21/06/2017

மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?
அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

இந்தியா என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடம்...


எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய இனங்களின் போரட்டத்தின் வளர்ச்சி நிலையும்  வெவ்வேறு  படி நிலைகளில் உள்ளது.

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்  முன்னேறிய  நிலையிலும் , மற்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலும் உள்ளது.

எனவே  இந்தியாவில் உள்ள  தேசிய இனங்கள்  தேசமாக மாறுவதும், தேசிய அரசு அமைவதும்  காலத்தின் கட்டாயம்...

ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்..


தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது.

அதில் மேலும் கொடுமை...

மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது.

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது .

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது , மொழி இழந்தோம் , மானம் இழந்தோம் , அரசியல் அறிவை இழந்தோம் . நிலம் இழந்தோம் , காடு மலை இழந்தோம் , இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்.

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் . ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம் . குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்.

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம்.. ஜன கன மன..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்.....

நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களை பற்றி பழந்தமிழன் அறிந்திருந்தான் என்பதற்கு சான்றுகள்...


நட்சத்திரங்கள் – உடு,
நட்சத்திரக் கூட்டம் – உடுமீன்கள் என்று தமிழில் குறிப்பிடப்படுவதும் மற்றும் ஞாயிறு போன்ற தமிழ்ச் சொற்களும் சான்றாகும்.

செவ்வாய் என்ற சொல், செவ்வாய்க் கோள் சிவப்பானது என்பதை குறிப்பிடுகிறது.

சனிக் கோளினை சுற்றி இருக்கும் கரிய வளையத்தை குறிக்கும் விதத்தில், சனிக்கிரகம் – கரியன் என தமிழில் அழைக்கப்படுகிறது.

கலிலியோ தொலைநோக்கி மூலம் வான மண்டலத்து கோள்களைப் பற்றி கண்டறிந்து சொல்வதற்கு முன்பே தமிழன் அவற்றைப் பற்றி அறிந்திருந்தான்.

– மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள்...

நாம் நம் வீட்டில் பயன்படுத்தும் மின் சாதன பொருட்களை இயக்குவதற்கு, ஸ்விட்ச் பயன்படுத்தப்படுகிறது...


இந்த ஸ்விட்ச்  என்ற சொல்லை நாம் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?

இதற்கு, இந்த ஸ்விட்ச் செய்யக்கூடிய வேலை என்ன என்பதை நாம் புரிந்து கொண்டோமேயானால், இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.

உதாராணத்திற்கு,ஒரு மின்விசிறி இயங்கிக் கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம், இதன் நிலையை மாற்றி அதாவது இந்த மின்விசிறியின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். அல்லது இயங்காமல் இருக்கும் ஒரு மின் விசிறியை இயக்க வைக்க வேண்டும். இதற்காக நாம் ஸ்விட்ச்  இன் உதவியை நாடுகிறோம்.

அதாவாது ஒரு மின் சாதன பொருளின் நிலையை மாற்றுவதற்கு நாம் ஸ்விட்ச் ஐ பயன்படுத்துகிறோம்.

இதன் அடிப்படையில் ஸ்விட்ச்  என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லாக  நிலைமாற்றி பயன்படுகிறது.

SWITCH என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் சொல் நிலைமாற்றி...

கடாபியின் மறுபக்கம்...


1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.

5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருத்துவ வசதி பெறுவதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு...

தமிழை வளர்ப்பது எப்படி?


தமிழில் சொல் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, அகராதி காணும்  பயிற்சி, ஒவ்வொரு பொருளினுடைய  தமிழ் பெயர் கண்டறிதல், தமிழ் கவிஞர்களின் பாடல்கள்  அதன் விளக்கங்கள் ஆகியவற்றை  மேற்கொண்டால் தமிழை  ஆர்வத்துடன் கற்பார்கள்...

தமிழின் பொருள் என்ன?


பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

சமஸ்கிருதம் இந்திய மொழியுமல்ல, இந்துக்களின் மொழியுமல்ல...


சமக்கிருத மனுவாதிகள் எல்லோரும் சமஸ்கிருதம் இந்தியாவில் உருவாகிய, இந்தியாவின் பழமையான மொழி மட்டுமல்ல, இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய் என்கிறார்கள்.

பழமையான மொழியாகிய தமிழ் கூட சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்றும் கூட சிலர் வாதாடுகின்றனர்.

ஆனால் சமஸ்கிருதம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மொழி,  அதன் மூலம் (Source) இந்தியாவுக்கு வெளியே தான் உள்ளது என்பதை பெரும்பாலான மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

அத்துடன், ரிக் வேதத்துக்கும் இந்திய  இந்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை, ரிக் வேதத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியாவின் தெய்வங்கள் அல்ல என்கிறார் பிரிட்டிஸ் வரலாற்றாசிரியர் மைக்கல் வூட்ஸ் (Michael Woods).

ஆரியர்கள் ஹைபர் கணவாய்க்கு அப்பாலிருந்து  இந்தியாவுக்கு வந்ததாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (7:08) என்கிறது

"........There’s a lot of interesting stuff on the Dravidian language group as a whole which must be older than Sanskrit as the earliest hymns in the Rig Veda have borrowings from Dravidian. For a short guide Try Kamil Zvelebil’s Dravidian Linguistics (published in Pondi about 15-20 years ago)."

-Michael Woods, Historiann..

சமஸ்கிருதம்...




14 ஆயிரம் பேர் 140 கோடி இந்தியன் எல்லாரையும் அடிமையாக்கனும்னு நினைக்குறானுங்க...

தமிழ் வாழ்க...


அனைவரும் தமிழை ஆர்வமுடன்  கற்க வேண்டும்.

தமிழ்  படிப்பதில்  பெருமை கொள்வோம்.

இன்றைய இளம் தலைமுறையினர்  தமிழை உதாசினபடுதுகின்றனர்.

மேற்கத்திய நாகரீகத்திற்கு  இளம்  தலைமுறையினர்  அடிமையாகாமல்  இருக்க தமிழை அனைவரும்  பரப்ப வேண்டும்.

பாரதிதாசன், மகாகவி போன்றோர்  தமிழை  வளர்த்தனர்.

இன்று  தமிழை  காக்கவும், வளர்க்கவும்  பெரும்பாலானோர்  முன்வருவதில்லை.

தமிழை  அனைவரும் ஆர்வமுடன் கற்றால் தான்  அந்த குறையை போக்க முடியும்.

நமது  தாய்மொழியான  தமிழ்மொழியை  கற்பதில்  மாணவர்களுக்கு  ஆர்வம் குறைந்து வருகிறது.

மேற்கத்திய  பண்பாடுகளால்  தமிழ் கலாசாரம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...

தமிழ் மொழி தற்போது படும் பாடு சொல்லி மாளாது...



தமிழ் படித்தவருக்கு  தமிழ்நாட்டிலேயே உரிய  முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இதற்கு யார் காரணம்?

என்றாவது சிந்தித்ததுண்டா?

திராவிடம் தான் காரணம் என்று உணர்ந்ததுண்டா?

தமிழ் மொழி நம் தாய்  மொழி, உலகின் முது  மொழி.

தமிழ் வளர்ப்போம். தமிழ் படிப்பவர்களை  ஊக்குவிப்போம்...

சீக்கிரமே ஆதார் பைத்தியம் பிடிச்சி அலையப் போறானுக...


தமிழக விபச்சார ஊடகத்தை புறக்கணியுங்கள்...


ஆம்புலன்ஸ் செல்வதற்காக நாட்டின் ஜனாதிபதி காரை நிறுத்திய போக்குவரத்து காவல் எஸ் ஐ நிஜலிங்கப்பா, குவியும் பாராட்டுக்கள்...



பெங்களுர் மெட்ரோ சேவையை திறந்து வைத்து விட்டு தனது மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, அவர் செல்வதற்காக ட்ரினிட்டி பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதில் ஒரு ஆம்புலன் செல்ல முடியாமல் தவித்து நின்றுள்ளது.

இதை பார்த்த போக்குவரத்து காவல் எஸ் ஐ நிஜலிங்கப்பா ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி செய்தார்.

நிஜலிங்கப்பா இந்த மனித நேயச் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

பொதுமக்கள் என்றில்லாம் சக போலிஸ் உயர் அதிகாரிகளே லிங்கப்பாவை பாராட்டி ட்வீட் செய்து அவருக்கு இதற்காக விருது கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...

குடும்பத்தோடு மது குடிக்கிறார்களா ராணுவ வீரர்கள்...


எங்களுக்கு மலிவு விலையில் சாராயம் வேண்டும் ஈரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னால் ராணுவ வீரர்கள்.. பெண்களும் பங்கேற்பு...

முன்னால் ராணுவ வீரர்களுக்கென பிரத்யேகமாக உள்ள மலிவு விலைக் கடையில் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சாராய விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் எங்களுக்கு மலிவு விலையில் சாராயம் வேண்டும் எனவும் முன்னால் ராணுவ வீரர்கள் ஈரோட்டில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

நாட்டை காக்கும் ராணுவ வீரர்களை அரசே மலிவு விலையில் மதுவை கொடுத்து மழுங்கச் செய்து மது அடிமைகளாக்கினால் நாட்டின் பாதுகாப்பு என்னாவது ? அதன் விளைவாகத்தான் இவர்கள் இப்படி போராடுகின்றார்களா என மதுவிற்கு எதிராக போராடுபவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

கியூபாவின் பிரபாகரன்ஜோஷ் மார்ட்டி...


கியூப விடுதலைப் போராளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது 'பிடல் காஸ்ட்ரோ' என்ற பெயர் தான்.

ஆனால், பிடல் காஸ்ட்ரோ என்ற 32 வயது இளைஞன் மூன்றே ஆண்டுகள் போர் நடத்தி வெற்றி பெற்று கியூபா விடுதலை அடைந்தது என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அது உண்மையில்லை.

விரல்சொடுக்கில் விளைந்ததல்ல கியூபா விடுதலை.

1820 ல் இருந்து 1920 வரை ஸ்பெயின் வல்லாதிக்கத்தை எதிர்த்தும்..

1920 ல் இருந்து 1958 வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்தும் நடந்த மிக நீண்ட விடுதலைப் போர் தான் கியூபாவுக்கு வெற்றியைத் தந்தது.

கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் அதில் பெரும்பாலும் ஆயுதப் போராட்டம்.

கியூபர்கள் தாங்கிய வலிகளுக்கு அளவே கிடையாது.

முதலில் செஸ்டபஸ் தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி பின் அது முற்றிலும் முறியடிக்கப்பட்டு 1880ல் செஸ்படஸ் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு பதினைந்தாண்டுகள் கழித்து 1895ல் ஜோஷ் மார்ட்டி தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி மாபெரும் அளவில் எழுந்தது.

1898ல் ஜோஷ் மார்ட்டி வீரமரணம் அடைந்த பிறகும் போர் தொடர்ந்து நடந்து கடைசியில் தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் கழித்து 1952ல் பிடல் காசுட்ரோ தலைமையில் ஆயுதப் போராட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டு அவர் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு மீண்டும் 1958ல் பிடல் காசுட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் மாபெரும் விடுதலைப் போர் மூன்றாண்டுகள் நடந்து அதன் பிறகு தான் கியூபா தனது மூச்சுக்குழலில் விடுதலைக் காற்றை உணர முடிந்தது.

கியூபாவின் பிரபாகரன் ஐயத்திற்கிடமில்லாமல் 'ஜோஷ் மார்ட்டி' ஆவார்.

அன்று அவர் கியூபா தேசியவாதியாக விதைத்த விதை தான் இன்று கியூபா மக்களின் தலைநிமிர்ந்த வாழ்வு.

புரட்சி வெற்றி பெற்ற பிறகு தான் அங்கே பொதுவுடைமை நுழைகிறது.

கியூபாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது அவர்களின் தேசிய உணர்வே ஆகும். கம்யூனிசம் இல்லை.

நாமும் தமிழ்த்தேசிய உணர்வோடு நமது தனித்தமிழ்க் குடியரசை நிறுவியபின் நமது வெற்றியை பங்குபோட கம்யூனிசம் வந்தாலும்  வரும்..

வந்து கைகுலுக்கிவிட்டு தமது மாணவர்களிடம் பிரபாகரன் என்று ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார்.அவர் தான் இன்று வல்லரசாக விளங்கும் தமிழ்க்குடியரசின் விடுதலைப் போராளி என்று பாடமும் நடத்தும்...

இலுமினாட்டி அமெரிக்காவே உலக பயங்கிரயவாதி நாடு...


தலித் என்ற போர்வையில் மதவெறியரை உள்ளே புகுத்தும் பாஜக...


அன்றே எச்ச ராஜா சொன்னா(ன்)ர், RSS ஐ சார்ந்தவரைதான் குடியரசு தலைவராக்குவோம் என்று. அதை இன்று நிறைவேற்றியும் காட்டியுள்ளது மதவெறி பிடித்த பாஜக..

யார் இந்த ராம்நாத் கோவிந்த்? சில அறிமுகம்...

இவரை தான் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி இருக்கிறது பாஜக..

மதவெறி கொண்ட ஆட்சியில் மனிதாபிமானமுள்ளவர் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக களமிறக்கும் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் முட்டாளே..

2009 ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கநாத் மிஷ்ராவின் தலைமையில் இந்தியா முழுக்க கள ஆய்வு மேற்கொண்டு யார் யாரெல்லாம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளார்கள் என்பதை கண்டறிந்து உண்மை அறிக்கையை அன்றைய கடந்த காங்கிரஸ் அரசிடம் ஒப்படைத்தது இந்த ஆய்வுக்குழு.

அதன்படி சமூக ,பொருளாதார நிலையில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு ( முஸ்லீம் 10 + இதர பிரிவு 5)  வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கிறது.

இது குறித்து அன்றைய பாஜகவின் செய்தி தொடர்பாளாராக இருந்த ராம்தேவ் கோவிந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப..

அவர் கூறியது பதில் இதுதான்...

என்னது இட ஒதுக்கீடா , முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏலியன்கள். ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்..

அதற்கு செய்தியாளர்கள்..

சார், ரொம்ப பின் தங்கி இருந்தா கொடுக்கலாமே  என மீண்டும் கேட்க..

முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது என்றார்.

அப்போ , சீக்கிய தலித்துகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதே என கேட்ட பொழுது ஏலியன்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ? என்றார்..

இப்படி இஸ்லாமியர்களையும், கிருத்தவர்களையும் வெறுக்கும் ஒருவரைதான் அதாவது RSS ன் முழுநேர ஊழியரைதான் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இப்படி இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவர் நாளை
தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யும் மனநிலை  உடையவர் தான்...

அன்றே எச்ச ராஜா சொன்னான் RSS ஐ சார்ந்தவரைதான் குடியரசு தலைவராக்குவோம் என்று..

அதை இன்று நிறைவேற்றியும் காட்டியுள்ளது மதவெறி பிடித்த பாஜக..

வெறுப்புணர்வு கொண்ட ஒருவர் எப்படி இந்திய நாட்டின் அனைவருக்குமான பொதுவானவராக இருக்க முடியும்?

இது பாஜக 2019 கான தேர்தலில் வெற்றி பெற தலித் வாக்குகளை குறிவைத்து தேர்வு செய்யபட்டவர்தான் இந்த தலித் குடியரசுத் தலைவர் நாடகம்...

நாசா கலாட்டா...


போலிஸ் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக தேனி பெரியகுளத்தில் பெண் சாலை மறியல்...


புகார் அளிக்க சென்ற தன்னிடம் புகாரை பதிவு செய்ய போலிசார் லஞ்சம் கேட்டதாகக் கூறி பெண் சாலை மறியலில் ஈடுபட்டார், இதனால் போக்குவரத்து பாதிப்பானதை தொடர்ந்து அந்த பெண்ணை போலிசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொதுமக்கள் கொண்டு வந்த 7 பால் மாதிரிகளில் கலப்படும் இருப்பதாக பரிசோதனை நடத்திய அதிகாரிகள் தகவல்...


மதுரையில் பல்வேறு பகுதிகளில் பால் பரிசோதனை முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது...

சட்டமன்றத்தில் இருந்து நடிகர் கருணாஸ் வெளிநடப்பு...


சட்டமன்றத்தில் இருந்து தமீமுன் அன்சாரி, தனியரசு வெளிநடப்பு...


நாம் உண்ணும் உணவு சரியானது தானா - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம்..

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்க வேண்டும்.

விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாத போதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே.

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டு பண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டு பண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை.

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...

தமிழர்களின் எதிரி இலங்கை இந்தியாவிற்கு நட்பாகும் போது... இந்தியர்களின் எதிரி பாக்கிஸ்தான் தமிழர்களின் நட்பாகக் கூடாதோ...


பாக்கிசுத்தான் தான் இந்திய மாநிலங்களுக்கு தண்ணீர் தருகிறது..

எல்லை தாண்டி மீன் பிடித்தாலும் சுட்டு கொல்வதில்லை..

இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றதால் எப்படி தகுதி உள்ள இந்திய உணர்வுள்ள பாக்கிசுத்தானி ஆள முடியாது என்று சொல்வது?

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?


வ.உ.சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி. அவரை சிறையில் தள்ளி
அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் செய்து. அந்த செம்மலை சவுக்கால் அடித்து செக்கிழுத்த வைத்த ஆஷ் துரை என்ற வெள்ளைக்காரனுக்கு..

தமது அடிவருடவே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட  திராவிட வந்தேறிகள்தான் வீர வணக்கம் வைக்க வேண்டும்.

வ.உ.சி ஏற்படுத்திய திருநெல்வேலி எழுச்சியை அடக்கி. நெல்லை மக்களை படாதபாடு படுத்திய ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்.

பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக சாதி வெறியோடு வெறுக்கும் மந்தை கூட்டமாக தமிழர்கள் மாறவேண்டாம்.

இந்தியா மறந்திருக்கலாம்.
தமிழகம் மறந்திருக்கலாம்.

ஆனால் நெல்லை மக்கள் அத்தனை நன்றி கெட்டவர்கள் இல்லை.

செங்கோட்டை மண்ணின் மைந்தன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்று விட்டு தானும் இறந்த போது அவருக்கு வெறும் 25 வயது.

அரசாங்க வேலையை உதறிவிட்டு நிறைமாத சூலியான தனது மனைவி பொன்னம்மாளை அப்படியே விட்டுவிட்டு.

புதுச்சேரி போய் பாரதிதாசனிடம் துப்பாக்கி வாங்கி வந்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தனது உயிரையும் விட்டவன் தான் வாஞ்சி.

அவரது உடல்கூட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படவில்லை. என்ன செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது.

அதனால் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் போய்விட்டு திரும்பி வந்த பொன்னம்மாள் தன் கணவர் இறந்ததை கடைசி வரை நம்பவில்லை.

இறக்கும்வரை சுமங்கலியாகவே இருந்து இறந்தார்.

இன்றும் செங்கோட்டை அக்கிரகாரத்தில் சுமங்கலி மாமி வீடு எது என்று கேட்டால் சொல்வார்கள்.

ஒருவேளை வாஞ்சியின் குறி தவறினால் அடுத்ததாக இன்னொரு துப்பாக்கியுடன் நின்றவர் மாடசாமிப்பிள்ளை.

இவரை கடல்வழியாக தப்பிக்கவைத்தார் பாரதிதாசன்.

அவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இதெல்லாம் நெஞ்சைத் தொடாது பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறி கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்திற்கு.

ஆனால் 'அக்கிரகாரத்தின் வழியாக தாழ்த்தப்பட்ட கர்ப்பிணியை அழைத்துச் சென்றதால் பார்ப்பான் கோபமாகி போட்டுத் தள்ளி விட்டான்' என்று திராவிடம் எழுதிய கற்பனை கதை மட்டும் நெஞ்சை வருடும்...

நன்றி கெட்டவர்கள்...

ரேசன் கடைகளில் இனி சர்க்கரை கிடையாது...


இன்று தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த டி ரவிந்திரன் தமிழ் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், தமிழக கரும்பு உற்பத்தி 2006- 2005 ஆண்டில் 25.4 லட்சம் டன்னாக இருந்தது 20016-17 ஆண்டு 9.5 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதே வேலையில் தமிழகத்தில் உள்ள ஆலைகள் ஒரு நாளைக்கு 1.25லட்சம் டன் அறைவை திறன் உடையது என்றும் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் சர்க்கரை நுகர்வு தேவை ஐந்து கோடி டன் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

கரும்பு உற்பத்தி குறைந்ததற்கு வறட்சி ஒரு காரணமாக சொன்னாலும் முக்கிய மான காரணமாக இருப்பது விலையில் ஆலைகள் வழங்காத நிலுவைத் தொகையும் தான் முதன்மை காரணாம இருகிறது. கடந்த ஆண்டு சந்தித்த சேலம் மாவட்டத்தில் கரும்பு விவசாயத்தில் இருந்து வெளியேறி தென்னைக்கு மாறிய விவசாயிகள் முதன்மை காரணமாக இதை சொன்னார்கள்.

விவசாய பொருட்களின் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணைய ஆணையம். கரும்பின் உற்பத்தி செலவாக ரூ. 2,240 நிர்ணயத்த பின்னும் கரும்பின் விலையை 2200 என்று மத்திய அரசு நிர்ணைக்கிறது என்றால் இந்த அரசின் நோக்கம் என்னவா இருக்கும் என்று நான் யோசிக்க வேண்டியுள்ளது.

தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை 2013இருந்து இன்று வரை 1418 கோடியாக இருக்கிறது,. அதே நேரத்தில் வ்லைிவ்கச்ளாய்க்கிகளுக்கு நிலுவை தொகை வழங்க 17000 கோடி வட்டியில்லா கடனை சர்கரை ஆலை முதளாலிகளுக்கு வழங்கியுள்ள அரசு விவசாயிகளுக்கு ஆலைகள்கொடுக்க வேண்டிய பணத்தை வாங்கி கொடுக்க வில்லை.

ஆலை உற்பத்தி செலவில் 10% பொது விநியோகத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதையும இவர்கள் நீக்கி உள்ளார்கள். ஆனால் சர்க்கரை ஏற்று மதிக்கு 4000 கோடி மானியத்தை முதளாலிகளுக்கு அரசு கொடுத்துள்ளது.

இங்கே சர்கரைக்கு மிக பெரிய சந்தை இருக்கும் போது அதற்கு கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலையும் கொடுக்காமல், அவர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தையும் கொடுக்காமல் கரும்பு உற்பத்தில் இருக்கும்வி வசாயிகளை வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். அதே வேலையில் பொது வினியோகத்திற்கு நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய சர்க்கரை வாங்குவதையும் நிறுத்துகிறது. என்றால் ரேசன்கடைகளில் கொடுக்க படும் சர்கரை இனி நிறுத்த போகிறார்கள்,

ஐந்து கோடி டன் சர்கரை தேவை என்பது இறக்கு மதி செய்யும் சர்கரைக்கான சந்தை யாக மாற்றப்படும் போது பொது வினியோக முறையில் மானிய விலையில் கொடுப்பது எல்லாம் பெரு நிறுவனங்களின் சந்தையை பாதிக்கும் அல்லவா அந்த நிறுவனங்களுக்கு இடைஞ்சலாக பொது வினியோக முறை இருக்கும் என்பதாலேயே அவை நிறுத்த பட இருகின்றன.

இந்த நாட்டில் கரும்பு விவசாயத்தில் மூலம் வேலை வாய்ப்பை பெற்ற பல லட்சம் மக்கள் வேலையும் இழந்து குறைந்த பட்ச விலையில் கிடைத்த பொது விநியோக முறை உணவு பொருட்களும் இன்றி அவர்களை பஞ்சதில் தள்ள போகிறது இந்த அரசு...

எம்எல்ஏ. சரவணன் பேசிய வீடியோ விவகாரம் பற்றி கேட்டதற்கு, 'அரசியல் பற்றிப் பேச விரும்பவில்லை' என மராட்டிய ரஜினி கூறியுள்ளார் - செய்தி...


இல்ல பேசித்தான் பாருங்களேன்.. தலைவரே இது ஒன்னும் சினிமா பஞ்ச் டையலாக் இல்ல... ரத்த பூமி...

கதிராமங்கலம் காப்போம்...



திராவிடலு பகுதி - 6...


ஆங்கிலேயர் திராவிடத்தை உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப்  பயன்பட்டது.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களைஅப்பகுதி மக்களோடு கலந்துவிடுவர்.

இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.

இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம்,உணவுப்பழக்கம், பண்பாடு,மருத்துவம், கலாச்சார நம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.(அப்போது தானே பிரித்தாள முடியும்).

மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ்மேல்காதல்கொண்டு தமிழுக்குத்தொண்டு செய்து  தமிழரோடு தமிழராகஒன்றிவிட்டனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தான் வீரமாமுனிவர்,ஜி.யு.போப் போன்றவர்கள்.

அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.

'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.

இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.

ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்.

தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்துதமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர்வரலாற்றை ஆராயத்தொடங்கினார்.

தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும்வடமொழிகளிலிருந்து அவை முற்றிலும்வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.

இவரைப்பற்றிய விமர்சனங்களும் உள்ளன..

சாணார் மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின்கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது (அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது).

இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரியவருகிறது.

ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில் கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப் பற்றுள்ளவர்என்றே தெரிகிறது.

எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர்என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.

இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்ற கருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.

திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள்தருவதாக வடமொழியில்வழங்கிவந்ததாகக் கூறுவர்.

திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட...

ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்றபொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.

த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா.

இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞானசம்பந்தரை 'திராவிடசிசு'என்று இழிந்து கூறுவதாக திராவிட வாதிகள்மேடைதொறும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.

இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.

முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.

தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.

தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தை தான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.

(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்).

இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும்சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.

நூறுவருடம் எடுபடாத ஒருகோட்பாடு எப்படி நடைமுறையில்திடீரென்று குதித்தது?

தமிழ்ப் பிராமணர்களே ஆரியர்என்று எப்படி நம்ப வைக்கப்பட்டது?

மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா?

- தொடரும்...