03/10/2018

சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது.. தேவசம் போர்டு அதிரடி...


சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

அனைத்து வயதுடைய பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் தேவசம் போர்டு ஈடுபட்டுள்ளது.

அதன்படி தேவசம் போர்டு அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

[சபரிமலைக்கு " இந்த" பெண்கள் வரமாட்டார்கள் - தேவசம் போர்டு பரபர தகவல்]

வாகனங்கள் அப்போது அவர் கூறுகையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. தனியார் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்பட வேண்டும்.

சன்னிதானத்தில் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும். இதற்காக பெண்களுக்காக நிலக்கல்லில் இருந்து 25 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக் கூடாது.

பெண்கள் கவனத்தில்...

நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதற்கேற்ப உடல்வாகு உள்ள பெண்கள் மட்டும் வரவேண்டும். பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு செல்லும் பாதை கரடுமுரடாக உள்ளது. இதையும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண் போலீஸ்...

சபரிமலையில் டிஜிட்டல் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்படுவதால் பாதுகாப்புக்கு பெண் போலீஸை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.