அதன் பிறகு யாரும் உண்மையில் கிருஷ்ணாவைப் பற்றி அக்கறை காட்டவில்லை..

போர் முடிந்தபின் பூமியை விட்டு விலகியிருக்கலாம் அல்லது போயிருக்கலாம்.. 

மகாபாரத வேற்றுகிரக சக்திகளுடன் பல போர்களைப் போராடியபின், நவீன ஆயுத யுத்தத்தால் இரு இனங்களிலும்
பெரும்பாலனவர்கள் மடிந்தனர் ....

அணுஆயுதத்தை பற்றி கி.மு. 8 அல்லது 9 ஆம் சமஸ்கிருத புராணங்கள் நூல்களில் இருந்து கூறப்படும் மொழிபெயர்க்கப்பட்ட சில வரிகள்...

"பிரபஞ்சம் அனைத்து சக்தியையும் ஒரு ஒற்றை அம்பில் வெளிபடும்... 10,000 சூரிய ஒளி போன்ற பிரகாசமான புகை மற்றும் சுடர் ஒரு பிரகாசமான, அனைத்து அதன் பிரகாசத்தில் உயர்ந்தது.. அது ஒரு தெரியாத ஆயுதம், ஒரு இரும்பு இடிந்து விழுந்த மரணம், இது ஒரு முழு மனித இனத்தைச் சாம்பலாக்கும்.

நீல வேற்றுகிரக கடவுள் திடீரென்று தனது சக்திகளை இழந்து, பின்னர் அவரை பின்பற்றுபவர்களிடமிருந்து பின்வாங்கி இருக்கலாம், மேலும் அவர் அமைதியான வாழ்க்கைக்கு தன் வேற்றுலகிற்க்கு சென்றிருக்கலாம்....

மகாபாரதத்திற்குப் பிறகு, கிருஷ்ணர் அற்புதங்களைப் பற்றி எல்லோரும் புகழ்ந்துரைக்கிறார்கள். ஆனால் ஏன் மனிதர்கள் கிருஷ்ணாவை சாதாரண மனிதனாக விரும்புவதில்லை, அவரின் அற்புதங்கள் அவரது உண்மைத்தன்மை ஆகியவற்றை, அவர் விண்வெளியில் இருந்து வந்த கடவுளாகத்தான் அன்றைய மக்கள் பார்த்தனர்...

பிரபஞ்ச உலகின் இந்திர ராஜாவின் மகன் அர்ஜுனனுக்கு மகாபாரதத்தில் வழங்கப்பட்ட கீதையில் உள்ள ஒவ்வொரு  சொற்றொடரை நன்கு ஆராய்ந்து பாருங்கள்..

பகவத்கீதா நவீன வாழ்க்கையை கருத்தில் கொண்டது. எதிர்கால தலைமுறையினருக்கு வேற்றுகிரக கடவுள் அல்லது தூதர் மனிதர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்..

எதை நீ எடுத்துக் கொண்டாயோ (மரபணு) அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது"

கூற நிறைய ஆச்சரியம் உள்ளது..

ஆனால் உங்களின் பங்களிப்புக்காக ஒரு வேகதடையை போட்டு விடுகிறேன்...

குருவின் சாரத்தில் சூரியன் இருந்தால்...


சமுதாயத்தில் நன்மதிப்பும், அந்நியர்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் குருமாரர்களின் அன்பும் ஆசியும், நல்ல கற்பனைத் திறனும், தெளிவான சிந்தனையும், களிறு போன்ற ஞாபக சக்தியும் உண்டாகும்.

இது தவிர, வேத சாஸ்திர மந்திரங்களில் ஆர்வமும், சிவ தீட்சையும், வாக்கு பலிதமும், தாமத் திருமணமும், இல்லறத்தில் பற்றின்மையும், மற்றவர்களை எளிதில் நம்பிவிடும் குணமும் இருக்கும்.

மேலும், பிராமணர்கள், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு, குறுகிய  ஆன்மீகப் பயணங்கள் மற்றும் உபதேசங்கள் போன்ற தன்மைகள் நிலவும்.

மேலும், தாய் தந்தையரின் அன்பும் ஆதரவும், தாய்வழி அசையும் / அசையா சொத்துக்கள் கிடைக்கப்பெறும்...